• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 14

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 14:

சிறிது சிறிதாய்
துளிர்விடும் நேச
மொட்டுகளின் காரணம்
மன்னவன் காலடியில் சரணடைவதற்காக தானோ…?


அரக்கில் தங்க நிற ஜரிகை வைத்த பட்டுப்புடவையில் அதற்கேற்ற தங்கை அணிகலன்களுடன் முகத்தில் எப்போதும் வீற்றிருக்கும் புன்னகையுடன் பார்ப்பவர்களின் விழிகளை நிறைத்தாள் முத்தாளம்மன்.

அன்று சனிக்கிழமை ஆதலால் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

முகம் நிறைந்த புன்னகையுடன் இருந்தவளை அகத்தில் நிரப்பிக் கொண்டு விழிகளை மூடி வேண்டிக் கொண்டாள் செல்வ மீனாட்சி.

அருகில் அவளது குடும்ப‌‌ உறுப்பினர்கள் நின்று அம்மனை தரிசித்திருந்தனர்.

இன்று ராமநாதனுக்கும் வேதவள்ளிக்கும் திருமண நாள். அதன் பொருட்டே குடும்பம் சகிதமாக கோவிலுக்கு வந்திருந்தனர்.

விழிகளை மூடி நின்றவள் மனதிற்குள் குடும்பத்தினருக்காக வேண்டிவிட்டு இறுதியில் வல்லபனோடான தனது வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும் என்று வேண்டுதல் வைத்து விழி திறக்க,

உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன் என்று அலைபேசியின் கானா இசைத்தது.

தீபாராதனையை கண்களில் ஒற்றிவிட்டு அலைபேசியை எடுத்து பார்க்க அழைத்தது அவளது எண்ணங்களின் மன்னவன் தான்.

அழைப்பை ஏற்க செல்ல,

வேதவள்ளி, "செல்வா கோவில்ல வந்து‌ என்ன போன்" என்று கடிந்தார்.

"ம்மா ப்ரெண்ட் தான் மா. ஒரு டூ மினிட்ஸ் வந்திட்றேன்" என்று கூறியவள் அழைப்பு உயிரை துறக்கும் இறுதி நொடியில் ஏற்று காதில் பொருத்தி,

"சொல்லுங்க. என்ன இவ்ளோ காலையில?" என்று கேட்க,

"நத்திங். பெருசா ஒன்னுமில்லை உன்கிட்ட பேசணும் போல இருந்திச்சு அதான் பண்ணேன்" என்றவன்,

"ஏன் நான் பண்ண‌ கூடாதா?" என்று அவளை சீண்ட,

"பண்ணலாமே தாரளமா பண்ணலாம். ஒரு ஒன் ஹவர் கழிச்சு பண்ணா எவ்ளோ நேரம் வேணா பேசலாம்" என்று சிரிப்புடன் மொழிந்தாள்.

"ஏன் மேடம் இப்போ என்ன பண்றீங்க?" என்று வினா எழுப்பவியவனிடம்,

"இன்னைக்கு உங்க அத்தைக்கும் மாமாக்கும் ஆன்னிவர்சரி அதான் குடும்பத்தோட கோவிலுக்கு வந்திருக்கோம். நான் வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணவா? இப்போ அட்டென்ட் பண்ணதுக்கே உங்க அத்தை திட்டுனாங்க" என்று கூற,

"ஓ…" என்று இழுத்தவன்,

"எந்த கோவில்" என்று வினவினான்.

"இங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்க முத்தாளம்மன் கோவில்" என்று பதிலளிக்க,

"ஹ்ம்ம் ஓகே" என்றவன் அழைப்பை துண்டித்துவிட, அவளும் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாள்.

அம்மனை வணங்கிவிட்டு கோவிலில் இருக்கும் மற்ற தெய்வங்களை வணங்கிவிட்டு பிரகாரத்தை சுற்றிவிட்டு வந்து எல்லோரும் ஒரு ஓரத்தில் அமர்ந்தனர்.

வேதவள்ளி, "நேத்துதான் கல்யாணம் ஆன மாதிரி இருக்கு அதுக்குள்ளயும் இருபத்தஞ்சு வருஷம் ஓடிருச்சு" என்று வேதவள்ளி கூற,

"ஆனாலும் உனக்கு ஆசை தான் மா. கல்யாணம் ஆகி முழுசா இருபத்தஞ்சு வருஷமாகிடுச்சு. இன்னும் கொஞ்ச வருஷத்துல தாத்தா பாட்டி வேற ஆகிடுவிங்க. இதுல கொஞ்ச வயசு மாதிரி நேத்து தான் கல்யாணம் ஆன மாதிரி இருக்குனு உருட்டிட்டு இருக்க" என்று தாயை வார,

"ஹ்ம்ம் கரெக்டா சொன்ன செல்வா" தியாகு கூற, இருவரும் கையை அடித்து கொண்டனர்.

"ப்ச் சும்மா இருங்கடா. இங்க வந்தும் உங்க வாயை சும்மா இருக்காதா?" என்று வேதவள்ளி முறைக்க,

"நான் சும்மாதான் மா இருந்தேன். அண்ணா தான் காலகாலத்துல மகனுக்கு கல்யாணம் பண்றதை விட்டுட்டு‌ உங்க கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருக்கிங்கன்னு அண்ணா தான் என்னை கேட்க சொன்னான்" என்று தியாகுவை கோர்த்துவிட்டவள் வினிதாவுடன் கையை அடித்து கொள்ள,

அதிர்ந்து நெஞ்சில் கை வைந்த தியாகு, "யார் யாரோ தங்கை என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு" என வராத கண்ணீரை துடைக்க,

செல்வாவும் வினிதாவும் பொங்கி சிரித்தனர்.

இவர்களது அலப்பறையில் வேதவள்ளிக்கே சிரிப்பு வந்துவிட,

"ப்ச் உங்க சேட்டை எல்லாம் வீட்ல போய் வச்சுக்கோங்க. உங்க சத்தத்துல எல்லாரும் திரும்பி பாக்குறாங்க பாரு" அதட்ட,

ராமநாதனும், "கோவில்ல வந்து சத்தம் போட்டு மத்தவங்களை தொந்திரவு பண்ணாதிங்க" என்று கூறிய பிறகு தான் அமைதியாகினர்.

பவி, "கிளம்பலாமா?" என்று கேட்க,

ராமநாதன், "என்னைக்காவது ஒரு நாள் தானே எல்லாரும் சேர்ந்து வெளியே வர்றோம். கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்" என்றிட, மற்றவர்களும் சம்மதமாக தலையசைத்தனர்.

தியாகு மற்றும் செல்வா இருவரும் தங்களுக்குள் பேசிய படி இருக்க, மீண்டும் செல்வாவின் அலைபேசி இசைக்க, எடுத்து பார்க்க அழைப்பது வல்லபன் தான்.

'இப்போது தானே கூறிவிட்டு வைத்தேன். மீண்டும் அழைக்கிறாரே என்னவாக இருக்கும்?' என்று சிந்தித்தவாறு திரையை பார்க்க,

"யாரு…?" என்று வினிதா வினவ,

"பானு தான் கால் பண்றா" என்றவள் தாயின் முறைப்பை கண்டும்காணாதது போல நகர்ந்து அழைப்பை ஏற்று,

"இப்போதானே சொல்லிட்டு வந்தேன் கோவில்ல இருக்கேன்னு. எதுவும் எமெர்ஜென்சியா?" என்று எடுத்த எடுப்பில் வினவினாள்.

"சே சே எந்த அவசரமும் இல்லை. அகெய்ன் சும்மா தான் கால் பண்ணேன்" என்று சிரித்தபடியே கூற,

"வாட் சும்மாவா? இங்க உங்க மாமியார் என்ன கண்ணால எரிச்சிடும் போல. நீங்க என்னன்னா சும்மா கால் பண்ணேன்னு சொல்றிங்க" என்றவள் பொரியத் துவங்க, லேசாக நாசியின் நுனி சிவக்க துவங்கியது.

அவளுக்கு எதிர்புறமிருந்து அவளது முக பாவனைகளைக் கண்டவனுக்கு இதழ்கள் புன்னகையில் நெளிந்தது.

அதுவும் அந்த சிவந்த நாசி என்னவோ நேரிலே அவன் இருப்பது போல நடுவிரலால் மூக்கு கண்ணாடியை ஏற்றிவிட்டு பேசிய விதம் தோளில் அங்காங்கே பறந்தபடி வழிந்த சிகை மறுபுறம் தோளில் பாந்தமாய் தொங்கிய கருநீல நிற துப்பட்டா என்று யாவுமே அவனை ரசிகர்கனாக்கியது.

"உன் வாய்ஸ் கேக்கணும் போல இருந்துச்சு ஜான்சிராணி" என்று மேலும் அவளை சீண்டும் பொருட்டு வினவ,

"ப்ச் டெய்லியும் பாத்துட்டு தானே இருக்கோம் வாரத்தில ஒரு நாள் தான் லீவ் வருது அதுக்கு இப்படியா?" என்று சிணுங்கியபடி வினவியவளது இதழோரம் சிரிப்பில் மிளிர,

இவனுக்கு ரசனை ஊற்றாய் பெருகியது.

'ச்சு கோவில்ல வந்து என்னடா பண்ணிட்டு இருக்க' என்று தன்னை தானே கடிந்தவன் அவளருகே செல்ல,

"நான் அப்புறமா பேசுறேனே" என்றவளின் கொஞ்சல் குரலில் கரைந்த மனதுடன்,

"நான் இங்க இருக்கேன் நீ யார்க்கிட்ட பேசிட்டு இருக்க?" என்று காதருகே வினவ,

இவள் அதிர்ச்சியில் ஒரு நொடி துடிப்பை நிறுத்திய இதயத்துடன் விழிகளை விரித்து பார்க்க,

நிச்சயமாக அந்த விழிகளுக்குள் வீழ்ந்து தான் போனான் நாயகன்.

மேலும் அவள் திகைத்த தோற்றம் சிரிப்பை ஜனிக்க செய்ய இரு விரல்களால் வாயை மூடும்படி சைககை செய்ய, இதழ்கள் சட்டென்று மூடிக் கொண்டது.

அவனது வரவை இன்னும் நம்பமாட்டாதவள் கிள்ளிவிட்டு வலிப்பதை உறுதி செய்த பின்னர்,

"நீங்க எதுக்கு இங்க வந்திங்க?" என வினவியவள் வீட்டினர் பார்த்துவிடுவார்களோ என்று அஞ்சி எட்டி பார்த்தபடி வினா எழுப்பினாள்.

"சும்மாதான்" என்றவன் இதழ்மடித்த சிரிப்புடன் இயம்ப,

"ப்ச்" என்று அவனை முறைத்தவள் வீட்டினரை எட்டி பார்த்துவிட்டு,

"இந்த சைடு தள்ளி நில்லுங்க" என்றபடி தானும் தள்ளி நிற்க,

அவன் அசையாது ஊன்றி நின்று கொண்டான்.

அதில் மீண்டும் நாசி நுனி சிவக்க,

"வர வர ரொம்ப பண்றிங்க" என்று அலுத்தவள் அவன் கையை பிடித்து சடுதியில் இழுத்துவிட்டாள்.

அவனும் அவளது இழுப்பிற்கு வந்து நின்று,

"ஏன் இப்படி பயப்பட்ற ஜான்சிராணி. இவ்ளோ தூரம் வந்திட்டு அத்தை, மாமா எல்லாரையும் பார்க்காம எப்படி போறது. வா வந்து இன்ட்ரெடியூஸ் பண்ணி வை" என்று அவளது கரத்தை பிடிக்க,

ஒரு கணம் திகைத்தவள், "உங்களுக்கு எது எதுல விளையாட்றதுனு விவஸ்தையே இல்லையா? கையை விடுங்க யாராவது பார்த்திட போறாங்க" என்று கூறி முடிக்கையில்,

"செல்வா இன்னும் என்ன பண்ற?" என்றவாறு வந்திருந்தார் ராமநாதன்.

செல்வாவிற்கு ஒரு விநாடி இதயம் உறைந்துவிட்டது.

"உன்னை தான் கேக்குறேன் தனியா நின்னு என்ன பண்ற?" என்று வினவிய போதுதான் சுயத்தை அடைந்தவள் அருகில் இருந்தவனை காணாது நிம்மதி மூச்சை விட்டுவிட்டு,

"பானு கால் பண்ணாப்பா அவகிட்ட தான் பேசிட்டு இருந்தேன்" என்று சமாளித்தாள்.

"சரி பேசிட்டியா வா போகலாம்" என்றவரிடம்,

"நீங்க போங்கப்பா நான் பிள்ளையார சரியா கும்பிடலை. கும்பிட்டு வர்றேன்" என்று பிள்ளையாரை நோக்கி சென்றாள்.

ராமநாதன் தலை மறைந்ததும், 'அதற்குள் எங்கே சென்றுவிட்டார்' என நினைத்தபடி அவனை தேட,

"யாரை தேடுற ஜான்சி ராணி" என்று அவள் பின்னாலிலிருந்து குரல் கொடுத்தான்.

அதில் மீண்டும் அதிர்ந்தவள் திரும்பி அவனை முறைத்து,

"கொஞ்ச நேரத்துல அப்பா பாத்துட்டாரோன்னு என் உயிரே போய்டுச்சு. பர்ஸ்ட் நீங்க கிளம்புங்க" என்க,

"ஹ்ம்ம் போறேன்" என்றவன் திரும்பி சென்றான்.

அவள் ஆசுவாசமாக மூச்சுவிட்ட கணம் சடுதியில் திரும்பியவன்,

"ஜான்சி ராணி வந்தது வந்துட்டோம். பேசாம கல்யாணம் பண்ணிட்டு போய்டலாமா?" என்று குறுஞ்சிரிப்புடன் கண்சிமிட்டிவிட்டு செல்ல,

இங்க அவனது கூற்றில் இவள் தான் திகைத்து விழித்தாள்.


யாவும் நீயாய் மாறிப்
போக நானும் நான்
இல்லையே மேலும் மேலும்
கூடும்
காதல் நீங்கினால் தொல்லையே தெளிவாகச் சொன்னால்
தொலைந்தேனே உன்னால்…

 
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மாடர்ன் இன்ஃபோ டெக் என்று பெரியதாக பெயர் பலகையை தாங்கியிருந்த கண்ணாடி கட்டிடத்தின் முன்பு நின்றது அந்த உயர் ரக ஜாகுவார்.

முன்புறத்திலிருந்து இறங்கிய வல்லபன் மகளை கையில் தூக்கி கொண்டு,

"வா செல்வா" என்று மனையாளை அழைக்க,

மகிழுந்திலிருந்து இறங்கியவளின் விழிகள் வியப்புடன் அந்த கட்டிடத்தின் மேல் பதிந்தது.

அவளுக்கு ஏற்கனவே நிச்சயமாக வல்லபனுடைய நிறுவனம் பெரியதாக இருக்கும் என்று யூகம் இருந்தததனால் அவள் பெரியதாக அதிரவில்லை.

இருந்தும் அந்த உயர்ந்த கட்டிடம் சிறிது பிரம்மிப்பை கொடுத்தது தான்.

"என்ன இங்கயே நின்னுட்ட. வா உள்ள போகலாம்" என்றவனது கூற்றில் சம்மதமாக தலையசைத்தவள் அவன் பின்னோடு செல்ல,

"வெல்கம் சார் வெல்கம் மேம்" என்று முகம் முழுவதும் புன்னகையுடன் நின்றிருந்தான் பரத் வல்லபனின் காரியதரிசி.

அதனை தலையசைத்து பெற்று கொண்டவன் உள்ளே நுழைய வரவேற்பாளினி முதற் கொண்டு எல்லோரும் எழுந்து காலை வணக்கத்தை தெரிவிக்க,

தலையசைத்தபடி நடந்தவனின் உடல்மொழியில் அப்படி ஒரு மாற்றம். செல்வாவும் அதனை கவனித்தாள்.

"என்னோட கேபின் போர்த் ப்ளோர்ல இருக்கு" என்று அவளிடம் தெரிவித்தவாறு வல்லபன் மின்தூக்கியை நோக்கி செல்ல,
அவளும் சென்றாள்.

மூவரும் நான்காவது தளத்தை அடைய அங்கேயும் சிலர், "வெல்கம் சார். வெல்கம் மேம்" என்று கூற, சிறு கீற்றாய் புன்னகையுடன் கடந்தவன் தனது அறைக்குள் நுழைந்ததும்,

"செல்வா எப்படி இருக்கு நம்ம ஆபிஸ்" என்று கூற,

ஏதோ சிந்தனையில் இருந்தவள்,

"ஆங்" என்று திகைத்து விழிக்க, அவனிதழ்களில் மென்னகை.

"என்ன முழிக்கிற?" என்று சிரிப்புடன் வினவ,

"சாரி என்ன கேட்டிங்க?" என்று வினவினாள்.

"ஆபிஸ் எப்படி இருக்குனு கேட்டேன்?" என்று மீண்டும் வினவ,

"ஹான் நல்லாயிருக்கு" என்று பதிலளித்தவள் அந்த அறையை சுற்றி பார்த்தாள்.

"உட்காரு ஏன் நிக்கிற" என்றவன் தானும் மகளை மேஜை மேல் அமர வைத்துவிட்டு அமர்ந்தான்.

விழிகளை சுழலவிட்டபடியே அவள் அமர,

"என்ன மேடம்க்கு நான் என்ன வொர்க் பண்றேன்னு தெரிஞ்சிடுச்சா?" என்று கீற்று புன்னகையுடன் வினா எழுப்ப,

"ஹ்ம்ம்" என்று வேகமாக தலையசைத்தாள்.

அவள் வேகத்தில் இவனுக்கு இதழ்கடை சிரிப்பில் துடித்தது.

ஏற்கனவே அவனை விமான நிலையத்தில் இதனை பற்றி பேசி தான் காயப்படுத்திவிட்டோம் இனியும் ஏதும் பேசிவிட கூடாது என்று தான் வேகமாக தலையசைத்தாள். இது வல்லபனுக்கும் தெரிந்தது.

"அப்புறம் என்ன குடிக்கிற. ஜூஸ் எதுவும் எடுத்துட்டு வர சொல்லவா?" என்று வினவ,

"இல்லை வேண்டாம்" என்று தலையசைத்தாள்.

மகளிடம், "குட்டிம்மாக்கு பால் வேணுமா?" என்று மகளிடம் வினா எழுப்ப,

"வேதாம்பா" என்று தலையை இடம் வலமாக அசைக்க, அவளது இரட்டை குடுமி ஆடியது.

வல்லபனுக்கு மகளின் செயலில் புன்னகை எழ,

"க்யூட் குட்டிம்மா" என்று அவளது தலையை கலைத்துவிட்டான்.

தந்தைக்கும் மகளுக்கும் இடையில் வழக்கம் போல பார்வையாளராகி பார்த்தாள்.

"எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. நீ இங்கேயே உட்கார்ந்து இருக்கியா? இல்லை ஆபிஸ்ல எல்லா ப்ளோரையும் பார்த்திட்டு வர்றியா?" என்று வினா தொடுக்க,

"இங்கேயே இருக்கேன்" என்றாள்.

"சரி சும்மா இருந்தா போரடிக்கும் இது நம்ம கம்பெனியோட ப்ரீவியஸ் ரெக்கார்ட்ஸ் படிச்சு பாரு" என்று ஒரு கோப்பை அவளிடம் நீட்டினான்.

ஆர்வமாக தலையசைத்து வாங்கியவள் அதனை திறந்து பார்க்க அதில் இருந்தது ஒன்றுமே புரியவில்லை.

இரண்டாம் ஆண்டு வரை படித்தது நினைவில் இருந்தாலும் படித்த ஏதும் அவ்வளாக ஞாபகத்தில் இல்லை.

இதில் இதனை எப்படி புரிந்து கொள்வது என்று திகைத்தவள் அதன் பக்கத்தை புரட்ட தலை சுற்றியது.

'ப்ச் இதுக்கு ஆபிஸயாவது சுத்தி பார்க்க போயிருக்கலாம்' என்று மனதிற்குள் சலித்து கொள்ள,

அவளது மனதை படித்தவன் போல,

"போரடிக்கிதா செல்வா. ரொம்ப போரிங்கா இருந்தா நான் ஒரு ஸ்டாஃப்பை வர சொல்றேன் அவங்களோட போய் ஆபிஸ பாக்கிறியா?" என்று கேட்க,

"ஹ்ம்ம் பாக்குறேன்" என்றவள் சடுதியில் எழுந்து கொள்ள,

அவளது செயலில் சிரிப்பு வர சத்தமாக சிரித்துவிட்டான்.

அப்போது தான் அவளுக்கும் தான் இத்தனை வேகமாக செயல்பட்டிருக்க கூடாதோ என்று நினைத்து கூச்சத்துடன் அவனை நோக்க,

அவன் இதழ்களில் இன்னும் சிரிப்பு மீதமிருந்தது.

இதில் அவளுக்கு முகம் லேசாக சிவந்துவிட முகத்தை திருப்பி கொண்டாள்.

இதழில் உறைந்துவிட்ட மென்னகையுடன் அலைபேசியில் யாரையோ அழைக்க,

"மே ஐ கம் இன் சார்" என்று வேண்டிவிட்டு உள்ளே வந்தாள் நவநாகரீக யுவதி.

"மஹதி செல்வாக்கு ஆபிஸை சுத்தி காட்டி. எந்தெந்த டிபார்ட்மெண்ட் எங்க இருக்குனு சொல்லு" என்க,

சம்மதமாக தலையசைத்தவள், "வாங்க மேம்" என்று அழைத்தாள்.

செல்வா போய் வருகிறேன் என்ற ரீதியில் அவனை பார்க்க, கண்களில் தேங்கியிருந்த சிரிப்புடன் தலையசைத்தான்.

அவள் செல்ல எத்தனிக்கையில்,

"ம்மா எங்க போத. நானு வதேன்" என்று மகள் மழலையில் மிழற்ற,

வல்லபன், "பாப்பாவையும் அழைச்சிட்டு போ. கேண்டின்ல எதாவது வாங்கி கொடு" என்க,

மகளை அழைத்து கொண்டு அந்த நிறுவனத்தினை சுற்றி பார்க்க சென்றாள்.

மனையாளின் சந்தேகத்தையும் கலக்கத்தையும் போக்கவே வந்த மறுநாளே அவளை அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

மஹதி மிகவும் நன்றாக பேசினாள்.
முதல் தளத்திலிருந்து அனைத்து இடங்களையும் காண்பித்து எந்தெந்த துறை என்னென்ன வேலை என்று விளக்கி கூறினாள்.

மொத்தம் ஒன்பது தளங்கள் அங்கே இருந்தது. எவ்வளவு பணியாளர்கள் இத்தனை பேரும் இவரது கட்டுப்பாட்டிலா பணி புரிகின்றனர்.

இத்தனை பேரையும் ஒருங்கிணைத்து வேலை வாங்குவதெல்லாம் சுலபமான காரியமல்ல. இவர் விரைவாக கிளம்ப கூறியது சரிதான் என்றே தோன்றியது.

எல்லோரும் செல்வாவை பார்த்துவிட்டு மரியாதையாக எழ முயற்சிக்க, அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"வேணாம். யாரையும் எழ வேண்டாம்னு சொல்லிடுங்க மஹதி" என்று அதனை தடுத்துவிட்டிருந்தாள்.

ஒன்பது தளத்தையும் சுற்றி பார்த்த மூவரும் சற்று சோர்வாகிவிட,

தேநீர் அருந்த பணிமனைக்கு சென்றனர்.

செல்வா தனக்கு தேநீரும் மகளுக்கு பாலும் வாங்கிவிட்டு மஹதியிடம், "உங்களுக்கு டீயா காஃபியா?" என வினவ,

"இல்லை மேம் எனக்கு வேண்டாம்" என்று மறுத்தாள்.

"நீங்களும் தானே எங்ககூட சுத்துனிங்க.‌ உங்களுக்கு கண்டிப்பா டையர்டா இருக்கும். டீயா காஃபியா அதை மட்டும் சொல்லுங்க" என்று வினவ,

"காஃபி மேம்" என்று கூற,

வாங்கிவிட்டு வந்தவள் மகளை அருகில் அமரவைத்து தானும் அமர மஹதி அமராது நின்றிருந்தாள்.

நிமிர்ந்து பார்த்த செல்வா, "உங்களுக்கு உட்கார்றதுக்கு வேற தனியா சொல்லணுமா?" என சிறு குரலில் அதட்ட,

"சார்க்கு ஏத்த பேர் தான் மேம் நீங்க.‌ அவங்கள மாதிரியே அதட்றிங்க" என்றபடி அமர்ந்தாள்.

"ரியல்லி உங்க சார் கோபப்படுவாரா?" என்று வினா தொடுக்க,

"கோபப்படுவாராவா? கோபப்பட்டா ஆபிஸே அதகளப்படும்" என்று கூற வியப்பாக கேட்டபடி இருந்தவள் தேநீரை அருந்தியவுடன் அதியை அழைத்து கொண்டு அவனறையை நோக்கி சென்றாள்.

கதவை தட்டலாமா வேண்டாமா? என்று யோசித்து சரி தட்டிவிட்டு சென்றால் யாராவது பார்த்து எதாவது நினைத்து கொள்வார்கள் என்று நினைத்து கதவை திறந்த நொடி சட்டென்று அவளது காலருகே வந்து விழுந்தது.

"உங்களுக்கு எத்தன டைம் சொல்றது. எப்போ பார்த்தாலும் இதே இஸ்ஸூ தான் வருது" என்று கோபத்தில் சிவந்துவிட்ட முகத்துடன் கத்தியவனை செல்வா அதிர்ந்து பார்க்க,

வல்வபனிடம் திட்டு வாங்கியவனோ மிகவும் பயந்து நின்றிருந்தான்.

சிறிது நேரத்திற்கு முன்பு மஹதி கூறியதை நம்பாதவள் அதிர்ந்தபடி தான் பார்த்தாள்.

அவளுக்கு தெரிந்த வல்லபன் இதுவரை கோபப்பட்டே அவள் பார்த்ததில்லை.

திட்டியவாறே திரும்பியவன் மனைவியை கண்டு சடுதியில் கோபத்தை குறைத்தான்.

அதுவும் அவளது அதிர்ந்த வதனம் கோபத்தை முற்றிலும் இறக்க,

"போங்க போய் சீக்கிரமா இஸ்ஸூவ க்ளியர் பண்ணுங்க" என்றவன் அழுத்தமாக கூற,

எதிரில் இருந்தவனோ விட்டால் போதுமென்று அறையை விட்டு ஓடியிருந்தான்.

நேரம் கடந்தும் அதிர்ந்த நின்ற மனைவியை கண்டு இலகு பாவனைக்கு மாறியவன்,

"இன்னும் எவ்ளோ நேரம் மேடம் அங்கேயே நிக்கிறதா ஐடியா?" என்று வினவ,

மகளை கையில் பிடித்தபடி இரெண்டு எட்டில் இருக்கையில் அமர்ந்தவள் நொடி பொழுதில் முகத்தின் பாவனையை மாற்றியவனை அதிர்ந்து ஆச்சர்யத்துடன் தான் பார்த்தாள்.

"ஆபிஸ் ஃபுல்லா சுத்தி பாத்தாச்சா?" என்று வினா தொடுக்க,

"ஹ்ம்ம் பார்த்துட்டேன்" என்று பதிலளித்தான்.

"ஓ… சரி அப்போ எந்த ப்ளோர்ல எந்த டிபார்ட்மென்ட் இருக்குனு கேட்கவா?" என்று புருவம் உயர்த்த,

"ஹான்" என‌ அதிர்ந்து விழித்து,

'சும்மாதானே சுற்றி பார்க்க வந்தோம் இவர் என்னடாவென்றால் கேள்வி கேட்கிறேன்‌ என்கிறாரே' என்று நினைத்து அவனை நோக்கியவளுக்கு எங்கே எந்த துறையை பார்த்தோம் என்று சுத்தமாக நினைவில் இல்லை.

அவளது பாவனையில் இதழில் குறுநகையுடன்,

"சும்மாதான் கேட்டேன் பயப்படாத" என்று கூறிய பிறகு தான் அவளுக்கு நிம்மதி பிறந்தது.

அதன் பிறகு அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை தான் வீட்டிற்கு கிளம்பினர்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் வல்லபனுக்கு விடுமுறை.

வல்லபனுக்கு முன்பாகவே செல்வாக்கு விழிப்பு தட்டிவிட எழுந்து அமர்ந்தவள் நேரத்தை பார்க்க அது ஆறென்று காண்பித்தது.

பார்வை அருகில் இருந்த கணவன் மற்றும் மகளின் மேல் பதிய இருவரும் ஒரே போல ஒரு கையை தலைக்கு கொடுத்து உறங்கி கொண்டிருக்க,

'அப்பாவும் பொண்ணும் தூங்கும் போது கூட‌ ஒரே மாதிரி தான்' என்று நினைத்து மெலிதான கீற்று புன்னகையோடே எழுந்து சென்று குளித்து காலை கடன்களை முடித்து வந்தாள்.

இன்னும் அவர்கள் எழாததை கண்டு தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து மற்றொரு அறையினுள் இருந்த பால்கனிக்கு சென்று நின்று கொண்டாள்.

கீழே ஞாயிற்று கிழமையும் சற்று பரப்பரப்புடன் சுற்றிய மக்களை சுவாரஸ்யமாக பார்த்தவனுக்கு சிறிது நேரத்தில் சலிப்பு வந்துவிட தேநீரை தயாரிக்கலாம் என்று அடுக்களை சென்றவள் தனக்கு மட்டும் தேநீரை போட்டு அருந்தினாள்.

பின்னர் காலைக்கு எதாவது சமைக்கலாம் என்று முடிவு செய்தவள் வெகுநேரம் சிந்தித்து சப்பாத்தி போடலாம் என்று மாவை பிசைந்து தேய்க்க துவங்க அது என்னவோ கோணல்மாணலாக வர,

"ப்ச்" என்று சலித்தவள் மீண்டும் தேய்க்க துவங்க அப்படியே தான் வந்தது.

எழுந்து குளித்து மனைவியை காணாது தேடி வந்தவன் சமையலறையில் எதையோ உருட்டுவதை கவனித்துவிட்டு,

"என்ன மேடம் காலையிலே ஏதோ சாகசம் பண்ணிட்டு இருக்கிங்க" என்று வர,

"சப்பாத்தி தேய்க்க ட்ரை பண்றேன் ரவுண்டா வர மாட்டுது" என்று சோகமாக முகத்தில் மாவை பூசிக் கொண்டு கூறிய மனையாளை கண்டு புன்னகையும் ரசனையும் எழ,

"க்யூட் ஜான்சி ராணி" என்று இதழ்களுக்குள் முணுமுணுத்தவன் அவள் தேய்த்து வைத்திருந்த சப்பாத்தியை கண்டு சத்தமாக சிரித்துவிட்டான்.

இதில் முகம் வாடியவள், "அவ்ளோ மோசமாவா இருக்கு" என்று வருத்தத்துடன் கேட்க,

"சே சே அப்படிலாம் இல்லை.‌ ஓரளவுக்கு பெட்டர் தான். சரி வா நான் சொல்லி தர்றேன்" என்று தேய்க்கும் கட்டையை கையில் எடுக்க,

"உங்களுக்கு தேய்க்க தெரியுமா?" வியப்பில் விழிவிரித்து வினவ,

அவளது பாவனையில் சிரிப்புடன்,

"ஹ்ம்ம் தேய்க்க மட்டும் இல்லை. சமைக்க கூட தெரியும்" என்றவன் தேய்க்க துவங்க,

'இவ்வளவு பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு சமைக்க தெரிகிறதே!' என்று வியந்தவள் அவனது வேலையை கவனித்தாள்.

லாவகமாக எளிதில் தேய்த்துவிட்டவன், "இதோ ரவுண்டா வந்திடுச்சு" என்றவாறு மற்றொன்றை எடுத்து தேய்க்க துவங்க,

'தன்னிடம் இத்தனை இலகுவாக சிரித்து பேசுபவனா நேற்று அப்படி விழிகள் முகம் சிவக்க கத்தினான். அதுவும் தன்னை பார்த்ததும் அப்படியே கோபம் காணமல் போய் ஒரு இலகு பாவனை. எல்லாம் தனக்காகவா?' என்று நினைத்தவாறே அவனது முகத்தை பார்த்திருந்தாள்.

"இப்படி தான் தேய்க்கணும் லைட்டா" என்றபடி திரும்பியவனுக்கு மனையாளது பார்வை ஏதோ செய்ய,

இதழ்களில் மந்தகாச சிரிப்புடன் அவளை நெருங்கி குணிந்தவன் மூச்சு காற்று முகத்தில் மோத,

"என்னை சைட் அடிச்சது போதும். சப்பாத்தியை பாரு" என்றவாறு அவளது முகத்தில் இருந்த மாவை துடைத்துவிட,

சிந்தையில் இருந்து சடுதியில் விடுப்பட்டவளுக்கு அவனது செயலில் இதயமே நின்றுவிட இரண்டடி பின்னோக்கி வந்திருந்தாள்.

அவன், 'என்னவென்பதாக' ஒற்றை புருவத்தை மந்தகாச சிரிப்புடன் ஏற்றி இருக்க,

முகம் விநாடியில் சிவந்துவிட்டது. அதை மறைக்க பட்டென்று மறுபுறம் திரும்பிவிட்டாள்…

அவன் முகம் முழுவதும் ரசனை தேனாய் தித்தித்தது…

உன்னை அள்ளி ஏந்தியே

ஒரு யுகம் போகவா
தலை முதல் கால் வரை
பணிவிடை பார்க்கவா…


 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
😃😃😃😃😃😃ஜான்சிராணி பட்டப்பேரு வச்சப்பவே வல்லபன் எந்த சூழ்நிலைல வச்சான்னு தெரியுதே 😃😃😃😃😃எம்புட்டு கோவம் இருந்தா ஆகாஷ் பயல புரட்டிருப்பான் 😃😃😃😃
 
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
Ennathu vallaban KU kovam lam varumaa🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
Superrrrrrrr moving ma
Varuma va. Avan semma terror
😃😃😃😃😃😃ஜான்சிராணி பட்டப்பேரு வச்சப்பவே வல்லபன் எந்த சூழ்நிலைல வச்சான்னு தெரியுதே 😃😃😃😃😃எம்புட்டு கோவம் இருந்தா ஆகாஷ் பயல புரட்டிருப்பான் 😃😃😃😃
Ama😁😁😁
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Selva ippo jhansi rani ah illa silent rani ah irukaga athu na la than vallaban ku kovam varuma nu silly question ellam kekura yen na madam first vallaban ah parthathu yae oruthan ah adi velukum pothu than ah
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Vallapan Kovil la ketan paru kalyanam pannigalama nu selva ku tha shock 😂😂aii jansirani yaruku kovam varuma nu kekura ne avana first time pathathu sandai la thaana 😂😊😊sikirama nabagam varum😍😍
 
Top