• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,314
Reaction score
3,908
Points
113
நேரம் – 28 💜

“டேய்... யாருடா அந்த நிலோஃபர். என் ரெஸ்யூமை என்னைக் கேட்காம ஏன் இப்படி மாத்துனாங்க. அதுவும் இல்லாம நான் செய்யாத ரெண்டு மூனு சர்டிஃபிகேட் கோர்ஸை வேற ரெஸ்யூம்ல ஆட் பண்ணி வச்சிருக்காங்க!” பரிதி விக்னேஷிடம் கத்திக் கொண்டிருந்தான்.

“வாயை மூடு பரிதி.‌. உனக்கு வேலை வேணுமா வேணாமா? உன் ரெஸ்யூம் இருக்க லட்சணத்துக்கு உன்னைலாம் இண்டர்வியூக்கு கூப்பிட்றதே பெருசு. இதுல செலக்டாகலைன்னு புலம்ப வேற செய்ற? முதல்ல ப்ரொபஷனல் ரெஸ்யூம் எப்படி இருக்கும்னு யார்கிட்டேயாவது கேட்டு தெரிஞ்சுக்கோ. என் ப்ரெண்ட் வேலை மெனக்கெட்டு உக்கார்ந்து உனக்கு லண்டன் ஸ்டாண்டர்க்கு ரெஸ்யூம் ரெடி பண்ணி தந்துருக்காங்க. ஒழுங்கா அந்த ரெண்டு கோர்ஸை ஆன்லைன்ல முடி. டூ வீக்ஸ்தான் ஆகும். அதை கம்ப்ளீட் பண்ண...” விக்னேஷ் குரலை உயர்த்தி அவனை அடக்கினான்.

“சரி... சரிடா. ஆனால் உன் ஃப்ரெண்ட்ஸ் நிலோபர்க்கு என் மேல என்னடா அக்கறை? எதுக்கு ஹெல்ப் பண்றாங்க. பார்ட் டைமும் வாங்கிக் கொடுத்தாங்க. இப்போ ரெபர் பண்றேன்னு வேற சொல்லிருக்காங்க!” இவன் நிலோபர் யாரென தெரிந்து கொள்ளும் நோக்கோடு கேட்டான்.

‘எல்லாம் அந்தப் பொண்ணு இசைவாணி தலையெழுத்து. வேணாம்னு சொன்னாலும் விழுந்து விழுந்து உனக்கு ஹெல்ப் பண்ணுது. உன்கிட்ட அந்தப் பொண்ணு இன்னும் ரெண்டு தடவை செமத்தியா வாங்குனாதான் அமைதியா இருக்கும் போல!’ மனதில் இசைவாணியைத் திட்டிய விக்னேஷ்,

“டேய்... அவங்களுக்கு உன்னைத் தெரியாது. என்னோட ஆஃபிஸ் கொலிக்கோட ப்ரெண்ட். நான் ரெஃபர் பண்ண முடியுமான்னு கேட்டேன். ஷீ செட் ஓகே. சோ, சீக்கிரம் நீ கோர்ஸை கம்ப்ளீட் பண்ணி சர்டிஃபிகேட் வாங்கி வை...” என்றவன், வாணிக்கும் ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டான். அவள் இவனுக்கு நன்றி நவில்ந்திருந்தாள்.

அன்றைய சண்டைக்குப் பின்னே இசைவாணி இவன் எப்படி போனாலும் பரவாயில்லை என்று பரிதியை பெரிதாய் கண்டு கொள்ளாமல் தன் வேலையை மட்டும் பார்த்திருந்தாள். அந்த மாதமும் அவன் சென்று வந்த நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் தாயிடம் புலம்பித் தள்ளிவிட்டான். சிந்தாமணி மூலமாக சுந்தரிக்கும் விஷயம் போனது.

“ஏன் வாணி... தம்பிக்கும் நீ வேலை பார்க்குற ஆஃபிஸ்லயே ஏதாவது வேலை வாங்கித் தரலாம் இல்ல. பாவம் வேலை கிடைக்காம கஷ்டப்படுறாரு...” என அவர் இவனுக்கு ஆதரவாகப் பேசினார்.

“ம்மா... அப்படிலாம் நம்ப ஊர் மாதிரி வேலை கேட்க முடியாதும்மா. ஓபனிங் இருந்தாதான் ரெஃபர் பண்ண முடியும். மத்தபடி ஐ காண்ட் டூ எனிதிங்க்...” என அவள் அசட்டையாக கூறிவிட்டாள்.

அடுத்ததாய் சென்று வந்த நேர்முகத் தேர்விலும் அவனுக்கு வேலை கிடைக்காது போனதில் சோர்ந்து போயிருந்தான் பரிதி. அவன் இப்போதெல்லாம் சரியாக சாப்பிடவில்லை என்று மீதமான உணவு உரக்கச் சொல்லிற்று. சரியாக தூங்காமல் பார்க்கவே பரிதாபமாக தெரிந்தான்.

என்னதான் அவன் மீது கோபம் இருந்தப் போதும் அவனை இப்படி பார்க்க இசைவாணிக்கு சற்றே பாவமாகப் போய்விட்டது. அவன் குணம் கொத்துவதாக இருந்தால், நான் ஏன் என்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும். யாரோ ஒரு மூன்றாவது மனிதனுக்கு உதவி செய்கிறேன் என்ற எண்ணத்தில் இவள்தான் அவனுடைய சுயவிவரக் குறிப்பை லண்டன் தரத்திற்கு மாற்றி, அவள் பரிந்துரை செய்த வேலைக்கு என்னென்ன மேற்தகுதிகள் இருந்தால் எளிதில் வேலை கிடைக்கும் என ஆராய்ந்து அந்த படிப்பை இணைய தளத்தில் படிக்க அறிவுறுத்தினாள்.

அவள் கூறியது போலவே பரிதி இரண்டு வாரத்தில் அந்தப் படிப்பை முடித்து இ-சான்றிதழ் வாங்கிவிட, அந்த மாதக் கடைசியில் அவனுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பிதழ் வந்திருந்தது. என்னென்ன கேள்விகள் கேட்கலாம், இவன் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பது முதல் வாணி விக்னேஷ் மூலமாக அவனுக்குத் தெரியப்படுத்தியிருந்தாள்.

“ப்ரொபஷனலா ட்ரெஸ் போட்டுட்டு போக சொல்லுங்க விக்னேஷ். இம்மெச்சூர்டா பிஹேவ் பண்ணக் கூடாது. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ஆன்சர் பண்ணணும். ஆன்சர் தெரியலைன்னா கூட போல்டா பேச சொல்லுங்க. பயப்படவே கூடாது!” என தேர்வுக்கு முதல்நாள் வரை அவனுக்காக அனைத்தையும் பார்த்து செய்தாள்‌.

“வாழைப் பழத்தை உரிச்சு அவன் வாய்ல வச்சுட்டீங்க. இதுக்கும் மேல அவன் சாப்பிடலைன்னா, அவன் மக்குன்னு அர்த்தம். அதுக்காக நீங்க வொர்ரீ பண்ணிக்காதீங்க...” என்ற விக்னேஷ்,

“எனக்குப் பரிதியைப் பார்த்து பொறாமையா இருக்கு வாணி. எனக்கொரு ப்ரெண்ட் இப்படி இல்லைன்னு. பட் பாருங்களேன், வேலையே உங்களாலதான் அவனுக்கு கிடைக்க போகுது. வேலை கிடைச்சதும் என்னமோ அவனே வாங்குன மாதிரி உங்கிட்ட சீன் போடுவான். அதைவேற என்கிட்டே அவன் ஷேர் பண்ணும்போது தான் கடுப்பாகுது...” என அவன் பேச, இவள் சிரித்துவிட்டாள்.

“ப்ம்ச்...‌ என்னங்க நீங்க சிரிக்குறீங்க?” அவன் கேட்க,

“இல்ல... நீங்க என்னதான் எனக்கு நல்லவ பட்டம் கொடுத்தாலும் உங்க ப்ரெண்ட் அப்செப்ட் பண்ண மாட்டான். அவனைப் பொறுத்தவரை நான் செல்பிஷாவே இருந்துட்டுப் போறேன். சிலரை எல்லாம் திருத்த முடியாது‌. நம்பதான் ஒதுங்கிக்கணும். எனக்காக அவன்கிட்டே சண்டை போட்டு உங்க ப்ரெண்ட்ஷிப்பை நீங்க கெடுத்துக்காதீங்க. அண்ட் தேங்க் யூ சோ மச். நான் சொன்னனேன்னு இவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கீங்க!” மனதார நன்றி கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

மறுநாள் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்து பரிதி, பரபரப்புடன் நேர்முகத் தேர்விற்கு கிளம்பினான். இதற்கு முன்னே எத்தனையோ தேர்வுகள் அவன் சென்று வந்தாலும், இன்றைக்கு என்னவோ மனத்தில் ஒரு நம்பிக்கையும் உறுதியும் தானாகவே முளைத்திருந்தது.‌ அதற்கு காரணம், அவனது புறத்தோற்றம், முதல்நாள் இரவு விக்னேஷ் அனுப்பிய கேள்வி பதில்களினால் தன்னை முழுதாய் தயார்படுத்தியதால், அவனுக்கே அவன் மீது ஒரு நம்பிக்கை பிறந்தது.

இசைவாணி வீட்டின் கூடத்தில் வைத்திருந்த முருகன், சிவன் புகைப்படத்தின் முன்பு நின்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டவன், விபூதியை அள்ளி நெற்றி நிறையப் பட்டையைப் போட்டுக் கொண்டான். அவனைக் கண்டும் காணாமலும் பார்த்திருந்த இசைவாணி தன் நெற்றியிலே மானசீகமாக அறைந்து கொண்டாள். அவன் வெளியேறியதும் விக்னேஷிற்கு அழைத்துவிட்டாள்.

“என்ன வாணி.‌.. உங்க ஆளு கிளம்பிட்டானா?” அவன் கேலியாகக் கேட்டான். பரிதிக்காக இவனிடம் பேசி பேசியே வாணிக்கும் விக்னேஷிற்கும் இடையே நல்ல நட்பு உருவாகியிருந்தது.

“ப்ம்ச்... காரியத்தையே சொதப்பிடுவான் இந்த பரிதி. டிப் டாப்பா ப்ரொபஷனலா கிளம்பிட்டு நெத்தில விபூயை வச்சு பட்டை அடிச்சுட்டுப் போறான். நீங்க கால் பண்ணி அதை அழிக்க சொல்லுங்க. நம்ப ஊர் மாதிரி இங்க கிடையாது!” என்றாள் சலிப்புடன்.

“சே... இவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்குறதுக்கு முன்னாடி நம்ப உசுரை வாங்கிடுவான். நீங்க காலை கட் பண்ணுங்க...” என்ற விக்னேஷ் நண்பனுக்கு அழைத்துவிட்டான்.

“கிளம்பிட்டேன்டா. மெட்ரோலதான் இருக்கேன்!” பரிதி பதிலளிக்க,

“சரி... இந்த வேலை கிடைக்கணும்னு சாமி கும்பிட்டீயா?” எனக் கேட்டான் அவன்.

“ஆமா டா... இப்போதான் முருகர்ட்ட ஒரு அப்ளிகேஷனைப் போட்டிருக்கேன். பக்தி மயமா இருக்கட்டும்னு நெத்தில பட்டை வேற அடிச்சிருக்கேன்...” என்றான் பக்தி பரவசத்துடன்.

“கிழிஞ்சது... முதல்ல தண்ணியை வச்சு நெத்திலருக்க பட்டையை அழிடா. இப்படிலாம் இண்டர்வியூவுக்கு போக கூடாது. பீ ப்ரொபஷனல்!” என பத்து நிமிடங்களுக்கு அறிவுரை கூறி அழைப்பைத் துண்டித்தான் விக்னேஷ்.

இசைவாணி அலுவலகத்திலிருந்தாலும் மனம் என்னவோ பரிதியிடம்தான் சென்றது. அவள் சிரத்தையெடுத்து அனைத்தையும் செய்திருக்க, அவன் எங்கேயும் சொதப்பிவிடக் கூடாது என்று மனத்தில் வேண்டிக் கொண்டாள்.

சரியாய் அவள் வேலைவிட்டு வந்தப் போதுதான் அவனும் வந்திருப்பான் போல. உடையைக் களைந்து தளர்வாக கூடத்திலிருந்த பஞ்சு நாற்காலியில் அமர்ந்து காலை ஆட்டியபடியே சிந்தாமணியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“ஆமாமா... கண்டிப்பா நாளைக்கு செலக்டாகிடுவேன். ப்ம்ச்... எல்லாம் உன் பையனோட திறமைதான். நான் பேசுன இங்கிலீஷ்ல ஹெச்.ஆரே ஷாக்காகிட்டாருன்னா பார்த்துக்கோ. அவர் கேட்ட கேள்விக்கு டக்கு டக்குன்னு பதில் சொன்னேன்!” என அவன் பேசுவதை கேலியாகப் பார்த்தவாறே அவனைக் கடந்து சென்றாள் இசைவாணி. பரிதி அவளை முறைத்தான்.

“ரொம்ப சந்தோஷம்யா பரிதி. எப்படியும் என் பையனுக்கு இருக்க அறிவுக்கு வேலை கிடைச்சிடும்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் கொஞ்சம் லேட்டாகிடுச்சு. சரி... சரி, வாணிக்கிட்டே ஃபோனைக் கொடு டா...” என்றார் அவர்.

“வாணி... அம்மா பேசணுமாம். வா இங்க!” இவன் குரலை உயர்த்த, “டூ மினிட்ஸ் வரேன் இரு...” என்றவள் இரண்டு நிமிடத்தில் அலைபேசியை வாங்கி மாமியாரிடம் பேசினாள்.

“ம்மா... வாணி... அவன் ரொம்ப உறுதியா வேலை கிடைச்சிடும்னு சொல்றான். நாளைக்கு ஏதோ மூணாவது ரவுண்டாம். கிடைச்சா ரொம்ப சந்தோஷம்த்தா. ஆனால் ஒருவேளை வேலை கிடைக்காம போச்சுன்னா, அவன் தனியா உக்கார்ந்து அழுதுடுவான்மா. நீதான் அவனைப் பார்த்துக்கணும்...” என அவர் மேலும் பேசுமுன் வெடுக்கென வாணியிடமிருந்து அலைபேசியை பிடிங்கினான் பரிதி.

“ம்மா... என்ன நீ?” என அவரிடம் இவன் கத்த,

“ப்ம்ச்... பரிதி. வெற்றி தோல்வி எது வந்தாலும் சரிசமமா பார்க்குற மனநிலை உன்கிட்டே இல்ல டா. சின்ன வயசுலயே கிரிக்கெட்ல தோத்துட்டேன்னு அழுவ. பன்னிரெண்டாவது படிக்கும்போது கூட அழுத. காலேஜ் போன் பிறகும் கூட யாருக்கும் தெரியாம கண்ணை கசக்குன. அதான் டா அவகிட்டே சொன்னேன். ஆமா, அவ யாருடா..‌‌. உன் பொண்டாட்டி தானே? உன்னைப் பத்தி அவளுக்குத் தெரிய வேணாமா?” என அவர் கேட்டதும்,

“ப்ம்ச்... அவ தெரிஞ்சுகிட்ட வரப் போதும். நீ ஃபோனை வை முதல்ல...” என்றவன் இசைவாணியைத் தீயாய் முறைத்தான். அவளுக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகப் போயிற்று.

“மறக்காம நான் ஆஃபிஸ் விட்டு வரும்போது ஒரு டஜன் கர்சீப் வாங்கிட்டு வரேன். யூஸானாலும் ஆகும்!” என அவள் அகல,

“ரொம்ப ஆடாத வாணி. கண்டிப்பா இந்த வேலை எனக்கு கிடைக்கும். நீயெல்லாம் சிரிக்கிற அளவுக்கு என் நிலைமை மாறாது...” என சூளுரைத்தவன், மூன்றாவது சுற்றுக்கென சிரத்தையுடன் மெனக்கெட்டு தன்னைத் தயார் செய்து நல்லபடியாக முடித்துவிட்டான்.

நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட நேர்முகத் தேர்வில் பரிந்துரையின் பேரில் பரிதி முன்னிறுத்தப்பட, மூன்றாவது சுற்றின் முடியில் அவனது வேலை வாய் வழியாக உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முறையாக மின்னஞ்சல் அனுப்புவோம் என அவர்கள் கூற, இவன் உற்சாகத்துடன் வீடு வந்தான்.

இசைவாணி பசிக்கிறதென்று மாலை நேரச் சிற்றுண்டி செய்யலாம் என சமையலறைக்குள் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தாள். வீடு நுழைந்தவன், அவளுக்கு கேட்க வேண்டும் என்ற நோக்கோடு கத்திப் பேசினான்.

“ஆமா டா... வேலை எனக்கு கிடைச்ச மாதிரிதான். இன்னும் ஒன் வீக்ல மெயில் வரும்னு சொல்லிட்டாங்க. நெக்ஸ்ட் மந்த் ஜாய்ன் பண்ணிடுவேன் டா!” என விக்னேஷிடம் குரலை உயர்த்தினான்.

“டேய்... நீ பேசுறது நல்லாதான்டா கேட்குது. ஏன் கத்திப் பேசுற. இங்க என் காது டாமாரமாகப் போகுது. வாய்ஸை ரெடியூஸ் பண்ணு...” அவன் இரைந்தான்.

“அதைவிடு... டேய் மச்சான், நிலோஃபர்க்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லு டா. அவங்க சொன்ன கோர்ஸ் படிச்சதாலதான் என்னை செகண்ட் ரவுண்டுக்கே கூப்பிட்டுருக்காங்க. நான் கூட இருநூறு பவுண்டை வேஸ்ட் பண்றமோன்னு நினைச்சேன். பட், ஷீ இஸ் கரெக்ட் டா. மறக்காக என் தேங்க்ஸை சொல்லிடு...” என்றான் உற்சாகத்துடன்.

“நீ சொன்ன தேங்க்ஸ் நிலோபருக்கே கேட்டிருக்கும். ஆமா வாணி என்ன பண்றாங்க?” எனக் கேட்டான் இவன்.

“அவ என்ன பண்ணா உனக்கென்ன டா? என்னைப் பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கோ. தேவையில்லாதவங்களைப் பத்திப் பேசி இர்ரிடேட் பண்ணாத!” இவன் மேலும் பேசும் முன்னே அங்கே அழைப்பைத் துண்டித்திருந்தான் விக்னேஷ்.

“கிறுக்குப் பையன்... பேசும் போதே காலைக் கட் பண்ணிட்டான்...” என்ற பரிதி சற்று நேரம் கழித்து இரு வீட்டாட்களும் அழைத்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான்.

“ம்மா‌‌... உன் மவனுக்கு சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? மூன்றரை லட்சம்மா!” அவன் சிந்தாமணியிடம் பெருமை பீற்ற, இவள் அவனைப் பொருட்டாக மதிக்கவில்லை. ஆனாலும் அவன் விடாது, தங்கை, தம்பியிடம் தன் சுய புராணத்தைப் பாடிவிட்டே ஓய்ந்தான். அதன் பின்பே இவளின் காதிற்கு ஓய்வு கிட்டின.

அடுத்த பத்தாவது நாளில் பரிதிக்கு அவனது வேலையை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் வந்துவிட, அவன் அடைந்த மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவுகோலே தேவைப்படவில்லை. மறுமாதத்திலே வேலைக்கு சேர்ந்துவிட்டான்.

முதல் மூன்று மாதங்கள் பயிற்சி காலமும் அதைத் தொடர்ந்து நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள் என ஒப்பந்தத்தில் இருந்தது. இரண்டு வருடங்கள் கட்டாயமாக அங்கே வேலை பார்க்க வேண்டும் எனவும், அடுத்து அவன் விருப்பப்பட்டால் தொடரலாம் என்ற ஒப்பந்தத்தை ஒன்றுக்கு இருமுறை நான்றாக வாசித்து கையெழுத்திட்டவன், லண்டன் மகாணத்தின் பிரபல தகவல் தொழில்நுட்ப துறையில் ஊழியராக சேர்ந்திருந்தான்.

முதல் நாள் பணிக்குச் சென்றவன் விக்னேஷிற்கு அழைத்து அந்த நிலோபரின் தொடர்பு எண்ணைக் கேட்டான். எப்படியாவது அந்தப் பெண்ணிற்கு நன்றி சொல்ல வேண்டுமென இவனுக்கு அவா.

ஆனால் விக்னேஷ், “டேய்... எனக்கே அந்தப் பொண்ணைத் தெரியாது டா. நான்தான் சொன்னேன்ல. என் கூட வேலை பார்க்குற பொண்ணோட ப்ரெண்டோட ரூம் மேட் டா. நான் இவகிட்டே தேங்க்ஸ் சொல்லி கன்வே பண்ண சொல்றேன்...” என அவன் முடித்துவிட்டான். பரிதியும் சரி நேரில் சந்திக்க நேர்ந்தால் நன்றியுரைக்கலாம் என நிலோபரை தற்காலிகமாக மறந்து போயிருந்தான்.

புது வேலை, புது இடம் என உற்சாகத்துடன் அவன் வளைய வந்தாலும், பயிற்சி காலத்தை நன்முறையில் முடிக்க வேண்டும் என்ற பயமும் அடி நெஞ்சில் இருந்து தொலைத்தது.

முதல் மாத பயிற்சி‌ முடிவில் அவனுக்கான சம்பளம் வந்ததும் தாய், தந்தை என அனைவரிடமும் பகிர்ந்து மகிழ்ந்தான். சுந்தரி கூட அவனைப் பற்றி‌ புகழ்ந்து பேசி மகளிடம் சிலாகித்தார். முதல் மாத சம்பளத்தில் தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடைகள் எடுத்து அனுப்பினான். சுந்தரிக்கும் கமலாவிற்கும் கூட புடவை எடுத்துக் கொடுத்தான். ஆனால் இசைவாணிக்கு அவன் ஒன்றையும் வாங்கித் தரவில்லை. வேண்டுமென்றே அவன் செய்கிறான் எனத் தெரிந்ததும் அவள் பெரிதாய் அலட்டிக்கவில்லை.

‘இத்தனை நாள் இவன்தான் எனக்கு வாங்கிக் கொடுத்தானா?’ என எண்ணி அவனை ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை அவள். வேலை, வீடு என அவளுக்கும் நாட்கள் சென்றது.

“இளா... ஃபர்ஸ்ட் மந்த் சேலரி வாங்கிருக்க. சோ, உன்னோட ட்ரீட்தான் இன்னைக்கு. பப் போறோம்...” என இளமதி அவனை பப்பிற்கு அழைத்துச் சென்றாள். உடன் அவளது ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள் சேர்ந்து கொள்ள ஒன்றாய் நடனமாடி உண்டு, மது அருந்தி என நேரம் சென்று கொண்டேயிருந்தது.

வாணி சமைத்து உண்டு முடித்தவள் இன்னும் பரிதி வரவில்லையே என வாயிலையே பார்த்திருந்தாள். அவனுக்கு நான்கைந்து முறை அழைப்பு விடுத்தும் அவன் ஏற்கவேயில்லை.

மணி பத்தானதும் இவளுக்குப் பயம் பரவிற்று. வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தனிமனித தாக்குதல்கள் பற்றி இப்போதெல்லாம் நிறைய இடங்களில் கேட்க நேர்ந்ததால் அவளுக்கு கற்பனை எங்கோ சென்றது. யாரிடம் உதவி கேட்பது என யோசித்து, விக்னேஷ் நினைவிற்கு வரவும் அவனுக்கு அழைத்து விட்டாள்.

“என்னாச்சு வாணி... இந்த டைம் கால் பண்ணிருக்கீங்க? இஸ் எவ்ரிதிங்க் ஓகே?” அவன் கேட்க, இவள் பரிதி இன்னும் வரவில்லை என்றாள் கலக்கத்துடன்.

“ப்ம்ச்... ஃபர்ஸ்ட் மந்த் கேலரி வாங்கிட்டான் இல்ல. சோ... அந்தப் பொண்ணு... ஹம்ம் மதியோட வெளிய சுத்தப் போய்ருப்பான். நீங்க போய் படுங்க. வந்துடுவான் அவன்!” விக்னேஷ் இலகுவாக கூற, அவளால் அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை.

“ஓகே விக்னேஷ்... நான் பார்த்துக்கிறேன்...” என்றாள் சின்ன குரலில்.

பெருமூச்சுவிட்ட விக்னேஷ், “சரி... இருங்க. நான் கிளம்பி வர்றேன்...” என பத்து நிமிடங்களில் வந்துவிட்டான். இருவரும் அருகேயுள்ள சில இடங்களுக்கு சென்று அவனைத் தேடி கிடைக்காமல் மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

“காலைல வரைப் பார்க்கலாம் வாணி. அவன் குடிச்சிட்டு அந்தப் பொண்ணோட கூட ஸ்டே பண்ண போயிருப்பான். இல்ல கொலிக்ஸ் ரூம்ல தங்கிருப்பான். நீங்க டென்ஷனாகாதீங்க!” விக்னேஷ் இவளை சமாதானம் செய்ய, வெளியே மகிழுந்து சப்தம் கேட்டது.

இருவரும் சென்று பார்க்க, இரண்டு வெள்ளையர்கள் பரிதியைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அவன் குடித்திருப்பதை உணர்ந்ததும் இசைவாணியின் முகம் சிவந்தது. எதுவும் பேசாமல் விருட்டென உள்ளே சென்றாள். விக்னேஷ் அவனை அழைத்து வந்து அறையில் படுக்க வைத்தான்.

“சாரி விக்னேஷ்... தேவையில்லாம உங்களை அலைய வச்சுட்டேன். ஐ’யம் ரியலி சாரி!” சின்ன குரலில் வாணி மன்னிப்பைக் கோர, அவன், “இட்ஸ் ஓகே வாணி... நான் வரேன்!” என அவன் அகன்றான்.

இவளுக்கு கோபம், அதிருப்தி என எல்லாம் நெஞ்சு முட்டுமளவு உயர்ந்தது. ஆனால் அதைக் காண்பித்தாலும் பரிதி கேட்கும் நிலையில் இல்லையெனப்
பேசாமல் படுத்துவிட்டாள். மறுநாள் காலை எழுந்து வந்த பரிதிக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது.

“வாணி ப்ளீஸ்... லெமன் ஜூஸ் தர்றீயா? எனக்கு தலை சுத்துது!” என்றான் கண்ணை சிமிட்டி தலையைக் கைகளில் தாங்கி. அவனை அழுத்தமாகப் பார்த்தவள், எலும்பிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்துக் கொடுக்க, அதைக் குடித்ததும்தான் அவன் சமநிலைக்கு வந்தான்.

“பரிதி... அதான் உனக்கு நல்ல ஜாப் கிடைச்சிடுச்சே. இதுக்கும் மேலயும் நீ இங்கே தங்க அவசியம் இல்ல. உனக்கேத்த அக்கமடேஷனா பார்த்து ஷிப்டாகிக்கோ!” என்றாள் கோபத்தை அடக்கி பொறுமையாய்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், “ஒரு நாள்... ஒரே நாள் குடிச்சதுக்கு வீட்டைவிட்டுப் போன்னு சொல்றீயா வாணி? இதெல்லாம் அநியாயம். நானென்ன டெய்லியா ட்ரிங்க் பண்றேன். சோஷியல் ட்ரிங்கர்மா நான். அதுவும் இல்லாம நான் குடிச்சிட்டு ஏதாவது சேட்டை பண்ணேனா? அமைதியா வந்து படுத்துட்டேன்தானே? சோ, நீ ஓவர் ரியாக்ட் பண்ணாத!” என்றான் இயல்பான குரலில். ஒன்றுமே இல்லாத விஷயத்தை இந்தப் பெண் ஏன் பெரிதாக்குகிறாள் என்ற எண்ணம் அவனுக்கு.

“நீ மந்த்லி ஒன்ஸ் குடி... இல்ல வீக்லி குடி. ஏன் டெய்லி கூட ட்ரிங்க் பண்ணு. அது உன்னோட பெர்சனல். அதைக் கேள்வி கேட்க எனக்கு எந்த உரிமையும் இல்ல. பட், நான் இருக்க வீட்ல நீ குடிச்சிட்டு வர்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை. அக்ரீமெண்ட்ல சைன் போடும்போது என்ன சொன்னேன் நான்?” அழுத்தமானக் குரலில் கேட்டாள் அவள்.

“ஆமா... சைன் போடும்போது குடிக்க கூடாதுன்னு சொன்ன. மீறி ட்ரிங்க் பண்ணா வீட்டுக்கு வரக்கூடாதுன்னு ரூல்ஸ். பட், அதுக்காக நான் ரோட்டுலயா படுக்க முடியும். ஏன் நீ இன்னும் பழைய பஞ்சாங்கமா இருக்க வாணி. டூகேக்கு வா... அங்க உன்னை மாதிரி எத்தனைப் பொண்ணுங்க சோஷியலா ட்ரிங் பண்றாங்க. நான் உன்னை அவங்களை மாதிரி குடிக்க சொல்லலை. அதுக்காக இப்படி ஓவர் ஸ்ட்ரிக்டா இருக்காத. லீவ் இட், இனிமே நான் ட்ரிங்க் பண்ணிட்டு வர மாட்டேன்!” என்றான் சலிப்புடன். அவன் பார்வை நீ இன்னும் நவீன யுகத்திற்கு பழகவில்லை என ஏளனமாய் அவளை மொய்த்தது.

அவனைக் கேலியாகப் பார்த்தவள், “நான் பழைய பஞ்சாங்கமாவே இருந்துட்டுப் போறேன். நீ சொன்ன சொல்லை காப்பாத்து. ட்ரிங்க் பண்ண போறேன்னா, எனக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டு வேற எங்கேயாவது ஸ்டே பண்ணிக்கோ. நான் உனக்காக வெயிட் பண்ண மாட்டேன்...” என அகன்றவளுக்கு இவனைத் திருத்தும் எண்ணமெல்லாம் இல்ல. மீறி ஏதாவது பேசினால் இதோ இப்போது போல தன்னைப் பழைய பஞ்சாங்கம் என கேலி செய்வான். அது அவளுக்குத் தேவையில்லாத வேலையென ஒதுங்கிக் கொண்டாள். விக்னேஷ் ஒருமுறை பரிதிக்கு அழைத்து மனது ஆறும்வரை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துவிட, இவன் அதை வலது கையால் எதிர்கொண்டு தட்டிவிட்டான்.

பரிதி அந்த மாதத்திற்கான செலவு எவ்வளவு எனக் கேட்டு அதில் பாதியை வாணியிடம் கொடுத்திருந்தான். அறை வாடகையும் அவனே செலுத்தியிருக்க, அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அதற்கு அடுத்து இரண்டு முறை அவன் இளமதியின் வற்புறுத்தலின் பேரில் குடிக்கப் சென்றான். வாணி கூறியதை நினைவு வைத்து அவளுக்கு செய்தி ஒன்றை தட்டிவிட்டு, நண்பன் அறையில் தங்கினான். இப்படியே அவனுக்கு பயிற்சி காலம் முடிந்து, நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டான்.

இசைவாணி லண்டன் வந்து ஒரு வருடமாகிவிட்டதால் அவளுக்கு ஒருமாத காலம் சம்பளத்தோடு கூடிய விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவள் இந்தியா வருகிறேன் என மாமியாரிடம் கூற, அவர் மகனையும் அழைத்துக்கொண்டு வரக் கேட்டார்.

“அத்தை... அவருக்கு லீவ் கிடைக்குமான்னு தெரியலையே. நான் கேட்டுட்டு சொல்றேன்...” என்றாள் இவள்.

பரிதிக்கும் இந்தியா சென்று வீட்டாட்களைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் பிறந்தது. இப்போதுதான் நிரந்தரமாகப் பணியமர்த்தப்பட்டிருப்பதால் விடுப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவனிடம் இல்லை. ஆனால் அது வருடத்தின் இறுதி டிசம்பர் மாதம் என்பதால் கிறிஸ்துமஸ் விடுப்பு பத்து பதினைந்து நாட்கள் கொடுத்திருக்க, இவன் அத்தோடு மேலும் ஒரு வாரம் விடுமுறை வாங்கிவிட்டான்.

அடுத்த வாரத்திலே இருவரும் ஒன்றாக இந்தியா செல்வதற்காக வாணி பயணச்சீட்டு பதிவு செய்துவிட்டாள். பின்னர் அந்த ஒரு வாரமும் வீட்டிலிருப்பவர்களுக்கு என்ன வாங்குவது என யோசித்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பையை நிறைத்தவள், பரிதியோடு இந்தியா புறப்பட்டாள். அவன் எதுவுமே வாங்கவில்லை. காசை மிச்சப்படுத்திவிட்டான்.

‘எப்படியும் இவ வாங்கிக் கொடுத்தா, நம்ப கொடுத்த மாதிரித்தான். எல்லாரும் அப்படித்தானே
நினைப்பாங்க!’ என தோளைக் குலுக்கியவன், இளமதியை பிரியப் போகிறோம் என இரண்டு நாட்கள் அவளுக்காக செலவழித்துவிட்டு விமானத்தில் ஏறிவிட்டான்.

தொடரும்...

ஐ வாண்ட் மோர் எமோஷன் மக்களே! இன்னும் பரிதியைத் திட்டுங்க. அவ்ளோ ஈஸியா இவனை வாணி மன்னிக்க மாட்டா. ஆக்சுவலி பரிதி இப்போ ட்ரைலர்தான் காட்டி இருக்கான். மெயின் பிக்சர் ஆன் தி வே 😆😉


 
Active member
Messages
251
Reaction score
202
Points
43
Ohhhhh
Trailer eh ivan indha aatam naa
No never
Paridhi kana main picture vani kitta irundhu vadiyum mudhalum ah varanum avan vangi kattikanum 🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Well-known member
Messages
601
Reaction score
411
Points
63
ட்ரெய்லர் லேயே இந்த ஆட்டமா?
மெயின் பிக்சர்ல ஒரேயடியா ப்ளாப் ஆயிடப் போகுது
 
Well-known member
Messages
525
Reaction score
380
Points
63
Trailer ku yae ivan ah thita varthai theda vendiyathu ah iruku ithu la main picture yae ithuku appuram than ah appuram kollai case la than ulla poganum polayae
 
Top