- Messages
- 1,343
- Reaction score
- 4,066
- Points
- 113
நேரம் – 44 
வேண்டாமென முயன்று புறந்தள்ளியும் கூட இரவு உறக்கம் வராமல் நடந்ததையே நினைத்து வெகுநேரம் விழித்திருந்த வாணி, தாமதமாகத் தூங்கி காலை பத்து மணிக்குத்தான் எழுந்தாள். என்னவோ மனத்தின் சோர்வு உடலைத் தாக்கிற்று போல. மெத்தையிலே உருண்டு கொண்டிருந்தவள், லேசாகத் தலை வலிக்கவும் எழுந்து சென்று குளம்பியைத் தயாரித்து பால்கனியில் வந்தமர்ந்தாள்.
சூடான பானத்தை மெதுவாக ஊதிக் குடித்தவள், அசிரத்தையாகப் பார்வையை சுழற்ற, கண்களுக்குள் வந்து விழுந்தான் இளம்பரிதி. சட்டென இவளிடம் நொடி நேர திகைப்பு. அவன் வர மாட்டானென இவள் எண்ணியிருந்ததை உடைத்துப் போட்டிருந்தான் பரிதி. வாயிற்காவலாளி அருகே அமர்ந்து ஒரு பொட்டலத்தை விரித்து வைத்து ஏதோ உண்டு கொண்டிருந்தான். தூரமாய் இருந்ததால் இவளுக்கு என்னவென சரியாகத் தெரியவில்லை.
அவரிடம் ஏதோ பேசிக் கொண்டே உண்டவனுக்கு புரையேற, அவர் தலையைத் தட்டி நீரைப் புகட்டினர். அவரிடம் நன்றி கூறியவனுக்கு வாணியின் தொடர் பார்வை குறுகுறுப்பை ஏற்படுத்தியது போல. சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் பார்வையை விலக்கிக்கொள்ளவெல்லாம் இல்லை. நிதானமாக அவனையும் அவன் செய்கைகளையும் ஆராய்ந்தாள். பின்னர் சின்னதாய் தோள் குலுக்கலுடன் அவள் உள்ளே செல்ல, இவன் பெருமூச்சுடன் உண்பதைத் தொடர்ந்தான்.
“தம்பி... இப்படி இங்க உக்கார்ந்து சாப்பிட்றீங்க? எங்களை மாதிரி ஆளுங்கதான் இங்க சாப்பிடுவாங்க. நீங்க சொன்னாலும் கேட்க மாட்றீங்க?” என மற்றொரு காவலாளி வருத்தத்துடன் கூறிக்கொண்டே அவனருகே அமர்ந்தார். அவரைப் பார்த்து சிரித்தவன், உண்டு எழுந்தான்.
“அண்ணே! நான் என்ன வானத்துலருந்து குதிச்சு பிறந்தேனா? உங்களை மாதிரி கஷ்டப்படுற குடும்பத்துலருந்து முன்னேறி வந்தவன்தான் அண்ணா. என் பொண்டாட்டிதான் நான் இப்போ நல்லாருக்கதுக்கு முழு காரணம். அவளை சமாதானம் செஞ்சு கூட்டிட்டுப் போகுறவரை ரோடு, வீடுன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்!” என்றான் சின்ன முறுவலுடன். அவன் கன்னத்தில் இன்னுமே மெலிதாய் சிவப்பு தெரிந்தது. என்னெவென அவர்கள் கேட்டதற்கு, “அலர்ஜி, ஏதோ சாப்பாடு சேரலை போலண்ணே!” என மழுப்பிவிட்டான் இவன்.
வாணி நேரமாகிவிட்டதால் நேராக மதிய உணவை சமைத்து உண்டாள். சிறிது நேரம் படம் பார்த்தாள். கண்கள் மீண்டும் உறக்கத்திற்கு சொருக, உறங்கிப் போனாள். தூங்கி எழுந்து மாலை தேநீரில் ரொட்டியை நனைத்து உண்டபடியே பால்கனிக்கு வந்தாள். அவள் பார்வை அனிச்சையாய் வாயிற் பக்கம் தாவிற்று.
தலைக்கு ஏதோ ஒரு பையை முட்டுக் கொடுத்து படுத்து காலாட்டியவாறே காவலாளியிடம் கதையளந்து கொண்டிருந்தான் பரிதி. அவர்களுக்கும் இவனை வைத்து நன்கு பொழுது போகிற்று. இந்த ஒரு வாரத்திலே இவனோடு ஒட்டிக்கொண்டு விட்டார்கள்.
அவனையே சிறிது நேரம் சலனமற்றுப் பார்த்திருந்தாள் இசைவாணி. அவள் பார்வை உணர்ந்த பரிதி திரும்பவில்லை. அவளாக அழைத்துப் பேசும்வரை இங்கு வருவதை நிறுத்த மாட்டேன் என்ற வீம்புடன் எழுந்து அமர்ந்தான். பின்னங்கழுத்து வியர்த்து போயிருந்தது. துடைத்துவிட்டுக் கொண்டே கால்சராயில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டான்.
வாணி விறுவிறுவென உள்ளே சென்றவள் காவலாளிக்கு அழைத்துவிட்டாள். “மேடம், சொல்லுங்க...” அவர் கேட்க,
“அண்ணா... அந்த தம்பியை உள்ளே அனுப்புங்க!” என்றாள் அவள்.
அவளது தம்பி என்ற பதத்தில் சிரித்தவர், “தம்பி... உங்களை அக்கா கூப்பிட்றாங்க. போங்க!” என்றார் கேலியாக. படக்கென எழுந்தவனுக்குள்ளே சின்னதாய் பரபரப்பு. இத்தனை சீக்கிரத்தில் வாணி இறங்கி வருவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. எப்படியாவது அவளிடம் தன் விருப்பத்தைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமென விறுவிறுவென நடந்தான். மறக்காமல் காவலாளியை முறைத்துவிட்டே அகன்றான்.
வீட்டுக் கதவு திறந்தே இருந்தது.
“வாடா தம்பி... உள்ளே வந்து உக்காரு!” வாணியின் அழைப்பில் இவன் முகத்தைச் சுளித்துக்கொண்டே அமர, அவள் கையில் ஒரு கோப்பையோடு வந்தாள். எப்படியும் தனக்குத்தான் தேநீர் எடுத்து வருகிறாள் என அவன் எண்ணி கையை நீட்ட, அவனைக் கேலியாக பார்த்தவாறே எதிரிருக்கையில் அமர்ந்து கால்களை சம்மணம் போட்டாள். பின்னர் மீதமிருந்த தேநீரை ஒரு மிடறு விழுங்கினாள்.
“எனக்கும் டீ வேணும் வாணி!” அவன் கேட்கவும்,
“இங்க என்ன டீ ஷாப் வச்சிருக்கேனா நான்? உனக்கு வேணும்னா போய் கடைல குடிச்சுக்கோ!” என்றாள் அசட்டையாக. அவளை முறைத்தான் பரிதி.
“முறைக்கிற வேலை வேணாம். எதுக்காக இப்போ வாசல்லயே நாய் மாதிரி கிடக்குற? உன்னைப் பார்த்து பாவப்பட்டு நான் கூப்பிட்டு பேசணும்னா? ஆனால் உனக்குப் பாவம் பார்த்தா என்னையில்ல நீ ஐயோ பாவம்னு ஆக்கிடுவ?” எனக் கேலியாக கேட்டாள் அவள்.
“அதெல்லாம் இல்லையே. நான்... நான் சும்மா அந்த அண்ணனுங்ககிட்டே பேசிட்டு இருந்தேன்!” அவன் ரோஷக் குரலில் கூறினான்.
“ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை. எதுக்காக நீ என் பின்னாடி சுத்துறேன்னு எனக்கு நல்லா தெரியும். நெக்ஸ்ட் வீக் எண்ட் நானே பொள்ளாச்சி வரேன். டைவர்ஸ் விஷயம் பத்தி பேசிடலாம். பட், மதியோட உன் கல்யாணத்தையே நீயேதான் ஹேண்டில் ப்ணணணும். லவ் பண்ண தெரியுது, தனியா கூட்டிட்டுப் போய் கிஸ் பண்ண தெரியுதுல்ல. அதே மாதிரி எல்லாத்தையும் நீயே ஃபேஸ் பண்ணி பழகு. என்னை எதுலயும் இழுத்து வைக்காத. என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது!” என்றாள் திடமாக அவனைப் பார்த்து.
“ப்ம்ச்... நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத வாணி. நான் என்ன சொல்ல வரேன்னு கேளு. நான் உன்னைக் கூப்பிட்டேனா டைவர்ஸ் பத்தி பேசு, எனக்கும் மதிக்கும் கல்யாணம் பண்ணி வைன்னு?” அவன் குரலில் மெல்லிய எரிச்சல். வாணி அவனை யோசனையுடன் பார்த்தாள்.
மூச்சை இழுத்துவிட்டவன், “மதியும் நானும் பிரிஞ்சுட்டோம். எங்களுக்குள்ள செட்டாகலை!” என்றான் சின்ன குரலில். இவளின் உதட்டோரம் கேலியாக வளைந்தது.
“ஓ... நான் வந்து மறுபடியும் சமாதானம் பண்ணி அவளை உன்னோட சேர்த்து வைக்கணுமா பரிதி?” எள்ளலாகக் கேட்டாள்.
“ச்சு... வாணி... வாணி. இனிமே மதியோட சேப்டர் என் லைஃப்ல இல்ல. அவளோட சண்டை போட்டுட்டேன். மூனு மாசம் கூட என்னால அவளோட ஒரே வீட்ல இருக்க முடியலை. நான் நானாவே இல்லை. என் லைஃப் ஸ்டைல் மாறிடுச்சு. நிறைய கெட்டப் பழக்கம் பழகிட்டேன். அவளோட வாழ்ந்தா என்னைவே நான் அழிச்சுக்குவேனோன்னு பயம். அதான் வேணாம்னு முடிவெடுத்து ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டோம்!” விலாவரியாக கூறாமல் சுருக்கமாக உரைத்தான்.
அவனைக் கண்களைச் சுருக்கி, புருவத்தை வளைத்துப் பார்த்தவள், “ஓஹோ... அப்போ அவளை ப்ரேக்கப் பண்ணிட்ட. ரைட்டு... அடுத்து நல்ல பொண்ணா பார்த்து செட் பண்ணிக் குடுன்னு என்கிட்டே வந்திருக்கியா நீ? ஆனால் பாரேன், நான் ப்ரோக்கர் வேலையெல்லாம் பார்க்குறதில்லை பரிதி தம்பி. இப்போதான் எவ்வளவோ டேட்டிங் ஆப்ஸ் எல்லாம் இருக்கே. அதுல ஏதாவது ட்ரை பண்ணிப் பாரு. என்னை ஆளை விட்ரு!” என்றாள் தீவிரக் குரலில். பரிதி அவளையே சில நொடிகள் பார்த்தான். பின்னர் உள்ளே சென்று ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வந்து மடமடவென வாயில் சரித்தான். பாதி போத்தலை காலி செய்ததும் நிமிர்ந்தமர்ந்து அவளது கண்களை நேருக்கு நேர் சந்தித்தான்.
“நான் சொல்றதை நீ நம்புவியா மாட்டீயான்னு கூடத் தெரியாது வாணி. பொய்னு நீ நினைக்கிறதுக்குத்தான் வாய்ப்பு அதிகம். ஐ க்நோ, ஏன்னா உன்னை நான் அவ்ளோ படுத்தியிருக்கேன். அதெல்லாம் அப்போ தப்புன்னு எனக்குத் தோணாம இல்லை. எதையும் ஒத்துக்குற மைண்ட் செட் இல்ல. ஃபுல்லா ஈகோ. நானுன்ற ஈகோல உன்னை ஹர்ட் பண்ணிட்டேன். பட், இப்போ நான் ரொம்ப தெளிவா ஒரு முடிவெடுத்திருக்கேன் வாணி!” என்றவன், தயங்கி அவள் முகம் பார்த்தான்.
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு வாணி. இவன் என்ன காமெடி பண்றானான்னு உனக்குத் தோணலாம். ஆனால், உண்மையைத்தான் சொல்றேன். வெறும் வெள்ளை தோளும், அழகும்தான் முக்கியம்னு மதி பின்னாடி போய் செருப்படி வாங்கித் திருந்தி வந்திருக்கேன் நான். அழகுன்றது கலர்ல இல்லை. குணத்துலதான் இருக்கு. அந்த வகையில நீ ரொம்ப அழகானவ வாணி. இந்த செகண்ட் என் கண்ணுக்கு உன்னைத் தவிர யாருமே அழகா தெரியலை.”
“உன் கூட நான் நானா இருந்தேன். என்னோட பொறுப்பு அத்தனையும் உன்கிட்டே கொடுத்துட்டு ஜாலியா சுத்துனேன். ஒரு சைன் போட்டேன்றதுக்காக நீ என் ஃபேமிலிமையும் கேர் பண்ண என்ன அவசியம் வந்துச்சு. பட், நீ உண்மையா என் குடும்பத்தை உன்னோட குடும்பமா பார்த்திருக்க. நான் ரொம்ப லேட்டாதான் என் தப்பை ரியலைஸ் பண்ணேன். என் மனசு முன்னாடியே எல்லாத்தையும் உணர்ந்திருக்கு. நீ இல்லாத இந்த மூனு மாசம் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் வாணி. வீட்ல எங்க திரும்புனாலும் நீதான் என் கண்ணு முன்னாடி வந்து நின்ன.”
“டூ பீ ப்ராங்க், மதி என்னைக் கிஸ் பண்ண வந்தா...தோ... இந்த மூஞ்சி என் கண்ணுக்குள்ள வந்து நிக்கிது. இதுதான் லவ்வான்னு ஆராய்ச்சியெல்லாம் நான் பண்ணலை. எனக்கு என் வாணி வேணும். பழையபடி என்னோட நீ வரணும். நிரந்தரமா என் வாழ்க்கைக்கு நீ வேணும். தப்புதான்... நான் பண்ணது எல்லாம் தப்புதான். தப்பு செஞ்சவன், திருந்தி வாழ்றது இல்லையா? எனக்கு ஒரு சான்ஸ் குடு வாணி. இனிமே லைஃப் முழுக்க உன்னை நல்லா பார்த்துப்பேன். உன்னோட அன்புல நான் மட்டுமே வாழணும்னு ஆசையா இருக்கு வானு. ஐ’ம் இன் லவ் வித் யூ... வித் திஸ் இசைவாணி!” மூச்சை அடக்கி, உதட்டைக் குவித்தவன், அவள் முகத்தை ஆர்வமாகப் பார்த்தான். அவளிடம் அதிர்ச்சி, ஆசை, ஆர்வம், கோபம் என எவ்வித உணர்வுகளுமே இல்லை. அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள்.
“டூ மினிட்ஸ் பரிதி. வர்றேன் இரு!” என்றவள் அறைக்குள் சென்று சில நிமிடங்களில் வெளியே வந்தாள்.
“இந்த ரெண்டு கோல்ட் ஸ்டட்டும் உங்கம்மாதான் எனக்கு கொடுத்தாங்க. அதாவது அவங்க வீட்டு மருமகளுக்கு எடுத்ததாம். அப்புறம் இது எங்கேஜ்மெண்ட் அப்போ நீ எனக்குப் போட்ட ரிங். தென், இந்த செயின் என் அம்மா உனக்குப் போட்றதுக்காக வாங்குனது. உன் பெர்த் டே அப்போ சர்ப்ரைஸா கொடுக்க வாங்குனாங்களாம். எனக்கே தெரியாது. கமலாம்மா சொன்னப்போதான் தெரிஞ்சது!” என அனைத்தையும் ஒரு டப்பாவில் அடைத்தவள், அவன் முன்னே தள்ளி வைத்தாள்.
“இதுக்காகத்தானே வந்த? நானே இதை உங்கம்மாகிட்டே கொடுக்கலாம்னு வச்சிருந்தேன்.
சோ, எடுத்துட்டு கிளம்பு. எனக்கு சொந்தமில்லாத எது மேலயும் நான் உரிமை கொண்டாட மாட்டேன். அது பொருளா இருந்தாலும் சரி, மனுஷனா இருந்தாலும் சரி!” அழுத்தம் திருத்தமாக அவள் கூற, பரிதியின் முகம் செத்துப் போனது. அவள் செருப்பால் அடித்திருந்தால் கூட வலித்திருக்காதோ என்னவோ?
வெறும் நகைக்காக வந்திருக்கிறேன் என அவள் எண்ணியதில் இவனுக்கு முகம் கறுத்தது.
“நான் இதுக்காக வரலை வாணி!” உள்ளே சென்ற குரலில் கேட்டான்.
“சரி... பணம் எதுவும் வேணுமா? என்கிட்டே சேவிங்க்ஸ் இருக்கு. வாங்கிக்கோ. பணம் வேணும்னா டேரக்டா கேளு. இந்த மாதிரி என் பீலிங்க்ஸோட விளையாடாத. ஒரு தடவை நீயும் அவளும் எனக்கு செஞ்சது போதும்!” என்றவள், “எவ்வளோ பணம் வேணும்னு சொல்லு. நான் ட்ரான்ஸ்பர் பண்ணி விடுறேன். அதுக்காக நீ தம் கட்டி இப்படியெல்லாம் பேசணும்னு அவசியம் இல்ல மேன்!” என்றாள் நிதானக் குரலில். பரிதி அவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.
“நான் பணம், நகைக்காக வரலை வாணி. எனக்கு நீ வேணும். உனக்காகத்தான் வந்தேன். எனக்கு உன்னைப் பிடிச்சு வந்தேன்!” அவன் கோபமும் ஆற்றாமையுமாக குரலை உயர்த்தினான். முகப்பறை முழுவதும் அது எதிரொலித்தது.
வாணி படக்கென வாய்விட்டு சிரித்திருந்தாள். அவளை முறைத்தான் அவன்.
“பரிதி... லவ்வர்ஸ்க்கு இடையில சண்டை வர்றது சகஜம்தான் அதுக்காக உடனே ப்ரேக்கப் பண்றதெல்லாம் தப்பு. மதியைக் கூப்பிட்டு வச்சு பேசு. ரெண்டு பேரும் என்னைத் தப்பு பண்ணிங்கன்னு யோசிச்சு, அதை சரி பண்ணிக்கோங்க. அப்போதான் அதை சரி பண்ணி நீங்க நல்லா வாழ முடியும்!” என்றாள் அறிவுரை கூறும் ஆசிரியராக.
“லூசா வாணி நீ...
நான் அவளை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துருக்கேன். அவளுக்கும் நான் வேணாம். அவளைப் பத்தி இனிமே நமக்கு இடையில பேச்சு வரக் கூடாது!” அழுத்தம் திருத்தமாக உரைத்தான் அவன். குரலில் கோபம் மிகுந்திருந்தது.
“ச்சு... நான் லூசு இல்ல. நீதான் அவ மேல கோபத்துல இருக்க. கொஞ்சம் நிதானமா யோசி பரிதி!” இவள் மனநல நோயாளியிடம் பேசும் மருத்துவர் போல அவனைப் பரிவாகப் பார்த்தாள்.
அதில் கடுப்பானவன், “நான்தான் சொல்லிட்டே இருக்கேன்ல. அவ எனக்கு செட்டாக மாட்டா வாணி. அவளோட வாழ்ந்தா நான் சந்தோஷமா இருக்க மாட்டேன். நான் சும்மா விளையாட்டுக்கு சொல்லலை. எனக்கு நீதான் வேணும்!” கத்திவிட்டான்.
“அவ உனக்கு செட்டாக மாட்டாளா? என்ன பரிதி சொல்ற? அவ எவ்ளோ அழகா இருக்கா. அவ கலர் என்ன, அவ ஸ்ட்ரக்சர் என்ன? ஹம்ம்... அவ பின்னாடி ஊரே சுத்துது. ஆனால் அவ உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லி ப்ரபோஸ் பண்ணிருக்கான்னா நீ எவ்ளோ லக்கி பெர்சன். அப்படி இருக்கப்போ கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனா தப்பில்ல பரிதி. அவ தப்பு செஞ்சா எடுத்து சொல்லு. புரிஞ்சுப்பா!” இவள் கேலியாகக் கூறவும், அவன் தலை இடம் வலமாக அசைந்தது.
“ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ வாணி. நான் என்னவோ சின்ன பையன் மாதிரி என்னை ட்ரீட் பண்ணாத. நான் தெளிவா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்!” என்றான் இவன் சலிப்புடன். சொன்னதையே அவள் திருப்பி திருப்பி குழந்தைக்கு கூறுவது போல பேசியதில் இவனுக்கு அலுப்பு தட்டியது.
“அதெப்படி பரிதி அவ உனக்கு ஒத்து வரமாட்டா. கிச்சன்ல நான் வந்தது கூட தெரியாம ரெண்டு பேரும் ப்ரெஞ்ச் கிஸ் பண்ணும்போது உனக்கு அவ செட்டானா. பட், இப்போ செட்டாக மாட்டாளோ. ரெண்டு வருஷம் முழுசா அவளோட நீ சுத்தாத இடமே இல்லை. போகாத பப் இல்ல. அப்போ ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுதானே சுத்துனீங்க. மிஸ் அண்ட்ர்ஸ்டாண்டிங்கை சரி பண்ணிக்கிற வழியைப் பாரு. மறுபடியும் உங்களுக்கு இடையில என்னை பகடையா உருட்டாத. என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!” என்றாள் மூச்சை இழுத்துவிட்டு கோபத்தை அடக்கி நிதானமாக.
அவளருகே பரிதி வர முயல, ஒற்றை விரலைக் காண்பித்தவள், “என்னைத் தொட்டுப் பேசுற உரிமை உனக்கு கிடையாது. எப்பவும் கொடுக்க மாட்டேன். ஸ்டே வித்தின் யுவர் லிமிட்!” என எச்சரித்தாள். பரிதியின் கால்கள் தயங்கின. அவளை இயலாமையுடன் பார்த்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “மதியைத்தான் பிடிச்சிருக்கு, அவளோடதான் வாழப்போறேன்னு நீதானே பரிதி சொன்ன. அவளோட வாழ்ந்தாதான் நல்லா இருப்பேன்னு சொன்ன நீதான் இப்போ அவ வேணாம்னு சொல்ற. சோ, உனக்கு அவ வேணாம்னு என்னைத் தேடி வந்திருக்க? நான் என்ன உனக்கு ஸ்டெப்பினியா? இல்ல கீப்பா. பொண்டாட்டி வேணாம்னு சொன்னதும் என்கிட்ட வர?” எனக் கேட்டவள் குரலில் எந்த உணர்ச்சியுமே இல்லை. இறுகிப் போய் அமர்ந்திருந்தாள். எப்போதும் நீ இப்படித்தானே என அவள் மனம் கசந்து வழிந்தது.
“இதே வாய்தான் சொல்லுச்சு. மதி மாதிரி ஒரு தேவதை கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்னு. அவ உண்மையில என்னைவிட அழகா, கலரா இருக்கா பரிதி. உனக்கு ஒன்னுன்னதும் எப்படி துடிச்சுப் போறா. கேவலம் அக்ரீமெண்ட் போட்டு கடமைக்கு நீ கட்டுன தாலியைக் கூட என் கழுத்துல இருக்க கூடாதுன்னு பொசசீவா இருக்கவளை எப்படிடா விட்டுட்டு வந்த?!”
“நான் எல்லாம் உன்னோட இமாஜினேஷன், எக்ஸ்பெக்டேஷனுக்கு கால்வாசி கூட வர மாட்டேன் பரிதி. நான் உனக்கு சமைச்சு போட, வீட்டைச் பார்த்துக்க, உனக்கு வேலை வாங்கித்தர, உன் பேமிலியை கேர் பண்ண, நீ அப்பப்போ ஆசிட் வீசுற மாதிரி திட்டுற பேச்சைக் கேட்க மட்டும்தான் லாய்க்கு. மத்தபடி நான் வொய்ஃப் மெட்டீரியலே கிடையாது. அவ மேல இருக்க கோபத்துல என்கிட்ட மறுபடியும் மாட்டிக்காத பரிதி!”
“நீயும் மதியும் ரோட்ல நடந்து போனா மேட் ஃபார் ஈச் அதர்னு சொல்வாங்க. என்னோட நடந்து போனா அக்கா, தம்பி மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்ணுவாங்க. மாதிரி என்ன? நான் உனக்கு அக்காதானே? ரெண்டு வருஷமா என்னை அப்படித்தானே பார்த்த? அப்படி இருக்கப்போ இப்போ மட்டும் ஏன் இப்படி பொய் சொல்றன்னு எனக்குத் புரியலை. நீ இப்படியெல்லாம் பேசி, கெஞ்சுற அளவுக்கு நான் ஓர்த்தே இல்லை!”
“உன் மதி சொல்ற மாதிரி கருப்பா, கேவலமா இருக்கேன். என் கூட வாழ்ந்தா மத்தவங்க உன்னை ஐயோ பாவம்னு பார்ப்பாங்க. இதெல்லாம் உனக்குத் தேவையா? மதியோட போய் சந்தோஷமா வாழு மேன். உங்க மேரேஜ்க்கு வந்து வாழ்த்திட்டுப் போறேன் நான்!” சின்ன முறுவலுடன் கோபம் கொள்ளாமல் அவள் பேச பேச, பரிதிக்கு நெஞ்சடைத்தது. அவன் அவளை ஒவ்வொரு முறையும் காயப்படுத்திய வார்த்தைகள்தான். இப்போது அதை அவள் வாய் வழியாகக் கேட்கும்போது வீரியம் புரிந்தது. அவளுக்கு எத்தனை வலித்திருக்கும் என எண்ணியதும் இவன் முகம் கசங்க அவளைப் பார்த்தான்.
“சாரி வாணி!” தொண்டையைச் செருமி சரி செய்தபடியே அவன் கூற, அவள் கசந்த முறுவலை சிந்தினாள்.
“எனக்கு யாருக்கும் கீப்பா இருக்கிறதெல்லாம் பிடிக்காது. அந்த அளவுக்கு நான் இன்னும் தரம் தாழ்ந்து போயிடலை பரிதி. நான் நல்லா இருக்கேன். நல்லா இருப்பேன். என் முன்னாடி நீ வராம இருந்தா ஹெல்தியா இருப்பேன். உன்னைப் பார்த்து கத்தி சண்டை போட்டா என் ஹெல்த், மெண்டல் பீஸ்தான் போகுது. ஒன்னுக்கு ரெண்டு தடவை தியானம், யோகா பண்ண வேண்டியதாயிருக்கு. சோ, என் கண்ணு முன்னாடி வந்து என்னை டார்ச்சர் பண்ணாத!” அழுத்தமான குரலில் கூற, இவன் முடியாது எனத் தலையை பலமாக அசைத்தான்.
“சாரி வாணி... செஞ்ச தப்பெல்லாம் திருத்திக்கலாம்னுதான் வந்திருக்கேன். அப்படியெல்லாம் உன்னை விட முடியாது. யெஸ், அவளைப் பிடிச்சிருக்குன்னு நாய் மாதிரி சுத்துன நான்தான் இப்போ உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்றேன். அப்போ... அப்போ நான் இருந்த மைண்ட் செட் வேற. எனக்கு யாரு பொருத்தமா இருப்பான்னு தெரியாம தப்பு பண்ணிட்டேன். ப்ளீஸ் வாணி... என்னை அக்செப்ட் பண்ணிக்கோ!” என மன்றாடும் குரலில் கேட்டான் பரிதி.
“உனக்கு என் மேல இருக்க பீலிங்க்ஸ்னு நேம் என்ன பரிதி?” அவள் உதட்டைக் கோணலாக வளைத்துக் கேட்க, இவன் பதிலிறுக்கவில்லை.
“இது லவ்வா? லஸ்டா?” கேலியாகக் கேட்டாள். அப்போதும் அவனிடம் அமைதி மட்டும்தான்.
“உனக்கு என் மேல லவ் வர வாய்ப்பு கம்மி. லஸ்டெல்லாம் சான்சே இல்ல. ஏன்னா நான் உன் எதிர்பார்ப்புக்கு கலரா, ஸ்ட்ரக்சரா அட்ராக்டீவா இல்ல. அப்புறம் எப்படி நீ என்னைப் பார்த்திருப்ப. என்னை ஆயாவாதானே ட்ரீட் பண்ண? உனக்கு இப்பவும் ஒரு கம்பர்ட் சோன் தேவை. உன்னை நல்லா பார்த்துக்க, உன் கோபத்தையெல்லாம் கொட்டி கவிழ்க்க நான் தேவைப்படுறேன். இது காதல்ல வராது பரிதி. திஸ் ஆர் தட்னு ரெண்டு பேர் லைப்ல விளையாடுற நீ. இது ப்யூர் சுயநலம். நீ என்னை சாய்ஸா பார்த்த. பட், நான் உன்னை!” என்றவள் சில நொடிகள் நிறுத்தி நிதானித்து,
“தம்பியாதான் பார்த்தேன். சோ, இந்த மாதிரி உளறிட்டு வந்து நிக்காத!” என்றுவிட்டு, “இந்த வாட்டர் பாட்டிலை எடுத்த இடத்துல வச்சுட்டு வா!” என்றாள் அழுத்தமாக. அவன் அவள் கூறியதை செய்தான்.
“ஏன் பாட்டிலை வைக்க சொன்னேன் தெரியுமா? எனக்கு வர்ற கோபத்துக்கு அதை எடுத்து உன் மண்டையை உடைச்சிடுவேனோன்னு தோணுச்சு. அதான்...” என்றவளை வருத்தமாகப் பார்த்தான் பரிதி.
“தாலியை அத்து எறிஞ்சப்போ கூட உன் மேல கோபம்தான் வந்துச்சு. பட், இப்போ முழுக்க முழுக்க வெறுப்பு வருது பரிதி. அவ இல்லைன்னா நான், மூனு மாசத்துல நானும் கசந்துட்டா வேற ஆளைப் பார்ப்பியா? பொண்ணுங்கன்னா உனக்கு அவ்ளோ சீப்பா போய்ட்டோமா?” என குரலை உயர்த்தாமல் சீறினாள்.
பிடரியை வருடியவன், வேகமாக அந்தப் பகுதியை இரண்டு முறை அளந்தான். பின்னர் அவளைப் பார்த்து, “என்ன செஞ்சா நான் திருந்திட்டேன்னு நீ நம்புவ வாணி?” என ஆற்றாமையுடன் கேட்டான்.
“உன்னை நான் ஏன் நம்பணும். உனக்கும் எனக்கும் இடையில என்ன இருக்கு?” அவள் அலட்சியமாகக் கேட்டாள். அதில் அவன் நிறைய அடிவாங்கினான்.
“அப்போ நான் உனக்கு யாருமே இல்லையா?” அவன் கேட்டதும், இவள் உதட்டைப் பிதுக்கினாள்.
“அப்போ... அப்போ தாலியை மதி அறுத்தப்போ ஏன் அழுத? உனக்கு என்னைப் பிடிச்சிருந்துச்சு தானே? எனக்காக ஏன் இவ்ளோ செஞ்சது. யூ லவ்ட் மீ. ஐ’யம் அ பிக் இடியட். விக்கிக்கு புரிஞ்சுது என் கண்ணுல படலை. நீ... நான் சென்ட் ஆஃப் பண்ண வந்தப்போ உன் லிப்ஸ் என் கன்னத்துல பட்டுச்சே. அது வெறும் ஆக்சிடென்ட் இல்ல. நீ என்னைக் கிஸ் பண்ண. ஐ கேன் ஃபீல் தட். என் டீஷர்டை இறுக்கிப் பிடிச்சப்போ உன் கண்ணு கலங்குச்சு. நான் பார்த்தேன் அதெல்லாம் பொய்யில்ல தானே?” அவளது காதலை அவளிடமே நிரூபித்திடும் வேகம் அவனிடம்.
நிதானமாக அவனைப் பார்த்தவள், பின்னர் கடகடவென வாய்விட்டு சிரித்தாள். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தவள், “இவ்ளோ சீக்கிரம் உனக்குப் புரிஞ்சிடுச்சு பாரேன்?” எனக் கேட்டு சிரித்தவளின் கண்ணில் நீர் கோர்க்கப் பார்த்தது. வலித்தது, நிரம்ப வலித்தது அவளுக்கு. அப்போதும் நிறைய வலித்தது. இந்த சிரிப்பும் வலியின் உச்சம்தான். என்ன அழக் கூடாது என்ற வைராக்கியத்தில் சிரித்தாள். வேதனையைக் குறைக்கும் வழியற்று சிரித்தாள். சிரிக்கும்போது இன்னுமே அவளுக்கு அதிகமாக நெஞ்சடைத்தது.
'காதலா? இவன் மீது தனக்கு?' என்ற கேள்வியே அபத்தமாய் தோன்றிற்று.
“சாரி டீ!” அவளது சிரிப்பு இவனைக் குத்தீட்டியாகக் குத்திற்று. அவள் கலங்கிய கண்களில் இவனுக்கு நெஞ்சு கனத்தது. அவள் கையை ஆறுதலாகப் பிடிக்கச் சென்றான்.
அவன் விரல் கூட படாதவாறு படக்கென கரத்தை பின்னிழுத்த வாணி, “யெஸ்... எனக்கு உன்னைப் பிடிச்சிருந்துச்சு. இல்லைன்னா யார் எவர்னே தெரியாம அக்ரீமெண்ட் மேரேஜ் வரைக்கும் வர்ற அளவுக்கு நான் இடியட் கிடையாது. என் அம்மாவை நீ கேர் பண்ணது பிடிச்சது. அதனால ஐ டெவல்ப்ட் சம் பீலிங்க்ஸ் ஃபார் யூ. இதை ஒத்துக்கிறதுல எனக்கு எந்த பிராப்ளமும் இப்போ இல்ல. ஆனால் பாரேன், மூனு மாசத்துக்கு முன்னாடி இதை நான் சொல்லிருந்தா நீ என் பீலிங்க்ஸை லஸ்ட்னு சொல்லி அசிங்கப்படுத்திருப்ப. அப்படியொன்னும் மானங்கெட்டுப் போய் நான் திரியலை”
“என்னைக்கு மதி என் தாலியை அத்தாளோ, அன்னைக்கே என் பீலிங்க்ஸை குழித் தோண்டி புதைச்சுட்டேன். இப்போ உன்னைப் பார்த்தா மதிக்கு சொந்தமானவன்னுதான் தோணுதே தவிர, வேற எந்த எண்ணமும் என்கிட்டே இல்லை. எனக்குத்தான் நீ உண்மையா இல்ல. சாரி, சாரி... நீ தான் ஆரம்பத்துலயே சொல்லிட்டீயே, டூ இயர்ஸ் முடிஞ்சு எந்த ட்ராமாவும் கூடாதுன்னு. நான்தான் இடியட் மாதிரி ஏதோ புலம்பிட்டு இருக்கேன். மதி உன்னை ரொம்ப லவ் பண்றா. அவளுக்கு உண்மையா இருக்க ட்ரை பண்ணு. ஒரு அக்காவா நான் உனக்கு கொடுக்குற அட்வைஸ் இது!” குரலை சரிசெய்து கேலியாக முடித்தாள். அவன் அசையாது நிற்க, வாணியின் அலைபேசி இசைத்தது. விக்னேஷ் அழைத்திருந்தான்.
“நீயா கிளம்பிடு. இல்லைன்னா வாட்ச்மேன் அண்ணாவைக் கூப்பிட்டு வெளிய அனுப்ப சொல்லுவேன். அவருக்கும் சங்கடம், உனக்கும்தான். போ!” எனக் கை காண்பித்தவள்,
“சொல்லுங்க விக்னேஷ்... என்ன பண்றீங்க? ரெண்டு நாளா கால் பண்ணலை நீங்க. ஆர் யூ ஓகே?” எனப் பரிவாகக் கேட்டாள். அந்தக் குரலில் இவனுக்கு சினம் பெருகிற்று. தன்னை அந்நியப்படுத்தி நிறுத்தியவள், அவனிடம் அக்கறையாகப் பேச, இவனால் ஏற்கவே முடியவில்லை.
வெடுக்கென அலைபேசியை அவளிடமிருந்து பறித்த பரிதி, “விக்கி... பரதேசி நாயே. நான் வரும்போதே என்ன சொன்னேன் உன்கிட்ட. அவ என் வாணி, அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஏன் டா இப்படி அலையுற?” என அவன் பேசும்போத பளாரென்று அவன் கன்னத்திலே அறைந்திருந்தாள் இசைவாணி.
பரிதி பேசிய பேச்சில் இவளுக்கு உடல் கூசிற்று. விக்னேஷ் என்பவன் அவளுடைய நலம் விரும்பி, நண்பன், தோழன். அப்படியிருக்கையில் இப்படியொரு வார்த்தையை அவனை நோக்கிப் பரிதி வீசவும், தன்னையும் சேர்த்து அவன் அசிங்கப்படுத்தியதாக அர்த்தம் தானே? என இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்த பொறுமை பறந்தது.
“அவனுக்காக என்னைக் கை நீட்டி அடிப்பீயா வாணி? என்னைவிட அவன் உனக்கு முக்கியமா?” பரிதி சீற,
“ஆமா... எனக்கு உன்னைவிட அவர் முக்கியம்!” நிதானமான அவள் பேச்சில் இவனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது.
“வாட்ச்மேன் அண்ணா... இந்த தம்பியை வந்து கூட்டிட்டு போங்க. இனிமே இவர் நம்ப அப்பார்ட்மெண்ட் வாசல்ல கூட இருக்க கூடாது. நீங்களும் அவரோட பேசக் கூடாது. அப்படி உங்களுக்கு அவர்கிட்டே பேசணும்னா வெளிய எங்கேயாவது மீட் பண்ணுங்க. உங்
க வேலை உங்களுக்கு முக்கியம் தானே?” என வாணி அழுத்தமாகக் கேட்டதும், அவர் பதறியடித்துக்கொண்டு வந்து பரிதியை இழுத்துச் சென்றார்.
தொடரும்...