- Messages
- 1,336
- Reaction score
- 3,980
- Points
- 113
நேரம் – 47 
“பரிதி... எழுந்திரி. அத்தை அங்க எல்லாரையும் வர சொல்றாங்க!” வாணி பரிதியின் தோள் தொட்டு உசுப்ப, “ஹம்ம்...” என்ற முனகல் மட்டுமே அவனிடம்.
“இன்னும் ஃபீவர் சரியாகலையா உனக்கு?” காலை, மதியம் என இரண்டு வேளை சாப்பிட்டுவிட்டு மாத்திரையை விழுங்கி உறங்கியிருந்தான் பரிதி. இருந்தும் அவன் உடல் வெப்பநிலை குறையவில்லையா என்ற கவலையோடு அவன் கழுத்தில் கை வைத்தாள். அவள் கரத்தை அப்படியே பிடித்தவன், கன்னத்தோடு அழுத்தினான். அவன் முகத்தையே பார்த்தாள் வாணி. அழுதிருக்கிறான் போல. மிக லேசாய் கண்ணீர் தடயங்கள் கன்னத்தில் தெரிந்தன. இவளுக்கு மனத்தில் பாரமேறியது.
“பரிதி!” மெல்லிய குரலில் அவன் செவியருகே குனிந்து அழைத்தாள் வாணி.
“சாரி வாணி... என்னால எழவே முடியலை. ரொம்ப வலிக்குது டீ. நான் கண்டிப்பா வரணுமா?” என தீனமானக் குரலில் கேட்டான் அவன். இவள் சில நொடிகள் யோசித்தாள்.
“நீ அங்க வர வேணாம். எழுந்து ரெப்ரெஷாகி ஹால்ல வந்து உக்காரு. அத்தை, மாமா, சரோ எல்லாரும் வர்றாங்களாம். இங்கதான் வருவாங்க. உன் அம்மா, அப்பாவையும் இங்கயே வர சொல்றேன் நான்!” என்றாள். அவன் எரிந்த கண்களை மெல்ல தேய்த்துவிட்டுக் கொண்டே எழுந்தமர்ந்தவன், வாணியின் கைகளை விடவில்லை.
“ரொம்ப தலை வலிக்குது வாணி. ஸ்ட்ராங்கா ஒரு காஃபி போட்டு தரீயா?” என சோம்பலோடு கட்டிலிலிருந்து இறங்கி நின்றான். இவள் மெதுவாய் பார்வையை அவன் கை, கழுத்து, முதுகு என படரவிட்டாள். சிவந்து செவ்வரியோடியிருந்தது புண்கள். பின்னர் தயங்கி அவன் முதுகைத் தொட்டாள்.
“ச்சு...” என முகத்தைச் சுளித்தவன், “மறுபடியும் ஆயின்மெண்ட் போட்டு விடுறீயா வானு? அது போட்டா கொஞ்சம் ஜில்லுன்னு இருக்கு!” என கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான். வாணி மீண்டும் களிம்பை எடுத்து வந்து காயமிருந்த இடத்திலெல்லாம் பூசிவிட்டாள்.
“ரெப்ரஷாகி வா. காபி தரேன்..” என இவள் அகன்றாள். எப்படியும் காமராஜ் குடும்பமும் வந்துவிடுவார்கள் என்பதால் எல்லோருக்கும் சேர்த்து குளம்பி தயாரித்தாள். சிந்தாமணிக்கு அழைத்து பரிதிக்கு காய்ச்சல் சரியாகவில்லை என்பதால் அவரை இங்கே அழைக்க, அவருக்கும் சின்னவர்கள் முன்னிலையில் இந்தப் பிரச்சனையை பேச விருப்பமில்லை. மருமகள் அங்கு அழைக்க, சரியென்றுவிட்டார்.
வந்ததும் நடந்த அனைத்தையும் சிந்தாமணி கணவரிடம் பகிரவில்லை. முதலில் அவருக்கு என்ன நடந்தது என முழுதாகத் தெரியவில்லை. யார் உண்மை விளம்பி, யார் பொய்யுரைக்கிறார்கள் என அவராலே இனம் கண்டறிய முடியவில்லை. மாற்றி மாற்றி பழியைப் போட்டுக்கொண்டு, இப்போது அதை ஒப்பும் கொள்கிறார்கள். பெற்றவராக பிள்ளைகளின் வாழ்க்கையை சீராக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தவர், பின்னர் மார்த்தாண்டத்தை அமர்த்தி மெதுவாக நடந்த அனைத்தையும் கூறினார். மார்த்தாண்டத்திற்கு மகன் செயலில் முகம் சிவந்தது. கட்டிய மனைவியை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணின் பின்னே அவன் சென்றான் என்பதை அவரால் ஏற்கவே முடியவில்லை. எத்தனைக் கண்டிப்பும் ஒழுக்கமாய் வளர்த்தும், அவன் இப்படி செய்ததை எண்ணி மனத்திற்குள் கோபம் கனன்றது.
அவரைப் பார்த்த சிந்தாமணி ஏற்கனவே தான் அடித்ததில் மகனால் ஒருவாரம் எழ முடியாமல் போகலாம். நீங்கள் கோபப்படாமல் இதை எப்படி சரி செய்வது என்பதை யோசிக்க வேண்டுமென வலியுறுத்தியவர், அப்போதே காமராஜ், அம்சவல்லிக்கும் அழைத்து பக்குவமாய் நடந்ததை விவரித்துவிட்டார். அவர்களுக்கு கேட்டதும், அதிர்ச்சி, கோபம், ஆற்றாமை என பொங்கிற்று. அவர்கள் உடனே கிளம்பி வருகிறேன் என்றுவிட்டனர்.
சரியாய் அவர்கள் மூவரும் வந்திறங்க, இவர்கள் இருவரும் இணைந்து கொண்டனர். அம்சவல்லி முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடித்தது. சரவணன் நடந்ததைக் கேட்டு கொதித்துப் போனான். எப்படி பரிதி வாணிக்கு துரோகம் செய்யலாம் என அவனது கோபம் கரைக் கடந்தது. பரிதியை பார்த்ததும் அவன் முகத்திலே ஓங்கிக் குத்தி மூக்கு, முகத்தையெல்லாம் உடைத்துவிடும் வேகத்தோடு நடந்தான்.
வாணி பரிதிக்கு குளம்பியை சூடு குறைய ஆற்றிக் கொடுக்க, அவன் நீள்விருக்கையில் அமர்ந்து மெதுவாக குடித்துக் கொண்டிருந்தான். கால்சராய் மட்டும் அணிந்திருந்ததால், மேலே ஒரு துண்டு போர்த்தியிருந்தான். அவனைப் பார்த்ததும் விறுவிறுவென உள்ளே நுழைந்த சரவணன், அவன் கையிலிருந்த குவளைத் தள்ளிவிட்டு அடிக்கப் பாய, “ஏய்... சரோ... என்ன பண்ற நீ?” என வாணி அவனைப் பதறி தடுத்திருந்தாள். அவள் கவனிக்காமல் விட்டிருந்தால், இந்நேரம் பரிதியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியிருக்கும். அவளுக்கு நெஞ்சு படபடத்தது. ஒரு நொடி பரிதி நன்றாக இருக்கிறானா என அவசர அவசரமாக அவன் மீது பார்வையை ஓட்டினாள்.
“தம்பி... பொறுமை அவசியம். என் முன்னாடியே என் புள்ளை மேல கை நீட்டுவியா நீ?” மார்த்தாண்டத்திற்கு மகன் சோர்வாக அமர்ந்திருந்த விதத்திலே கோபம் பின்னகர்ந்திருந்தது. அவன் மீது அவருக்கு கோபம் என்றாலும், மூன்றாம் மனிதனை அடிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்க அவர் மனம் ஒத்துக் கொள்ளாது.
சரவணன் தட்டிவிட்ட குளம்பி பரிதியின் மேலே கொட்டி, தொடை, கால் என படர்ந்ததும் பரிதிக்கு புண்ணெல்லாம் எரிந்தது. அவன் முகத்தைச் சுளித்து வலியைப் பொறுத்துக் கொண்டான்.
“உங்கப் பையன் பண்ண வேலைக்கு பொறுமையா இருக்குறது ரொம்ப அவசியம்? என்ன புள்ளையை வளர்த்திருக்கீங்க? வசதி இல்லைன்னாலும் நல்ல குடும்பம்னு நினைச்சுதானே பொண்ணுக் கொடுத்தோம். ஆனால் உங்க மகன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான்?” அம்சவல்லி சப்தமிட, வாணி அவரைக் கெஞ்சலாகப் பார்த்து கையை அழுத்திப் பிடித்தாள். வேறு எதுவும் பேசாதீர்கள் என அவள் முகம் அவரிடம் கெஞ்சிற்று. அவரது பேச்சில் சிந்தாமணியும், மார்த்தாண்டமும் முகம் கறுக்க நின்றிருந்தனர். பரிதிக்கு அதைப் பார்த்து கோபம் வந்தது.
“அத்தை... ப்ளீஸ்... கொஞ்சம் பொறுமையா பேசலாம். நீங்க... அவங்களை எதுவும் பேசாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கும். அம்மாவுக்கு அப்புறம் என்னை மக மாதிரி பார்த்துக்கிட்டவங்க என் அத்தை. மாமாவும் இதுவரைக்கும் என்கிட்டே ஒரு வார்த்தை அதட்டிப் பேசுனதில்லை. எனக்கும் பரிதிக்கும்தான் பிராப்ளம். மத்தபடி நடந்தது உங்களை மாதிரி இப்போதான் அவங்களுக்கே தெரியும். அவங்களை நீங்க எதுவும் குறை சொல்லாதீங்க” என அம்சாவிடம் அவள் கெஞ்ச, சரவணன் அவளை உறுத்துப் பார்த்தான். அவன் கைகளை இறுக்கிப் பிடித்தபடியே பரிதியை பார்வையால் எரிக்க முயன்றான். வாணிக்குப் போய் எப்படி துரோகம் செய்ய அவனுக்கு மனம் வந்தது என இவனுக்குள் பெரும் சீற்றம் வெடிக்க காத்திருந்தது. தந்தையின் கண்டிப்பான பார்வைக்கும், வாணியின் அதட்டலுக்கும் அடங்கித்தான் பொறுமை காத்தான்.
“ஃபைவ் மினிட்ஸ்... எல்லாரும் உக்காருங்க. காபியைக் குடிங்க!” என்ற வாணி, “மாமா, அத்தை... நீங்ஙளும் உக்காருங்க...” என மாமனார் மாமியாரை அமைதிப்படுத்தி குளம்பியைக் கொடுத்தாள். மார்த்தாண்டமும் சிந்தாமணியும் மகன் செயலில் கூனிக் குறுகி அமர்ந்திருந்தனர். அவர்கள் அம்சவல்லியின் பேச்சை எதிர்த்துப் பேச முடியவில்லை. பரிதி நடந்ததை ஒப்புக் கொள்வது போல அமர்ந்திருந்தது அவர்களை ஈட்டியாய் குத்திற்று.
“பரிதி... எழுந்து ரூம்க்குள்ளே வா நீ...” வாணி அவனை அழைத்தாள்.
அவன் கோபத்தோடு முடியாது என்பதாக இறுகிப் போய் அமர்ந்திருக்க, “உன்னை ரூம்க்குள்ள வர சொன்னேன் நான்...” என அவள் அதட்டலாய் அழைக்க, மறுக்க முடியாமல் எழுந்து நடந்தான். உள்ளே சென்றதும் வாணி அவன் மேலிருந்த துண்டை அகற்றினாள். குளம்பி மிதமான சூடு என்றாலும் கூட அவன் தோள், தொடை மேலும் சிவந்தது.
ஒரு பருத்தி துணியை எடுத்து குளம்பியைத் துடைத்தாள். ஈரம் பட்டால் புண் சீழ் வைக்கலாம் அல்லது ஆற நேரமெடுக்கும் என செவிலியர் அறிவுறுத்தியது நினைவு வர, அவள் தொட்டு அழுத்தி துடைத்ததும் பரிதி வலியில் முகம் சுளித்தான். வாணியின் கண்களில் கண்ணீர் பெருகிற்று. ஏற்கனவே அவன் வலி தாளாமல் முனக, சரவணன் வேறு அவன் வேதனையை அதிப்படுத்திவிட்டான். தன் விழி நீரைத் துடைத்துக்கொண்டே அவனுக்கு மீண்டும் களிம்பை பூசினாள்.
கால்சராயை மெல்ல உயர்த்தி அவன் தொடையில் களிம்பை வாணி தடவ, பரிதி சங்கடத்துடன் அவள் கையைப் பற்றினான். அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவனுக்கு வலிக்காதவாறு மெல்ல களிம்பை தடவினாள்.
பின்னர் கண்ணை சிமிட்டி அவனை நிமிர்ந்து நோக்கியவள், “ரொம்ப எரியுதா பரிதி? சாரி அவன்... அவன் என் மேலருக்க பாசத்துல இப்படி பண்ணிட்டான். சாரி!” என்றாள் முகம் கசங்க. அவள் கண்ணீர் தனக்காக என்ற போது பரிதிக்கு மனமெல்லாம் வேதனை நிரம்பிற்று. இதற்கு முன்னேயும் நிறைய முறை அவளை அழ வைத்திருக்கிறான். ஆனால் இப்போது அவள் விழிநீர் கண்டு மனம் தவித்துப் போனது. தாலியைக் கழற்றும்போது இப்படித்தான் அழுதாள். அந்தக் கண்ணீர் முழுவதும் தனக்கான அன்புதான் நிறைந்து கிடந்ததை இப்போதுதான் இவன் காண்கிறான். கண்ணிருந்தும் குருடனாக இருந்துவிட்டோம் என காலம் கடந்து மனம் சுணங்கியது.