• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 13

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 13:


அவன் புரியாது பார்ப்பதை உணர்ந்தவள் தொடர்ந்தாள்.

"என் அப்பாவோட கூட பிறந்த தங்கை தான் இவங்க. காலேஜ் படிக்கும் போது அத்தை ஒருத்தரை காதலிச்சாங்க. அவர் ரொம்ப பெரிய பணக்கார வீட்டை சேர்ந்தவரு. எங்கப்பாவுக்கு தெரிஞ்சதும் முதல்ல யோசிச்சாலும் பின்னாடி தங்கச்சி விருப்பம் தான் முக்கியம்னு சம்மதம் சொல்லிட்டாரு. ஆனால் அவங்க வீட்ல சுத்தமா சம்மதிக்கலை. அத்தையும் அவரும் அவங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எங்கப்பா தான் பண்ணி வச்சாங்க"

"..."

"அவங்க ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போக ரெண்டு பேர் வாழ்க்கையும் சந்தோஷமாக தான் இருந்துச்சு. அப்புறம் எங்கண்ணியும் பிறந்தாங்க. அதுக்கு பிறகு தான் பிரச்சினை ஆரம்பிச்சது. அத்தையோட மாமியார் வீட்ல இருந்து வந்து பேசுனாங்க. அவங்க வீட்டு பையன் இல்லாம கஷ்டமா இருக்கு. எங்களோடவே வந்திடுங்கன்னு அழைச்சாங்க. அத்தையும் அவர் வீட்டுக்காரரும் ரொம்ப சந்தோஷப்பட்டு அங்க போனாங்க.

"அங்க போனதுக்கப்புறம் தான் அவங்களோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சது. அத்தையோட ஹஸ்பண்ட் இருக்குறவரைக்கும் நல்ல பாசமா நடந்துக்குறவங்க. அவர் வெளியே போனதும் எங்ஙளோட ஏழ்மை நிலையை காரணம் காட்டி ரொம்ப திட்டி எல்லா வேலையும் அவங்கள வாங்குனாங்க"


"எங்கப்பா பார்க்க போனா கூட அவரையும் அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க. ஒரு கட்டத்துக்கு மேல பொறுக்க முடியாத அத்தை அவங்க ஹஸ்பண்ட்க்கிட்ட சொல்லிட்டாங்க. ஆனால் அத்தையோட மாமனாரும் மாமியாரும் அத்தை பொய் சொல்றாங்க. இங்க இருக்க பணத்தை எல்லாம் எங்க வீட்டுக்கு கொடுக்குறதாவும் அதுமட்டமில்லாம" என்றவளுக்கு ஒரு நொடி பேச்சு வரவில்லை கண்கள் கலங்கிவிட்டது.

பெருவிரலால் அதனை சுண்டிவிட்டவள், "என் அத்தையோட நடத்தை சரியில்லை. வீட்டு ட்ரைவரோட" என்றவள் வார்த்தைகளை விழுங்க,

அவளது நிலையை உணர்ந்தவன்,

"போதும் எனக்கு புரிஞ்சது" என்று இயம்பினான்.

ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டவள், "பொய் சாட்சி ரெடி பண்ணி அவங்க சொன்னதை உண்மைன்னு நிரூபிச்சிட்டாங்க. இதை நம்பிட்ட அவங்க ஹஸ்பண்ட் அத்தையை வீட்டைவிட்டு துரத்திட்டாரு. கையில குழந்தையோட நடுரோட்டில எங்கத்தை நின்னப்போ எங்கப்பா தான் அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இப்போவரை பாத்துக்கிறாங்க"

"சின்ன வயசுல இருந்தே தனியா கஷ்டப்பட்ற‌‌ என் அத்தையை பார்க்கும் போது எனக்கு அவங்க ஹஸ்பண்ட் மேல அவ்ளோ கோபம் வரும்" என்றவளது முகம் அந்நொடியும் கோபத்தை பிரதிபலித்தது.

ஒவ்வொரு முறையும் அத்தையின் ஹஸ்பண்ட் அத்தையின் ஹஸ்பண்ட் என்று மட்டுமே கூறியதில் இருந்தே எத்தனை வெறுப்பில் இருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

"இதுக்கு நம்ம விஷயத்துக்கும் என்ன சம்மந்தம்?" என்று வல்லபன் கேட்க,

அவனை தயக்கத்துடன் பார்த்தவள்,

"ஒரு பணக்கார வீட்டு பையனை லவ் பண்ணததால தான் அத்தை வாழ்க்கையில இவ்ளோ பிரச்சனை. இதுவே எங்க ஸ்டேட்ஸ்க்கு அவங்க இருந்திருந்தா அப்பாவை இவ்ளோ அவமானப் படுத்தியிருக்க மாட்டாங்க தானே" என்று விட்டு

"இந்த காரணத்துனாலயே எனக்கு பணக்காரங்க மேல ஒரு பிடித்தமின்மை ஏன் வெறுப்புன்னு கூட சொல்லலாம். எனக்கு நீங்க ஓரளவு ரிச்னு தெரியும். பட் உங்க அப்பா வந்ததும் எல்லாரும் கொடுத்த மரியாதைய வச்சு தான் உங்களோட ஸ்டேட்டஸ் தெரிய வந்தது. பார்ன் வித் சில்வர் ஸ்பூனான உங்களுக்கும் ஓரு சாதாரண மிடில் கிளாஸ சேர்ந்த எனக்கும் எந்த விதத்திலயும் சரிவராது. மோர் ஓவர் எங்க‌ அத்தை செஞ்ச அதே தப்பை நானும் செஞ்சு எங்கப்பாவ எந்த இடத்திலயும் அவமானப்பட வைக்க விரும்பலை. ஸோ" என்றவள் நிறுத்திவிட்டு அவனை நோக்க,

"ஸோ…" என்றவன் அவளை ஊடுருவும் பார்வை பார்த்தான்.

அதில் உள்ளுக்குள் சிறிது உதறினாலும் வெளியே காண்பிக்காமல்,

"நம்ம ரெண்டு பேருக்கும் சரிவராது. நான் மதியம் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு உங்களை பிடிச்சிருக்குனு சொல்லிட்டேன். நீங்க என்னை மறந்திட்டு வேற ஒரு நல்ல பொண்ணா" என்று பேசுகையிலே,

"மண்ணாங்கட்டி" என்றவனது வார்த்தையில் அதிர்ந்து அவனை நோக்கினாள்.

"வேற பொண்ணை பாத்துக்கோ அது இதுன்னுலாம் நீ சொல்லக் கூடாது" என்று அழுத்தமான கர்ஜனை குரலினாலும் அவனது சிவந்த விழியினாலும் சடுதியில் விழிகள் கலங்கியது பாவைக்கு.

அவளது நிறைந்துவிட்ட விழிகளை கண்டதும் நிதானமடைந்தவன் தன்னையை நிந்தித்து கொண்டு,

"ப்ச் செல்வா இங்க பாரு என்னை" என்க,

விழகளை துடைத்தபடி அவனை பார்த்தாள்.

"நீ‌ உங்க அத்தை விஷயத்தை வச்சு எல்லாரும் இப்படித்தான்னு டிசைட் பண்ணக் கூடாது. பர்ஸ்ட் ஒன்னை புரிஞ்சுக்கோ பணம் இருக்கவங்க எல்லாரும் கெட்டவங்க கிடையாது இல்லாதவங்க எல்லாரும் நல்லவங்க கிடையாது. உங்க அத்தை சூஸ் பண்ண ஆள் தான் தப்பானவரு. உங்க அத்தையே அதை ஓவர்கம் பண்ணி வந்து தைரியமா லைஃபை பேஸ் பண்ணிட்டு இருக்காங்க. ஆனால் நீ உன்னோட கண்ணோட்டத்தில எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு இப்படி லூசு மாதிரி பேசிட்டு இருக்க"

"என் ஜான்சி ராணி ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன். ஆனால் நீ சரியான மக்கா இருக்கியே" என்று அலுத்து கொண்டவன்,

"நான் சொன்னது புரிஞ்சுதா?" என்று அதட்ட,

"ஹ்ம்ம்" என்று அவளது தலை அவனது அழுத்தத்தில் தானாக அசைந்தது.

அவளது விரைவான தலையாட்டலிலே பயந்து தான் செய்கிறாள் என்று உணர்ந்தவன்,

"ஜான்சி ராணி இங்க என் கண்ணை பாரு. உனக்கு அதுல பொய் தெரியுதா? நான் உன்கிட்ட பர்ஸ்ட் டைம் கேக்கும் போதே கல்யாணம் பண்ணிக்கிறியான்னு தானே கேட்டேன்" எனக் கேட்க,

"ஹ்ம்ம் ஆமா ஆனாலும் எனக்கு உங்க பேக்ரவுண்டை பார்த்து பயமா இருக்கு. இது… இது வேணாம்" என்று கலக்கம் சுமந்த விழிகளுடன் கூற,

'வேணாம்' என்றவளின் வார்த்தையில் அவனுக்கு கோபம் சுர்ரென்று ஏற,

"சரி வேணாம் வச்சிடு" என்று கோபத்தில் மொழிந்து அழைப்பை துண்டித்துவிட்டவனுக்கு கண்மண் தெரியாத கோபம்.

எதையாவது யோசிக்கிறாளா? இத்தனை தூரம் எடுத்து கூறியும் புரிந்து கொள்கிறாளா? எதையுமே சிந்திக்காது வேணாம் வேணாம் இந்த ஒரு வார்த்தையை மட்டும் கூறுகிறாள்.

தான் மட்டும் சேர வேண்டும் என்று சிந்தித்தால் போதுமா?

இத்தனை கூறியும் என் மீது துளியும் நம்பிக்கை இல்லாது பேசிகிறாளே இவளை என்ன செய்வது என்று நெற்றியை விரலால் தேய்த்தவனுக்கு மனது ஆறவே இல்லை.

இங்கு முகத்தில் அடித்தாற் போல அவனது செயலில் அழுகை பொங்கி வர கையால் வாயை மூடி கொண்டு அழ துவங்கிவிட்டாள்.

அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை தெரியவில்லை. அவனை விடவும் இயலாதது ஏற்று கொள்ளவும் முடியாது தவித்தவளுக்கு கண்ணீர் துடைக்க துடைக்க பெருகியது.

சிறு வயதிலிருந்தே தன்னோடு வளர்ந்துவிட்ட பயத்தை சடுதியில் வெட்டி தள்ள முடியவில்லை. புவனாவை பார்க்கும் நேரமெல்லாம் தானும் அவரை போல வாழ்வில் தவறிவிடுவோமோ? என்று பயம் வேறு நெஞ்சை கவ்விப்பிடித்தது.

அவன் மேல் நம்பிக்கை வைத்து காதல் செய்யமளவிற்கு என்ன செய்துவிட்டான் என்று எண்ணம் முட்டி நின்றது.

ஏதும் செய்யத் தோன்றாது சாய்ந்தமர்ந்துவிட்டவளது கண்ணீர் தான் தாரை தாரையாக வடிந்தது.

இங்கு வல்லபனும் கோபத்துடன் நாற்காலியில் சாய்ந்து விட்டான்.

நேரம் செல்ல செல்ல கோபம் சிறிதளவு மட்டுப்பட,

'நம்பிக்கையின்றி பேசுகிறாளே' என்று வருந்தியவனுக்கு அப்போது தான் நம்பிக்கை வருமளவிற்கு நீ நான் என்ன செய்தேன் என்று தோன்றியது.

நம்பிக்கை வருமளவில் எதாவது பேசியுள்ளாயா? என்று மனது தன்னிடமே வினவ பதிலில்லை.

"ப்ச் நம்பிக்கை இல்லை நம்பிக்கை இல்லைன்னு அவ மேல கோபப்பட்ட நீ நம்பிக்கை வர்ற அளவுக்கு இந்த மூனு மாசத்துல என்ன செஞ்சடா வல்லபா" என்று தன்னை தானே கடிந்து கொண்டவனுக்கு அழைப்பை துண்டிக்கும் இறுதி விநாடி கலங்கிய விழிகளுடன் தவிப்புடன் தன்னை நோக்கியவளது முகம் கண்முன் நிழலாட,

'அவசரப்பட்டு கோபப்பட்டு பேசிட்டேனே' என்று நொந்து கொண்டான்.

"கோபத்தை பர்ஸ்ட் கன்ட்ரோல் பண்ணணும்" என்று இடது கையால் கழுத்தை வருடியவனுக்கு தெரியும் நிச்சயமாக அவனது ஜான்சி ராணி இப்போது கண்ணில் பெரிய அணையையே திறந்து விட்டிருப்பாள் என்று.

அலைபேசியை எடுத்து அவளுக்கு மீண்டும் காணொளி அழைப்பை விடுக்க,

முதல் அழைப்பிலே ஏற்றவளது முகம் அழுதழது கோவைப் பழமாக சிவந்திருந்தது.

ஏதும் கூறாது தேம்பி கொண்டிருப்பவளை கண்டதும் அணைத்து ஆறுதல் சொல்ல உள்ளே பரபரத்தது.

அழுகை வரவைத்தவனே நீதான் இதில் ஆறுதல் கூற போகிறாயா? என்று மனது எள்ளி நகையாட,

ஒரு விரலால் புருவத்தை நீவியவன்,

"செல்வா இங்க பாருடி. ப்ச் நான் ஏதோ கோவத்துல காலை கட் பண்ணிட்டேன்" என்றவன் வார்த்தைகளின்றி அவளை பார்க்க,

அழுதபடியே நோக்கியவளுக்கு கோபம் வந்துவிட்டது.

"உங்க சைட்ல இருந்து மட்டும் யோசிப்பிங்களா? என்னோட பயம் எதுவும் பெரிசா தெரியாதா?" என்று அழுகையுடன் முறைத்தவளது முகம் முழுவதும் சிறு இடமின்றி சிவந்து போனது.

"நம்பிக்கை இல்லையா நம்பிக்கை இல்லையான்னு கேக்குறிங்க. நம்பிக்கை வர்ற அளவுக்கு என்ன செஞ்சிங்க?" என்று முறைக்க,

"ஒன்னும் செய்யலை" என்று பட்டென்று அவனிடமிருந்து பதில் வர, அவள் திகைத்து விழித்தாள்.

அந்நிலையிலும் அந்த விழிகளுக்கும் மனது ஏனோ தொலைந்து தான் போனது.

"உண்மை தான் நீ கேக்குற சரியான கேள்வி தான். உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டதை தவிர்த்து நம்பிக்கை வர்ற அளவுக்கு நான் எதுவுமே செய்யலை" என்றவன் பெருமூச்சுடன்,

"பட் ஜான்சி ராணி நீ என்னை நம்பாத கண்ணோட்டத்துல பயத்தோட பாக்குறதை நிறுத்தணும். இனிமேல் உனக்கு நம்பிக்கை வர்ற மாதிரி நிச்சயமா நடந்துப்பேன். அப்புறம் நம்ம கல்யாணம் கண்டிப்பா ரெண்டு வீட்டோட சம்மதத்துல தான் நடக்கும் நான் நடத்துவேன். அண்ட் ஒன் மோர் திங்க்‌ உங்க அம்மா அப்பாவோ அல்லது வேற பேமிலி மெம்பர்ஸ்க்கோ என்னால ஐ மீன் நம்ம காதலால எந்தவித அவமானமோ சின்ன பேச்சோ கூட வராது. புரிஞ்சுதா?" என்று அழுத்தமாக வினவ,

புரிந்தது என்பது போல தலையசைத்தாள்.

"வாயை திறந்து பதில் சொல்லு" என்று அதட்ட,

"புரிஞ்சது" என்று வேகமாக பதில் வந்தது.

"இதுக்கு மேல நான் எந்தவிளக்கமும் கொடுக்கப் போறதில்லை. ஒன்லி ஆக்ஷன் தான்" என்று தன்னிலையை கூற,

அவளுக்கு உள்ளுக்குள் சொல்ல முடியாத நிம்மதி ஜனித்தது.

அவனது ஒற்றை கண்ணசைவு எத்தனை மகிழ்ச்சியை கொடுத்ததோ அதை விட அதிகமான நிம்மதியை கொடுத்தது அவனது அழுத்தமான வார்த்தைகள்.

விழியோடு விழி பார்த்து அவன் பேசிய அழுத்தம் திருத்தமான பேச்சு அவளுக்கு மொத்தமாக இறங்கியது.

முகத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறந்தது. அதனை அவனும் அவதானித்தான்.

"இனி என்ன ப்ராப்ளமா இருந்தாலும் சொல்லிடணும். சும்மா மௌனப் போராட்டம் பண்ணி மனுசனை மண்டை காய விடக் கூடாது" என்று முறைத்தபடி கூற,

"அதுக்கு நீங்க கோவப்படாம காலை கட் பண்ணிட்டு போகாம இருக்கணும்" என்று தானும் முறைத்தாள்.

வந்த பதிலிலிருந்தே தனது ஜான்சி ராணி மீண்டுவிட்டாள் என்று தெரிய இதழ்கள் மெலிதாக வளைய,

"சரி போ போய் பேஷ்வாஷ் பண்ணிட்டு வா. அழுத வடிஞ்ச முகத்தை பார்க்க முடியலை" என்று அவளை வம்பிழுக்கும் பொருட்டு கூற,

"பாக்காதிங்க. உங்களை யாரும் அவ்ளோ கஷ்டப்பட்டு பாக்க சொல்லலை" என்று என்று சிவந்த நாசியுடன் முறைத்தவள் எழுந்து குளியலறை சென்று முகம் கழுவி வந்தாள்.

துண்டை இம்முறை திரைக்கு பின்னால் வைத்திருந்தால் எடுத்து மெதுவாக துடைத்து கண்ணாடியில் அழுத தடம் தெரிகிறதா என்று பார்க்க அப்பட்டமாக சிவந்த முகம் அழுததை காட்டி கொடுத்தது.

'ப்ச் பத்து நிமிடத்தில் கீழே வருவதாக சொல்லிவிட்டேன்' என்று நொந்து கொண்டவள் பின்னர்,

'சமாளித்து கொள்ளலாம்' என்று நினைத்து திரைக்கு முன்னால் வந்து அமர்ந்தாள்.

அப்போது அமர்ந்தது போல மீண்டும் சாய்ந்து அமர்ந்து அவளை பார்வையிட துவங்க,

வீட்டினரை சமாளிக்கும் கவலை பறந்து போய் ஒரு வித கூச்சம் அசௌகரியம் ஒட்டி கொண்டது.

சாய்ந்தவாறே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவன் திடீரென திரைக்கு வெகு அருகில் வந்துவிட,

இவள் தான் அவன் என்னவோ நிஜத்திலே அருகில் வந்துவிட்டது போல திகைத்து ஓரடி பின்னால் நகர்ந்துவிட்டாள்.

அதில் அவனுக்கு சிரிப்பு வந்துவிட சத்தமாக சிரித்துவிட்டான்.

அதில் முறைத்தவள், "சும்மா கிட்ட கிட்ட வந்து பார்த்து பயம்புடுத்த வேண்டியது இதுல சிரிப்பு வேற" என்று வாய்க்குள்ளே முணுமுணுக்க,

"எதுவா இருந்தாலும் சத்தமா பேசுடி" என்றனது பதிலில்,

"ஒன்னுமில்லை" என்று இதழை சுழித்துவிட்டு முகத்தை திருப்பி கொண்டவள் அவனது கேள்வியில் விழிகளை விரித்து பார்த்தாள்.

அந்த விரிந்த விழிகளுக்குள் சிக்கி இவன் தான் சிதறி கொண்டிருந்தான்…



தீ இன்றி திரியும் இன்றி
மேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும்
கண்டு கொண்டேன்…!
 
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
அவனது அணைப்பை உணர்ந்தவள் எத்தனை நிமிடங்கள் அப்படியே உறைந்து நின்றாளோ தெரியவில்லை.

"ம்மா…" என்று எழுந்து வந்த அதியின் குரல் அவளை கலைக்க,

தன்னை மீட்டவள், "என்னடா?" என வினவியபடி அருகில் சென்றாள்.

மனதிற்குள், 'ஒன்னுமில்லை ஒன்னுமில்லை ஜெஸ்ட் பார் ப்ரெண்ட்லி ஹக் அப்படின்னு நினைச்சுக்கோ' என்று தனக்கு தானே கூறியபடி அருகில் செல்ல,

அதி, "ம்மா தூக்கு" என்று கையை உயர்த்தினாள்.

அதில் அவளை கையில் ஏந்தி கொண்டவள் வல்லபனை தேட அவன் மற்றொரு அறையினுள் இருந்த பால்கனியில் நின்று அலைபேசியில் பேசி கொண்டிருந்தான்.

இவளது வரவை உணர்ந்தவன் திரும்பி, "ஒரு பைவ் மினிட்ஸ் வந்திட்றேன்" என்று சைகை செய்ய,

சரியென தலைமசைத்தவள் வெளியே வந்து நீள்விருக்கையில் உட்கார்ந்தாள்.

கூறியது போல ஐந்து நிமிடத்தில்,

"பாப்பா எழுந்துட்டாளா?" என்றபடி வந்து அவளருகில் சகஜமாக அமர்ந்தான்.

நெருங்கி அமர்வது போல தெரிந்தாலும் சிறிது இடைவெளி இருந்ததில் அவளுக்கு நிம்மதி.

"பாப்பாக்கு பசிக்கலையா?" என்றவாறு கைகளை நீட்ட,

"ம்ம் பாப்பாக்கு பசிக்கிது" என்று வயிற்றை காண்பித்தவள் வல்லபனிடம் தாவினாள்.

'ப்ச் இதனை தான் சிந்திக்காமல் போனோமே. தூங்கி எழுந்ததில் குழந்தைக்கு நிச்சயம் பசி வந்திருக்கும். இனி சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்' என்று நினைத்து கொண்டாள்.

"குட்டிமாக்கு என்ன வேணும். பால் குடிக்கிறியா?" என்று வல்லபன் மகளிடம் வினவ,

"ம்ம் குதிக்கிறேன்" என்று தலையசைத்தாள்.

உடனே அலைபேசியை எடுத்து யாரிடமோ ஆங்கிலத்தில் பால் வாங்கி வருமாறு கூறியவன் அலைபேசியை வைத்துவிட்டு மகளை தூக்கி கொண்டவன்,

"பாப்பாக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றோம்" என்று செல்வாவிடம் கூறிவிட்டு சென்றான்.

சரியென்றவள் நீள்விருக்கையில் அசதியில் சாய்ந்து கொள்ள, வல்லபனது அலைபேசியின் கானா இசைத்தது.

அருகிலே அலைபேசி இருந்ததால் எட்டி பார்க்க கே கே என்ற பெயரில் இருந்து அழைப்பு வந்தது.

எடுக்கலாமா வேண்டாமா? எடுத்து அவர் வேலையாக இருக்கிறார் என்று கூறுவோமா? எடுத்து ஏன் எடுத்தாய் என்று கேட்டுவிட்டால் என்ன பதில் கூறுவது என்று சிந்திக்கையிலே அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் வருமோ என்று எண்ணத்தில் அலைபேசியை கண்டவளது விழிகள் அலைபேசியின் முகப்பில் உள்ள புகைப்படத்தை கண்டு வியப்பில் விரிந்தது.

அலைபேசியை கையில் எடுத்து மீண்டும் ஒரு முறை இமை சிமிட்டி பார்க்க அது அப்படியே தான் இருந்தது.

வேறொன்றுமில்லை அதில் வல்லபனும் செல்வாவும் மிக மிக நெருக்கத்தில் நின்றிருக்க செல்வா சிரிப்பும் முறைப்புமாக அவனை பார்த்திருக்க வல்லபன் இதழ்கடையில் சிரிப்புடன் நேரே நோக்கியிருந்தான்.

அதில் இருவரும் மிகவும் இளையவர்களாக தெரிந்தனர். வல்லபன் இப்போதைய உள்ள தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்டவனாக தாடியின்றி சிறிய மீசையுடன் அகம் நிறைந்த புன்னகையுடன் நின்றிருக்க தானும் சிறிது இளையவளாக தான் தெரிவது போல அவளுக்கு எண்ணம் வந்தது.

தற்போதைய தனது தோற்றத்தில் கண்ணாடியில் பாரத்திருக்கிறாளே.

பின்புறத்தில் ஒரு சில மரங்கள் மற்றும் சில கல் மேடைகள் தென்பட ஆங்காங்க சிலர் வெகுதூரத்தில் தென்பட்டனர்.

இது தான் நான் இரண்டாவதாக சேர்ந்த கல்லூரி போல என்று நினைத்து கொண்டவள் அப்போது உண்மைக்கே நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோமா? என்று திகைப்புடன் எண்ணி புகைப்படத்தை மீண்டும் உற்று பார்த்தவள் அவனது காலடி சத்தத்தில் அலைபேசியை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு நல்ல பிள்ளை போல இருந்து கொண்டாள்.

அவன் வந்ததும், "உங்களுக்கு கால் வந்துச்சு" என்று கூற,

"யாரு பண்ணது அட்டென்ட் பண்ணியா?" என்றவாறு அவன் அலைபேசியை எடுக்க,

"இல்லை நான் அட்டென்ட் பண்ணலை. கே.கேன்னு நேம் வந்துச்சு" என்றாள்.

"கே.கே வா. என் ப்ரெண்ட் தான் கால் பேசிட்டு வந்திட்றேன். பாலும் ஃபுட்டும் வந்தா வாங்கி வை" என்றுவிட்டு எழுந்து சென்றான்.

அதி, "ம்மா பாப்பாக்கு பசிக்கிது" என்று வயிற்றை காட்ட,

"இந்த குட்டி வயித்துக்கு பசிக்கிதா?" என்று புன்னகையுடன் வினவியவள்,

"இதோ ஐந்து நிமிஷத்துல வந்திடும்" என்று கூறுகையிலே அழைப்பு மணி ஒலித்தது.

"பால் வந்திடுச்சு போல. நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்று எழுந்து சென்று கதவை திறக்க, அந்த குடியிருப்பின் காவலாளி,

"மேம் சார் வாங்கிட்டு வர சொன்னாங்க" என்று ஆங்கிலத்தில் கூறி ஒரு பையை நீட்டினார்.

காவலாளி கூட இத்தனை சரளமாக ஆங்கிலம் பேசுகிறாரே என்று ஆச்சர்யமாக நினைத்தபடி வாங்கியவள்,

"எவ்வளவு ஆகிற்று?" என்று ஆங்கிலத்திலே வினவ,

"சார் ஆல்ரெடி கொடுத்துட்டார் மேம்" என்றுவிட்டு செல்ல,

பையை தூக்கி கொண்டு வந்தவள் உணவையும் சேர்த்து வாங்கிவர கூறிவிட்டார் போல என்று அதன் கனத்திலே அறிந்தவள் உணவு மேஜை மேல அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு சூடாக இருந்த பாலை மகளுக்கு ஆற்றி தருவதற்காக பாத்திரததை தேடி சமையலைறைக்குள் நுழைந்தாள்.

சமையலறை அத்தனை சுத்தமாக இருந்தது. மிக நவீன வசதியுடன் இக்கால சமையலறை என்று சொல்லாமல் சொல்லியது.

எல்லா அலமாரிகளும் மூடியிருக்க முதல் முறை அவ்விடத்தில் நுழைபவளுக்கு எது எது எங்கிருகிறது என்று தெரியவில்லை.

சுற்றி சுற்றி பார்த்தாலும் தெரியவில்லை. சரி ஒவ்வொரு அலமாரியாக திறந்து பார்ப்போம் என்று ஒன்றை திறக்க முயற்சிக்க முடியவில்லை.

அதி வேறு பசிக்கிறது என்றாள் இவரை வேறு காணவில்லையே என்றவள் என்ன செய்வது என்று சிந்திக்கும் சமயம்,

"என்ன செல்வா என்ன தேடுற?" என்றபடி உள்ளே வந்தான் வல்லபன்.

"அது பாப்பாக்கு பால் ஆத்தி கொடுக்க கிளாஸ் எடுக்க வந்தேன்.‌ ஆனால் இங்க எந்த கப்போர்டயும் திறக்க முடியலை" என்று அப்பாவியாக விழித்த மனையாளின் பாவனையில்,

"க்யூட் ஜான்சிராணி" என்று இதழ்களுக்குள் முணுமுணுத்தவன்,

அருகில் சென்று, "இதோ இந்த ஹான்டில இப்படி மேல இழுத்தா வந்திடும்" என்று இழுக்க அது திறந்து கொண்டதில் செல்வாவின் விழிகள் வியப்பில் விரிந்தது.

மீண்டும் மேல ஏற்றி இறக்கி காண்பித்தவன், "வா நீயும் ஒரு தடவை வந்து ட்ரை பண்ணு" என்று அவளது கைப்பிடித்து பின்னால் இருந்து செய்ய வைக்க,

தானாக ஒரு முறை செய்து பார்த்தவள், "திறந்திடுச்சு…" என்று ஆர்ப்பரிப்புடன் கூறியபடி திரும்பியவள் வெகு அருகில் இருந்த அவனது முகத்தை கண்டு பேச்சிழந்து போனாள்.

மனைவியின் முகத்தை கண்டுவிட்டு சிரிப்புடன் விலகியவன்,

"இதோ இந்த எல்லா கப்போர்ஸும் இப்படி தான் ஓபன் பண்ணனும்" என்று ஒரு குவளையை எடுத்து கொண்டு செல்ல அவனது சிரிப்பில் ஒட்டி கொண்ட கூச்சத்துடன் பின்னாலே சென்றாள்.

மகளுக்கு பாலை புகட்டியவன் தனக்கு மனைவிக்குமான உணவை எடுத்து வைக்க அவன் முகத்தை கூட பார்க்காது உண்டு முடித்தாள் செல்வா.

இங்கே தந்தையும் மகளும் ஆயிரம் ஆயிரம் கதைகளை பேசியபடி தான் இருந்தனர். அதில் கலந்து கொள்ளவில்லை எனினும் காதில் வாங்கி கொண்டாள்.

வல்வபனும் மனையாளின் நிலை உணர்ந்து அவளை ஏதும் கூறவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் செல்வா அனைத்தையும் எடுத்து வைக்க வல்லபன் தானும் அவளுக்கு உதவி செய்துவிட்டு மகளுடன் அறைக்கு செல்ல,

செல்வாவிற்கு புரிந்தது அவனுடன் ஓரே அறையில் அவனுடன் தான் உறங்க வேண்டும் என்று.

தன்னால் தனியறையில் உறங்க இயலாது அப்படி இருந்தால் நிச்சயமாக பேனிக் அட்டாக் வந்துவிடும் என்று தெரிந்தது.

அது தான் அதி இருக்கிறாளே அப்படி இல்லை என்றாலும் அவர் உன் கணவர் அவருடன் தான் இனி வாழ்க்கை முழுவதும் நீ பயணிக்க வேண்டும் என்று தனக்கு தானே கூறியபடி அறைக்குள் வந்தவளுக்கு ஆசுவாசம் பிறந்தது.

காரணம் உள்ளே இருந்த மெத்தை ஆறு பேர் தாரளமாக படுக்க கூடிய அளவில் பெரியதாக இருந்தது. இவ்வளவு பெரியதான மெத்தையை முதன் முதலில் இப்போது தான் காண்கிறாள்.

இதில் ஒரு ஓரமாக படுத்து கொள்ளலாம் என நினைத்தவாறு வர, அதி நடுவே படுத்திருந்தாள்.

அருகில் வல்லபன் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ பார்த்து கொண்டிருந்தான்.

அவளை கண்டதும், "நீ தூங்கு செல்வா. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு" என்றுவிட்டு மீண்டும் திரையில் கவனம் செலுத்த,

அதியின் மறுபுறம் வந்து படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை.

காரணம் அவனது அலைபேசியில் கண்ட புகைப்படம் தான்.

அதனை மனத்திரையில் மீட்டி பார்த்தவளுக்கு அப்போது தான் படத்தில் தான் அணிந்திருந்த கண் கண்ணாடி நினைவு கரங்கள் தன்னிச்சையாக முகத்தை தடவியது கண்ணாடி இல்லை.

'கண்ணாடி இல்லையே எங்கு சென்றது. நான் கண்ணாடி இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க மாட்டேனே. இப்போது மூன்று நாட்களாக அணியாமல் சுற்றுயிருக்கிறேனே' என்று குழப்பமாக நினைத்தவளுக்கு அதற்கான விடையை தெரிந்தே ஆக வேண்டும்.

விழிகளை சிமிட்டி தூரத்தில் இருக்கும் பொருட்களை பார்க்க வெகு தெளிவாக தெரிந்தது.

'இதெப்படி சாத்தியம்' என்று அதிர்ந்தவள் எழுந்துவிட்டாள்.

அவளது செயலில் கவனம் கலைந்த வல்லபன், "என்னடா எதுவும் வேணுமா?" என்று கணிவுடன் கேட்க,

அதில் அவளுக்குள் சிறிதான தடுமாற்றம் பிறந்தது.

"அது என் என்னோட ஸ்பெக்ஸ் எங்க?" என்று வினவ,
அவனது முகத்தில் சிறிதான புன்னகை.

"இப்போ தான் உனக்கு உன் ஸ்பெக்ஸ் ஞாபகம் வந்திச்சா?" என்க,

"அது எனக்கு குழப்பத்துல எதுவும் தோணலை. அந்த போட்டோ பார்த்த பிறகு தான் ஞாபகம் வந்துச்சு" என்று தயங்கி கூற,

"எந்த போட்டோ?" என வினா தொடுத்தான்.

"உங்க மொபைல் வால்பேப்பர்ல இருக்க போட்டோ" என்று அலைபேசியை சுட்டி காண்பித்தாள்.

அலைபேசியை எடுத்து புதைப்படத்தை பார்த்தவன், "ஓ… இதுவா" என்றவன் பின்னர்,

"உனக்கு லேசர் பண்ணியாச்சு. அதனால ஸ்பெக்ஸ் போட தேவையில்லை" என்று பதில் மொழிந்தான்.

"ஓ… எப்போ?" என செல்வா கேட்க,

"டூ இயர்ஸ் ஆச்சு" என்றான்.

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தவள்,

"அப்புறம்" என்று இழுக்க,

என்னவென்பதாக வல்லபன் புருவம் உயர்த்தினான்.

"அந்த போட்டே எப்போ எடுத்தது?" என வினவ,

"நம்ம காலேஜ் படிக்கும் போது எடுத்தது" என்றவன் அதே போல மற்றொரு புகைப்படத்தை எடுத்து அவளிடம் காண்பிக்க, அதில் இன்னும் நெருக்கமாக நின்றிருந்தனர்.

அதை பெரியதாக்கி பார்த்தவளுக்கு தான் தானா இது என வேறு சந்தேகம் எழுந்தது.

அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"அப்போ உண்மைக்கே நாம லவ் மேரேஜ் தானா?" என அப்பாவியாக வினா எழுப்ப,

அதில் இதழ்கடையில் சிரிப்புடன்,

"ஹ்ம்ம் ஆமா லவ் மேரேஜ் தான்" என்றவன் பின்னர்,

"அதுவும் நீ தான் என்னை பிடிச்சிருக்குனு என் பின்னாடி சுத்துன" என்க,

அவள், "ஆங்…" என்று திகைத்து விழித்தாள்.

இன்னும் எத்தனை அதிர்ச்சியை தான் தான் தாங்குவது.

காதல் திருமணத்தையே நம்ப முடியவில்லை. இதில் தான் வந்து காதல் கூறி பின்னால் சுற்றினேனா என்று மயக்கம் வராத குறையாக அதிர்ச்சியுடன் பார்த்தவளுக்கு அவனது சிரிப்பில் பொய் கூறுகிறாரோ என்று எண்ணம் வர முறைத்து பார்த்தாள்.

அதில் அவனது சிரிப்பு பெரியதாக சத்தமிட்டு சிரித்துவிட்டான்.

அதில், "ஷ்… மெதுவா பாப்பா தூங்குறா" என்று கிசுகிசுப்பாக கூறியவள் மகளை தட்டி கொடுக்க,

வல்லபனது மனது முழுவதுமாக நிறைந்து போக முகத்தில் அவ்வளவு ரசனையுடன் மனைவியை நோக்கினான்.

சிணுங்கிய மகளை தட்டி கொடுத்துவிட்டு திரும்பியவளுக்கு வல்லபனது ரசனை பார்வையில் சடுதியில் முகம் சிவந்துவிட்டது.

என்னில் நீயழகு

உன்னில் நானழகு
நம்மால் யாவும் அழகு…













 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Selva bhuvana athai nu vallaban kita karanam sonnathuku pinnadi irundha reason ithu than ah vallaba selva ku memory loss aanathu na la ne sonna ellathaiyum nambuva nu epadi ellam adichi vidura ava un pinnadi suthuna aval ah ne partha appo la irundhu ippo varaikum unna parthu athigam ah shock than agura ava
 
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
Selva bhuvana athai nu vallaban kita karanam sonnathuku pinnadi irundha reason ithu than ah vallaba selva ku memory loss aanathu na la ne sonna ellathaiyum nambuva nu epadi ellam adichi vidura ava un pinnadi suthuna aval ah ne partha appo la irundhu ippo varaikum unna parthu athigam ah shock than agura ava
ஆமா 🥰🥰🥰🥰❤️😍😍...
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Edheyyyyy Ava than unna thorathi thorathi love pannalaa. Nalla adichu vidu🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Ethutha selva oda reason ya vallapan pathupan ne feel la pannatha selva ..🤩🤩🤩 aathadi enna ma aduju viduran selva unaya oda oda love 😅😅😅pannala ne thaana avala summa summa kalyanam pannigalama jansirani solli pinnadi suthuna❤️❤️ selva ku nabagam illa nu aduju viduran paraa😂😂😂💕💕
 
Top