• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,348
Reaction score
4,085
Points
113
எழுத்தாளர் மீரா க்ரிஷின் ஏழு ஜென்மமாய்‌ எனை ஆள வந்தாயோ கதையை இப்போது முழு நீள ஆடியோவாக நம்ம இறகி சேனல்ல ஆர்.ஜே கிருத்திகா ராஜ் குரலில் கேட்டு மகிழுங்கள் மக்களே! 🫶💜

லிங்க் 👇,



நேரம் – 55 💜 (முன்- இறுதி அத்தியாயம்)

“வீட்ல ஒன்னுமே இல்லாம அப்படி என்னத்தை நீ குக் பண்ணி சாப்பிட்ட பரிதி?” கண்டிப்பான குரலில் கேட்டுக் கொண்டே வாணி சமைப்பதற்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக யோசித்து எடுத்து கூடையிலிட்டாள்.

பரிதி அந்தக் கூடை வண்டியைத் தள்ளிக் கொண்டே அவள் திட்டியதற்கு வெறுமனே சிரித்து வைத்தான். மனைவி வந்த இந்த இரண்டு நாட்களும் அவன் முகத்தில் புன்னகை வாடவேயில்லை. வாணி கூட ஏன் இப்படி எனக் கேட்க, அதற்கும் சிரித்தான் அவன்.

“நீ லூசாகிட்டே போ!” என திட்டியவள், அவனை அழைத்துக்கொண்டு ஒரு பல்பொருள் அங்காடிக்கு வந்திருந்தாள். வீட்டில் பெரிதாய் சமைக்க எந்த மளிகைப் பொருட்களும் இல்லை. அதன்பொருட்டே இருவரும் வெளியே சென்றனர்.

தேவையானவற்றை வாங்கிவிட்டு அப்படியே இரவு உணவை வெளியே ஒரு இந்திய உணவகத்தில் முடித்து வீடு வந்து சேர்ந்தனர். வாணி வாங்கி அனைத்தையும் அதனதன் இடத்தில் சரியாய் பொருத்தினாள். பின்னர், காய்கறி, பழங்களை குளிர்சாதன பெட்டியில் அடுக்கினாள்.

“வானு... அம்மா பேசணுமா உன்கிட்டே” இடையே அலைபேசியை வந்து கொடுத்துவிட்டுச் சென்றான் பரிதி‌. அவரோடு அளவளாவிக் கொண்டே மீத வேலையைப் பார்த்தாள். பின்னர் கீர்த்தனாவும் ஏதோ கூற, அவளுக்கு சிரிப்புடன் பதிலளித்தவள், கையை கழுவிவிட்டு வந்து பரிதியருகே அமர்ந்து அவன் மேல் சட்டையில் கையைத் துடைக்க, அவன் முறைத்தான்.

“சாரி... சாரி டவலைக் காணோம்!” எனக் கண்ணைச் சுருக்கியவள், அவன் மீது நன்றாய் சாய்ந்தமர, முறைப்புடன் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டு அணைத்தான் கணவன். அதில் இன்னும் வசதியாக அவன் மீது சாய்ந்தமர்ந்தவள், கீர்த்தனாவிடம் பேசினாள்‌.

ரோஜா படத்திலிருந்து புது வெள்ளை மழை பாடல் தொலைக்காட்சியில் ஓட, அது வாணிக்குத் தொந்தரவாகத் தோன்ற, எட்டி தொலைவியக்கியை எடுத்து சப்தத்தைக் குறைத்தாள். பரிதியின் முறைப்பு கூடிற்று.

‘பைவ் மினிட்ஸ்!’ என கையைக் காண்பித்து பேசி முடித்தவள், “ஒரு பத்து நிமிஷம் உன்னால பாட்டு கேட்காம இருக்க முடியாதா பரிதி. கால் பேசுறேன்ல? ஏன் நீ சவுண்டை இன்க்ரீஸ் பண்ற?” என அதட்டலிட்டாள். அவன் அவள் பேச்சைக் கண்டு கொள்ளாமல் வேறு பாடலை மாற்றினான்.

வசீகரா என் நெஞ்சினிக்க என அவன் உதடுகள் முணுமுணுக்க, இவள் கடுப்புடன் அவனது பக்கவாட்டுத் தோற்றதைப் பார்த்து முறைத்தாள். பரிதி சிரிப்பை உதட்டுக்குள் மென்றபடி, “என்ன?” என்றான். இப்போது பாட்டு சப்தம் அதிகமாக, ஏதோ யோசனையுடன் தொலைக்காட்சியைப் பார்த்தவள், படக்கென அவனிடமிருந்து தள்ளியமர்ந்தாள்.

“என்ன... பாட்டெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு?” கறார் குரலில் இவள் கண்ணை உருட்டியபடியே கேட்க,

தொண்டையைச் செருமியவன், “பாட்டு மட்டும்தான் உன் கண்ணுக்குத் தெரியுதா வானு?” என்றான் அவள் முகத்தை ஆர்வமாகப் பார்த்து. இவளுக்கு சட்டென அடிவயிற்றில் என்னவோ குழைந்தது. அந்தப் பார்வை, பேச்சு என எதையும் இவளால் எதிர்க்கொள்ள முடியவில்லை.

அவன் மீது தாராளமாக சாய்ந்தமர்ந்திருந்தவள், இப்போது காத தூரம் நகர்ந்துவிட்டு, “எனக்குத் தூக்கம் வருது. நான் ரூம்க்குப் போறேன்...” எனக் அறைக்குள்ளே ஓடினாள். பரிதிக்கு அவள் செய்கையில் சுவாரசியம் கூடிப் போனது.

சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவன், பின்னர் மெதுவாக பூனை நடை போட்டு அவள் பின்னே சென்றான். வாணி ரோஜா பூக்களால் மெத்தையில் அவன் வரைந்து வைத்திருந்த இதயத்தைப் பார்த்து திடுக்கிட்டுத் திரும்ப, அறைக் கதவை சாற்றி அதன் மீது சாய்ந்து நின்றவன் முகத்தில் விஷமம் தெறித்தது.

“என்ன இது?” அவள் அதட்டலும் சங்கடமுமாக அவன் முகம் பார்க்கத் தயங்கியபடியே கேட்க, “ரூம் ஃபுல்லா டெக்ரேட் பண்ணலாம்னுதான் ஐடியா வானு. ஆனால், பூ ரேட் ரொம்ப அதிகம் இங்க. அதான் சின்னதா ஒரு ஹார்ட் போட்டு என் ஹார்ட்ல இருக்க லவ்வை எக்ஸ்பிரஸ் பண்ணேன்!” அவன் ஆசையும் ஆர்வமுமாக அவளைப் பார்க்க, வாணிக்கு அவன் முகத்தைக் நேர்க்கொண்டு நோக்க‌ முடியாமல் சங்கடமாகப் போயிற்று.

“பரிதி... ப்ளீஸ்!” அவள் ஏதோ மறுதலித்துப் பேச வர,

“ஏய்... ஏய் வானு. ப்ளீஸ் டோன்ட் சே நோ. ரொம்ப ஆசையா இருக்கேன் டீ. எதுவும் சொல்லி என்னை டிசப்பாய்ண்ட் பண்ணிடாத!” என அவசரமாக பதறி அவளைத் தடுத்தான் பரிதி. அவள் அவனிடம் வேண்டாம் என்பது போலத்தான் பார்த்தாள்.‌ அன்றைக்கு அவன் கொடுத்த முத்தத்திலே இவளுக்கு என்னென்னவோ ஆகிப் போயிற்று. கொஞ்சம் பயம், தயக்கமென அவளைத் தடை போட்டு தடுத்தது.

“பரிதி... எனக்கு ஒரு மாதிரி எம்பாரசிங்கா இருக்கு. உன் முகத்தைப் பார்க்கவே வெட்கமா வருது.‌ உனக்குப் புரியுதா இல்லையா? ஃபர்ஸ்ட் டைம் நீ கிஸ் பண்ணப்பவே என்னால உன்னை ஃபேஸ் பண்ண முடியலை!” என தவிப்புடன் அவன் முகம் பார்த்தாள். பரிதிக்கு சிரிப்பு வந்தாலும் அவள் தோள்மீது கையைப் போட்டு அணைத்தவன்,

“கிவ் மீ ஹாஃப் அன் அவர். இந்த வெட்கம், கூச்சம் எல்லாத்தையும் ஓட விட்றலாம். அப்புறம் நான் மட்டும்தான் உனக்கு ஞாபகத்துல இருப்பேன்!” என அவள் காதருகில் அவன் குரல் மெதுவாய் வருடிப் போனது. வாணி தரை பார்த்த முகத்தை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள்.

அவன் கண்களில் தெரிந்த ஆர்வத்தில் இன்றைக்கு தன் பலகீனமான மறுப்புகள் செல்லாது எனப் புரிந்தது. அவளுக்கும் அவனோடு வாழ வேண்டுமென்ற அவா உண்டுதான். என்னவோ பார்த்து, பேசி, பழகி காதல் சொல்லும்போது ஒன்றும் தெரியவில்லை. இப்போது உடலளவிலான நெருக்கம் எனும்போது ஒருமாதிரி கூச்சமும் சங்கோஜமும் வந்தமர்ந்தது.

பரிதி மெதுவாக அவளைப் பின்னிருந்து அணைத்தவன், “வானு, ட்ரஸ்ட் மீ. நான் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். திஸ் இஸ் ஆல்சோ அ பார்ட் ஆஃப் மேரேஜ் லைஃப்!” என்றான் மென்மையாக. அவள் மூச்சை இழுத்துவிட்டவள், தன்னை அவனிடம் ஒப்புக் கொடுக்க, மனத்தளவில் தயாரானாள்.

“சரி...” மெல்லிய குரலில் அவளின் முணுமுணுப்பு இவன் உதட்டில் முறுவலைத் தருவித்தது. அவளைத் தன்புறம் திருப்பி உச்சியில் அழுந்த முத்தமிட்டான். வாணியின் இதயம் தடதடத்தது. படபடப்பும் பயமுமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். மெல்ல அவள் கண்களில் இதழ்களை ஒற்றியெடுத்தவன் உதட்டில் முத்தமிட போக, படக்கென கையை வைத்து தடுத்தாள் வாணி.

“வானு!” அதட்டலுடன் அவள் முகம் பார்த்தவனின் கண்களில் தாபம் நிரம்பி வழிந்தது. அதில் இவருக்குப் படபடப்பு கூடிற்று.

“லைட்டை ஆஃப் பண்ணிடு பரிதி. ப்ளீஸ்... ப்ளீஸ். ஐ கான்ட் ஃபேஸ் யூ லைக் திஸ்!” என்றாள் சிவந்த முகத்தை மறைக்க முயன்று தோற்று. அவன் கண்களில் அது இன்னும் மயக்கத்தைக் கூட்டியது. மாட்டேன் எனத் தலையை அசைத்தவன், வேறு என்னவோ முணுமுணுக்கவும், முறைக்க முயன்றவள், அவன் மார்பில் முகத்தைப் புதைத்தாள்.

“ரிலாக்ஸ் வாணு!” என அவள் செவியில் முத்தமிட்டு உரைத்தவன், மெதுவாய் இணக்கம் கூட்டி அவளிடம் நெருங்கினான். வாணி அவன் கை படர்ந்த இடத்தைப் பதறி தடுத்தவள், கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளால் அவன் கண்களை நேராக சந்திக்க முடியவில்லை. தாங்கள் இருந்தக் கோலம் வேறு அவளை வெட்கச் செய்தது. இருவரும் ஒருவித ஆழ்ந்த சுக-மயக்கத்திலிருக்க, படக்கென பரிதி அவளிடமிருந்து அவசரமாக பிரிந்தெழுந்தான்.

அவன் விலகியதும் வாணி மெதுவாய் கண்களைத் திறந்து என்னவெனப் பார்க்க, கண்ணாடியருகே இருந்த அலமாரியில் எதையோ துழாவினான். வாணி புரியாமல் அவனைப் பார்த்தாள்.‌

“பரிதி... இந்த நேரத்துல என்ன தேடுற?” அவள் அதட்டலுக்கு பதிலுரைக்காதவன், தேடியது கிடைத்ததும் அவளருகே வந்தான்.

“இதை மறந்துட்டேன் வானு!” என அவள் முன்னே தாலியை நீட்டினான். வாணி அவனைத் தீயாய் முறைத்தாள்.

“ஹே... முறைக்காத டீ. இது உனக்காக நான் புதுசா செஞ்சு வாங்குனேன். அது... அந்த தாலியை மறுபடியும் உன் கழுத்துல போட செண்டிமென்டா ஒப்பலை. கோபப்படாத வானு. முன்னாடியே இதை உன் கழுத்துல போட்டிருக்கணும். இப்போ... அது இந்த டைம்ல போட்றேன்னு நினைக்காத!” என்றவன் கெஞ்சலாகப் பார்த்துக்கொண்டே அவள் கழுத்தில் அந்த தாலியை அணிவித்தான். வாணி விரல் நடுங்க, அதை எடுத்து அமைதியாகப் பார்த்தாள். அன்றைய நிகழ்வு இப்போதும் அவளிடம் ஒரு கசந்த முறுவலைக் கொடுத்தது.
பரிதி அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்து முத்தமும் இட்டான். பெருமூச்சுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் வாணி.

“சாரி வானு!” என அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான். சில பல நிமிடங்கள் கடந்தும் அவள் பதிலே பேசவில்லை.

“வானு... உன் கோபம் போய்டுச்சா? விட்டதைக் கண்டினியூ பண்ணலாமா?” என அவன் கிசுகிசுக்க, அவனை முறைக்க முயன்றவள் முகத்தை அவன் கழுத்தில் புதைத்தாள். பரிதிக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. மெதுவாய் அவளைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான். ஆனாலும் அவளிடம் மெல்லிய பலகீனமான மறுப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

“வானு... நான்தான். ரிலாக்ஸ்!” என மனைவியைத் தட்டிக் கொடுத்து மெதுவாய் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டான். ஆனால் அதற்குள்ளே வாணி அவனை ஒருவழியாக்கியிருந்தாள். கணவன் அவளிடமிருந்து பிரிந்ததும் முதல் வேலையாக போர்வையை எடுத்து தன்னை மூடிக்கொண்டாள். பரிதி எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்தான்.

“வானு... ஆர்‌‌ யூ ஓகே. இந்தா... தண்ணிக் குடி” என வாணியை எழுப்ப முனைய, அவள் திரும்பவேயில்லை. அவனுக்கு இப்போதும் சிரிப்பு வந்தது.

“எவ்வளோ நேரம் என் முகத்தைப் பார்க்காம இருக்கப் போற டீ!” என அதட்டி அவளை எழுந்தமர வைத்தான். போர்வையை போர்த்தியபடியே அவன் கொடுத்த நீரைப் பருகியவள், அவனை முறைத்தாள்.

“நீ ஓகே வா? ஹம்ம்?” தயங்கிக் கேட்டான் பரிதி. உண்மையில் அவன் வெகு நிதானமாகத்தான் அவளைக் கையாண்டான்.

கண்களின் மேலே ஒரு கையை வைத்து மூடியவள், “ஹம்ம்... ஓகேதான்!” என்றாள் சின்ன குரலில். அவள் கையை பரிதி விலக்க முனைந்தான்.

“என்னடா உனக்கு வேணும்? ஒரு மனுஷி வெட்கப்படக் கூடாதா? உன்னை மாதிரியே வெட்கம் கெட்டவளா இருக்கணுமா நான்? போ முதல்ல!” கூச்சத்துடன் அவள் கடுகடுக்க, பரிதி அவளை வாரியணைத்துக் கொண்டான். ஏதோ முனகிக்கொண்டே அவன் அணைப்பில் கட்டுண்டாள் வாணி.

“வானு...” அவன் அழைப்பிற்கு, “ஹம்ம்...” என பதில் வந்தது.

“ஐ வாண்ட் ஒன்ஸ் மோர்!” என்றான் குறும்பாய். அவன் கையில் நறுக்கென கிள்ளி வைத்தாள். அவன் உடல் குலுங்க சிரிக்க, இவளுக்கு இன்னுமே வெட்கமாகிப் போனது.‌

“ம்ப்ச்..” என அவனோடு மேலும் ஒன்றியவள், “யூ ட்ரெய்ண்ட் மை எனர்ஜி. பசிக்குதுடா!” என்றாள்.

“அடிப்பாவி! உன் எனர்ஜி போய்டுச்சா? நியாயமா பார்த்தா எனக்குத்தான் டீ பசிக்கணும். என்னைப் போட்டு என்னாம்மா பாடாப்படுத்திட்டு இவளுக்கு பசிக்கிதாம்!” அவன் போலியான கோபத்தோடு வாயில் கை வைக்க, அவன் கன்னத்திலே இவள் வலிக்காமல் குத்தினாள்.

“பசிக்குதுடா நாயே... ஒழுங்கா ஏதாவது ஆர்டர் போடு!” என எழுந்து சென்று உடையை சரி செய்து வந்தாள் வாணி. பரிதி இணையத்தில் உணவைப் பதிந்தான்.

“மசால் தோசை, பன்னீர் கிரேவி, புரோட்டா போட்டிருக்கேன். வர ஹாஃப் அன் ஹவர் ஆகும்!” என அவன் கூறியதும்,

“அவ்ளோ நேரமாகுமா? அதுவரைக்கும் என்ன பண்றது?” என சலிப்புடன் அவனருகே அமர்ந்தாள் வாணி.

“ஹக்கும்.‌‌.. சாப்பாடு வந்ததும் நீ அதை சாப்பிடு. இப்போ நான் உன்னை சாப்பிட்றேன்!” என தன்னருகே வந்தவனின் முகத்தைக் கைக்கொண்டு தள்ளியவள், “சாவடிச்சுடுவேன் பரிதி. கொலை பசி எனக்கு!” என்றாள் எச்சரிக்கையுடன். அவனும் சரியென சமத்தாக உட்கார்ந்தான்.

உணவு வந்ததும் வாணி அவசர அவசரமாக சாப்பிட, “மெதுவா சாப்பிடேன் டீ!” என அவளை அதட்டிய பரிதி, தன் உணவில் பாதியை அவளிடமும் கொடுத்தான். அவள் சாப்பிடுவதைப் பார்த்து இவனுக்கு பயமாகிற்று.

‘ரொம்ப படுத்திட்டமோ?’ என்ற எண்ணத்தோடு அவள் உண்டு முடியும்வரை காத்திருந்தவன், “பத்து நாள் சாப்பிடாதவ மாதிரி சாப்பிட்றீயே டீ. நான் என்ன அவ்ளோ படுத்திட்டேனா உன்னை?” என சந்தேகத்தோடு கேட்டான்.

அதில் முகம் சிவந்தவள், “உன் மூஞ்சி... நைட் டின்னர் எப்பவும் நான் லைட்டாதான் சாப்பிடுவேன். நீ இப்படியொரு ப்ளான்ல இருக்கேன்னு தெரிஞ்சிருந்தா நல்லா சாப்பிட்டுத் தொலைஞ்சிருப்பேன். அன்டைம்ல சாப்பிட்டிருக்க மாட்டேன்!” என்றாள் சின்ன குரலில்.

“சரி... சாப்பிட்டு எனர்ஜி ஏத்திட்டீயா?” என பரிதி கேட்க, “யெஸ்... ஃபீலிங் பெட்டர்!” என்றவள் கையைக் கழுவ சென்றாள்.

“சாப்பிட்டல்ல... ஒழுங்கா வந்து படுக்குற. நாளைக்கு நீ ஆஃபிஸ் போகணும். கரெக்ட் டைம்க்கு எழாம தூங்கிட்டே இருப்ப. உனக்கொரு ஆளு அலார்ம்‌ மாதிரி எழுப்பி விடணும்!” என வாணி முனகும்போதே அவளை இழுத்து சுவரில் சாய்த்து அழுத்தி முத்தமிட்டான் பரிதி. அவள் பேச வந்த வார்த்தைகள் அமிழ்ந்து போயின. முன்பு போல அவளிடம் மறுப்பில்லை.

“சும்மா ஸ்கூல் பையனை ட்ரீட் பண்ற மாதிரியே என்கிட்ட பேசாத டீ. நான் உன் புருஷன்... முன்ன கூட பரவாயில்லை. இதுக்கும் மேல என்னை அரட்டி உருட்டாத!” என்றான் குரலை உயர்த்தி.

வாணி அவனைத் தீயாக முறைத்தாள். அதில் பம்மியவன், “சும்மா வானு... வா நம்ப போய் படுக்கலாம்!” என மெல்லிய குரலில் கூறி அவளைக் கையோடு அழைத்துச் சென்றான்.

இருவரும் படுத்ததும் பரிதி அவள் முகத்தைப் பார்ப்பதும் அவள் முறைத்ததும் திரும்புவதுமாய் இருக்க, “பரிதி...” என அதட்டலிட்டாள். அவன் அவளது இடையோடு கை கொடுத்து தன்னருகே இழுத்து இறுக்கி அணைத்தான். அவன் மூச்சு காற்று இவள் முதுகில் மோதிற்று.

“தேங்க்ஸ் வானு... தேங்க் யூ சோ மச்!” என அவன் சின்ன குரலில் கூற, வாணி என்னவென்பதாய் தலையை உயர்த்திப் பார்த்தாள்.

“இவ்ளோ நாள் எங்க நீ என்னை விட்டுப் போய்டுவீயோன்னு ஒரு இன்செக்யூரிட்டி ஃபீலிங் எனக்குள்ளே இருந்துச்சு. பட், இப்போ அப்படியில்ல. லாஸ்ட் டைம் ஊருக்கு வரும்போதே எப்படியாவது உன்னை கன்வின்ஸ் பண்ணிக் கரெக்ட் பண்ணலாம்னு நினைச்சு வந்தேன். ஆனா சொதப்பிடுச்சு. ஒரு கிஸ் பண்ணதுக்கே என்னை அடிச்சு தொரத்திட்ட. பட், இனிமே நான் நிம்மதியா தூங்குவேன்!” என்றான். வாணி அவனைப் பார்த்தவாறு திரும்பி படுத்தாள்.

“அதாவது புள்ளை கொடுத்துட்டா பிராண நாதான்னு உன் கால்ல விழுந்து கிடப்பேன்னு கனவு கண்ட. அப்படித்தானே?” என இவள் அவனைக் கடுப்போடு பார்க்க, பரிதி பயத்தோடு ஆமாமென தலையை அசைத்துப் பின்னர் இல்லையென்பதாக ஆட்டினான்.

அவன் முடியைக் கொத்தாகப் பிடித்தவள், “ஏன்டா இப்படி கேவலமா திங்க் பண்ற? எப்போதான்டா நீ திருந்துவ?” எனக் கோபமாகக் கேட்டாள். அவன் திருதிருவென விழித்தான்.

“சாரி வானு...‌ இப்படிலாம் நினைக்கிறது தப்புதான். பட், நீ என்னைவிட்டுப் போகக் கூடாதுன்னா என்ன‌ பண்ணணும்னு குறுக்கு வழியைத்தான் மனசு தேர்ந்தெடுக்குது!” என்றவன்,

“ப்ராமிஸா இனிமே நல்ல பையனா இருக்க ட்ரை பண்றேன் நான்!” என்றான் அவசரமாக. பட்டென அவன் தோளிலே ஒரு அடி போட்டு அவனைவிட்டுத் தள்ளிப் படுத்தாள் வாணி.

“வானு...கோச்சுக்கிட்டீயா? நான்
உன்கிட்ட எதையும் மறைக்க கூடாது, ட்ரான்ஸ்பரன்சி மெய்ண்டெய்ன் பண்ணுவோம்னு சொன்னா நீ என்னை திட்டுற!” சின்ன குழந்தை போல அவளிடமே அவளைப் பற்றி புகார் வாசித்தான்‌ பரிதி.

“உனகெல்லாம் எப்போதான் மெச்சூரிட்டி வருமோ? பேசாம படுத்து தூங்கு. இல்ல ஹாலுக்கு அனுப்பிடுவேன்!” என வாணி மிரட்டி அவனை உறங்கச் சொல்லி, தானும் தூங்கிப் போனாள்.

காலையில் எட்டு மணிக்கு மேல்தான் வாணிக்கு உறக்கம் கலைந்தது. அவள் கட்டிலின் விளிம்பிற்கு வந்திருந்தாள். பரிதி கையைக் காலை விரித்து அவளைத் தள்ளியிருந்தான். வெடுக்கென அவன் காலிலே ஒரு அடி அடித்தவள், குளித்து வந்தாள். அப்போதும் அவன் எழவில்லை.

“பரிதி... எழுந்திரி. ஆபிஸ் போகணும் நீ!” அழுத்தி அவன் தோளைப் பிடித்து வாணி உலுக்க, “சாரி சார்... ஐ நீட் லீவ். ஐ யம் சோ டையர்ட். யெஸ்டெர்டே வாஸ் மை ஃபர்ஸ்ட் நைட் ஓவர்!” என அவன் புலம்ப, இவள் தன் தலையிலே அடித்துக்கொண்டு, நறுக்கென அவன் புஜத்தில் கிள்ளி வைத்தாள்.

அதில் அலறி எழுந்தவன், “ஏன் டீ?” என்றான் கோபத்தோடு முகத்தைச் சுருக்கி. இன்னும் விழிகளை முழுதாக திறக்கவில்லை. குரலிலும் தூக்கம் மீதமிருந்தது.

“ஒழுங்கா குளிச்சிட்டு ஆஃபிஸ் கிளம்பு!” என அதட்டலுடனே வாணி என்ன சமைக்கலாம் என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள். நேற்று வாங்கி வந்த மாவில் இட்லி ஊற்றி, சட்னி அரைக்கலாம் என்றபடியே வேலையைக் கவனித்தாள்.

பரிதி வாயில் பல் துலக்கியோடு வந்தான். அவள் பின்னே வந்து என்ன சமைக்கிறாளென அவன் எட்டிப் பார்க்க, “ப்ம்ச்... பிரஷ் பண்ணிட்டே கிச்சனுக்கு வருவியா நீ?” என அதட்டி அவனை அனுப்பினாள். பல் துலக்கிவிட்டு வந்தான்.

வாணி சட்னிக்குத் தேவையான தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்தாள். பரிதி சின்ன புன்னகையுடன் அவளைப் பார்த்தான். தலைக்கு குளித்து, சுருட்டை முடியை அப்படியே விட்டிருந்தாள். பின்புற முதுகு முழுவதும் நனைந்து போயிருந்தது‌. அவள் முகம், மூக்கு, உதடு என பார்வை மெல்ல இயறங்க, மனைவியும் வெகு சுகமாய் அவனுக்குள்ளே இறங்கினாள். நேற்றைய நிகழ்வின் மலர்வு அவள் முகத்தையும் மிளிரச் செய்தது. இவனுக்கும் முகம் முழுவதும் பல் இல்லாதது ஒன்றுதான் குறை என உற்சாகத்துடன் அவளை அங்குல் அங்குலமாக கண்களால் அளந்து ரசித்து, தன்னுள்ளே பத்திரப்படுத்தினான்.

என்ன ஒரு அழகான காலை பொழுது? அவன் வாழ்வில் இப்படியொரு பொழுதை அனுபவித்தது இல்லை. அவன் எதிர்பார்த்த ஒரு வாழ்க்கை. அவனுக்காகவென உடல் சோர்வையும், சுக அயர்வையும் மீறி காலையில் எழுந்து ஏதோ வெகு சிரத்தையுடன் சமைக்கிறாள் மனைவி. அதில் அவளுக்குத் தன் மீதான அன்பே பிரதானமாகத் தோன்றிற்று.‌ மூன்று வருட வாழ்க்கையை அவனாகத்தான் வீணடித்திருக்கிறான்.

இல்லையென்றால் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு குழந்தைளைப் பெற்றுப் போட்டு மனைவியை இன்னும் தொல்லை செய்ய ஆட்கள் வந்திருக்கக் கூடும். தான் , வாணி, அவளைப் போலவே கோதுமை நிறம், சுருட்டை முடியோடு ஆணொன்று பெணொன்று என நினைக்கும்போத மனம் முழுவதும் தித்தித்தது. ஒருமாதிரி மனம் நிரம்பி தளும்பிற்று. மனைவியை ஆதுரமாகப் பார்த்தான். அதட்டி, உருட்டி, மிரட்டும் வாணியோடு நேற்றைக்கு வெட்கப்பட்டு, கூச்சம் கொண்டு தாளாமல் சிணுங்கிய வாணியும் அவனை நிறைத்துப் போட்டாள்.

இந்தப் பொண்ணோடு தன் வாழ்வு பரிபூரணமானது.
இன்னும் எத்தனை வருடங்களானாலும் இவளின் பிரியத்தில் கட்டுண்டு கிடக்கவே மனம் ஏங்கிற்று. இவள் என் மனைவி என்ற உரிமைக்கோரலுடன் சுதந்திரமாக அவளைப் பார்வையால் வருடினான்.

“தலையைக் காய வச்சுட்டு வந்து குக் பண்ணலாம் இல்ல வானு?” எனக் கடிந்துகொண்டே, அவள் முடியிலிருந்த நீரை மெல்ல தட்டிவிட்டான். அவள் பதிலுரைக்கவில்லை. வேலையில் கவனமாக இருந்தாள்.

“சரி... நான் போய் குளிச்சுட்டு வரேன் வானு...” என்றவன் சென்ற சில நிமிடங்களிலே திரும்பி வந்தான்.

“ப்ம்ச்... வானு... நான் மறந்தே போய்ட்டேன். நீயாவது ஞாபகப்படுத்தியிருக்கலாம் இல்ல?” முசுட்டு முகத்தோடு பரிதி கேட்க, வாணி என்னவென புரியாது அவனைப் பார்த்தாள்.

“என்ன மறந்த? என்ன ஞாபகப்படுத்தலை நான்?” எனக் கேட்டவள், அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடலை பருப்பை வதக்கினாள்.

“இந்த மூவிஸ், ஸ்டோரிஸ்லலாம் ஹீரோ ஹீரோயின் ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சு காலைல ப்ரஷ் பண்ணாம கிஸ் பண்ணிக்குவாங்கல்ல. நானும் அதே மாதிரி பண்ணணும்னு பல நாளா கனவு கண்டு வச்சிருந்தேன் வானு. இப்போ... ஏதோ எக்ஸைட்மெண்ட்ல சுத்தமா மறந்துட்டு பல்லை விலக்கித் தொலைஞ்சுட்டேன்!” வெகு தீரவி பாவனையில் அவன் நெற்றியில் கையை வைக்க,

“சைக் கருமம்...” என முகம் சுளித்தாள் இவள்.

“கருமமா... நானே மிஸ் பண்ணிட்டேன்ற கடுப்புல இருக்கேன்‌ டீ. நாளைக்கு ட்ரை பண்றோம்!” என்றான் உறுதியாக.

“ப்ரஷ் பண்ணாமகிட்டே வந்து பாரு. உன் தோளை உரிச்சுடுவேன்!” என மிரட்டினாள் வாணி.

“அப்போ... ப்ரஷ் பண்ணாத்தான் கிஸ். இல்லேன்னா நோவா?” அவன் புருவத்தை நெறிக்க, அவள் ஆமோதிப்பாய் தலையை அசைத்தாள்.

“சரி.. இப்போ பல்லு விளக்கிட்டேன். ஒரு கிஸ் கொடு. போய் குளிக்கணும் நான்!” என்றான்.

“ம்ப்ச்... விளையாடாம போய் குளிடா. உனக்கு ஆஃபிஸ்க்கு டைமாச்சு...” வாணி அதட்ட,

“அதெல்லாம் நான் பர்மிஷன் கேட்டுட்டேன் ஆல்ரெடி. லேட்டா போனாலும் ஒன்னும் சொல்ல மாட்டானுங்க!” அவன் கூறியதும்,

“என்னென்னு கேட்டு பெர்மிஷன் வாங்குன நீ? ஃபர்ஸ்ட் நைட் நேத்துதான் முடிஞ்சது. சோ டையர்ட்னா?” அவள் நக்கலாக கேட்க, பரிதி அவளை முறைத்தான்.

“ஏன்டீ... என்னை என்ன விவஸ்தை கெட்டவன்னு நினைச்சீயா? அதெல்லாம் இல்ல!” என்றான் ரோஷக் குரலில்.

“ஐயோடா... அப்பா காலைல நான் எழுப்பும்போது ஆவிதான் வந்து உளறுச்சா?” வாணி உதட்டை வளைத்ததும், பரிதி அவளை நம்பாமல் பார்த்தான். அவள் உண்மையில் அவனை முறைக்கவும், தான்தான் உளறிக் கொட்டியிருக்கிறோம் எனப் புரிந்தது.

சின்னதாய் அசடு வழிய சிரித்தவன், “அது ஒரு சந்தோஷத்துல உளறிருப்பேனாக்கும் வானு!” என்றான். அவள் சட்டியில் வெங்காயம், தக்காளியை வதக்கி முடித்ததும் ஆற வைத்தாள்.

“வானு...” அவன் அழைக்க,

“போய் குளிச்சிட்டு வந்து கதை பேசலாம் இல்ல?” என அவளிடமிருந்து ஒரு அதட்டல் வர, பரிதி அவளை இழுத்து இறுக்கி அணைத்தான்.

“பரிதி!” இப்போது அவளது அதட்டல் கூட மிக மென்மையாய் அவனை சமீபித்தது.

“தேங்க் யூ வானு... தேங்க்ஸ் ஃபார் கம்மிங். காலைல எழுந்திரிச்சதும் இத்தனை நாள் வெறுப்பா ஏதாவது ப்ரெட்டு, பண்ணுன்னு சாப்பிட்டு கிளம்பிடுவேன். பட், இன்னைக்கு நீ இப்படி கிச்சன்ல நடமாடிட்டே இருக்கதைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா? ஐ’யம் சோ ஹேப்பி!” என்றான் உணர்ந்த குரலில். அவள் உதட்டில் புன்னகை மலர்ந்தது.

“அதாவது உனக்கு சமைச்சுப் போட ஆள் வேணும்‌‌. அப்படித்தானே?” வேண்டுமென்றே வம்பிழுத்தாள் வாணி.

“சமைச்சு போட மெய்ட் இருந்தா போதும் வானு. பட், பாரேன்... வெட்கம், கூச்சம்னாலும் எனக்கு சொர்க்கத்தை காட்ட என் பொண்டாட்டிதானே வேணும். அ
யூ ஆர் ஆஸம் வானு. செம்ம பீலிங் டீ அது” என அவன் மேலும் பேசும் முன்னே அவன் வாயிலே பட்டென அடித்த வாணியின் முகம் சிவந்தது‌.

“பரிதி... போதும்... இப்படிலாம் பேசாத. அடிச்சுப்புடுவேன்!” என்றாள் பொய்யான மிரட்டிலில்.

“ஏய்... பேச மட்டும் இல்ல டீ... இதோ இந்த சுருட்டை முடிலருந்து பாதம் வரைக்கும் இந்த ஐஞ்சடி உடம்பு ஃபுல்லா என் சொத்து டீ. நான் பேசுவேன்... ரசிப்பேன், ருசிப்பேன், புசிப்பேன்... என்ன வேணாலும் பண்ணுவேன்!” சன்னமான சிரிப்புடன் அவள் சுருட்டை முடியில் கையை நுழைத்தான் பரிதி‌. முன்பை விட பேச்சு, செய்கை என அனைத்திலுமே இணக்கம் கூடிப் போயிற்று. நாகரீகமெல்லாம் துறந்து மனைவியிடம் வம்பிழுத்தான் பரிதி. வாணிக்குத்தான் சட்டென அவனைப் போ
ல பேச முடியவில்லை.

அவன் பேச்சுக் கொடுத்த கூச்சத்தில் சங்கடப்பட்டவள், “ஒழுங்கா குளிச்சிட்டு வேலைக்குப் போ. ஓடு!” என அரட்டி உருட்டி அவனை வேலைக்கு அனுப்பிவிட்டாள்.

தொடரும்...







 
Top