- Messages
- 1,320
- Reaction score
- 3,935
- Points
- 113
ஹாய் டியர்ஸ்... பரிதியையும் மதியையும் படிச்சு படிச்சு இர்ரிடேட் ஆனவங்களுக்காக இது. கலைகளிலே அவள் ஓவியம் - மதுரை மாவட்ட கலெக்டர் செங்குட்டவனுக்கும் அரசு பள்ளி ஆசிரியை சாணக்கியாவிற்குமான காதல் கதை. ஸ்ட்ரிக்ட் ஆபிசர் செங்குட்டுவன் எப்படி சாணக்கியாவோட காதல் கரையுறான்னு ஆடியோவா கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. முழு நாவல் அவ்வளோ அழகா ஒவ்வொரு கேரக்டருக்கும் குரல் மாத்தி மாடுலேஷன் கொடுத்து அழகா பண்ணிருக்காங்க ஆர்.ஜே கவிதா பிரசன்னா. ட்ரைப் பண்ணி பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்
லிங்க்
youtu.be
நேரம் –39
வட்டமாய் தோசையை சுட முயன்றான் பரிதி. கோணலும் முக்கோணமுமாய் வந்தது அது. சில தோசை கருகிப் போக, கடுப்புடன் அதை எடுத்து வைத்துவிட்டு மற்றொரு தோசையை சுட்டான்.
“இளா...” துள்ளலான குரலில் அழைத்துக் கொண்டே இளமதி உள்ளே நுழைந்தாள். அவளது இரண்டு கைகளிலும் நிறைய பைகள் இருந்தன. அவற்றை நீள்விருக்கையில் வைத்துவிட்டு இவனைத் தேடி வந்தாள்.
“என்ன பண்ற மேன்? டின்னர் ப்ரிப்ரேஷனா?” என எட்டிப் பார்த்தவள், “இதென்ன இப்படியிருக்கு தோசை ப்ளாக் கலர்ல? இளாவோட ஸ்பெஷலா?” எனக் கேலியாகக் கேட்டாள்.
அவன் அவளை முறைக்க, சிரிப்பை அடக்கியவள், “சரி... சரி விடு. நான் கே.எப்.சி போய்ட்டுத்தான் வந்தேன். வா... டபுள் சீஸ் பர்கர், சிக்கன் நக்கெட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். சாப்பிடு!” என அவன் கையைப் பிடித்திழுத்தாள்.
“நோ மதி... ஆல்ரெடி எனக்கு ஸ்டமக் அப்செட். சிக்கன், பர்கர்லாம் வேணாம். கருகுன தோசையே போதும்!” என்றவன், தட்டில் உணவை எடுத்துக்கொண்டான்.
“உன் இஷ்டம் போ!” அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள் இவள்.
“இன்னைக்கு பப்க்கு போகலையா என்ன?” எனக் கேட்ட பரிதி தோசையை பிய்த்து வாயிலிட்டான்.
“ச்சு... மேகி சொதப்பிட்டா. அவளுக்கும் அவ ஆளுக்கும் சண்டையாம். என்னைப் போட்டு படுத்திட்டா. இதோட அவளை பப்க்கு கூட்டிட்டு போனா குடிச்சிட்டு சொன்னதையே சொல்லி டார்ச்சர் பண்ணுவா இளா. அதான் ஆளை விடு சாமின்னு அவளை வீட்ல விட்டுட்டு அப்படியே சின்னதா ஷாப்பிங் போய்ட்டு வந்தேன்!” என்றவள், “நீ சாப்பிட்டு முடி. உனக்கும் சேர்த்து ட்ரெஸ் பர்சேஸ் பண்ணிட்டு வந்திருக்கேன்!” என்றாள் ஆர்வமாய்.
“லாஸ்ட் மந்த் தானே ஏழெட்டு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்த மதி. இப்போ மறுபடியும் எதுக்கு?” என அவன் கண்டித்தான்.
“ஹே... அதான் நான் வாங்கிக் கொடுத்த ட்ரெஸை நீ போட்டு பழசாக்கிட்டீயே. இந்த மந்த் போட புதுசா ஒரு நாலு செட் எடுத்தேன் உனக்கு. அவ்ளோதான், ரொம்ப கஞ்சூஸா இருக்காத!” அவள் மூக்கைச் சுருக்கினாள்.
“மாசம் மாசம் புது ட்ரெஸ் போடணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா மதி? எனக்கு விவரம் தெரிஞ்சு எங்க வீட்ல தீபாவளி, பொங்கலைத் தவிர வேற எப்பவும் புது ட்ரெஸ் கிடையாது!” அவன் முகத்தில் அதிருப்தி தெரிந்தது.
“ப்ம்ச்... மூஞ்சியை இப்படி வைக்காத. ஆசையா உனக்குத் தேடி தேடி வாங்கிட்டு வந்தா நீ அதை மதிக்கவே மாட்டுற இளா. எனக்கு செம்ம கடுப்பாகுது. நீதான் என்னை சர்ப்ரைஸ் பண்ண மாட்ற. அட்லீஸ்ட் நானாவது கொஞ்சம் ரொமான்டிக்கா நடக்கலாம்னு பார்த்தா அதுக்கும் ஏதாவது ரீசன் சொல்லி தடுக்குற... போ!” என்றவள் சின்னதாய் கோபம்கொண்டு எழுந்து சென்று நீள்விருக்கையில் அமர்ந்தான்.
இவன் சாப்பிட்டுவிட்டு அவளிடம் சென்றவன், “சரி விடு... வா. நீ எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு காட்டு பார்க்கலாம்!” என போலி ஆர்வத்தைக் குரலில் தேக்கினான். அவள் ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்தாள்.
“இந்த டெனீம் ஜீன்ஸ் வொய்ட் கலர் ஷர்ட்டுக்கு செமையா இருக்கும் இளா. இது ரெண்டும் கப்பிள் ட்ரெஸ். நல்லாருக்குல்ல? நெக்ஸ்ட் வீக்கெண்ட் லிசாவோட ஆனிவர்சரி பார்ட்டிக்கு இதைப் போட்டுட்டுத்தான் போறோம்!” என்றாள் பட்டு ரோஜா நிறத்தில் ஒரு உடையைக் காண்பித்து. இவன் ஒவ்வொன்றாக விலையைப் பார்த்தான். அவள் வாங்கி வந்த உடைகள் அனைத்தும் நம் நாட்டின் பணம் லட்ச ரூபாய்க்கு மேலே இருந்தது. மெதுவாய் அந்த உடையைத் தொட்டுப் பார்த்தவனுக்கு மனத்திற்குள் ஏதோ குத்தியது.
“ஏம்மா... முன்னாடித்தான் பழைய சோறா சாப்பிடுவ சரி. இப்போதான் நான் வேலைக்குப் போய் நல்லாத்தானே சம்பாரிக்கிறேன். நல்லா கறி, மீனுன்னு சாப்பிடக் கூடாதா?” இரண்டு நாட்கள் முன்னே அழைத்த தாயிடம் இவன் அதட்டினான்.
“நல்லா இருக்கு டா நீ சொல்ற கதை. ஒவ்வொரு அரிசிலயும் என் புருஷன் வேர்வையும், என் மகன் வேர்வையும் இருக்கு. அப்படியிருக்கப்போ சோத்தை வேஸ்ட் பண்ண சொல்றீயா? ஒருவேளை கஞ்சிக் குடிச்சா ஒன்னும் ஆகாது டா. அதுவும் இல்லாம பழசை மறக்க கூடாது. மூனு வேளை இந்தக் கஞ்சி கூட இல்லாம நம்ப கஷ்டப்பட்டிருக்கோம்!” என அவர் கூற, இவனால் பதிலுரைக்க முடியவில்லை. அவர் கூறியதும் அனைத்தும் உண்மையே. மூன்று வேளை உணவிற்கு கஷ்டப்பட்ட காலங்கள் ஏராளம்.
“ம்மா... ப்ளீஸ் மா... இந்த தடவை பெர்த் டேக்கு ஹாஃப் சேரிதான் வேணும்!” என கீர்த்தனா அடத்தோடு கேட்க,
“வாயை மூடு டீ. மூவாயிரம் சும்மாவா கிடக்கு? ஒரு மாசத்துக்கு அரிசி மூட்டை வாங்கிடலாம். உன் சோடிக்கார பிள்ளைக வாங்குனா நீயும் வாங்கணும்னு என்ன அவசியம் கிடக்கு? நமக்கேத்த மாதிரித்தான் நம்ப செலவு பண்ணணும்!” என மகளை அதட்டியவர்,
“பாரு டா உன் தங்கச்சியை. காலேஜ் சேர்ந்ததும் பத்தாயிரத்துக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தாரு உங்கப்பா. அதையே ஒரு வருஷம் போட்டுட்டு சுத்தலாம். இவ்வளோ காசு எதுக்குங்கன்னு கேட்டா, என் மவளுக்கு நான் எடுத்துக் கொடுப்பேன்னு சொல்றாரு. சரி, காலேஜ் போற புள்ளை புதுசா நாலு துணி போடட்டும்னு விட்டா, இப்போ கூட படிக்கிற பிள்ளைக மூவாயிரத்துக்கு தாவணி வாங்கப் போறாங்கன்னு இவளும் அடம்பிடிச்சு நிக்கிறா!” என இவனிடமும் மகளைப் பற்றி புகார் வாசித்தார்.
“ஏம்மா... மூவாயிரம் தானே? ஆசைப்படுறா. எடுத்துக் கொடு. நான் காசு தர்றேன்...” இவன் தங்கைக்கு ஆதரவு தெரிவிக்க,
“டேய்... சும்மா இரு நீ. கைக் காட்டுறதையெல்லாம் வாங்கிக் கொடுத்தா படிப்புல கவனமில்லாம போய்டும். அதெல்லாம் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்...” என்றவர், சிறிது தயங்கிவிட்டு,
“ஏன்யா பரிதி... அப்பா கடையை பெருசா டவுன்ல வைக்கலாம்னு சொன்னியே. அதுக்குத்தான் அம்மாகிட்டே கூட சொல்லாம ரகசியமா ரெண்டு மாச சம்பளத்தை சேர்த்து வச்சிட்டுருக்கீயா? எங்களுக்குத் தெரியாம நிலம் எதுவும் வாங்கிப் போட்டிருக்கீயா யா?” என மகன் மீதான வாஞ்சையுடன் கேட்டார் பெரியவர். இவனுக்கு பேசவே முடியவில்லை. என்ன சொல்லுவான்? வாரத்திற்கு நான்கு முறை குடிப்பதற்காக செலவு செய்து சம்பளத்தைக் கரைத்துவிட்டேன் என்றா பதிலுரைக்க முடியும். ஒருமாதிரி குற்றவுணர்வு அப்போதுதான் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தது.
“ம்மா... அதெல்லாம் இல்ல. நான் இங்கிருந்தே எப்படிம்மா அங்க இடம் வாங்க முடியும்? அடுத்த மாசம் கூடக் காசு செர்த்து அனுப்புறேன். நீயும் சேர்த்து வை. நான் வாசுகிட்டே சொல்லி வைக்கிறேன். ஏதாவது நல்ல இடமா இருந்தா பார்க்கலாம்!” என்றான் தன்னை சமாளித்து.
“சரிய்யா... காசு அனுப்பலைன்னு கவலைப்படாத டா. உனக்கும் செலவிருக்கும் அங்க. அதையும் பார்க்கணுமில்ல. அப்பா இருக்கவரை அவர் பொண்டாட்டியை அவர் நல்லா பார்த்துப்பாரு டா. அதே மாதிரி நீயும் உன் பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கணும்!” என்ற அறிவுரையுடன் அவர் பேசி முடித்ததை இப்போது மீட்டிப் பார்த்தவன், மதி வாங்கியிருந்த சட்டையின் விலையைப் பார்த்தான். இந்திய ரூபாயில் முப்பதாயிரம்.
தங்கைக்கு மூவாயிரம் செலவு செய்ய தாய் யோசிக்க, இங்கே இவள் என் சம்பளத்தை வீண்டிக்கிறாளே என்ற ஆதங்கத்தில் அவனால் சிரிக்க கூட முடியவில்லை. மேற்கொண்டு அந்த உடைகளின் விலையை அலசவில்லை அவன். ஒவ்வொன்றின் விலையாகப் பார்த்தால், அவன் நெஞ்சு வெடித்துவிடும்.
“நல்லா இருக்கா இளா? உன் டேஸ்ட்டுக்கு சூட்டாகுற மாதிரி வாங்கிருக்கேனா?” மதி கேட்க,
“நல்லாருக்கு மதி. பட், நான் ஒன்னு சொல்றேன் தப்பா எடுக்காத. சண்டை போடாத. பொறுமையா கேளு. செலவு பண்றது தப்பில்ல. அதுக்காக இப்படி அநாவசிய செலவு தப்பு. என்னோட சேலரில வெறும் ட்வென்ட்டி பர்சன்டேஜ் கூட இந்த டூ மந்த்ஸா என்னால சேவ் பண்ண முடியலை. வீட்டுக்குப் பணம் சரியா அனுப்பலை நான்!” என்றான் அவன்.
“இப்போ நான் என்ன அநாவசிய செலவு பண்ணிட்டேன்?” அவள் கண்கள் இடுங்க கேட்டாள்.
“இதே மாதிரி ப்ளூ ஜீன்ஸ் ஏற்கனவே என்கிட்ட மூனு இருக்கு. இப்போ நாலாவதா ஒன்னு தேவையா?” என அவள் வாங்கி வந்தக் கால்சராயை அவன் சுட்டிக் காண்பித்தான்.
“ப்ம்ச்... உன்கிட்டே இருக்க மூனும் இதுவும் ஒன்னு இல்ல இளா. நேவி ப்ளூ, ஸ்கை ப்ளூ, அண்ட் டூயல் ஷேட்ல ஒரு ப்ளூ வச்சிருக்க. பட், இதைப் பாரு, வெயிட் மிக்ஸ்ட் ப்ளு. இது உன்கிட்டே இல்லைன்னு தேடித் தேடி எடுத்தேன் நான். ஆனால் நீ, குறை கண்டு பிடிக்கிற!” அவனையே திருப்பிக் குற்றம் சுமத்தினாள் இளமதி. அவள் எப்போது தன் தவறை ஏற்றிருக்கிறாள். இதற்கு மேலும் அவளிடம் வாதாட முடியாது என தலையை மட்டும் அசைத்தான் பரிதி.
“சரி... இந்த பிங்க் ட்ரெஸ் எப்படி?” என அவள் தன் மேலே ஒரு உடையை வைத்துக் காண்பிக்க, பரிதி முகத்தைச் சுளித்தான்.
“என்ன ட்ரெஸ் இது மதி. ஓவர் எக்ஸ்போசிங்!” அவன் எரிச்சலாக கூறினான். முன்புற கழுத்து ஏகத்திற்கும் இறங்கியிருக்க, தொடைக்கு மேலே ஏறியிருந்தது உடை. இதற்கு முன்பும் அவள் குட்டி குட்டி உடைகள் அணிந்திருக்கிறாள். அவையெல்லாம் ஆபாசமாக இருக்காது. ஆனால், இந்த ஆடை முகத்தைச் சுளிக்க வைத்தது.
“ப்ம்ச்... கமான் மேன். இதென்ன இந்தியாவா? எட்டு முழம் புடவையை சுத்திக்க. நம்ப வாழ்றது லண்டன்ல. சோ, அதுக்கேத்த மாதிரி நாமதான் ட்ரெண்டியா மாறிக்கணும். ஏன், எத்தனை வெள்ளைக்காரிங்க இதைவிட குட்டி குட்டியா ட்ரெஸ் போட்டு சுத்துறாங்க. நீ வாயைப் பிளந்துட்டு பார்த்ததில்லையா என்ன?” என்றாள் கேலியாக. பரிதி அவளை முறைத்தான்.
புடவை என்றதும் இப்போது வாணி அவன் நினைவிற்கு வந்தாள். கடைசியாய் அவர்கள் மதியின் வீட்டு விசேஷத்திற்கு வாணி உடுத்திய சேலையோடு சின்னதாய் இவனைப் பார்த்து முறுவலித்தாள். ஆனால் அந்த சிரிப்பு அவள் கண்களை எட்டவேயில்லை. என்னவோ பெயரளவில் சிரித்ததைப் போலிருந்தது.
“இளா... உன்கிட்டேதான் மேன் பேசிட்டு இருக்கேன். என்ன ட்ரீம்க்குப் போய்டீயா நீ!” மதி இவன் தோளைத் தொட்டு உலுக்கினாள்.
“ஆங்... நல்லாருக்கு!” இவன் எதற்கெனத் தெரியாமல் தலையை அசைக்க, அவள் அவனை முறைத்துவிட்டு, கலைத்துப் போட்ட உடையை மடிக்க கூட செய்யாமல், அப்படியே அள்ளிச் சென்று, அவளது அறையில் போட்டுவிட்டு வந்தாள்.
“நீ ஏன் மேன் ரொம்ப டல்லாருக்க? ஒரு ரொமான்டிக் கிஸ் பண்ணா உன் டல்னஸ் போய்டுமாம்!” என்றவள் அவன் உதட்டோடு தன் உதட்டைப் பொருத்த வர, பரிதி முகத்தைப் பக்கவாட்டாகத் திருப்பி கன்னத்தில் முத்தத்தைப் பெற்றுக் கொண்டான்.
“ச்சு... என்ன மேன் நீ. என் மூடவே ஸ்பாயில் பண்ற. முன்னாடிலாம் நீயே ஆசையா கிஸ் பண்ணுவ. இப்போ நான் பண்ண வந்தா கூட பேபி கிஸ் மாதிரி கன்னத்துல வாங்கிக்குற? என்னாச்சு உனக்கு? வாட் இஸ் ஈட்டிங் இன் யூ?” சற்றே சலிப்புடன் கேட்டாள் அவள்.
சில நொடிகள் அமைதியாய் இருந்தவன், பின்னர் தொண்டையைச் செருமிவிட்டு, “இதெல்லாம் மேரேஜ்க்கு அப்புறம் பார்த்துக்கலாம் மதி!” என்றான் தயங்கியபடியே.
“வாட் ரப்பிஷ்? ஒரு கிஸ்ஸுக்கு மேரேஜ் வரைக்கும் வெயிட் பண்ணணுமா? பட்டிக்காட்டான் மாதிரி பேசாத. நாலு இங்கிலிஷ் மூவிஸ் பாரு. அவன் அவன் எப்படி பேஷனேட்டா ரொமான்ஸ் பண்றான். உன்னை வச்சிக்கிட்டு?” என அவள் எரிச்சலானாள். பரிதி அவள் கோபத்திற்கு எதிர்வினையாற்றவில்லை.
என்ன கூறுவான் அவன்? முதலில் எல்லாம் மதியை முத்தமிட அவன் ஹார்மோன்கள் தூண்டும். எப்போது முத்தத்தை பகிர்வோம் எனக் காத்திருந்து அவளை முத்தமிட்டிருக்கான். இவ்வளவு அழகான பெண்ணை முதன்முதலில் முத்தமிடப் போகிறோம் என தேர்ந்த முத்தக் காட்சிகளையெல்லாம் ஆவலாய் பார்த்து கற்றறிந்திருக்கிறான். ஆனால் இப்போது மதியாக அருகில் வந்தால் கூட இவனால் அவளிடம் ஒன்ற முடியவில்லை. மனம் அவளிடமிருந்து தள்ளி தள்ளியே நிற்கிறது.
மீறி அவள் நெருங்கினாலும் கூட இசைவாணி கண்முன்னே வந்து நிற்கிறாள். அன்றைக்கு தாலியைக் கழற்றிக் கொடு என இவன் கேட்டபோது கண்களில் தேங்கிய கண்ணீரை கீழே விழுந்து விடாமல் உள்ளிழுத்து ஒரு ஆழ்ந்த பார்வையுடன், “நல்லா இரு!” என்றாளே. அந்த வார்த்தையும் பார்வையும் இவனை நிரம்ப பாதித்தன. முயன்று அவளது முகத்தை விலக்கிவிட்டு மதியோடு நேரத்தை செலவிட எண்ணினாலும் கூட ஏதோ தப்பு செய்வதாய் மனம் பதறிற்று.
வீட்டிற்குள்ளே சோர்வாய் அவன் நுழைகையிலே தேநீரோடு அவனை வரவேற்கும் வாணி வந்து நிற்கிறாள். இவனால் கற்பனை என எண்ண முடியாத வகையில் அவளின் இருப்பு உண்மையாகத் தோன்றிற்று.
அனிச்சையாக காலையில் எழுந்ததும் சுவரில் கடிகாரத்தோடு தொங்கிய கரும்பலகைக்கு கண்கள் சென்றன. இவனிடம் பேசாமல் பிணக்கு ஏற்படும் சமையங்களில் அதில்தான் ஏதாவது எழுதி வைப்பாள். கடைசியாய் அவள் எழுதியதுதான் இன்னும் அழிக்காமல் வைத்திருந்தான்.
வீட்டிற்கு வெளியே அவள் ஆசையாய் வளர்த்த செடி, இப்போது பராமரிப்பு அற்று வாடி வதங்கிப் போயின. இவன் என்றைக்காவது நினைவு வந்தால் தண்ணீர் ஊற்றுவான். மற்றபடி அதைக் கண்டு கொள்ளவில்லை.
கூடத்திலிருந்த நீள்விருக்கையில் சாய்ந்தமர்ந்து ஏதாவது படம் பார்ப்பாள். இல்லையெனில் ஆங்கில புத்தகம் வாசிப்பாள். அவள் அறையைக் காலி செய்தபோது சில பல புத்தகங்களை விட்டுச் சென்றிருந்தாள். இவன் அதையெடுத்து வைத்திருந்தான். உள்ளே இவன் திருப்பி பார்க்க, அவளுக்குப் பிடித்த வரிகளை கோட்டிட்டு குறித்து வைத்திருந்தாள்.
“எனக்கு வாலை மீன் குழம்பு வேணும் வாணி!” என இவன் அடம் செய்ததற்கு, “நான் என்ன உனக்கு வேலைக்காரியா?” என சடைத்துவிட்டுப் போனவள், அந்த மீன் கிடைத்ததும் இவனுக்காக சிந்தாமணியிடம் செய்முறை விளக்கம் கேட்டு சமைத்து வைத்திருந்தாள்.
“ஆமா அத்தை... உங்கப் பையன்தானே? அவர் அப்படித்தான்னு உங்களுக்குத் தெரியாதா?” என தன் முன்னே தன்னையே தாயிடம் புகாரளிக்கும் இசைவாணி சிந்தையை நிறைத்தாள். ஆக மொத்தத்தில் அந்த வீட்டில் எங்குத் திரும்பினாலும் அவள் ஏதாவதொரு வகையில் நினைவிற்கு வந்தாள். அதுவும் கடந்த இரண்டு வாரங்களாகத்தான் அதீதமாக அவள் நினைவுப் போட்டுத் தாக்கிற்று.
அவள் இவனது எண்ணைக் கருப்பியிராமல் சாதாரணமாக பேசியிருந்தால் இதெல்லாம் நினைவிற்கு வந்திருக்காது. அவள் தன்னைத் தவிர்ப்பதால்தான் அவள் நினைவு வருகிறது எனத் தன்னையே தேற்றிக் கொண்டான்.
“ம்ப்ச்... ரொம்ப போராகிட்ட நீ. என்ன காரணம்னு கேட்டா சொல்ல மாட்டுற!” மதி சலிப்புடன் தன் கால்களை அவன் மடிமீது போட்டாள்.
‘நீ முத்தமிட வந்தால் வாணி நினைவிற்கு வருகிறாள்!’ என்று இவன் தப்பித் தவறி கூறிவிட்டால் கூட இளமதி இவன் மண்டையை உடைக்க கூடத் தயங்கமாட்டாள் என்பதால் வார்த்தைகளை தொண்டைக்குள்ளே புதைத்தான்.
“முன்னலாம் நீ சொடுக்கெடுப்பல்ல. அதே மாதிரி இப்பவும் எடுத்துவிடு இளா. சுகமா இருக்கும். அப்படியே தூங்கிடுவேன்!” மதி கண்களை மூடி அப்படியே அந்த நீள்விருக்கையில் படுத்துக் கொண்டாள். இவன் தயக்கத்துடன் அவள் கால்களை நெருங்க, அலைபேசி அவனை தடுத்துவிட்டது.
“வீட்லருந்து கூப்பிட்றாங்க மதி!” என்றவன் எழுந்து செல்ல, “என்னமோ இவன் சின்ன பாப்பா மாதிரி ஆன்ட்டி டெய்லி கால் பண்றாங்க. ஆப்டர் மேரேஜ் வீக்லி ஒன்ஸ் கால் பண்ணுங்க. டோன்ட் டிஸ்டர்ப் அவர் ப்ரைவசின்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடணும்!” என முணுமுணுத்துக் கொண்டாள்.
சிந்தாமணி எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும் அஜித்தான் பேசினான். அவனுக்கு நீட் தேர்வு முடிவு வெளி வந்திருந்தது. நல்ல மதிப்பெண்களுடன் அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்க, அந்த மகிழ்ச்சியைப் பகிரவே தமையனுக்கு அழைத்தான்.
“ரொம்ப சந்தோஷம் டா. நம்ப வீட்லயும் ஒரு டாக்டர் வரப் போறான். ப்யூச்சர்ல எங்ககிட்டேலாம் காசு எதுவும் வாங்கி ட்ரீட்மெண்ட் பார்த்த, போலி டாக்டர்னு பரப்பி விட்டுருவோம் பார்த்துக்க!” என இவன் கூற,
“கவலையே படாதண்ணா. ஒரு ரூபா கூட வாங்காம, நான் டாக்டரானதும் உனக்குத்தான் முத ஊசி. விஷ ஊசியா போட்டுக் கொன்னுடலாம். நீயெல்லாம் நாட்டுக்குத் தேவையில்லாத லக்கேஜ்!” என அவன் கேலி செய்ய, சிந்தாமணி மகனை அங்கே கண்டிப்பது இவனுக்கு கேட்க சிரித்தான். வீட்டிலிருந்த அனைவரிடமும் பேசினான்.
“டேய்... உன் பொண்டாட்டிகிட்டே போனைக் கொடு டா. எப்போ கேட்டாலும் அவ தூங்குறா, குளிக்கிறா, கடைக்குப் போய்ருக்கான்னு ஏதோ ஒரு சாக்கு சொல்லிட்டே இருக்க. உன் தம்பிக்கு சீட்டுக் கிடைச்சதை அவகிட்டே சொல்ல வேணாமா டா. அவதானே அவனுக்கு வெள்ளைக் கோட்டெல்லாம் வாங்கிக் கொடுத்தா...” என பெரியவர் கேட்க, இவன் இப்போதும் சமாளிக்கத்தான் முயன்றான்.
“ஏன்டா... உனக்கும் அவளுக்கும் பிரச்சனையா? ஒரே வீட்ல இருந்துகிட்டு ரெண்டு பேர்ட்டயும் தனித்தனியா ஃபோன் பண்ணி பேச முடியுமா?” என அவர் சத்தமிட,
“எம்மா... புருஷன் பொண்டாட்டின்னா சண்டை வரத்தான் செய்யும். ஏன் அப்பாவும் நீயும் சண்டை போட்டதே இல்லையா?” என இவன் கோபத்தோடு அழைப்பைத் துண்டிக்க, சிந்தாமணி மருமகளுக்கு அழைத்துவிட்டார். அவள் இந்தியா வந்தது யாருக்கும் தெரியாது.
அப்போதுதான் அலுவல மகிழுந்திலிருந்து இறங்கினாள் வாணி. சிந்தாமணி அழைக்கவும், ஏற்றுப் பேசினாள். அவர் மகனுக்கு மருத்துவ சீட்டு கிடைத்ததைப் பகிர்ந்தார். அஜித்தும் அவரிடம் பேசினான். அவள் அவனுக்கு வாழ்த்து கூறி, தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தாள்.
பின்னர் சிந்தாமணி, “ம்மா... வாணி. உன் புருஷன் உனக்கும் அவனுக்கும் சண்டைன்னு சொல்றான். எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும். அவனைப் பத்தியும் தெரியும். எப்படியும் அவன்தான் விளையாட்டுத்தனமா ஏதாவது பண்ணி உன்னை டென்ஷன் பண்ணிருப்பான். நீ எதுவும் மனசுல வச்சுக்காத. அவனை நல்லா பார்த்துக்கோ!” என அவர் கூற, இவள் வெறுமனே ம்ம் கொட்டினாள்.
வாணியால் சட்டென்று இவர்களைத் தவிர்க்க முடியவில்லை. பரிதி இந்தியா வந்ததும் தங்கள் திருமண முறிவைப் பற்றி உரைப்பான். அதுவரை இவர்களிடம் அவள் எப்போதும் போல பேசியாக வேண்டிய கட்டாயமிருந்தது. அதனாலே பட்டும்படாமலும் அவ்வப்போது பேசிக் கொள்வாள்.
அந்த வாரயிறுதி பரிதியும் மதியும் அவர்களது தோழியின் திருமண நாள் விழாவிற்கு சென்று மது அருந்திவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் காலை பரிதிக்கு தலை சுற்றியது. புதிதாய் ஒரு மதுபானத்தை அவன் அதிகமாக குடித்ததன் விளைவே அது.
“இளா... என்னாச்சு... தலை வலிக்குதா? நான் உனக்கு டீ போட்டுத் தரவா?” என மதி அவன் தலையில் கை வைத்திருப்பதைக் கண்டு கேட்க, இவன் பதிலிறுக்காமல் தலையை அசைத்தான்.
அவள் தேநீர் தயாரிக்கச் செல்ல, “மில்க் டீ வேணாம். லெமன் டீ போடு வாணி!” என்றான் சன்ன குரலில்.
பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்கச் சென்ற மதியின் கரங்கள் நொடியில் நின்றுவிட, அந்த திறந்தவெளி சமையலறை மூலம் கையிலிருந்த பாத்திரத்தை சரியாய் பரிதியின் நெற்றிக்கு குறி பார்த்து தூக்கி வீசியிருந்தாள். அது சரியாய் அவன் நெற்றியில் பட்டு கீறி இரத்தம் சொட்டத் தொடங்கியது.
அவள் செயலில் அதிர்ந்து போனவன், “மதீ... அறிவிருக்கா உனக்கு? சென்ஸ் இல்ல? எதுக்கு இப்போ பாத்திரத்தை எறிஞ்ச?” என உச்சபட்ச கோபத்தோடு கேட்டான்.
அவனுக்கு சற்றும் குறையாத சினித்துடன் அவனருகே வந்தவள், “இப்போ என்ன கேட்ட என்கிட்ட நீ?” என்றாள் சிவந்த கண்களுடன்.
“லெமன் டீ வேணும்னு கேட்டேன். அதுக்கு இப்படி பண்ணுவீயா டீ ராட்சசி!” என்றான் வலி தாளாமல்.
“டீ மட்டும் கேட்ட? ஹம்ம்... அதுக்குப் பின்னாடி என்ன சொல்லி கேட்ட?” என அவள் அவனை உறுத்து விழிக்க, பரிதி புரியாமல் பார்த்தான்.
“லெமன் டீ வேணும் வாணி? ஹான்... அவ போய் ரெண்டு மாசமானாலும் உனக்கு அவ கையாலதான் டீ வேணுமோ?” என இவள் ஆங்காரமாய் கேட்க, பரிதி திடுக்கிட்டுப் போனான். அவனையும் அறியாமல் அவள் பெயர் வந்திருந்தது.
“ஏய்... இதுக்கா டீ இப்படி ரத்தம் வர வைப்ப? ஏதோ ஞாபகத்துல அவ பேரை சொல்லிட்டேன். ரெண்டு வருஷமா அவளோட இருந்ததால அவ பேரை மாத்தி சொல்லிட்டேன். அதுக்காக நீ பண்ணது டூ மச் மதி!” பரிதியின் குரலில் கோபம் கொப்பளித்தது.
“ஓஹோ... நீ சொன்னா சரித்தான். ஹம்ம்... மைக்கேல் இருக்கான் இல்ல. ஏழு வருஷமா அவன் என்னை ஒன் சைடா லவ் பண்ணான். நான்தான் இதோ... இந்த இளம்பரிதி மகாராஜாவுக்காக அவனை அக்செப்ட் பண்ணலை. பட், அவனோட ஏழு வருஷம் ப்ரெண்டா இருந்திருக்கேன். சோ, அவன் நினைப்புல உன்னை இனிமே மைக்கேல்னு மறந்து கூப்பிடுவேன் நான். நீ அதைப் பெருசா எடுத்துக்க கூடாது இளா!” என்றவள் அவனை சீற்றத்துடன் பார்த்து அகல, இவன் அவளை வெறுப்போடு பார்த்தான். அவனது ஒருக்கரம் முழுவதும் குருதியில் நனைந்து போயிருந்தது.
“அறிவில்ல உனக்கு? பெரிய ஹீரோன்னு நினைப்பா டா? ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டாம சாகசம் பண்ணி புதையல் வாங்கிட்டு வந்திருக்கான்
!” என இவனைத் திட்டிக்கொண்டே கீழே விழுந்தபோது முதலுதவி செய்த இசைவாணி நினைவு வர, தலையைப் பிடித்தவன், “சே...” என்றான் கோபத்தோடு.
தொடரும்...
லிங்க்
- YouTube
Enjoy the videos and music that you love, upload original content and share it all with friends, family and the world on YouTube.