• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 25

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 25:

ஆதவன் தன் கதிர்களை பரப்ப துவங்க மெல்ல மெல்ல அந்த நாளின் விடியல் துவங்கியிருக்க,
ஆறுமணிக்கே விழிப்பு தட்டியது செல்வாவிற்கு.

எழுந்து செல்ல என்னவோ மனமில்லாது போக விழி மூடி அப்படியே படுத்திருந்தாள்.

அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அதி சிணுங்க அவள் புறம் திரும்பி, "ச்சு ச்சு தூங்குடா" என்று தட்டி கொடுத்து மீண்டும் உறங்க வைத்தவள் மகளை நெருங்கி அணைத்து கொள்ள மகளும் தாயின் உடல்சூட்டை உணர்ந்து அவளிடம் ஒன்றினாள்.

முகத்தில் சிறு புன்னகை இழையோட உறங்கும் மகளையே இமைக்காது பார்த்திருந்தவளது மனதில் என்ன ஓடுகிறது என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

புவனா பேசி சென்று இன்றோடு ஒரு வாரம் கடந்திருந்தது.

அவர் பேசி சென்ற பிறகும் செல்வா அதே போல அமைதியாக தான் இருந்தாள். பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் எந்நேரமும் சிந்தனை மயமாக தான் இருந்தாள். ஆனால் என்ன சிந்தனை என்று தான் யாராலும் யூகிக்க முடியவில்லை.

யோசிக்கட்டும் யோசித்து ஒரு நல்ல முடிவிற்கு வரட்டும் என்று தான் எல்லோரும் காத்திருந்தனர்.

மகளோடு சேர்ந்து விழிமூடியவள் சிறிது நேரத்தில் உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

புவனா வந்து பார்த்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டார். நாட்கள் செல்ல செல்ல அவள் கொஞ்சம் சோர்ந்து போவதை அவரும் கவனித்து தான் இருந்தார்.

அதன் பொருட்டே அவளை வற்புறுத்தி சாப்பிட வைப்பதும் அடிக்கடி பால் பழம் என்று கொண்டு வந்து தருவதும்.

செல்வா மீண்டும் கண்விழித்த போது நேரம் எட்டை நெருங்கி இருந்தது.

இதற்கு மேலும் உறங்க வேண்டாம் என்று நினைத்தவள் எழுந்து குளித்து முடித்து வந்து மகளை எழுப்பினாள்.

"அதிம்மா அதிக்குட்டி எழுந்திடுடா" என்று எழுப்ப,

"ஹ்ம்ம்…" என்ற முனங்கலுடன் மறுபுறம் திரும்பினாள்.

'சரி உறங்கட்டும் எழுந்து என்ன செய்யப் போகிறாள்' என்று நினைத்து விட்டவள் என்ன செய்வதென்று தெரியாமல் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.

என்னென்னவோ சிந்தைகள் மனதை ஆக்கிரமித்தது. அதனை கலைக்கும் விதமாக கையில் தேநீருடன் வந்தார் புவனா.

எதுவும் கூறாது அமைதியாக அவர் வெளியேறிவிட இவளும் அதனை எடுத்து பருகலானாள்.

சிறிது நேரத்தில் அதியும் கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்துவிட அவளை குளியலறைக்கு தூக்கி சென்று குளித்து பல் துலக்க வைத்து உடை மாற்றி அழைத்து வர அவர்களுக்கான உணவு மேஜை மேல் காத்திருந்தது.

தானும் உண்டுவிட்டு மகளுக்கும் ஊட்டி முடித்தவளுக்கு எந்த வேலையும் செய்யாத போதும் அசதியாக தான் இருந்தது.

தனுஷ் வந்து, "அத்த அதிய என் கூட விளயாட‌ அனுப்புறியா?" என்று கேட்ட போது அவளால் மறுக்க இயலவில்லை.

"ஹ்ம்ம் கூட்டிட்டு போ" என்று அனுப்பி வைத்தவள் மெத்தையில் கால் நீட்டி சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டாள்.

அங்கு வேலைக்கு கல்லூரிக்கு செல்பவர்கள் எல்லோரும் வெளியேறி இருக்க இல்லத்தரசிகள் மட்டும் வீட்டு வேலையை செய்தபடி இருந்தனர்.

சமையலறையில் எதையோ செய்தபடி இருந்த வேதவள்ளி அழைப்பு மணி ஓசை கேட்டு எட்டிப் பார்க்க,

குழந்தைகளை கவனித்தபடி அவர்கள் அருகில் அமர்ந்திருந்த வினிதா, "அத்தை நீங்க இருங்க நான் போய் பாக்குறேன்" என்று எழுந்து சென்று கதவை திறக்க வெளியே அபிஷேக்கும் அவரது மனைவி ரேகாவும் நின்றிருந்தனர்.

ஒரு நொடி அவர்களை எதிர்பாராது அதிர்ந்து விழித்தவள் பின்னர் சுதாரித்து, "வாங்கப்பா வாங்கம்மா" என்று வரவேற்று உள்ளே அழைத்து செல்ல,

"யாரு வந்திருக்கா?" என்று வினவியபடி வந்த வேதவள்ளியும் அவர்களை கண்டு அதிர்ந்து பின் வரவேற்றார்.

வினிதா, "என்ன குடிக்கிறிங்கப்பா டீயா காஃபியா?" என்று உபசரிக்க,

"இல்லை வேண்டாம்மா. நமக்குள்ள எதுக்கு பார்மாலிட்டிஸ்" என்க,

"ம்ஹூம் முத முறையா வந்திருக்கிங்க சாப்பிடாம போக கூடாது. நான் பர்ஸ்ட் வெயிலுக்கு ஜில்லுனு எதாவது குடிக்க எடுத்துட்டு வர்றேன்" என்று உள்ளே செல்ல,

அபிஷேக்குடன் வேதவள்ளிக்கும் புவனாவிற்கும் சில பல நல விசாரிப்புகள் நடக்க,

இத்தனை நேரம் இவர்களை கவனியாது விளையாடி கொண்டிருந்த அதி அபிஷேக்கை பார்த்துவிட்டு,

"தாத்தா" என்றபடி ஓடி வர,

"அதிக்குட்டி" என்று சிரிப்புடன் அவளை கைகளில் வாரிக் கொண்டவர்,

"தாத்தா உனக்கு நிறைய சாக்லேட்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்" என்று அவரது கைகளில் கொடுத்தார்.

தனுஷ் சற்று தள்ளி நின்று இதனை காண அபிஷேக், "டேய் குட்டிப்பையா நீயும் வா. உனக்கும் சாக்லேட்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்" என்று அழைக்க,

அவனது பார்வை கையில் பழச்சாற்றை கொண்டு வரும் தாயின் முகத்தில் பதிய, அவள் கண்ணைசைக்க,

வேதவள்ளியும், "தாத்தா கூப்பிட்றாருல போய் வாங்கிக்கோ" என்றதும் தானும் ஓடி சென்று வாங்கி கொண்டான்.

அபிஷேக் அவனையும் தன்னருகே அமர வைத்து கொண்டான்.

பழச்சாறு அருந்தி முடிய அபிஷேக்,

"என் மருமகளை காணோமே?" என்று வினவ,

"அவ மேல ரூம்ல இருக்கா. நான் போய் அழைச்சிட்டு வர்றேன்" என்று புவனா மாடியேறி சென்றார்.

புவனா அறைக்குள் நுழைய அங்கு இன்னும் செல்வா அதே போல விழிமூடி சாய்ந்து தான் அமர்ந்திருந்தார்.

"செல்வாம்மா" என்றவரது அழைப்பில் விழிகளை திறந்து பார்க்க,

"உன்னை பார்க்க உன் அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க" என்றதும் அவள் விழித்தாள்.

வசீகரனது இழப்பிற்கு தன்னுடைய ராசி தான் காரணம் என்று தூற்றிவிட்டு சென்றுவிட்டார்கள் என்று கூறப்பட்டவர்கள் பார்க்க வந்துள்ளார்களா? என அதிர்ந்து பார்க்க,

அவளது எண்ணவோட்டத்தை உணர்ந்த புவனா, "வல்லபனோட அம்மா அப்பா உன்னோட மாமனார் மாமியார் கீழே வந்து உன்னை பாக்கணும்னு கேக்குறாங்க" என்று அழுத்தமாக கூறி முடிக்க,

'அவர்களா? அவர்கள் எதற்காக இங்கே வந்துள்ளனர்?' என்று ஆயிரம் கேள்வியுடன் எழுந்து நின்றுவிட,

"சீக்கிரமா கீழே வா. அவங்க வெயிட் பண்றாங்க" என்று கூற,

'அவளும் எதற்காக வந்துள்ளார்கள் அவர்கள் மட்டும் தான் வந்துள்ளனரா? இல்லை வல்லபனும் வந்திருக்கிறானா?' என பல வினாக்களுடன் சற்று மேடிட்டபடி இருந்த வயிற்றுடன் கீழே இறங்கி வர அவர்களும் இவளை தான் பார்த்திருந்தனர்.

செல்வாவிற்கு தான் வார்த்தை வரவில்லை. சிரமப்பட்டு,

"வா… வாங்க மாமா வாங்க அத்தை" என்று ரேகாவின் முகம் பார்த்தாள்.

இப்போது தான் ரேகாவை முதன் முதலாக நேரில் காண்கிறாள். இதற்கு முன்னர் வல்லபன் புகைப்படத்தில் அவரை காண்பித்திருக்கிறான்.

அபிஷேக் தலையசைத்து அவளது அழைப்பை ஏற்று கொண்டவர்,

"வா வந்து உட்காரும்மா. ஏன் நிக்கிற" என்க,

தயங்கியவாறே அவர்கள் எதிரில் அமர்ந்தவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

அபிஷேக் தான் முதலில் பேச்சை துவங்கினார்.

"அப்புறம் செல்வா நீ இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சு எப்போமா திரும்பி வரப் போற?" என்று வினவ,

அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக அவரை நோக்கினாள்.

"நீ இல்லாம அவன் ரொம்பவே கஷ்டப்படுறான்மா. ஆனால் அதை எங்க்கிட்ட கூட காண்பிச்சுக்கிறது இல்லை. நீயா வருவ வருவேன்னு நாங்க இத்தனை நாளா வெயிட் பண்ணோம். ஆனால்" என்றவர் அவள் முகம் பார்த்துவிட்டு,

"நாங்களே வந்து பேசலாம்னு கிளம்பி வந்துட்டோம். கடந்த ஜஞ்சு வருஷமா அவ்ளோ இறுக்கமா இருந்தவன் நீ அவன் வாழ்க்கையில திரும்பி வந்த பிறகு தான் பழையபடி மாறுனான். அவன் முகத்துல நான் சந்தோஷத்தையே பார்த்தேன். ஆனால் இப்போ திரும்பவும் அவனை பழைய மாதிரியே பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்குமா"

"..."

"அவன் செஞ்சது தப்பு தான். உனக்கு நினைவு இல்லாதப்ப பொய் சொல்லி கல்யாணம் பண்ணியிருக்க கூடாது தான். சூழ்நிலை காரணமா தான் அவன் அப்படி செஞ்சுட்டான். மத்தபடி அவனுக்கு உன் மேல பாசம் அதிகம் தான்.‌ அவனளவுக்கு யாராலயும் உன்னை பாத்துக்க முடியாது. இப்போ கூட உன்கிட்ட சொன்ன வார்த்தைக்காக தான் உன்னை தேடி வராம அவன் நீயா வருவேன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கான். உனக்கு என்ன கோபம் இருந்தாலும் அதை அவனுக்காக மறந்திட்டு சீக்கிரமா கிளம்பி நம்ம வீட்டுக்கு வாம்மா" என்றவர் பேசி முடிக்க,

எத்தனை பெரிய மனிதர் மகனுக்காக தன்னிடம் வந்து இவ்வளவு தூரம் பேசுகிறார் அவரிடம் என்ன பதிலளிப்பது என தெரியாது பரிதவிப்புடன் அவரை நோக்கினாள்.

"சீக்கிரமா வீட்டுக்கு வந்துடும்மா" மீண்டும் அவரது குரலில் தவிப்புடன் தலையை ஒருவாறு அசைக்க,

"வாயை திறந்து பதில் சொல்றதுதானே அவர் தான் இவ்ளோ தூரம் கேக்குறாரே" என்ற‌ ரேகாவின் கணீர் குரலின் அதட்டல் அவளை அதிர்ந்து விழிக்க செய்ய,

அவளை முகத்தை வைத்தே அகத்தை உணர்ந்தவர்,

"என்ன இவ்ளோ நேரம் அமைதியா இருந்திட்டு இப்போ இப்படி பேசுறாளேன்னு பாக்குறியா?"

"..."

"என் தோரணையே அப்படிதான். அவரை மாதிரிலாம் எனக்கு பேச தெரியாது. தான் அதட்டி தான் பேசுவேன்" என்று மாமியாரின் தோரணையில் கூறியவர்,

"எனக்கு முதல்ல உங்க கல்யாணத்துல இஷ்டம் இல்லை தான். நீயே சொல்லு உன் பிள்ளை இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணா நீ ஒத்துப்பியா? அதுவும் நாங்க கல்யாணம் அவனுக்கு பேசி முடிச்சிருக்க நேரத்தில அதான் கோபத்துல உங்களை ஏத்துக்கலை. ஆனால் எம்புள்ள உங்கூட சந்தோஷமா இருக்கிறதை பார்த்தப்போ தான் என் பழைய வல்லபனை பாத்தேன்.‌ உங்களை ஏத்துக்கிற அளவுக்கு பரந்த மனப்பான்மை இல்லைனாலும் எப்படியாவது சந்தோஷமா இருக்கட்டும்னு மனசை தேத்திக்கிட்டேன்"

"..."

"ஆனால் இப்போ நீ அவனை விட்டு வந்ததுல சந்தோஷத்தை திரும்பவும் இழந்திட்டு நிக்கிறான். யாரு தான் உலகத்துல தப்பு பண்ணலை. அவன் ஏதோ உன்மேல வச்ச பாசத்துல ஒரு பொய் சொல்லிட்டான். அதையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தா வாழ்க்கை என்னாகுறது. உனக்காக பெத்தவ கூடப் பிறந்தவங்கன்னு குடும்பத்தையே விட்டு வந்திருக்கான்னா அவனுக்கு நீ எவ்ளோ முக்கியம்னு பாத்துக்கோ. இதுக்கு மேலேயும் எங்களால எடுத்து சொல்ல முடியாது. சீக்கிரமா வர வழிய பாரு" என்றவர்,

"என்ன வந்திடுவா தான?" என்று மிரட்டும் குரலில் கேட்க,

"ஹ்ம்ம்…" என்று சட்டென்று அவள் தலை அசைந்தது.

இங்கு இவர்கள் பேசிய இடைவெளியில் அபிஷேக் வல்லபனுக்கு காணொளி அழைப்பை விடுக்க இறுதி நொடியில் அழைப்பை ஏற்றவன் அலுவலகத்திற்கு தயாராக குளித்து உடைமாற்றி இருந்தான்.

அபி, "என்னடா ஆபிஸ் கிளம்பிட்டியா?" என்று வினவ,

"ஹ்ம்ம் ரெடியாகிட்டு இருக்கேன்பா" என்று பதிலளித்தான்.

வெகுநாட்களுக்கு பிறகு அவனது குரல் அவளது செவியை உரச உள்ளுக்குள் ஏதோ ஒன்று நழுவியது.

மேலும் தந்தை ஏதோ கேட்க கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தபடி இருந்தான்.

ஆனால் அவனது குரலில் எப்போதும் இருக்கும் அந்த ஏதோ ஒன்று குறைந்திருந்தது.

அபிஷேக் கூறியது போல தன்னுடைய வருத்தத்தை குடும்பத்தினரிடம் காண்பிக்க கூடாது என்று முயன்று இயல்பாக இருப்பது போல காண்பிக்கிறான் என்று புரிந்தது.

அமைதியாக ஆடாது அசையாது அமர்ந்திருந்தாள்.

ரேகா, "டேய் அம்மாவும் இங்க தான் இருக்கேன்" என்று கூற,

"ம்மா நீங்களும் பக்கத்துல தான் இருக்கிங்களா?" என்று அவரிடமும் பேச துவங்கினான்.

பேசிக் கொண்டு இருக்கையிலே திடீரென ரேகா, "இந்தா உன் பொண்டாட்டிக்கிட்ட பேசு" என்று அலைபேசியை செல்வாவின் கையில் கொடுத்துவிட,

இதனை எதிர்பாராத செல்வா அதிர்ந்து விழிக்க, இங்கு அலைபேசி கட்டிலில் வைத்துவிட்டு சட்டையின் கையை மடித்து கொண்டிருந்தவன் அப்படியே ஆடாது அசையாது நின்றுவிட்டான்.

கருமணிகள் அங்குமிங்கும் எங்கும் ஆடவில்லை. பார்வை முழுவதும் மனைவியிடம் தான்.

முகத்தில் அத்தனை தவிப்பு அவனிடம். இங்கு அவனது மனையாளுக்கும் அதே நிலை தான்.

அதுவும் முகம் முழுவதும் மறைத்த தாடி விழியெங்கும் சூழ்ந்திருக்கும் வருத்தம் இளைத்து கருத்து என்று தோற்றத்தில் தனது பிரிவின் வலியை உணர்த்தியவனை கண்டவளது விழிகளில் தவிப்பு நிறைந்திட ஏனோ விழிகள் கலங்கியது.

இருவரும் ஒருவரை ஒருவர் இமையாது பார்த்திட நொடிகள் நீண்டது.

அவனது பார்வை மனைவியின் தூங்காத விழிகளின் கருவளையத்திலும் இளைத்த தோற்றத்திலும் படிந்து இறுதியில் மேடிட்ட வயிற்றில் பதிய,

எங்கே தன்னையும் மீறி அவளிடம் எதாவது கூறிவிடுவோமோ என்று அஞ்சியவன் தன்னிலையை அவளுக்கு காட்டாது அலைப்பேசியை துண்டித்துவிட்டான்.

எல்லாம் நொடி நேரம் தான். ஆனால் இவளுக்கு தான் விழி நீர் நிறைந்து விட்டது.

முயன்று இமை சிமிட்டி அதனை உள்ளிழுத்தவள்,

"கால் கட்டாகிடுச்சு" என்று கூற,

"சிக்னல் இல்லையா? இவ்ளோ நேரம் நல்லாதான இருந்துச்சு" என்றவாறு அலைபேசியை வாங்கிய அபிஷேக் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

ஓரளவு தன்னை தேற்றிக் கொண்டவன் அழைப்பை எடுக்க,

அபிஷேக், "சிக்னல் இல்லை போலடா அதான் கட் ஆகிடுச்சு.‌ இந்தா உன் பொண்ணுக்கிட்ட பேசு" என்று கொடுக்க,

வெகுநாட்களாக மகளை காணாது ஏங்கி இருந்தவன், "குட்டிம்மா" என்று நெகிழ்ந்த குரலில் அழைக்க,

"ப்பா…" என்று தந்தையை கண்டவளும் ஆர்ப்பரிக்க,

இருவரது செயலையும் கண்டவளுக்கு அவர்களை பிரித்து வைத்ததற்கு குற்றவுணர்வு உண்டானது.

"ப்பா எப்போ வருவ?" என்று மகள் வினவ,

"சீக்கிரமே வரேன்டா" என்று பதிலளித்தான்.

"சீக்கிரமா வந்து என்னையும் அம்மாவையும் கூட்டிட்டு போ" என்று தந்தையிடம் கூற,

"ஹ்ம்ம்…" என்று கூற,

"வரும்போது நிறைய சாக்லேட் வாங்கிட்டு வாப்பா" என்க,

"ஹ்ம்ம் நிறைய வாங்கிட்டு வர்றேன்டா"

"தாத்தாக்கூட‌ எனக்கு நிறைய சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்காரே" என்று தந்தையிடம் காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த,

இருவரது உரையாடலும் தொடர்ந்தது.

மற்றவர்கள் அங்கு பார்வையாளர் ஆகினர்.

அதன் பிறகு இருந்து சாப்பிட்டு தான் அபிஷேக்கும் ரேகாவும் கிளம்பினர்.

ரேகா செல்லும் சமயமும் செல்வாவிடம் விரைவில் திரும்பி வருமாறு கூறியிருந்தார்.

வேதவள்ளி கணவனுக்கும் மகனுக்கும் அழைத்து கூறியிருக்க அவர்களும் வந்து வழியனுப்பி வைத்தனர்.

நேரம் இரவு எட்டு மணியை நெருங்கி கொண்டிருந்தது.

செல்வா பால்கனியில் நின்று வானத்தை வெறித்து கொண்டிருந்தாள்.

யாரோ வரும் அரவம் கேட்க புவனா தான் உணவை வைக்க வந்திருப்பார் என்று திரும்பி பார்க்கவில்லை.

ஆனால் உணவை கொண்டு வந்து வைத்த வேதாவோ,

"செல்வா" என்று அழைக்க,

தாயின் அழைப்பில் திரும்பி பார்த்தாள்.

ஆனால் என்னவென கேட்கவில்லை.

வேதா அன்று இறந்துவிடுவேன் என்று வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததிலிருந்தே அவரிடம் செல்வா ஒதுக்கத்தை காண்பித்தாள்.

என்னவோ நான் என் அம்மாவிற்கு முக்கியமில்லையா? என்று எண்ணமும் அவரது செயலிலும் அங்கே தாய்க்கும் மகளுக்கும் இடையில் விரிசல் விழுந்தது.

அது செல்வா வசீகரனுடன் வாழ ஆரம்பித்த பிறகும் சரியாகவில்லை.

வேதா எவ்வளவு முயற்சித்தும் செல்வா ஏற்றுக் கொள்ளவில்லை.

என்னவோ செல்வாவால் இன்று வரை அவரது செயலை ஏற்க இயலவில்லை.

அமைதியாக தன்னை பார்ப்பவளிடம்,

"செல்வா வல்லபன் தம்பி" என்று ஆரம்பிக்க,

இடை நுழைந்தவள், "என் வீட்டுக்கு எனக்கு போக உங்க அறிவுரை தேவையில்லை.‌ நான் நாளைக்கு என் வீட்டுக்கு கிளம்புறேன்" என்று முடித்து விட்டாள்…








 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Selva ippo varaikum vedha avanga kita seri ya pesura thu illaya ah aval oda aathangam niyam than ah konjam kooda ava unarvu ku care panna seiyutha thu oda vilaivu than ivolo vali yum.vedhanai yum.ava anbuvaika karam yen vallaban oda vali kum muzhu karanam ivangaloda merattal la irundhu than ah arambichithu abi avar oda pechu ah vida rekha avanga loda athatal ku sattunu bathil kedaichithu pola iva anga pora thu ok aana iva oru alavuku aachum avan kita normal ah pesuvala illa ival ah innum hurt aavano than theriyala
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Abhishek rekha vanthu pesiyum selva enn silent ya Iruka 😟😟vallapan aathi kutty ya romba miss pandran 🥺ethugavathu selva poganum V2 ku Rekha vanthu pesi irugala inum selva Ava Amma kuda pesa matala kastam tha kojam avaga athuyum pannama iruthu irutha eppo yarum feel panna matagala ellam sari agum☹️☹️ enna selva V2 ku poran nu sollura kovathula sollura vallapan aathi kutty ka sollurala Poona santhosama tha irukum 💝💝💝
 
Top