• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 21

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 21:

எத்தனை எத்தனை வார்த்தைகளை கோர்த்து தனக்குள்ளே மறுகி வந்திருந்தவன் மனையாளின் தோற்றத்தில் மொத்தமாக பேச்சிழந்து போனான்.

என்னவோ மனது அந்நொடி வற்றிய பாலைவனமாக வார்த்தைகளற்று போயிற்று.

நொடிகள் நிமிடங்களாக ஊர்ந்து செல்ல இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை.

அவளுக்கு அவனிடம் பேச ஏதுமில்லை போலும். ஆனால் உணர்வுகள் மட்டும் பேசியது.

கண்ணீராய் உணர்வுகள் வடிந்து அவளது நிலையை உணர்த்தியது.

உடல்களுக்கு இடையில் இரு அடி தான் இடைவெளி. ஆனால் மனமோ வெகு தொலைவில் ஒன்றின் நிழலை கூட மற்றொன்று தொட இயலாத நிலையில் இருந்தது.

வல்லபனின் விழிகள் அவள் மீதே பதிந்து போயிருக்க அவனது மனையாளது விழிகளோ இலக்கின்றி சுவற்றை வெறித்தது.

சடுதியில் அவளை நெருங்கியவன் இறுக்கமாக அணைத்திருக்க செல்வாவோ உடல் இறுகி நின்றிருந்தாள்.

"சீக்கிரமா என்னை புடிச்சுக்கிட்டு என்கிட்ட வந்திடு ஜான்சி ராணி" என்றவன் அணைத்த வேகத்திலே விடுவித்து வெளியேறியிருந்தான்.

இங்கு வெளியில் அதீத பதட்டத்துடனும் அச்சத்துடனும் அமர்ந்திருந்தவர்கள் அவனை கண்டதும் எழுந்து நின்றுவிட,

"அவ அவக்கிட்ட யாரும் எதுவும் கேட்டு தொந்திரவு பண்ணாதிங்க. எல்லாம் நினைவு வந்த அதிர்ச்சியில இருக்கா. நடந்ததை ஏத்துக்க அவளுக்கு கொஞ்சம் டைம் வேணும். அவ என்னை புரிஞ்சிக்கிட்டு கண்டிப்பா சீக்கிரம் என்கிட்ட வந்திடுவா" என்றவன்,

"தென் யாரும் எனக்காக அவக்கிட்ட எதுவும் பேச வேண்டாம்" என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.

தன்னுடைய ஆன்மா, உயிர், உணர்வுகள் என அனைத்தையும் அவளிடம் விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

மீண்டும் அவள் தன்னிடம் வருவாள். ஒரு தூய நேசம் எவ்வித கோரமான சூழ்நிலையாலும் சிதைந்து போகாது.

தன்னுடைய நேசம் நிச்சயமாக அவளை மீட்டுத் தரும் தன்னிடம் சேர்ப்பிக்கும் என்று நம்பி சென்றான்.

ஆனால் வல்லபனது செல்வாவோ அவன் அணைத்து விடுவித்த நொடி மொத்தமாக உடைந்து அமர்ந்துவிட்டாள்.

அழுகையை அடக்க முடியவில்லை. முகத்தை மூடிக் கொண்டு தேம்பினாள்.

தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மோசமான சூழ்நிலை. வாழ்வு இப்படி தன்னை நிந்திக்கிறதே.

இதற்கு மேலும் என்னால் எதையும் தாங்க இயலாது என்றளவிற்கு அழுது தீர்த்தாள்.

பெரியதான கேவல் அவளது நிலையை உணர்வை உணர்த்தியது.

மனது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் கிடந்து அல்லாட மனத்திரையில் அச்சுப்பிசகாது வந்து நின்றது அவனது பிம்பம் வசீகரிக்கும் புன்னகையுடன்.

அவன் வசீகரன் செல்வ மீனாட்சியின் கணவன். எல்லாம் முடிந்துவிட்டது இனி எதுவும் இல்லை மனது வெறுத்து அவள் வாழ்வை முடித்துக் கொள்ள முனைந்த போது அந்த முற்றுப்புள்ளியின் அருகே காற்புள்ளி வைத்து மீண்டும் வாழ்வை தொடங்கி வைத்தவன்.

வாழ்வின் மற்றொரு பரிமாணத்தை அவளுக்கு புரிய வைத்தவன்.

அனைவருக்கும் நல்லவன் நல்ல புதல்வன் சிறந்த கணவன் அதிர்ந்து கூட பேசாத அன்பாளன்.

இப்படி கைப்பிடித்து அழைத்து வந்து பாதியில் விட்டு செல்வான் என்று கனவிலும் எதிர்பாராத ஒன்று.

அதுவும் விபத்து நிகழும் போது தன்னுடைய நினைவை இழக்கும் இறுதி நொடி கலங்கிய விழிகளுடன் தவிப்புடன் தன்னை நோக்கிய விழிகளும் அவனது வதனமும் நினைவில் வர மனது மீளமுடியாத துயரில் சிக்கி உடைந்து சிதறியது.

நினைவு தன்னுடைய வாழ்வில் எதிர்பாராத புயலொன்று தாக்கி தன்னை சின்னாபின்னமாகிய நாளிற்கு சென்றது.

பொல்லாச்சி அருகே உள்ள பிரபல மண்டபம் விழாக்கோலம் பூண்டிருக்க அதன் முகப்பில் வசீகரன் வெட்ஸ் கனிமொழி என்று சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் ஜொலித்தது.

மண்டபமே கொள்ளவில்லை அத்தனை கூட்டம் நிறைந்து வழிய விஷேச வீட்டினருக்கு நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர்.

"அண்ணி ஐயர் மஞ்சள் கேக்குறாரு. எங்க எடுத்து வச்சிங்க?" என்று அங்குமிங்கும் நிற்காமல் ஓடியபடி இருந்த வேதவள்ளி வினவ,

"அங்க தான் மேல ரூம்ல ஒரு கட்டப்பைல இருந்துச்சு வேதா பிள்ளைங்கள யாராவது எடுத்துட்டு வர சொல்லு" என்று வேணி பதில் மொழிய,

"பிள்ளைங்க எதுக்குண்ணி நானே போய் எடுத்திட்டு வர்றேன்" என்றவரது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

அளவில்லா சொல்லவென்னா மகிழ்ச்சி என்பார்களே அத்தகைய மகிழ்ச்சியில் வேதவள்ளியின் முகம் பிரகாசித்தது.

இது இப்போது அல்ல கடந்த இரண்டு வாரங்களாகவே அப்படித்தான் இருக்கிறது.

காரணம் வேதவள்ளியும் ராமநாதனும் காதலித்து மணம் புரிந்தவர்கள் தான். ராமநாதனுக்கு பெற்றோர் இல்லை என்பதால் அவருடைய பக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க யாருமில்லை.

ஆனால் வேதவள்ளிக்கு பெற்றோர் அண்ணன் தங்கை என்று பெரிய குடும்பமே இருந்தது.

வேதவள்ளியின் காதலை முழுதாக எதிர்த்து நின்றது. வேதவள்ளியின் பெற்றோர் ஒருபோதும் நாங்கள் இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்று கூறிவிட அவருடைய அண்ணனும் கூட மறுப்பு தெரிவித்தார்.

வேறுவழியின்றி குடும்பத்தினரை எதிர்த்து தான் ராமநாதனை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல அவர்கள் கோபம் குறைந்துவிடும் என்று வேதவள்ளி காத்திருக்க வருடங்கள் ஓடியும் அவர்கள் வேதவள்ளியை ஏற்றுக் கொள்ளவில்லை.

வேதவள்ளி சென்று பார்த்த போதும் அவரை அவமானப்படுத்தி அனுப்பிவிட ராமநாதன் அதன்பின் அவரை அங்கே செல்லவிடாது தடுத்துவிட்டார்.

வேதவள்ளியின் பெற்றோர் இறப்பிற்கு கூட அழுதுகொண்டே பெற்றோரின் முகத்தை இறுதியாக பார்க்க வந்தவரை பார்க்கவிடாது செய்து அனுப்பி இருந்தனர்.

அதில் தான் வேதவள்ளி மிகவும் மனமுடைந்து விட்டிருந்தார். அதன் பிறகு பிறந்த வீட்டினரோடு முற்றிலுமாக தொடர்பு விடுபட்டிருந்தது.

அவ்வபோது வேதவள்ளி பிறந்த வீட்டினரை நினைத்து வருந்துவதுண்டு.

இந்நிலையில் தான் கோவில் திருவிழாவில் எதேச்சையாக அண்ணன் குடும்பத்தினரை பார்க்க நேரிட மீண்டும் வேதவள்ளி சென்று அவர்களிடமே நிற்க இம்முறை என்னவோ வேதவள்ளியின் அண்ணன் குடும்பத்தினர் அவரை ஏற்றுக் கொண்டனர்.

அதுவுமின்றி வேதவள்ளியின் அண்ணன் கந்தவேலின் மகன் வசீகரனுக்கு இன்னும் பதினைந்து நாட்களில் திருமணம் வைத்திருப்பதாக கூறி கண்டிப்பாக வர வேண்டும் என்றும் கூறிவிட, வேதாவின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது.

அன்றிலிருந்து துள்ளாத குறையாக தான் முகம் முழுவதும் புன்னகையுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.

மஞ்சளை எடுக்க வேதா மாடிப்படி ஏறத் துவங்கும் சமயம்,

"ம்மா எங்க போறீங்க?" என்றபடி சலசலக்கும் கொலுசொலியுடன் முகம் முழுவதும் புன்னகையுடன் வந்து நின்றாள் செல்வா.

மஞ்சள் நிறப்பட்டு புடவையில் தங்க நிற ஜரிகை வைத்த பட்டுப்புடவையில் அதற்கேற்ற அணிகலன்களுடன் தேவையாக வலம் வந்தவளின் முகமெங்கும் ஜொலிக்கும் புன்னகை தான்.

"மேல ரூம்ல மஞ்சள் இருக்குடி அதை எடுக்கத்தான் போறேன்" வேதா பதில் மொழிய,

"அதை என்கிட்ட சொன்னா நான் போய் எடுத்திட்டு வர மாட்டேனா? மாடி ஏறி போனா உங்களுக்கு கால் வலிக்காதா?" என்றவள்,

"அண்ணன்கிட்ட பேசுனதுல இருந்தே உனக்கு பத்து வயசு குறைஞ்சிட்ட மாதிரி துள்ளிக்கிட்டு திரியிற" என்று தாயை முறைக்க,

"ஆமாடி. என் அண்ணன் பேசுனதுல பத்து இல்ல இருபது வயசு குறைஞ்சிடுச்சு" என்று சிரிப்புடன் மகளது கன்னத்தினை கிள்ளினார்.

"ரொம்பத்தான்" என்று நொடித்து கொண்ட செல்வா மஞ்சள் எந்த அறையில் எங்கு உள்ளது என கேட்டுவிட்டு சேலையை லேசாக பிடித்தபடி மாடியேறி சென்றாள்.

அவளுக்கும் தாயின் மகிழ்ச்சியில் அளவில்லா ஆனந்தம் தான். இன்னும் மற்றொரு காரணம் செல்வா கல்லூரி படிப்பை இரண்டு வாரத்திற்கு முன்பு தான் முடித்திருந்தாள்.

கல்லூரி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் உன்னுடைய வீட்டில் வந்து பேசுகிறேன் என்று வல்லபன் கூறியிருந்தது தான்.

இன்னும் சிறிது நாட்களில் தனக்கும் வல்லபனுக்கும் இது போல தான் உறவுகள் சூழ திருமணம் நடைபெறும் என்று எண்ணி எண்ணி பூரித்து போனார்.

அதுவும் வேதா தன் குடும்பத்தினருடன் சேர்ந்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் இச்சமயமே தன்னுடைய காதல் விடயத்தை கூறி சம்மதம் வாங்கிவிடலாம் என்று பலவாறான சிந்தனையில் முகமெங்கும் தித்திப்பான புன்னகையுடன் தான் வலம் வந்தாள்.

கந்தவேலின் குடும்பத்தினரும் சற்று நன்றாக தான் பேசினர்.

ராமநாதனது குடும்பமும் விரைவிலே அவர்களிடம் இணைந்திருந்தது.

ராமநாதன் தான் தங்கள் வீட்டு திருமணம் போல அனைத்தையும் எடுத்து முன்னின்று செய்து கொண்டிருந்தார்.

தாய் கேட்ட மஞ்சளை எடுத்து வந்து கொடுத்தவள் வேறு ஏதேனும் வேலை உள்ளதா என்று கேட்டு வந்தவர்களை கவனிக்க துவங்கினாள்.

நேரம் செல்ல மணமகன் வசீகரன் மேடைக்கு அழைத்து வரப்பட்டான். புரோகிதர் மந்திரங்களை கூறி நல்லபடியாக நிகழ்வை துவங்க ஆங்காங்கே பேசியபடி இருந்தவர்களும் நிகழ்வை கவனிக்க ஆரம்பித்தனர்.

நெருங்கிய சொந்தங்கள் மேடை ஏறி நிற்க ராமநாதன் குடும்பமும் மேடைக்கு ஏறியது.

முகூர்த்தம் நெருங்கும் வேளையில் புரோகிதர் பெண்ணை அழைத்து வருமாறு கூற,

செல்வாவும் வசீகரனின் தங்கை ஸ்வாதியும் மணமகள் அறைக்கு செல்ல அங்கே முகத்தில் அப்பிய பயத்துடன் நின்றிருந்தார் பெண்ணின் தாயார்.

ஸ்வாதி, "அத்தை அண்ணியை அழைச்சிட்டு வர சொல்றாங்க" என்று கூற,

"அது… கனியை காணோம்" என்றார் பயந்த விழிகளோடு,

இதற்குள், "சாந்தி எதுக்கு கூப்பிட்ட? என்னாச்சு?" என்றவாறு கனியின் தந்தை சந்திரன் வர,

"என்னங்க பாவி மக நம்ம தலையில மண்ணை அள்ளிப்போட்டுட்டு ஓடிப் போய்ட்டா" என்று கண்ணீர் விழ,

இருவரும் விடயம் புரிந்து அதிர்ந்து நின்றனர்.

இவர்களை காணாது இருவர் தேடி வர மணப்பெண்க ஓடிவிட்டது அங்கே காட்டுத்தீயாக பரவியது.

தகவலை அறிந்து மண்டபத்தில் இருந்தவர்கள்,

"பொண்ணு ஓடிப் போச்சாம்"

"பொண்ணு மாப்பிள்ளையை பிடிக்காம ஓடி போயிருச்சாம்" என்று பலவாறாக பேசத் துவங்கியிருந்தனர்.

இதில் வசீகரன் குடும்பத்தினர் தான் அதிர்ந்து நின்றனர்.

வேணி, "என் மகன் கல்யாணத்துல இப்படி ஆகிப்போச்சே. பாவி மக இப்படி பண்ணிட்டாளே" என்று அழத் துவங்க,

"அழாதிங்கண்ணி" என்று வேதா தான் சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.

"கல்யாண மேட வரைக்கும் வர வச்சு இப்படி பண்ணிட்டாளே" என்று விசும்ப,

கந்தவேலு, "உங்க பொண்ணுக்கு வேற ஒருத்தனை பிடிச்சிருக்குனு தெரிஞ்சும் எதுக்கு என் பையனுக்கு பேசி முடிச்சிங்க.‌ ஊரை கூட்டி எங்களை அசிங்கப்படுத்துறிங்களா?" என்று கனியின் பெற்றோரிடம் சண்டையிட்டு கொண்டிருக்க,

இங்கு முழுதாக பாதிக்கப்பட்ட வசீகரனோ முகம் இறுகி மாலையை கழற்றிவிட்டு மேடையில் இருந்து எழுந்திருந்தான்.

ஸ்வாதியுடன் சேர்ந்து, "அத்தை அழாதிங்க" என்று செல்வாவும் வருத்தத்துடன் ஆறுதல் கூற,

வேணிக்கு சடுதியில் ஒரு எண்ணம் வர விறுவிறுவென கணவனை நோக்கி சென்றவர் ஏதோ கூறினார்.

அதன் பிறகு இருவரும் வேதாவின் முன் நின்றிருந்தனர்.

கந்தவேலு தங்கையை கையைப் பிடித்தவர், "வேதா இப்போதைக்கு எனக்கு உன்னைவிட்டா யாருமில்லை. நீ தான்மா இந்த அண்ணன் குடும்பத்து மானத்தை காப்பாத்தணும்" என்று கண்கலங்க,

"ண்ணா எதுக்கு இப்போ கண்கலங்குறிங்க. நான் என்ன செய்யணும் இப்போ. உரிமையா செய்னா செய்யப் போறேன்" என்று தானும் உணர்ச்சிவசப்பட்டு கூற,

அவர்கள் இருவரது பார்வையும் ஒரு நொடி செல்வாவின் மேல் விழ, அவளுக்கு எதுவோ புரிவது போல இருக்க இதயம் மத்தளம் கொட்டியது.

"என் பையனுக்கு உன் பொண்ணு செல்வ மீனாட்சிய கல்யாணம் பண்ணித் தர்றீயா. என்னாடா இவன் முன்னாடியே கேக்காம இப்படி ஒரு சூழ்நிலை வந்ததும் கேட்குறானேன்னு தப்பா நினைச்சிடாதம்மா" என்க,

வேதவள்ளியின் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சியின் சாயல்.

கணவரை ஒரு கணம் பார்க்க ராமநாதனும் அருகில் வந்திருந்தார்.

"ண்ணா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னா. உரிமை இருக்குற இடத்துல தானே கேட்க முடியும்.‌ நம்ம ரெண்டு பேரும் சம்மந்தம் பண்ணலையேன்னு எனக்கு வருத்தம் இருந்துச்சு தான். இப்போ அந்த குறை தீர்ந்திடுச்சு. என் மகதான் உன் வீட்டு மருமக" என்றவர் கணவனை பார்க்க,

ராமநாதனும், "எனக்கும் சம்மதம் மச்சான்" என்று மனைவியின் விருப்பத்திற்கு தலையசைத்திருந்தார்.

இதை எல்லாம் பார்வையாளராக பார்த்திருந்த செல்வாவிற்கு இதயம் துடிப்பை நிறுத்திவிட இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.

எல்லா விடயத்திலும் தன்னிடம் விருப்பத்தை கேட்டு செய்யும் பெற்றோர் இத்தனை பெரிய முடிவில் தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே என்று கலங்கி போய் நின்றவளது விழிகள் நிறைந்துவிட்டது.

இதோ அதோவென விழுந்திடும் கண்ணீருடன் நின்றிருந்தவளது அருகில் வந்த வேதா,

"செல்வா வா" என்று கையை பிடித்து அழைத்து செல்ல, பொம்மை போல தான் அதிர்ச்சியில் இருந்து மீளாதவள் சென்றாள்.

அறைக்குள் அழைத்து சென்ற வேதா, "செல்வா அம்மா பேச்சை கேட்பதான. எனக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும்மா" என்று அவளது கையை பிடிக்க,

ராமநாதனும், "மாமா குடும்பம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில இருக்காங்க டா. கல்யாணத்துக்கு ஒத்துக்கோடா" என்று தானும் கூற,

சடுதியில் முகத்தை தழுவிவிட்ட நீருடன், "ம்ஹூம் வேண்டாம்பா. எனக்கு இதுல விருப்பம் இல்லை" என்று கூறியவளது உள்ளம் நடுங்கி கொண்டிருந்தது.

காரணம் வல்லபன் அவனில்லாத ஒரு வாழ்வை ஏன் ஒரு நாளை கூட அவளால் கனவிலும் கற்பனை செய்ய இயலாது.

அவனில்லை என்றால் தானில்லை அவ்வளவு தான் அவளுடைய நிலை.

உடல் தான் அங்குகிருந்து மனம் ஆவி ஆன்மா எல்லாம் அவனிடம் தான்.

என்ன நடந்தாலும் தன்னால் அவனுடைய இடத்தில் வேறு ஒருவரை கற்பனை கூட செய்ய இயலாது என்று அவளுக்கு புரிந்தது.

"செல்வா ப்ளீஸ்டி. புரிஞ்சுக்கோ" என்று வேதா மன்றாட,

"ம்மா ப்ளீஸ் நீங்க புரிஞ்சுக்கோங்க. என்னால இதுக்கு எப்பவுமே சம்மதிக்க முடியாது" என்று தீர்க்கமாக மறுத்தாள்.

ராமநாதன் கூட அவளுடைய தொடர் மறுப்பில், "வேதா அவ‌ இவ்ளோ தூரம் சொல்லும் போது நாம கட்டாயப்படுத்துறது சரியில்லை" என்று மனைவிடம் கூற,

தந்தை தன்னை புரிந்து கொண்டார் என்று செல்வா ஆசுவாசம் அடையும் நொடி,

"என்னங்க அவ திடீர்னு கேட்டதால அதிர்ச்சில பயந்து வேணாம்னு சொல்றா. நான் அவளை சம்மதிக்க வச்சு அழைச்சிட்டு வர்றேன். நீங்க போய் மத்த வேலையை பாக்க சொல்லுங்க" என்று கணவனை அனுப்பிவிட்டு கதவை அடைக்க,

தான் இன்னும் ஸ்திரமாக நிற்க வேண்டிய நேரம் இது என்று.

"செல்வா உனக்கே தெரியும்ல இத்தனை வருஷம் கழிச்சு என் குடும்பத்தோட நான் ஒன்னு சேர்ந்திருக்கேன்னு. இப்போ இந்த சூழ்நிலையில என் அண்ணனுக்கு நான் உதவி செய்யலைன்னா இந்த ஜென்மத்தில எனக்கு பிறந்த வீட்டு உறவே இல்லாம போய்டும்டி. உன்னூ கெஞ்சி கேக்குறேன்டி. ஓத்துக்கிட்டு வந்து மணமேடையில வந்து உட்காரும்மா" என்று கண்ணீருடன் மகளிடன் கையேந்தி நிற்க,

தாயின் இத்தைய தாக்குதலில் நிலைக்குலைந்து போனவள் தானும் அழுகையுடன்,

"ம்மா ப்ளீஸ்மா. உங்கண்ணா குடும்ப கவுரவத்துக்காக என் வாழ்க்கையை பணயம் வைக்காதம்மா. விருப்பமில்லாத வாழ்க்கையில நான் சந்தோஷமா இருக்க முடியாதும்மா" என்று தன்னிலையை விளக்க, சடுதியில் செல்வாவின் காலில் விழுந்திருந்த வேதா,

"பெத்த மகளா இருந்தாலும் உன் கால்ல விழுந்து கேக்குறேன்டி. தயவு செய்து ஒத்துக்கோடி" என்று அவளது காலை பிடித்திருந்தார்.

தாயின் செயலில் விதிவிதிர்த்து போனவள் இரண்டடி பின்னே நகர்ந்து, "ம்மா…" சற்று உரக்க கத்தியே இருந்தாள்.

"எனக்கு இதைவிட்டா வேற வழியில்ல நீ சம்மதம் சொல்ற வரை நான் எழ மாட்டேன்" என்றிட,

நிற்காது தொடரும் அழுகையுடன் மனதை கல்லாக்கி நின்றிருந்தாள் செல்வா.

மனது வல்லபன் வல்லபன் என்று அவனையே ஜெபித்தது.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது பாவைக்கு.

தாயின் கண்ணீர் சிறிது சிறிதாக அவளை சிதற செய்தாலும் திடமாக தான் நின்றிருந்தாள்.

"பெத்தவ கால்ல விழுந்த பிறகு கூட உன் மனசு இறங்கலைல. அப்படி என்னடி உனக்கு பிடிவாதம்" என்ற வேதாவிற்கு சிறிது கோபம் எட்டிப்பார்க்க,

"ம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்கம்மா" என்றவள் இறைஞ்ச,

"நீ சூழ்நிலையை புரிஞ்சுக்கோடி. என் பிறந்த வீடு எனக்கு முக்கியம்டி. நான் அவங்களுக்கு செஞ்ச துரோகத்தை சரி பண்ண ஒரு வழி கிடைக்கிருக்கு. ஆனால் நீ அதை சரிபண்ண விடமாட்ற. ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்ற" என்று கோபத்துடன் விழிக்க,

எப்போதாக இருந்தாலும் கூறித்தானே ஆக வேண்டும் சொல்லவில்லை என்றால் விடமாட்டார் என்றும் எண்ணம் வர,

"ம்மா எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சிருக்கு" என்று ஒருவழியாக கூறியிருந்தாள்.

அவளது பதிலில் அதிர்ந்து போனவர் ஒரு விநாடியில் சுதாரித்து,

"யாரோ ஒருத்தனுக்காக நீ நான் கால்ல விழுந்து கெஞ்சியும் அவ்ளோ அழுத்தமா நின்னியா?" என்றவரது பதிலில் அமைதியாக நின்றாள்.

அண்ணன் மேலுள்ள பாசத்தில் தானும் ஒரு காலத்தில் காதலனுக்காக குடும்பத்தையே எதிர்த்து நின்றோம் என்று வசதியாக மறந்து போனார்.

இறுதியாக, "அவனை மறந்திட்டு எங்களுக்காக இந்த கல்யாணத்தை பண்ணிக்கோடி. வசீ உன்னை தங்கமா பாத்துப்பான்டி" என்று மீண்டும் அதையே கூற,

செல்வா தான் அயர்ந்து போனவள் அங்கிருந்து நகர போக,

இத்தனை கூறியும் இளகாமல் இருப்பவள் மீது கோபம் வர,

"இப்போ இந்த கல்யாணம் நடக்கலைன்னா உன் அம்மாவ நீ உயிரோட பார்க்க மாட்ட" என்று இறுதி அஸ்திவாரத்தை எடுக்க,

செல்வா தான் சர்வமும் சமைந்து போய் அதிர்ந்து தாயை பார்த்தாள்.
விழிகள் விடாது நீரை சொட்டியது.

"என்ன பாக்குற. உனக்கே தெரியும் நான் சொன்னதை செஞ்சே ஆவேன்னு. உனக்கு உன் அம்மா முக்கியமா அவன் முக்கியமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ" என்றிட சடுதியில் உடைந்து அமர்ந்துவிட்டாள்.

உலகம் காலுக்கு கீழே நழுவி சென்றது. உடலில் அனைத்து பாகமும் சிதைந்து செயலிழந்து போனது.

உள்ளுக்குள் ஏதோ ஒன்று நழுவ இதயம் மொத்தமாக நொருங்கி போனது.

மனதில் இதழ்வளைத்த சிரிப்புடன் ஒற்றை புருவத்தை தன்னை நோக்கி ஏற்றி இறக்கும் வல்லபனின் முகம் வந்து செல்ல கைகளை இறுக்கிக் கொண்டாள்.

நொடியில் மனது அவனை சந்தித்ததிலிருந்து நேற்று இரவு முகம் முழுவதும் நேசத்துடன் பாய் பொண்டாட்டி என்று தொடர்பை துண்டித்தது வரை திரும்பி பார்க்க அது அவளை மொத்தமாக புரட்டிப் போட்டது.

எப்போதும், "என்னைவிட்டு போய்ட மாட்டலே?" என்ற தனது குரலும்,

"நீயில்லாம போனா நானில்லைடி என் மக்கு ஜான்சி ராணி" என்றவனது பதிலும் செவியில் மோத இதயம் மொத்தமாக காயம் கொண்டது.

மூன்று வருடங்களாக சிறுக சிறுக ஆசை காதல் நேசம் செல்லக் கோபம் சின்ன சமாதானம் கொஞ்சல் கெஞ்சல் என்று பார்த்து பார்த்து கட்டப்பட்டிருந்த காதல் கோட்டை நொடியில் தகர்க்கப்பட்டது.

"நமக்கு என்ன குழந்தை பிறக்கும்டி. எத்தனை குழந்தை பிறக்கும். நமக்கு எங்க கல்யாணம் நடக்கும்" என்று இருவரும் காதலாக பேசிக் கொண்ட‌ ஏகாந்த இரவுகள் நினைவில் வந்து நிந்தித்தது.

கோவிலில் கையை பிடித்து இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாமா ஜான்சிராணி என்று அவளை திகைக்க வைத்து அதில் புன்னகைத்தவனின் முகம் என்று எங்கும் எதிலும் மனதெங்கும் அவனது பிம்பமே கண நேரத்தில் எதிரொலிக்க,

"ஆ….." என்று கத்த வேண்டும் போல எண்ணம் எழுந்தது.

அனைத்தையும் இதழ்கடித்து உள்ளேயே அடக்கிக் கொண்டவள் உணர்ச்சி துடைக்கப்பட்ட இறுகிப் போன குரலில்,"சரி பண்ணிக்கிறேன்மா" என்றாள்.

முகம் அந்நொடி எந்தவித உணர்வுகளுமின்றி நிர்மலாக இருந்தது.

கூறிய மறுகணம் அவள் உயிர் உடலை விட்டு மானசீகமாக பிரிந்திருந்தது.

மகளின் வார்த்தையில் குளிர்ந்து போனவர், "எனக்கு தெரியும்மா நீ ஒத்துப்பேன்னு. என் பொண்ணுக்கு என் மேல பாசம் இல்லாம போகுமா. நீ ஒன்னும் கவலைப்படாத என் அண்ணன் குடும்பம் உன்னை நல்லா பார்த்துப்பாங்க. என் மருமகன் வசீ உன்னை கையில வச்சு தாங்குவான். அம்மா அப்பா உனக்கு கெடுதல் நினைப்போமா? கண்டிப்பா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்" என்று பலவாறு பேசி அவளது தோற்றத்தை சரி செய்து மேடைக்கு அழைத்து செல்ல,

நடைபிணமாக அவளுடன் சென்றவள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தாள்.

அங்கே தாயின் வற்புறுத்தலில் மேடையில் அமர்ந்திருந்த வசீகரனது முகமும் இறுகிதான் இருந்தது.

பொம்மை போல செல்வா அமர வைக்கப்பட புரோகிதர் மந்திரம் கூற வசீகரன் செல்வாவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்த நொடி,

"ஓய் ஜான்சிராணி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்றவனின் குரல் செவிப்பறையில் மோதி இதயத்தை கிழித்தெறிய விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.













 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Vallaban oda love vera level than suppose selva vasi oda nalla vazhundhu irundha avan last varaikum kalyanam pannikama irundhu irupan than thonuthu athu na la than niyabagam selva ku vandha udanae avolo guilt ah feel panna la vedha avangaloda suyanalam than innaiku selva vallaban oda indha nilamai ku karanam selva oda manasu ippo epudi thavikum uyir ah nesicha ah vittutu amma oda blackmail kaga kalyanam pannikita andha vazhkai nallapadiyaa than irundhuchi ippo thirumbavum vallaban ava vazhkai la irukan nama matumae suyanalam ah irukom nu ava nenachi evolo thudipa yaro oda kadhal kum unmai ah illa nu
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அச்சோ இப்படி ஒரு சூழ்நிலைல செல்வா மாட்டிருக்காளே 😲😲😲😲😲
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Ethu enna twist pa😲😲 vedha negga unga annan family oda iruganum nu selva oda manasa odajudiga epadi blackmail panni kalayanam panni eppo paruga yaru kastathula Iruka unga poonu selva tha💔💔 but vasi kuda selva nalla iruthu irupalo entha accident epadi nadathu irukum 🙄🙄eppo marubadiyum vallpan Ava life la epadi vantha vallpan selva negga 2 payrum romba romba pavom 🥺🥺🥺
 
Top