- Messages
- 1,346
- Reaction score
- 4,078
- Points
- 113
நேரம் – 53
“இசை, சிப்ஸ்ல சால்ட் கம்மியாருக்கு!” சூடாய் நிஹாரிகா தன் முன்னே வைத்த தட்டிலிருந்த உருளைக்கிழங்கு வறுவலை ஒருவாய் உண்டபடி ரஞ்சித் பதிலளிக்க, அவனுக்கருகே நெடுநெடுவென உயரத்துடன் அமர்ந்திருந்தவனும் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றான்.
“நல்லா உக்கார்ந்து திண்ணுட்டு குறை சொல்றானுங்க பக்கிங்க!” முணுமுணுத்துக் கொண்டே நிஹாரிகா அந்த உருளைக்கிழங்கு கலவையில் உப்பைத் தூவி கிளறினாள்.
“நீ போ நிக்கி... நான் பார்த்துக்கிறேன்!” வாணி அவளை போகச் சொல்ல, சில நொடிகள் வெளியே இருக்கும் இரு ஆடவர்களை வாயில் அவலாக மென்றுவிட்டே அகன்றாள் நிஹாரிகா.
“என்ன நிக்கி... சிப்ஸோட வருவேன்னு பார்த்தா வெறுங்கையோட வர?” ரஞ்சித் கேட்டதும், அவனை முறைத்தாள் இவள்.
“நீங்கலாம் மனுஷனுங்களா டா? மதியம் அவ்ளோ ஹெவியா சாப்பிட்டிருக்கோம். நான் நாளைக்கு மார்னிங் ப்ரேக் ஃபாஸ்ட் கட் பண்றது வரை யோசிச்சேன். நீங்க என்னடான்னா கொஞ்ச நேரத்துல லேசா பசி, லேஸ் சாப்பிடணும்னு அவளை சிப்ஸ் போட சொல்றீங்க?” எனக் கடுப்பானாள்.
“ஏய்... எங்களை என்ன உங்களை மாதிரி நினைச்சியா? சும்மா அரை ப்ளேட் பிரியாணியை பந்தாவுக்கு சாப்பிட்டுட்டு காலைல வர பட்டினி கிடப்பாளாம். போகும்போது நாங்கலாம் இன்னும் ரெண்டு ப்ளேட் கிரில்லை உள்ள தள்ளப் பிளான் போட்டுட்டோம்!” என அவன் நக்கலாக கூற, இவள் அவன் முடியைப் பிடித்து மெல்ல ஆட்டினாள். இரண்டாமவன் சிரிப்புடன் இவர்களைப் பார்த்தான். வீட்டின் அழைப்பு மணி கேட்க, அவனை அடிப்பதை விட்டுவிட்டு யாரெனப் பார்க்க சென்றாள் நிஹாரிகா.
சோர்வு அப்பிய முகத்துடன் நின்றிருந்த பரிதி வாணி வந்து கதவைத் திறப்பாள் என எண்ணி ஆவலுடன் காத்திருக்க, இவள் வந்ததும் சட்டென ஒரு ஏமாற்றம் அவனிடம் சூழ்ந்தது. அதை மறைத்துக் கொண்டவன், சின்னதாய் புன்னகைத்தான். நிக்கிக்கு சட்டென அவன் யாரென அடையாளம் காண முடியவில்லை. அதனால், அவனை உள்ளே விடாமல் பார்வையால் அளந்தாள்.
“நான் பரிதி... வாணியோட ஹஸ்பண்ட்!” அவளின் ஆராய்ச்சி பார்வையில் மெல்ல படரப் பார்த்த எரிச்சலை மறைத்தபடி அவன் கூறியதும், நிஹாரிகா படக்கென நகர்ந்து வழிவிட்டாள்.
“சாரி... சாரி ப்ரோ. உங்களை சட்டுன்னு ஐடென்டிஃபை பண்ண முடியலை!” அவள் நாக்கை கடித்து மன்னிப்பு கேட்க, சின்ன தோள் குலுக்கலுடன் அதை ஏற்றான் பரிதி. உள்ளே இன்னும் இரண்டு ஆடவர்கள் அமர்ந்திருக்க, யாரு இவர்கள் கரடி போல என ஏகக்கடுப்பு அவனுக்கு. இருந்தும் அந்த ஆண்களைப் பார்த்து வலிய சிரித்து வைத்தான்.
உள்ளே நுழைந்ததும் வாணியை அணைத்து மூச்சு முட்ட முட்ட, மூக்குரச ஒற்றை முத்தமாவது கொடுத்து பிரிவாற்றாமையைப் போக்கிக்கொள்ள வேண்டுமென எண்ணி வந்தவனை இவர்கள் கடுப்பேற்றினர். வாணிக்கு இவன் வந்தது தெரியவில்லை. சமையலறையில் வேலையாக இருந்தாள்.
“உங்க ஆளு கிச்சன்ல இருக்கா!” நிக்கி கை காண்பிக்கவும், சின்ன புன்னகையுடன் தலையசைத்தவன், முதலில் அவளது அறைக்குச் சென்று தன் பொதியை வைத்தான். பின்னர் அவசர அவசரமாக குளித்து உடை மாற்றிவிட்டு முகம் மலர சமையலறை நோக்கிச் சென்றான்.
அவன் உள்ளே நுழைந்ததும், “ரஞ்சித்... இப்போ சிப்ஸ்ல உப்பு கரெக்டா இருக்கான்னு பாரு!” என்ற வாணி தேநீரை வடிகட்டி, அதில் சர்க்கரையைக் கலந்தாள். இவன் சில நொடிகள் அவளைப் பார்த்தபடியே நின்றான். மனத்தில் பெரும் அமைதியும் ஆசுவாசமும் வந்தமர்ந்தது.
எத்தனை தூரம் இந்தப் பெண்ணைத் தான் தேடியிருக்கிறோம் என மனம் இக்கணம் உணர்த்திற்று. வெளியே ஆட்களிருக்க, இவனால் தற்போதைக்கு சத்தமாகப் பேசக் கூட முடியவில்லை.
“சுகர் கொஞ்சமாதான் போட்டிருக்கேன் ரஞ்சித். ஓகேவான்னு பாரு!” எனத் திரும்பாமலே வாணி பேச, மெதுவாய் அவளது தூக்கி கட்டியிருந்த கொண்டையில் சில முடிகளை அவிழ்த்துவிட்டான் பரிதி.
“ப்ம்ச்...” என தலையில் ஏதோவென தட்டிவிட்டு அவள் வேலையைத் தொடர, அவளுக்குப் பின்னே நெருக்கமாக வந்து நின்றவன், காதோரமாய் குனிந்து, “மிஸ் யூ வானு!” என்றான் ஏக்கம் மிகுந்த குரலில். அவள் இதயம் திடுக்கிடத் திரும்பினாள். யாரோ பின்னே ஒட்டி நிற்கிறார்கள் என அவள் புலன்கள் உணர்ந்து, சுதாரித்து அருகே ஏதாவது கிடைக்குமா என அடிக்கப் பார்த்தவளின் கரங்கள் பரிதியைப் பார்த்ததும் அப்படியே நின்று போயின. சின்ன சிரிப்புடன் அவளைப் பார்த்து, அவள் கையிலிருந்த பாத்திரத்தைக் கண்டு அதிர்ச்சியோடு தலையசைத்து போலி பயத்தோடு பின்னே நகர்ந்தான்.
“அடிப்பாவி... ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி அம்மாப்பாவைக் கூடப் பார்க்கப் போகாம உன்னைப் பார்க்க வந்தா, அடிச்சு மண்டையைப் பொளந்துடுவ போல!” பொய்யாய் அவன் அலற, வாணிக்கு இன்னுமே திகைப்பு நீங்கவில்லை. நேற்றிரவு பேசும்போது கூட அவன் இந்தியா வருகையைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட உரைக்கவில்லை. அவளுக்கு கனவோ எனத் தோன்ற, மெல்ல நெருங்கி அவன் புஜத்தில் வலிக்காதவாறு கிள்ளினான்.
“ஷ்... சதையைப் பிச்செடுத்துடாத டீ!” என குறும்புடன் அவள் தலையைப் பிடித்து ஆட்டியவன் முகத்தில் அலைந்து திரிந்து இருப்பிடம் வந்த மகிழ்ச்சி தெரிந்தது.
“இப்படியா திடுதிப்புன்னு வந்து நிப்ப பரிதி நீ? சொல்லிட்டு வர மாட்டீயா?” சின்னதாய் வாணி அதட்டலிட்டாள். அவன் வந்ததில் அவளுக்கும் மகிழ்ச்சி என்றாலும் கூட யாரிடமும் கூறாமல் இப்படி வந்து நிற்கிறானே எனக் கடிந்தாள் அவள்.
“ம்ப்ச்... யார்ரா இவ. பத்து மாசம் கழிச்சு புருஷன் வந்துருக்கானேன்னு சந்தோஷப்படாம பி.டீ டீச்சர் மாதிரி விறைப்பா இருக்கா!” என முகத்தை தூக்கினான். வாணிக்கு அவன் பேச்சில் சிரிப்பு முளைத்தது.
அதில் தைரியம் வரப் பெற்றவன், “இவனுங்களையெல்லாம் கரெக்டா இன்னைக்குத்தான் வீட்டுக்கு கூப்பிட்டுவீயா நீ? உள்ளே வந்ததும் உன்னைக் கட்டிப் பிடிச்சு ஒரு கிஸ், ஒரு ஹக்னு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு பார்த்தா மூனும் கரடிங்க மாதிரி இருக்காங்க!” என்றான் கடுப்புடன்.
“பரிதி!” அவன் பேசியது நண்பர்களுக்கு கேட்டுவிடப் போகிறதோ எனப் பயந்து அவனை அதட்டியவள், தலையை மட்டும் நீட்டி வெளியே பார்க்க முனைய, சட்டென அவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான் பரிதி. வாணிக்கு இதயம் திடுக்கிட்டது போனது அவன் செயலில்.
“பரிதி... எல்லாரும் வெளிய இருக்காங்க. என்ன பண்ற நீ?” அவள் அதட்ட, “டூ மினிட்ஸ் வானு. நான் உன்கிட்டே வந்துட்டேன்னு என்னை ஃபீல் பண்ண விடு டீ. அவங்க எதுவும் நினைக்க மாட்டாங்க!” என்ற முணுமுணுப்புடன் அவள் வாசத்தை தன்னுள் நிரப்பிக்கொண்டவன், அவசரமாய் அவள் உச்சியில் ஒரு ஈர முத்தத்தோடு அணைப்பிலிருந்து விடுவிக்க, வாணிக்கு என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியாமல் திகைத்து விழித்துப் பின், அவன் கையைப் பிடித்து சற்றே கோபத்தோடு வெளியே தள்ளினாள். என்ன செய்கிறானென அவளுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.
அவள் சர்க்கரையிட்டு கலக்கிய தேநீர் ஆறிப் போயிருக்க, மீண்டும் சூடு செய்து எடுத்து வந்தாள். உடலில் பரவிய மெல்லிய நடுக்கம் அவளது நிலையை உணர்த்திற்று. மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன்படியே வெளியே சென்றாள். பரிதி மற்ற மூவரோடு அமர்ந்து ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். அவனை முறைத்துக் கொண்டே அனைவருக்கும் தேநீர் கொடுத்தாள்.
குடித்து முடித்ததும், “ப்ரோ... சின்ன கைண்ட் இன்பர்மேஷன். நாங்க யாரும் கரடியில்ல. ஹியூமன் பீயிங்க்ஸ்!” எனக் கேலியாக ரஞ்சித் கூறி விடை பெற்றான். வாணி அவர்களை சங்கடத்துடன் பார்த்து வழியனுப்பி வந்தவள், பரிதியை தீயாய் முறைக்க, அவளைக் கண்டு கொள்ளாதவன் மீண்டும் இழுத்து அணைத்து அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டான்.
“எந்த தைரியத்தில இப்படி பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப் பிடிக்கிற பரிதி. நான் இன்னும் உனக்கு ஓகே சொல்லலை!” கண்டிப்பான அதட்டலோடு வாணி அவனை விலக்கிவிட முயன்றாள்.
அவள் தலையில் நாடியைப் பதித்தவன், “ப்ம்ச்... பேசாம கொஞ்ச நேரம் இரேன் டீ. பத்து மாசம், எப்போடா உன்னைப் பார்ப்போம்னு ஒவ்வொரு மாத்தையும் நெட்டித் தள்ளிட்டு வந்துருக்கேன் நான். உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன்னு சொல்லணும், கட்டிப் பிடிக்கணும். முத்தம் கொடுக்கணும் அவ்ளோ ஆசை. ஆனாலும் அப்படியெல்லாம் பண்ணாம டீசடன்டா ஒரு ஹக்தான் பண்ணேன். அதுக்கே என்னைப் பாடாப்படுத்துற!” என சலிப்புடன் அவளிடமிருந்து பிரிந்தான் பரிதி.
“முத்தமா... கொடுத்து மட்டும் பாரேன். அப்புறம் நடக்கும் கச்சேரி!” அவள் கையைக் கோபத்தோடு சுழற்றினாள். பரிதிக்கு சிரிப்பு வந்தது. எதுவும் பேசாமல் பொத்தென நீள்விருக்கையில் அமர்ந்தவன்,
“ஆனாலும் சின்ன புள்ளையை ட்ரீட் பண்ற மாதிரி என்னை நடத்துற நீ!” சுகமாய் சலித்தான்.
“நீ எப்போ மெச்சூர்டா நடந்திருக்க?” எனக் கேட்டு அவனுக்கருகே அமர்ந்தாள் வாணி.
அப்படியே அவள் தோளோடு அணைத்தவன், “நான் இல்லாம தொல்லை ஒழிஞ்சதுன்னு சந்தோஷமாக இருந்திருப்பல்ல?” கேட்டதும், இவள் வேகமாக அதை ஆமோதிப்பது போல தலையை அசைக்கவும், அவன் முகம் உர்ரென மாறிற்று.
அதைப் பார்த்ததும் சிரித்த வாணி, “ஹம்ம்... கொஞ்சமா மிஸ் பண்ணேன்!” என கணவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். இன்னுமே அவன் முகபாவனையை மாற்றவில்லை.
“நிஜமா ஒன்னு சொல்லவா பரிதி?” தீவிரக் குரலில் கேட்டவளை என்னவென்பதாய் தலையை உயர்த்திப் பார்த்தான் பரிதி.
“உன்னை மிஸ் பண்ண நீ ஸ்பேஸே கொடுக்கலை பரிதி. காலைல கோழி கூவுற மாதிரி கால் பண்ணிடுவ. நைட்டும் எனக்குத் தூக்கம் வருதுன்னு கதறுனாதான் காலைக் கட் பண்ணுவ. இடையில அத்தை, கீர்த்தனா, அற்பி, சரோன்னு யாராவது பேசுவாங்க. இப்படி என்னை ஆக்குபைடா வச்சிருந்தா எப்படி நான் உன்னை மிஸ் பண்ண முடியும். இந்த த்ரோ-அவுட் தி இயர் உன் மூஞ்சியைத்தான் பார்க்கலையே தவிர, ஐ பெல்ட் யுவர் பிரசன்ஸ்!” என மென்மையாய் புன்னகைத்தாள் வாணி. பரிதியின் முகம் மெல்ல மலர்ந்தது.
“நிஜமாவா?” எனக் கேட்டு அவள் உள்ளங்கையைத் தன் கன்னத்தில் அழுத்தினான்.
“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு. என்னை எந்தளவுக்கு கஷ்டப்படுத்துனீயோ, அந்தளவுக்கு சந்தோஷமா வச்சிருக்க ட்ரை பண்ற நீ!” என கேலியுடன் நாசூக்காக கையை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள் வாணி.
“சும்மா சொல்லிக் காட்டீட்டே இருக்காத டீ. இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்!” அவன் நொடித்தான். அவள் இப்போது மலர்ந்து சிரித்தாள். பரிதிக்கு அகம் முகம் என அனைத்தும் நிரம்பி தளும்பிற்று.
“ஆமா... ஏன் திடீர்னு வந்து நிக்கிற நீ? என்ன ஸ்பெஷல்?” அவன் வந்ததும் கேட்க நினைத்ததை இப்போது கேட்டாள் வாணி.
“சும்மா...” கண்ணை சிமிட்டினான் பரிதி. அவள் நம்பவில்லையென தோளைக் குலுக்கினாள்.
“அந்த நூறு எம்.எல் டீயும் கொஞ்சமா சம்பிரதாயத்துக்கு நீ கொடுத்த சிப்ஸூம் எனக்குப் பத்தவேயில்ல வானு. தோசை மாவு இருக்கா வீட்ல?” வயிற்றைத் தடவியவனை முறைத்துக்கொண்டே வாணி தலையசைத்தாள்.
“சரி... அப்போ ஒரு நாலு ஸ்பூன் நெய்யை தோசை மேல ஊத்தி, அதை திருப்பி போட்டு பின்னாடி ஒரு ரெண்டு ஸ்பூன் நெய்விட்டு ரோஸ்ட் பண்ணி, அப்படியே உன்னோட சிக்னேச்சர் வேர்கடலை கெட்டி சட்னி வச்சு எடுத்துட்டு வருவீயாம். நான் கொஞ்ச நேரம் சோஃபால படுத்துக்கிறேன்!” என அவளை நகர்த்திவிட்டு அக்கடாவென படுத்துவிட்டான் பரிதி.
“அதெப்படிடா... என்னைப் பார்த்தா மட்டும் உனக்கு சோறு ஞாபகம் வருது?” அவள் கடிய,
தலையை உயர்த்தியவன், “என் அம்மாகிட்ட மட்டும்தான் அது இது வேணும்னு கேட்பேன் வானு. இப்போ உன்கிட்ட கேட்குறேன்!” எனக் கூறவும், “இப்படி ஏதாவது சொல்லி வாயை அடைச்சுடுங்கடா...” எனப் புலம்பிக் கொண்டே அவன் கேட்டதை செய்து கொடுத்தாள் வாணி. தான் சாப்பிட்டவாறே அவளுக்கும் ஊட்டிவிட்டான். வேண்டாமென்றவளை பரிதி விடவில்லை.
“நான்தான் சொல்றேன்ல பரிதி. வயிறு ஏற்கனவே ஃபுல்லா!” அவள் பேசுவதை கூட முடிக்க விடாமல் தோசையைத் திணித்தான். அவனை முறைத்துக் கொண்டே அதை மென்றாள் வாணி. அவர்கள் உண்டு முடித்ததும் சிந்தாமணி மகனுக்கு அழைத்துவிட்டார்.
அவன் இங்கு வந்ததை உறுதி செய்தவர், “அங்க வந்ததும் ஃபோன் பண்ண சொன்னேன்ல டா. பொண்டாட்டியைப் பார்த்ததும் உனக்கு வீடு மறந்து போய்டுச்சா?” என அவர் மகனை தாளிக்க, அவரை சமாளித்தவன் வாணியிடமும் பேச செய்தான்.
“வாணி... ரெண்டு பேரும் நாளைக்கு கிளம்பி செவ்வாய் காலைல இங்க இருக்க மாதிரி பார்த்துக்கோங்க!” என அவர் கூற, இவளுக்கு எதற்காகவெனத் தெரியவில்லை.
“அத்தை... அது... லீவ் கிடைக்காதே எனக்கு!” வாணி தவிர்க்கப் பார்க்க, அவர் விடவில்லை. அவள் வருகிறேன் என சொல்லும்வரை ஆள் மாற்றி ஒவ்வொருவரும் பேச, மார்த்தாண்டம் அழைக்கும்போது மறுத்தால் மரியாதையாக இருக்காது என்றெண்ணி வருகிறேன் என ஒப்புக் கொண்டாள்.
“ம்மா... சூப்பர்மா. நான் கூப்பிட்டா ஏதாவது கதை சொல்லி என் வாயை அடைச்சிடுவா உன் மருமக!” என்னதான் பரிதி கிசுகிசுவென தாயிடம் பேசினாலும் அது இவளுக்கு கேட்டுவிட்டது.
“ம்ப்ச்... நீதான் அவங்ககிட்டே சொன்னதா? நான் அங்கப் போனா எல்லார்கிட்டயும் அத்தை என்ன மருமகன்னு இன்ட்ரோ பண்ணுவாங்க. எனக்கு சங்கடமா இருக்கு. இன்னும் உன் விஷயத்துல நான் எந்த முடிவும் எடுக்கலை பரிதி!” என்றாள் ஆயாசமான குரலில்.
அவள் தோளில் கைப்போட்டு தன்னருகே அமர்த்தியவன், “நான் உன்கிட்டே இப்போ என்ன டிசிஷன்னு கேட்கப் போறதில்ல வானு. நானா கேட்க மாட்டேன். நீயா சொல்லு. அதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ நம்ப நாளைக்கு ஊருக்குப் போகலாம். அம்மாகிட்டே நான் பேசுறேன். அவங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க. ட்ரஸ்ட் மீ!” என்றான் நம்பிக்கை தரும் விதமாக. அரைகுறை மனதோடு தலையசைத்த வாணி மீதமான உணவை எடுத்துச் செல்ல, அவள் பின்னாலே சென்றான் பரிதி.
“வானு... இனிமே நான் ஹால்ல படுக்க மாட்டேன். உன் கூட உன் பெட்லதான்!” வேகமாக ஆரம்பித்தவன், வாணி திரும்பி முறைத்துப் பார்க்கவும், “அது... பெரிய பெட்தானே அது. சோ, ஷேர் பண்ணிக்கலாம்னு சொன்னேன்!” என்றான் கம்மிய குரலில். பதிலேதும் உரைக்காதவள், மீதமான சட்னியை குளிர்சாதன பெட்டியில் வைத்தாள்.
“உன்கிட்டதான் சொல்றேன் வானு. என்னால இனிமேலாம் வெளிய படுக்க முடியாது. உன் கூடவேதான் படுப்பேன்!” அடத்தோடு கூறியவன், அவளுக்கு முன்னே சென்று கட்டிலில் விழுந்து சுவரோரமாய் படுத்துக் கொண்டான்.
வாணி விளக்கை அணைத்துவிட்டு எதுவும் கூறாமல் அவனுக்குப் பக்கத்தில் விழுந்து, கழுத்துவரை போர்வையைப் போர்த்திக் கொண்டவள், அவனுக்கு முதுகு காண்பித்து படுத்தாள்.
சற்று நேரத்திலே பரிதி பார்வையின் குறுகுறுப்பை முதுகு உணர, “இங்க தூக்கம் வரலைன்னா கீழே போய் படு. இல்லைன்னா ஹால்ல கூட தூங்கு. அப்படியும் முழிச்சிருந்தேனா, வெளியே போய் வாட்ச்மேனுக்கு கம்பெனி கொடு. என்னை டிஸ்டர்ப் பண்ணாத!” என்றாள் கண்டிப்பான குரலில்.
கடுப்புடன் போர்வையை இழுத்து முகத்தை மூடியவன், “நான் தூங்கிட்டேன்!” என முணுமுணுத்தான். தலையை உயர்த்திப் பார்த்த வாணியின் உதட்டில் சின்னதாய் ஒரு சிரிப்பு உதிர்ந்தது.
மறுநாள் அவள் அலுவலகம் முடிந்து வந்ததும் இரவு பேருந்தில் இருவரும் பொள்ளாச்சியை நோக்கிப் பயணப்பட்டனர். அதிகாலையில் இவர்கள் சென்றிறங்கும்போது அந்த தெருவே விழித்துக் கிடந்தது. வாணிக்கு என்னவென்று புரியவில்லை. வீட்டின் முன்னே சென்று நின்றதும் அவளிடம் பெரும் திகைப்பு தோன்றிற்று. அவள் பார்த்து, வாழ்ந்த பரிதியின் வீடு இப்போது சுவடில்லாமல் மாறிப் போயிருந்தது.
பரிதி பழைய வீட்டை இடித்து இக்கால நவீனத்துவம் நிறைந்த பெரிய வீடாக கட்டியிருந்தான். வாசலில் கட்டியிருந்த வாழை மரங்களும், மாவிலை தோரணங்களும் இன்றைக்குத்தான் பால் காய்ச்சப் போகிறோம் என்று உணர்த்தின.
“எப்படியிருக்கு வானு வீடு? நம்ம, நம்ம பசங்க, பேரப் புள்ளைங்க கூட தங்குற அளவுக்கு பெருசா கட்டியாச்சு!” என்றான் அவள் தோளோடு அணைத்து. இது அவனுடைய நெடுநாள் கனவாகிற்றே. பூரித்த முகத்துடன் வீட்டைப் பார்த்திருந்தான் பரிதி.
பக்கவாட்டாகத் திரும்பி அவன் முகத்தை நோக்கிய வாணி, “என்கிட்ட ஏன் சொல்லலை நீ?” என்றாள் மெல்லிய கோபத்துடன்.
“சொன்னா நீ இவ்வளோ சர்ப்ரைஸ் ஆகிருப்பீயா வானு? எனக்கு உன் முகத்தைப் பார்க்கணும். நீ எப்படி ரியாக்ட் பண்றன்னு தெரிஞ்சுக்கத்தான் சொல்லலை!” என்றவன் உதட்டில் சின்னதாய் ஒரு சிரிப்பு. மனைவியைப் பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டினான்.
“ஏன்டா... வாசல்ல நின்னு என்ன பேச்சு. மசமசன்னு நிக்காம ரெண்டு பேரும் உள்ள போங்க. போய் குளிச்சு ரெடியாகுங்க. நல்ல நேரத்துல பாலைக் காய்ச்சணும்!” சிந்தாமணி இருவரையும் உள்ளே விரட்டினார்.
“வலது காலை எடுத்து வச்சு வா வானு!” என்றவன், சரியாய் அவள் கை கோர்த்து அவளோடே உள்ளே வந்தான். வாணி எதுவும் பேசவில்லை.
“இந்தா... இந்த புடவையை கட்டிக்கோ ஆத்தா. ஜாக்கெட் உன் அளவுக்குத்தான் தைச்சது. போ... போய் குளி!” என சிந்தாமணி அவளைப் பேசவிடாமல் குளியலறைக்குள் அனுப்பினார். புதிதாய் பூசிய சுவர்பூச்சின் வாசனை நாசியை நிரட, வேகமாய் குளித்து வந்தாள் வாணி.
“யம்மா வாணி... என் மருமகதான் வந்து பால் காய்ச்சணும்னு உன் மாமியார் அங்க எல்லாரையும் வெயிட் பண்ண வச்சிருக்காங்க. ராணியம்மா சீக்கிரம் வந்தா நல்லாருக்கும்!” இடுப்பில் இரண்டு வயது மகனை வைத்திருந்த அற்புதா இவளிருந்த அறைக்கதவை திறந்து எட்டிப் பார்த்துக் கூற, “ஏய் அற்பி. நீ எப்போ இங்க வந்த?” வாணி சந்தோஷக் கூச்சலிட்டாள்.
“எப்போ வந்தன்னு கேட்குறீயா? இல்ல எதுக்கு வந்தேன்னு கேட்குறீயா?” அவள் சடைத்துக் கொள்ள, வாணி அவசரமாய் நுனி முடியை மட்டும் முடிந்து முகத்தின் முன்னே விழுந்த முடியைத் தூக்கி கவ்வியில் அடக்கினாள். அவள் சமையலறை வர, எல்லாம் தயாராக இருந்தது.
“சிந்தா... உன் மருமக வந்துட்டா பாரு. பாலை காய்ச்ச சொல்லு!” முதியவர் ஒருவர் கூற, “வாணி... வா...” சிந்தாமணி அவளை முன்னே அழைத்தார். அவள் தயக்கத்துடன் பரிதியைப் பார்க்க, அவன் அவள் கையைப் பிடித்து பாலை சட்டியில் ஊற்றினான். வாணிக்கு சங்கடமாக இருந்தது.
“அத்தை... எனக்காக ஏன் வெயிட் பண்ணீங்க. நீங்களே வச்சிருக்கலாம்ல? இல்ல கீர்த்தனா இருக்கால்ல?” அவர் முகம் பார்த்தாள்.
“என்ன வாணி நீ? வீட்டுக்கு வந்து மூத்த மருமக நீ. உன் கையால பால் காய்ச்சுன்னாதான் நல்லாருக்கும். பால் பொங்குற மாதிரி வம்சம் தழைக்கணும். நான் பெத்த மூனு பிள்ளைகளும் சந்தோஷமா வாழணும்!” என அவர் கூற, இவள் மையமாகத் தலையை ஆட்டி வைத்தாள். அவர் மேலும் பேசும் முன்னே பரிதி தடுத்துவிட்டான். பால் பொங்கியதும் அவளே அனைவருக்கும் கொடுத்தாள். கீர்த்தனா அண்ணிக்கு உதவினாள்.
“ஹலோ ஹவுஸ் ஓனர் மேடம், பால்ல தண்ணி கலந்தீங்களா? இல்ல தண்ணில பாலைக் கலந்தீங்களா? இவ்ளோ மோசமா இருக்கு? சுகர் கூட பத்தலை!” சரவணன் இவளை வம்பிழுக்க, போடா என்றுவிட்டுப் போனாள் வாணி.
அனைவருக்கும் பாலைக் கொடுத்து முடித்ததும் சிந்தாமணி மருமகளைத் தன்னோடு இருத்திக் கொண்டார். தூரத்து உறவினர்களிடம் அவளைத் தன் மருமகள் எனப் பெருமையாய் அறிமுகம் செய்தார். வாணிக்கு அசௌகரியமாகத் தோன்ற, விழிகளை சுழற்றி பரிதியைத் தேட, அவன் வந்துவிட்டான்.
“வானு... என் சார்ஜரை எங்க வச்ச? ஃபோன் டெட்டாகப் போகுது!” அவன் அவளை அழைத்துச் செல்லப் பார்க்க, முதிய பெண்மணி ஒருவர் அவர்கள் இருவரையும் நகர விடாமல் நிறுத்தி வைத்துப் பேசினார். அவரிடம் பதிலளித்து மனைவியைத் தனியாய் அழைத்து வந்து அற்புதாவுடன் அமர வைத்தான். அம்சா அவனைப் பார்த்ததும் புன்னகைத்து நலம் விசாரித்தார்.
என்னதான் அற்புதாவும் சரவணணனும் பெற்றவர்களை சமாதானம் செய்திருந்தாலும் பரிதியாக அவர்களிடம் எதுவும் விளக்கம் கொடுக்கவில்லை என சின்ன மனக்கசப்பிலிருந்தனர் பெரியவர்கள்.
அதை அறிந்த பரிதி தன் பெற்றவர்களை நேரில் சென்று பேசி அவர்களைத் தங்கள் வீட்டு விசேஷத்திற்கு அழைக்க கூறினான். அவனும் இரண்டு முறை அலைபேசியில் பேசி, வற்புறுத்தி இயல்பாக அறுந்து போன உறவைத் தொடரக் கேட்க, அதற்கு மேலும் கோபத்தை இழுத்துப் பிடிக்காமல் அம்சாவும் காமராஜூம் இறங்கி வந்துவிட்டனர்.
பரிதி நிலைக் கதவில் சாய்ந்து நின்று வாணியைத்தான் பார்த்திருந்தான். ஈரம் காயாத முடி, நெற்றியில் ஈஷியிருந்த குங்குமம், சந்தனம், கழுத்தில் மெல்லிய தாலி போன்ற சங்கிலி, காதில் சின்ன தோடு என வெகு எளிமையாக இருந்தாலும் கண்ணை நிறைத்தாள். எப்படி இந்தப் பெண்ணை இரண்டு வருடங்கள் உடன் வைத்துக் கவனிக்காமல் போனோம் என இப்போதும் தன்னையே திட்டிக் கொண்டான்.
அப்படியே அனைவரையும் வேடிக்கைப் பார்த்திருந்தவனின் விழிகள் தாய், தந்தையிடம் நிலைத்தன. அவனைத்தான் கை காண்பித்து அவர்கள் ஏதோ பேசினர். பின்னர் வீட்டைச் சுற்றிக் காட்டி, “ஆமா... என் மூத்த மகன்தான் கட்டுனான். வெளிநாட்டுல வேலை பார்க்குறான்!” மார்த்தாண்டம் பெருமையாக கூற,
“ரொம்ப பொறுப்பான பையனா இருக்கான் உன் மவன்!” என மற்றொருவர் இவனைப் புகழ்ந்து பேச, பெற்றவர்கள் அதை பூரிப்புடன் கேட்டு நின்றனர். பரிதிக்கு அவர்களின் சிரித்த முகத்தைவிட்டு விழிகளை நகர்த்த முடியவில்லை.
சிந்தாமணிக்கு வீட்டை இடித்துப் புதிதாக பெரியதாக கட்ட வேண்டும் என்ற எண்ணம்ருந்தாலும் பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் என சம்பாதித்த சொற்ப பணத்தை அவரால் சேமிக்க மட்டுமே முடிந்தது. இப்போது மகன் அவரது எண்ணத்திற்கு உயிர் கொடுத்திருக்கவும், அவருக்குப் பெருமை பிடிபடவில்லை. ஒருமாதிரி ராஜ தோரணையுடன் சுற்றினார். அவரைப் பார்த்ததும் இவனுக்கு சிரிப்பு முளைத்தது.
அவர்கள் பேசி முடித்து அகன்றதும், மீண்டும் மனைவியைப் பார்க்கத் தொடங்கினான். என்னவோ வாணி இன்றைக்கு அவன் கண்களுக்கு வெகு அழகாகத் தெரிந்தாள். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்பது போல ஒரு உந்துதல். யார் கண்ணையும் கவராமல் கண்களால் அவளைக் களவு செய்தான். வாணி தலையை உலர்த்தி தளரப் பின்னியதும் அம்சா அவள் தலையில் பூ வைத்துவிட்டார். அதில் அவளது வசீகரம் கூடிப் போனதை உதட்டில் பூத்த முறுவலோடு பார்த்திருந்தான்.
காலை உணவோடு விருந்தினர்கள் பெரும்பாலும் கலைந்தனர். நெருங்கிய சொந்தங்கள் மட்டும் மாலைவரை இருந்துவிட்டுத்தான் சென்றனர்.
உடை மாற்றிவிட்டு வருகிறேன் என அறைக்குள்ளே வாணி செல்ல, பரிதி அவள் தன்னைப் பார்த்துவிட்டு சென்றதுமே என்னவென புரியாது அவள் பின்னே சென்றான்.
“எவ்ளோ ஆச்சு பரிதி வீடு கட்ட? மொத்தமா கடன் வாங்கித்தான் கட்டுனீயா?” கண்டிப்பான குரலில் கேட்டாள்.
சின்ன சிரிப்புடன் கட்டிலில் அமர்ந்தவன், “பாதி கைகாசு தான் வானு. மிச்சம்தான் லோன். அடைச்சிடலாம்!” என்றான்.
“ப்ம்ச்.. எவ்ளோ லோன் எடுத்த? என்கிட்ட கேட்க வேண்டியதுதானே? என் சேலரியை சேவிங்க்ஸ்லதான் போட்டு வச்சிருக்கேன்!” என்னிடம் ஏன் கேட்கவில்லை என அவள் குற்றம் சுமத்தும் பார்வை பார்த்ததும் பரிதியின் முகத்திலிருந்த புன்னகை பெரிதானது.
“உன் காசு, என் காசுன்னு பிரிக்காத வானு. என் சேலரியை செலவு பண்றேன். உன்னோடதை எப்.டில போட்டு வை. நம்ப புள்ளைங்க வளர்ந்து வரும்போது யூஸ் ஆகும்!” என்றான் சிரிப்பு மாறாது. வாணி அவனை முறைத்துவிட்டு உடை மாற்ற சென்றாள்.
இரவு உணவு சமைக்க அவசியமில்லாமல் மதியம் சமைத்ததே எஞ்சியிருக்க, வாணி மாமியாரோடு அமர்ந்து கதை பேசத் தொடங்கினாள். கீர்த்தனாவும் வர, மூன்று பேரும் ஏதோ சுவாரஸ்யமாகப் பேசினர். பரிதி தூரத்திலிருந்து மனைவியைத்தான் பார்த்திருந்தான்.
அவள் தன் குடும்பத்தோடு பொருந்திப் போனதை இன்னுமே ஒருவித ஆச்சர்யத்தோடு பார்த்தான். அவளும் கீர்த்தனாவும் ஏதோ குசுகுசுவென பேச, சிந்தாமணி அவர்களை முறைக்க, பின்னர் மூவருமே சிரித்திருந்தனர். பரிதி அதை தன் அலைபேசியில் புகைப்படமாக சேமித்தான். அஜித் அப்போதுதான் வயதான தம்பதியர் ஒருவரை பேருந்து ஏற்றிவிடச் சென்று திரும்பினான். அவன் அண்ணனோடு அமர்ந்துவிட, பரிதி அவன் படிப்பு பற்றி விசாரித்தான்.
“என்னையெல்லாம் உன்னை மாதிரி நினைச்சியா டா? ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டேன். நோ அரியர். ஏதோ வெளிநாடு போய் சம்பாரிச்சு கொஞ்சம் பெரிய வீடா கட்டுனதும் அட்வைஸ் பண்ண வந்துட்டான்!” அஜித் இவன் கூறிய அறிவுரையில் சடைத்துக்கொண்டு செல்ல,
“நானே திருந்தி ரெண்டு நல்ல வார்த்தை சொன்னா கூட இவனுங்க என்னைத் திருந்தவிட மாட்டானுங்க!” என அவனால் புலம்ப மட்டுமே முடிந்தது.
மார்த்தாண்டம் வந்ததும் ஐவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டனர். பின்னர் வாணி மாமியார் நாத்தனாரோடு வீட்டை சுத்தம் செய்ய உதவினாள்.
“பாத்திரம் கிடக்கட்டும் வாணி. காலைல பார்த்துக்கலாம்!” சிந்தாமணி தடுத்துவிட, இவளும் சரியென அறைக்குள் நுழைந்தாள். மூன்று அறைகள் கொண்ட பெரிய வீடாக