• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 24

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 24:

மேஜை மேல் பட்டென்று சத்தத்துடன் வைக்கப்பட்ட தட்டினால் ஏதோ சிந்தனையில் இருந்து கலைந்து திரும்பி பார்த்தாள் செல்வா.

புவனேஸ்வரி தான் சாப்பாட்டை வைத்துவிட்டு அவளை பார்த்து, "சாப்பாடு வச்சிருக்கேன் ஒழுங்கா சாப்பிடு" என்க, அவரது குரலுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவள் மீண்டும் திரும்பி சுவற்றை வெறித்தாள்.

'என்றைக்கு இவள் சரியாவாளோ' என்று எண்ணி பெருமூச்சைவிட்டு புவனா வெளியே செல்ல,

அமைதியாக அமர்ந்திருந்த செல்வாவின் பார்வை உறங்கிக் கொண்டிருந்த மகளின் மீது பதிந்தது.

சுவர்கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அது எட்டு நாற்பது என்று காண்பித்தது.

நேரமாகிவிட்டதை உணர்ந்து, "அதி அதிக்குட்டி எழுந்திடுடா. சாப்பிடலாம்" என்று அவளை எழுப்ப முயற்சிக்க,

"ஹ்ம்ம்…" என்று சிணுங்கலுடன் திரும்பி படுத்தாள்.

"அதிம்மா எழுந்திடுடா" என்று மீண்டும் எழுப்ப, அவளிடம் பதிலில்லை.

சரி எழுந்ததும் உணவை கொடுக்கலாம் என்று நினைக்க அவளுடைய வயிறு சத்தமிட்டு தன்னுடைய இருப்பை உணர்த்தியது.

ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்றவள் கைகளை கழுவிவிட்டு வந்து உணவை உண்ண துவங்கினாள்.

செல்வா வல்லபனை பிரிந்து வந்து இன்றோடு நான்கு மாதங்கள் ஆகியிருந்தது.

தொடக்கத்தில் எல்லோரும் அவளிடம் பேச ஆறுதல் கூற முயற்சிக்க,

"யாரும் என்கிட்ட பேச ட்ரை பண்ணாதிங்க. நான் எதையும் கேட்க விரும்பலை" என்று கூறிவிட்டாள்.

அதையும் மீறி பேச முயற்சித்தவர்களிடம், "நான் இங்க இருக்கிறது உங்களுக்கு சுமையா இருக்கா? அதான் வந்து பேசுறிங்களா? நான் எதாவது வீட்டை பார்த்து போயிடவா?" என்று கேட்டிட, அனைவரும் அமைதியாகி போயினர்.

அதன் பிறகு அவளிடம் யாரும் பேச முயற்சிக்கவில்லை.

அவளும் அறைக்குள்ளே தான் முடங்கி கிடந்தாள். உணவு உண்ண கூட வெளியே வருவதில்லை.

மகளையும் தன்னுடன் தான் வைத்திருந்தாள்.‌ ஆரம்பத்தில் அழுது துக்கத்தை கரைத்தாள்.

முழுதாக நான்கரை வருடங்கள் தன்னுடன் உயிரும் உடலுமாக பிணைந்திருந்தவனது இழப்பை அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

விழி மூடினாலும் திறந்தாலும் அவன் தான் அவன் மட்டுமே பிரதானமாக தெரிந்தான்.

அவளுக்கு வாழ்வியலின் மறுபக்கத்தை பார்த்து ரசிக்க கற்றுக் கொடுத்தவன்.

ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை ஏற்கனவே ஒரு முறை ஒரு தூய நேசத்தை இழந்து மரிக்கும் நிலைக்கு சென்று மீண்டும் ஒரு முறை தேற்றிக் கொண்டு வாழ துவங்கிய போது அதனையும் பறித்து கொண்டு நிற்கதியாக நிறுத்திவிட்டதே இந்த விதி.

அழுது அழுது ஓய்ந்தவள் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு வகையான அமைதியான மனநிலைக்கு சென்றிருந்தாள்.

முழுதாக அமைதியாகி போனாள். சுற்றி நடக்கும் எதனை பற்றியும் பிரக்ஞை இன்றி இருந்தாள்.

எதோ எழுவது அன்றாட செயல்களை பார்ப்பது மகளை கவனித்து கொள்வது தூங்குவது என்று தனக்குள்ளே ஒடுங்கியிருந்தாள்.

மற்றவர்களுக்கும் இவளது இந்த நிலையை கண்டு வருத்தம் தான் இருந்தும் கூடிய விரைவிலே சரியாகிவிடுவாள் என்று அமைதியாக தான் இருந்தனர்.

அதன் பிறகு வல்லபனும் அவளை தேடி வரவில்லை. அலைபேசி என எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ள முயலவில்லை.

அவளும் அவனிடம் பேச விழையவில்லை.

சாப்பிட்டு முடித்தவள் கைகளையும் தட்டையும் கழுவிவிட்டு வர மகள் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தாள்.

'அவள் எழும்போது உணவை கொடுத்துக் கொள்ளலாம்' என்று நினைத்தவள் ‌பால்கனிக்கு சென்று கம்பியை பிடித்தபடி நின்று கொள்ள சிலு சிலுவென்ற காற்று முகத்தில் மோதியது.

விழிகளை மறைத்த கூந்தலை ஒதுக்கித் தள்ளியவளது கரங்கள் வயிற்றில் பதிய ஒரு நொடி நின்று பின்னர் சற்று மேடான வயிற்றை வருடியது.

விழிகள் ஏனோ கலங்கியது. இதோ அவளது வயிற்றுக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவனுக்காக தானே அவள் ஒவ்வொரு வேளையும் சரியாக உண்கிறாள்.

அப்படியும் இரவு சில நேரங்கள் பசிக்கின்றது. துக்கத்தில் அழுது கரைந்தவள் முதலில் இதனை கவனிக்கவே இல்லை‌.

எல்லோருக்கும் வருவது போல வாந்தி அல்லது வேறு ஏதும் உபாதைகள் இருந்தால் கண்டறிந்திருக்கலாம்.

ஆனால் செல்வா அதியை சுமக்கும் போதே அவளுக்கு எந்தவிதமான உபாதைகளும் வரவில்லை நன்றாகத்தான் இருந்தாள்.

ஆதலால் இது அவளுக்கு இரண்டு மாதங்களாக தெரியவில்லை. ஒரு முறை செல்வா மயங்கி விழுந்துவிட உண்ணாது இருப்பதால் மயங்கியிருப்பாள் என்று எண்ணியே மருத்துவரை அழைக்க,
அவரோ செல்வா கருவுற்றிருப்பதாக கூறியிருந்தார்.

இதனை அறிந்ததும் அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி குமிழிட்டது‌. ஆனால் செல்வா மட்டும் எந்தவித முக பாவனையுமின்றி கேட்டுக் கொண்டதோடு இதனை வல்லபனிடமும் கூற வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

பெரியவர்கள் ஏன் எதற்கு என்று பலவாறாக வினவ அவளிடம் எந்த பதிலும் இல்லை.

நடந்ததை நினைத்தவாறு நின்றிருந்தவளை மகளின் சிணுங்கல் கலைக்க உள்ளே எட்டிப் பார்த்தாள்.

அதி கண்விழித்ததும், "ம்மா…" என்று தாயை தேட,

"இதோ அம்மா இங்க இருக்கேன்டா" என்றவாறு அருகில் வந்தவள் மகளை தூக்கி கொண்டவள் குளியலறைக்கு அழைத்து சென்று முகம் கழுவிவிட்டு வந்து, "அதிம்மா சாப்பிட்றிங்களா? அம்மா ஊட்டி விட்றேன்" என்க,

"ஹ்ம்ம்…" என்று தலையசைக்கவும் உணவை எடுத்து அவளுக்கு ஊட்டி முடிக்கும் சமயம் யாரோ வரும் அரவம் கேட்க திரும்பி பார்த்தாள்.

புவனா தான் வந்தார். தட்டை எடுத்து செல்ல வந்திருக்கிறார் என்று நினைத்தவள் கழுவி வைத்த பாத்திரத்தை எடுத்து முன்னே வைத்தாள்.

அவரோ அதை தாண்டி வந்து அவளது அருகில் அமர, "பாட்டி" என்று அவரிடம் தாவினாள் அதி‌.

"அதிக்குட்டி சாப்பிட்டிங்களா?" என்று புவனா வினவ,

"ஹ்ம்ம் சாப்பிட்டேன் பாட்டி" என்று வேகமாக தலையசைத்தாள்.

"அதிக்குட்டி எப்பவுமே குட் கேர்ள் தான்" என்று சிரிப்புடன் அவளது கன்னத்தில் முத்தமிட்டு தானும் பெற்று கொண்டார்.

செல்வா இதனை அமைதியாக பார்த்தபடி இருந்தாள். அவள் பேசாமல் இருந்தாலும் அவ்வபோது குடும்பத்தினர் வந்து அதியை பார்த்துவிட்டு பேசிவிட்டு தான் சென்றனர்.

அதனை செல்வா தடுக்கவில்லை. தனுஷ்கூட, "அத்த என்ன பண்ற?" என்றபடி அவளோடு இருந்தான்.

தன்னை இயல்பாக்க குடும்பத்தினர் செய்யும் முயற்சி என்றறிந்தவள் அவன் கேட்கும் கேள்விக்கு ஓரளவு பதில் கூறி பேசினாள்.

குழந்தையிடம் அவளால் எதையும் காண்பிக்க முடியவில்லை.

அதியிடம் பேசி முடித்தவர், "செல்வாம்மா?" என்றழைக்க,

'என்னிடம் தான் பேச வந்துள்ளாரா?' என்று யோசனையுடன் பார்க்க,

"பாப்பா தூங்கினதும் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வெயிட் பண்ணு நால் பால் காச்சி எடுத்திட்டு வர்றேன்" என்றபடி அவளது பதிலை பார்க்காது வெளியேறிவிட,

அவளுக்கு தெரிந்தது அவர் இன்று ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் என்று.

மகளை மீண்டும் உறங்கவ வைக்க முயற்சிக்க அவளோ இப்போது தான் உறங்கி எழுந்ததால் மீண்டும் உறங்க மாட்டேன் என்பது போல அடம்பிடித்தாள்.

சிறிது நேரத்தில் பவி இருவருக்கும் சூடான பாலை கொண்டு வர மகளுக்கு புகட்டியவள் தானும் அருந்தினாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு தான் உண்டிருந்தாலும் மீண்டும் பசிப்பது போல இருக்க அதனை மறுக்காது அருந்தியிருந்தாள்.

அவளுக்காகவே அறையில் சில உணவு பண்டங்கள் புவனா வைத்திருந்தாள்.

அவளாக வினவவில்லை என்றாலும் ஏற்கனவே பிள்ளை பெற்று வளர்த்தவர்களுக்கு தெரிந்திருந்தது.

வெகுநேரம் கழித்தே அதி உறக்கத்திற்கு சென்றிருக்க அவள் உறங்கியது தெரிந்தது போல அறைக்குள் வந்து அவளெதிரே அமர்ந்தார் புவனா.

செல்வா கேள்வியாக பார்த்து வைக்க,

"இன்னும் எவ்ளோ நாளுக்கு இப்படியே இருக்க போற செல்வா?" என்று வினவ, செல்வாவிடம் மௌனமே மொழியானது.

அவளது அமைதியை கண்டவர்,

"உன்கிட்ட தான் கேக்குறேன் செல்வா பதில் சொல்லு" என்க,

"என்ன சொல்றதுத்த?" என்று வெகுநாளுக்கு பிறகு இதழ் பிரித்து வார்த்தையை உதிர்த்தாள்.

"என்ன சொல்றதுனா? எப்போ உன் புருஷன் வீட்டுக்கு போகப் போறேன்னு சொல்லு" என்றவரது வார்த்தைக்கு அவள் வேகமாக ஏதோ கூற வர,

"உங்களுக்கு பாரமா இருக்கேனா? வீட்டை விட்டு போய்ட்றேன்லாம் சொன்ன. வாய்லயே அடிப்பேன்" என்று இடை நுழைந்த புவனா முறைக்க செல்வா பதிலற்று போனாள்.

"நான் ஒத்துக்குறேன் உன்னோட இழப்பு ரொம்ப பெருசு தான். ஆனால் அதுக்குனு இப்படி ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடந்தா எல்லாம் சரியாகிடுமா?"

"..."

"யாருக்குமே இறப்பு வராம போக போறது இல்லை. எல்லாரும் ஒரு நாள் போய்தான் ஆகணும். ஒரு சிலர் சீக்கிரமா போய்ட்றாங்க. எல்லாத்தையும் கடந்து வந்து தான் ஆகணும்"

"..."

"எனக்கு கூட தான் அம்மா அப்பா சின்ன வயசுலயே இறந்து போய்ட்டாங்க. நானும் இப்படியே ரூம்ல அடைஞ்சு இருந்தா அவங்க திரும்பி வந்திருவாங்களா? நானும் உன் அப்பாவும் அதை கடந்து மறந்து எங்க வாழ்க்கையை பாக்கலையா?"

"..."

"உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்குடா. அதுவும் இதுல இன்னொருத்தரும் இருக்காரு. உனக்கு வல்லபன் மேல என்ன கோபம்னு தெரியலை. ஆனால் அவரை மாதிரி ஆளுங்களை பாக்குறது எல்லாம் ரொம்ப அபூர்வம். உன் வாழ்க்கையில வந்த ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு தெரிஞ்சதும் அமைதியா விட்டுக் கொடுத்துட்டு போன வல்லபனும் நல்லவன் தான் சாகுற கடைசி நிமிஷத்துல கூட நீ தனியாக கஷ்டப்பட கூடாதுனு உனக்கு வாழ்க்கை அமைச்சு கொடுக்க நினைச்ச வசீயும் நல்லவன் தான்‌ அந்த விதத்துல நீ கொடுத்து வச்சவ" என்றவர்,

"சீக்கிரமா உன்னோட வீட்டுக்கு போகுற வழிய பாருடா. வாழ்க்கை முழுசும் தனியா இருக்கிறது இப்போ வேணா நல்லாயிருக்கும் ஆனால் போகப்போக தான் அதோட கஷ்டம் தெரியும். அனுபவப்பட்டவ சொல்றேன் நாளைக்கு கண்டிப்பா நீ வருத்தப்படுவ யோசிச்சு பாரு"

"..."

"திரும்பவும் சொல்றேன் வல்லபன் போல ஆளுங்க ரொம்ப அபூர்வம்‌. காதலிச்ச பொண்ணு வேணாம்னு சொல்லிட்டா ஆசிட் அடிக்கிறது அது இதுன்னு பண்ற இந்த காலத்துலயும் ஓரு வார்த்தை கூட கேக்காம விட்டு கொடுத்திட்டு போயிருக்காரு. இத்தனை வருஷம் கழிச்சு நீ திரும்பி வந்த போதும் எதையுமே யோசிக்காம உன்னை ஏத்துக்கிட்டாரு. அதுவும் சும்மாயில்லை குடும்பத்தையே எதிர்த்திட்டு வந்திருக்காரு. இப்போ வரைக்கும் நீ எல்லாம் தெரிஞ்சு கிளம்பி வந்தப்போவும் உன்னை ஒரு வார்த்தை கூட கேக்கலை.‌ அவ‌‌ என்கிட்ட சீக்கிரமா திரும்பி வந்திடுவான்னு சொல்லிட்டு போனாரு"

"..."

"அந்த செகெண்ட் கூட‌ எனக்கு ஆச்சர்யம் தான் தெரியுமா? இவ்ளோ உறுதியா சொல்லிட்டு போறானேன்னு. அவர் நம்பிக்கைக்காகவாது நீ போகணும். ஒரு உண்மையான நேசம் கிடைக்கிறது எல்லாம் வரம். நேசிச்ச ஒருத்தர் பொய்ச்சு போறது எவ்ளோ வலின்னு எனக்கு தான் தெரியும்.‌ உனக்கு ஒரு உண்மையான நேசம் கிடைச்சிருக்கு. நீயே விட்டு போனாலும் அவர் உன்னை விட்டு போகவே மாட்டார்"

"..."

"நீ கோமாவுல இருந்தப்போ அவர் உனக்காக எங்ககிட்ட எவ்ளோ சண்டை போட்டாருன்னு எங்களுக்கு தான் தெரியும். அதுக்கு மேல உன்கிட்ட பொய் சொல்லணும்னு அவருக்கு எந்தவித இன்டென்ஷனும் இல்லை.‌ உனக்கு எல்லாம் மறந்து போய்டும்னு நாங்க யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. உனக்கு நினைவு இருக்கும் பேசி புரிய வச்சு உனக்கும் அவருக்கும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு தான் இருந்தோம். ஆனால் நடந்தது எல்லாம் கடவுள் சித்தம் தான்னு நான் சொல்லுவேன்"

"..."

"நடந்தது எதுலயுமே வல்லபன் மேல எந்த தப்பும் இல்லை அந்த ஒரு பொய்யை தவிர அதுவும் சூழ்நிலையால தான். ஆனால் இப்போ நீ பண்ணிட்டு இருக்க பாரு அது ரொம்ப பெரிய தப்பு" என்றவர் அவளது வயிற்றை சுற்றி காட்டி,

"நீ உண்டாகியிருக்கதை கூட அவர்க்கிட்ட சொல்லக் கூடாதுனு சொன்னது ரொம்ப ரொம்ப பெரிய தப்பு. இது தெரிஞ்சா அவர் எவ்ளோ வருத்தப்படுவார். அதியை தன்னோட பொண்ணாவே பாத்துக்கிட்டாரு. இன்னும் உங்களுக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் இதோ மாதிரி துளிகூட அன்பை குறையாம பார்த்துப்பாரு அதுக்கு நான் கேரெண்டி. ஆனால் நீங்க அம்மா அப்பாவாக போகுற நல்ல விஷயத்தை கூட நீ மறைச்சுட்ட" என்று பெருமூச்சுடன்,

"இதுக்கு மேல என்ன சொன்னா உனக்கு புரியும்னு எனக்கு தெரியலை" என்றுவிட்டு வெளியேறி சென்றிட,

இங்கு செல்வா தான் போகும் அவரையே அமைதியாக வெறித்தாள்…

மகிழுந்தை நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு மின்தூக்கியில் தனது தளத்தை அடைந்து கதவை திறந்தவனை இருளடைந்த வீடே வரவேற்க உள்ளே சென்று விளக்கை கூட போட தோன்றாது நீள்விருக்கையில் விழிமூடி சாய்ந்துவிட்டான்.

மனது சில மாதங்களுக்கு முன்பு முகம் முழுவதும் புன்னகையுடன் தன்னை எதிர்கொள்ளும் மனையாளையும் அப்பா என்று ஆசையாக வந்து காலை கட்டிக் கொள்ளும் மகளையும் எதிர்ப்பார்த்தது.

அந்த புன்னகை முகம் பசுமையாய் நெஞ்சில் பதிந்திருந்தது.

இன்றோடு முழுதாக நான்கு மாதங்கள் ஆகியிருந்தது அவனவள் அவனைவிட்டு சென்று.

ஒவ்வொரு நாளும் அவளை தான் அவளது வரவை தான் மனது எதிர்பார்த்து நின்றது.

அதுவும் அவள் தனது மனையாள் கருவுற்று இருப்பது தெரிந்து அத்தனை நிலைக்கொள்ள இயலா மகிழ்ச்சி தான் அவனுக்கு.

ஆனால் அதனை தன்னிடம் தெரிவிக்க வேண்டாம் என்று அவள் கூறிவிட்டாள் என்பதை அறிந்து அத்தனை மகிழ்ச்சியும் வந்த வேகத்தில் மறைந்தும் போனது.

இருந்தும் மனதை தேற்றி கொண்டான். இம்முறை மனைவி மீது சிறிது கோபம் கூட துளிர்த்தது.

அப்படியென்ன தங்களது காதலின் பரிசாக தங்களது பிள்ளை பிறக்க போகும் மகிழ்ச்சியான விடயத்தினை கூட என்னிடம் தெரிவிக்க கூடாத அளவிற்கு தான் வேண்டாதவனாக ஆகிப் போனேன் என்று.

விடயம் அறிந்த நொடி அவளை பார்க்க உள்ளம் ஆர்ப்பரித்தது. மனைவியை கட்டியணைத்து முத்த மழை பொழிந்து தனது மகிழ்வை வெளிப்படுத்த உள்ளம் உந்தி தள்ளியது.

ஆனால் அவளது நிலையை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தான். ‌அவளாக தன்னிடம் வரவேண்டும் என்று காத்திருந்தான்.

அவள் மீது கோபமிருந்த போதும் மனது அவளையே தான் எதிர்பார்த்தது. அவளது அண்மைக்கு தான் ஏங்கியது. அவளது சிறு அணைப்பிற்கு பார்வைக்கு கோபத்திற்கு தான் ஏங்கி தவித்தது.

கோபம் வந்தாலும் சிரிப்பு வந்தாலும் அழுகை வந்தாலும் என யாவிற்கும் அவள் தான் வேண்டும் வல்லபனுக்கு.

அவள் மீது ஏன் எதற்கு இத்தனை அளப்பறிய நேசம் என்று கேட்டால் அவனிடமே பதிலில்லை. ஆனால் அவனுக்கு அவள் அவள் மட்டும் வேண்டும் காலம் முழுவதற்கும்.

சில உறவுகள் ஆன்மாவிற்குள் விதைக்கப்பட்டவை. அவற்றின் மீதான பற்றுதலுக்கு எந்த ஒரு காரணமும் அளவுகோலும் எப்போதும் தேவைப்படுவதில்லை.

இதுவும் அது போல தான். மனது அவளிடம் தான் மண்டியிட்டு நிற்கிறது.

"சீக்கிரமா என்கிட்ட வந்திடு ஜான்சி ராணி" என்று அவனது இதழ்கள் மெதுவாக முணுமுணுத்தது.


நீ அங்கே

நானும் இங்கே
இந்த தனிமையின்
நிமிஷங்கள்
வருஷமாவதேனோ…?
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Bhuvana avanga sollura vallaban mathiri oruthar love panrathu ellam chanceless ippo varaikum selva ah va avan vali ah athigam ah vae anbuvachum atha ava mela kamichathum illa aval ah hurt pannanum nenachathum.illa ippo iva ethukaga ava pregnancy ah avan kita solla kudathu sonna nu theriyala aana athu avanukku evolo vali ah kudukkanum yosikala ippo ivolo varutha padura va annaikku ava amma kita strong ah pesi irundha indha kastam yae illa
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Correctuuu than. Vallaban maathiri lam Oru aal Chance eh illa. Selva seekkirama purinjukkanum
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
செல்வா கருவுற்ற பிரகாவது யோசித்திருக்கலாம் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄வல்லபணுடானான வாழ்க்கையை உணர்வாளா 😔😔😔😔
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Buvana aathai pesunathu ellam crt tha👍 vallapan evaluyu kasta pattu irupan avanoda love unmaiyanathu atha unakaga vidu kuduthu poonan selva ne yosigalam 😟 vasi good soul tha Avan wife Papa yum kastapama iruganum ninaju vallapan selva oru life kuduthu poedan🥰 vallapa ne feel pannatha unnoda selva sikirama unaya theydi varuva paru 😊😊😊
 
Top