Member
- Messages
- 55
- Reaction score
- 2
- Points
- 8
தனது உடைகளை அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன் முகத்தை பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் சக்தி. தனக்கு இன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் ஆர்வமாக தயார் ஆகி ,"நான் காலேஜுக்கு போய்ட்டு வர்றேன்..."என சக்தி கூறுகின்றான்.
"அதுக்குள்ளே போகாத...இரு...நீ ஒன்னு மறந்துட்டே...."என தன் கையில் டிஃபன் பாக்ஸ் உடன் வருகிறாள் அம்மு.
"இந்தா...."என சக்தி முன்பு அதை நீட்ட,
"இன்னைக்கு என்ன சாப்பாடு..."என சக்தி கேட்க,
"உனக்கு பிடித்த நூடுல்ஸ்..."என சிரித்து கொண்டே அம்மு கூறுகின்றாள்.
"மறுபடியுமா...." என மனதினுள் எண்ணி கொண்டே,"தேங்க்ஸ்....புது ஸ்கூல் லேட் பண்ணிடாத..."என கூறி கொண்டே சக்தி தன் வீட்டில் இருந்து கிளம்புகிறான்.
வீட்டில் இருந்து புறப்பட்ட சக்தி கல்லூரியில் நுழைந்து தனது வகுப்பறையை கண்டுபிடித்து அதன் உள்ளே செல்கிறான்.
"வெல்கம் டூ ஆர் காலேஜ்..."என சக்தியை வீடியோ எடுத்தபடி நிற்கிறாள் மலர்.
பக்கத்தில் சிவா நிற்க,"இங்க இருக்க எல்லாரும் சூப்பர் பவர் இருக்க ஆளுங்களா..." என சக்தி கேட்க,
இல்லை இங்கே இருக்க நிறைய பேர் கொஞ்சம் கொஞ்சம் அறிகுறி இருக்கறவங்க... இல்லைன்னா இப்போதான் டெவலப் ஆயிட்டு இருக்கிறவங்க...."என சிவா கூற,
"இதுக்கெல்லாம் காலேஜ் மாத்தி வச்சு இருக்கீங்களா..." என சக்தி கேட்கிறான்.
"ஆமா....நம்மள மாதிரி சூப்பர் பவர் இருக்கவங்க படிக்கும் ஒரே இடம் இதுதான்...இது இல்லைன்னா நம்மளை ஒரு எக்பெரிமென்ட் சப்ஜெக்டா இல்ல ஒரு கினே பிக் மாதிரி பார்ப்பாங்க.... ஒருதடவை நீ அவங்ககிட்ட மாட்டிட்டால்....உன் வாழ்க்கை அவ்ளோதான்...."என மலர் கூற,
"அப்படியா....அது என்ன அந்த அளவுக்கு கஷ்டமா என்ன..."என சக்தி சிரித்து கொண்டே கேட்க,
"ஆமாம்....கஷ்டம்தான் என் அண்ணாவுக்கு அதுதான் நடந்தது..."என மலர் கூறி கொண்டே சக்தியை பார்க்க,
"அந்த சூப்பர் பவர் பத்தி தெரிஞ்சுக்க அவங்களை கொடுமை பண்ணுவாங்க...அதை மக்கள் நல்லதுக்கு பயன்படுத்துவது என முடிவு செய்து நம்மள வருத்துவாங்க...."என மலர் கூற,
"ஆனால் நீங்க என்னை இந்த காலேஜ்ல சேர்த்து என்னோட சக்தியை இந்த உலகத்துக்கு உபயோகப்படுத்த வேண்டும் என சொன்னீங்க...."என சக்தி கூற,
"அது எல்லாத்துக்கும் முன்னாடி நம்மளுக்கு ஒரு முக்கியமான மிஷன் இருக்கு...நம்மள மாதிரி சூப்பர் பவர் வச்சிட்டு அதை கட்டுபடுத்த தெரியாம இருக்கவங்களை கண்டுபிடிக்கணும்... வேற யாராச்சும் அவங்களை கண்டுபிடிப்பதற்குள் அவங்களை காப்பாத்தணும்....இல்லை.... அவங்களுக்கு நம்ம வார்ன் பண்ணனும்...அவங்க பவர்ஸ் பயன்படுத்தாமல் இருக்க...."என சிவா கூற,
"நான் எதுக்கு உங்களுக்கு உதவி பண்ணனும்...."என சக்தி கேட்க,
"இதை பண்ணுனா உனக்கு காசு கிடைக்கும்....உன் தங்கச்சி அம்மு தினமும் பார்ட் டைம் வேலை செய்ய தேவை இல்லை...உங்களுக்கு இது உதவியா இருக்கும்....."என மலர் கூற,
பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறான் சக்தி.
"எனது பெயர் சக்தி....நான் இதுக்கு முன்னாடி படித்த கல்லூரியில் இருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி வந்து இருக்கேன்..."என சக்தி வகுப்பறையின் முன்னால் நின்று கூறி தன்னை மற்ற மாணவர்களோடு அறிமுகம் செய்து கொள்கிறான்.
வகுப்பில் உள்ள பெண்கள் அவனை பார்க்க,"ஆஹா...பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்காங்க....நம்ம பவர் use பண்ணி ஏதாச்சும் ஒரு பெண்ணுடன் கமிட் ஆகிற வேண்டியதுதான்..."என சக்தி சுற்றும் முற்றும் பார்க்க,
ஒரு ஓரத்தில் மலர் கன்னத்தில் கை வைத்தபடி அவனை பார்க்கிறாள். மறு ஓரத்தில் சிவா அமர்ந்து கொண்டு கைகளை அசைத்து காட்டுகிறான்.
"இவங்க என் கிளாஸ்தானா....இனி விளங்கின மாதிரிதான்..."என நினைத்து கொண்டே அவன் இருக்கையில் அமர்கிறான்.
வகுப்பு முடிந்து உணவு இடைவேளை வர, "ஹே....இன்னைக்கு லஞ்ச்க்கு சாப்பாடு கொண்டு வந்து இருக்கியா..."என சிவா சக்தியிடம் கேட்க,
"இல்லை...கொண்டு வரல..."என சக்தி கூற,
"சரி...அப்போ கேண்டீன் போலாமா..."என சிவா கேட்க,
"போலாம்... நூடுல்ஸ்க்கு அது பரவாஇல்லை...."என சக்தி மனதில் எண்ணி கொண்டே,"நீ அவளை கூப்பிடலயா...."என சக்தி தனியாக அமர்ந்து இருக்கும் மலரை பார்த்து கொண்டே கேட்க,
"உனக்கு வேணும்னா சொல்லு கூப்பிடலாம்..."என சிவா கூற,
"இல்ல வேணாம்..."என கூறி கொண்டே சக்தியும் சிவாவும் எழுந்து கேண்டீன் சென்று பார்க்க அங்கு கூட்டமாக இருக்கிறது.
"என்ன இவ்ளோ கூட்டம்...கால் கூட வைக்க முடியாது போல..."என சக்தி கூற,
"விடு நான் பார்த்துக்கறேன்... என்னோட பவர் பயன்படுத்த போறேன்...."என சிவா கூற,
"என்ன அது பண்ண முடியுமா..."என சக்தி கேட்க,
"இப்போ பாரு...என்ன என்னோட ஸ்பீட்க்கு எந்த சாப்பாடு எடுத்துட்டு வருவேன்னு தெரியாது...."என கூறி கொண்டே சிவா வேகமாக ஓட அவனிற்கு எல்லாம் மெதுவாக தெரிகிறது. தனது கைகளை நீட்டி உணவு பொட்டலத்தை எடுத்துவிட்டு அதற்கு காசை அங்கேயே வைத்துவிட்டு திரும்பி வேகமாக வந்து நிற்க முடியால் பக்கத்தில் இருந்த சுவற்றில் மோதி விழுகிறான்.
கீழே விழுந்து கிடக்கும் சிவாவை பார்த்து," ஆர் யூ ஓகே...."என சக்தி கேட்க,
"நான் என்னோட டிரஸ் உள்ளே தற்காப்பு கவசம் போட்டு இருக்கேன்...அதனால் பெரிய அடி ஒண்ணும் ஆகாது..."என கூறி கொண்டே எழுந்து தனது துணிகளின் மீது உள்ள தூசுக்களை தட்டியபடி உணவு பொட்டலத்தை பிரிக்கிறார்கள்.
"நல்லா நசுங்கி போயிருக்கு...இப்படியா பிடிப்பே..."என சக்தி கேட்க,
"அந்த வேகத்தில் நான் ஓடும் போது என்னால மெதுவா கட்டுப்பாடோட எடுக்க முடியும் என நீ நினைக்கறியா..."என சிவா கூற,
"ஆமா...ஆமா...ஓட்டை பவர்...."என மனதில் நினைத்துக் கொண்டே திரும்பி பார்க்க மலர் தனியாக உணவு உண்டு கொண்டு இருக்கிறாள்.
"அவளுக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லையா....பவர் வேற இருக்கு..."என சக்தி கேட்க,
"அவளோட பவர் ஒரே ஒரு ஆளுக்கு மட்டும் தெரியாம மறைவது...ஆனால் மத்தவங்க கண்ணுக்கு அவ தெரிவா...அதுனாலதான் அவ இப்படி இருக்கா...அவ அவளோட பவர் பயன்படுத்தி அவளுக்கு ஒரு தோழி ஏற்படுத்திகிட்டாலும் பார்க்கற ஆளு என்ன நினைப்பாங்க...அது மட்டுமில்லாம இப்படி ஒரு பவர் இருக்க ஆளுகிட்ட ப்ரெண்ட் ஆன அவங்களுக்கு தெரியாம இவ மறைஞ்சு ஏதாச்சும் பாத்திருவான்னு பயம்...அவ ஸ்கூல் படிக்கும் பொழுது இப்படி இல்லைன்னு நான் கேள்விபட்டு இருக்கேன்...அங்க பாரு அவ இங்க வர்றா...."என சிவா சக்தியிடம் கூற, எதிரே மலர் நடந்து கொண்டு அவர்களை நோக்கி வருகிறாள்.
"மீட்டிங் ஒன்னு போடணும்...."என மலர் கூற,
"என்னது"என சக்தி கேட்கிறான்.
"நம்ம எல்லாரும் நம்ம chemistry lab உள்ள போகனும்னு சொல்லறா...அதுதான் நம்ம மீட்டிங் ஸ்பாட்...."என சிவா சக்தியிடம் கூறுகிறான்.
சக்தி சிவா மற்றும் மலர் மூவரும் அங்கு உள்ள வேதியியல் ஆய்வகத்தின் கதவை திறந்து உள்ளே செல்ல உள்ளே சென்ற சக்தி சுற்றி பார்க்கிறான். உட்கார நாற்காலி மற்றும் ஒரு மேசையின் மீது அந்த ஊரின் வரைபடம் இருக்கிறது.
அப்பொழுது தொப்பலாக நனைந்தபடி ஒரு மாணவன் அந்த அறையின் கதவை திறந்து உள்ளே வருகின்றான்.
அவனை பார்த்து,"ஆமா யார் இவன்..."என சக்தி கேட்க,
நனைந்தபடி வந்த அங்க மாணவன் வரைபடத்தில் ஒரு இடத்தில் நீர் சொட்டு விட்டு,"அவன் பவர் psychic photography.... அதாவது மணசக்தி புகைப்படம்..."என கூறி விட்டு அங்கே இருந்து கதவை திறந்து வெளியே செல்கிறான்.
"யார் இவன்...இங்க என்ன நடக்குது...."என சக்தி கேட்க,
"இவன்தான் எங்களுக்கு பவர் இருக்கும் ஆளுங்களையும் அவங்க பவர்சும் சொல்லிட்டு போவான்....அதுதான் அவனோட பவர்....உன்னையும் நாங்க இப்படித்தான் கண்டுபிடிச்சோம்...."என மலர் கூற,
"இது நம்ம காலேஜுக்கு பக்கத்து காலேஜ்தான்...அவனை நம்ம சந்திக்கணும்...மதியம் கிளாஸ் கட் அடிச்சிடலாம்...."என சிவா கூற,
"எதுக்கு...."என சக்தி கேட்க,
"நம்ம விசாரணைக்கு...."என சிவா கூற,
"நம்ம ஒண்ணும் போலீஸ் இல்லை...."என சக்தி கூற,
"அப்படி ஒரு வேளை அவன் போலீஸ்ல மாட்டுனா அவ்ளோதான் அவன் வாழ்க்கை ஓவர்...."என கூறுகிறான் சிவா.
சூரியன் தனது வெளிச்சத்தை கொடுக்க நிழல் கூட உடலை விட்டு வெளியே வராமல் இருந்த மத்திய நேரம் அது.
மூவரும் பக்கத்து கல்லூரியின் முன் நின்று கொண்டு பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
"ஆரம்பிக்கலாம்..."என மலர் கூறி கொண்டே கல்லூரியின் உள்ளே நுழைய,
"நாமும் உள்ளே போலாம் வா..."என சிவா கூறுகிறான்.
"உள்ள போய் நம்ம என்ன பண்றது...."என சக்தி கேட்க,
"நீ புதுசா வந்திருக்கே உனக்கு ஏதாச்சும் வித்தியாசமா தெரியலாம்...நீ மத்தவங்களிட்ட அவனை பத்தி விவரங்களை சேகரிக்கலாம்...இப்போ நமக்கு அவன் சூப்பர் பவர் என்னன்னு தெரியும்... மத்தவங்ககிட்ட இந்த மாதிரி ஃபோட்டோ பத்தி ஏதாச்சும் வதந்தி ஏதாச்சும் இருக்கான்னு கேக்கணும்...வா ஆரம்பிப்போம்...."என கூறி சிவா மற்றும் சக்தி அந்த கல்லூரியின் உள்ளே நுழைகிறார்கள்.
அப்பொழுது சக்தியை நோக்கி வந்த மலர், "நான் சந்தேகப்படும்படி ஒருத்தன பார்த்தேன்...உன்னோட பவர் பயன்படுத்தி அவன் உடம்புக்குள் புகுந்து அவன் பையை திறந்து உள்ள ஏதாச்சும் இருக்கான்னு தேடி பார்..."என மலர் கூற,
"சரி...யாரு அது காட்டு...."என சக்தி கூற,
"சீக்கிரம் வா....நம்மகிட்ட இருந்து அவன் தப்பிச்சிட போறான்...."என அவன் கையை பிடித்து கொண்டு மலர் ஓடுகிறாள்.
"அதோ அவன்தான்...."என மலர் தன் கை விரலை நீட்டி காட்ட அங்கே உள்ள ஒரு பவர் திருதிருவென விழித்து கொண்டு தன் பையை நெஞ்சோடு அணைத்தபடி நிற்கிறான்.
அவர்கள் வருவதை பார்த்ததும் அவன் ஓட, பின்னால் ஓடி வந்த சக்தி தனது சக்தியை பயன்படுத்தி அந்த நபரின் உடம்பினுள் புகுந்து ஓடுவதை நிறுத்தி தன் பையில் உள்ள பொருட்களை கீழே கொட்டுகிறான். கீழே கொட்ட கொட்ட மலர் அந்த பொருட்களை பார்க்கிறாள். சக்தி மீண்டும் தன் உடலுக்கு திரும்ப அந்த நபர், "வேண்டாம்...."என மலரை தடுக்க, வேகமாக ஓடி வந்த சிவா அந்த நபரை தூக்கி கொண்டு தூரமாக செல்கிறான்.
அப்பொழுது அங்கு உள்ள சில புகைப்படங்களை எடுக்கிறாள் மலர்.
"என்ன இது.... உங்க காலேஜ் படிக்கிற பொண்ணு போட்டோவா இது...."என மலர் கேட்க,
"என்ன பண்றீங்க.... அத பார்க்காதீங்க...."என அந்த நபர் கூற,
அடுத்த போட்டோவில் அதே பெண் ஒரு கொடூர பேய் போல காட்சியளிக்கிறாள்.
"ஓ....இதுதான் அந்த psychic photography யா...இதை எதுக்கு பயன்படுத்த முடியும்..."என மலர் பார்க்க,
"இதை நீயா எடுத்தே...."என சிவா அந்த நபரை பார்த்து கேட்க,
"இல்லை...இதனை நான் வாங்கினேன்..."என அவன் கூற,
"யார்கிட்ட இருந்து..."என சிவா கேட்க,
அவன் பதில் கூற தயங்கி நிற்கிறான்.
"பயப்படாதே...நான் இதை யார்கிட்டயும் சொல்லமாட்டேன்..உண்மையை மட்டும் சொல்லு.... இல்லைன்னா இதை எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்... குறிப்பா இந்த பொண்ணுகிட்ட...."என சக்தி கூற,
வேறு வழியின்றி,"சங்கர்....ஃபர்ஸ்ட் யேர்...அவனால ஒரு மனுஷனோட உண்மையான குணத்தை காட்ட முடியும்....இவ என்னோட லவ்வர்....இவ என்னை ஏமாத்துறாளா இல்லையான்னு பார்க்க அவளை ஃபோட்டோ எடுக்க சொன்னேன்....கடைசியில் இவளின் குணம் தெரிஞ்சு போச்சு....."என கூறுகிறான்.
"தேங்க்ஸ்...வாங்க அவனை தேடி போகலாம்...."என கூறி கொண்டே மூவரும் அங்கே இருந்து கிளம்புகிறார்கள்.
அவன் வகுப்பை கண்டுபிடித்து அங்கு சென்ற மூவரும், அங்கு அவன் இல்லை என்பதை அறிந்து தேடி கொண்டு இருக்கின்றனர்.
அதே சமயம் சங்கர் தனது கல்லூரியின் விளையாட்டு போட்டிக்காக வில் வித்தை பயிற்சி செய்து கொண்டு இருக்கிறான்.
சிறிது நேரம் மறைந்து இருந்து அவனை வீடியோ எடுத்து கொண்டு இருந்த மலர் திடீர் என அவன் முன்னே தோன்றி,"wow.... சர்ப்ரைஸ்...."என கூறுகிறாள்.
அவளை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர்,"யார் நீங்க..எங்க இருந்து வந்தீங்க நீங்க...."என கேட்கிறான்.
"அந்த விசித்திரமான ஃபோட்டோ பின்னாடி இருக்க சைசிக் போட்டோகிராபர் நீதானே..."என கேட்டுக்கொண்டே தன் கைகளில் உள்ள அந்த புகைப்படங்களை காட்டுகிறாள்.
அதிர்ச்சியை தனது முகத்தில் காட்டாமல்,"ஃபோட்டோ.... சைகிக் போட்டோகிராபர்...என்ன சொல்லிட்டு இருக்கீங்க நீங்க..."என சங்கர் கூற,
"நடிக்காதே...உன்னோட கஸ்டமர் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்....உன்னோட கிளாஸ் டெஸ்க் பாத்தேன்... எக்கச்சக்கமான ஃபோட்டோ வச்சி இருந்தியே இதே மாறி.... எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கே..."என மலர் கேட்க,
"எனக்கு காசு தேவை...எங்க குடும்பத்தில் ஒருத்தங்களுக்கு குணப்படுத்த முடியாத வியாதி...எனக்கு வேற வழியில்லை..."என கூறி கொண்டே சங்கர் தனது பையை திறந்து எதையோ எடுக்க உடனே அங்கு இருந்த சக்தி சங்கரின் உடலின் உள்ளே நுழைந்து அந்த பையை தூக்கி மலரிடம் வீசுகின்றான். வீசிவிட்டு மீண்டும் தன் உடலுக்கு திரும்புகிறான்.
"என் கைல இருந்த பை எங்க...."என சங்கர் விழிக்க,
"இங்க இருக்கு...."என மலர் காட்டுகிறாள்.
"உன்கிட்ட எப்படி போச்சு அது...."என கோவத்தில் சங்கர் தனது கையில் இருந்த வில்லில் அம்பை தொடுத்து மலரின் முன்னே நிற்க,
"உங்க காலேஜ்ல ஒருத்தங்க முன்னாடி இப்படி அம்பை நீட்டி காட்ட கூடாதுன்னு சொல்லி தரலையா..."என மலர் கூற, தன் கையில் உள்ள அம்பை பதற்றத்தில் விடுகிறான் சங்கர்.
அம்பு மலரை நோக்கி வேகமாக வர பக்கவாட்டில் வேகமாக ஓடி வந்த சிவா அந்த அம்பை தள்ளிவிட்டு கையில் பிடித்து கொண்டு அருகே இருந்த ஜன்னலை உடைத்து கொண்டு வெளியே சென்று விழுகிறான்.
"உன்னை பத்தி போலீஸ் மட்டுமில்ல வேற யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்...ஆனால் நீ தொடர்ந்து இந்த சக்தியை பயன்படுத்தினால் உனக்கு ஆபத்து வரும்...உன்னை எச்சரிக்க நாங்க இங்க வந்தோம்....நீ உன்னோட மொத்த வாழ்க்கையையும் ஒரு டெஸ்ட் சப்ஜெக்டா scientists க்கு இருக்க போறியா....இல்லைன்னா நீ ஸ்டார் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்துக்கோ....உன்னோட சக்திகள் எல்லாம் நீ பெரிய
மனிதனாய் மாறினால் உன்னை விட்டு போகும்... உண்மையாய் உழைச்சு காசை சேரு..."என மலர் கூறுகிறாள்.
"சரி...."என கூறுகிறான் சங்கர்.
(தொடரும்....)