• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பாதை - 6

Member
Messages
64
Reaction score
2
Points
8
"வெறித்தனமான செய்தி....ஷாலினி பாடகி நம்ம காலேஜுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வர்றாங்க..."
"என்ன சொல்றே... ஷாலினியா..."
"நம்பவே முடியலை அவங்க எதுக்கு இந்த காலேஜுக்கு வர்றாங்க..."
"ஆனால் அது உண்மையா இருந்தால் ரொம்ப நல்லாருக்கும்..."என வகுப்பில் உள்ள மாணவர்கள் உற்சாகத்தில் பேசி கொண்டு இருக்க,
"நான் மட்டும்தான் ஷாலினி fan நினைச்சா இங்க இருக்க நிறய பேர் இருப்பாங்க போல..."என சிவா கூற,
"இப்போவே இப்படி அந்த பொண்ணு கிளாஸ்க்கு உள்ள வந்தால் கலவரமே நடக்கும் போல... நினைச்சு பாக்கும் போதே தலை வலிக்குது...."என சக்தி கூறுகிறான்.
அப்பொழுது அந்த வகுப்பின் உள்ளே ஷாலினி மற்றும் வகுப்பாசிரியர் நுழைய,
"எல்லாரும் உங்க சீட்ல உக்காருங்க...."என வகுப்பாசிரியர் கூற,
வகுப்பில் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருக்கின்றார்கள்.
"நம்ம கிளஸ்க்கு புது ஸ்டூடண்ட் வந்து இருக்காங்க...உங்களை introduce பண்ணிக்கோங்க..."என வகுப்பாசிரியர் கூற,
"ஐ ஆம் ஷாலினி..."என ஷாலினி கூற,
வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் உற்சாகத்தில் கத்துகின்றனர்.
"அமைதியா இருங்க...எல்லாரும்..."என வகுப்பாசிரியர் கூறி ஷாலினியை வழியனுப்பி வைக்கிறார்.
ஷாலினி வகுப்பில் அமர்ந்து பாட வேளை முடிய, இடைவேளை வருகிறது.
ஷாலினி புது மாணவி என்பதால் பழைய மாணவ மாணவிகள் அவளிடம் பேசி கொண்டு இருக்கின்றார்கள்.
"மலர்.....மலர்..."என சக்தி மலரை அழைக்க,
"என்ன..."என கேட்டு கொண்டே மலர் சக்தியிடம் வருகிறாள்.
"அவகிட்ட சொல்லி வைங்க...எல்லாத்தையும் உலறிட போறா..."என சக்தி கூற,
"நான் முன்னாடியே அவகிட்ட சொல்லிட்டேன்..."என மலர் கூறுகிறாள்.
அப்பொழுது வகுப்பின் வெளியே இருந்து வேறு வகுப்பில் இருந்து சில மாணவர்கள் வந்து சிவாவிடம் ஏதோ பேசி கொண்டு இருக்கின்றார்கள்.
"என்னாச்சு அங்க..."என சக்தி கேட்க,
"எனக்கு தெரியாது....என்னன்னு...வருவாங்க...அவனை எங்கயோ கூட்டிட்டு போவாங்க....அப்புறம் ரெண்டு நாள் சிவா காணாமல் போயிருவான்... அது என்னனு தெரியாம இருக்கறது அவனோட privacy... அதுனால நான் தெரிஞ்சுக்காம இருக்கேன்..."என மலர் கூற,
அங்கே பேசி கொண்டு இருந்தவர்கள் சிவாவின் கையை பிடித்து இழுத்து கொண்டு எங்கோ செல்கிறார்கள்.
"தெரிஞ்சுக்கணும்....என்னன்னு...நீ இங்கேயே இருந்து ஷாலினி எதுவும் உலராமல் பார்த்துக்கோ...."என தன் இருக்கையை விட்டு எழுந்து அவர்களின் பின்னே ஒளிந்து கொண்டு நடக்கிறான் சக்தி.
சிவாவை இழுத்து சென்ற மாணவர்கள் அவனை கல்லூரியின் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று சுற்றி நின்று கொண்டு அவனை பார்க்கின்றனர். அவர்கள் பின்னே தொடர்ந்து சென்ற சக்தி ஒரு இடத்தில் நின்று என்ன நடக்கிறது என பார்க்கிறான்.
அந்த மாணவர்களில் ஒருவன் முன்னே வந்து,"இது ஷாலினிக்காக..."என கூறி கொண்டே தன் கை முட்டியை மடக்கி ஓங்கி சிவாவின் முகத்தில் குத்துகிறான்.
சிவா சுருண்டு கீழ விழ,"எல்லாம் உன்னாலதான்..."என கூறி கொண்டே தன் காலால் கீழ விழ போன சிவாவின் வயிற்றில் எட்டி உதைக்கிறான்.
சிவா வழியில் கீழே விழ அவனது முடியை பிடித்து இழுத்து மீண்டும் சட்டையை பிடித்து தூக்கி முகத்தில் குத்துகிறான்.
"யார் இவங்க...எதுக்கு இப்படி இவங்கிட்ட கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்...."என பயத்தில் பார்த்து கொண்டு இருக்கின்றான் சக்தி.
கீழே விழுந்த சிவாவை மற்ற மாணவர்கள் காலால் உதைத்து விட்டு அங்கே இருந்து கிளம்புகிறார்கள்.
அடி வாங்கி உடலெல்லாம் காயங்களுடன் தடுமாறி எழுந்து உட்கார்ந்த சிவா தன் கால்சட்டை பையில் உள்ள ஒரு மிட்டாயை எடுத்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றான். தன் காயங்களை பார்த்தபடி சிவா அமர்ந்து இருக்க, அவன் முன்னே வந்த சக்தி,
"ஹா... ஆர் யூ ஓகே...?"என கேட்க,
"ஆமா... ஐ ஆம் ஓகே...இத யார்கிட்டேயும் சொல்லாத..."என கூறி கொண்டே எழுந்து சிவா நடந்து முன்னே செல்ல, அவனது கைபேசி அழைக்கிறது.
"இவனா....மறுபடியும் ஏதோ பவர் இருக்கவனை கண்டுபிடிச்சு இருக்காங்க போல...நீ முன்னாடி போ...நான் டிரஸ் மாத்திட்டு முகம் கழுவிட்டு வர்றேன்..."என சிவா கூற, சக்தி சரியென கூறிவிட்டு அங்கே இருந்து வேதியியல் ஆய்வகத்தை நோக்கி செல்கிறான்.
"என்ன இது..."என ஆய்வகத்தின் உள்ளே நின்று ஷாலினி கேள்வி கேட்டு கொண்டு இருக்க ஆய்வகத்தின் உள்ளே நுழைகிறான் சக்தி.
"இது வச்சுத்தான் உன்னை கண்டுபிடிச்சோம்....எல்லாரையும் இப்படித்தான் கண்டுபிடிப்போம்..."என மலர் கூறி கொண்டு இருக்கிறாள்.
அப்பொழுது அங்கு வந்த சிவாவை பார்த்த ஷாலினி,"என்னாச்சு....உனக்கு.." என கேட்க,
"ஒண்ணும் ஆகலை....நான் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துட்டேன்...."என சிவா கூறி கொண்டே வரைபடத்தின் அருகே செல்கிறான்.
"நீ ஹாஸ்பிடல் எதுவும் போகலையா.."என ஷாலினி கேட்க "யார்னு சொல்லு போய் பழி வாங்கிடலாம்..."என ஷாலினியின் உடலினுள் உள்ள நிஷா கூறுகிறாள்.
"என்னாச்சு...."என சக்தியிடம் அமைதியாக மலர் கேட்க,
"அப்புறமா சொல்லறேன்..."என சக்தி கூறுகிறான்.
அப்பொழுது கதவை திறந்து கொண்டு உடல் நனைந்தபடி அந்த மாணவன் உள்ளே வந்து வரைபடத்தின் அருகே சென்று தன் கையை நீட்டி ஒரு இடத்தில் ஒரு சொட்டு நீரை விடுகிறான்.
"அவங்களோட பவர்....levitation....அதாவது பறக்கிறது...."என கூறி விட்டு அங்கிருந்து செல்ல,
"கண்டிப்பா இது அவனாதான் இருக்கும்..."என சக்தி கூறுகிறான்
"யாரு..."என மலர் கேட்க,
"இரு நானே காட்டறேன்..."என தன் கைபேசியை எடுத்து போன வாரம் வெளியான செய்தியை காட்டுகிறான்.
"தமிழ்நாட்டில் பறக்கும் மனிதன்..."என அதில் போட்டு இருந்து தலைப்பை படிக்கிறாள் ஷாலினி.
"என்ன நியூஸ்ல எல்லாம் வந்து இருக்கு..."என சிவா கேட்க,
"இது சும்மா பொய் நியூஸ் என நினைத்தேன்..."என சக்தி கூற,
"சரி வாங்க போலாம்..."என சிவா கூறுகின்றான்.
"எங்க..."என மலர் கேட்க,
"அந்த நியூஸ் சொல்லிருக்க இடத்தை பாருங்க...ஒரு மலையை சொல்லிருக்காங்க...என்னோட கணிப்பு சரியா இருந்தால் அந்த மலையில் அவன் பறக்கிறதுக்கு தன்னோட சக்தியை கட்டுபடுத்த பயிற்சி எடுத்துட்டு இருந்திருக்கனும்...நம்ம அவனோட இடத்துக்கு போனால் அவனா நம்மள தேடி வருவான்..."என சிவா கூற,
"சரி...எப்போ வரைக்கும் நாம அங்க இருக்கணும்..."என சக்தி கேட்க,
"அவன் வர்ற வரைக்கும்..."என சிவா கூறுகிறான்.
"கேவலமான ஐடியா..."என நிஷா ஷாலினியின் உடலில் இருந்து கூற,
"இங்க பாரு...ஷாலினி உடம்புக்குள் இருந்துட்டு இப்படி சொல்லாத..."என சிவா கூறுகிறான்.
"அல்ரைட்...இப்போ சூப்பர் மார்கெட் போவோமா..."என மலர் கேட்க,
"அது எதுக்கு..."என சக்தி கேட்க,
"வேற எதுக்கு மலைக்கு ட்ரிப் போறோம் அதுக்கு purchase..."என மலர் கூற,
"நம்ம என்ன வேலையா போறோம்...நீ என்ன ட்ரிப் சொல்றே..."என சக்தி கூற,
"என்னை பொறுத்த வரையில் ட்ரெக்கிங்..."என மலர் கூறி கொண்டிருக்க,
சிவா நிஷாவின் அருகில் சென்று,"excuse me... நீங்க தப்பா நினைக்கலேன்னா...நீங்க போய்ட்டு ஷாலினியை வர சொல்றீங்களா..."என சிவா கேட்க,
"முடியாது....எனக்கு எப்போ போக தோணுதோ அப்போதான் போவேன்..."என நிஷா கூறி தன் கையில் நெருப்பை கொண்டு வர,
"கோவபடாதீங்க... சில்..."என சிவா கூறுகிறான்.
"அருமையான டீம்...இத வச்சிட்டு காட்டுக்கு வேற போக சொல்லறாங்க..."என சக்தி மனதினுள் நினைத்து கொண்டே,"சரி போலாமா..."என கேட்கிறான்.
அருகில் இருக்கும் சூப்பர் மார்கெட் சென்ற மலர் அங்கே உள்ள சோளைகருதை எடுக்கிறாள்.
"எதுக்கு இது..."என சக்தி கேட்க,
"இன்னைக்கு நைட்டு நாம barbecue செய்ய போறோம்...அதுக்கு..."என மலர் கூற,
"Barbecue...? புகை வந்துச்சுன்னா நம்ம இடம் தெரிஞ்சு போயிரும்ல..."என சக்தி கூற,
"ஆமா...அப்படித்தான் வர வைக்க முடியும்..."என சிவா கூறுகிறான்.
"சரி உனக்கு என்ன சிக்கன் வேணுமா மட்டன் வேணுமா..."என சிவா கேட்க,
"ஏதாவது செய்ங்கடா...நான் என் தங்கச்சிக்கு சொல்லிட்டு வந்துடறேன்..."என சக்தி கூறிவிட்டு அங்கே இருந்து வெளியே சென்று தன் அலைபேசியில் அமமுவை தொடர்பு கொண்டு பேசுகிறான்.
"நான் இன்னைக்கு நைட்டு வரமாட்டேன்... ப்ரெண்ட் வீட்டுல தங்க போகிறேன்..."என சக்தி கூற,
"சரி...அப்புறம் நான் கேட்ட விஷயம் மறந்துடாத..."என அம்மு கூற,
"என்னது..."என சக்தி கேட்க,
"என்னதா....ஷாலினியை மீட் பண்ண வைக்கறேன்னு சொன்னது..."என அம்மு கூற,
"சரி..."என கூறிவிட்டு தன் கைபேசியை துண்டிக்கிறான்.
மீண்டும் உள்ளே செல்ல சிவா காளான் உருளைக்கிழங்கு எடுத்து கொண்டு வருகிறான்.
"இது ஓகே வா ஷாலினி..."என கேட்க,
"ம்ம்...இது ஓகே தான்...போதும் இதுவே.."என ஷாலினி கூற,
சிரித்து கொண்டே அங்கே இருந்து நடந்து சக்தியிடம் வந்த சிவா,"ஷாலினிகிட்ட தனியா பேசிட்டேன் மச்சி..."என சந்தோசத்தில் கூறுகின்றான்.
"யார்ரா இவன்...காலைல அந்த அடி வாங்கிட்டு இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருக்கான்..."என மனதினுள் நினைத்து கொள்கிறான்.
நான்கு சக்கர வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு நான்கு பேரும் அந்த மலைக்கு சென்று கீழே நிறுத்துகின்றனர்.
"சரி...இங்க இருந்து நம்ம நடந்துதான் போகணும்...பசங்க ரெண்டு பேரும் bag எடுத்துட்டு நடங்க...அங்க போய் கேம்ப் போடுங்க...பொண்ணுங்க நாங்க ரெண்டு பேரும் சாப்பாடு ரெடி பண்ணுறோம்..."என மலர் கூற,
சக்தி பை
களை எடுத்து கொள்ள சிவா பெட்டிகளை எடுத்து கொண்டு மலையை நோக்கி நடக்க தொடங்குகிறார்கள்.

(தொடரும்.....)
1000207705.jpg
 
Top