- Messages
- 1,285
- Reaction score
- 3,780
- Points
- 113
நேரம் – 9 
இசைவாணி அவனைக் கவனிக்கவில்லை. குனிந்து நாற்காலியைத் தூக்கச் சென்றாள். நான்கு காலில் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்ட பரிதி, தூக்க விடாமல் அவளைத் தடுத்தான். யாரென்று திடுக்கெனப் பயந்தவள், அவன்தான் என்பதை உணர்ந்து மூச்சை இழுத்து வெளிவிட்டு, அவனை முறைத்தாள்.
“உனக்கு என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? ஹம்ம்... ஏதோ பார்க்க நல்லா இருக்கீயேன்னு ரெண்டு டைம் பார்த்தேன். அதுக்காக என்னை ப்ளே பாய் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி அற்புதாகிட்டே சொல்லிருக்க?” எனக் கடுகடுத்தவனைக் கேள்வியாகப் பார்த்தாள். அவளது நெற்றி புரியாமல் சுருங்கியது.
“அவகிட்டே நான் எதுவும் சொல்லலையே?” ஐந்து நாற்காலியை ஒன்றாக கையில் வைத்திருந்ததால் இரண்டு கையிலிருந்த இரத்த ஓட்டம் தடைபட்டு மதமதத்தது போல. அவனிடம் பேசியவாறே நாற்காலிகளைக் கீழே வைத்துவிட்டு கையைத் தேய்த்துக் கொண்டாள்.
“ஓ... நீ சொல்லாம எப்படி அவ என்கிட்ட சொன்னா? ஃபோன்ல வெறும் கேர்ள்ஸ் ரீல்ஸா பார்க்குறேன். போற வர பொண்ணுங்களை சைட்டடிக்கிறேன்னு சொல்லி என் இமேஜை டேமேஜ் பண்ணி வச்சிருக்க நீ?” சீறினான் இவன்.
அவன் முன்னே கையை நீட்டியவள், “நீங்க ஏதோ மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிருக்கீங்க. நான் அப்படியெல்லாம் எதுவும் சொல்லலை!” பொறுமையாக விளக்க முயன்றாள் இவள். ஆனால் அவன் சமாதானமாகவில்லை.
“பொய் சொல்லாத!” அவன் அதட்டினான்.
அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவள், “சாரி... எனக்குப் பொய் சொல்றது பிடிக்காது. பொய் சொல்ல அவசியமும் இல்ல!” என்றாள் அழுத்தமாய். அவள் குரலில் பரிதி நிதானித்தான். இவளிடம் பொய் சொன்னதாற்கான எவ்வித தடுமாற்றமும் இல்லை.
அற்புதாதான் தன்னிடம் விளையாடியிருக்கிறாளோ என ஊகித்தவன், “சாரி... அற்புதாதான் ஏதோ சொன்னா. அது நீ என்னைப் பத்தி அவகிட்டே சொன்னன்னு!” இவன் சட்டென வார்த்தை வராது தடுமாறினான்.
அவனைக் கேலியாகப் பார்த்தவள், “உங்களைப் பத்தி அவகிட்டே பேசுற அளவுக்கு என்ன இருக்கு?” எனக் கேட்டாள். இவன் புரியாது அவளைப் பார்த்தான்.
“ம்ப்ச்... உங்களைப் பத்தி பேசுறளவுக்கு நீங்களும் நானும் க்ளோசா என்ன? நான் கேட்காமலே அன்னைக்கு ஹெல்ப் பண்ணிங்க. அப்பவே தேங்க்ஸ் சொல்லிட்டேன். தென் என் கசினோட ப்ரெண்ட்னு இப்போ இன்ட்ரோவாகி இருக்கீங்க. இதுல எங்கேயும் உங்களைப் பத்தி பேச இருக்கதா எனக்குத் தெரியலை!” என்றாள் சின்னதாய் எட்டிப் பார்த்த எரிச்சலுடன். சற்று முன்னே அவன் சீறியது இவளுக்கு இடறியது. என்ன ஏதெனக் கேட்காமலே அவன் பாட்டிற்கு கோபப்படுவானா என அலட்சியம் செய்தாள்.
‘உன்னைப் பற்றி பேசுமளவிற்கு நீ ஒன்றும் பிஸ்தா பருப்பு கிடையாது!’ நேரடியான அவள் தாக்குதலில் இவனுக்கு முகம் மாறியது போல.
“ஃபைன்... தப்பு என் மேலதான் சாரி!” என்றான் ரோஷத்துடன்.
“இட்ஸ் ஓகே... புரிஞ்சா சரி!” கேலியாகத் தோளைக் குலுக்கினாள்.
கடுப்பானவன் அகலச் செல்ல, “ஒன் மினிட் பரிதி!” என அவள் குரல் இவனை தடை செய்தது.
“இன்னும் ஏதாவது இருக்கா என்னை அசிங்கப்படுத்துறதுக்கு?” பல்லை நறநறத்தான் அவன்.
“ம்ப்ச்... நீங்க செஞ்ச தப்பை நான் சொன்னேன், தட்ஸ் இட். இப்போ தேங்க்ஸ் சொல்ல கூப்பிட்டேன்” என்றவளை, ‘இது எதற்கு?’ என்பது போல பார்த்தான்.
“அது... அம்மா ரொம்ப வருஷம் கழிச்சு சந்தோஷமா சிரிச்சாங்க. ரிலாக்ஸாக ஃபீல் பண்ணாங்க. தேங்க்ஸ் டூ யூ!” உணர்ந்து கூறினாள் இவள். பாதியாக இவள் புறம் பார்த்திருந்தவன்ன், முழுதாய் திரும்பி நின்று அவளைக் கண்கள் இடுங்க நோக்கினான்.
“வெறும் வேளாவேளைக்கு மாத்திரைக் கொடுக்குறது, சாப்பிட வைக்கிறது, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது மட்டும் அவங்களை குணப்படுத்தாது. உடலளவுல அவங்க ஓகேவா இருந்தாலும் மெண்டல் பீஸ் ரொம்ப முக்கியம். வீட்டுக்குள்ளே அடைச்சு வச்சா அவங்களுக்கு எப்படி இருக்கும். நீ ஆஃபிஸ் போற, ஷாப்பிங் போற. நாலு பேரை பார்க்குற, பேசுற. ஆனால் அவங்க அப்படியா?”
“உன் மூஞ்சியை மட்டுமே பார்த்துட்டிருந்தா உடம்பு சரியாகிடுமா? கோவில், பார்க், பீச்னு எங்கேயாவது கூட்டிட்டு போ. அப்பப்போ நீங்க விளையாடும்போது வர மாட்டேன்னு சொன்னா கூட அவங்களை இழுத்துப் பிடிங்க. தனியா இருந்தாதான் அவங்க அதிகமா திங்க் பண்ணுவாங்க. சோ அவங்களை எங்கேஜ்டா வச்சுக்கோங்க!” என்றான் பெருமூச்சுடன்.
இசைவாணிக்கும் அவன் கூற்றுப் புரிந்தது. இனிமேல் அவரை இழுத்துப் பிடிக்க வேண்டும் என நினைத்தவள், “நான் பார்த்துக்கிறேன்!” என்றாள் நிதானக் குரலில்.
“ஓகே... எனக்கு டைமாச்சு. நான் கிளம்புறேன்...” அவன் மறையும் வரை அவனைத்தான் பார்த்தாள் இசைவாணி. பரிதியை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. முதலில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான். சுந்தரிக்கு உடல்நிலை சரியில்லாத போது முதிர்ச்சியாக அச்சூழ்நிலையைக் கையாண்டான். ஆனால் இப்போது சின்ன பையன் ஆசிரியரிடம் புகாரளிப்பது போல தன்னிடம் நியாயம் கேட்கிறான் என யோசித்தாள்.
தாமதமாகத்தான் அவனது ஒருமை விளிப்பு இவளது சிந்தையை எட்டியது. அற்புதாவின் வகுப்பு மாணவன் என்றால் இவளைவிட இரண்டு வயது சிறுவனாகத்தான் இருக்க கூடும். அடுத்த முறை பேசும்போது கண்டிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
“இவ்வளோ நேரம் என்ன பண்ற பிசாசே... பரிதி எதுக்கு மறுபடியும் வந்தான்?” அற்புதா இவளது தோளை இடித்தாள்.
அவளை முறைத்த இசைவாணி, “அவன்கிட்டே நான் சொன்னேன்னு ஏதேதோ சொல்லி வச்சிருக்க?” எனக் கேட்டாள்.
“ஹாஹா... அதை கேட்க வந்தானா அவன்? சே... இன்னும் அவன் மாறவே இல்ல. சின்ன புள்ளத்தனமா நடந்துக்குறான் பாரு. நான் ஏதோ கலாய்க்க சொன்னேன்!” இவள் சிரிக்க,
“சிரிக்கிற விஷயம் இல்ல அற்புதா. அவன் யாரோ எவனோ. நான் சொன்னதா சொல்லியிருக்க. என்கிட்ட வந்து சண்டை போட்றான். திஸ் இஸ் நாட் ஃபேர். எனக்கு இதெல்லாம் பிடிக்காது. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடுவேன்!” என்றாள் கண்டிப்பானக் குரலில்.
“ஹே... வாணி ஏன் டென்ஷனாகுற. சரி விடு... என் சேட்டையெல்லாம் குடும்பத்துக்குள்ளயே வச்சுக்கலாம். நீ முதல்ல உள்ள வா. உன் கையால நைட்டு என்ன டின்னர் சாப்பிடன்னு ஒருத்தன் மெனு போட்டிருக்கான். வந்து சமைச்சு அவன் வாய்ல கொட்டு!” என அத்தை மகளை சமாதானம் செய்து அழைத்துப் போனாள் அற்புதா.
இரண்டு நாட்கள் கழிந்துவிட, அற்புதாவும் சரவணனும் தங்களது வீட்டிற்குப் புறப்பட்டனர். சரவணனன் அத்தையிடம் அத்தனைப் பத்திரங்களைக் கூறி விடை பெற, அவர் சிரித்தார்.
“போடா... போ. நான் பார்த்து வளர்ந்தவன், எனக்கே ஆயிரம் அட்வைஸ் பண்றான்!” அவர் சிரிக்க, “ம்ப்ச்... போ அத்தை!” என்றவாறே பையைத் தூக்கித் தோளில் போட்டான். ஐந்து நிமிடத்தில் தயாராகி வருகிறேன் என்ற அற்புதாவை இன்னும் காணவில்லை என இவன் கடுப்புடன் வாணியின் அறையை நோட்டமிட்டான்.
“ஹே வாணி... தர மாட்டேன்னு சொல்லிடாத டீ. வந்த நாள்ல இருந்து இந்த டாப் என் கண்ணை உறுத்திட்டே இருக்கு. நானே எடுத்துக்கிறேன்!” எனக் கண்ணைச் சுருக்கி கெஞ்சிய அற்புதா, மற்றவளின் சம்மதத்திற்கு காத்திராமல் அவளுக்குப் பிடித்த இரண்டு உடைகளை மடிக்காமல் சுருட்டித் தன் பையில் திணித்தாள்.
“அதெப்படி டீ கரெக்டா எனக்குப் பிடிச்சு நான் வாங்கி வைக்கிறதெல்லாம் உன் கண்ணை உறுத்துது? ஹம்ம்... அதுவும் கிளம்பும்போது அவசரத்துல கேட்டா நான் நோ சொல்ல மாட்டேன்னு பாவ்லா பண்ற?” இசைவாணி இவளிடம் கேலியாக கேட்டாள்.
அசடு வழிய சிரித்த அற்புதா, “என்ன வாணி நீ... நம்ப என்ன அப்படியா பழகியிருக்கோம்? நீ தானே என்னோட ஃபேவரைட் கசின்?” என்றாள் இவளது தாடையைப் பிடித்து.
“ஓஹோ... அப்போ தேஜூவும் கார்த்தியும்?” அற்புதாவிடம் உதட்டை வளைத்துக் கேட்டாள் வாணி.
“ஹே... அதுங்களாம் பொடிசுங்க. என்கிட்டேயிருந்து என்னத்தடா லவட்டலாம்னு பார்ப்பாளுங்க. ஆனால் நீ அப்படியா? ஹம்ம்... என்னைவிட மூத்தவ. பொறுப்பானவ. நான் கேட்டா தர மாட்டேன்னு சொல்ல மாட்ட!” அவள் தலையில் முடிந்தளவு பனிக்கட்டிகளை இறக்கிய அற்புதா, தன் பையை எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்தாள்.
“அத்தை... நாங்க ரெண்டு பேரும் கிளம்புறோம். டைம்க்கு மாத்திரை சாப்பிடு, நல்லா ஹெல்தியா சாப்பிடு. உன் மக உன்னை சரியா கவனிக்கலைன்னா என்கிட்டே சொல்லு!” என்றாள் இவள் நீட்டி முழக்கி. இசைவாணி அவளை முறைத்தாள்.
“ஏய்... எவ்வளோ நேரம் டீ கிளம்புவ? நான் ரெடியாகி ஹாஃப் அன் அவர் ஆச்சு!” சரவணன் இவளைக் கடித்தான்.
“ம்ப்ச்... அவ எங்கடா ரெடியானா? என் வாட்ரோபைத் திறந்து எந்த ட்ரெஸெல்லாம் அவளுக்கு மேட்சாகுதுன்னுப் போட்டுப் பார்த்து லவட்டிட்டுல இருந்தா!” என்ற இசைவாணி தாயருகே சென்று விச்ராந்தையாக அமர்ந்தாள்.
“அதானே பார்த்தேன். அங்க வீட்ல அவ்வளோ ட்ரெஸ் வச்சிருக்கா. மாமியார் வீட்ல பீரோ நிறைய வச்சிருக்கா. அப்படியிருந்தும் உன்கிட்டருந்து சுட்றா பாரு. இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்
அடுத்தவங்க வச்சிருக்கப் பொருளுக்குத்தான் ஆசைப்படுவாளுக” என்றவனை அற்புதா கண்டுகொள்ளவில்லை.
“இப்போ நேரமாகலையா? வாடா அப்ரசண்டீஸ்!” முனங்கியவள் முன்னே நடக்க, “பாய் அத்தை... பாய் அயித்த மகளே!” என்றவன், தமக்கையின் பின்னே சென்றான்.
அவன் தன் வாகனத்தை உயிர்ப்பிக்க, ஏறியமர்ந்தாள் அற்புதா. இசைவாணி வாயில் வரை வந்து நின்று புன்னகைக்க, அவளிடம் கையசைத்து விடை பெற்றனர். வாசலைக் கடக்கும்போது பரிதி கடையில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
“சரோ... வண்டியை நிறுத்துடா. பரிதி இருக்கான். சொல்லிட்டு வரேன்!” தம்பியின் தோளைத் தட்டினாள் இவள்.
“ப்ம்ச்... ஏற்கனவே லேட்டாகிடுச்சு டீ. ஏன் பக்கத்துல போய் சொன்னாதான் ஆச்சா. இங்கருந்தே கையைக் காட்டுப் போதும்!” அவன் வாகனத்தை நிறுத்தவில்லை. பரிதி இவர்களைப் பார்க்க, இவள் கையை அசைத்துப் போய் வருகிறேன் என்று சைகை செய்ய, அவன் தலையாட்டினான்.
“அவங்க ரெண்டு பேர் இருந்தா வீடே கலகலன்னு இருக்கு. அவங்க போனதும் வீடே வெறிச்சோடி போச்சு!” சுந்தரி கூற்றை இவள் ஆமோதித்தாள். இருவரும் எப்போதும் எலியும் பூனையும்தான். ஆனால் அன்பும் பாசமும் அதிகம். என்ன அதை வெளியே காண்பித்துக்கொள்ள மாட்டார்கள்.
“தலை வலிக்கிற மாதிரி இருக்கு. ஒரு டீ போட்டு தரீயா வாணி?” பெரியவர் கேட்டதும், அவரருகில் சென்றவள், “என்னாச்சு மா? ஏன் திடீர்னு தலைவலி?” என ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.
“ப்ம்ச்... ஒரு தலை வலிக்கு டீ கேட்டா நீ என்னை ஆராய்ச்சி பண்ணாத டீ. சாதா தலைவலித்தான்!” அவர் நொடித்தார்.
“பீபி அதிகமானாலும் தலைவலிக்கும்மா!” இவள் கண்டிப்புடன் கூற,
“அதான் காலைல நைட்டுன்னு கலர் கலரா மாத்திரை சாப்பிட்றேனே. அப்புறம் எப்படி டீ பீபி அதிகமாகும்? போய் டீ கொண்டா!” இவர் சலித்தார்.
“பால் இல்ல... நான் போய் வாங்கிட்டு வரேன்!” என்றவள், சிந்தாமணி ஸ்டோருக்குச் செல்ல, மார்த்தாண்டம் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு எங்கோ சென்றார். பரிதி இருக்கையில் அமர்ந்திருந்தான்.
‘ஃபைவ் ஹண்ட்ரட் எடுத்துட்டுப் போனா சில்லறை இல்லைன்னு திட்டுவானே!’ யோசனையுடன் சென்றவள், அரை லிட்டர் பால், இரண்டு ரொட்டித் துண்டுகளை வாங்கிவிட்டு ஐநூறு ரூபாய் தாளைத் தயங்கியபடியே கொடுத்தாள். அதை வாங்கியவன் முழுதாய் விரித்து முன்னும் பின்னும் உற்றுப் பார்த்தான். இசைவாணி அவனை இப்போது முறைத்தாள்.
“என்ன முறைக்கிற? நியூஸ்ல பார்த்தல்ல? அந்தப் பழக்கார பாட்டியை ஒரு லேடி டம்மி காசைக் கொடுத்து ஏமாத்துனத. நீ வேற ஆவூன்னா ஐநூறு ரூவா தாளை நீட்ற. காலம் கெட்டுக் கிடக்கும்மா. யாரையும் நம்ப முடியாது!” என்றவாறே அந்த தாளைக் கல்லாப் பெட்டியில் போட்டுவிட்டு இரண்டு இருநூறு ரூபாய் தாளோடு சில்லறைகளைப் பொறுக்கினான்.
சரியாய் இருக்கிறதா என எண்ணியவன், “ஆமா... காசு அச்சடிக்கிற இடத்துலயா வேலை பார்க்குற? ஏன் உன்கிட்ட இந்த நூறு, இருநூறு எல்லாம் இல்லவே இல்லையா?” இடக்காக கேட்டவாறே அவளிடம் மீதிப் பணத்தைக் கொடுத்தான்.
“ஏ.டி.எம்ல இருந்து என்ன வருதோ, அதைத்தானே யூஸ் பண்ண முடியும்?” இவள் கேட்டதும்,
“அதுவும் சரித்தான்... எங்க வேலை பார்க்குற?” என அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான். அந்தப் பார்வை பிடிக்காது அவனை முறைத்தாள்.
“ம்ப்ச்... எப்பவுமே டிப்டாப்பா இருக்கீயே. பெரிய இடத்துல வேலையோன்னு பார்த்தேன் மா. உடனே முறைக்காத!” அவன் தன்மையாய் பேச, “இன்ஃபோசிஸ்!” என ஒற்றை வார்த்தையில் பதிலுரைத்தபடி அகன்றாள்.
“அப்போ மாசம் சொளையா லட்சம் லட்சமா சம்பாரிக்கிற? ஹம்ம்?” அவன் தாடையைத் தடவ, வெளிக்கதவை பூட்டியபடியே அவன் பேச்சைக் கண்டு கொள்ளாமல் அகன்றாள்.
‘சே... எவனைக் கேட்டாலும் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்ன்னு சொல்றானுங்க. நானும்தான் தண்டத்துக்கு ஒரு இடத்துல வேலை பார்க்குறேன். இன்க்ரீமெண்ட்னு வார்த்தையை கூட சொல்ல விட மாட்றாங்க!’ இசைவாணி வேலையிடத்தைப் பற்றிக் கேட்டதும் இவனுக்கு பொறாமையோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ ஏதோ ஒன்று தோன்றிற்று. தனக்குள்ளே புலம்பித் தீர்த்தான்.
பால் பொங்கி வரும்போது தேநீர் தூளைக் கலந்த இசை வாணியின் நினைவில் பரிதிதான் நின்றான். ஏன் எப்போதும் இவன் ஏன் சிறு பையன் போல நடந்து கொள்கிறான். அவனுக்கு எத்தனை வயதிருக்கும். மனம் தன் போல அவனையும் சரவணன், அற்புதாவையும் இணைத்துப் பார்த்தது.
அவர்களும் இவனைப் போலத்தான் எப்போதும் கேலி பேச்சு, சண்டை என்றிருப்பார்கள். ஆனால் இவள் அவர்களோடு ஒத்துப் போக மாட்டாள். ஒருவேளை இவர்கள் எல்லாம் தன்னைவிட வயது குறைந்தவர்கள் என்பதால் தனக்கு இப்படித் தோன்றுகிறதோ எனத் தோளைக் குலுக்கினாள்.
“நீ போ பரிதி... வேலை இருந்தா பாரு. நான் கடையைப் பார்த்துக்கிறேன்!” மார்த்தாண்டம் மகனை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பரிதி உள்ளே நுழைய கீர்த்தனாவின் அழுகுரல் அவனை வரவேற்றது. சிந்தாமணி கையில் தோசைக் கரண்டியோடு அவளை அடிக்கப் பாய்ந்தார். அஜித் வெறும் பார்வையாளராக இதைப் பார்த்தான்.
அவர் அடிக்கும் முன்னே இடைபுகுந்து தங்கையை தன் பின்னே மறைத்த பரிதி, “ம்மா... என்னம்மா நீ? எதுக்கு அவளை கரண்டியால அடிக்கப் போற இப்போ?” எனத் தாயைக் கண்டித்தான்.
“அவ முதல்ல என்ன பண்ணான்னு கேளு பரிதி. படிக்கிற பையன் புக்கெடுத்து நாலா ஐஞ்சா கிழிச்சு போட்டிருக்கா? இவளுக்கெல்லாம் எப்படி படிப்பு வரும்? ஹம்ம்... அவனாவது படிச்சு நல்லபடியாக டாக்டராகணும்னு நான் வேண்டிட்டு கிடக்க, இவ இப்படி பண்ணா கோபம் வருமா வராதா டா?” எனக் குரலை உயர்த்தினார் பெண்மணி.
“சரி விடு... நான் என்ன ஏதுன்னு கேட்குறேன். நீ போய் உன் வேலையைப் பாரு...” அவரை அப்புறப்படுத்த முயன்றான் மகன்.
“எல்லாம் அண்ணன், அப்பன் நீங்க குடுக்குற செல்லம்தான் டா அவ இப்படி பண்றா. இரு... அந்த மனுஷன் வரட்டும்!” அவர் புலம்பியபடியே அகல, தம்பியை முறைத்துப் பார்த்தான் இவன்.
“அம்மா அவளை அடிக்கப் போனா காப்பாத்தாம, வேடிக்கைப் பார்த்துட்டு நிக்கிற நீ?” இவன் தம்பியிடம் சிடுசிடுத்தான்.
“அவன் தான்ண்ணே அம்மாகிட்டே என்னை அடிக்கச் சொன்னது!” கீர்த்தனா தேம்பியபடியே இவன் கையை இறுக்கிப் பிடித்தாள்.
“ரெண்டு பேரும் ரூம்க்குள்ள வாங்க!” என அழைத்துச் சென்றவன், கீர்த்தனா முகத்திலிருந்த கண்ணீரைத் துடைத்து ஆசுவாசம் செய்தான்.
“நீ எதுக்கு அவன் புக்கை கிழிச்ச கீர்த்தி?” எனத் தங்கையிடம் கேட்டான். அஜித் இரண்டு கைகளையும் பின்னே கட்டிக்கொண்டு விறைப்பாக நின்றான். அவளைப் பார்வையாலே மிரட்டினான்.
“கீர்த்தி... அவனை என்ன பார்க்குற? என்னைப் பாரு. எனக்கு பதில் சொல்லு!” இவன் அதட்ட, அவள் முகம் வாடியது.
“ஸ்கூல் பக்கத்துல ஒரு ரோஸ் மில்க் கடை இருக்குண்ணே. அங்க நான் ரோஸ் மில்க் குடிக்கப் போனேன்!” அவள் கூற,
“தனியாவா போன? ஹம்ம்... கூட யார் வந்தா? சொல்லு!” அஜித் தங்கையைக் அடித்து வைக்கும் நோக்கத்துடன் அருகே வந்தான்.
“அஜித்... முதல்ல அவளை சொல்ல விடு!” தம்பியை அதட்டிய பரிதி, “யார் கூடப் போன?” எனக் கேட்டான்.
“ரெண்டு பசங்களோட!” அஜித் பல்லைக் கடித்தான். அவன் பதிலில் பரிதி தங்கையை யோசனையுடன் பார்த்தான். அவள் கண்களிலிருந்து பொலபொலவென நீர் கன்னத்தில் இறங்கிற்று.
“அண்ணா... அவங்க ரெண்டு பேரும் என் க்ளாஸ் மேட்ஸ். என் ப்ரெண்ட்ஸ். அதான் அவங்களோட போய் ரோஸ் மில்க் குடிச்சேன். அதை இவன் பார்த்துட்டு என்னைத் திட்டிட்டே இருக்கான். அம்மாகிட்டே சொல்லிடுவேன்னு ப்ளாக் மெயில் பண்றான்னா. அதான் புக்கை கிழிச்சுட்டேன்!” என்றாள் தேம்பியபடியே.
“ஆமா கிழிச்ச... ஸ்கூலுக்கு எதுக்குப் போற நீ? பசங்களோட சுத்தவா? எப்போ பார்த்தாலும் அவங்களோடவே என்னடி சகவாசம் உனக்கு?” அவன் மேலும் பேசும் முன்னே பரிதியின் கை இடியாய் அவன் கன்னத்தில் இறங்கிற்று.
“இன்னொரு வார்த்தைப் பேசுன, வாயை உடைச்சுடுவேன்!” அஜித்தை தீயாய் முறைத்தவன், “ஏன் உனக்கு கேர்ள்ஸ்ல ஃப்ரெண்ட்ஸ் இல்லையா? அவங்களோட நீ வெளிய போனது இல்லையா? ஹம்ம்... நீ எங்க வேணா பிள்ளைகளோட ஊர் சுத்தப் போகலாம். அது ப்ரெண்ட்ஷிப். பட் இவ
ஸ்கூல்கிட்டே நின்னு ரோஸ் மில்க் குடிச்சதுக்கு நீ கண்டமேனிக்கு தப்பா பேசுற? இனிமேல் இதுமாதிரி அவளை ப்ளாக்மெயில் பண்றது, திட்டுறது இந்த வேலையெல்லாம் வச்சுக்கிட்ட பெல்ட்டை உருவி விளாசித் தள்ளிடுவேன்!” என்றான் கண்டிப்பான குரலில். அஜித் முகம் தங்கை முன்னே அடிவாங்கியதில் கன்றிச் சிவந்தது.
“அவளுக்கே சப்போர்ட் பண்ற நீ. பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா ஸ்கூலுக்குப் போனோமா வந்தோமான்னு இருக்காம அவனுங்களோட என்ன சகவாசம்? இதெல்லாம் ஆரம்பத்துலயே கண்டிக்கணும்!” அவன் பிடியிலே நிற்க,
பிடரியைக் கோதிய பரிதி, “ஒரு நிமிஷம்தான் உனக்கு டைம். இந்த இடத்தைவிட்டு நீ காலி பண்ணலை எக்ஸாம் எழுத கை இருக்காது!” என்றான் சீற்றமான குரலில். சின்னவன் அவர்கள் இருவரையும் தீயாய் முறைத்துவிட்டு, வெடுக்கென நகர்ந்தான்.
தங்கையின் புறம் திரும்பிய பரிதி, “அவன் ப்ளாக்மெயில் பண்ணா என்கிட்டயோ இல்ல அப்பாகிட்டயோ சொல்லணும். அதைவிட்டுட்டு புக்கை கிழிப்பியா நீ?” அவளை அதட்டிவிட்டு, “இனிமே என்ன பிரச்சனைனாலும் என்கிட்டே வந்து டேரக்டா சொல்லு!” எனக் கண்டித்து அனுப்பினான்.
‘சே... நம்ப கூடத்தானே பொறந்தான். இவனுக்கும் மட்டும் ஏன் புத்தி இப்படி போகுது. அப்பாகிட்டே சொல்லி கண்டிச்சு வைக்கணும்!’ என முணுமுணுத்தான்.
தொடரும்...