- Messages
- 1,321
- Reaction score
- 3,939
- Points
- 113
ஹாய் டியர்ஸ். வாகை தொலைக்காட்சி போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை என்றென்றும் அன்புடன் சந்தனா இப்போது ஆடியோ நாவலா இறகி சேனல்ல பப்ளிஷ் பண்ணியிருக்கோம். கண்டிப்பா எல்லாரும் கேட்டுப் பாருங்க. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
லிங்க்,
youtu.be
நேரம் – 40
என்ன சமைத்து சாப்பிட்டோம் என்ற பிரஞையற்று வீட்டைப் பூட்டிய இசைவாணி, வாயிலில் தனக்காக வந்து காத்திருந்த மகிழுந்து ஓட்டுநரிடம், “சாரிண்ணா... கொஞ்சம் லேட்டாகிடுச்சு!” என்ற மன்னிப்போடு உள்ளே ஏறியமர்ந்தாள்.
“பரவாயில்லைங்க மேடம்... இப்போ உங்களுக்கு உடம்பு சரியாகிடுச்சா?” அவர் அக்கறையுடன் கேட்க, இவள் முறுவலித்தாள்.
“ஓகேதான் அண்ணா. ஜஸ்ட் ஃபீவர் தான். இப்போ நல்லாகிட்டேன்!” என்றவள், பொதுவாக அவரது குடும்பம் பிள்ளைகள் என விசாரித்தாள். அவரும் தனது சொந்தர் ஊர் தொடங்கி, வேலைக்காக இங்கே குடி பெயர்ந்தது வரை சொல்லிக் கொண்டே வந்தார். கடந்த மூன்று மாதங்களாக வாணிக்கு இவர்தான் ஓட்டுநராக பணிபுரிகிறார். அலுவலகத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்ட மகிழுந்து ஓட்டுநர் இவர்.
இதுவரை அவரிடம் பெரிதாய் இவள் பேசியது கிடையாது. சின்ன தலையசைப்பு, புன்னகை, தாமதமானால் ஒரு மன்னிப்பு, வீட்டில் சரியான நேரத்தில் இறக்கிவிடும் போது ஒரு நன்றி என சம்பிரதாயமாக அவரிடம் பேசுவாள். ஆனால் கடந்த வாரம் அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. காய்ச்சல் படுத்தி எடுத்ததில் அரைநாள் விடுப்பெடுத்துவிட்டு இவள் வீட்டிற்குச் செல்லப் பார்க்க, “மேடம்... இங்க பக்கத்துல ஒரு டாக்டர் இருக்காரு. கைராசியான ஆளு. என் மவளுக்கு உடம்பு முடியலைன்னா அங்கதான் பார்ப்பேன்!” என இவள் மறுத்தும் அவரே அழைத்துச் சென்று, மருத்துவரை சந்திக்கச் செய்தார். பின்னர் பத்திரமாய் வீடுவரை வந்து விட்டுச் சென்றிருக்க, அதனாலே வாணி அவரிடம் இயல்பாகப் பேசத் தொடங்கினாள்.
அலுவலகம் வந்ததும் அவரிடம் ஒரு நன்றியோடு அவள் இறங்கி உள்ளே செல்ல முயல, அவளது அலைபேசி இசைத்தது. அற்புதா அழைத்தாள். இந்தியா இங்கே வந்ததை இன்னும் இருவீட்டு ஆட்களிடமும் தெரியப்படுத்தியிருக்கவில்லை வாணி. பரிதி வந்ததும் இரண்டு குடும்பத்தாரையும் வரவழைத்து தங்களது விவாகரத்தைப் பற்றிக் கூறும் எண்ணத்திலிருந்தவள், அதற்கு முன்னே எதையும் பகிர விரும்பவில்லை. அதனாலே லண்டனிலே இருப்பது போல பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தாள்.
“ஹே அற்புதா... என்ன பண்றான் குட்டிப் பையன்?” என சிரிப்புடன் கேட்டாள் இவள்.
சில நொடிகள் மௌனத்தின் பின்னே, “எங்க இருக்க வாணி நீ?” என அவள் கோபமாய் கேட்டாள்.
“இதென்ன கேள்வி? வீட்லதான்!” என்றவள், ஒரு ஓரமாய் வந்து நின்று பேசினாள். அவள் கோபக் குரலிலே தான் இங்கு வந்தது அவளுக்குத் தெரிந்துவிட்டதோ என்ற சந்தேகம் முளைத்தது.
“நல்லா பொய் சொல்ல கத்துக்கிட்டே வாணி. அதுவும் எங்ககிட்டயே பொய் சொல்ற? நீ இந்தியா வந்து மூனு மாசம் ஆச்சு. ஆனால் ஒரு வார்த்தை கூட சொல்லலை? ஹம்ம்... அப்போ நாங்க யாரோவா போய்ட்டோம். அத்தை இருந்தவரைதான் நாங்க உன் கசின்ஸ். அப்படித்தானே?” அவள் சூடாய் கேட்க, இவள் மூச்சை இழுத்துவிட்டாள்.
“அதெல்லாம் இல்ல டீ. அது... நான் சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனால் சிட்சுவேஷன் சரியில்ல!” வாணி தயங்கினாள்.
“ஓஹோ... எங்கட்ட கூட சொல்ல முடியாத சிட்சுவேஷன். வெரி குட்?” அவள் குரலில் அன்னியத்தன்மை உதிர்ந்தது.
உதட்டைக் கடித்த வாணி, “சாரி டீ. எனக்கும் பரிதிக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். என் ப்ராஜெக்ட் முடிஞ்சுடுச்சு. சோ, நான் கிளம்பி பெங்களூர் வந்துட்டேன்!” வாணி சுருக்கமாக உரைக்க, மற்றையவளிடம் பேச்சேயில்லை.
“அற்புதா... லைன்ல இருக்கீயா டீ?” இவள் தயங்க,
“அதெல்லாம் லைன்லாதான் இருக்கோம் வாணி. உனக்கும் உன் புருஷனுக்கும் சண்டைன்னா நீ தனியா போய்டுவீயா? அப்புறம் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்ச எங்களுக்கு என்ன மரியாதை? முதல்ல நீ எங்கிட்டே தானே டீ வந்திருக்கணும்?” அம்சவல்லி ஆதங்கத்துடன் கேட்டார்.
“அத்தை...” இவள் ஏதோ விளக்கம் கொடுக்க வர,
“பேசாத வாணி... அற்புதாவையும் உன்னையும் வேற வேறயாவா நாங்க பார்த்தோம். அண்ணி இல்லைன்னா அடுத்து நான்தானே உனக்கு அந்த இடத்துல இருக்கேன். இதுவே உன் அம்மா இருந்திருந்தா இப்படி நீ தனியா கஷ்டப்படுவீயா? எங்களையெல்லாம் நீ உன் சொந்தமாவே நினைக்கலை. அப்படி நினைச்சிருந்தா இங்கதானே கிளம்பி வந்திருப்ப? உன் மாமாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா எவ்ளோ வேதனைப்படுவாரு?” ஆதங்கப்பட்டார் அவர். குரலில் கோபமும் ஆற்றாமையும் எஞ்சியிருந்தது.
“அத்தை... சாரி அத்தை!” என்றவளுக்கும் வருத்தம்தான். இங்கே இருந்து கொண்டே யாருமற்று தனித்திருப்பது அவளுக்கும் ஒருவித வெறுமையைக் கொடுத்திருந்தது. வீட்டில் பேச்சுத் துணைக்கு கூட ஆள் இல்லாமல் தொலைக்காட்சி, அலைபேசி என நேரத்தைக் கடத்த முயன்றாள். ஆனாலும் யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்குமென மனம் ஏங்கியது. தன் மாமா வீட்டு ஆட்களிடம் பேசச் சென்று அவர்களுக்கு தன் வருகை தெரிந்தால் வருந்தக் கூடுமென எண்ணியே தானாக அவர்களுக்கு அழைக்காமல் இருந்தாள். ஆனால் எப்படியோ இப்போது தெரிந்திருந்தது.
“சாரி அத்தை... நிஜமா நான் அப்படியெல்லாம் நினைக்கலை. அம்மாவுக்குப் அப்புறம் நீங்க எல்லாரும்தானே அத்தை எனக்கு குடும்பம்?” இவள் குரலில் வருத்தம் மேவியிருந்தது.
“உன் சாரி யாருக்கு டீ வேணும். முதல்ல ஊருக்கு வந்து சேரு நீ. அப்புறம் உனக்கும் உன் புருஷனுக்கும் இடையிலிருக்க பஞ்சாயத்தை நாங்கப் பேசி தீர்ககுறோம். சண்டை வராத புருஷன் பொண்டாட்டி எங்க டீ இருக்காங்க?” என நொடித்தவர், அவளை உடனே கிளம்பி வரப் பணித்தார்.
“இன்னும் டூ டேய்ஸ்ல வீக்கெண்ட் வருது. சோ, ப்ரைடே ஈவ்னிங் கிளம்பி வர்றேன் அத்தை!” என்றாள் இவள். அவரும் சரியென்க,
“ஆனாலும் நீ ரொம்ப மோசம் வாணி. என் பையன் பொறந்ததும் பக்கத்துல இருந்தா உடனே வந்து பார்த்திருப்பேன்னு சொன்னவதான், பக்கத்துல வந்தும் மூனு மாசம் கமுக்கமா இருந்திருக்கா!” எனக் கோபம் கொண்டாள் அற்புதா. அவளை சமாதானம் செய்யவே வாணிக்குப் போதும் போதுமென்றானது. அந்த வார வெள்ளிக்கிழமை மாலை கோயம்பத்தூர் பேருந்திலேறி காமராஜின் வீட்டை அடைந்திருந்தாள்.
வீட்டிலிருந்த நால்வரும் அவளை கேள்விக் கேட்டுத் துளைத்தெடுத்துவிட்டனர். அக்கா இருந்தால் இந்நேரம் மகளைத் தனியாக விட்டிருக்க மாட்டார். நான்தான் உன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்று பெரியவர் வருந்த, அற்புதா இவளை முறைத்துக்கொண்டே சுற்றினாள். அம்சா கூட இவள் வந்ததும் தனது ஆதங்கத்தை வாய்வழியாகக் கொட்டித் தீர்க்க, சரவணன்தான் இவளை அரவணைத்துக் கொண்டான்.
“விடு வாணி... அவங்க எல்லாருக்கும் நீ தனியா வந்ததுல இஷ்டம் இல்ல. யார்கிட்டேயும் இன்பார்ம் பண்ணாம பெங்களூர்ல போய் உக்கார்ந்துகிட்டே. உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா கூட எங்களுக்கு யார் சொல்லுவா? உன் சேஃப்டியையும் நாங்க பார்க்கணும் இல்ல?” என அவன் எடுத்துக் கூற, இவளுக்கும் தன் தவறு புரிந்தது.
ஆனால் இதையெல்லாம் அவள் வேண்டுமென்றே செய்யவில்லை. இதற்கே இவர்கள் இந்தளவிற்கு வருந்துகிறார்களே. பரிதி வந்ததும் தங்களது பிரிவைப் பற்றி உரைத்தால், அத்தை மாமாவின் எதிர்வினை என்னாவக இருக்குமென யோசிக்க கூட முடியாமல் அவளுக்குத் தலையே வலித்தது. முதல் நாள் முகத்தை தூக்கி வைத்திருந்த அற்புதா, பின்னர் சமாதானமாகிவிட, ஒவ்வொருவராய் இயல்பிற்குத் திரும்பினர்.
“வாணி... உனக்கும் மாப்பிள்ளைக்கும் இடையில என்ன சண்டை?” என அம்சா விதவிதமாக கேட்டும் இவளால் எதுவும் கூற முடியவில்லை.
“அவர் வரட்டும் அத்தை. சொல்றேன்!” என இவள் அந்தப் பேச்சைத் தவிர்த்தாள். காமராஜிற்கு அவளின் பதிலில் அதிருப்தி. எங்கே அவர்களுக்கு இடையே பெரிய பிரச்சனை எதுவுமிருக்குமோ என இவருக்குப் பயமாய் இருந்தது. அக்காவிற்குப் பிறகு வாணி தன் பொறுப்பு. அவளது வாழ்க்கையை சீரமைக்க வேண்டுமென அவர் மனைவியிடம் புலம்பிவிட்டார்.
“ஏங்க... இதென்ன பேச்சு? ஹம்ம்... கல்யாணமாகி இரண்டு வருஷம் கூட ஆகலை. ஏதோ ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம சண்டை போட்டிருப்பாங்க. இதெல்லாம் சகஜம். அதான் மாப்பிள்ளை அடுத்த மாசம் நேர்ல வர்றாரே. அவரை வச்சு அவங்க வீட்டுக்குப் போய் பேசி சரி பண்ணலாம். இப்போ பேசுனா ரெண்டு பேருமே பிடி கொடுக்க மாட்டாங்க. பிரிஞ்சு இருக்கும்போதுதான் பாசம் கூடுமாம்!” எனத் தன் கணவரை சமாதானம் செய்தார் அம்சா. அவருக்கும் மனத்தில் நெருடல்தான். அற்புதா பரிதியிடம் பேச, அவன் இயல்பாக பேசினான்.
வாணியைப் பற்றிய பேச்சை எடுத்ததும் அவனிடம் நிறைய தடுமாற்றம். அவனும் அவளைப் போலவே பேச்சை திசைமாற்ற முயல, “என்ன தம்பி நீங்க? இப்படி பொறுப்பில்லாம பதில் சொன்னா எப்படி? உங்களை நம்பித்தானே எங்கப் புள்ளையைக் கட்டிக் கொடுத்தோம்!” என அம்சா சத்தம் போட,
“ம்மா... என்ன நீ? அவன்கிட்டே என் சத்தம் போடுற. தப்பு யாரு மேலன்னு தெரியாம பேசக் கூடாது. அவன் நேர்ல வரட்டும். என்னென்னு விசாரிப்போம்!” என அற்புதா தாயை அதட்டினாள்.
“ஆனாலும் நீ பண்ணது தப்பு டா. அவ தனியா இந்தியா வந்ததை என்கிட்டே நீயாவது கால் பண்ணி சொல்லிருக்கணும். ரெண்டு பேரும் வாயைத் தொறக்க மாட்றீங்க. இதே வாய்தான் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிக் கல்யாணம் பண்ணது!” என அற்புதா கூற, அவன் திணறினான். இதுபோல பிரச்சனைகள் எழுமென அவனுக்குத் தெரிந்தாலும், இத்தனை விரைவிலா என அமர்ந்து போனான்.
“அற்பி... நான் லீவ் அப்ளை பண்ணிருக்கேன். நெக்ஸ்ட் மந்த் கிடைச்சிடும். வரேன்...” என்றவன், தற்போதைக்கு தங்களுக்கு இடையில் சின்னதாய் கருத்து வேறுபாடு என்பது போல பேசி வைத்தான். அவனுக்கு மலைப்பாய் வந்தது. மதி வேறு அவன் நீண்ட நேரம் யாருடன் உரையாடினான் எனக் கேட்க, இவன் மறைக்க முயலாமல் சொல்லிவிட்டான்.
“ஹக்கும்...இவளோட தொல்லைப் பத்தாததுக்கு இவக் குடும்பம் வேறயா? கண்டவங்களுக்கெல்லாம் நீ பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. பேசாம அவங்க எல்லாரையும் ப்ளாக் பண்ணி விட்ரு!” என அவள் எரிச்சலோடு கூற, பரிதி எதுவுமே பேசவில்லை. சென்ற வாரம் ஒருநாள் இயல்பாக அவனது அலைபேசியை பார்க்க நேர்ந்த மதி, அவனும் வாணியும் ஜோடியாக இருக்கும் படங்களைப் பார்த்து பல்லைக் கடித்தாள்.
“சைக்... என்ன காம்பினேஷன் இது. டிக்காஷனும் மில்க்கும் மாதிரி. அவ பக்கத்துல உன்னைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு இளா. முதல்ல இந்த மேரேஜ் ஃபோட்டோஸ், வீடியோஸ் எல்லாத்தையும் டெலிட் பண்ணு. ட்ராஷ்ல கூட இருக்கக்கூடாது. நீயும் நானும் இருக்க பிக்சர்ஸ் மட்டும்தான் உன் ஃபோன்ல இருக்கணும்!” என்றவள், அவளுடைய பெயரை அவன் அலைபேசியின் கடவுச் சொல்லாக மாற்றினாள். அவனும் அவளும் இணைந்திருக்கும் புகைப்படத்தை அவனது முகப்பு படத்தில் வைத்தாள்.
புலனத்திலும் அவள் முகப்பு படத்தை மாற்ற முயல, “மதி இப்போ வேணாம். டைவர்ஸ் மேட்டர் யாருக்கும் தெரியாது. இஸ்ஸூ ஆகிடும்!” என பரிதி தடுத்தான். அவன் அலைபேசியில் யார், யாருடைய இலக்கங்கள் உள்ளன. யாரிடம் பேசியிருக்கிறான் என இயல்பாகப் பார்த்தாள். சென்ற வாரம் வரை அவன் வாணிக்கு அழைக்க முயன்றிருக்கிறான் எனத் தெரிந்ததும் அவனிடம் சண்டையிட்டாள்.
“ஒரே நேரத்துல ரெண்டு பேரை மேனேஜ் பண்ணலாம்னு நினைக்காத இளா. என்னைப் பத்தி உனக்கு முழுசா தெரியாது!” என எச்சரித்திருந்தாள்.
“பம்ச்... அவளுக்கு கால் பண்ணி ப்ரெண்ட்லியா பேசலாம்னு நினைச்சேன் மதி. மத்தபடி தப்பான எண்ணமெல்லாம் இல்ல எனக்கு!” என இவன் உறுதியாக கூறியும் அவள் நம்பவில்லை.
“அவகிட்டே என்னடா உனக்கு ஃப்ரெண்ட்ஷிப் வேண்டி கிடக்கு? டைவர்ஸ் ஆனது உண்மையா? இல்லை என்னை ஏமாத்த ரெண்டு பேரும் ப்ளான் போட்டீங்களா?” என ஆடித் தீர்த்துவிட்டாள். மறுநாள் காமராஜும் அம்சாவும் அவனிடம் பேச அழைக்க, அவர்களிடம் பேசக் கூடாது என அலைபேசியைப் பறித்து வைத்துக் கொண்டாள்.
“லூசா டீ நீ? எங்க டைவர்ஸ் மேட்டர் தெரியுறவரை நான் அவங்களைப் பொறுத்தவரைக்கும் அவங்க வீட்டு மருமகன். அவங்க என்கிட்டே மரியாதையா நடந்துக்குறாங்க. அப்போ நானும் அவங்களை மதிச்சு நடக்குறதுதானே முறை?” என்றவன் சண்டையிட்டு அவளிடம் அலைபேசியைப் பறித்தான்.
“அப்போ உனக்கு அந்த சீப்பான லேடி வாணி ஃபேமிலிதான் முக்கியம். எனக்கு நீ இம்பார்டென்ஸ் தர மாட்ட?” எனக் கேட்டவள் அறைக்குள்ளே சென்று படுத்துக்கொண்டு அழ, இவனுக்கு தலையே வலித்தது. ஏதாவது ஒன்றென்றால் சண்டையிட்டு கையில் கிடைத்ததை தூக்கியெறிந்து அவனைக் காயப்படுத்துகிறாள் இல்லையெனில் உண்ணாமல், உறங்காமல் அறையைப் பூட்டுக்கொண்டு அழுகிறாள். அவனுக்கு இப்போதெல்லாம் மதியை சமாளிக்க பயமாய் இருந்தது. வாரத்திற்கு இரண்டு நாட்களாவது ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சண்டையிட்டாள். இரண்டு வருடமும் அவர்கள் சேர்ந்து வாழ்ந்ததைப் போலத்தான் அவளது பேச்சு இருக்கும்.
அதனாலே வாணி என்ற பெயரை வைத்துக்கொண்டு அவனை சித்திரவதை செய்தாள். பரிதியும் முடிந்தளவிற்கு அவளிடம் பேசி புரிய வைக்க முயன்றான். ஆனால் இறுதியில் அவளது பிடிவாதம்தான் ஒவ்வொரு முறையும் வென்றது.
“மதி ப்ளீஸ் டோரை ஓபன் பண்ணு... இப்போ நான் என்ன ப்ணணணும்? ஃபோன் அட்டெண்ட் பண்ண கூடாது. அவ்ளோதானே? நான் பேசலை டீ? நீ அழாத. கதவைத் திற!” என இவனின் அரைமணி நேர கெஞ்சலுக்குப் பிறகு அழுதழுது முகம் வீங்கிப் போய் வந்து கதவைத் திறந்தாள்.
“ப்ம்ச்... ஏன் மதி?” என இவன் வருத்தத்தோடு அவளது கண்ணீரைத் துடைக்க முயல, வெடுக்கென அவன் கையிலிருந்த அலைபேசியைப் பறித்தாள் அவள்.
அதில் கடைசி இரண்டு நாட்களாக வந்திருந்த காமராஜ், அம்சா, அற்புதா என அனைவரது எண்ணையும் கருப்பிவிட்டாள். பின்னர் ப்ரௌனி என சேமிக்கப்பட்டிருந்த எண்ணையும் கருப்பியவள், “ப்ரௌனின்னு அவளுக்குப் பேர் வச்சத்துக்குப் பதிலா ப்ளாக்கின்னு வச்சிருக்கலாம் இளா நீ?” என கேலியாக நகைத்தாள். இவனால் சிரிக்க முடியவில்லை.
அவனை இறுக்கி அணைத்து மார்பில் புதைந்தவள், “சாரி... நீ என்னோட இளா டா. யாரோ ஒருத்தவங்ககிட்டே நீ எதுக்குப் பதில் சொல்லணும். அவங்களாம் தேர்ட் ரேட் பீப்பிள். ஒரு பொண்ணை எப்படி வளர்க்கன்னு கூடத் தெரியாதவங்க. இப்படித்தான் அக்ரீமெண்ட் மேரேஜ்னு வயசுல சின்ன பையனைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி வளர்த்தாங்க போல. அவளை மாதிரியே அவ ஃபேமிலியும் சீப்பான ஆட்கள்தான்!” என மதி மேலும் பேச வரும்முன்,
“போதும் மதி. க்ரோசரீஸ் தீர்ந்து போச்சு. இந்த மந்த் ஷாப்பிங் போகலை. வா...போய்ட்டு வரலாம்!” என அவளது பேச்சைத் தடை செய்திருந்தான். தேவை, தேவையில்லை என்ற வரையற்று அவன் சம்பளத்தில் பாதியைக் கரைத்தப் பின்னரே வீடு வந்தாள் மதி. அவளுடைய அலங்கார பொருட்களுக்கு மட்டுமே பல ஆயிரங்களை செலவு செய்ய வைத்திருந்தாள். பரிதியால் எதுவும் தடை சொல்ல முடியவில்லை. அவளது சம்பளத்தில் அவனுக்கும்தான் நிறைய வாங்கிக் குவிக்கிறாள். இவன் ஏதாவது கேட்க சென்று மீண்டும் வாணியை இழுத்துப் பேசுவாளோ என பயந்தே அவள் வாங்கும் எதற்கும் இவன் மறுப்பு தெரிவிக்கவில்லை.
கோதுமை ரொட்டி, மைதா ரொட்டியெல்லாம் வாங்கி வருவாள். ஒருவாரம் மட்டுமே அவை கெடாமல் இருக்கும். அந்த ஒரு வாரத்திற்குள் அதை உண்ணாமல், “அச்சோ... இந்த் ப்ரெட் எக்ஸ்ப்ரெரி ஆகிடுச்சு இளா. வேற வாங்கிக்கலாம்!” என குப்பையிலிடுவாள். இந்த மூன்று மாதத்தில் இதெல்லாம் பழகியவன், அவள் வாங்கியவற்றை விருப்பமே இல்லையெனினும் உண்ணப் பழகியிருந்தான்.
“ஏன் அற்புதா... மாப்பிள்ளைக்கு நேத்து காலைலயிருந்து ஃபோன் போட்றேன். எடுக்கவே மாட்றாரு!” என அம்சா கேட்க,
“அங்க மழை சீசன் மா. அதான் லைன் கிடைக்கலை போல. நைட் பேசலாம்!” என அற்புதா பதிலளிப்பதைக் கேட்டுக் கொண்டே அவளின் பத்து மாத மகனுக்கு உடை மாற்றி பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள் வாணி.
கடந்த மூன்று நாட்களாக பெரியவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள சின்னவனைத்தான் தூக்கி வைத்திருந்தாள் அவள். அவனைப் பார்க்கும் வரை அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை. ஆனால் இப்போது குளிக்க வைத்து உடை மாற்றி, உணவை உண்ண வைக்கும்போது நெஞ்சுக்குள்ளே என்னவோ பிசைந்தது.
ஒற்றைப் பிள்ளையாகத் தான் போய்விட்ட காரணத்தினால் மூன்று குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென எண்ணி தன் வாழ்க்கையைப் பற்றிய கனவில் மிதந்ததை நினைத்து இப்போது வாணியின் உதடுகளில் விரக்தி புன்னகை உதிர்ந்தது. மடியில் படுத்திருந்த விதுரன் கையை ஆட்டி சிரிக்க, அவனைத் தூக்கி முத்தமிட்டு உச்சி முகர்ந்தாள். ஒரு குழந்தை இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என கமலா அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கிறாள்.
“அவர் நடு ரோட்டுல என்னையும் புள்ளைங்களையும் விட்டுட்டுப் போய்ட்டாரு வாணிமா. சின்னவளுக்கு ஏறக்குறைய உன் வயசுதானே அப்போ? அவ மூஞ்சியைப் பார்த்தாலே எனக்கு எல்லா கஷ்டமும் ஓடிடும். அவ சிரிப்பை பார்த்தப்புறம்தான் வாழணும்னு ஒரு பிடிப்பே வந்துச்சு!” கமலாவின் வார்த்தைகளை அசைபோட்டுக் கொண்டே விதுரனின் கழுத்தோரம் வாசம் பிடித்தாள். பால் வாசனை மனத்தையும் நாசியையும் நிறைத்தது.
முகம் நிறைந்த சிரிப்புடன் அவனது இரண்டு கன்னத்திலும் மாற்றி மாற்றி முத்தமிட்டவள், “அற்பி... இந்தா குட்டிப் பையனுக்கு பசிக்கப் போகுது. பாலைக் குடு!” என அவளிடம் குழந்தையைக் கொடுத்தாள்.
வாணி ஆசையாய் குழந்தையைக் கொஞ்சுவதைப் பார்த்த அம்சா, “காலகாலத்துல நீயும் ஒரு பிள்ளையைப் பெத்துக்கோ வாணி. அப்போதான் பிள்ளைக பின்னாடியே நேரம் ஓடிடும். புருஷன் பொண்டாட்டி சண்டை போட நேரமே கிடைக்காம போய்டும்!” என அவர் கேலி செய்ய, இவள் முயன்று முகத்தை சாதாரணமாக வைத்திருந்தாள். மூன்று நாட்களாக விதுரனோடு இருந்ததில் அவளது மனப்பாரம் குறைந்திருந்தது. யாருமில்லாத அநாதையாக வீட்டுச் சுவரை வெறித்தவளை குழந்தையின் மழலை மொழி ஆற்றுப்படுத்தியது. நிம்மதியற்று திரிந்த மனது விதுரனின் அருகில் சாந்தமானது.
“சரி... மூனு நாளா நானும் பார்க்குறேன். உன் புருஷன்கிட்டே நீ பேசவே இல்லை. சண்டைன்னா அவர்தான் உன்னை சமாதானம் செய்யணும்னு இல்ல வாணி. போ... போய் ரெண்டு வார்த்தை மாப்பிள்ளைகிட்டே பேசிட்டு வா. நானும் நேத்துலருந்து ஃபோன் போட்றேன். அவருக்கு லைன் கிடைக்கலை!” என அம்சா அவளை உந்த, வாணிக்கு என்னவோ மனத்தில் ஒரு நெருடல். என்னவென சொல்ல முடியவில்லை.
படக்கென எழுந்தவள், அலைபேசியுடன் அறைக்குள் நுழைந்தாள். கருப்பியிருந்த பரிதியின் எண்ணை வெள்ளைக்கு மாற்றிவிட்டு அழைக்க, அழைப்பு செல்லவில்லை. தன்னுடைய இலக்கத்தை அவன் கருப்பிவிட்டான் எனப் புரிய, அற்புதா அலைபேசியில் அழைத்தாள். அதிலும் அதே பதில்தான் கிடைக்க, மனத்தில் இத்தனை நாள் மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் மேலெழுந்தது.
அவனுடைய தாய், தமக்கை, தந்தை என அனைவரையும் மதித்து, இன்றுவரை நான் நன்றாகத்தானே பேசுகிறேன். தங்களது பிரிவு தெரியும்வரை அவனும் என் வீட்டு ஆட்களை மதித்து பேச வேண்டும் என அவள் எதிர்பார்ப்பை பரிதி தூக்கியெறிந்திருந்தான். அலைபேசியையே பார்த்திருந்தவளுக்கு கோபம், ஆற்றாமை, வெறுப்பு எல்லாமே பொங்கிற்று.
உதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கியவள், இனிமேல் அவன் வீட்டிலிருந்து யார் தன்னைத் தொடர்பு கொண்டாலும் அவனைப் போலவே நடந்து கொள்ள வேண்டுமென நினைத்தாள். ஆனால் அவன் அளவிற்குத் தானும் தரம் தாழ்ந்து போக வேண்டுமா என மனம் வருந்தியது. அவன் செய்த தவறிற்கு அவன் குடும்பத்து ஆட்கள் என்ன செய்வார்கள் என நியாயமாய்க் கேள்வி கேட்ட மனதை அதட்டி அடக்கிவிட்டாள்.
“வா வாணி... தம்பிகிட்டே பேசுனீயா? என்ன பண்றாரு அவரு?” அம்சா இவள் முகத்தை எதிர்பார்ப்புடன் ஏறிட்டார்.
“லைன் கிடைக்கலை அத்தை. அங்க ஏதோ சிக்னல் ப்ராப்ளம். சரியானதும் ஃபோன் பேசுறேன்னு மெசேஜ் போட்டிருக்காரு. நீங்களும் அதுவரை அவனுக்கு கால் பண்ண வேணாம்!” என்றாள்.
“சரி... நீ வா... வந்து சாப்பிடு!” என அவளை அமர வைத்தவர், “வத்தக் குழம்பு வச்சேன் உனக்குப் பிடிக்கும்னு. சாப்பிடு வாணி!” எனப் பரிமாறினார். இவள் எதுவும் பேசாமல் அமைதியாக உண்ண,
“வாணி... ஆம்பளைன்னா அப்படித்தான் முறுக்கிட்டு திரிவாங்க டீ. நீ விட்டுக் கொடுத்துப் போ. ஒன்னும் கெட்டுப் போகாது. குடும்பம் நல்லா இருக்கும்!” என்றவரைப் பார்த்தவள்,
“ஆம்பளை என்னத் தப்பு பண்ணாலும் நம்ப விட்டுக் கொடுத்துப் போகணுமாத்தை?” என அழுத்தமாகக் கேட்டாள்.
“அது அப்படியில்ல டீ. எல்லா ஆம்பளைக்கும் ஈகோ இருக்கும். அவனுங்களுக்கு கொம்பு முளைச்ச மாதிரி சுத்துவாங்க. இப்போ நீ விட்டுக் கொடுத்துப் போய்ட்டு, சான்ஸ் கிடைக்கும்போது பதிலுக்கு கொடுத்துடணும். நான்லாம் உன் மாமாவை அப்படித்தான் சமாளிக்கிறேன்!” என்றவரை இவள் முறைத்தாள்.
“முறைக்காத டீ. எத்தனை நாள் லீவு எடுத்துருக்க?” எனக் கேட்டார் பெரியவர்.
“புதன்கிழமை நைட்டு கிளம்பிடுவேன் அத்தை!” அவள் கூற,
“அப்ப சரி... இங்க மூனு நாள் இருந்துட்ட. அப்படியே உன் மாமியார் வீட்டுக்குப் போய் ரெண்டு நாள் தங்கிட்டு அங்கருந்தே கிளம்பு. நீ வந்தது அவங்களுக்குத் தெரியாது. இப்படி சொல்லாம இருக்கது தப்பு வாணி!” என்றவர், அவள் தட்டில் குறைந்த உருளைக்கிழங்கு பொரியலை நிரப்பினார்.
“நான் போகலை அத்த...” அவள் மறுக்க, “அடி வாங்குவ வாணி. அதுதான் உன் வீடு. அங்கதான் நீ காலம் முழுக்க வாழப் போற. இப்படி பட்டும்படாம இருக்க கூடாது. ஒவ்வொரு தடவை உனக்கும் உன் புருஷனுக்கும் சண்டை வரும்போது உன் மாமியார், மாமனார் கூட பேசாம இருப்பியா என்ன? அடுத்தடுத்து உனக்கு நல்லது கெட்டது எல்லாம் அவங்கதான் பார்ப்பாங்க. ஒழுங்கா ரெண்டு நாள் அவங்களோட தங்கீட்டு வா!” பெரியவர் உறுதியாக கூற, இவள் இறுக்கமான முகத்துடன் மறுப்பாகப் பார்த்தாள்.
“நான் உன் அம்மா மாதிரின்னு சொன்னது உண்மை, வெறும் வாய் வார்த்தை இல்லைன்னா உன் மாமியார் வீட்டுக்குப் போ வாணி. இதைத்தான் உன் அம்மா இருந்தாலும் சொல்லுவாங்க. இல்லை எங்களை மதிக்கலைன்னா நீ இங்கேயே இரு!” என அவர் பேசியதில்
, இவளால் மறுக்க முடியாது போயிற்று. வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்த கையோடு மாலையே மாமியார் வீட்டிற்குப் புறப்பட்டாள்.
தொடரும்...
என்றென்றும் அன்புடன் சந்தனா ஆடியோ லிங்க்,
youtu.be
லிங்க்,
- YouTube
Enjoy the videos and music that you love, upload original content and share it all with friends, family and the world on YouTube.