• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பாதை - 3

Member
Messages
51
Reaction score
2
Points
8
"ஒரு வழியாக கண்டுபிடிச்சு எச்சரிக்கை செய்தாச்சு..." என சங்கரின் கல்லூரியில் இருந்து வெளியே வந்த சிவா கூற,
"நீங்க எப்போதும் இப்படித்தான் பண்ணுவீங்களா...."என சக்தி கேட்கிறான்.
"ஆமாம்....என்னால இதுக்கு மேலயும் இன்னொருத்தர் என் அண்ணன் மாதிரி கஸ்டப்படுவதை பார்க்க முடியாது..."என மலர் கூற,
"சரி.... scientists உன் அண்ணனை கூட்டிட்டு போன பின்னாடி என்ன நடந்துச்சு....?"என சக்தி கேட்க,
"அது பத்தி உனக்கு தெரியனுமா....சரி அப்போ இப்போ நீ ஃப்ரீயா.... என்கூட கொஞ்சம் வர்றியா...."என மலர் கேட்க,
"எங்க..?"என சக்தி கேட்க,
"என் அண்ணாவை பார்க்க..."என மலர் கூறுகின்றாள்.
"சிவா....நீயும் வர்றியா...."என சக்தி கேட்க,
"இல்லை...நீங்க போய்ட்டு வாங்க....எனக்கு வேற வேலை ஒன்னு இருக்கு..."என சிவா கூறி அவர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டு வேறு திசையில் நடந்து செல்கிறான்.
மலரும் சக்தியும் பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அங்கே இருந்து பேருந்தில் ஏறி மலரின் அண்ணனை சந்திக்க செல்கின்றனர்.
"இது எல்லாம் ஆரம்பிச்சது என் அண்ணனுக்கு சூப்பர் பவர் கிடைச்ச பொழுதுதான்...நான் அப்போ ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்...என் அண்ணனுக்கு music band ரொம்ப இஷ்டம்...அவன் அதுக்குள்ள போக ரொம்ப கஷ்டபட்டான்...ஒரு வழியா அவன் அதுக்குள்ள போய்ட்டான்...அப்போ ஒருநாள் எங்க அம்மாக்கும் என் அண்ணனுக்கும் ஒரு சண்டை வந்துச்சு...அது ஏன்னு தெரியல....நான் அதன் பின்னாடி ஸ்கூல்க்கு போனேன்...அப்போ தினமும் மாலை எனக்கு மெடிக்கல் டெஸ்ட் எல்லாம் எடுப்பாங்க...அப்போ ஸ்கூல்க்கு போய்ட்டு வந்து பார்த்தா அங்க அப்போ என் அண்ணன் இருக்கமாட்டான்.... நான் எப்பொழுதெல்லாம் என் அண்ணனை பார்க்க முயற்சி பண்ணுறேனோ அப்பொழுதெல்லாம் என் நண்பர்கள் மற்றும் அம்மா தடுத்திடுவாங்க...அதே சமயம் என் அண்ணன் மேல சோதனை மேல சோதனை பண்ணிட்டு இருந்தாங்க...என் அண்ணனோட சூப்பர் பவர் காற்றை அதிர செய்வது...அது மூலமாக என் அண்ணன் கிதார் நல்லா வாசிச்சிட்டு இருந்தான்...ஆனால் scientists அவனோட சக்தியை பயன்படுத்த நினைச்சாங்க...அவனோட இரத்தத்தை உறிஞ்சி எடுத்து அவனோட உடம்பில கரெண்ட் பாஸ் பண்ணி நிறைய சோதனை பண்ணினாங்க...கடைசியாக ஒரு வருஷம் கழிச்சு என்னால என் அண்ணனை பார்க்க முடிஞ்சது...நான் பார்த்த அந்த மனுஷன் நான் பார்த்து வளர்ந்த என் அண்ணன் இல்லை...நான் அவன் தங்கச்சி என்றே அவனுக்கு தெரியல...அப்போதான் தெரிய வந்தது என்னை சுத்தி இருந்த நண்பர்கள் எல்லாரும் போலியாக scientists களால அனுப்பபட்டவங்க என்று...அவன் மேல தொடர்ச்சியாக சோதனை பண்ணி பண்ணி அவனுக்கு மன அழுத்தம் அதிகமாக ஆயிருச்சு... உடலாலும் மனதாலும் என் அண்ணன் கஷ்டப்பட்டு இருந்தான்...அவனை சோதனை பண்ணும் பொழுதெல்லாம் அவனோட அலறல் சத்தம் வெளிய வரைக்கும் கேட்டுச்சு...என்னை அவங்க தினமும் மெடிக்கல் டெஸ்ட் பண்ணினது கூட நான் அவன் தங்கச்சி எனக்கும் அவனை மாதிரி சூப்பர் பவர் இருக்கும் என்றுதான்...அதுனால என்னையும் என் அம்மாவையும் தனியா ஒரு இடத்தில் வச்சு கண்காணிச்சிட்டு இருந்தாங்க....யாரையும் இதுக்கு மேல என்னால நம்ப முடியல...அதனால் நான் ஸ்கூல் விட்டு ஓடி வந்துட்டேன்..."என மலர் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது சக்தியிடம் கூற,
"அதுக்கு அப்புறம் என்னாச்சு..."என சக்தி கேட்க,
"நான் ஒருத்தர அதுக்கு பின்னாடி சந்தித்தேன்...அவரை நம்பினேன்... அதுனாலதான் இப்போ இங்க இருக்கேன்..."என மலர் கூற,
"யார் அது..."என சக்தி கேட்கிறான்.
"இதுதான் நம்ம இறங்க வேண்டிய ஸ்டாப்.."என மலர் கூற, மலரும் சக்தியும் அந்த பேருந்தை விட்டு இறங்கி நடக்கின்றனர்.
நடந்து அங்கே உள்ள ஒரு மருத்துவமனையின் உள்ளே நடந்து சென்று,
" என் பெயர் மலர்....என் அண்ணன் ஹரியை பார்க்கணும்...."என மலர் அங்கு உள்ள செவிலியரிடம் கூறுகிறாள்.
"அவர் 12 ஆம் ரூமில் இருக்கிறார்...போய் பாருங்கள்..."என செவிலியர் கூறுகிறார்.
"அவரை நான் வெளிய கூட்டிட்டு போகலாமா...."என மலர் கேட்க,
"போகலாம்....ஆனால் நீங்க கூட இருக்கணும்..."என செவிலியர் கூற,
"தேங்க்ஸ்..."என கூறி மலர் மருத்துவமனையின் உள்ளே நடக்க அவள் பின்னால் சக்தி நடந்து செல்கிறான்.
அங்கு உள்ள ஒரு அறையின் மேல் 12 என எழுதி இருக்க அதன் கதவை தட்டி திரக்கிறாள் மலர்.
உள்ளே கத்தி கொண்டே மலரின் அண்ணன் ஹரி கட்டிலின் மேல் உள்ள மெத்தையை கிழித்து வீசி கொண்டு இருக்கின்றான்.
"மயக்க மருந்து இறங்கிடுச்சு போல..."என மலர் கூறி கொண்டே அறையின் உள்ளே செல்கிறாள்.
"என்ன பன்றாரு இவரு..."என சக்தி கேட்க,
"Music compose பண்ணுறான்... கிதார் வாசிக்கிறான்..இப்போ இவனை பொறுத்த வரைக்கும் அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கான்....." என மலர் கூறுகின்றாள்.
அப்பொழுது அங்கு வந்த செவிலியர் ஒருவர் ஹரியை அமைதிப்படுத்த,
"வெளிய போகலாமா...இது மாலை நேரம் வெளிய பார்க்க அழகாக இருக்கும்..."என மலர் கேட்க,
பதிலேதும் பேசாமல் ஹரி அறையை வெறித்து பார்க்கிறான்.
ஹரியை சக்கர நா்காலியில் உட்கார வைத்து மருத்துவமனையின் உள்ளே பின்னாடி இருக்கும் தோட்டத்திற்கு அழைத்து செல்கிறாள் மலர்.
"பார்க்க நல்லாருக்கு..."என சக்தி அந்த தோட்டத்தை பார்க்க,
"தெரியும்....அதான் இவன இங்க கூட்டிட்டு வந்தேன்..."என மலர் கூற,
"இந்த ஹாஸ்பிடல் எப்படி இவரை கூட்டிட்டு வந்த..."என சக்தி கேட்க,
"நான் சொன்னேன்ல...நான் நம்பும் ஒரு நபர் என்று அவருக்குத்தான் நன்றி சொல்லணும்...அவங்கதான் இவனை இந்த ஹாஸ்பிடலில் சேர்த்து பார்த்துகிட்டாங்க...."என மலர் கூறி ஹரியை பார்க்க,
"இன்னைக்கும் ஒரு ரியாக்ஷனும் இல்லை...."என மலர் பெருமூச்சு விட,
"ஹே... என்னைக்காவது ஒருநாள் உன் அண்ணன் சரி ஆவார்....இதுக்கு யாராச்சும் ஏதாச்சும் தீர்வு கண்டுபிடிப்பாங்க..."என சக்தி கூற,
"இப்போ என் அண்ணனை மாதிரி ஆளு மேல யாரும் சோதனை செஞ்சு குணப்படுத்த மாட்டாங்க..."என மலர் கூற,
"ஏன் அப்படி சொல்றே..."என சக்தி கேட்கிறான்.
"Scientists பொறுத்த வரைக்கும் நம்மள மாதிரி powers இருக்க ஆளுங்க எல்லாம் வெறும் பேட்டரி மாதிரிதான்... ஒரு தடவை நம்மள வச்சி சோதனை செஞ்சு எல்லா விவரமும் தெரிஞ்ச பின்னாடி நம்மள தூக்கி வீசிட்டு வேற பேட்டரி தேடி போயிடுவாங்க....இந்த மாதிரி பவர் வச்சிருந்த ஆள யாரும் கண்டுக்க மாட்டாங்க...நாளைக்கு யாருக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது... அதானல்தான் என்னால முடிஞ்ச அளவு எல்லாரையும் காப்பாற்ற முயற்சி பண்ணுறேன்..."என மலர் கூறி ஹரியை திருப்பி,
"திரும்ப போகலாம்..."என கூறுகிறாள்.
ஹரியை மீண்டும் மருத்துவமனையில் அவனின் அறையில் படுக்க வைத்து விட்டு மீண்டும் பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கின்றனர் இருவரும்.
"நீ ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கே..."என சக்தி கூற,
"என்ன பாவமா பாக்கறியா.. திடீர் என நல்லவன் மாதிரி நடிக்காத...உனக்கு செட் ஆகல...நீ இன்னும் ஒரு ஏமாத்து பேர்வழிதான்..."என மலர் ஜன்னலை பார்த்தபடி கூறுகிறாள்.
"ஆமாம் இவள் சரியா சொல்றா...இது நான் இல்லை..."என மனதினுள் நினைத்தபடி மலரை அனுப்பிவிட்டு சக்தி தனது வீட்டிற்கு வந்தடைக்கிறான்.
"எங்க போனே இவளோ நேரம்...."என மறைத்தபடி அம்மு கேட்க,
"சாரி...புது காலேஜ் புது ப்ரெண்ட்ஸ்...அதான் வெளிய போயிருந்தேன்..."என சக்தி கூற,
"கால் பண்ணி சொல்ல தெரியாதா..."என அம்மு கேட்க,
"சாரி மறந்துட்டேன்..."என சக்தி கூறுகிறான்.
"சரி... என்ஜாய் பண்ணியா நல்லா... உட்காரு இன்னைக்கு நைட்டு நான் புதுசா ஒன்னு சமைச்சு இருக்கேன்..."என கூறி கொண்டே அம்மு சென்று சக்திக்கு தான் சமைத்த சாப்பாடு தட்டில் போட்டு கொண்டு இருக்க,
"எனக்கு பவர் இருக்கும் பட்சத்தில் அம்முவிற்கும் ஒரு வேளை பவர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது...ஒருவேளை என்னை அவங்க பிடிச்சிட்டா... அம்முவும் மலர் மாதிரி கஷ்டப்படுவா...."என அம்முவை பார்த்தபடி சக்தி நினைத்து கொண்டு இருக்க,
"இந்தா....சாப்பிடு..."என அம்மு தட்டை சக்தியிடம் கொடுக்க, அதை ஒரு வாய் சாப்பிட்ட சக்தி,
"இது இனிக்கிது..."என சக்தி நிமிர்ந்து பார்த்து,"எதை பார்த்தும்மா இதை பண்ணுன..."என சக்தி கேட்க,
"சொல்லமாட்டேன் அது சீக்ரெட்..."என அம்மு கூற,
"அருமை...இதுக்கு இவ பண்ணுற நூடுல்ஸ் எவ்ளோவோ பரவால்லை..."என மனதினுள் எண்ணி கொண்டே சாப்பிட்டு முடிக்கிறான் சக்தி.
சாப்பிட்டு முடித்து அம்மு வழக்கம் போல் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து கொண்டு இருக்கிறாள்.
"இது நீ வழக்கமாக பார்க்கிறதுதான்...போய் படுத்து தூங்கு அம்மு.."என சக்தி கூற,
"இன்னைக்கு வால் நட்சத்திரம் தெரிய வாய்ப்பு இருக்குன்னு நியூஸ்ல சொல்லிருக்கான்...அதை பார்க்காம நான் எப்படி தூங்குவேன்...அதுவும் இது சாதாரண வால் நட்சத்திரம் இல்லை...ரொம்ப rare..."என அம்மு கூற,
"என்ன rare... அப்படி "என சக்தி கேட்க,
"அந்த விதமான வால் நட்சத்திரம் எல்லாம் சில நூறு வருடங்களுக்கு ஒரு முறைதான் பூமிக்கு தெரியும்..."என அம்மு கூற,
"எனக்கு அந்த மாதிரி வால் நட்சத்திரம் பத்தி எல்லாம் தெரியாது..."என சக்தி வானத்தை நோக்கி பார்க்கிறான்.
"இனி எந்த மாதிரி பவர் இருக்க ஆளை பார்க்க போறோமோ... அம்முவுக்கு மட்டும் மலருக்கு நடந்த மாதிரி எதுவும் ஆக கூடாது..."என நினைத்து கொண்டே சக்தியும் சேர்ந்து வானத்தை அம்முவுடன் பார்க்கிறான்.
(தொடரும்.....)

1000200839.jpg
1000201509.jpg
 
Top