• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 19

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 19:

சாளரத்தின் வழியே முகத்தில் சமீபித்த ஆதவனின் கதிர்களினால்

"ப்ச்…" என்று விழிகளை சுருக்கி திறந்து மறுபுறம் திரும்ப முற்பட முடியவில்லை.

காரணம் அவள் அறிந்ததே அவளருகே படுத்திருந்த கணவன் இறுக்கமாக அவளை அணைத்து உறங்கி கொண்டிருந்தான்.

இதில் செல்வாவின் இதழ்களில் புன்னகை ஜனிக்க அவனது கையை எடுத்துவிட்டு எழ முயற்சிக்க மீண்டும் கையை எடுத்து அவள் இடையில் போட்டவன் அதிகமாக நெருக்கிக் கொண்டான்.

தூக்கத்தில் செய்கிறான் போல என்று நினைத்தவள் கரத்தை மீண்டும் எடுத்துவிட முயற்சிக்க முடியவில்லை.

இப்போது சிறிதாக சந்தேகம் வர கணவனது முகத்தை காண சிரிப்பில்‌‌ அவனது இதழ்கள் துடித்தது.

"ப்ராடு ப்ராடு தூங்குற மாதிரி நடிக்கிறிங்களா?" என்று அவனது தோளில் அடிக்க,

"ஹே நான் நிஜமாவே தூங்கிட்டு தான்டி இருக்கேன்" என்று சிரிப்புடன் விழிகளை திறக்காமலே கூறினான்.

"வர வர நீங்களும் உங்க பொண்ணு மாதிரியே பொய் சொல்றிங்க" என்று போலியாக அலுத்தவள்,

"கையை எடுங்க நான் எழணும்" என்று எழ முயற்சிக்க,

"என்ன அவசரம் மணி எட்டு தானே ஆகுது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவோம்" என்று அவளை பிடித்திழுக்க, அவன் மார்பினில் வந்து விழுந்தவள்,

"வாட் எட்டாகிடுச்சா. நான் நைன் தர்டி க்ளாஸ்க்கு ஸ்டூடண்ட்ஸ வர சொல்லியிருக்கேன். இவ்ளோ நேரமாவா தூங்கிட்டேன். எல்லாம் உங்களாலதான். இப்போலாம் நைட் என்னை நீங்க தூங்க விட்றதே…" என்று பேசி கொண்டே சென்றவள் கணவனது பார்வையில் கப்சிப் என்றானாள்.

இவளது செயலில் சத்தமாக சிரித்துவிட்டவன், "சொல்லு ஏன் நிறுத்திட்ட. நைட்டெல்லாம் தூங்க விடாம என்ன பண்றேன்?" என்று விஷம சிரிப்புடன் வினா தொடுக்க,

இவள் தான் சிவந்த முகத்தை மறைக்க முயற்சித்தவாறு, "ப்ச் விடுங்க" என்று விடுபட முயற்சித்தாள்.

அவள் முகத்தில் விழுந்த கூந்தல் இழையை இதழ்களால் ஊதியவன், "ம்ஹூம். நீ ஆன்ஸர் பண்ணாம விடமாட்டேன்" என்று சிரிக்க,

"அச்சச்சோ தெரியாம சொல்லிட்டேன்" என்று முகத்தை கைகளால் மூடிக் கொள்ள,

மனைவியின் பாவனை அவனை உருகத்தான் வைத்தது.

இருந்தும் விடாது, "அதான் என்ன தெரியாம சொல்லிட்ட" என்று வினா எழுப்ப,

"ப்ளீஸ் விட்ருங்களேன்" என்று விழிகளை சுருக்கி இதழ்களை குவித்து கெஞ்ச,

அவனது பார்வை குவிந்த இதழ் மீதும் அதனடியில் ஒய்யாரமாக வீற்றிருந்த மச்சத்தின் மீதும் பதிந்தது.

"சரி ஓகே விட்டுட்றேன் ஆனால் ஒரு கண்டிஷன்" என்க,

அவள் என்னவென்பதாய் புருவம் உயர்த்தினாள்.

"நல்லா ஸ்ட்ராங்கா ஒரு கிஸ் கொடு. நீ கொடுக்குற கிஸ் நைட் வரை தாங்கணும்" என்று கண்ணடிக்க,

"வாட்" என்றவள் சிவப்பேறிய கன்னத்துடன் கணவனை முறைத்து,

"நைட் தானே அத்தனை கிஸ் கொடுத்தேன்" என்க,

"அது நைட் கிஸ்டி. நைட் கொடுக்குறதெல்லாம் மார்னிங் கணக்குல வராது. இப்போ மார்னிங் கிஸ் கொடு" என்றான் மந்காச சிரிப்புடன்.

"மார்னிங் கிஸ் நைட் கிஸ்ஸா. உங்களால தான் கிஸ்ல இவ்ளோ வெரைட்டி கண்டுபிடிக்க முடியும்" என்று சிரிப்பும் முறைப்புமாய் அலுத்து கொள்ள,

"ஹே கிஸ்ஸோட வெரைட்டி இது இல்லைடி. வா சொல்லித் தர்றேன்" என்றவன் அவள் உணரும் முன் சடுதியில் வெகு அருகே இழுத்தவன் அவள் கன்னத்தில் ஆழமாக புதைந்திட இவள் தான் தடுமாறி தன்னிலை இழந்து போனாள்.

நிதானமாக ஆழமாக அவளது கன்னக்கதுப்பில் புதைத்து போனவன் செவிமடலில் மென்மையாக இதழ்பதித்து,

"இந்த கிஸ் நேம் என்ன தெரியுமா?" என வினவ,

அவனது முத்தத்தில் கிறங்கி மயங்கி போயிருந்தவளுக்கு அப்போது தான் நேரமாகிவிட்டது நினைவு வர பட்டென்று அவனை தள்ளிவிட்டு விலகி எழுந்து நின்றவள்,

"உங்களோட இதே வேலையா போச்சு. எப்போ பாரு பெட்ல இருந்து எழவே லேட்டாகிடுது" என்று முறைத்துவிட்டு உடைகளை தேடி எடுத்து குளிக்க செல்ல,

"நானும் வரவா சேர்ந்து குளிக்கலாமா?" என்று அவளை சீண்டவென்றே வினவினான் வல்லபன்.

"தேவையே இல்லை. எனக்கு தனியா குளிக்கத் தெரியும்" என்றவள் உள்ளே சென்று கதவை அடைக்க,

"ஆனால் எனக்கு தெரியாதே" என்று சிரித்த கணவனின் குரல் மூடிய கதவின் மேல் மோதியது.

மனைவியிடம் பதில் வராது போக அவள் அவளுக்கு கேட்கவில்லை என்று நினைத்தவன் மறுபடியும் விழிகளை மூடி உறங்க முயற்சிக்க,

"ப்பா…" என்ற சிணுங்கலுடன் அவனருகில் நெருங்கி படுத்தாள் அதி.

"என்னடா குட்டிமா" என்று அவளை தலையை வருட,

"ஹ்ம்ம்" என்ற முனங்கலுடன் உறக்கத்திலே தந்தையின் மேல ஏறி படுத்து கொள்ள,

வல்லபனது இதழ்களில் புன்னகை பூத்தது.

ஒரு கையை தலைக்கு கொடுத்தவன் மறுகையால் மகளை தட்டிக் கொடுத்தபடி உறங்கி போனான்.

செல்வா குளித்து வந்து கண்டது உறங்கும் மகளையும் கணவனையும்.

இதழ்களில் தேனாய் புன்னகை தொற்றிக் கொள்ள சமையலறை சென்று ஏலக்காய் போட்டு தேனீரை தயாரித்தவள் அதனை பருகியபடியே காலை உணவை தயாரிக்கலானாள்.

கைகள் சமைத்தாலும் மனது கணவனையும் அவனுடனான ஆறு மாத கால வாழ்க்கையையும் தான் அசைப்போட்டது.

மருத்துவமனையில் வல்லபன் தனது கணவன் என்று அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இன்றுவரை.

வெறும் ஆறு மாத காலம் தான் அதற்குள் எவ்வளவு தூரம் தனக்குள் ஊடுருவி பதிந்து போனான்.

என்னவோ அவன் தான் தனக்கு யாவுமே என்பது போல ஆகிப்போனான்.

அவனது அளப்பரிய நேசத்தில் உருகி கரைந்து அவனுக்குள்ளே தான் நிறைந்து போனதை அவளும் உணர்ந்திருந்தாள்.

வாழ்வில் ஒரு அளவில்லா நிம்மதி மகிழ்ச்சி என்பார்களே அதை கொடுத்திருந்தான்.

இவனது இந்த நேசமே இன்னும் ஏழு ஜென்மத்திற்கும் போதும் என்றே இவளுக்கு தோன்றியிருந்தது.

அன்பான கணவன் அழகான குழந்தை என்று வாழ்வு முத்தாய்ப்பாய் போனது.

எதுவும் தனக்கு நினைவில் வரவில்லையே என்று நினைத்து வருந்தியவள் நடந்தது நினைவிற்கு வரவில்லை என்றால் என்ன?

இப்போதைய வாழ்வே நன்றாக தான் இருக்கிறது. அவர் கூறியது போல புதிதாக காதலித்து திருமணம் செய்ததது போல இருந்துவிட்டு போகட்டும் என்று எண்ணி கொண்டாள்.

ஆக இனி நினைவு வந்தாலும் வரவில்லை என்றாலும் அவளுக்கு ஒரு கவலையும் இல்லை.

தனது அன்பில் செல்வாவின் குடும்பத்தினரையே அவள் மறந்து போவது போல செய்திட்டான் இந்த காதல் கள்வன்.

இந்த ஆறு மாதத்தில் இரண்டு முறை செல்வாவின் குடும்பத்தினர் ஹைத்ரபாத் வந்து பார்த்துவிட்டு
சென்றனர்.

மகள் மகிழ்ச்சியாக வாழ்வதில் அவர்களும் அகமகிழ்ந்து தான் போயினர்.

வல்லபனது தந்தையும் அக்ஷயாவும் கூட வந்து சென்றனர்.

வல்லபனது மற்ற குடும்ப உறுப்பினர்கள் வராதது செல்வாவிற்கு வருத்தமே.

அதை உணர்ந்த வல்லபனும் விரைவில் புரிந்து கொள்வர் என சமாதானம் கூற அவளும் தலையை அசைத்திருந்தாள்.

"என்ன மேடம் டீப் திங்கிங் போல" என்ற கணவனது குரல் செவிக்கருகில் மோத அதில் தன்னிலை அடைந்தவள்,

"ம்ஹும் நத்திங்" என்றாள்.

அவளை தன்புறம் திருப்பியவன் தலையை இடம் வலமாக சிலுப்ப அவனது தலையிலிருந்த நீர் துளிகள் அவளது முகத்தில் தெளித்தது.

இதனை எதிர்பாராதவள் திகைத்து பின் செல்ல முறைப்புடன் அதனை துடைக்க போக அவளது கையை பிடித்து தடுத்தவன்,

"ம்ஹூம் அப்படி துடைக்க கூடாது. நான் உனக்கு துடைக்க சொல்லித் தர்றேன்" என்றவன் இதழ்களால் அவள் நெற்றியில் இருந்த நீர்க்குமிழியை இதழ்களால் ஒற்றி எடுக்க,

சற்று முன் குளித்து வந்தவனது சோப்பின் நறுமணம் நாசியின் ஆழமாக இறங்க அவனது செயலில் மயங்கி விழிகளை மூடி கொண்டாள்.

அப்படியே வரிசையாக பூத்திருந்த நீர்க்குமிழிகளை ஒற்றி எடுத்தபடி வந்தவனது பார்வை அவளது மச்சத்தில் பதிய இப்போது இவன் கிறங்கி போனான் அதனால்.

மெதுவாக அந்த மச்சத்தின் மீது இதழ்களை பதித்தவன் அதில் அமிழ்ந்து போக செல்வா அவனது சட்டையை இறுக்கிக் கொள்ள இவன் அவளை இடையோடு நெருக்கிக் கொண்டான்.

நொடிகள் நிமிடங்களாக கடக்க இருவரும் முத்தத்தில் கரைந்து திளைத்து சுற்றம் மறந்து தான் போயினர்.

அடுப்பில் இருந்த குக்கர் சத்தத்தில் இருவரும் சுயநினைவை அடைய சடுதியில் அவனை விலக்கிவிட்டு அடுப்பின் புறம் திரும்பி அதனை அணைத்தவள்,

"ப்ச் வெளியை போங்க. நான் டீ போட்டு எடுத்திட்டு வர்றேன். நீங்க இருந்தா என்ன வேலையே செய்யவிட மாட்டீங்க" என்று அவனை வெளியே தள்ள, சிரிப்புடன் அவன் வெளியேறினான்.

செல்வா தேநீரை தயாரித்து வெளியே எடுத்து செல்ல அதியும் எழுந்திருந்தாள்.

அதியை மேஜை மேல் அமர்ந்திருக்க தந்தையும் மகளும் ஏதோ சுவாரசியமாக பேசியபடி இருந்தனர்.

செல்வா அருகில் வரவும் இருவரும் பேச்சை நிறுத்தி கொள்ள,

"என்ன நான் வரவும் பேச்சை நிறுத்திட்டிங்க. எனக்கு தெரியாம என்ன திருட்டு வேலை பாக்குறீங்க ரெண்டு பேரும்" என்று இடுப்பில் கைவைத்து முறைக்க,

"அப்படிலாம் ஒன்னும் இல்லையே" என்று கோரஸாக கூறியவர்கள் ஒரே போல கையை விரிக்க,

இருவரது வலக்கையில் இருந்த மச்சமும் தெளிவாக தெரிந்தது.

செல்வாவும் தந்தைக்கும் மகளுக்கும் செயலில் மட்டுமல்ல மச்சத்திலும் ஒற்றுமை தான் போல என்று ஏற்கனவே எண்ணியிருந்தவள்,

"ரெண்டு பேரும் ஒரே மாதிரியே பொய் சொல்றிங்க ஹ்ம்ம்" என்று விழிகளை உருட்டினாள்.

"அப்பாவும் பொண்ணும் ஒரே மாதிரி தான் இருப்போம்" என்றவன்,

"என்னடா குட்டிம்மா" என்று மகளிடம் கேட்க, அவளும் தலையசைக்க இருவரும் கையை அடித்து கொண்டனர்.

"என்னமோ திருட்டு வேலை பண்ணுங்க. அப்பாவும் மகளும்" என்று அலுத்தவள் கணவனுக்கு தேநீரை கொடுத்துவிட்டு மகளிடம்,

"இருடா அம்மா உனக்கு பால் கொண்டு வர்றேன்" என்க,

"ம்மா தூக்கு" என்று மகள் கை நீட்டினாள்.

மகளை கைகளில் வாரியவள் சமையலறைக்கு சென்று அவளுக்கு பாலை ஆற்றி கொடுத்துவிட்டு மற்ற சமையல் வேலையை செய்தாள்.

இங்கு தேநீரை அருந்திவிட்டு வல்லபனும் உடை மாற்றி அலுவலகத்திற்கு தயாராக வர,
அவள் உணவை மேஜை மேல எடுத்து வைப்பதற்கும் சரியாக இருந்தது.

"நீயும் உட்காரு" என்று மனைவியையும் அமர வைத்து மூவரும் உண்டு முடிக்க வல்லபன் தனது அலுவலக பையை எடுத்து கொண்டு தயாரானான்.

வழக்கம் போல மகளுக்கு கன்னத்தில் முத்தமிட்டவன் தானும் பெற்றுக் கொண்டு மனைவியின் புறம் வந்து சிரிப்புடன் பார்த்தான்.

அவளோ, "காலையில இருந்து எக்கசக்கமா போய்டுச்சு. இனிமே நோ" என்று முறைக்க,

"ஹே அதுலாம் இந்த கணக்குல வராதுடி என் ஜான்சி ராணி" என்று கண்சிமிட்ட,

"நான் ஒத்துக்கமாட்டேன்" என்று திரும்பி கொண்டாள்.

"நான் என்னோட கடமைல இருந்து தவறமாட்டேன்" என்றவன் அவளது முகத்தை ஒரு கையால் திருப்பி கன்னத்தில் முத்தமிட்டு,

"இப்போ உன் டர்ன்" என்று கன்னத்தை காண்பித்தான்.

"நோ முடியாது" என்று மனைவி கூற,

"குட்டிம்மா பாருடா உங்கம்மா டாடிக்கு முத்தா தரலை. நீ எப்படி குட் கேர்ளா குடுத்த" என்று மகளிடம் புகார் வாசித்தான் புன்னகையுடன்.

அவளோ பெரிய மனித தோரணையுடன், "ம்மா அப்பாக்கு முத்தா கொடு" என்று கூற,

இருவருக்கும் அவளது தோரணையில் பெரியதான புன்னகை எழுந்தது.

மகளை கையில் வாரி உச்சி முகர்ந்தவள் அவளது கன்னத்தில் முத்தமிட்டு,

"க்யூட் பேபிடி நீ உனக்காவே உங்கப்பாக்கு முத்தா தரலாம்" என்றவள் சிரிப்புடன் கணவனுக்கு முத்தமிட்டு அவனை வழியனுப்பினாள்.

அதன் பிறகு வீட்டு வேலைகள் இழுத்து கொள்ள வேலை செய்யும் பெண் வரவும் அவளுடன் சேர்ந்து முடித்துவிட்டு நடன வகுப்பிற்கு மகளுடன் சென்றாள்.

அந்த குடியிருப்பு விழாவிற்கு பிறகு அருகில் உள்ள மற்றும் சில குடியிருப்புகளில் இருந்து கூட நிறைய மாணவிகள் வந்து சேர இவளுக்கு நேரம் தான் போதாமல் போனது.

நேற்றே முடிக்க வேண்டிய வகுப்பு முடிக்க இயலாததால் இன்று காலை வர சொல்லி அன்றைய பாடத்தை கற்றுக் கொடுத்தாள்.

மாணவர்களும் ஏனோ தானோ வென்று இல்லாமல் ஆர்வமாக கற்றுக் கொள்ள செல்வாவும் ஆர்வமாக பயிற்றுவித்தாள்.

இப்போது அங்கு பயிலும் சில மாணவிகளின் பள்ளியில் ஆண்டுவிழாவிற்கு நடனமாடுவதற்கான பயிற்சியை தான் கொடுத்து கொண்டிருந்தாள்.

மாணவிகள் பள்ளியில் நடக்கும் விழாவிற்கு ஒரு பாடலிற்கு நடனம் கற்று தருமாறு கேட்க மகிழ்வுடன் சம்மதித்தவள் அதற்காக நன்றாக யோசித்து பாடலை தெரிவு செய்து நடனத்தை கற்றுக் கொடுத்தாள்.

வியர்க்க விறுவிறுக்க வகுப்பை முடித்து வீட்டிற்கு வர மணி பதினொன்றை நெருங்கி இருந்தது.

வியர்வை போக நன்றாக குளித்து வந்தவள் நீள்விருக்கையில் காலை நீட்டி ஆசுவாசமாக அமர மகளும் அதே போல கால்களை நீட்டி அமர்ந்தாள்.

அதில் செல்வா மென்னகையுடன் பார்க்க அவளது அலைபேசி அலறியது.

எடுத்து பார்க்க பவிதான் காணொளி அழைப்பை விடுத்தாள்.

முகம் முழுவதும் சிரிப்புடன் அழைப்பை ஏற்க,

"என்ன டீச்சர் உங்களுக்கு எங்களை ஞாபகம் இருக்கா?" என்ற தங்கையின் வினாவில் அவளை முறைத்தாள்.

"என்ன முறைக்கிற. அதை நான் பண்ணணும். நீ எனக்கு கால் பண்றேன்னு சொல்லி நாலு நாள் ஆச்சு" என்று பவி முறைத்தாள்.

"ஷ்…" என்று நாக்கை கடித்தவள்,

"சாரிடி மறந்துட்டேன்" என்க,

"எப்படி ஞாபகம் இருக்கும். முன்னாடிலாம் டெய்லி கால் பண்ண அப்புறம் டூ டேஸ் ஒன்ஸ்.‌ இப்போ வீக்லி ஆகிட்டு" என்று கூற,

"கிளாஸ்ல நிறைய ஓர்க்" என்றாள் செல்வா.

"உண்மைய சொல்லு. கிளாஸ்ல ஒர்க்கா இல்லை அத்தானோட ஒரே ரொமான்ஸா?" என்று கண்ணடிக்க,

"ஏய் வாலு என்னடி பேசுற" என்றவளது கன்னம் லேசாக சிவந்து விட்டது.

"என்ன‌ உண்மையத்தானே கேட்டேன்" என்று வார,

செல்வா பதில் கூறும் முன் திரையில் தோன்றினாள் வினிதா.

"பாருங்கண்ணி இவ என்ன பேசுறான்னு" என்று அண்ணியிடம் புகார் வாசிக்க,

"அவ சரியாதானே பேசுறா" என்று வினிதா சிரிக்க, இருவரும் கையை அடித்து கொண்டனர்.

அண்ணி தனக்கு சாதகமாக பேசுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தவள்,

"அண்ணி நீங்களுமா?" என்று சிணுங்க,

"என்ன நீங்களுமா? ஹாஸ்பிட்டல்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சான்னு கேட்டு பெக்க பெக்கன்னு முழிச்ச செல்வா எங்க போனா?" என்று வினவ,

"அண்ணி போதும் ப்ளீஸ்" என்று லஜ்ஜையுடன் கெஞ்சினாள்.

"ச்சு சும்மா தான் கலாய்ச்சோம் செல்வா. நீ நல்லா இருந்தா எங்களுக்குத் தானே சந்தோஷம்" என்று வினிதா கூற,

"தெரியும்" என்று செல்வா புன்னகைத்தாள்.

அடுத்து, "அத்தை…" என்று தனுஷ் வர அவனிடம் பேசினாள்.

அதற்கடுத்து தாயும் அத்தையும் வர அவர்களிடமும் பேசிவிட்டு அலைபேசியை அணைக்க மதிய உணவு நேரம் நெருங்கியிருந்தது.

வல்லபன் மதியம் வெளியே செல்லும் வேலை இருப்பதால் மதிய உணவு வேண்டாம் என்றிட அவர்கள் இருவருக்கும் மட்டும் தானே என்று நினைத்து கொஞ்சமாக தக்காளி சாதம் வைத்து உண்டனர்.

அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்தவள் நான்கு மணியை போல எழுந்து உடை மாற்றி வெளியே செல்ல தயாரானாள்.

மாணவர்களின் நடனத்திற்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருப்பதால் தானே சென்று வாங்கி வர முடிவு செய்திருந்தாள்.

துமிரம் நிறத்தில் நீளமான முட்டியை தொடும் அளவில் சுரிதாரும் அதற்கு தோதாக வெள்ளை நிறத்தில் பூக்களிட்ட கால்சாராயும் துப்பட்டாவும் அணிந்திந்தவள் காதில் மெல்லியதாக வெள்ளை கல் பதித்த தோடு.

தலையை தூக்கி ஒரு பேண்டில் அடக்கியவள் நெற்றியில் ஒற்றை கல் பொட்டிட்டு மகளையும் கிளப்பி தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள வணிக வளாகத்தினை நோக்கி சென்றாள்.

பெரும்பாலும் சேலையே அணிபவள் வெளியே செல்லும் நேரம் மட்டும் சுரிதார் போன்ற உடைகளை அணிவாள்.

செல்வாவிற்கு முன்பே இரு சக்கர வாகனம் ஓட்டும் பழக்கம் இருந்ததால் வல்லபனும் செல்வாவை வெளியே தனியாக செல்ல அனுமதித்திருந்தான்

பதினைந்து நிமிடத்தில் அந்த பெரிய வளாகத்தினை அடைந்தவள் வண்டியை நிறுத்திவிட்டு தனக்கு தேவையான பொருட்கள் எந்த தளத்தில் கிடைக்குமென்று விசாரித்துவிட்டு அந்த தளத்தை நோக்கி சென்றாள்.

அன்று சனிக்கிழமை ஆதலால் கூட்டம் சற்று அதிகமாக தான் இருந்தது.

உள்ளே நுழைந்து தான் ஏற்கனவே என்ன வாங்க‌ வேண்டும் என்று பட்டியலிட்டிருந்த காதித்தை பார்த்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்து கொண்டிருக்க,

"ஜான்சி ராணி என்ன பண்ற?" என்று வல்லபனிடமிருந்து செய்தி வந்தது.

முதலில் தான் இருக்கும் இடத்தை பற்றி கூறலாம் என்று நினைத்தவள் சடுதியில் முடிவை மாற்றி தானே அவனது அலுவலகம் சென்று பார்த்து ஒன்றாக வீடு செல்லலாம் என்று எண்ணி,

"சும்மாதான் இருக்கேன். நீங்க?" என்று பதில் அனுப்பினாள்.

"இப்போதான் மீட்டிங் முடிச்சிட்டு ஆபிஸ் வந்தேன்" என்றவன் பின்னர்,

"மிஸ் யூ" என்று போட,

"ஆஹான்" என்றாள்.

"நிஜமாடி" என்க,

"நம்பிட்டேன்" என்றாள்.

"வீட்டுக்கு வந்து உன்னை நம்ப வைக்கிறேன்" என்க,

ஏதோ தட்டச்சு செய்தபடியே இருந்தவள் எதிரில் வந்தவரை மோதிவிட்டாள்.

சடுதியில் தன்னிலை அடைந்து,

"சாரி சாரி தெரியாம இடிச்சிட்டேன்" என்று கூற,

"நீயா?" என்று எதிரில் இருந்த பெண் முகத்தை சுழிக்க,

இவள் அதிர்ந்து பார்த்தாள்.

அருகில் இருந்த பெண் ஏதோ கேட்க முகத்தை சுழித்தவள் எதையோ கிசுகிசுத்துவிட்டு செல்வாவிடம்,

"உனக்குலாம் கொஞ்சம் கூட அசிங்கமாவே இல்லையா?" என்று கோபமாக வினவ,

ஏற்கனவே அவளது செயலில் அதிர்ந்து இருந்தவள்,

"ஹலோ யாருங்க நீங்க. வேற யாரோன்னு நினைச்சிட்டு பேசிட்டு இருக்கிங்க" என்று செல்வா சீற,

"சீ நிறுத்து நீ செல்வ மீனாட்சி தானே எல்லாம் தெரிஞ்சு தானே பேசிட்டு இருக்கேன். ஏன்டி புருஷன் செத்து போய்ட்டா போய் எவனாவது ஏமாந்தவனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே ஏன்டி என் அத்தானை கல்யாணம் பண்ண. அதுவும் புருஷன் செத்து ஆறு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள அடுத்து ஒருத்தனை தேடிக்கிட்ட" என்று வார்த்தைகளால் நெருப்பை வாரி இறைக்க,

"சுஸ்மி எல்லாரும் பாக்குறாங்க. வா போகலாம்" என்று அவளை அருகில் இருந்த பெண் இழுத்து சென்றுவிட,

சுஸ்மி என்பவளின் வார்த்தையில் செல்வா தான் மொத்தமாக உடைந்திருந்தாள்…







 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Sis enna ithu ipadi oru twist oda mudichi irukiga selva vum vallaban um.than ah love pannaga avanga rendu perukum than ah marriage achi nu ava family la irukagavaga vallaban avan oda appa ellarum sonnaga ippo enna da ipadi oru gunda thooki podriga
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Enna da smooth ah poyittu irukke nu ninachen. Aanalum ipdi oru twist ah sathiyama ethirpaakkala ma
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Vallapan selva athi kutty santhosama irugaga💖💖 eppo avaluku palasu nabagam varama irutha kuda ok tha 😌😌ethu enna pa puthu twist ya iruku😲 yaru sumi selva ku yaru kuda marriage nadathuju vallpan selva thaana love pannidu iruthaga suspense ya iruku😲😲
 
Top