புன்னகை 22:
உடமைப்பட்டவர்களின்
உடமைகள் கூட
உணர்வுகளை உயிர்த்தெழ
செய்கிறது இந்த
உன்னத நேசத்தில்…
செல்வ மீனாட்சியிலிருந்து திருமதி செல்வ மீனாட்சி வசீகரன் ஆகியதிலிருந்து வாழ்வு தலை கீழாக மாற அவள் உயிரற்ற ஜடமாக தான் நடமாடினாள்.
திருமணம் முடிந்து என்னென்னவோ நடந்தது. அடுத்த வாரமே அவளை வசீகரனுடன் சென்னையில் குடும்பமாக வந்து குடியமர்த்திவிட்டு சென்றனர்.
வசீகரனும் அவளிடம் அவ்வளவாக பேசுவதில்லை. அவனுக்கும் இந்த திடீரென பெண் மாற்றப்பட்ட திருமணம் பெண் ஓடிப்போனதில் ஏற்ப்பட்ட மன அழுத்தம் மற்றவர்களது எள்ளல் பேச்சு இதிலிருந்து எல்லாம் மீள சில காலம் தேவைப்பட்டது.
அதற்காக செல்வாவிடம் கோபப்படவெல்லாம் இல்லை. என்ன ஏதென்ற பேச்சோடு நிறுத்தி கொண்டான்.
தனிமையில் வல்லபனது நினைவுகளில் இவள் தான் தவித்து போனாள்.
எங்கு சென்றாலும் அவன் முகம் எதை செய்தாலும் அவனுடைய நினைவு என யாவிலுமே மனது அவனிடமே சென்று நின்றது.
வாழ்வே ஏகமாக வெறுத்து விட்டது.
தன்னை பார்த்ததும் இதழ்களில் குடிகொள்ளும் அவனது இதழ்விரியா புன்னகை செய்வதை எல்லாம் செய்துவிட்டு ஏதும் செய்யாத பாவனையில் தோள்களை அசட்டையாக குலுக்கும் அவனது தோரணை வில்லாக ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கும் பாங்கு என அவனது மொத்தமும் நினைவில் வந்து அவளை வதைத்தது.
முடியவில்லை சுத்தமாக முடியவில்லை என்ன செய்து இதிலிருந்து தப்பிப்பது.
அவனது நினைவுகளை தன்னிடமிருந்து பிரிப்பது என்று தெரியவில்லை.
உயிரில் கலந்து உதிரத்தில் உறைந்துவிட்டவனை மறப்பதென்பது மரணிப்பதற்கு சமம் என்று அவளுக்கு புரிந்தது.
'எனக்கு திருமணம் ஆகிவிட்டது' என்று அவனிடம் கூறுவதற்குள் தான் பல கோடி முறை இறந்தது அவளுக்கு தானே தெரியும்.
வல்லபனை பற்றி அவளுக்கு தெரியும் அதன் பிறகு அவன் அவளை எவ்விதத்திலும் தொல்லை செய்யவில்லை.
இனியும் எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள மாட்டான் என்றும் தெரியும்.
ஆனால் இவள் தான் அவனை மறக்க இயலாது துடித்து போனாள்.
தன்னுடைய ஆன்மா ஆவி என யாவிலும் நிறைந்திருப்பவனை எப்படி மறப்பதென்று புரியவில்லை.
இத்தனை வருடமாக அவனுடன் மானசீகமாக வாழ்ந்து வந்த வாழ்வென்ன. எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகள் எல்லாம் ஒரு விநாடியில் தகர்ந்துவிட்டது.
விழிகள் வற்றாத ஜீவநதியாக காதுகள் இரண்டையும் கைகளால் மூடிக்கொண்டவள் கண்களை இறுக்கிக் கொண்டாள் எதிலிருந்தோ தப்பிப்பவள் போல.
இருந்தும் ஏதும் இயலவில்லை மூடிய இமைக்குள் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியபடி இதழில் தவழும் புன்னகையுடன் வந்து நின்றான் ஆடவன்.
"ஓய் ஜான்சிராணி நாம ஹனிமூனுக்கு எங்க போகலாம். ஹ்ம்ம் மொரிசியஸ் போகலாமா?" என்றவனின் குரல்,
"ஹே ஜான்சி ராணி ஒரே ஒரு கிஸ் நல்ல ஸ்ட்ராங்கா தர்றீயா" என்று கிசுகிசுப்பான வல்லபனது குரல் வரிசையாக செவிப்பறையை நிறைக்க,
"நோ…" என்று அலறியவள் முகத்தை காலில் புதைத்து கொண்டாள்.
முடியாது இதற்கு மேலும் ஏதும் முடியாது இந்த நரக வேதனையில் சிதைந்து சின்னாப்பின்னம் ஆவதற்கு பதில் உயிரை மாய்த்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தவள் உடனடியாக அதனை செயல்படுத்த கத்தியை எடுத்து கையை வெட்டிக் கொண்டாள்.
செங்குருதி துளி துளியாக வெளியேற அதனையே இமைக்காது வெறித்தவள் சிறிது சிறிதாக மயக்க நிலைக்கு சென்றிருந்தாள்.
அந்நிலையிலும் மனதில் அவனது பிம்பம் தான் பெரியதாக விரிந்தது.
உனக்கு செய்தவைக்கு தான் எனக்கு இந்த நிலை நீயாவது ஆனந்தமாக இரு என்று தனக்குள்ளே பலவாறு உழன்றவள் முழுதான மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
ஆனாலும் அதற்கும் விதி அவளை விடவில்லை. மறுநாள் அவள் கண்விழிக்கும் சமயம் மருத்துவமனையில் இருந்தாள்.
எதிரில் வசீகரன் உறக்கத்தினை தொலைத்த விழிகளுடன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவளிடம் எதுவும் கேட்கவில்லை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அவன் தான் பார்த்து கொண்டான்.
வீட்டினருக்கும் தகவல் சொல்லவில்லை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகும் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.
இவளுக்கு தான் குற்றவுணர்வு ஓங்கியது.
உடல்நலம் தேறிய பிறகு உனக்கு இந்த வாழ்வில் விருப்பம் இல்லாவிடில் விவாகரத்து தருகிறேன் என்று கூறிவிட்டான்.
விவாகரத்து வாங்குவதற்கு இன்னும் ஒரு வருடம் நிச்சயமாக தேவைப்படும் அதுவரை ஒரு அறையில் இருக்கும் நண்பர்களாக இருப்போம் என்றான்.
வாழ்வில் எதற்கும் தற்கொலை தீர்வல்ல. உனக்கான வாழ்வை நீதான் வாழ வேண்டும் என்று அவளுக்கு எடுத்து கூறினான்.
செல்வாவும் அவனது முடிவிற்கு சம்மதித்தாள். அதன் பிறகு இருவரும் நண்பர்களாக தான் இருந்தனர்.
வசீகரனது அணுகுமுறையில் செல்வாவும் கொஞ்சம் தளர்ந்து இறுக்கத்தை குறைத்திருந்தாள்.
அப்போதைக்கு அவளது மனதில் எந்த எண்ணமும் இல்லை. ஏதோ வாழ வேண்டும் என்று எண்ணத்தில் தான் இருந்தாள்.
என்னவோ வல்லபன் குடும்பம் ஏன் வசீகரனுடனான திருமணமும் கூட பின் சென்றிருந்தது.
தனக்காக விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்தாள். வசீகரன் அவளை மேற்படிப்பிற்கு சேர்த்துவிட்டான்.
நாட்கள் செல்ல செல்ல இருவரும் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நெருங்கியிருந்தனர்.
அன்றுவரை அவன் கேட்காத ஒன்றை தன்னுடைய காதலை பற்றி அவள் தான் அவனிடம் கூறினாள்.
வசீகரன் இந்த விடயத்தினை கேட்டு சிறிதளவு உடைந்து தான் போனான்.
காரணம் அவனுக்கு செல்வாவை ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பிடித்திருந்தது.
இருந்தும் மனதுக்கு பிடித்தவர்களின் மகிழ்ச்சி தானே தன்னுடைய ஆனந்தம் என்று எண்ணி அவளை அவளது காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறினான்.
பதிலுக்கு செல்வாவிடம் ஒரு விரக்தி புன்னகை தான்.
அவள் எல்லாவற்றையும் கடந்து வந்திருந்தாளே.
ஆனால் காலங்கள் செல்ல செல்ல தனக்காக பார்த்து பார்த்து செய்யும் வசீகரனின் மீது ஒரு வகையான பிடித்தம் வந்தது.
முடிந்துவிட்ட அவளது வாழ்வினை மீண்டும் தொடங்கி வைத்தவன் மீதும் ஒரு ஈர்ப்பு.
வசீகரன் மிகவும் நல்லவன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். முக்கியமாக பண்பாளன்.
எதையுமே அன்பால் சாதிக்க முடியும் என்று முழுமையாக நம்புபவன்.
ஒருக்கட்டத்தில் தன்னுடைய அன்பால் செல்வாவையும் வென்றிருந்தான்.
மீண்டும் துளிர்த்த புதுவித நேசத்தில் அவர்கள் வாழ்வு மிகவும் அழகாக சென்றது.
அந்த அன்பான வாழ்வின் அடையாளமாக தான் அதி பிறந்தாள்.
தங்களது அலாதி நேசத்தின் பரிசாக கிடைத்த மகளை கொண்டாடி தள்ளிவிட்டான் வசீகரன்.
அதன்பிறகு சில வருடங்கள் நன்றாக தான் வாழ்வு தித்திப்பாய் தகர்ந்தது.
எப்போதாவது வல்லபனின் நினைவு எழுந்தாலும் அவனுக்கும் ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்கும் மனைவி குழந்தை என ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பான் என்று தன்னைத் தானே தேற்றி கொண்டாள்.
எல்லாம் அவனை நேரில் காணும் வரை தான் அந்நொடியை நினைத்த போது இதயம் நின்று துடித்தது.
வசீகரனது வேலை விடயமாக அவனுக்கு ஹைத்ரபாத் செல்லும் வேலை இருக்க மனைவியையும் மகளையும் அழைத்து கொண்டு தான் சென்றிருந்தான்.
இரண்டு நாட்கள் பணி முடிந்ததும் மனைவியுடன் சில இடங்களை பார்த்துவிட்டு உணவகத்தில் உண்ண இருவரும் நுழைந்திருந்தனர்.
அதி புது இடத்தை பார்த்த மகிழ்வில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்து ஓடியாடி கொண்டிருக்க,
"அதி ஓடாத" என்ற தாயின் குரலை கேட்காது தத்தி தத்தி ஓட,
"அதி சொல்றேன்ல கேக்க மாட்டியா?" என்று அதட்டியபடி மகளை தூக்கி கொண்டு நிமிர்ந்தவள் எதிரில் நின்றிருந்தவனை கண்டு சர்வமும் சமைந்து நின்றுவிட்டாள்.
உடலோடு சேர்த்து உள்ளமும் நடுங்கியது. கால்கள் நிற்க இயலாது தடுமாற தன்னையே அழுத்தமாக பார்ப்பவனை கண்டு விழிகள் சடுதியில் குளமாகிவிட்டது.
எதிரில் இருந்தவனது தோற்றம் மங்கலாக தெரிய விழி சிமிட்டி நீரை உள்ளிழுக்க முயன்றவள் அவனது தோற்றத்தை கவனித்தாள்.
ஐந்து வருடத்தில் எவ்வளவு மாற்றம். முகத்தில் எப்போதும் இருக்கும் அந்த மெலிதான புன்னகை இருந்த இடம் தெரியாமல் போயிருக்க அத்தனை இறுக்கம். முகம் முழுவதும் காடு போல வளர்ந்திருந்த தாடி பாதி முகத்தை மறைந்திருக்க உடையில் நேர்த்தி என முன்பிருந்த எதுவும் அவனிடம் இல்லை.
எல்லாம் உன்னால் தான் என்று உள்ளே ஒரு குரல் கூக்குரல் இட சட்டென்று தடுமாறி விழ சென்றிட, வல்லபன் கைகள் நீளும் முன்,
"பார்த்துடா…" என்றபடி அவளை தாங்கிப் பிடித்திருந்தான் வசீகரன்.
ஒரு நொடி தன்னையும் மீறி நீண்டுவிட்ட கரங்களை தனது கால்சாராயினுள் விட்டவன் மீண்டும் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்றான்.
அவனுக்கு உள்ளுக்குள் உரைத்தது அவள் உன்னுடைய ஜான்சி ராணி இல்லை வசீகரனின் மனைவி என்று ஏதோ ஒன்று கத்தி குத்தி கிழித்தது.
முகத்தில் எந்த உணர்வையும் காண்பிக்கவில்லை.
"ஏன்டா பாத்து வரமாட்டியா?" என்றவன் அவளது வியர்த்த முகத்தை கண்டு,
"என்ன இப்படி வேர்த்திருக்கு ஆர் யூ ஓகே" என்று தன் கை வளைவுக்குள் வைத்தபடியே வினவ,
"ஒ… ஒன்னுமில்லை த்தான். கால் ஸ்லிப் ஆகிடுச்சு" என்று தட்டு தடுமாறி கூற, தன்னுடைய கைக்குட்டையினால் அவளது முகத்தை துடைத்தான்.
இத்தனையும் பார்வையாளராக நிர்மலான முகத்துடன் பார்த்திருந்தான் வல்லபன் சக்கரவர்த்தி.
எத்தனை வருடங்களுக்கு பிறகான சந்திப்பு இருவருக்கும்.
கணவனிடம் ஏதுமில்லை என்று கூறிவிட்டாலும் இத்தனை நாள்களுக்கு பின்னான அவனது சந்திப்பில் அவள் சிதறி நின்றது என்னவோ உண்மை தான்.
குற்றவுணர்வு அவனை பெரியதாக ஏமாற்றிவிட்ட குற்றவுணர்வு பேரலையாக எழுந்து நின்றது.
இவ்வளவு நேரம் எதிரில் இருப்பவரை கவனிக்காது இருந்த வசீ இப்போது தான் நிமிர்ந்து பார்த்தான்.
பார்த்த கணம், "நீங்க…" என்று நெற்றியில் கை வைத்தவன்,
"ஹே வல்லபா" என்று சந்தோஷமாக அவனது கையை பிடிக்க,
"வல்லபன் தான்" என்று மெலிதான மிகவும் சிறியதாக இதழ்வளைத்து கையை நீட்டினான்.
இருவருக்கும் ஏற்கனவே பரிச்சயமா என்று அதிர்ந்தவளுக்கு அவனது விழிகளை எட்டாத புன்னகை பார்வையில் இருந்து தப்பவில்லை.
"என்ன எங்க ஊர் சைட்?" என்று வல்லபன் வினவ,
"ஒரு ஒர்க்கா வந்தேன். எவ்ளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து. வா உட்கார்ந்து பேசுவோம்" என்றவன் மனைவியிடம்,
"மீனு இது வல்லபன் என் ஸ்கூல் ப்ரெண்ட்" என்றவன் வல்லபனிடம்,
"இது என் வைஃப் செல்வ மீனாட்சி அண்ட் என் பொண்ணு அதியா" என்று அறிமுகப்படுத்தினான்.
வல்வபன் எந்த வித பாவனையுமின்றி, "ஹாய்" என்று புன்னகைக்க,
இவளுக்கு தான் ஆயிரம் தடுமாற்றம் உருவாக நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
மிகவும் சிரமப்பட்டு, "ஹாய்…" மெலிதான இதழ் பிரித்தாள்.
வசீகரனும் செல்வாவும் ஒரு புறத்தில் அமர எதிரில் அமர்ந்தான் வல்லபன்.
வசீ மகளை மேஜை மீது அமர வைத்தான்.
"அப்புறம் என்னை சாப்பிட்ற?" என்று நண்பனை வினவ,
"அதை நான் கேக்கணும் இது எங்க ஊரு. உங்களுக்கு என்ன வேணும் ஆர்டர் பண்ணுங்க"என்று மெனு கார்டை நீட்டியவனது பார்வை குட்டியாக துறுதுறுவென்ற கண்களுடன் குண்டு கன்னங்களுடனும் தலையில் இருந்த குடுமி ஆட தன் கையில் இருந்த பந்தை உருட்டி கொண்டிருந்த அதி மீது பதிந்தது.
செல்வாவின் சிறு பதிப்பாக இருந்தவளை காணும் நொடி இதழ்கள் மெலிதான மென்னகை ஜனித்தது.
வசீ, "உனக்கு என்ன வேணும்டா?" என்று மனைவியிடம் வினவ,
அவள் இருந்த நிலையில் சாப்பாடா அவளுக்கு முக்கியம்.
"உங்களுக்கு என்னவோ அதுவே எனக்கும் சொல்லிடுங்கத்தான்" என்று முடித்திட தனக்கு மனைவிக்கும் உணவையும் மகளுக்கு பாலையையும் கூறியவன்,
"வல்லபா உனக்கு" என்க,
"ஒரு டீ போதும்" என்று முடித்திட்டான்.
அவன் பார்வை முழுவதும் கொலு கொலு குட்டி பொம்மையிடம்.
இத்தனை நேரம் அவனது பார்வை விழுந்ததாலோ என்னவோ அதியும் நிமிர்ந்து அவனை துறு துறு விழியால் நோக்க,
"வா…" எனும் விதமாக வல்லபன் அவளிடம் கையை நீட்டினான்.