• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 17

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 17:


எந்தவித அழகியலின் ஒப்புமைக்குள்ளும் அடங்குவதில்லை இந்த முற்றுப்பெறா முடிவிலி பயணங்கள் அவனோடு மட்டும்...


"மச்சான் சாப்பிட வரலையா?" என்ற அஜயின் வினாவிற்கு,

"நீ போய் சாப்பிட்டு வா. நான் உன் தங்கச்சிய பார்த்திட்டு வர்றேன்" என்ற வல்லபன் செல்வாவின் வகுப்பறையை நோக்கி சென்றான்.

பிரிவு உபச்சார விழா முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க இன்னும் ஒன்றரை வாரங்களில் வல்லபனுக்கு தேர்வு இருந்தது.

வல்லபன் கூறியது போலவே இந்த ஒரு வாரமும் தினமும் வந்து அவளை பார்த்து பேசிவிட்டு மதிய உணவை அவளுடன் தான் உண்டான்.

இரவு வழக்கத்தை விட அதிக நேரம் அவளுடன் பேசினான்.

அது மதிய இடைவேளை என்பதால் எல்லோரும் உணவுன்ன சென்றிருந்தனர்.

வல்லபன் உள்ளே நுழைய மேஜை மேலே தலை சாய்த்து படுத்திருந்தவள் எழுந்து அவனை பார்த்துவிட்டு மீண்டும் படுத்து கொண்டாள்.

அவள் எப்போதும் இப்படி படுப்பவள் இல்லையே. துறுதுறுவென்று தானே இருப்பாள். முகம் வேறு சோர்வாக இருக்க அருகில் சென்றவன்,

"என்னடி ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?" என்று வினவ,

"ஒன்னுமில்லை என்னமோ டையர்டா இருக்கு" என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள,

சடுதியில் அனலடித்தது அவனுக்கு. அவள் உடல் சூட்டின் வெம்மையை உணர்ந்து அதிர்ந்தவன் நெற்றியை தொட்டு பார்த்துவிட்டு,

"என்னடா இப்படி கொதிக்கிது" என்று வினவ,

"லைட்டா தான் பீவரிஷ்ஷா இருக்கு. ஒரு பாரசிட்டமால் போட்டா சரியாகிடும்" என்று கூறியவள் அவனது தோளில் முகத்தை புதைக்க,

"ப்ச் எப்படி கொதிக்கிது லைட்டா பீவரிஷ்ஷா இருக்காம். நீ வா பர்ஸ்ட் நாம ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரலாம்" என்றான்.

"வேணாம். உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் வீட்டுக்கு போய்ட்டு பாத்துக்கிறேன். ஆல்ரெடி உங்களுக்கு படிக்க வேற டைமில்லை" என்று சுவாதீனமாக கூறியவளது குரலே உள்ளே சென்றிருந்தது.

"அடிச்சேன்னா வை. ஹாஸ்பிட்டல் போலாம்னா வீட்டுக்கு போய் பாத்துக்கிறாளாம்" என்று கோபத்தில் கூறியவன்,

"எழுந்திரு டாக்டரை பார்த்திட்டு வருவோம்" என்று அவளது கையை பிடித்து தூக்க,

அவளால் எழவே முடியவில்லை தள்ளாடினாள்.

சட்டென்று தாங்கி பிடித்தவன்,

"என்னடா ரொம்ப முடியலையா?" என்று வினவ,

அவன் தோள்களை பற்றி நின்றவளது விழிகளில் நீர் கசிந்தது.

அதில் பதறியவன், "ஏய் என்னடி பண்ணுது சொல்லு" என்று அவளது முகத்தை தட்ட,

"ம்ஹூம்…" என்று தலையசைத்தவள்,

"இன்னும் டூ வீக்ஸ் தான் இருக்கு" என்று உளரலாக கூறிவிட்டு மயங்கியிருந்தாள்.

அவளது மயக்கத்தில் முழுதாக பயந்து போனவன் அவளது இறுதி வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்து தான் இருந்தான்.

எல்லாம் ஒரு கணம் தான் மறுநொடியே அவளை அருகில் இருந்த மேஜை மேலே அமர வைத்துவிட்டு அஜயிடம் தனது மகிழுந்தை எடுத்து வர கூறியவன் வகுப்பறையின் பின்புறம் வழியே அவளை தூக்கி கொண்டு வெளியே சென்றிருந்தான்.

அடுத்த பத்து நிமிடத்தில் செல்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

வெறும் காய்ச்சலால் வந்த மயக்கம் தான் என்று மூளைக்கு தெரிந்தது. ஆனால் மனதிற்கு புரியவில்லை.

தன்னவளை நினைத்து அவளுடைய நிலையை நினைத்து உள்ளம் பதறியது.

அதுவும் அவள் இறுதியாக கூறிய 'இன்னும் டூ வீக்ஸ் தான் இருக்கு' என்ற வார்த்தைகள் தான் மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

அவளால் தன்னுடைய பிரிவை அத்தனை சுலபத்தில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று புரிகிறது.

இந்த ஒரு வாரமும் அவள் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே அமைதியாக இருந்தாள்.

நாட்கள் செல்ல செல்ல பழகிக் கொள்வாள் என்று எதிர்பார்க்க இப்படி மயங்கி விழும் அளவிற்கு வந்துவிட்டாளே என்று உள்ளம் வருந்தியது.

முதல் முறையாக படிக்கும் பிள்ளையிடம் காதலை கூறி மனதை கெடுத்துவிட்டோமோ? அவள் படித்து முடிக்கும் வரை காத்திருந்திருக்கலாமோ? என்று தோன்றியது.

வெளியே சற்று தளர்ந்து போய் தான் அமர்ந்திருந்தான்.

அஜய், "மச்சான் சாதாரண காய்ச்சல் தான் பயப்படாத" என்று கூற,

சரியென்பதாக தலையை மட்டும் அசைத்தான்.

மருத்துவர் வெளியே வந்து, "நார்மல் ஃபீவர் தான் பயப்பட்ற மாதிரி ஒன்னுமில்லை. அதோட மார்னிங் சாப்பிடாம இருந்திருக்காங்க அதான் மயங்கி விழுந்திருக்காங்க. ஒரு இன்ஜெக்சன் போட்டுட்டு ட்ரிப்ஸ் போட்ருக்கேன். கொஞ்ச நேரத்தில கண்முழிச்சிடுவாங்க" என்று கூற,

சரியென்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தான். மருத்துவர் கூறிய வார்த்தைகள் சொல்லவியலா நிம்மதியை பரிசளித்திருந்தது.

உள்ளே கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க அமைதியாக விழி மூடி படுத்திருந்தாள் செல்வ மீனாட்சி.

அவளது சோர்ந்த முகம் உள்ளுக்குள் என்னவோ செய்ய அருகில் சென்று அமர்ந்தவன் வலது கையை எடுத்து பிடித்து கன்னத்தில் வைத்து கொண்டான்.

இமைக்காமல் அவளையே பார்த்திருந்தவனது விழிகள் அவளது மூடியிருந்த கண்கள் நாசி காய்ந்திருந்த இதழ்களில் பயணமாகியது.

களைந்த ஓவியமாக தெரிந்தவளது தோற்றத்தில் இதழ்களில் மிகவும் சிறிய அளவில் மென்னகை தோன்றியது.

கூடவே அவளது இந்த அளப்பரிய நேசத்தினை கண்டு வியப்பு தான் பிறந்தது.

தனக்கு தான் முதலில் அவள் மேல் நேசம் துளிர்த்தது அதனை ஏற்று கொண்டவள் அதையெல்லாம் விட பல மடங்கு நேசத்தை தன் மீது பொழிவாள் என்று அவன் கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை.

தன்னுடைய பிரிவு இன்னும் தொடங்க கூட இல்லை அதற்கு முன்னரே இவளை இத்தனை தூரம் பாதிக்கிறதா?

புராணங்களில் எல்லாம் படிப்போமே தலைவனை காணாது தலைவி வாடி வதங்கிவிட்டாள் என்று.

அதே போல தான் இங்க வல்லபனது தலைவி வாடி வதங்கிய கொடி போல கிடந்தாள்.

இவளுடைய எல்லையில்லா நேசத்தை கண்டு வல்லபனுக்கு ஒரு புறம் கர்வமாக இருந்தாலும் மறுபுறம் வருத்தமாக இருந்தது.

எதேதோ சிந்தனையுடன் அவளருகே அமர்ந்திருக்க, அரை மணி நேரத்திற்கு பிறகு விழிகளை திறந்தாள் செல்வா.

வல்லபன் அமைதியாக அவளையோ பார்த்திருந்தான்.

இமைகளை மெல்லப் பிரித்தவள் சோம்பலான புன்னகையுடன்,

"சாரி ரொம்ப பயன்படுத்திட்டேனா?" என்று வினவ,

"ஹ்ம்ம்…" என்றவன் வேறு பேசவில்லை.

அதிலே அவன் கோபமாக இருக்கிறான் என்று புரிந்தது.

அவளுக்கு என்ன பேசுவதென தெரியவில்லை. அதுவும் தான் கடைசியாக கூறிய வார்த்தை நிச்சயமாக அவனை தாக்கியிருக்கும் என்று புரிந்து
அமைதியாக இருந்தாள்.

"காலையில சாப்பிட்டியா?" என்று அழுத்தமாக பதில் வந்தது.

"இ…இல்லை" என்று பதில் வர,

"ஏன் சாப்பிடலை?" என்று உடனடி கேள்வி பிறந்தது.

'ஏன் உனக்கு தெரியாதா?' என்று பதில் பார்வை பார்த்தவளின் விழிகள் ஏனோ கலங்கும் போல இருந்தது.

அதில் அவனது மொத்த கோபமும் வடிந்துவிட,

"ப்ச் என்னடி. நான் எவ்ளோ தடவை சொல்லிட்டேன். ஜெஸ்ட் டூ இயர்ஸ் வேகமா போய்டும்டா. நீ இதை பத்தியே நினைச்சு ஹெல்த்த ஸ்பாயில் பண்ணிக்காத" என்று பொறுமையாக கூற,

"ஹ்ம்ம்" என்றவள்,

"எனக்கு புரியிது இருந்தாலும் உள்ளுக்குள்ள உங்களை நினைச்ச நேரம் பாக்க முடியாது பேச முடியாதுனு நினைக்கும் போது என்னமோ கஷ்டமா இருக்கு" இருக்கு வருந்தி கூற,

அவளது கையை அழுத்தி பிடித்தவன்,

"நான் உனக்கு ஆல்ரெடி சொல்லிட்டேன் நம்ம காதல் நம்மள வாழ வைக்கணுமே தவிர வீழ வைக்க கூடாது. கொஞ்ச நாள் நாம நமக்கான பாதையில போலாம்டா. அப்புறம் கொஞ்ச நாள்ல நாம கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கை முழுதும் சேர்ந்து வாழலாம்டா" என்று பொறுமையாக எடுத்து கூற,

சம்மதமாக தலையசைத்தாள்.

"தலைய தலைய ஆட்டிட்டு அப்புறம் முகத்தை சோகமா வச்சிக்க வேண்டியது" என்றவனது கோபத்தில் ஏனோ சிரிப்பு வர சட்டென்று சிரித்துவிட்டாள்.

அதில் மேலும் முறைத்தவன், "சிரிக்காதடி" என்க,

அதிகமாக நகைத்தவள் அவனை நோக்கி ஒரு கையை உயர்த்தியவாறே,

"லவ் யூ…" என்க,

"ஒண்ணும் தேவையில்லை போடி" என்றவன் முறைக்க, அவள் அப்படியே சிரித்தபடி தான் அவனை பார்த்தாள்.

அந்த கள்ளமில்லா சிரிப்பில் அவனது கோபம் குறைந்ததோ.

நீட்டியபடி இருந்த கையில் முகத்தை வைத்து கொண்டவன்,

"இனிமே இப்படி செய்ய மாட்டேன். இரண்டு வருஷம் சீக்கிரமா போய்டும். அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று கூற,

திடீரென்ற மாறுதலில் நம்பாது பார்க்க,

"நிஜம்மா" என்றவளுக்கு தான் மயங்கும் நொடி தவித்து நின்றவனது முகம் தான் மனதில் வந்து போனது.

"நீங்க என்னை பத்தி கவலைப்படாம எக்ஸாம்க்கு படிங்க. நான் இனி எப்போதும் இப்படி செய்ய மாட்டேன். பார்க்கணும் போல இருந்தா வீடியோ கால் போட்றேன். இல்லைனா இந்தா இருக்கு ஹைத்ராபாத் கிளம்பி வந்திடுவேன்" என்றவளது பாவனையில்,

அவன் வியப்பில் புருவம் உயர்த்த, தானும் பதிலுக்கு ஒற்றை புருவத்தை உயர்த்தினாள்.

அதில் மயங்க துடித்த மனதை கட்டுப்படுத்தியவன்,

"நான் உனக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வர்றேன்" என்று எழுந்து கொண்டான்.

அவளும் அமைதியாக கண்மூடி சாய்ந்தமர்ந்தாள்.

செல்வாவிற்கு என்னவோ தான் அவனை மிகவும் கஷ்டப்படுத்துவது போல ஒரு எண்ணம் அவனது தவித்த முகத்தை கண்டு.

அவன் கூறியது போல வெறும் இரண்டு வருடங்கள் தான் வெகுவிரைவில் சென்றுவிடும் என்று தனக்கு தானே ஆறுதல் கூறி கொண்டாள்.

பழச்சாறு வாங்கி வந்து தானே அவளுக்கு புகட்டியவன் பின் மருத்துவர்களிடம் பேசி அவளை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றான்.

குளுக்கோஸ் ஏறியதில் சற்று தெம்புடன் தான் அமர்ந்திருந்தாள்.

அவள் வீடிருக்கும் தெருவிற்கு அருகே வாகனத்தை நிறுத்தியவன் திரும்பி,

"டாப்லெட்ஸ ஒழுங்கா சாப்பிடு. டைம்க்கு சாப்பாடு சாப்பிடு" என்று அறிவுரை கூற, தலையை தலையை உருட்டினாள்.

"இன்னொரு இம்பார்ட்டன்ட் திங்க் இப்போ தலையை தலையை உருட்டிட்டு நாளைக்கு அகெய்ன் வந்து கண்ணை கசக்க மாட்டியே?" என்று சந்தேகமாக வினவ,

"ம்ஹூம் ப்ராமிஸ்" என்று தலையில் கை வைக்க, அந்த பாவனையில் அவனுக்கு புன்னகை எழுந்தது.

"சரி பார்த்து போ" என்று மாறாத மென்னகையுடன் கூறியவன் அவள் வீட்டினுள் நுழையும் வரை பார்த்திருந்துவிட்டே கிளம்பினான்.


காதல் வந்து

தீண்டும் வரை
இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின்
எந்தத் துளி மழைத் துளி
காதலில் அது போல நான்

கலந்திட்டேன் காதலி…

*****************


எல்லாரும் கரெக்டான ஆர்டர்ல நில்லுங்க. பவி கோ டூ போர்த் லைன். நிஷா கம் டூ செகெண்ட் லைன்" என்று அங்கு உயரமும் குட்டையுமாக நின்றிருந்த குழந்தைகளை ஒழுங்குப்படுத்திய செல்வா,

"ஷால் வீ ஸ்டார்ட்?" என்று வினவ,

"எஸ் மேம்" என்று கோரஸாக குரல் வர,

மென்னகையுடன் அருகில் இருந்த ஒலிப்பெருக்கியில்,

மறைந்திருந்து பார்க்கும்
மர்மம் என்ன
அழகர் மலை அழகா…?
இந்த சிலை அழகா…? என்ற பாடலை ஒலிக்கவிட்டு வந்து நடுவில் நின்று கொண்டாள்.

பின்னர் நன்றாக கவனிக்கும் படி கூறிவிட்டு ஒரு கையை வலப்புறம் தூக்கி முகத்தையும் அதற்கு நேராக நோக்கி நிமிர்ந்து விழிகளில் அத்தனை பாவனையையும் உடன் அழகிய நளினத்துடன் ஆட துவங்க,

அங்கிருந்த பெண்கள் அனைவரும் மெய்மறந்து அவளது அழகிய நடனத்தை பார்க்கத் துவங்கினர்.

நவரசமும்
முகத்தில் நவரசமும்

மலர்ந்திருக்கும்
முகத்தில் நவரசமும்
செக்க சிவந்திருக்கும்
இதழில் கனி ரசமும்
கண்டு என்ற வரிகளில் நிச்சயமாக முகத்தில் நவரசத்தையும் செல்வா பூசிக் கொள்ள பார்ப்பவர்களுக்கு காண கண்ணிரெண்டு போதவில்லை.

இடை வளைந்து கைகளையும் கால்களையும் முன்னும் பின்னும் தாளத்திற்கேற்ப அவள் அசைத்த விதத்தில் அந்த அரங்கத்தின் வாயிலில் நின்று பார்த்து கொண்டிருந்த வல்லபனுக்கு தான் ஏதேதோ உள்ளுக்குள் செய்தது.

அவள் மறைந்திருந்து என்று ஆரம்பித்த போது கணவன் வந்துவிட்டான்.

அவளை காணாது தேடி வந்தவன் அவளில் அவளது நடனத்தில் லயித்துவிட்டான்.

விழியசைவும் அதற்கேற்ற இதழசைவும் அவனது இதயத்தை எகிறி குதிக்க வைக்க விழிகள் மனைவி மேல் ரசனை பொங்கிய பார்வை பார்க்க வைத்தது.

அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்தபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றவன் மனைவியின் பாவங்களில் ஆழ்ந்து போயிருந்தான்.

பார்ப்பவர் கண்களை கட்டிப்போடும் நடனமும் நளினமும் சர்வ நிச்சயமாக அவளிடம் இருந்தது.

நாதத்திலே
தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை
நான் மறந்தேன் என்றவள் முகத்தில் காண்பித்த நாணத்தில் இவன் தான் ஏதேதோ ஆகி பின்னர் சிரிப்புடன் தலையை கோதிக் கொண்டான்.

முகத்தில் மந்தகாச சிரிப்பு இதழோரம் குடியிருந்தது.


தூயனே மாலவா
மாயனே வேலவா என்னை
ஆளும் ஷண்முகா வா…? என்றவள் நிமிர்ந்து கை நீட்ட எதிரில் இருந்தவனை கண்டு அப்படியே ஒரு கணம் உறைந்து நின்றுவிட்டாள்.

மனது வேறு படபடவென அடித்து கொண்டது.

"என்னாச்சு வாட் ஹாப்பண்ட்?" என்ற சலசலப்பில் நினைவிற்கு வந்தவள் மீண்டும் ஆடத் துவங்க,

தன் மணாளன் தன்னை பார்க்கிறான் என்ற‌ எண்ணமே உள்ளுக்குள் நாணம் பொங்க பாடலோடு ஒன்ற இயலவில்லை.

மனதின் ஆர்ப்பரிப்பை முகத்தில் காண்பிக்காதிருக்க வெகுசிரமப்பட்டவள் சட்டென்று ஆடி முடித்திருந்தாள்.

அடுத்த கணமே அங்கு பலத்த கரகோஷம் எழுந்தது.

"மேம் சூப்பர் மேம் வேற லெவெல்" என்று மாணவிகள் பாராட்ட துவங்க, அவளது பார்வை முழுவதும் மன்னவனிடம் தான்.

இத்தனை தூரம் அவன் தன்னுடைய நடனத்தை கவனித்திருக்கிறான் என்பதே உள்ளுக்குள் பெரும் அவஸ்தையை வாரி வழங்கியது.

'இல்லை முதலில் நான் அவரை பார்க்கவில்லையே இப்போது தான் வந்திருப்பார்' என்று தனக்குத்தானே சமாதானம் கூறிவிட்டு மாணவிகளுக்கு நன்றி கூறினாள்.

இடையிடையே தன்னவனின் மீதும் பார்வை பதிந்தது.

இருந்த இடத்தைவிட்டு அசையாது இருந்தவன் இப்போது நடந்து அருகே வர இவளுக்குள் பதட்டம் அலைமோதியது.

அவளை தாண்டி மகளை அடைய மகள் தந்தையிடம், "ப்பா…" என்று சிரிப்புடன் தாவிவிட்டாள்.

மகளை ஏந்தியபடி வந்தவன், "நாங்க பிளாட்க்கு போறோம். நீ முடிச்சிட்டு வா" என்றவன் அவள் தலையசைப்பில் வெளியேறினான்.

அவன் நகர்ந்ததும் தான் இவளுக்கு இயல்பான மூச்சே வந்தது.

அவனருகாமையும் அவனுடைய இருப்பும் தன்னை பாதிப்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

மனது அவனையே வட்டமிட சந்தேகங்கள் கேட்ட மாணவிகளுக்கு பதிலை கூறியவள்,

"இன்று நேரமாகிவிட்டது மீதியை நாளை பார்க்கலாம்" என்று அவர்களை கிளம்ப கூறிவிட்டு ஒரு முறை அந்த அரங்கத்தை திரும்பி பார்த்தாள்.

கிட்டத்தட்ட நூறு பேர் ஒரே நேரத்தில் அங்கு நடனம் பயிலலாம் அத்தனை பெரிய அரங்கம் அது.

எல்லாம் அவளுடைய அடையாளம் அவளுக்காக உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு முறை இந்த அரங்கத்தை பார்க்கும் சமயமும் கணவன் மீது சொல்ல முடியாத உணர்வொன்று பொங்கி வரும்.

காரணம் அவன் தானே இதனை அவளுக்கு அமைத்து கொடுத்தது அதுவும் அத்தனை குறுகிய காலத்தில்.

அதுவும் தன்னவளின் சிறிய முகவாட்டத்தையும் தாள மாட்டாதவன் இதனை உடனடியாக செய்திருந்தான்.

யாருக்காகவோ எதற்காகவோ வேலை நடக்கிறது என்று இருந்தவளுக்கு அவன் அழைத்து சென்று காண்பிக்கும் வரை தெரியவில்லை அது தனக்காகத் தான் என்று.

அந்நொடி மனதில் சொல்ல முடியாத உவகை பொங்கி வர மன்னவனும் மனதிற்குள் நுழைந்திருந்தான்.

தனக்காகவா இத்தனையும் என்று எண்ணும் போதே தேனினும் இனிய தித்திப்பு.

மனது பார்வை ஆவி என‌ அனைத்தும் அவனை மட்டுமே அன்று முழுவதும் சுற்றி வந்தது.

தன்னால் முடியுமா இடையில் இத்தனை வருடங்கள் கடந்துவிட்டதே என்று தயங்கி தவித்து நின்ற போது ஆதரவாக கைப்பிடித்து உன்னால் முடியும் என்று ஊக்கமளித்தான்.

அது மட்டுமா அந்த பெரிய குடியிருப்பில் இருந்த நிறைய வீட்டு பிள்ளைகளை அவன் தான் அவளிடம் நடனம் கற்க அழைத்து வந்தான்.

இதோ இரண்டு மாதங்களாக அவள் நடன ஆசிரியராக அவளுக்கான அடையாளத்தை தடத்தை அங்கே பதித்திருந்தாள்.

பெரியதான காரணங்கள் ஏதுமில்லை. வீட்டில் அதியுடன் இருந்தவளுக்கு தினமும் பெரிதாக செய்ய வேலையின்றி வீட்டினருடன் பேசி பொழுதை கழிப்பதிலும் சலிப்பு வந்துவிட்டது.

என்னவோ வீட்டு வேலை செய்ய வரும் பெண்ணுக்கு கூட வேலை என்ற அடையாளம் இருந்தது.

தனக்கு மனைவி மகள் என்பதை தவிர்த்து வேறு என்ன பெரிதாக இருக்கிறது என்றெல்லாம் சிந்தனை தோன்றி வதைத்தது.

அது அவளிடமும் பிரதிபலிக்க கணவன் கண்டு கொண்டான்.

சொல்லத்தயங்கியவளிடம் நண்பனாக பேசி தெரிந்து கொண்டவன் பிறகு 'எதாவது செய்கிறேன்' என்று முடித்திருந்தான்.

ஏதாவது பணியை ஏற்பாடு செய்வான் என்று நினைத்திருந்தவளுக்கு இந்த நடன ஆசிரியை பணி சொல்ல முடியாத ஆச்சர்யத்தையும் நிறைவையும் வாரி வழங்கியது.

அதுமட்டுமின்றி அவன் இறுதியாக செய்த ஒரு செயலில் தான் அவள் மனதில் நங்கூரமிட்டுவிட்டான்.

வேறொன்றுமில்லை அந்த நடன வகுப்பறை ஆரம்பிக்க செய்த செலவெல்லாம் அவளுக்கு அவன் கொடுத்த கடன் போல அவள் தான் வகுப்பை சிறப்பாக நடத்தி அதில் வருமானத்தில் கடனை அடைக்க வேண்டும்.

அவளுக்கான அடையாளம் என்பது முற்றிலும் அவளால் தாங்க உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் அதன் பின்னணியில் யாருடைய நிழலும் இருக்க கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டதில் தான் பெண் வீழ்ந்து போனாள்.

அதுவும் நாளுக்கு நாள் தான் அவனது அன்பின் அக்கறையில் அமைதியான அணுகுமுறையில் சுகமாய் தொலைவதை அவளும் உணர்ந்திருந்தாள் தான்.

நடந்ததை நினைத்தபடியே உதட்டில் ஒட்டிய புன்னகையுடன் செல்வா உள்ளே நுழைய அங்கே மந்தகாச சிரிப்புடன் கூடாரத்தில் அமர்ந்திருந்தான் வல்லபன்.

அந்த சிரிப்பு எதற்காக என்று உணர்ந்தவளுக்கு சிறியதான லஜ்ஜை வந்து ஒட்டிக் கொள்ள கணவனை முறைத்தாள்.

அவன் முன்னிலையில் தன்னால் ஏனோ நடனமாட இயலாததால் இத்தனை நாட்கள் அவன் முன்னிலையில் ஆடுவதை தவிர்த்திருந்தாள்.

அவன் எத்தனையோ முறை கேட்டும் மறுத்துவிட்டிருந்தாள்.

அவளது முறைப்பில் அவனது சிரிப்பு பெரியதாகியது.

இவளுக்கு தான் கூச்சம் வந்து ஒட்டிக் கொள்ள,

"எப்போ வந்திங்க?" என்று வினவ,

"வீட்டுக்கா இப்போதான் வந்தேன்" என்று இதழ்மடித்த சிரிப்புடன் இயம்ப,

வேண்டுமென்றே செய்கிறான் என்று புரிந்து நாசி சிவக்க முறைத்தவள்,

"க்ளாஸ்க்கு எப்போ வந்திங்க?" என்க,

"ஓ… அதுவா?" என்று சிரிப்புடன் இழுத்தவன்,

"நீ மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னன்னு ஸ்டார்ட் பண்ணும்போதே வந்துட்டேன்" என்று கூற,

'முதலில் இருந்தே பார்த்துவிட்டாரா?' என்று தோன்ற அவன் முகம் காண முடியாது அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

இங்க இவனது முகமெங்கும் முத்தாய்ப்பாய் ஒரு சிரிப்பு.

கசகசவென வியர்த்து இருந்ததால் குளித்து ஒரு இலகு இரவு உடைக்கு மாறியவள் வெளியே வர

தந்தையும் மகளும் அமர்ந்து காஃபியை அருந்தி கொண்டிருந்தனர்.

செல்வாவை கண்டதும், "உனக்கும் சேர்த்து தான் போட்ருக்கேன்" என்று ஒரு குவளையை அவள் புறம் தள்ள,

அவனை பார்க்காது எடுத்தவள் குனிந்தபடியே பருக சிரித்தபடியே விழியால் அவனும் அவளைத்தான் பருகி கொண்டிருந்தான்.

இடையில் மகள் ஏதோ கேள்விக் கேட்க பதில் கூறியவன் சிரிப்புடன் மகளது கன்னத்தில் முத்தமிட,

"ப்பா அம்மாக்கு" என்று அதியின் வார்த்தையில் குடித்து கொண்டிருந்த காஃபி புரையேற இருவரையும் விழிவிரித்து பார்த்தாள்.

அவனோ விஷமச் சிரிப்புடன் செவ்வாவை பார்த்தபடியே, "அம்மாக்கு என்ன?" என்று வினா தொடுக்க,

"முத்தாப்பா அம்மாக்கு முத்தா" என்று கூற,

"ஹ்ம்ம் குடுத்திரலாமே" என்று சிரிப்புடன் மனைவியை கண்டான்.

அவளோ சிறிது சிறிதாக கன்னம் சிவப்பேற கணவனை முறைத்தாள்.

மகள், "ப்பா கொதுப்பா" என்று ஊக்குவிக்க,

"கொடுக்கிறேன்டா செல்லம்" என்று மகளை உச்சி முகர்ந்தவன் மனைவியை பார்த்து கண்ணடிக்க,

அவள் சட்டென்று எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். செல்லும் முன் கணவனுக்கு ஒரு முறைப்பை வேறு பரிசளித்திருந்தாள்.

மனைவியின் கோபத்திலும் திகைப்பிலும் மணாளனது முகத்தில் அமர்த்தலான புன்னகை.

இங்கு சமையலறையில் நின்றிருந்தவளது முகமெங்கும் தேன்மழை சாரலாய் புன்னகை பூத்தது.

பிடிக்குதே திரும்ப

திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப
திரும்ப உன்னை
எதற்கு உன்னை
பிடித்ததென்று
தெரியவில்லையே
தெரிந்துகொள்ள

துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே…!



 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Selva indha alavuku vallaba mela love vachi irundha la ipadi fever vandhu mayangura alavuku
Vallaba selva kaga indha alavuku parthu parthu seiyuthu irukan rendu perumae oruthar innoruthar mela extreme love ah vachi irukaga
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Selva two years thaana sikirama poedum athuku epadi sapidama iruthu health ya spoil pannuvaga la 😟😟vallpan kuda fllife fulla irugalam🤩🤩 unaku fever nu sonnathum bayathudan 🥺🥺
Selva dance teacher vallapa ne great 😍😍avaluku oru identity ya kuduthu Iruka enna oru love aathi kutty ne pesurathu alagu tha 💖💖💖💖
 
Top