• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 18

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 18:

"ஹம்ம் அப்புறம் என்ன?" என்று வல்லபன் வினவ,

"அப்புறம்…" என்று தாடையில் கையை வைத்து சிந்தித்தவள்,

"சொல்றதுக்கு ஒன்னுமில்லை நீங்க தான் சொல்லணும்" என்று கூற,

அவளது பாவனையில் புன்னகையுடன் பின்னால் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டு அவளை விழிகளால் ஆராய்ந்தான்.

ஊதா நிறத்தில் இரவு உடை அணிந்திருந்தவள் சற்று சாய்வாக அமர்ந்து கொண்டு கையில் அலைபேசியை உயர்த்தி பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

இடையிடையே வலது கரம் வேறு முகத்தில் உறவாடிய கூந்தல் இழைகளை எடுத்துவிட்டபடி இருந்தது.

அவனது பார்வையை உணர்ந்தவள்,

"என்ன" என்று புருவத்தை ஏற்றி இறக்க,

சிரிப்புடன் ஒன்றுமில்லை என்றவாறு தலையை இடமும் வலமும் அசைத்தவன்,

"வேற‌ ஒன்னுமில்லை சொல்றதுக்கு" என்று கொட்டாவி ஒன்றை வெளியிட்டு,

"தூக்கமா வருது தூங்க போகவா?" என்று வினவினான்.

அதில் சட்டென்று அவளது முகத்தில் ஏமாற்றத்தின் சுவடுகள் மறுநொடியே அதை மறைத்தவள்,

"ஹ்ம்ம் குட் நைட்" என்று கூற,

"குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்றவன் அழைப்பை துண்டிக்கப் போக,

'இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை' என்று வாய்க்குள் முணுமுணுத்தவள் அழைப்பை துண்டித்த பிறகும் அலைப்பேசி திரையையே வெறித்தாள்.

நேரம் பதினொன்று நாற்பத்தைந்து மறுநாள் செல்வாவிற்கு பிறந்தநாள்.

அவனுக்கு நிச்சயமாக நினைவு இருக்கும் என்று ஆர்வமாக அவன் வாழ்த்தை எதிர்ப்பார்த்தவள் இன்று இவ்வளவு நேரம் பேசவும் கண்டிப்பாக தனக்கு வாழ்த்து கூறத்தான் காத்திருக்கிறான் என்று முடிவு செய்து கொண்டவளுக்கு மனதெங்கும் மகிழ்ச்சியின் சாரல்.

ஆனால் அவனோ இறுதி நேரத்தில் தூக்கம் வருகிறது என்று உறங்க செல்ல முழுதாய் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இதோ வல்லபனுக்கு கல்லூரி முடிந்து‌ ஆறுமாதங்கள் கடந்திருந்தது.

கூறியது போல மாதமாதம் சரியாக அவளை பார்க்க வந்துவிட்டான். தினமும் இரவு வெகுநேரம் வரை அலைபேசியில் பேச்சு என்று அவளிடம் தன்னுடைய தேடலை குறைத்திருந்தான்.

எப்போதும் உடனிருப்பது போலவே எண்ணத்தை உருவாக்கியிருந்தான்.

தங்கள் இருவரும் தொலைதூரம் பிரிந்து இருக்கும் சமயம் வரும் முதல் பிறந்தநாள் நிச்சயமாக அவனுக்கு நினைவு இருக்கும் என்று வெகுவாக எதிர்ப்பார்த்து ஏமாந்து போனாள்.

நேரம் பதினொன்று ஐம்பதை நெருங்க மனது,

'நிச்சயமாக அவருக்கு நினைவு இருக்கும் கண்டிப்பாக பனிரெண்டு மணிக்கு அழைப்பார். உன்னிடம் வம்பிழுப்பதற்க்காகவே மறந்தது போல நடிக்கிறார்' என்று கூற,

"ஒருவேளை அப்படியும் இருக்குமோ?" என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள்,

"அப்படித்தான் இருக்கும் தன்னுடைய விடயத்தில் அவர் எப்போதுமே தவறியதில்லை" என்று முடிவே செய்து காத்திருந்தாள்.

நேரம் பனிரெண்டை அடைந்தது நண்பர்கள் சிலரிடமிருந்து செய்தி வந்தது.

மனது அவனை தான் எதிர்ப்பார்த்தது. அதுவும் கடந்த இரு பிறந்தநாளுக்கும் துள்ளியமாக பனிரெண்டு மணிக்கு வாழ்த்து கூறியிருந்தான்.

பனிரெண்டு பத்து ஆக மனது லேசாக சுணங்க விழிகள் கலங்கியது.

வந்த வாழ்த்திற்கு பதிலனுப்ப நேரம் பனிரெண்டு முப்பதாகியது. இனி உறுதியாக அவன் வாழ்த்தபோவதில்லை என்று தெரிந்துவிட கலங்கிய கண்களுடன் உறங்கிப் போனாள்.

காலையில், "ஹாப்பி பர்த்டே அக்கா" என்ற சாம்பவியின் குரலில் தான் அவளுக்கு விழிப்பு வந்தது.

சோம்பலாக கண்விழித்தவள்,

"தாங்க் யூ" என்று லேசாக புன்னகைத்தாள்.

பின்னோடே, "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வா" என்று வினிதாவும்,

"ஹாப்பி பர்த்டே டா" என்று தியாகுவும் வந்தான்.

இருவருக்கும் புன்னகையுடன் நன்றி கூறியவள் எழுந்து முகம் கழுவி காலை கடன்களை முடித்து வர,

"என் பொண்ணு பிறந்தநாளுக்கு அவளுக்கு பிடிச்ச பாசிப்பருப்பு பாயாசம் செஞ்சிருக்கேன்" என்று கையில் பாசாய கின்னத்துடன் வேதவள்ளி வர,

புவனா, "கோவிலுக்கு போய் உன் பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்டா" என்று விபூதியை நெற்றியில் பூசினாள்.

அடுத்து அவளது தந்தையும் வாழ்த்தி‌ ஒரு பரிசை கொடுக்க,

குடும்பத்தினரின் வாழ்த்து மழையில் நனைந்தவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தான்.

இருந்தும் அவனிடமிருந்து வாழ்த்து வராதது உள்ளத்தின் ஒரு ஓரத்தில் உறுத்தியது.

எல்லோரது வாழ்த்திலும் முகம் நிறைந்த புன்னகையுடன் குளித்து தயாராக சென்றவள் எங்கே வாழ்த்து கூறி எதாவது செய்தி அனுப்பியிருப்பானோ என்ற ஏதிர்ப்பார்ப்பில் அலைபேசியை எடுத்து பார்க்க, எந்த செய்தியும் வரவில்லை.

மனது வெகுவாக சுணங்கியது. அவருக்கு வேலையில் நிறைய அழுத்தங்கள் இருக்கும் அதில் இதை மறந்திருப்பார் என்று தனக்குத்தானே கூறி சமாதானம் செய்தவள் குளித்து வர சென்றாள்.

குளித்து வந்த பிறகும் அலைபேசியை எடுத்து பார்த்தாள். சாப்பிட்டு வந்த பிறகு என ஒவ்வொரு முறையும் எடுத்து பார்த்தாள்.

ஒருவழியாக அவள் கல்லூரிக்கு தயாராகி பேருந்தில் ஏறி அமர்ந்த சமயம் வல்லபனிடமிருந்து அழைப்பு வந்தது.

முகத்தில் அத்தனை பிரகாசம் தோன்ற அழைப்பு ஏற்று,

"ஹலோ"என்றவளின் குரலில் அத்தனை துள்ளல்.

ஆனால் அது அவனுக்கு புரியவில்லை போலும்.

"என்னடி காலேஜ் கிளம்பிட்டியா?" என்று சாதாரணமாக வினவ,

"ஹ்ம்ம் கிளம்பிட்டேன்" என்றவள் சற்று இறங்கிய குரலில்,

"நீங்க கிளம்பிட்டிங்களா?" என வினவ,

"ஹ்ம்ம். இன்னைக்கு ஒரு முக்கியமான பெர்சனை மீட் பண்ணனும்" என்றவன்,

"சாப்பிட்டாச்சா?" என்றான்.

"ஹ்ம்ம்" என்றவளது பதிலுக்கு,

"சரிடி கொஞ்சம் வொர்க் இருக்கு அப்புறம் கூப்பிட்றேன் பாத்து போ" என்று அழைப்பை துண்டிக்க அவள் வெறுத்தே போனாள்.

போதும் இதற்கு மேலும் அவருக்கு நினைவு இருக்கும் என்று நம்பி ஏமாந்து போக நான் தயாராக இல்லை.

'அவர் மறந்துவிட்டார்' அவ்வளவு தான் என்று எண்ணியவளுக்கு அன்றைய தினம் மிகவும் கசந்தது.

கல்லூரியில் வந்த வாழ்த்துக்களுக்கு முகம் மாறாது பதிலளிக்க மிகவும் சிரமப்பட்டாள்.
வகுப்பை கவனிக்க பிடிக்கவில்லை.

எங்கே நாட்கள் செல்ல செல்ல அவருக்கு தன் மீது உள்ள காதல் குறைந்துவிட்டதோ என்றெல்லாம் எண்ணம் வர நொந்தே போனாள்.

அப்படியெல்லாம் ஏதுமில்லை என்று தனக்குத்தானே சொல்லியும் கொண்டாள்.

மதிய உணவு இடைவேளை வர உணவு உண்ண பிடிக்கவில்லை. பானு சாப்பிட அழைத்த போதும் மறுத்துவிட்டு வகுப்பறையிலே மேஜை மேல் படுத்துவிட்டாள்.

அலைபேசியில் அழைப்பு வந்தது யாரென எடுத்து பார்க்க வல்லபன் தான் அழைத்தான்.

எப்போதும் இந்த நேரத்தில் அழைக்க மாட்டாரே ஒரு வேளை எனது பிறந்தநாள் நினைவு வந்திருக்குமோ என்று தோன்ற மனதிற்குள் சிறிய உற்சாகம்.

கண்டிப்பாக நினைவு வந்திருக்கும் என்று ஆர்ப்பரித்தவள் அழைப்பை ஏற்க,

"என்னடி பண்ற சாப்பிட்டியா?* என்று அவனே பேச்சை துவங்க,

"இன்னும் இல்லை. நீங்க சாப்பிட்டிங்களா" என்றவள்,

"என்ன இந்த நேரத்தில கால்" என்று வினா தொடுத்தாள்.

"ஏன் இந்த நேரத்தில கால் பண்ணக் கூடாதா?" என்று அவன் வம்பிழுக்க,

"ஐயோ அப்படிலாம் எதுவுமில்லை" என்று உடனடியாக மறுத்தாள்.

"அப்புறம் ஏன் அப்படி கேட்ட?"

"அது சும்மா கேட்டேன்"

"சும்மா எதுக்கு கேட்ட?"

"ஐயா சாமி தெரியாம கேட்டுட்டேன் விட்ருங்க" என்றவளது பதிலில் அடக்கமாட்டாது சிரித்துவிட்டவன்,

"ஒரு இம்பார்ட்டன்ட் திங்க்க மறந்துட்டேன்‌ அதான் கால் பண்ணேன்" என்க,

இவளுக்குள் உற்சாக ஊற்று, "சொல்லுங்க என்ன விஷயம்?" என்றாள்.

"அது நான் உன்கிட்ட சொல்லியிருந்தேனே அந்த லண்டன் ப்ராஜெக்ட் நமக்கே கிடைச்சிருச்சு" என்று சந்தோஷமாக கூற,

இவளுக்கு பொறுமை பறந்திருந்தது.

"ஆமா எப்போ பார்த்தாலும் ப்ராஜெக்ட் கம்பெனின்னு அதையே கட்டி அழுங்க.‌ எனக்கு கால் பண்ணாதிங்க" என்றவள் கோபமாக அழைப்பை துண்டித்திருந்தாள்.

கோபத்தில் விழிகள் கலங்க முகம் அத்தனையாய் சிவந்திருக்க முகத்தை மேஜை மேலிருந்த பையில் அழுத்தி கொள்ள,

"ஹாப்பி ஹாப்பி பர்த்டே டு மை ஜான்சி ராணி" என்ற வல்லபனது குரலில் படக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

எதிரில் அவன் தான் செல்வாவின் வல்லபன் சக்கரவர்த்தி தான் நின்றிருந்தான். முகத்தில் பொங்கி வழியும் சிரிப்பு.

பார்த்த நொடி விழிநீர் கன்னத்தை தொட முகத்தில் கோப ஜுவாலை விரவியது.

சட்டென்று கையில் கிடைத்த தண்ணீர் பொத்தலை தூக்கி அவன் மீது எரிந்திருந்தாள்.

அவளது தாக்குதலை எதிர்பாராதவன் திகைத்து பின் கைகளில் பிடித்திருந்தான்.

இன்னும் மனது ஆறாது மற்றொரு நோட்டையும் எடுத்து வீசினாள்.

அவள் வீச வீச ஒவ்வொன்றையும் பிடித்தவன் மேஜை மீது அடுக்கியிருந்தான்.

அவளருகில் இருந்த பொருட்கள் எல்லாம் தீர்ந்துவிட விழிகள் சுற்றும் முற்றும் தேடியது.

"அவ்ளோ தான் வேறெதுவும் இங்க இல்லை" என்றவன்,

"என்னை அடிச்சதும் மேடம் கோபம் போயிருச்சா?" என்று புன்னகையுடன் வினவியவாறு அருகில் வர,

"அங்கேயே நில்லுங்க பக்கத்துல வந்தா அவ்ளோ தான்" என்றவளுக்கு மனது ஆறவே இல்லை.

எத்தனை தூரம் வருத்தம் கவலை என‌ எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு இப்போது வந்து நிற்கிறான் வாழ்த்தை கூறி என கோபம் புசுபுசுவென வந்தது.

"அப்படி என்ன பண்ணுவீங்க மேடம்" என்று நெருங்கி வர,

"ப்ச் பக்கத்தில வராதிங்க" என்றவள் எழுந்திருந்தாள்.

"அப்படிதான் வருவேன்" என்றவன் இடையோடு சேர்த்து அவளை பிடிக்க,

"ப்ச் விடுடா விடு என்னை" என்க,

"டா…?" என்றவன் சுவாரசியமாக பார்க்க,

"ஆமாடா தான்" என்று அழுத்தி கூறினாள்.

"ஹ்ம்ம் சொல்லிக்கலாம் உனக்கு இல்லாத உரிமையா?" என்றவன், தனது மீசையால் அவளது கன்னத்தை உரச,

அதில் கூச்சத்தில் துள்ளி குதித்தவள் அவனை மேலும் முறைத்தாள்.

கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன், "டைம் ஆச்சு கிளாஸ்க்கு எல்லாரும் வந்திடுவாங்க. வா நாம வெளிய போகலாம்" என்று அவளது பையை எடுக்க,

"ம்ஹூம் நான் எங்கேயும் வரலை. என்னால உங்க இஷ்டத்துக்கு எல்லாம் வர முடியாது" என்று கைகளை கட்டி அழுத்தமாக நின்றாள்.

"நாம சண்டையை அப்புறம் பாத்துக்கலாம். வாடி எல்லாரும் வர்றதுக்குள்ள கிளம்பலாம்" என்று அவளது கையை பிடித்து இழுக்க, அவள் அசையாது நின்றாள்.

"ஊஃப்" என்று பெருமூச்சை வெளியிட்டவன் அவள் செவிக்கருகில் சென்று,

"இப்போ நீ வர்றியா இல்லை நான் தூக்கிட்டு போகவா? எனக்கொன்னும் தூக்கிட்டு போறதுல அப்ஜெக்ஷன் இல்லை. இன்னும் டூ மினிட்ஸ்ல இங்க இருந்து மூவ் ஆகுற" என்று சிரிப்புடன் அழுத்தமாக கூறிவிட்டு அவளது உடைமைகளை எடுத்து கொண்டு நடக்க,

'செய்தாலும் செய்துவிடுவான் எமகாதகன்' என்று மனதிற்குள் குமைந்தவள் வேகமான காலடிகளுடன் அவன் பின்னே சென்றாள்.

அவளது காலடி‌ ஓசையை உணர்ந்தவனது இதழ்களில் மென்னகை.

கொலுசுக்குள் வந்துவிடவா
நடக்கையில் சத்தமிடவா
அங்கேயே தங்கி விடவா? என்று வானொலியில் ஒலித்த பாடலுடன் சேர்ந்து முணுமுணுத்தவாறு மகிழுந்தை இயக்கி கொண்டிருந்தான் வல்லபன்.

அவனருகில் அமர்ந்திருந்த செல்வாவின் முகத்தில் இன்னும் கோபத்தின் சூடு குறையவில்லை.

வல்லபனின் வாகனம் ஒரு பெரிய உணவகத்தின் முன்பு நின்றது.

"ஜான்சி ராணி இறங்கு போகலாம்" என்றவனது வார்த்தைக்கு,

"ம்ஹூம் நான் வரமாட்டேன்" என்றாள் செல்வா.

"என்னடி உனக்கு வேணும்" என்றவன் பொறுமையாக வினவ,

"என் கேள்விக்கு பர்ஸ்ட் பதில் சொல்லுங்க" என்று முறைத்தபடி கூற,

"சொல்லு என்ன தெரியணும் உனக்கு" என்றவன் அவள் புறம் வாகாக திரும்பினான்.

"நேத்துல இருந்து விஷ் பண்ணாம எதுக்கு என்னை அல்லாடவிட்டிங்க" என்க,

"சாரிடி செல்லம். உனக்கு நேர்ல வந்து சர்ப்ரைஸ் பண்ணலாம்னு தான் மறந்துட்ட மாதிரி ஆக்ட் பண்ணேன்" என்று அவளது கைகளை பிடிக்க,

"நான் கேட்டேனா பொல்லாத சர்ப்ரைஸு எவ்ளோ பீல் பண்ணேன் தெரியுமா?" என்றவள் அவனது கைகளை தட்டிவிட்டாள்.

"கேட்காம செய்யிறது தான்டி சர்ப்ரைஸ்.‌ அதுவும் நான் ஆஃப்டர்நூன் கால் பண்ணும் போது ஒரு செகெண்ட் உன் முகத்தில வந்து போச்சே அந்த சந்தோஷம் ஒரு வித ஆர்வத்தோட‌ விஷ்ஷ எதிர்ப்பார்த்து என்கிட்ட பேசினியே அப்போ முகத்தில வந்து போன ஏக்கம் நான் விஷ் பண்ணலைன்னதும் சட்டுனு உன் முகம் வாடி நோஸ் அப்படியே லைட்டா ரெட்டிஷ்ஷா மாறி கண்ணெல்லாம் கண்ணீர் நிரம்பி உதடு துடிக்க அப்படியே அழுகையை கன்ட்ரோல் பண்ணிட்டு பேக் மேல சாஞ்சவ நான் வந்ததும் என்னை பார்த்து சட்டுனு வெளியே வந்துட்ட கண்ணீரை துடைக்காம கூட‌ என்னை இன்னும் கொஞ்சம் முறைச்சியே அப்போ பார்க்க எப்படி இருந்த தெரியுமா?" என்றவனது ஒவ்வொரு வார்த்தையிலும் விழிவிரித்து திகைத்து பார்த்திருந்தாள்.


'இத்தனை தூரம் நுணுக்கமாக தன்னை இவன் கவனித்தானா?' என்ற‌ எண்ணமே சிறிது லஜ்ஜையை உண்டு பண்ண கன்னத்தின் ஓரம் லேசாய் சிவப்பேறத் துவங்கியது.

"இதெல்லாம் விட இதோ என்னை பார்த்து பெருசா விரிஞ்சு பார்க்குதே இந்த கண்ணுதான் என்னை அப்படியே உள்ள இழுக்குதுடி" என்றவனது கரகரத்த குரல் உள்ளே என்னென்னவோ ரசாயன மாற்றத்தை உண்டு செய்ய,

சட்டென்று கதவை திறந்து கீழே இறங்கிவிட்டாள். என்னவோ மூச்சு மூட்டுவது போல தோன்ற ஆழ்ந்து மூச்சை வெளியிட்டவள் காரின் மறுபுறம் பார்த்தபடி நின்றிருந்தாள்.

காரின் மற்றொரு புறத்திலிருந்து இறங்கியவன், "என்ன கொடுத்த பதில் எல்லாம் போதுமா?" என்று இதழோரச் சிரிப்புடன் வினவ,

"போதும் போதும் வாங்க போகலாம்" என்று முன்னே திரும்பி நடந்தவள் இதழ்களுக்குள் எதையோ முணுமுணுக்க,

சட்டென்று அவளது கையைப் பிடித்து நிறுத்தியவன்,

"நீ உள்ளே போய் டேபிள் நம்பர் டென்ல உட்காரு நான் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்" என்றவன் மகிழுந்தை இயக்கி செல்ல, அவன் நிறுத்திவிட்டு வரும்வரை அதே இடத்தில் தான் இருந்தாள்.

அதே இடத்தில் அசையாது நின்றிருந்தவளை கண்டதும் அவனது இதழ்களிலும் மெலிதான கீற்றுப் புன்னகை.

அவனுக்குத் தெரியுமே தன்னவள் அங்கேயே தான் நின்றிருப்பாள் என்று.

வேக எட்டில் அவளை நெருங்கியவன் கைகளை பிடித்து கொள்ள இருவரும் உள்ளே சென்று மேஜை எண் பத்தில் அமர்ந்தனர்.

"இங்கே எதுக்கு அழைச்சிட்டு வந்திருக்கீங்க?" என்று இப்போது தான் நினைவு வந்தவளாக கேட்க,

"ஹ்ம்ம் இந்த ஹோட்டல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நல்லா இருக்கும்னு சொன்னாங்க அதான் சுத்தி பாத்திட்டு போலாம்னு வந்திருக்கேன்" என்றவன் சிரியாமல் கூற, அவள் ஏகமாக முறைத்தாள்.

"என்னடி முறைக்கிற உன் பர்த்டேவ செலிப்ரேட் பண்ணதான் வந்திருக்கோம்னு தெரிஞ்சு என்ன கேள்வி" என்று தானும் சவாலாக பார்க்க, அவள் இதழை சுழித்து முகம் திருப்பினாள்.

அதில் அவன் தான் சட்டென்று தடுமாறி போனான்.

"ஏய் பப்ளிக் ப்ளேஸ்ல என்னடி பண்ற?" என்றவனது கிசு கிசு குரலில் உள்ள பல வர்ணங்கள் வெடித்து சிதறியது.

மீண்டும் கூச்சம் வந்து தானாய் ஒட்டிக் கொள்ள முயன்று அவனை முறைத்தாள்.

அவன் மந்தகாச சிரிப்புடன் ஏதோ சொல்ல வர பணியாளர் ஒரு பெரிய தட்டை அவர்கள் முன் வைக்க இருவரும் அமைதியாகினர்.

பெரியதாக மூடி வைக்கப்பட்டிருந்த தட்டை செல்வா கேள்வியாகப் பார்க்க,

"ஹ்ம்ம் திறந்து பாருடி" என்று ஊக்கினான்.

கரங்கொண்டு அதனை திறந்தவளின் விழிகள் திகைப்பில் விரிந்தது.

காரணம் உள்ளே அவளுக்கு பிடித்த சாக்கோ ட்ரிஃப்பில் கேக் இருந்தது. அதுவும் அதில் 'ஹாப்பி பர்த்டே டூ மிஸஸ் வல்லபன் சக்கரவர்த்தி' என்று சிரிக்கும் பொம்மை இரண்டு நின்றது.

'மிஸஸ் வல்லபன் சக்கரவர்த்தி' என்றவள் திகைப்பில் வாய்விட்டே கேட்டுவிட,

"ஹ்ம்ம் மிஸஸ் வல்லபன் சக்கரவர்த்தி தான். பியூச்சர்ல ஆக தானே போற. அதான் மிஸஸ்னு போட சொன்னேன்" என்றவன் தோளை குலுக்க,

"அதுக்காக இப்படியா?" என்றவள் திகைப்பு மாறாது கேட்டாள்.

"இதுக்கு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற. என்னடி என்னை கழட்டிவிட்டுட்டு உங்கப்பா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இருக்கியா?" என்று அவளை சீண்ட சிரிப்புடன் கேட்க,

பட்டென்று அவனது தோளில் அடித்தவள், "ப்ச் என்ன பேச்சு பேசிறிங்க" என்று முறைத்து மீண்டும் மீண்டும் அடிக்க,

அவளது இரண்டு கைகளையும் ஒரு கையால் பிடித்தவன்,

"அப்புறமா என்னை அடிச்சிக்கலாம். கேக் மெல்ட்டாகுறதுக்கு முன்னாடி கட் பண்ணு" என்று கத்தியை எடுத்து நீட்ட,

"வர வர‌ உங்களுக்கு வாய் ரொம்ப ரொம்ப அதிகமாகிடுச்சு" என்று முறைத்தவள் கேக்கை வெட்ட துவங்க,

அதனை தன் அலைபேசியில் அழகாக சிறைப்பிடித்து கொண்டான்.

ஒரு சிறிய துண்டை எடுத்து அவனுக்கு ஊட்ட புன்னகையுடன் பெற்றுக் கொண்டவன் பாதியை அவளுக்கு திருப்பி ஊட்டினான்.

செல்வாவிற்கு அந்த பிறந்தநாள் அத்தனை தூரம் நிறைந்து போனது.

அவள் முகத்தினை நேசம் தததும்பும் விழிகளால் கண்டவன் தனது பையில் கைவிட்டு ஒரு சிறிய பெட்டியை எடுத்து அவள் முன் நீட்டினான்.

"என்ன சார் அடுத்தடுத்து சர்ப்ரைஸா கொடுக்கிறிங்க" என்றவள் சிரிப்புடன் வினவ,

"திறந்து பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுடி" என்றவன் அவள் கைகளில் பெட்டியை வைக்க,

"இவ்ளோ குட்டியா இருக்கு? என்ன இருக்கு உள்ள?" என்று ஆர்வத்துடன் பிரித்தாள்.

வல்லபன் தன்னவளது ஆர்வம் பொங்கும் முகத்தை தான் இமையாது பார்த்திருந்தான்.

பெட்டியை திறந்து உள்ளே இருந்த மோதிரத்தை கண்டு விழிகளை விரித்தாள்.

இரண்டு இதயங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்தது போல அழகாக இருந்தது அந்த மோதிரம்.

"வாவ் சுப்பரா இருக்கு" என்றவளது ஆர்ப்பரிப்பில்,

"பிடிச்சிருக்கா?" என்றான்.

"ஹ்ம்ம் ரொம்ப" என்று அழுத்தி கூறியவள்,

"சில்வரா?" என்க,

"வைட் கோல்ட்" என்றான்.

"வைட் கோல்ட் ரொம்ப காஸ்ட்லி?" என்றவள் மீண்டும் திகைக்க,

"கிஃப்ட்ட மட்டும் பாருடி. ரேட்டா பார்க்காத" என்றவனது முறைப்பில் அமைதியாகிவிட்டவள், கைகளை அவன் முன் நீட்டினாள்.

அதற்கான காரணம் புரிந்திருக்கும் புரியாத பாவனையில், "என்ன?" என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க,

"நந்திங்க். நானே போட்டுக்கிறேன்" என்றவள் மோதிரத்தை கையில் எடுக்க,

"நீயே போட்டுக்கிட்டா. அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?" என்றவன் சிரிப்புடன் அவளது விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு மென்மையாக இதழ் பதித்து,

"இது தான் நம்ம எங்கேஜ்மென்ட் ரிங். இனிமே யு ஆர் மைன்" என்று சிரித்தவாறு கூறினான்.

"ஹ்ம்ம் சரிதான்" என்று தலையசைத்தவள்,

"நான் உங்களுக்கு எங்கேஜ்மென்ட் ரிங் போடலையே" என்று தன் வலது கரத்தில் இருந்த மோதிரத்தை கழட்டி அவனுக்கு அணிவித்துவிட்டு,

"எங்கப்பா நான் ட்வெல்த்ல நல்ல மார்க் எடுத்ததுக்கு வாங்கி கொடுத்தது நான் இதை எப்பவுமே கழட்னது இல்லை. பத்திரமா வச்சிக்கோங்க" என்று இயம்ப,

"ஹ்ம்ம் வச்சிக்கிறேன்" என்று சம்மதமாக தலையசைத்தான்.

அதன் பிறகு இருவரும் மதிய உணவை அந்த உணவகத்திலே முடித்துவிட்டு மாலை நெருங்கும் சமயம் தான் கிளம்பினர்.

அவன் விடைபெறும் நேரம் இவளுக்கு வழக்கம் போல விழிகள் நிறைந்துவிட,

"இன்னும் கொஞ்ச நாள்தான்டி. தென் எப்பவுமே உன் கூட தான் இருப்பேன்" என்று ஆறுதல் கூறி சமாதானம் செய்து தான் விடைபெற்றான்.

மறக்க முடியாத பிறந்த நாளின் நிறைவு அவளது முகத்தில் பிரதிபலிக்க இதழில் உறைந்த புன்னகையுடனே வீட்டிற்கு சென்றாள்.





****************


 
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
ஹைத்ரபாத்தின் அந்த குடியிருப்பு வளாகமே கோலாகலமாக இருந்தது.

அங்காங்கு பல வண்ண நிறத்தில் ஒளிர்ந்த மின்விளக்குகள் அவ்விடத்தை ஜொலிக்க செய்தது.

மூன்று குடியிருப்பிற்கும் பொதுவான இடத்தில் பெரியதாக பந்தல் போடப்பட்டு நாற்காலிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர்.

சிறுவர்கள் ஆங்காங்கே ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர்.

இளம் வயது பெண்கள் அலங்காரங்களுடன் நின்று அலைபேசியில் விதவிதமான கோணங்களில் புகைப்படத்தை எடுத்து தள்ளினர்.

இன்று அந்த வளாகத்தின் அபார்ட்மெண்ட் டே கொண்டாடப்படுகிறது.

அதற்காகத்தான் இன்று இத்தனை கொண்டாட்டமும். வருடத்தில் ஒரு முறை அபார்ட்மெண்ட் டே கொண்டாடப்படுவது அங்கே வழக்கம்.

அங்கே பெரும்பாலும் தமிழ் குடும்பங்கள் வசிப்பதால் தமிழிலே பாடல் ஒலிக்கப்பட்டிருந்தது.

"எல்லாருக்கும் ஸ்டெப்ஸ் ஞாபகம் இருக்கா. இல்லை இன்னொரு டைம் ரிகர்செல் பண்ணிக்கலாமா?" என்று கேட்ட செல்வாவின் குரலில் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற பதட்டம் மிதமிஞ்சி இருந்தது.

"நோ மேம். வீ ஆர் ரெடி" என்று கோரஸாக பதில் வந்தது.

"கரெக்டா பண்ணிடுங்க. எதாவது டவுட்ஸ் இருந்தா இப்பவே கேளுங்க" என்று கூற, ஒருவருக்கும் சந்தேகம் இல்லை போலும் யாரும் எதுவும் கேட்கவில்லை.

"கோ-ஆர்டினேஷன் ரொம்ப முக்கியம். ஆடும் போது எதாவது ஸ்டெப் மறந்துட்டாலும் நெக்ஸ்ட் ஸ்டெப்க்கு எல்லாரோடயும் சேர்ந்து ஜாயிண்ட் ஆகிடுங்க" என்று செல்வா இயம்ப,

"ஓகே மேம்" என்று ஒருமித்த குரல் வந்தது.

"யாருக்காவது ஸ்டேஜ் ஃபியர் இருக்கா?" என்று கேட்டவளுக்குத்தான் என்னவோ தானே நடனம் ஆடப்போவது போல பதட்டம்.

"நோ மேம்" என்று மீண்டும் பதில் வந்தது.

குடியிருப்பில் விழா கொண்டாடப் போகிறார்கள் என்று கேள்விப்பட்ட போது இவளுக்கு இந்த எண்ணம் வரவில்லை.

ஆனால் பின்னாளில் விழாவில் ஆட்டம் பாட்டம் என்று கோலாகலமாக இருக்கும் என்று அறிந்த பிறகு தானும் தன்னுடைய மாணவர்கள் குழுவை வைத்து ஒரு நடனத்தை செய்ய வைக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

இருந்தும் வழக்கம் போல சிறிதான தயக்கம். வகுப்பு ஆரம்பித்து முழுதாக நான்கு மாதங்கள் தான் முடிந்திருக்கிறது. மாணவர்கள் எதாவது சொதப்பிவிட்டால் என்ன செய்வது என்று வேறு பயம்.

அவளது அச்சத்தை புரிந்து கொண்ட வல்லபன் தான் உன்னால் நிச்சயமாக முடியும். மாணவர்கள் நன்முறையில் ஆடுவார்கள். இது மட்டும் நல்லபடியாக முடிந்தால் இந்த குடியிருப்பு வளாகத்திலே செல்வா மிகவும் பிரபலமாகிவிடுவாள்.

மேலும் நிறைய மாணவர்கள் வந்து சேர உறுதியாக வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது என்று எடுத்து கூறி பயத்தை விலக்க செய்தான்.

செல்வா இதனை மாணவர்களிடம் கூற அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. மிகவும் ஆனந்தமாக பயிற்சியை துவங்கினர்.

தாங்களே கலந்துரையாடி ஒரு சில பாடல்களை தெரிவு செய்தனர். செல்வாவும் ஆர்வமாக அவர்களுக்கு பயிற்றுவித்தாள்.

இதோ விழா நாளும் வந்துவிட்டது. நிகழ்வின் தொடக்கமே இவர்களது குழு நடனம் தான்.

என்ன தான் தைரியமாக காண்பித்தாலும் என்னவோ தானே நடனம் புரிய போவது போல அவளுக்குள் ஆக பதட்டம்.

செல்வா மேலும் எதோ கேட்க வர,

"செல்வா போதும் அவங்க தைரியமாதான் இருக்காங்க. நீ தான் ரொம்ப நெர்வெஸ்ஸா இருக்க. தே வில் டூ" என்று வல்லபன் கூற,

"எனக்கு பயமா இருக்குங்க. நல்லபடியா ஆடிடுவாங்க தானே?" என்று அவன் கையை பிடித்தவள் தவிப்புடன் கேட்க,

ஒரு முறை அவளது கையை அழுத்தியவன்,

"எல்லாரும் ஸ்டேஜ்க்கிட்ட போங்க. பங்க்ஷன் ஸ்டார்ட் ஆக போகுது" என்றான்.

மாணவர்கள் வெளியே சென்றதும் மகளை அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தவன் அவளது கன்னத்தினை இரு கரங்களில் தாங்கி விழிகளுக்குள் உற்று நோக்கியவன்,

"எல்லாமே நல்லபடியா நடக்கும் ஜான்சி ராணி. நான் சொல்றேன்ல என்னை நம்பு" என்று கூற,

அவனது விழிகளுக்குள் தொலைந்தவள் தலை சம்மதமாக ஆடியது.

அவளது நெற்றியில் ஆதுரமாக இதழ்களை ஒற்றி எடுத்தவன்,

"வா போகலாம். பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகிடும்" என்க,

அவள் தான் ஏதோ மந்திரத்திற்கு கண்டுண்டவள் போல அவனோடு சென்றாள்.

மனைவி மகளுடன் முதல் இருக்கையிலே அமர்ந்து கொண்டான் வல்லபன்.

சில பல முன்னுரைகளுக்கு பிறகு செல்வாவின் தங்களது நடனத்தை துவங்கியது.

செல்வா வல்லபனது கையை பிடித்து கொள்ள அவனும் மனைவியை ஆதரவாக பற்றினான்.

மார்கழி திங்கள் அல்லவா?
மதி கொஞ்சும் நாள் அல்லவா? என்று பாடல் சத்தமாக ஒலிக்க,

மாணவர்கள் அதற்கு ஏற்றார் போல ஆட துவங்கினர்.

செல்வா பயந்ததை போல அல்லாது மாணவர்கள் மிகவும் நன்றாக ஒருமித்து நடனம் ஆடினர்.

முதலில் கவனிக்காது பேசியவர்களும் நடனத்தின் நளினத்தில் கவனிக்க துவங்கினர்.

பத்து நிமிடங்களில் நடனம் முடிவடைய பலத்த கரகோஷம் எழும்பியது.

அதன் ஓசையே நடனத்தின் தரத்தை பறைசாற்ற செல்வாவிற்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.

மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மாணவர்களை பாராட்ட அவர்கள்,

"எல்லாவற்றிற்கும் காரணம் தங்களது குரு தான்" என்று செல்வாவை காண்பித்தவிட,

தொகுப்பாளர், "மிஸஸ் செல்வ மீனாட்சி வல்லபன் சக்கரவர்த்தியை மேடைக்கு அழைக்கிறோம்" என்று அறிவித்திருந்தார்.

அவரது அறிவிப்பில் செல்வா திகைத்து விழித்து கணவனை பார்க்க,

"ஹ்ம்ம் போய்ட்டு வா. கூப்பிட்றாங்க பாரு" என்றிட,

"இல்லை எனக்கு ஒரு மாதிரி ஷையா இருக்கு. நீங்களும் கூட வர்றீங்களா?" என்று வினா தொடுத்தாள்.

"ம்ஹூம் இது உனக்கான மேடை அதுல நீ மட்டும் தான் உன் அடையாளத்தை காட்டணும். போய்ட்டு வா" என்று அழுத்தி கூற,

தயங்கியபடி மேடை ஏறியவளிடம் ஒலிவாங்கியை கையில் கொடுத்துவிட, அவளுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.

என்னவோ சொல்ல முடியாத அளவில்லா மகிழ்ச்சி பேச்சை தடை செய்துவிட்டது.

அவளுக்கான முதல் அங்கீகாரம் அவளால் மட்டுமே உருவாக்கப்பட்ட‌ ஒன்று நினைக்கும் போது உள்ளுக்குள் சிறிதான மென் சாரல்.

எல்லாவற்றிற்கும் முதல் காரணம் தன்னவன் தான் தோண்றிய கணம் இதழ்களில் புன்னகை பூத்தது.

ஒரு முறை அவனை நோக்கியவள் பின்னர், "இதில் தன்னுடைய பங்கு மிகவும் சிறியது தான். நன்முறையில் பயிற்சி பெற்று சிறப்பாக நடந்த மாணவர்களுக்கு முழு பாராட்டுதலும் சேரும்" என்று மாணவர்களை பாராட்டியவள் இறுதியில் 'தனக்கு இதில் உதவியாயிருந்த கணவனுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்' என்று கூறி இறங்கி வர மீண்டும் கர ஒலி எழும்பியது.

என்னவோ மனது அந்த விநாடி நிறைந்து போனது. எல்லாம் தன்னவனால் தான் என்று சிந்தை வர உள்ளமெங்கும் அவன் மீது அளவிட முடியாத நேசம் பொங்கியது.

தனக்கான ஒன்றை தான் தேடியதை இது தான் உன் பாதை என்று காண்பித்து அதில் பயணம் செய்ய உறுதுணையாக வந்தவனை இன்னுமின்னும் பிடித்தது.

ஏதோ இன்று மிகவும் அவளை வசீகரித்தான் நாயகன். அருகில் வந்த அமர்ந்தவளது பார்வை அவனையே தொட்டு மீண்டது அடிக்கடி.

"எந்த வாசல் வழி காதல்
நடந்து வரும் என்று
காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து
கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்…"

மனைவியின் கள்ளப் பார்வையை உணர்ந்தவன் சிரிப்புடன் திரும்பி, "என்ன"‌ என்று புருவத்தை உயர்த்த,

சட்டென்று முகம் சிவந்து விட ஒன்றுமில்லை என்று தலையசைத்தவள் பார்வையை மேடையில் பதித்தாள்.

அவனும் சிரிப்புடன் திரும்பினான்.

என்னதான் பார்வை வேறு இடத்தில் இருந்தாலும் சிந்தை எண்ணம் ஆவி அனைத்திலும் கணவனே நிறைந்து வழிந்தான்.

அழகான வசீகரிக்கும் சிரிப்பில் பெண்ணை பாடாய் படுத்தினான்.

அடுத்தடுத்து நடந்த நிகழ்வு எதுவும் சிந்தையில் ஏறவில்லை. அங்கு தான் மணவாளன் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டானே.

அனைத்து நிகழ்வுகளும் முடிவடையும் சமயம் இறுதியாக நமக்கு ஜோடி நடனம் புரிய போவது மிஸ்டர் அண்ட் மிஸஸ் வல்லபன் சக்கரவர்த்தி என்று அறிவிக்கப்பட,

முதலில் கவனியாது அசட்டையாக இருந்தவள் பின்னர் அதன் அர்த்தம் உணர்ந்து விழிகளை அதிகமாக விரித்து ஏகமாக அதிர்ந்து கணவனை பார்க்க,

அவனோ, "நான் தான் நேம் கொடுத்தேன்" என்று குறும்புச் சிரிப்புடன் கண்சிமிட்ட, இவளுக்கு ஒரு நொடி இதயம் நின்றே போனது.

இவள் பதில் அளிப்பதற்குள் இவர்கள் பெயரை பார்வையாளர்கள் கத்தி ஆர்ப்பரிக்க,

இவன் எழுந்து, "வா" எனும் விதமாக அவளுக்கு கையை நீட்டினான்.

"நான் எப்படி" என்றவளுக்கு வார்த்தை வர மறுத்தது.

"நான் இருக்கேன்ல வா" என்று கைப்பிடித்து அழைத்து செல்ல,

இவள் அச்சத்துடனே உடன் சென்றாள்.

மேடை நடுவில் இருவரும் நிற்க

"கனிமொழியே
என்னை கொன்று போகிறாய்
கடை விழியால்
என்னை தின்று போகிறாய்…"

என்று பாடல் தொடங்க அவளது கைகளை பிடித்து நடனம் ஆட துவங்கினான்.

செல்வாவிற்கு அத்தனை பேர் முன்பும் ஆட கூச்சமாக இருக்க, இவனோ அவளது கை பிடித்து இடை வளைத்து பொம்மை போல ஆட இவள் தான் அவன் கைப்பாவை ஆனாள்.

திடீரென வந்துவிடும் அவனது நெருக்கம் சடுதியில் முகத்தினை தீண்டும் அவனது மூச்சுக்காற்று என் என்னென்னவோ அவளை திண்டாட செய்தவன் தானும் அவளுள் மூழ்கி போனான்.

முதலில் தடுமாறியவள் பின்னர் அவனுக்கு ஈடு கொடுக்க இதழில் தவழும் புன்னகையும் முகத்தில் மின்னும் நேரத்துடன் ஆடி முடித்தவர்களை பெரிய கர ஓசை தான் நிகழ்விற்கு கொண்டு படக்கென்று விலகி நின்றனர்.

செல்வாவிற்கு நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை கூச்சம் பிடுங்கி திண்றது.

வல்லபன் அழகான சிரிப்புடன் நன்றி கூறி கீழிறங்க நிறைய நபர்கள் வந்து அவர்களை பாராட்டி சென்றனர்.

சிலர் இருவரது ஜோடி பொருத்தம் அத்தனை நன்றாக இருந்ததாக கூற இவளுக்கு தான் சிவந்த முகத்தை மறைக்க படாதபாடு பட்டுப் போனாள்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகும் செல்வாவிற்கு ஏதோ மிதப்பது போல தான் எண்ணம்.

அவன் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு அறைக்குள் ஓடியவள் உடைமாற்ற குளியலறை சென்றுவிட்டாள்.

உடைமாற்றிய பிறகும் வெகுநேரம் அவனை சந்திக்கும் திரணியற்று ஒரு வழியாக வெளியே வர அறையின் விளக்கு அணைக்கப்பட்டு இரவு விளக்கு மட்டும் எரிந்தது.

மகள் அருகில் இருந்த குட்டி மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

வல்லபன் அவளுக்கு மறுபுறம் திரும்பி படுத்திருக்க உறங்கிவிட்டான் போல என்று எண்ணியவள் பூனை நடையிட்டு மெத்தையில் ஏறியது தான் தெரியும் அடுத்த நொடி கணவனது மேலிருந்தாள்.

திடீரென நடந்தவிட்ட ஒன்றில் அவள் திகைத்து விழிக்க வெகு அருகில் இருந்த அவனது முகமும் முகத்தில் மோதிய சூடான மூச்சுக்காற்றும் அவளை பேசா மடந்தை ஆக்கியிருக்க மெதுவாக அவளது முகத்தில் ஊதி முகத்தில் இருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டவன் ஒரு விரலால் கன்னத்தை வருட இவளுக்கு முகம் சிவப்பேற துவங்கியது.

அதில் அவன் முகத்தில் ரசனை பெருக மெலிதாக இதழ்களால் சிவந்த பகுதியை தீண்டினான்.

இவளுக்குள் சிலிர்ப்பு இழையோட அவனை இறுகப்பற்றினாள்.

பஞ்சு போன்றிருந்த அவளது கன்னத்தில் ஆழமாய் இதழை புதைத்தவன் மெது மெதுவாக கழுத்தில் இருந்த பூனை முடிகளில் குட்டி குட்டி முத்தங்களை பதிக்க இவளது அடிவயிற்றில் சொல்ல முடியாத உணர்வு எழுந்து நின்றது.

கழுத்திலிருந்தவனது இதழ்கள் பதட்டத்தில் ஏறி இறங்கும் அவளது தொண்டை குழியில் சரணடைய இவளுக்கே உள்ளுக்குள் ஒன்று நழுவியது.

அதற்கு மேல் தாளமாட்டாதவள் சட்டென்று அவனை விலக்கி முகத்தை மறுபுறம் திருப்ப அவனது பார்வையில் விழுந்தது இதழ்களுக்கடியில் இருக்கும் குட்டி மச்சம்.

அவனுக்கு அவளிடம் மிகவும் பிடித்த ஒன்று அது தான். அவனை வசமிழக்க செய்யும் ஒன்று.

கன்னத்தில் மெதுவாக மீசையால் குறுகுறுப்பூட்டியவனது இதழ்கள் அந்த மச்சத்தில் பதியாமல் படிந்து மீள இவள் விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

அந்த மூடிய இமைகளின் மீது ஆழ்ந்து இதழ் பதித்தவன் நாசியிலும் இதழால் ஊர்வலம் நடத்தி துடிக்கும் அதரங்களில் வந்து நின்றான்.

விழிகளை நன்றாக மூடிவிட்டு துடிக்கும் இதழ்களுடன் தனக்குள் இருப்பவளை அவன் இமையாது பார்க்க அவனது அமைதியில் இவள் விழிகளை திறந்து பார்க்க அதற்காகவே காத்திருந்தவன் போல அவளது சம்மதத்தை எதிர்ப்பார்க்க,

இந்நொடியிலும் தனது சம்மதத்தை எதிர் நோக்கி நிற்பவன் மீது நேசம் பொங்கி வர நாணத்துடன் அவன் கழுத்தில் வளைவில் முகத்தை புதைத்து கொண்டாள்.

அவளது சம்மதம் கிடைத்த அடுத்த கணமே சுனாமியாய் அவளை அடித்து சென்றுவிட்டான்.

அவள் தடுமாறி தத்தளித்த கணங்களில் தாங்கி பிடித்தான்.

தனது காதலில் அவளை திளைக்க வைத்து மூழ்கடித்தான்.

முத்தத்தால் மூச்சு முட்ட செய்தான். அவளில் அமிழ்ந்து போனவன் தனக்குள் அவளை கரைய செய்தான்.

அவளுக்குள் உறைந்து போனவன் நேசத்தில் அவளை திணறடித்தான்.

அவனது அதிரடியில் நேசத்தில் முத்த யுத்தத்தில் ஆளுமையில் வசீகரத்தில் இவள் தான் கரைந்து மிதந்து உருகி போனாள். அவனிடம் உறைந்து போனாள்.

சட்டென்று மண்ணை தொடும் மழை துளி போல அவர்களை தீண்டாமல் தீண்டி மலர வைத்தது நேசம்…












 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Vallaban selva oda love moments vera level eppovumae athuvum avolo azhaga solli irundhiga rendu per oda love ah yum
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️வல்லபனின் செல்வா திரும்புறாள்
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Vallapan unnoda birthday surprise semma da🎂🤩🤩 enga selva tha ne wish panna feel pannida last ya semma surprise pa🥳🥳😍
Vallapan jansirani unga dance super unga love Vera level da 💝💝cute jansirani sikirama vanthuruva🤗🤗
 
Top