- Messages
- 1,309
- Reaction score
- 3,887
- Points
- 113
நேரம் – 30 
அதிகாலை வேளையில் நல்ல உறக்கத்திலிருந்தான் பரிதி. கனகனப்பான போர்வையில் சுருண்டிருந்தவனுக்கு கதவு பலமாய் தட்டப்படும் சப்தத்தில் படக்கென விழிப்பு வந்தது.
மூளை நள்ளிரவு நேரம் என்பது போல அவனை மீண்டும் உறங்க உந்த, எழுந்தவன் இந்நேரத்தில் ஏன் கமலா வந்து கதவை தட்டுகிறார் என்ற யோசனையுடன் வாணியைப் பார்க்க, அவள் அசையவேயில்லை. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
“தம்பி... தம்பி!” கமலா குரல் பதற்றத்தில் வர, இவன் அவசரமாய் எழுந்து சற்றே தளர்ந்து போயிருந்த கால்சராயை மேலேற்றிவிட்டு, படக்கென கதவைத் திறந்தான்.
“என்னாச்சுக்கா? ஏன் இவ்வளோ பதட்டமா இருக்கீங்க?” அவரது முகத்திலிருந்த கலக்கத்தில் இவனது கால்கள் தானாக சுந்தரியின் அறைக்கு விரைந்தன.
“தம்பி... அம்மா எழவேயில்லை. ஒருமாதிரி அவங்க உடம்பு ஜில்லுன்னு இருக்கு. எனக்குப் பயமா இருக்குப்பா!” என்றவருக்கு அதற்கு மேலே பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டு, கண்ணில் நீர் தளும்பிற்று. தவறாய் எதுவும் நடந்துவிடக் கூடாது என பயத்தோடு நடந்தார்.
“ஆன்ட்டி...” என சுந்தரியைத் தொட்டவனின் உடல் ஒரு கணம் மொத்தமாய் அதிர்ந்தது. அவரது உடல் அவன் தொடுகையில் சரிந்து விழப் பார்க்க, படக்கெனப் பிடித்து அவரை சரியாய் படுக்க வைத்தான். அவரது உயிரற்ற உடலைக் கண்டு இவனுக்கு அடிவயிற்றிலிருந்து பயம் வந்து தொண்டையை அடைத்தது.
தான் உணர்ந்தது உண்மைதானா என அவரது இதயத்தில் காதை வைத்துக் கேட்டான்.
தன் துடிப்பை மொத்தமாய் நிறுத்தியிருந்தது இதயம். அவனால் அவரில்லை என்பதை ஒரு சதவீதம் கூட ஏற்க முடியவில்லை. இரவு தூங்க செல்லும்போது சிரித்துப் பேசிய பெண்மணியின் திடீரென காலை எழும்போது உலகிலில்லை என்பதை ஜீரணிக்கவே நிமிடங்கள் பல எடுத்தன. புலன்கள் உணர்ந்ததை மூளைக்கு உறைக்க, அவன் கண்கள் இரண்டில் கண்ணீர் தேங்கியது.
“தம்பி...” கமலா அவனைப் பயத்தோடு பார்க்க, இவன் அவரிடம் தலையை இடம் வலமாக அசைக்கவும், கமலா அழ ஆரம்பித்தார்.
“ஐயோ... அம்மா... ஏன் மா? அதுக்குள்ளேயும் என்ன அவசரம்மா உங்களுக்கு?” கமலா துக்கம் தொண்டையை அடைக்க கத்த தொடங்க, வாணி எழுந்து வந்துவிட்டாள்.
“கமலாம்மா... என்னாச்சு? என்ன சத்தம்?” பதற்றத்தோடு கேட்டுக் கொண்டே கொண்டையைத் தூக்கிப் போட்டவள், சுந்தரியின் அறைக்குள்ளே நுழைய, பரிதிக்கு அவளைப் பார்த்து நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. இந்தப் பெண் எப்படி இவரது இழப்பைத் தாங்கப் போகிறாள் என்ற எண்ணம் அவனைப் போட்டு உலுக்கிற்று.
அவர்கள் இருவரது முகத்தையும் பார்த்த வாணிக்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்ன... என்ன?” எனக் கேட்டு பதறி தாயருகே அவள் செல்ல, “வாணி...” என பரிதி வருத்தத்தோடு அவளது கையைப் பிடித்து தடுத்தான்.
“என்ன பண்ற டா? கையை விடு!” அவனை உதறிவிட்டு, சுந்தரியருகே சென்றாள்.
“ம்மா... என்னம்மா? என்ன பண்ணுது? உடம்பு எதுவும் சரியில்லையா?” என அவரது கன்னம், நெற்றி எனத் தொட்டுப் பார்த்தாள். ஜில்லிட்டிருந்த உடல் அவளுக்கு உறைக்கவில்லை போல.
“ம்மா... நல்லாதானே இருக்க? எழுந்திரிமா? ஹாஸ்பிடல் போகலாம்மா?” மீண்டும் அவரைத் தொட்டுப் பேசினாள். அசைவற்று கிடந்த தாயைப் பார்த்து அவளுக்கு அடிவயிற்றில் பயபந்து உருண்டது.
“பரிதி... என்ன பார்த்துட்டே இருக்க... போ... போய் ஆட்டோ இல்ல டேக்சி புடி. அம்மாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகலாம். மூச்சு பேச்சில்லாம கிடக்காங்க!” அவள் பதறி இவனிடம் கத்த,
“வாணி... ஆன்ட்டி... ஆன்ட்டி உயிரோட இல்ல!” என்றான் இவன் இமையை சிமிட்டி கரகரத்த குரலோடு.
“ஏய்... சீ! என்ன பேசுற? செருப்பாலயே அடிப்பேன். அவங்க நல்லாதான் இருக்காங்க!” அவனிடம் சீறியவள்,
“ம்மா... என்னம்மா இவன் லூசு மாதிரி பேசுறான். நீயும் அமைதியா படுத்திருக்க. எழுந்திரும்மா... ம்மா... என்னைப் பயமுறுத்த தானே இப்படி பண்ற? ப்ளீஸ் மா!” இவள் வேகத்தோடு அவரை உலுக்க, பரிதிக்கு அவளைப் பார்த்து தாளாத வேதனையில் கன்னத்தில் சூடான உவர் நீர் இறங்கிற்று.
“வாணி... ப்ளீஸ்...நான் சொல்றதைக் கேளு!” அவளைத் தன்னோடு சேர்த்தணைக்க முயன்றான். அவள் திமிறினாள்.
“விடுடா என்னை... முதல்ல போய் ஆட்டோ கூட்டிட்டு வா. நீ என்ன டாக்டரா? நீயா எல்லாத்தையும் டிசைட் பண்ணுவீயா? ஆப்ரேஷன் முடிஞ்சதும் டாக்டர் என்ன சொன்னாங்க தெரியுமா? இன்னும் பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது. அவங்க ஹெல்த்தியா இருக்காங்கன்னு சொன்னாங்க!” என்றாள் ஆங்காரத்துடன். அவள் கரம் தாயை இறுகப் பற்றியிருந்தது. அவருக்கு ஒன்னுமில்லை எனத் தனக்குத்தானே உருப்போட்டாள்.
இத்தனை நேரம் அமைதியாய் இருந்த கமலா அவளருகே வந்து அணைத்துக் கொண்டு, “அம்மா... நம்மளை விட்டுப் போய்ட்டாங்க வாணிம்மா!” என்றார் தேம்பலுடன்.
“கமலாம்மா... ப்ம்ச்... அழாதீங்க. ரெண்டு பேரும் நான் சொல்றதைக் கேளுங்க. ஹாஸ்பிடல் போகலாம்!” அவள் அறை அதிரும்படி கத்த, பக்கத்து வீட்டிலிருந்து ஆட்கள் வந்துவிட்டனர். உடனே மார்த்தாண்டத்திற்கு செய்தி சென்றுவிட, அவர் கடையை அடைத்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு வந்தார்.
“ம்மா... என்னைப் பாரும்மா!” சுந்தரியின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவளுக்கு இப்போதுதான் அவரது முகம் தொங்கியது மூளைக்கு உறைத்தது போல. உடல் அதிர, அவரில்லை என்பதை உணர்ந்தாள். மூளை அவளுக்கு உணர்த்தப் போராட, இதயம் ஸ்மரணையற்று சமைந்தது.
“பரிதி... அம்மா... அம்மா உடம்பு ஏன் ஜில்லுன்னு இருக்கு?” என அவனைப் பார்த்து கேட்டவளுக்கு நிதானம் மொத்தமாய் தவறிப் போனது. எப்போதும் அரட்டி உருட்டி மிரட்டும் வாணியையே பார்த்திருந்தவனுக்கு, அவளை இப்படி பார்க்க பொறுக்கவேயில்லை.
“ம்மா...எழுந்திரிம்மா... விளையாடாதம்மா” என்றவள் பெருங்குரலெடுத்துக் கத்த, அது பார்ப்போரின் நெஞ்சத்தை அறுத்துப் போட்டது போல. அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் இவன். அழுகையும் தேம்பலுமாய் அவனிடமிருந்து பிரிந்து சுந்தரியை நெஞ்சோடு அணைத்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. இரவில் பார்த்த தாய் காலையில் எழவில்லையா என மனம் இன்னுமே அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
மார்த்தாண்டமும் சிந்தாமணியும் வர, காமராஜ் குடும்பத்திற்கும் தகவல் சொல்லப்பட்டது. ஒவ்வொரு உறவினருக்காய் செய்தி பகிரப்பட்டது. உயிரற்ற சுந்தரியின் உடல் நடுகூடத்தில் வைக்கப்பட, அனைவரும் வந்து அழுது புலம்பி தங்களது ஆற்றாமையைப் பகிர்ந்தனர்.
ஆறு மாத வயிற்றோடு அற்புதா ஏங்கி அழ, ஒருசிலர் அவளை ஆற்றுப்படுத்தினர். சரவணனால் இன்னுமே நம்ப முடியவில்லை. தன் பாசத்திற்குரிய அத்தைப் பிரிந்து விட்டார் என்பதைக் கேட்டு அவனுக்கு அழுகை பொங்கியது. சுந்தரியின் கையைப் பிடித்து அழுதான். வாணி அவரின் வலதுகையை இறுக்கிப் பிடித்தபடி அவரருகே அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் நின்று போயிருந்தது. கூட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். சென்னையிலிருந்த உறவினர்கள் எல்லாம் மாலையில் வந்துவிட்டனர்.
நீண்ட நேரம் உடலை வீட்டில் வைக்க வேண்டாமென ஆறுமணிக்கு முன்னே தகனம் செய்யலாம் என மார்த்தாண்டமும் காமராஜூம் அடுத்தடுத்து என்னவெனப் பார்த்தார். கனத்த மனதோடு பரிதிதான் தந்தையிடம் கேட்டு அனைத்தையும் செய்தான். ஒற்றைத் தமக்கையை பறிகொடுத்த அதிர்ச்சி இன்னுமே காமராஜைவிட்டு விலகவில்லை. அவருக்கும் சற்றே நிதானம் இல்லை. மார்த்தாண்டம் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். சுந்தரியைத் தூக்கச் சென்ற போது வாணி விடவில்லை.
“அம்மாவை எங்கத் தூக்கிட்டுப் போறீங்க? அம்மா நல்லா இருக்காங்க!” இன்னுமே அவள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் அழுது புலம்ப, சரவணன் அவளைப் பிரித்து தன்னோடு அணைத்தான். சுந்தரியின் உடல் முறையாய் தகனம் செய்யப்பட்டது. மருமகன் என்ற வகையில் பரிதிதான் அவருக்கு கொள்ளி வைத்தான். வாணியால் தன் தாய் நெருப்பில் எரிந்து சாம்பலாவதைப் பார்க்க முடியாது. முதலில் பரிதி தயங்கினான். தங்களுக்கு இடையேயான ஒப்பந்த திருமணம் அபஸ்வரமாய் அப்போது நினைவு வந்தது. ஆனால் மார்த்தாண்டம் மகனிடம் அழுத்திக் கூற, ஒப்புக் கொண்டான்.
காலையிலிருந்து கேட்ட ஓலங்களின் செறிவு குறைந்து இப்போது புலம்பல்ளும் பேச்சு சத்தத்முமாய், வீட்டில் ஆட்கள் நடமாடினர்.
“பரிதி... உன் பொண்டாட்டியைக் கூப்பிடுடா... வா, வந்து நீயும் சாப்பிடு. காலைலருந்து யாருமே எதுவும் சாப்பிடலை!” சிந்தாமணி மகனை அழைக்க, அவன் வேண்டாமென மறுத்துவிட்டான்.
“டேய்... ஒழுங்கா வாணியைக் கூட்டிட்டு வா. சாப்பிடாம அவ மயங்கிடுவா போல!” என அவனை அதட்டியவர், சரவணன், அற்புதா என அனைவரும் வற்புறுத்தி உண்ண வைத்தார். வாணி சுந்தரியின் அறையில் அவர் உடுத்தியிருந்த சேலையோடு சுருண்டுப் படுத்திருந்தாள். மெல்லிய விசும்பல் அவளிடமிருந்து வர, இவன் பெருமூச்சுடன் அவளருகே அமர்ந்தான்.
“வாணி... காலைலருந்து எதுவுமே சாப்பிடாம இருக்க. எழுந்திரி... ஏதாவது சாப்பிடு!” அவன் குரலுக்கு அவளிடம் எதிர்வினையே இல்லை. இரண்டு மூன்று முறை அவளைத் தொட்டு உசுப்பியும் கூட, அவள் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை. இவனுக்கு அவள் நிலையை எண்ணி மனம் கனத்தது. இரண்டு நாட்கள் முன்னே உரிமைப் போராட்டம் நிகழ்த்தியவளின் முகம் நினைவிற்கு வர, பெருமூச்சோடு அகன்றான்.
சிந்தாமணி என்னவென்பதாய் கேட்க, அவள் மறுத்ததைக் கூறியவன், “ம்மா... விடு. அவளை டிஸ்டர்ப் பண்ணாத. அவளால ஷாக்லருந்து வெளிய வர முடியலை!” என்றவன், தான் உண்ணாமல் பெரியவர் விட மாட்டார் என்பதால் பெயருக்கு உண்டான். மறுநாள் வந்திருந்த தூரத்து உறவினர்கள் விடை பெற, மூன்றாம் நாள் இறுதி கிரியை முடிந்ததும் மொத்த ஆட்களும் அகன்றிருந்தனர்.
இசைவாணி மூன்று நாட்களும் சாப்பிடாமல் யாரோடும் பேசாமல் அறைக்குள்ளே பைத்தியம் பிடித்ததைப் போல முடங்கிக் கிடந்தாள். பரிதி எவ்வளோ முயன்றும் அவளை உண்ண வைக்க முடியவில்லை. அவ்வப்போது அற்புதாவும் சரவணனும் அவளுக்கு தேநீர், பால் என நீராகாரம் கொடுத்தனர். அதையும் அவள் சரியாய் குடிக்கவில்லை.
“இந்தப் பொண்ணு இப்படியே சாப்பிடாம எத்தனை நாள் இருக்கப் போறாளோ? சாப்பிடுன்னு எத்தனை தடவைக் கூப்பிட்டாலும் காதிலே வாங்காம படுத்துக் கிடக்கா. அண்ணி இருந்திருந்தா இந்நேரம் இவளை பட்டினியா இருக்க விட்டுருப்பாங்களா? எமனோட போராடி ஆப்ரேஷன் எல்லாம் செஞ்சு உயிரைப் பிடிச்சு வச்சிருந்தா இந்த மகராசி வாணி. ஆனால் கடைசியில எமன்தான் ஜெய்ச்சுட்டாரு!” அம்சவேணி கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டு புலம்ப, சிந்தாமணி எழுந்து மருமகளின் அறைக்குச் சென்றார்.
“வாணி... எழுந்திரி. மூனு நாளா பட்டினியா கிடக்க. எழுந்திரிச்சு உக்காரு முதல்ல!” என்ற அதட்டலோடு அவளை எழுப்பி அமர வைத்தார். அவள் முகம் முழுவதும் கண்ணீர் தடயங்கள். மூன்று நாளிலே உருக்குலைந்து போயிருந்தாள். கன்னம் ஒட்டிப் போய் கிடந்தது.
அவளது கலைந்த தலையை சரிசெய்துவிட்டவர், “அழுதுட்டே இருந்தா அம்மா வந்துடுவாங்களா வாணி? எல்லாரும் ஒருநாள் போகத்தானே போறோம். என்ன உன் அம்மா முந்திக்கிட்டாங்க. அதுக்காக இப்படியே இருப்பீயா நீ?” அவர் அதட்டலிட, முடியில் முகம் புதைத்து தேம்பினாள் இவள்.
“எனக்கு அம்மா வேணும் அத்தை!” என்றாள் தொண்டையை இறுக்கிப் பிடித்த அழுகையுடன். சிந்தாமணி அவளை வயிற்றோடு அணைத்துக் கொண்டார். அவரைக் கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுதாள். அம்சா தட்டில் உணவோடு வந்தார்.
“அவளைக் கூட்டிட்டு வரேன்னு போய்ட்டு எவ்ளோ நேரம் அண்ணி?” எனக் கேட்ட அம்சா உணவைப் பிசைந்து வாணி வாயருகே எடுத்துச் செல்ல, அவள் வாயைத் திறக்கவே இல்லை.
“வாயைத் திற வாணி... சின்ன புள்ளைல நீ என்கிட்டே அடி வாங்குனது. டென்ஷன் பண்ணாம சாப்பிடுற இப்போ!” அவர் குரலை உயர்த்தி அதட்ட, தேம்பிக் கொண்டே சாப்பிட்டாள் அவள். பரிதி கதவோரமாய் நின்று அவளையே பார்த்திருந்தான். அவள் உண்டு முடித்ததும் பெரியவர்கள் அகல, இவன் அவளருகே சென்று அமர்ந்தான். இப்போது அவளது பார்வை விட்டத்தையே வெறித்திருந்தது.
“வாணி!” அவள் கை மீது தன் கரத்தை வைத்தவன், “மூனு நாளா ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடக்குற. வெளிய வந்து எல்லோரோடவும் உக்காரு!” என்றான் சின்ன குரலில்.
திரும்பி அவனை வெற்றுப் பார்வை பார்த்தவள், “நான் இந்த மேரேஜை பண்ணிருக்க கூடாது பரிதி!” என்றாள் கண்ணில் நீர் வழிய.
“அம்மாவை பொய் சொல்லி ஏமாத்திட்டேன். உன்னைக் கல்யாணம் பண்ணாம இருந்தா அட்லீஸ்ட் இந்த ஒரு வருஷம் அவங்களோட இருந்திருப்பேன். அந்தக் குடுப்பினை கூட எனக்கு கிடைக்காம போச்சு பரிதி!” என்றாள் சிறு விம்மலுடன். இவனுக்கு என்ன சொல்லி அவளைத் தேற்றுவது என்று கூடத் தெரியவில்லை. அன்றைக்கும் அவளது அழுகையோடு நாள் கடந்தது. நான்காம் நாள் காமராஜ் குடும்பத்துடன் விடை பெற்றார்.
அற்புதாவும் சரவணனும் அவளுடன் இருக்க எண்ணினாலும் கர்ப்பவதியாய் இருப்பவளை அவளது மாமியார் இங்கே விட முடியாது என்று விட்டார். சரவணனுக்கும் இறுதி பருவத் தேர்வுகள் நடக்க, அவனாலும் உடன் தங்க முடியாத சூழல்.
“அவளைப் பார்த்துக்கோ பரிதி. சாப்பிட வை. அழுதுட்டே இருப்பா!” அற்புதா பரிதியிடம் கூற, பெரியவர்கள் இருவரும் கூட இவனிடம் அவளது பொறுப்பை ஒப்படைத்துச் சென்றனர். பரிதிக்கு இவளை நினைத்துக் கவலையாய் இருந்தது.
மார்த்தாண்டம் மூன்று நாட்கள் முடிந்ததும் கடையைத் திறந்து தன் தொழிலை கவனிக்க, சிந்தாமணியும் இயல்பு வாழ்க்கைக்குள் நுழைந்தார். பரிதி, வாணி, கமலா என மூவர் மட்டும்தான் இந்த வீட்டிலிருந்தனர்.
“வாணி... போ... போய் குளிச்சு ப்ரெஷ்ஷாகு. மூனு நாளா குளிக்காம இருக்க நீ? ப்ரஷ் பண்ணலையா? இன்னும் சாப்பிடாம தட்டை கையால அளந்துட்டு இருக்க!” என பரிதிதான் அவளை அதட்டி ஒவ்வொன்றையும் செய்ய வைத்தான். இசைவாணிக்கு தாய் சென்ற துக்கத்தை கரைக்கும் வழி தெரியவில்லை. கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை எனினும் தனியே அமர்ந்து அழுதாள்.
முகப்பறையில் சுந்தரியின் புகைப்படத்தோடு விளக்கும் எரிய, அங்கேயே அமைதியாய் அமர்ந்திருந்தாள். கேட்ட கேள்விக்கு பதில், சாப்பிட சொல்லி அத்தட்டினால், கால் வயிறு உணவு என நான்கைந்து நாட்களிலே சில பல கிலோ எடை குறைந்து போனாள். எட்டாம் நாள் காரியத்திற்காக மீண்டும் உறவினர்கள் வீட்டில் கூடினர்.
காரியம் முடிந்து சமைத்து சாப்பிட்டு எல்லோரும் விடை பெற்றனர். கமலாவின் பெண் பிள்ளைகள் இருவரும் கூட காரியத்திற்கு வந்தனர். சுந்தரி இறந்தப் போதும் அவர்கள் வந்திருந்தனர். ஆனால் வாணிக்கு அப்போது யார் வந்தார்கள் போனார்கள் என்ற பிரஞ்ஞை இல்லை. இப்போது வெறுமனே அனைவரையும் வேடிக்கைப் பார்த்தாள்.
கமலாவின் பிள்ளைகள் விடைபெறுவதற்காக இவளிடம் சொல்ல வர, வாணி அவர்களிடம் முயன்று சிரித்து இரண்டொரு வார்த்தைகள் பேசினாள். பின்னர் என்னவோ யோசித்தவள், கமலாவை தனியே அழைத்துச் சென்றாள்.
“கமலாம்மா... நீங்களும் உங்க திங்க்ஸை பேக் பண்ணுங்க. அக்காங்களோட போங்க!” என்றாள் நிலை பேழையில் என்னவோ துழாவியவாறே. அவர் அவளிடம் மறுப்பாகத் தலையை அசைத்தார்.
“இல்ல வாணிம்மா... நான் நீங்க கிளம்புனதும் போறேன்!” அவர் மறுக்க, அவரது கையைப் பிடித்து ஒரு பணக்கட்டை வைத்தாள். அவர் இவளைக் கண்டனமாகப் பார்த்தார்.
“வாணிமா... அதான் மாசம் மாசம் சம்பளம் கொடுத்துட்டீயே டா. இதெதுக்கு எனக்கு... வேணாம்!” அவர் கண்டிப்புடன் கூற, இவள் அவரை கலங்கும் கண்ணோடு இறுக அணைத்தாள்.
“தேங்க்ஸ் கமலாம்மா... என்னைவிட என் அம்மாவை நீங்க நல்லா பார்த்துக்கிட்டீங்க!” என்றாள் குரலை முயன்று சரிசெய்து, அழுகையைக் காண்பிக்காமல் மறைத்தாள்.
“அப்போ... அம்மாவைப் பார்த்துக்கிட்டதுக்காக இந்தப் பணமா?” அவர் கோபத்தோடு கேட்க, இவள் இல்லையென தலையை அசைத்தாள்.
“இது என் அம்மாவுக்கு பொண்ணு கொடுக்குறது. உங்களை இப்படி வெறுங்கையோட அனுப்பவேன்னு நான் நினைக்கலை. இப்போ போய் எதையும் வாங்க முடியாது. அதான், மறுக்காம வாங்கிக்கோங்க. அக்காங்க, அப்புறம் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுங்க!” என்றாள்.
அவளது கன்னத்தை துடைத்துவிட்டவர், “தைரியமா இருடா கண்ணம்மா. அம்மா போனதையே நினைச்சு அழாத. முடிஞ்சா என்னையும் லண்டன் கூட்டிட்டுப் போ. அங்க உன்னை நான் பார்த்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு. அப்படியே உன் தயவுல லண்டனையும் சுத்திப் பார்த்த மாதிரியும் ஆச்சு!” என்றார் அவள் கன்னத்தை வாஞ்சையுடன் தடவி. இவள் கண்ணீரோடு புன்னகைத்து தலையை அசைத்தாள். பின்னர் அவரது பொருட்களை எடுத்து வைக்க உதவினாள்.
பரிதி அவர்கள் சென்று நீண்ட நேரமாகியும் காணாமல் பார்க்க வந்தான். கமலா துணிகளை அடுக்குவதைப் பார்த்து, “அக்கா?” என்றான் கேள்வியாக.
அவர் பதிலுரைக்கும் முன்னே, “நான்தான் அவங்களை கிளம்ப சொன்னேன் பரிதி நீயும் நானும் அங்க போய்ட்டா, கமலாம்மா தனியா ஊருக்குப் போகணும். இப்போன்னா, அக்காங்களோட போய்டுவாங்க. அதான்!” வாணி விளக்கம் தர, அவன் தலையசைத்துக் கேட்டுக் கொண்டான். கமலா அனைவரிடமும் முறையாய் விடை பெற்றார்.
பரிதியின் கையைப் பிடித்தவர், “என் பொண்ணைப் பத்திரமா பார்த்துக்கோங்க தம்பி. அவ அம்மாப்பாதான் உலகம். அதுக்கப்பறம் நீங்கதானே அவளுக்கு எல்லாம். அவளை அனுசரிச்சு நடந்துக்கோங்கப்பா!” என்றார் கவலையுடன். பரிதி வாணியைப் பார்க்க, அவள் கமலாவை சின்ன சிரிப்புடன் பார்த்தாள். அவள் கண்களில் மெல்லியதாக நீர் திரையிட்டிருந்தது.
“பரிதி... நீ போய் எல்லாரையும் பஸ்ஸேத்தி விட்டுட்டு வா!” வாணி கூற, கமலா மறுத்தார். ஆனால் பரிதி அவர்கள் அனைவரையும் பத்திரமா அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு, சாப்பிட உணவும் வாங்கிக் கொடுத்தான்.
“அப்படியே எங்க வாணிம்மா குணம் தம்பி உங்களுக்கு. உங்க ரெண்டு பேரோட குணத்துக்கு இன்னும் நூறு வருஷம் சந்தோஷமா சேர்ந்து வாழுவீங்க!” என அவர் வாழ்த்த, இவன் என்ன பதிலுரைப்பது எனத் தெரியாமல் வெறுமனே சிரித்து வைத்தான்.
***
“வாணி... வா, நீயும் வந்து ரெண்டு தோசை சாப்பிடு!” அம்சா அழைத்தும் அவள் அசையாதிருக்க, அற்புதா உணவு தட்டோடு அவளருகே வந்தாள்.
“அத்தை சாப்பிட்டாதான், மருமகன் சாப்பிடுவானாம் வாணி. இந்தா... ரெண்டு வாய் வாங்கு!” அற்புதா அவளுக்கு ஊட்டிவிட, இவள் சிறு முறுவலுடன் சாப்பிட்டாள். இரண்டு நாட்கள் இருந்துவிட்டு காமராஜ் குடும்பமும் விடை பெற, பரிதி இவளைத் தனியே தங்க அனுமதிக்காமல் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
மேலும் ஓரிரு நாட்கள் கழிந்துவிட, வாணியிடம் சின்ன சின்னதாய் முன்னேற்றங்கள் தென்பட்டாலும் இன்னுமும் அவள் தெளியவில்லை. பரிதிதான் அவளை நேரத்திற்கு உண்ண வைத்தான். சிந்தாமணியும் சில நேரம் அதட்டி உருட்டி அவளை சாப்பிட வைத்தார். அவளை சும்மா உட்கார விடாமல் வேலை கொடுத்து அவள் சிந்தனையை திசை திருப்பினார். அது கொஞ்சம் வேலை செய்தது.
பரிதிக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை. அவன் சென்று வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயம். ஏற்கனவே அவன் ஒருவாரம் விடுப்பை நீட்டித்திருக்க, இனிமேல் கேட்கவும் முடியாது. அதனால் வேலை பாதிக்கப்படும் என கிளம்பும் முடிவில் பயணச்சீட்டை பதிவு செய்தான். இசைவாணியை இப்படியே விட்டுச் செல்வதில் அவனுக்கு நிரம்ப வருத்தம்.
அமைதியாய் அறையில் அமர்ந்திருந்தாள் அவள். பரிதி அவளருகே உட்கார்ந்தான். “வாணி... மூனு நாள்ல என்னோட லீவ் முடியுது. நான் அங்க போயோ ஆக வேண்டிய கட்டாயம்!” என்றான் சங்கடத்துடன்.
அவனைப் பார்த்து முறுவலித்தவள், “இந்த வேலை உனக்கு ரொம்ப முக்கியம் பரிதி. எனக்காகப் பார்த்து உன் வேலைக்கு பிராப்ளம் வந்துடப் போகுது. நீ கிளம்பு... நான் என் லீவ் முடிஞ்சதும் வரேன்!” என்றாள் அவனைப் புரிந்தவளாக.
அவள் கைகளை எடுத்து அழுத்திப் பிடித்தவன், “தனியா இருந்துடுவீயா வாணி?” என்றான் கவலையுடன். அவள் சிரித்தாள். ஆனால் கண்களில் கண்ணீர் நிரம்பிற்று.
“இனிமே நான் தனியா இருந்து பழகிக்கணும் பரிதி!” என்றாள் கசப்பான முறுவலுடன். பரிதி அவளை அணைத்துக் கொண்டான்.
“ரொம்ப யோசிக்காத. நாங்கலாம் உனக்காக இருக்கோம்!” என அவள் முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். சில நொடிகள் தயங்கியவள், அவன் சட்டையை இறுக்கிப் பிடித்து அவன் கழுத்தில் முகம் புதைத்தாள். அவள் விழிகளில் பொங்கிய உவர் நீரில் பரிதியின் தேகம் நனைந்தது. தானும் அவளை நன்றாக அணைத்தான்.
“முதநாள் ஆன்ட்டி என்கிட்ட பேசும்போது என் பொண்ணை அழ விடாம பார்த்துக்கோங்கன்னு சொன்னாங்க வாணி. நீ அழுதா உன் அப்பாவுக்கு பிடிக்காதாமே. அதனால் ஆன்ட்டி உன்னை அடிக்கவே மாட்டேன்னு சொன்னாங்க!” என்றான் மென்குரலில். அவனிடமிருந்து பிரியாதவளின் தலை ஆமோதிப்பாக அசைந்தது.
“உனக்கே தெரியுது, நீ அழுதா அவங்களுக்கு பிடிக்காதுன்னு. அப்படியும் அழுதுட்டே இருப்பியா நீ?” சின்ன குரலில் கடிந்தான். சில நிமிடங்களில் தன்னைத் தேற்றிக் கொண்டாள் அவள்.
பரிதி ஊருக்குச் செல்ல தேவையானவற்றை தன் பையில் நிரப்பினான். பெரிதாய் அவனுக்கு எதுவும் தேவையாயிருக்கவில்லை. அவனுடைய உடைகளை வாணிதான் மடித்து அடுக்கினாள். அவன் வேண்டாமென மறுத்தும் அவள் கேட்கவில்லை. சென்ற முறை செல்லும்போது சுந்தரி கையால் செய்த உணவு பண்டங்களை எடுத்துச் சென்றதை நினைத்ததும் அவனுக்கு மனம் கனத்தது. வாணிக்கும் நினைவு வர, கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
மறுநாள் நள்ளிரவு அவன் சென்னையில் விமானம் ஏற வேண்டும். முதல் நாள் காலை வாணி, “பரிதி... உனக்கு ஏதாவது வேலை இருக்கா? கொஞ்சம் வெளிய போகலாம் வர்றீயா?” என அழைத்தாள். அவனுக்கும் பெரிதாய் வேலையில்லை. எங்கே எனக் கேட்காமல் சென்றான். அவள் அழைத்துச் சென்றது வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகம். இவன் புரியாது அவளுடன் நடந்தான்.
உள்ளே சென்ற வாணி தன்னை அறிமுகம் செய்து, பரிதியை தன் கணவன் எனக் குறிப்பிட்டவள், “நான் ஆல்ரெடி உங்கிட்ட சொன்னேனே சார். ம்யூட்வல் டிவோர்ஸ் கேஸ் ஃபைல் பண்ண சொல்லி!” என்றாள்.
அவள் வேறு ஏதோ விஷயமாக வந்திருப்பாள் என நினைத்த பரிதி, விவாகரத்து என்றதும் ஒரு நொடி அதிர்ந்தான். பின்னர் இந்த நேரத்தில் இது தேவையா என்பது போல சங்கடமும் கோபமுமாய் அவளைப் பார்த்து, “வாணி...” என சின்ன குரலில் அவளை அதட்டினான்.
“பரிதி... ஒரு ஃபைவ் மினிட்ஸ் அமைதியா இரு!” என்றவள், வழக்கறிஞரிடம் திரும்பினாள்.
“சார், கேஸ் ஃபைல் பண்ணிடுங்க. பட் ஃபஸ்ர்ட் ஹியரிங் கூட எங்களால வர முடியாது. சோ, எப்படி நீங்க இதை ப்ராசஸ் பண்ணுவீங்க?” எனக் கேட்டாள்.
“மேடம், இப்போ அப்ராட்ல இருக்க நிறைய பேர் ஒரு ஹியரிங் கூட வராம வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமா டிவோர்ஸ் வாங்கிக்குறாங்க. அதெல்லாம் ப்ராப்ளம் இல்ல மேடம். கொஞ்சம் பணம் செலவாகும். மத்தபடி நீங்க வர வேணாம். ஹியரிங் அப்போ கரெக்டா கான்ப்ரன்ஸ் அட்டென் பண்ணி ஜட்ஜ்கிட்டே ம்யூட்சுவலா பிரியிறோம்னு சொன்னா போதும்...” என்றார் அவர்.
“ஓகே சார், இந்த கவுன்சிலிங் எல்லாம் போக சொல்வாங்களா?” அவள் அடுத்த சந்தேகத்தைக் கேட்டாள்.
“ஆமா மேடம்... பட், அதையும் நீங்க ஆன்லைன்லயே பண்ணிக்கலாம். ஒரு மூனு நாலு ஹியரிங்லயே டிவோர்ஸ் கன்பார்மாகிடும். ஏன்னா இது ம்யூட்சுவல் டிவோர்ஸ் மேடம்.
பைனலா டிவோர்ஸ் கிடைச்சதும் நீங்க இந்தியா வரும்போது சைன் போட்டு பேப்பர்ஸ் வாங்கிக்கலாம்!” என அவர் அனைத்தையும் விளக்கி விவாகரத்து பத்திரத்தை நீட்டினார்.
இவள் இசைவாணி எனக் கையெழுத்திட்டுவிட்டு, “பரிதி... வா, நீயும் சைன் போடு!” என்றாள் அவனிடம். அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.
“நம்ப அப்புறம் பேசிக்கலாம். டைமில்ல பரிதி. இப்போ ஃபைல் பண்ணாதான் ஒன் இயர்ல டிவோர்ஸ் கிடைக்கும். சைன் போடு!” அழுத்தி அவள் கூற, இவன் தயங்கியபடியே கையெழுத்திட்டான்.
மேலும் வழக்கறிஞரிடம் இரண்டு நிமிடங்கள் பேசியவள், அவருக்கு உண்டான பணத்தைக் கொடுத்தாள். பின்னர் இருவரும் வெளியே வர, “இது இப்போ ரொம்ப முக்கியமா வாணி? ஏன் இப்படி பண்ற நீ?” என்றான் அதட்டலுடன்.
“முக்கியம்தான் பரிதி. இந்த வேஷம் போட்டதே அம்மாவுக்காகத்தானே. அவங்களே இல்லைன்றப்போ எதுக்கு இந்த வேஷத்தோட நான் சுத்தணும். அதுவும் இல்லாம இதுல உன் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு. டிவோர்ஸ் கிடைச்சாதான் நீ உன் வாழ்க்கையைப் பார்க்க முடியும்?” எனக் கேட்டவளை என்ன சொல்வது எனத் தெரியாமல் முறைத்துப் பார்த்தான். அவளிடம் சின்ன சிரிப்பு படர்ந்தது.
“இதுவே அம்மாவுக்கு எதுவும் ஆகாம இருந்து நான் இப்படி பண்ணிருந்தா இந்நேரம் எவ்வளோ சந்தோஷப்பட்டிரு
ப்பேல்ல?” எனக் கேலியாக கேட்டாள். அவன் மீண்டும் முறைத்தான்.
“முறைக்காத பரிதி. வீட்டுக்கு கிளம்பு. அத்தை நம்பளை காணோம்னு தேடுவாங்க!” என அவனோடு வீட்டிற்கு புறப்பட்டாள்.
தொடரும்…