• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 23

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 23

காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து ஓய்வாக சோர்ந்து

அமரும் நேரம் நிழலை
கொடுக்கும் பெருமரத்தை போல தான் சில நேசங்கள் பெரும்சுமையின் போது கரங்களை கோர்த்து கொள்கின்றன…



அதன் பிறகு வசீகரன் தனது தொழில் தொடங்கும் யோசனை சம்மந்தமான அனைத்தையும் தயார் செய்துவிட்டு வல்லபனை பார்க்க செல்ல அவனும் வசீயின் தொழிலுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தருவதற்கான‌ ஏற்பாடுகளையும் செய்து அவனுடன் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டான்.

அடுத்ததாக தொழில் தொடங்க இடம் எல்லாம் முடிவு செய்து சென்னையிலே இடத்தை பார்த்து அனைத்தையும் தயார் செய்தனர்.

இதற்காக வல்லபன் அடிக்கடி சென்னை வரவேண்டி இருக்க செல்வாவை சந்திக்க நேர்ந்தாலும் ஏதும் பேசுவதில்லை.

தன்னை கண்டு அவள் அஞ்சுகிறாள் என்று அறிந்த நொடியே அவள் முன் வர வேண்டாம் என்று முடிவு செய்திருந்தான்.

ஆனால் தொழில் தொடர்பாக அடிக்கடி வசீயை சந்திக்கும் சூழல் வர செல்வாவை பார்ப்பதையும் தடுக்க இயலவில்லை.

வல்வபன் மறுத்தாலும் அவன் சென்னை வரும் சமயம் வசீ வல்லபனை வற்புறுத்தியாவது வீட்டிற்கு அழைத்து செல்ல இவனால் ஓரளவிற்கு மேல் மறுக்க இயலவில்லை.

அப்படியே சென்றாலும் வெகுநேரம் இருக்காது அங்கிருந்து வெளியேறிடுவான்.

குறுகிய நேரம் பார்த்திருந்தாலும் வல்லபனுக்கு ஏதோ ஒரு விதத்தில் செல்வாவை பிரதிபலிக்கும் பூஞ்சிட்டு அதியை மிகவும் பிடித்துவிட பார்க்க போகும் சமயம் எல்லாம் இனிப்பை வாங்கி சென்றிடுவான்.

அதிக்கும் ஏனோ வல்லபனை பிடித்துவிட அவனை கண்டதும் இவளும் குஷியாகிடுவாள்.

வசீ வல்லபா என்று அழைப்பதை கண்டு தானும் வல்லப்பா என்று அழைக்க தொடங்க வசீயும் செல்வாவும் கூட அவளை அப்படி கூற கூடாது என்று கண்டித்தனர்.

இருந்தும் அவள் கேட்கவில்லை. வல்லபன் தான், "இருக்கட்டும் இதுவும் நன்றாக தான் இருக்கிறது" என்று விட அவர்களும் விட்டுவிட்டனர்.

ஆனால் அவளது அழைப்பு அதன் பின்னர் வல்லாப்பா என்று ஆகிவிட்டிருந்தது.

இருவரும் சேர்ந்து தொடங்கிய தொழில் ஆறு மாதத்திலே மிகவும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.

அன்று வல்லபன் சென்னைக்கு வருகை தந்திருக்க வசீ எப்போதும் போல அவன் மறுத்தும் கேட்காது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

செல்வா கூடத்தில் உள்ள நீள்விருக்கையில் அமர்ந்து மகளுடன் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருக்க அழைப்பு மணி ஒலித்தது.

கணவன் தான் வந்திருப்பான் என்று எண்ணியவள் கதவை திறக்க எழுந்து செல்ல மகளும் பின்னால் சென்றாள்.

கதவை திறந்ததும் புன்னகையுடன் நின்றிருந்த வசீயை கண்டதும் தனக்கும் தொற்றிக் கொள்ள அவனது கைகளில் இருந்து பையை வாங்கிக் கொள்ள,

"ப்பா…" என்று வந்த மகளை கையில் வாரிக் கொண்டவன்,

"அதிக்குட்டி யாரு வந்திருக்கா பாரு" என்று மகளிடம் கூற,

மகளோடு சேர்ந்து தாயும் எட்டிப் பார்க்க, அடுத்த கணம் முகத்தில் இருந்த புன்னகை இருந்த இடம் தெரியாமல் மறைந்திட்டது.

இதனை கவனித்திட்ட வல்லபன், 'இதற்குத்தான் நான் இவள் முன்பு வருவதில்லை. ஆனால் இவன் விட்டால் தானே' என்று மனதிற்குள் நினைத்தவன்,

'இனி வசீ எவ்வளவு வற்புறுத்தினாலும் இவளை சந்தித்து வருந்த வைக்க கூடாது' என்று நினைத்தபடி நிர்மலான முகத்துடன் அவர்களை நோக்கி வர,

வல்லபனை கண்டதும், "வல்லாப்பா…" என்று முகம் நிறைந்த புன்னகையுடன் அவனிடம் தாவியிருந்தாள் அதி.

"குட்டிம்மா…" என்று தானும் புன்னகையுடன் அவளை அள்ளிக் கொண்டவன் உள்ளே வர அமைதியாக கதவை தாள் போட்டு வந்தாள்.

"சாக்கி சாக்கி…" என்று அதி மழலையில் மிழற்ற,

"ஹ்ம்ம் ரெண்டு சாக்லேட்ஸ் உனக்கு வாங்கிட்டு வந்திருக்கேன் டா" என்று சிரிப்புடன் கூறி இனிப்பை அவளிடம் கொடுத்தவன் நீள்விருக்கையில் அவளோடே அமர்ந்து கொள்ள,

வசீ, "ஒரு டூ மினிட்ஸ் டா ப்ரெஷ் ஆகிட்டு வந்திட்றேன்" என்று வல்லபனிடம் கூறியவன் மனைவியிடம் அவனுக்கு எதாவது குடிக்க கொடுக்குமாறு சைகை செய்து சென்றான்.

"தெண்டு சாக்கி" என்று மகிழ்வுடன் விழிகளை விரித்தவளை வல்லபன் முகம் நிறைந்து ரசித்து பார்த்திட,

இருவரும் தங்களுக்குள் பொருந்தி போனதை வழக்கம் போல ஆச்சர்யமாக பார்த்தவள் சமையலறைக்கு சென்று தேநீர் தயாரிப்பதற்காக பாலை எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு காத்திருக்க,

அப்போது தான் அவளுக்கு வல்லபனிடம் தான் பேச நினைத்தது நினைவிற்கு வர நெருப்பை குறைத்து வைத்தவள் விறுவிறுவென வெளியே வந்து அவனருகே நின்றாள்.

வல்லபன் இன்னும் அதியிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.

அவள் சில நொடிகள் அங்கே நின்றதில் நிமிர்ந்து அவன் கேள்வியாக பார்க்க,

ஏதோ ஒரு தைரியத்தில் வந்துவிட்டவளால் கேட்க இயலாது போக,

"உங்களுக்கு டீயா காஃபியா?" என்று கேட்டு வைக்க,

"இல்லை எதுவும் வேணாம். குடிக்க தண்ணீர் மட்டும் போதும்" என்றவனிடம்,

"இல்லை இவ்ளோ தூரம் வந்திட்டு எதுவும் குடிக்காம போவீங்களா? டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்" என்றாள் சிறிய குரலில்.

அவளுக்கு தெரிந்தது தன்னுடைய முக மாறுதலினால் தான் அவன் இவ்வாறு கூறுகிறான் என்று.

அவளும் தான் என்ன செய்வாள் அவனை பார்க்கும் சமயமெல்லாம் தான் அவனுக்கு செய்தது தான் நினைவு வந்து வதைதத்து.

குற்றவுணர்வு அது தான் உலகின் மிகப்பெரிய தண்டனை என்பதை அவள் அப்போது உணர்ந்து கொண்டாள்.

அவன் எங்கே திருமணம் செய்து மகிழ்வாக இருப்பான் என்று நினைத்து கொண்டிருந்தவளுக்கு அவனுடைய தற்போதைய நிலை மிகவும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது.

தான் மட்டும் திருமணம் கணவன் குழந்தை என்று மகிழ்வாக இருக்க அவன் தனியாக இருப்பது அவ்வளவு வருத்தியது.

தன்னால் தான் தான் செய்ததால் தான் அவன் இப்படி இருக்கிறான் என்று ஒவ்வொரு விநாடியும் எண்ணம் வந்து அவளை கொல்லாமல் கொள்ள அதன் விளைவே அவனை கண்டதும் அவளுடைய முக மாற்றம்.

அவளது குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவன் ஏதும் கூறாது, "ஹ்ம்ம்" என்று மட்டும் தலையசைத்துவிட்டு அதியிடம் பார்வையை பதித்தான்.

அவள் இன்னும் நகராததில் மீண்டும் நிமிர்ந்தவன் முகத்தில் கேள்வியை தாங்கி பார்க்க,

"அது உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்க,

அதிக்கு ஒரு இனிப்பை பிரித்து கொடுத்து அருகில் அமர வைத்தவன்,

'சொல்லு' எனும் விதமாக நன்றாக அவளை பார்த்தவாறு அமர்ந்து கொள்ள,

சில கணங்கள் மௌனத்திற்கு பிறகு,

"நீங்க எப்போ கல்யாணம் பண்ணுவிங்க" என்று கேட்டுவிட,

இப்போது எதற்கு இந்த கேள்வி என்று நினைத்தவன்,

"இப்போ எதுக்கு இந்த கேள்வி?" என்றிட,

"நீங்க பதில் சொல்லுங்க" என்று அவனுடைய வினாவிற்கு பதிலளிக்காது தன்னுடைய பிடியிலே இருக்க,

"தோணும்போது பண்ணிக்குவேன்" என்றவனது பதிலில்,

"எப்போ தோணும்?" என்று பதில் வினவினாள்.

"ஏன் உனக்கு இப்போ என்ன பிராப்ளம் நான் உன் கண்ணு முன்னாடி வர்றது உனக்கு பிராப்ளமா?" என்றவன்,

அவள் பதில் கூறும் முன்பே,

"இதுதான் நான் இங்க உன்னை பாக்க வர்றது லாஸ்ட் டைமா இருக்கும்" என்றிட,

அவள் அதிர்ந்து பார்த்தாள். அவனுடைய பதிலில் அவளுக்கு வார்த்தை வரவில்லை.

இதற்குள் வசீகரன் இறங்கி வர,

சடுதியில் எழுந்து கொண்டவன், "சாரிடா‌‌ ஒரு எம்ர்ஜென்சி ஒர்க் வந்திடுச்சு நான் கிளம்புறேன்" என்க,

"வந்தவுடனே கிளம்பிட்ட.‌ எப்போ இங்க வந்தாலும் உனக்கு எதாவது ஒர்க் வந்திடுது" என்றவன்,

"சரி காஃபியாவது குடிச்சிட்டு போகலாமே?" என்றுவிட்டு,

மனைவியிடம், "இவனுக்கு குடிக்க ஏதும் கொடுக்கலையா?" என்றான்.

செல்வா பதில் அளிப்பதற்குள் வல்லபன், "அவங்க கொடுக்குறேன்னு தான் சொன்னாங்க. எனக்கு தான் டைம் இல்லைடா" என்றவனுக்கு அலைபேசி அழைப்பு வந்திட,

அதனை எடுத்து, "இதோ வந்திட்றேன்" என்றவன்,

"சரிடா நெக்ஸ்ட் டைம் பாக்கலாம்" என்று அதியின் அருகில் சென்று கன்னத்தில் முத்தமிட்டவன் செல்வாவின் முகத்தை கூட பார்க்காது நகர்ந்துவிட இங்கு இவள் தான் கலங்கி நின்றாள்.

தான் எதற்காக வினவினோம் இவர் என்ன அர்த்தத்தில் உணர்ந்து கொண்டார் என்று வாடிப் போனாள்.

அதன் பிறகு கூறியது போல அவன் செல்வாவின் முன்பு வரவில்லை ஏன் சென்னைக்கே அவன் வரவில்லை.

அவனுக்கு புரிந்தது அவளுக்கு தன்னை கண்டதும் குற்றவுணர்வு எழுகிறது என்று.

தன்னுடைய இந்த நிலை அவளால் தான் என்று வருந்துகிறாள் என்று அதனால் தான் அவளை இனி சந்திக்கவே கூடாது என்று முடிவெடுத்து அதனை செயல்படுத்தவும் செய்தான்.

அலுவலக வேலைகளை கூட அங்கிருந்த பார்த்துக் கொண்டான்.

அவனால் மறுக்க இயலாத ஒன்று அதியா. அவளை தான் அவன் மிகவும் தேடினான்.

 
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
என்னவோ அந்த துறு துறு விழிகளும் குண்டு கன்னங்களும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடிக்கடி அவளது நினைவு தான் எழும். அவளை மிகவும் மனது தேடும் சமயம் மட்டும் வசீகரனுக்கு காணொளி அழைப்பை விடுத்து பார்த்து கொண்டான்.

அவ்வபோது இனிப்புகளை வாங்கி அவளுக்கு அனுப்பி வைத்தான்.

ஆக அவன் கூறியதை செயல்படுத்திவிட்டான் என்று செல்வாவிற்கு புரிந்தது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருக்க போகிறாரோ என்று இவள் தான் மேலும் நோந்து போனாள்.

வசீ பல முறை கேட்ட போதும் அங்கு நிறைய வேலை இருப்பதாக கூறியிருந்தான்.

சில மாதங்கள் கழித்து வல்லபன் தனது அண்ணன் மகனுக்கு பிறந்த நாள் விழா வைப்பதாகவும் அதில் தன்னுடைய திருமண அறிவிப்பை கொடுக்க போவதாகவும் கூறி அவனை அழைக்க விடயம் அறிந்த செல்வா தான் மிகவும் மகிழ்ந்து போனாள்.

அவளுக்கு தெரிந்தது தன்னுடைய கேள்வியால் தான் அவன் இந்த முடிவை எடுத்துள்ளான் என்று.

தான் எல்லா இடத்திலும் சுயநலவாதிரயாக தான் இருக்கிறோம் என்று எண்ணம் வர,

இருந்துவிட்டு போகிறேன் அப்படியாவது அவருக்கு திருமணம் நடக்கட்டும்.

ஒரு பெண் அவரது வாழ்வில் வந்தால் நிச்சயமாக நல்லது நடக்கும் என்று நம்பினாள்.

மகிழ்ச்சியோடு தான் கணவனுடன் விழாவிற்கு கிளம்பினாள்.

விழாவில் கலந்து கொண்டவளது முகம் நிறைந்த புன்னகையிலே அவன் பார்வை நிர்மலாக நிலைத்து நின்றது.

வல்லபனின் அண்ணன் மனைவி சுதிக்ஷாவின் தங்கை சுஸ்மிதாவுடன் அவனுக்கு திருமணம் நடக்க போவதை அபிஷேக் அறிவிக்க,

எல்லோரும் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

செல்வாவும் வசீகரனுடன் சென்று மகிழ்வுடன் வாழ்த்துக்கள் கூற,

"நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் செஞ்சுக்க போறேன். இனி உனக்கு எந்த கில்ட்டும் வராது" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் உண்ர்வற்ற முகத்துடன் கூறிவிட்டு அதியை தூக்கி கொஞ்சத் துவங்க,

அவள் தான் அவனது பதிலில் ஒரு கணம் விக்கித்து நின்றுவிட்டாள்.

ஆக இந்த திருமணம் தனக்காகத்தானா? தன்னுடைய குற்றவுணர்வை போக்குவதற்காக தானா? என்று வினா உள்ளே எழ மகளுடன் கொஞ்சியபடி இருந்தவனை விழியகற்றாது பார்த்திருந்தாள்.

அதன் பிறகு அவள் தன்னிலை அடைய வெகுநேரம் பிடித்தது.

தனக்குள்ளே பலவாறாக குழப்பிக் கொண்டவள் இறுதியில் என்ன காரணமாக இருந்தால் என்ன அவர் நன்றாக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள்.

அதன் பிறகு விழாவை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பும் சமயம் தான் அவர்களுக்கு அந்த கோர விபத்து நடந்தது.

இங்கு விமானத்தில் விழிமூடி சாய்ந்திருந்த வல்லபனுக்கும் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

அவள் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறிய நிகழ்விற்கு சென்றது.

அன்று வழக்கம் போல அலுவலக வேலையை முடித்து வந்தவன் செல்வாவிற்கு அழைப்பை விடுத்தான்.

இரண்டு நிமிடங்களில் அவள் அழைப்பை ஏற்றதும், "ஓய் பொண்டாட்டி என்ன பண்ணிட்டு இருக்க? மேடம் பிஸியா மார்னிங்ல இருந்து ஒரு மெஸேஜ் கூட காணோம்" என்றவன் அவள் பதிலளிக்கும் முன்,

"உனக்கிட்ட சொல்லணும்னு நினைச்சிட்டே இருந்தேன். மேடம் தான் மாமவீட்டு கல்யாணத்துல செம்ம பிஸி. சரி அதை விடு. நேத்து நைட் ஒரு கனவு. அதுல நீயும் நானும் கல்யாணம் முடிஞ்சு மெல்போர்ன்க்கு ஹனிமூன் போயிருந்தோம்"என்றவனுக்கு அப்போது தான் எதிர்பக்கம் எந்த பதிலும் வராதது புரிய,

"ஜான்சி ராணி லைன்ல இருக்கியா? பேசுடி" என்க,

மறுமுனையில் ஒரு விசும்பல் சத்தம். அதில் அதிர்ந்தவன்,

"ஏய் என்னடி ஆச்சு? ஏன் அழற?" என்று பதற,

மறுமுனையில் அழுகை பெரியதாகியது.

"பதில் சொல்லுடி" என்று பரிதவித்தவன் அவள் பதில் கூறப் போவதில்லை என்று உணர்ந்து காணொளி அழைப்பை கொடுத்திருந்தான்.

அழைப்பை உடனடியாக ஏற்றவளது முகம் அழுது வீங்கி சிவந்திருக்க இவன் இங்கு ஏகமாக அதிர்ந்து போனான்.

"செல்வா செல்வாம்மா என்னாச்சுடா? சொன்னா தானடா தெரியும் ஏன்டா அழற?" என்று வினவ,

அவளது அழுகை பெரியதாக கால்களில் முகத்தை புதைத்து கொண்டாள்.

இவளது அழுகையின் காரணம் தெரியாது தவித்து போனவன்,

"பங்க்ஷன்ல எதுவும் பிராப்ளமா? அத்தை மாமாவ யாராவது எதுவும் சொல்லிட்டாங்களா?" என்று வினவ,

அவனது அத்தை மாமா என்ற அழைப்பில் மேலும் உடைந்து போனவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

அவள் பதிலளிக்காததில் பொறுமையிழந்தவன், "நான் இப்போவே கிளம்பி வர்றேன்" என்றவனது வார்த்தைக்கு,

"வேண்டாம்" என்று தலையை இடம் வலமாக அசைத்தவள் தனது கழுத்தில் தொங்கிய தாலியை வெளியே எடுத்து நீட்டயிருந்தாள்.

ஒரு நொடி ஏதும் புரியாது அதிர்ந்து பார்த்தவனிடம்,

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு…" என்று அழுகையுடன் தேம்பியவள் முகத்தை மூடிக்கொண்டு பெரியதான விம்பல்களுடன் வெடித்தாள்.

இங்கு இவன் தான் நடப்பது கனவா நிஜமா என்று புரியாத உணர்வில் தலையில் இடி விழுந்தது போல அமர்ந்திருந்தான்.

அதிர்ச்சியில் வார்த்தை வராது அமர்ந்திருந்தவனிடம், "நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன். மன்னிப்பு கேட்க கூட எனக்கு அருகதை இல்லை. நான் உங்களுக்கு சரியானவ இல்லை. நீங்க உங்களுக்கு ஏத்த பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க" என்றவள் அழைப்பை துண்டித்திருந்தாள்.

இங்கு இவன் தான் பித்து பிடித்தது போல ஆகியிருந்தான்.

நொடியில் மனதில் ஒரு விரலால் கண்ணாடியை ஏற்றிவிட்டு சிவந்த நாசியுடன் தன் முன் வந்து நின்றவளது தோற்றமும் இரண்டு நாட்கள் முன்பு இரவு பொண்டாட்டி அடுத்த மந்த் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று தான் கேட்டது வரை வந்து போக இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.

தான் ஆசையாய் காதலாய் நேசத்தை பிணைத்து தன்னவளுடன் சேர்த்து கட்டிய காதலின் தேசம் கண்முன் சிதறி போனது.

அவள் உனக்கில்லை என்ற‌ எண்ணம் அவனை ஆயிரம் பாகங்களாக உடைந்து போனான்.

நண்பர்களுக்கு அழைத்து நடந்ததை விசாரித்து எல்லாம் உண்மை தான் என்று தெரிந்து கொண்டான்.

புத்திக்கு தெரிந்தது ஆனால் மனதிற்கு புரியவில்லை.

பார்க்கும் திசையெங்கும் அவளது பிம்பம் தான். கடந்த நொடி வரை மனதிற்குள் மனைவியாய் வலம் வந்தவள் நான் வேறு ஒருவருடைய மனைவி இனி என் வாழ்வில் உனக்கு இடமில்லை என்று கூறி அவனை கொன்று சென்றுவிட்டாள்.

அதன் பிறகு வாழும் காலம் நரகமானது. மனதளவில் இறுகிப் போனான்.

யாரையும் தன்னருகே சேர்த்து கொள்ளவில்லை. தனியாக வீடெடுத்து தங்கிக் கொண்டான்.

எல்லாம் மாறிப்போனது. அவனும் மாறிப்போனான். தோற்றத்தில் செயலில் என எல்லாவற்றிலும் மாற்றம்.

எப்போதும் அவனிடம் இருக்கும் மெலிதான புன்னகை மறைந்து போயிருக்க முகத்தில் அத்தனை இறுகத்தை பூசிக் கொண்டான்.

அவளை மறப்பதற்காக வேலை வேலை என்று இரவு பகல் பாராது உழைத்தான்.

அதன் விளைவு அவனுடைய தொழிலில் பெரிய முன்னேற்றம் ஆனால் அவளை மறக்கத்தான் முடியவில்லை.

உயிரில் உறைந்து தனக்கு நிறைந்துவிட்டவளை அவனால் நினைவுகளில் இருந்து அழிக்க முடியவில்லை.

அவளை பற்றிய செய்தியை மட்டும் அவ்வபோது அறிந்து கொண்டான்.

அதி பிறந்திருந்த செய்தியை கேட்டு அவள் மகிழ்வான வாழ்வை தான் வாழ்கிறாள் என்று தெரிந்து கொண்டான்.

அவள் அனைத்தையும் கடந்து சென்றுவிட்டாள். ஆனால் இவன் தான் அவள் விட்டு சென்ற அதே இடத்தில் நகராது சிலை போல தேங்கிவிட்டேன் என்று புரிந்த போது இதழ்களில் ஒரு விரக்தி புன்னகை.

அவள் ஆனந்தமாக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தான்.

ஆனால் அவனால் தான் அவளது நினைவுகளை ஒதுக்கித் தள்ள முடியவில்லை.

மாற்றான் மனைவியை நினைக்காதே என்று தனக்கு தானே கூறி திட்டி என்று என்ன செய்தாலும் மனது அவளிடம் தான் போய் நின்றது.

வருடங்கள் கடந்தோட ஒரு நாள் நண்பரை பார்த்துவிட்டு செல்வதற்காக உணவகத்திற்கு வந்து கிளம்பி செல்லும் சமயத்தில் தான் செல்வ மீனாட்சியை கண்டான்.

கண்ட கணம் இதயத்திலே சிறிதான அதிர்வு தாக்க அவளை தான் இமைக்காது அழுத்தமான பார்வை பார்த்திருந்தான்.

மகளை கையில் தூக்கிக் கொண்டு கணவனிடம் ஏதோ சிரித்தபடி கூற அவனும் குனிந்து காதில் என்னவோ கூற சிரிப்புடன் அவனை முறைத்தபடி தன்னை கடந்து சென்றவளை கண்ட நொடி மனதிற்குள் என்ன உணர்வென்று தெரியவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகான சந்திப்பு. நிறைய தோற்றத்தில் மாறியிருந்தாள்.

அவளை அடையாளம் காண்பிக்கும் கண்ணாடி காணாது போயிருந்தது. ஆள் கூட சிறிது பூசினாற் போலிருந்தாள். இதற்கு மேலாக முகத்தில் நிறைந்த புன்னகை பூத்திருந்தது.

இத்தனை நாட்களாக காதில் மட்டும் கேட்ட ஒரு விடயம் அவளது திருமணம் கணவன் குழந்தை என எல்லாமே அவன் கண்முன்னே நிஜமாய் நிற்க என்னவோ உள்ளுக்குள் நழுவி சென்றது.

அந்த கணம் புரிந்தது தான் இன்னும் ஓரடி கூட அவள்விட்டு சென்ற இடத்தில் இருந்து நகரவில்லை என்று.

தன்னை அவள் கவனியாவது கடந்து சென்றது உரைக்க வாழ்வில் தவிக்கவிட்டே கடந்து சென்றுவிட்டாள் இது என்ன பெரிது என்று தோன்றிய நொடி இதழ்கள் வளைந்தது.

வேண்டாம் அவள் தன்னை பார்க்க வேண்டாம் பார்த்தாள் வருந்துவாள் என்றே வேகமாக கிளம்பிவிட எத்தனித்த நொடி தான் அதி அவனருகில் ஓடி வந்தது.

அவள் தன்னை கண்டதும். அவன் நினைத்தது போலவே அவள் அதிர்ந்து பேச்சின்றி தான் நின்றிருந்தாள்.

அவள் தடுமாறி விழச் சமயம் தன்னையும் மீறி கரங்கள் அனிச்சையாக நீண்டிட அவளை தாங்கி பிடித்தவனது வருகையில் தான் புத்திக்கு நிதர்சனம் உரைத்தது.

தன்னை நிலைப்படுத்திக் கொள்ள தான் கால்களை ஊன்றி நின்றான்.

வசீகரன் நிச்சயமாக தன்னை பார்த்ததும் பேசுவான் என்று தெரிந்தது.

அவனுக்கு தான் ஏற்கனவே தன்னுடன் பயின்ற வசீகரன் தான் செல்வ மீனாட்சியின் கணவன் என்று தெரியுமே.

தன்னை கண்டதும் அத்தனை தூரம் பதறி பயந்தவளை கண்டதும் தன் மீதே வெறுப்பு தோன்றியது.

தான் அவளை அச்சம் கொள்ள செய்கிறோமா? தன்னால் அவளுக்கு பிரச்சனை வந்துவிடும் என்று அஞ்சுகிறாளா? அவளது சந்தோஷத்தை மட்டும் எதிர்ப்பார்க்கும் என்னால் அவளுக்கு பிரச்சனையா? என்று தன் மீது உள்ள கோபம் அவளுக்கு தன் மீது இத்தனை அவநம்பிக்கையா என்ற ஆற்றாமையில் தான் அவளிடம் அவ்வாறு பேசியிருந்தான்.

அதன் பிறகு தான் அவள்புறம் உள்ள நியாயம் புரிந்தது.

அவளிடத்தில் யார் இருந்தாலும் இப்படி தான் தன்னுடைய வாழ்வுக்கு எதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அச்சம் கொள்ளவார்கள் என்று புரிந்தாலும் தன்னிடமுமா? என்ற எண்ணம் வர.

ஏன் நீயென்ன பெரிய இவன். நீ யார் அவளுக்கு யாரோ மூன்றாவது மனிதன்.

ஏன் இந்நொடி நீ அவளுக்கு யாருமே இல்லை என்று பொட்டில் அடித்தாற் போல புரிய,

"ஆம் நான் அவளுக்கு யாருமில்லை
யாரோ ஒருவன் தான்" கூறி தனக்கு தானே அதை பதிய வைத்து கொண்டான்.

அதன் பிறகு தொழில் விடயமாக வசீயை சந்திக்கும் சமயம் செல்வாவை காண நேர்ந்தாலும் அப்படி ஒருவள் அங்கில்லாதது போலவே அவனது செய்கை இருக்கும்.

தன்னால் என்றைக்கும் அவளுக்கு எந்தவிதமான பிரச்சனையும் வரக் கூடாது என்ற எண்ணம் தான்.

ஆனால் இருந்தும் அவள் தன்னை கண்டதும் முகம் மாறுவதும் சிறிதான பதற்றம் கொள்வதும் அவனை ஏனோ வருந்த செய்தது.

தன்னை தன்னை கண்டு அவள் அஞ்சுகிறாளா? என்ற வினாவே பிராதானமாக இருக்க அவளை இனி சந்தித்து சங்கடப்பட வைக்க கூடாது என்று எண்ணியிருந்த போது தான் அவள் வல்லபனிடம் திருமணத்தை பற்றி பேசியது.

அதிலிருந்து தான் அவளுக்கு தன்னை கண்டு குற்றவுணர்வு அதிகமாகிறது என்று புரிந்தது.

தன்னால் ஏற்படும் குற்றவுணர்வால் எந்த விதத்திலும் அவளது நல்வாழ்வு பாதிக்கப்பட்ட கூடாது என்றே திருமணம் செய்ய சம்மதித்தது.

ஆனால் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்று அறிந்த நொடி இதயம் ஒரு இயகத்தை நிறுத்திவிட உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடியவன் கண்டது இறுதி நொடியில் போராடி கொண்டிருந்த வசீகரனை தான்.

செல்வா கூட அவசர சிகிச்சை பிரிவில் தான் இருந்தாள். அதிக்கு கூட லேசான காயங்கள் தான்.

ஆனால் வசீயை மட்டும் காப்பாற்ற இயலாது என்று கூறிவிட்டனர்.

வல்வபன் தான் முதன் முதலில் அங்கு சென்றது.

இறுதி நொடியில் இருந்த வசீ வல்லபனது கையை பிடித்து கொண்டு,

"வல்லபா உன்னை பார்த்த பிறகு தான் இந்த உலகத்தை விட்டு போகணும்னு உயிரை கையில பிடிச்சுட்டு இருந்தேன்" என்று மூச்சு திணறலுடன் கூற,

"ச்சு ஏன்டா இப்படிலாம் பேசுற. உனக்கு ஒன்னும் ஆகாது. நீ சீக்கிரமா க்யூர் ஆகிடுவ" என்க,

"எனக்கு தெரியும் டா. நான் பிழைக்க மாட்டேன்னு. என் விதி அவ்ளோதான்னு" என்று வெற்று புன்னகையை சிந்தியவன்,

"நான் உன்கிட்ட கடைசி ஆசையா ஒன்னு கேக்குறேன். அதை நிறைவேத்துறியா?" என்று வினவ,

வல்லபனது தலை தானாக சம்மதமாய் ஆடியது.

"எனக்கு பின்னாடி மீனுவும் அதியும் உன்னோட உடமை" என்று கூற,

வல்லபன் அதிர்ந்து பார்க்க,

"எனக்கு எல்லாமே தெரியும். நீ தான் அவளோட காலேஜ் சீனியர்னு. உன் கல்யாணம் விஷயம் கேள்விப்பட்டு அவ அவ்ளோ சந்தோஷப்பட்டப்பவே என்னோட ஊகம் உறுதியாகிடுச்சு. உன்னை தவிர யாராலயும் அவங்களை நல்லா பாத்துக்க முடியாது. எனக்கு தெரியும் அவ இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்க ஒத்துக்க மாட்டா. ஆனால் வாழ்க்கை முழுக்க அவ தனியா இருந்து கஷ்டப்பட்றதை நான் விரும்பலை" என்றவன்,

"ப்ளீஸ் நீ தான் அவளையும் அதியையும் பார்த்துக்கணும். இனி அவங்க உன்னோட உடமை. எனக்காக இதை செய்வியா?" என்று கண்களில் வலியும் எதிர்பார்ப்பும் வைத்து வினவுபவனை கண்டு அவனது இதழ்கள்,

"செய்றேன். அவங்க இனி என்னோட பொறுப்பு" என்றிட, இதழ்களில் உறைந்த புன்னகையுடன் உரியவரிடத்தில் தன்னவர்களை ஒப்படைத்த நிம்மதியில் அவன் உயிர் பிரிந்திட வல்லபன் தான் மிகவும் உடைந்துவிட்டான்.

இறுகிய மனதுடன் செல்வாவின் வீட்டிற்கு தகவல் சொல்லி வசீகரனது இறுதி காரியங்களை முன்னின்று செய்தான்.

மருத்துவமனையிலும் அனைத்தையும் பார்த்து கொண்டான்.

அதி சிறிதான காயங்களுடன் திரும்பிட செல்வாதான் கோமா நிலைக்கு சென்றிருந்தாள்.

அப்போது தான் தியாகு எத்தனை நாளாக தங்களுக்கு உதவி கொண்டிருக்கிறார் என்று எண்ணி அவனுக்கு நன்றி கூறி கிளம்ப சொல்ல,

வல்லபனுக்கு வந்ததே ஒரு கோபம். இவர்கள் யார் என்னவளிடமிருந்து என்னை போகச் சொல்ல, ஏற்கனவே என்னையும் அவளையும் பிரிந்தவர்கள் இவர்கள் தானே என்று அத்தனை ஆத்திரத்துடன்,

"நான் ஏன்‌ போகணும். எதுக்கு போகணும்" என்று ரவுத்திரமாக கத்தியவனது ருத்திர தாண்டவத்தில் அனைவரும் மிரண்டு தான் போய்விட்டனர்.

"ஏற்கனவே நீங்க தான் அவக்கிட்ட இருந்து என்னை பிரிச்சிங்க. இந்த டைம் யாராலயும் எங்களை பிரிக்க முடியாது" என்று தங்கள் காதலித்த விடயத்தினையும் எடுத்த புகைப்படம் காணொளி எல்லாவற்றையும் காண்பிக்க,

வசீகரனது நண்பன் மட்டும் என்று நினைத்திருந்தவர்கள் இந்த விடயம் கேள்விப்பட்டு அதிர்ந்து தான் போயினர்.

செல்வா ஒருவரை காதலித்தாள் என்று நம்ப இயலவில்லை. இருந்தும் தங்களுக்காக தான் திருமணம் செய்து கொண்டாளா? அதுதான் அவள் எதையோ பறிகொடுத்தது போல இருந்தாளா? என்று புரிந்த அதிர்ந்தனர்.

"நான் என் பொண்ணையும் செல்வாவையும் விட்டு எங்கேயும் போக மாட்டேன்" என்று உறுதியாக கூறி நின்றிட யாராலும் எதுவும் கூற இயலவில்லை.

பின்னர் அபிஷேக் தான் வந்து செல்வாவை நிச்சயமாக வல்லபன் நன்றாக பார்த்துக் கொள்வான்.

செல்வாவும் இதன் பிறகு இறுதி வரை தனியாக இருக்க இயலாது என்று எடுத்து கூறினார்.

வல்லபன் அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

செல்வாவின் உடனேயே எப்போதும் இருந்தான். அதியிடம், "வல்லாப்பா இல்லை அப்பா சொல்லு. அப்பா சொல்லு" என்று அவளுக்கு தான் தந்தை என்பதை பழக்கினான்.

வல்லபனது அதிரடியில் மிரண்டாலும் மற்றவர்களுக்கு உண்மை உரைக்க செல்வாவிற்கும் ஒரு வாழ்வு வேண்டும் என்று நினைத்து அவனை பழகி கொண்டனர்.

இருபத்தி நான்கு மணி நேரமும் அவன் செல்வா முன்பே அமர்ந்திருந்ததை கண்டு அவர்களுக்கே இவனை விட யாராலும் செல்வாவை நன்றாக பார்த்துக் கொள்ள இயலாது என்று எண்ணம் வந்திருந்தது.

அதன் பிறகு செல்வா கண்விழித்த பின்னர் தாங்களே அவளிடம் பேசி புரிய வைக்கலாம் என்று நினைத்திருக்க அதற்கு அவசியம் இல்லை என்பது போல அவளுக்கு எல்லாம் மறந்திருந்தது.

எல்லாம் கடவுள் செயல் என்று எண்ணி வல்லபனை அவளது கணவன் என்று கூறிவிட்டனர்.

நினைவு வரும் போது அவளுக்கு எடுத்து சொல்லலாம் என்று நினைத்திருக்க இத்தனை விரைவில் இவளுக்கு நினைவு வந்திடும் என்று எதிர்பாராதவர்கள் அதிர்ந்து தான் நின்றனர்…


 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Selva amma oda suyanalam ava vazhkai yae ipadi muzhusa sandhosam ah vazha vida ma panniduthu vasi ah kalyanam pannalum muzhu manasoda vazha mudiyala kutra unarvu la yae kalam thalluchi ippo ava nilamai solla venam vasi ku therinchiduthu ah vallaban than selva oda senior lover nu avan oda kadaisi aasai yae ithu than ah aana oru vagai la selva mela yae kovam than ava suyanalam ah than irundhu iruku ah oh ho annaikku yen andha ponnu selva va thituna ippo than puriyuthu ava kooda than engagement aacha ah athuvum selva kaga than panni irukan true ah vae vasi vallaban rendu per oda love mae endha expectation um illatha pure love
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Vallapan selva feel panna kudathu nu marrige pannikuran oru desicion aduthaan entha vithi ellathaiyum thala Keela mathiruju la vasi ku enna iruthalum epadi agi Iruka kudathu 🥺🥺nallavan kadaisi ya selva vallapan kuda Seythu vajudan selva kum athuyum nabagam illa eppo ellam nabagam vanthu selva enga vanthuda sikirama 2 payrum seruga 😌😌
 
Top