- Messages
- 1,351
- Reaction score
- 4,091
- Points
- 113
நேரம் – 41 
தானியில் சென்று பரிதி வீட்டின் முன்னே இறங்கிய வாணிக்கு உள்ளே செல்ல கால்கள் ஒத்துழைக்கவில்லை. அவனால் ஏற்பட்ட காயத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அவன் மீதான அதிருப்தியும் தற்போதைய அவன் செயல்களில் உயர்ந்திருக்க, அப்படி மானம், ரோஷத்தையெல்லாம் வெளியே வைத்துவிட்டு உள்ளே செல்ல வேண்டுமா என மனம் கேள்வியெழுப்பியது.
அம்சவல்லி வற்புறத்தவில்லை எனில் இவள் இங்கு வந்திருக்கவே மாட்டாள். தங்கள் விவாகரத்தை தெரியப்படுத்த மட்டுமே இந்த வீட்டிற்கு வர வேண்டும் என தான் நினைத்து வைத்தவற்றை அவளே மீற வேண்டிய சூழ்நிலை. சில நொடிகள் மூச்சை இழுத்துவிட்டாள்.
பரிதி என்ற தனிமனிதன் செய்த தவறுக்காக அவன் குடும்பத்து ஆட்களை குற்றம் சுமத்துவது அப்பத்தமென இளகிய மனம் கூறிற்று. தாய் இறந்த போது சிந்தாமணி எப்படித் தன்னை மடிதாங்கினார் என்ற நினைவு எழ, மற்றதையெல்லாம் உதறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.
சின்னவர்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்றிருக்க, கூடத்தில் பாயை விரித்து விச்ராந்தையாகப் படுத்திருந்த சிந்தாமணி ஏதோ ஒரு தொலைக்காட்சி தொடரில் மூழ்கியிருந்தார். இவள், தான் அணிந்திருந்த உடையை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். உயர் கழுத்து வைத்து முதுகோடு மறைத்திருந்தது அந்த சுரிதார். கடந்த நான்கு நாட்களாக இதே போலத்தான் உடை அணிகிறாள். அவள் கழுத்தில் தாலி இல்லையென்று தெரிந்தால் அம்சாவும் காமராஜூம் பயந்துவிடுவார்கள் என அவர்களிடம் மறைந்தாள்.
இங்கே சிந்தாமணி கண்களிலும் கண்டிப்பாக தவறாமல் தென்பட்டுவிடும் என்பதால் இப்போதும் முதுகையும், கழுத்தையும் முழுமையாக மறைக்கும் வகை உடையை அணிந்து வந்தாள். திடுதிப்பென்று வந்து நிற்கும் மருமகளை எதிர்பாராது திகைத்த சிந்தாமணி எழுந்துவிட்டார். என்னவோ, ஏதோ என அவர் மனம் பதறிற்று.
“என்ன வாணி... சொல்லாம கொள்ளாம வந்திருக்க, நீ மட்டும் வந்திருக்க, பரிதி எங்க? அவன் நல்லா இருக்கான் தானே?” என பெரியவர் படபடக்க, இவள் முன்னறிவிப்பின்றி வந்த தன்னையே நொந்தவள், அவன் நன்றாக இருக்கிறான் என அவரை ஆசுவாசம் செய்தாள்.
“நல்ல பொண்ணுமா நீ. நான் பயந்துட்டேன். தனியாவா லண்டன்லருந்து வந்த? அவனையும் கூட்டிட்டு வந்திருக்க வேண்டியதானே வாணி?” என அவர் விசாரிக்க, இவள் சென்ற வாரம்தான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்ததாக உரைத்தாள்.
“ஏன் வாணி இப்படி இளைச்சு போய்ருக்க? சரியா சாப்பிட்றதில்லையா நீ? போ... போய் மூஞ்சி கைகாலை கழுவிட்டு வா. எனக்கும் உன் மாமாவுக்கு மட்டும்தான்னு நான் தொட்டுக்க ஒன்னும் செய்யலை. வடகத்தை பொரிச்சுக்கலாம்னு விட்டுட்டேன். பத்து நிமிஷம் பொறு. ஏதாவது செய்றேன்!” என அவர் அகல, இவள் தயங்கியபடியே பரிதியின் அறைக்குள் நுழைந்தாள். கொஞ்சம் அலங்கோலமாகத்தான் காட்சியளித்தது அறை. புதிதாய் வெள்ளை அங்கி ஒன்று சுவரில் தொங்கியது. மேஜை முழுவதும் மருத்துவம் சம்பந்தமான புத்தகங்கள். அஜித் இந்த அறையை உபயோகிக்கிறான் என உணர்ந்தவள், கழிவறை சென்று வந்தாள்.
அதற்குள்ளே இரண்டு முட்டைகளைப் பொரித்து, சாம்பார், மாங்காய் ஊறுகாய், வடகம், சோறு என மருமகளுக்குப் பரிமாறினார் பெரியவர்.
“நீங்க சாப்பிடலையா அத்தை?” எனக் கேட்டவளுக்கு உணவு தொண்டையில் இறங்கவில்லை. எவ்வகையான உறவுமில்லாத இடத்தில் எப்படித் தன்னால் பொருந்திப் போக முடியுமென மனம் விலகி நிற்கச் சொல்லி அறிவுறுத்தியது. இப்போது அவள் இந்த வீட்டு மருமகள் அல்ல. தார்மீக முறைப்படியும் சரி, சட்டப்படியும் சரி, அவர்கள் விவாகத்தை ரத்து செய்திருக்க, இவளால் சிந்தாமணி முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவர் மகனைப் பற்றிக் கேட்டார்.
“அவனுக்கும் உனக்கும் சண்டை சரியாகிடுச்சா வாணி? அவன் ஏதாவது சேட்டை பண்ணா, அதட்டி வைம்மா. இல்லைன்னா ரொம்ப ஆடுவான். அதுக்காக நிறைய திட்டிடாத. பிள்ளை ரொம்ப தூரத்துல இருக்கான். ஏங்கிப் போய்டுவான். நீ இங்க வந்துட்டீயே. பாவம் அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்றானோ?” எனக் கவலைக் கொண்டவர், “அவனோட நீயும் ரெண்டு வருஷம் அங்கேயே இருக்கலாம்ல ஆத்தா?” எனக் கவலையுடன் கேட்டார்.
“அப்படி அங்க தங்க முடியாது அத்தை. என் பிராஜெக்ட் முடிஞ்சுடுச்சு. சோ, நான் பெங்களூர்லதான் வேலை பார்க்கணும். மறுபடியும் லண்டன் போகணும்னா வேலையை விட்டாதான் முடியும். எனக்கு வேலை ரொம்ப முக்கியம் அத்தை. இன்னும் வீட்டு லோன் முடியலை!” என்றாள். அவருக்கும் அவள் சூழ்நிலை புரிந்தது.
“சரித்தா... பேசாம அவனுக்கு நீ வேலை பார்க்குற இடத்துலே வேலை வாங்கி கொடேன்!” என வெகுளியாக சிந்தாமணி கேட்க, இவரைப் போய் பரிதிக்கு ஏமாற்ற எப்படி மனம் வந்தது என இவளுக்கு ஆதங்கமாய் இருந்தது. அவளிடம் பேசிய பத்து வார்த்தைகளில் ஆறு வார்த்தை பரிதி என்றுதான் வந்தது. இங்கே இந்தப் பெண்மணி மகனைப் பற்றி கவலைக்கொள்ள, அவன் அங்கே வாரத்திற்கு நான்கு நாட்கள் குடித்துவிட்டு ஊரைச் சுற்றுகிறானே எனக் கோபம் பொங்கிற்று. ஆனாலும் இப்போது அவள் மூன்றாம் மனுஷி. அவனைக் கேள்வி கேட்கவோ, இவரிடம் அவனைப் பற்றிக் கூறவோ எவ்வித உரிமையும் அற்றவள்.
முன்பும் அவளுக்கு அந்த உரிமை இருந்தது இல்லை. எப்போது எப்படி முகத்தில் அடித்தாற் போல பேசுவான் என எண்ணியே வாணி அவனின் தனிப்பட்ட விஷயங்களில் பெரிதாய் தலையிடவில்லை. ஒரு தோழியாக அவனுக்கு எடுத்துக் கூறலாம் என்ற எண்ணம் வந்தாலும், அதை உள்ளேயே அமிழ்த்திவிடுவாள்.
தன் முகத்தையே சிந்தாமணி பார்த்திருப்பது தெரிய, “இல்ல அத்தை... இது பெரிய ஐ.டி சொல்யூஷன். அவ்ளோ ஈசியா அங்கேருந்து இங்கே வேலை கிடைக்காது!” என்றவள், அவருக்குப் புரியும்படி எளிமையாக விளக்கினாள். அவற்றையெல்லாம் கேட்ட சிந்தாமணி, இவ்வளவு இருக்கிறதா என ஆச்சர்யப்பட்டார். பின்னர் லண்டனில் எப்படி வாழ்க்கை சென்றது என அவர் கேட்க, இவள் பொறுமையாய் சாப்பிட்டுக் கொண்டே பதிலளிக்க, மார்த்தாண்டம் வந்துவிட்டார்.
“ஏன் ஆத்தா... இப்படித்தான் சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறதா? ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிப் போச்சுன்னா என்ன பண்றது? இனிமே இந்த மாதிரி சொல்லாம வரக் கூடாது!” என அவர் கடிய, இவள் தலையை மட்டும் அசைத்தாள்.
“இந்தா சிந்தாமணி... இதை மருமகளுக்கு வச்சுக் கொடு!” என்றவர், ஜிலேபியும் பால்கோவாவும் வாங்கி வந்திருந்தார். அவள் என்றோ ஒருநாள் உண்டுவிட்டு நன்றாக இருக்கிறது எனக் கூறியதை நினைவு வைத்து அதே கடையில் வாங்கி வந்திருக்கிறார் எனப் புரிந்தவளுக்கு ஒரு மாதிரியாகிற்று. இவர்களிடமா முகத்தை காண்பித்து, பேசக் கூடாதென்று நினைத்தோம் எனத் தன்னைத் தானே எண்ணி வெட்கிப் போனாள். பரிதி போலொரு சுயநலமான மனிதனுக்கு இப்படியொரு அம்மா, அப்பா என எண்ணி கேலியாகச் சிரித்தாள்.
மார்த்தாண்டம் அவளிடம் எப்படி வந்தாள், தற்போது எங்கே இருக்கிறாள், அவள் முன்பு வேலை பார்த்தது போல கோயம்புத்தூருக்கே வர முடியாதா? தனியாக அங்கே பாதுகாப்பில்லாத இடத்தில் எப்படி என விசாரிக்க, “வீடு ரொம்ப சேஃப்டிதான் மாமா. அங்க பக்கத்துல ஃபேமிலி நிறைய இருக்காங்க. ஆஃபிஸ் கேப்லதான் போவேன், வருவேன்!” என்றவள், தற்போதைக்கு இங்கே வேலை மாற்றல் கிடையாது என்றாள்.
“ஏன் வாணி... இப்படி நீயொரு பக்கம், அவனொரு பக்கம் இருக்கீங்களே! எப்போதான் எங்களோட இருக்கப் போறீங்க. அவன்தான் அங்கேயே கிடக்கான். சரி நீயாவது எங்களோட வந்து இருக்காம, தனியா இருக்க. ஒத்தாளுக்கு என்ன சமைச்சு சாப்பிட்றதுன்னு யோசிச்சு சாப்பிடாம இருக்காத வாணி. நல்லா சாப்பிடு. பிரசவதப்போ கஷ்டப்படத் தேவையில்லை!” என அவர் பேச, இவள் முகம் மாறாது கேட்டு, முயன்று முறுவலித்தாள். மார்த்தாண்டம் உண்டுவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்துக் கிளம்பினார்.
“ஏன் வாணி... பரிதி அப்பா இருந்தாருன்னு இதைக் கேட்கலை. உன் புருஷன் உன்கிட்டே எதுவும் சொன்னானா? ரெண்டு மூனு மாசமா ஒழுங்கா அவன் பணம் அனுப்பலை. அவுக அப்பாவுக்கு பெரிய கடையா டவுன்ல வைக்கலாம்னு சொன்னான். அதுக்காக இடம் எதுவும் வாங்கிப் போட்ருக்கானா என்ன? நான் கேட்டா ஏதும் சொல்ல மாட்றான். அது ஏதோ சொல்வீங்களே... சப்புரைஸ்!” என அவர் தடுமாற,
“சர்ப்ரைஸ் அத்தை!” என்றவள் இவள்.
“அதான்மா... அந்த மாதிரி எதுவும் செய்றானா உன் புருஷன்? என்னதான் அவரை முறைச்சுட்டே திரிஞ்சாலும் அப்பா மேல ரொம்ப பாசமானவன்மா அவன். அவருக்கு ஒன்னுன்னா துடிச்சுப் போய்டுவான்!” என மகனை எண்ணி வாஞ்சையுடன் பேசினார் சிந்தாமணி. அவரைப் பார்த்து இவளால் வருத்தப்பட மட்டுமே புரிந்தது. மூன்று மாதங்களாக அவன் பணம் அனுப்பவில்லை எனில் என்ன செய்திருப்பான் என இவளால் ஊகிக்க முடிந்தது.
“என்கிட்ட எதுவும் உங்க புள்ளை சொல்லலையே அத்தை. அடுத்த மாசம் வருவாரு. நீங்களே கேளுங்க!” என்றதோடு அந்தப் பேச்சை இவள் முடித்தாள். என்னவோ அவர் பேசும்போது இவளுக்கு கோபம் பொங்கிற்று. வீட்டின் நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியவன், இப்படி ஊதாரித்தனமாக சுற்றுகிறானே என ஆதங்கத்துடன் நினைத்தாள்.
“சின்னவ வர்ற நேரமாச்சு வாணி. வந்ததும் பசிக்குதுன்னு சொல்லுவா. இன்னைக்கு சோறும் இல்லை. ஏதாவது செய்றேன் நான்!” என அவர் எழ,
“அத்தை... நீங்க இருங்க. நான் அவளுக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது ஸ்னாக்ஸ் செய்றேன்...” என வாணி சமையலறைக்குள் நுழைந்தாள்.
சிந்தாமணி காலிஃப்ளவர் வாங்கி வைத்திருக்க, இவள் அதை சுடுநீரில் போட்டு கழுவி எடுத்துப் பொடி பொடியாக நறுக்கி மிளகாய் பொடி தூவி எண்ணெயில் பொரித்தெடுத்தாள். ஒன்றை எடுத்து சாப்பிட்டு பார்க்க, சுவை நன்றாகயிருந்தது.
“ம்மா...” என அழைத்துக் கொண்டே வந்த கீர்த்தனா, “என்னம்மா பொரிக்கிற? வாசனை வாசல்வரை வருதே...” என யோசனையுடன் சமையலறைக்குள் எட்டிப் பார்க்க, சின்ன சிரிப்புடன் இசைவாணி நின்றிருந்தாள்.
அவளை எதிர்பாராமல் திகைத்தவள், “அண்ணி... வாட் எ சர்ப்ரைஸ்! சொல்லவே இல்லை நீங்க வரீங்கன்னு!” என ஓடிச் சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டாள். வாணி ஒரு நொடி தடுமாறி அவள் முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
“இந்த அண்ணன் கூட சொல்லலை பாருங்களேன் அண்ணி. எங்க அவனை?” என்றவள் துள்ளலுடன் அகலப் பார்க்க,
“உங்கண்ணன் வரலை கீர்த்தனா. நான் மட்டும்தான் வந்தேன்!” என்றாள் மூத்தவள்.
“ஓ...” சின்னவள் முகம் வாடிப் போனது.
“அவருக்கு லீவ் கிடைக்கலை. அடுத்த மாசம் வருவாரு!” அவளை சமாதானம் செய்த வாணி , “நீ போய் ப்ரெஷ்ஷாகிட்டு வா. உனக்காகத்தான் காலிஃப்ளவர் பக்கோடா...” என்றாள்.
“செம்ம அண்ணி... இதுக்காகவே உங்களை நான் மிஸ் பண்ணேன்...” கீர்த்தனா ஒரு துண்டு காலிஃப்ளவரை எடுத்து வாயிலிட்டு சிலாகிக்க, வாணி முறைத்தாள். இவள் ஓடிச்சென்று உடைமாற்றி வந்து ஒரு கிண்ணத்தில் பக்கோடாவை எடுத்துக்கொண்டு சென்று கூடத்தில் அமர்ந்தாள். சிந்தாமணி பக்கத்து வீடுவரை சென்றிருந்தார்.
அவர் வரவும், “ம்மா... அண்ணி செஞ்ச பக்கோடா. டேஸ்டா இருக்கு...” என அவரிடம் மகள் கூற, “சரி... சரி. நீ ஒராளே காலி பண்ணிடாத. அஜித்துக்கும் வை. இல்லைன்னா அவன் வந்து கத்துவான்...” என்றவர் சமையலறைக்குள் நுழைந்தார்.
கீர்த்தனாவின் அலைபேசி இசைத்தது. பரிதி அழைத்திருக்க, “ண்ணா... நீயும் வந்திருக்கலாம் இல்ல. அண்ணி மட்டும் வந்திருக்காங்க. உனக்கு லீவு கிடைக்கலையா?” என இவள் வருத்தத்தோடு கேட்டாள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன அண்ணி வந்திருக்கா?” அவன் கேட்க,
“ப்ம்ச்... ண்ணா, அதான் அண்ணி சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்களே. அப்புறம் என்ன நீ எங்ககிட்ட மறைக்கிற? அண்ணிதான் காலிஃப்ளவர் பக்கோடா செஞ்சு கொடுத்தாங்க. நல்லா இருக்கு” என்றாள் ஒன்றை வாயில் போட்டு மென்று கொண்டே. அவனுக்கு இச்செய்தி புதியது. வாணி அங்கே சென்றிருக்கிறாளா? வாய்ப்பில்லையே என மனம் கூற, சின்னதாய் தொற்றிக்கொண்ட பரபரப்புடன்,
“கீர்த்தி.. வீடியோ கால் வா. பேக் கேமரா ஆன் பண்ணி உன் அண்ணியைக் காட்டு!” என்றான்.