- Messages
- 1,304
- Reaction score
- 3,868
- Points
- 113
நேரம் – 27 
துடைப்பானின் நுனியை ஒருமுறை நன்றாக பிழிந்த பரிதியின் கை சிவந்து போனது. இசைவாணி கூடத்திலிருந்த பஞ்சு நாற்காலியில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலை பார்த்தவாறே அவனையும் கவனித்தாள். அவளை முறைத்துக் கொண்டே இவன் வீட்டை சுத்தம் செய்து துடைத்து முடித்தான். பரிதி இவளுடன் தங்க வந்து இரண்டு வாரங்கள் முடிந்து கடகடவென ஓடியிருந்தது.
சென்ற வாரம்தான் இவளின் சிபாரிசின் பேரில் பக்கத்து வீட்டு முதியவரின் நண்பர் ஒருவருடைய பல்பொருள் அங்காடியில் மேற்பார்வையாளராக பகுதி நேர வேலையைப் பெற்றிருந்தான் பரிதி. ஆனால் என்ன வாணிதான் அந்த வேலையை வாங்கிக் கொடுத்தாள் என அவனுக்கே தெரியாது. விக்னேஷ் மூலமாகத்தான் பரிதியை அவள் அணுகினாள்.
“நீங்கதானே வேலை வாங்கித் தரீங்க. இடையில கிரெடிட்ஸ் மட்டும் எனக்கு எதுக்கு? டேரக்டா செய்ங்களே!” அவன் மறுதலித்தான்.
“இல்ல ப்ரதர், நீங்க வாங்கிக் கொடுத்த வேலைன்னா கொஞ்சம் பொறுப்பா நடப்பான். நான்னா எப்பவும் அவனுக்கு டேக் இட் ஃபார் கிராண்டட்தான். அதுவும் இல்லாம ஒருவேளை என் மேல இருக்க கோபத்துல வேலையை வேணாம்னு சொல்லவும் வாய்ப்பிருக்கு. சோ நீங்களே வாங்கிக் கொடுத்ததா இருக்கட்டும்...” இவள் அவனுக்குப் புரிய வைத்தாள்.
“என்னவோ போங்க... அவன் உங்களை ஒட்டுண்ணியா உறிஞ்சுறான். அது உங்களுக்குப் புரிஞ்சும் இப்படி ஜெனரஸா இருக்கீங்க. அந்த நன்றி கொஞ்சம் கூட கிடையாது அவன்கிட்டே. பாருங்க, நீங்க கொடுத்த காசை நான் அவன் செலவுக்கு வச்சுக்கோடான்னு கொடுத்தா, அதை வாங்கிட்டுப் போய் உங்ககிட்டே கொடுத்து, ஓசில ஒன்னும் நான் சாப்பிடலை, தங்கலைன்னு மூஞ்சில எறிவேன்னு என்கிட்டயே சொல்றான். என்னால அந்த நேரம் அமைதியாவே இருக்க முடியலை. ஏதாவது திட்டவிடலாம்னு பார்த்தேன். பட், ப்ரெண்டா போய்ட்டானேன்னு விட்டுட்டேன்!” அவன் புலம்பலுடன் அலைபேசி இணைப்பைத் துண்டித்தான்.
இசைவாணி பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை.
பரிதி இங்கு வந்த அன்றே விக்னேஷ் அவனிடம் கொடுத்த பணத்தில் தன் செலவிற்கு எடுத்துக்கொண்டு மீதவற்றை எடுத்து வந்து இவள் கையைப் பிடித்து வைத்தவன், “என்னோட சாப்பாட்டுக்கும் ரூம் ரென்டுக்கும் இந்த மாச காசு. என்னால வீட்டு வேலையெல்லாம் பார்க்க முடியாது!” என்றான் திமிராய்.
அவனை நக்கலாகப் பார்த்தவள், “சரி... அப்போ மந்த்லி மந்த்லி இந்த மாதிரி கரெக்டா காசு கொடுத்துடு. நீ வேலை எதுவும் பார்க்க வேணாம். அப்புறம் உனக்கு நீயே குக் பண்ணிக்கோ. எனக்கு நான் பார்த்துக்கிறேன். அவங்கவங்க வேலையை அவங்கவங்களே பார்த்துக்கலாம். காமன் வொர்க்கை ஷேர் பண்ணி செஞ்சுக்கலாம்!” என்றாள். அவன் வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது.
மூன்று மாதங்கள் கழித்து இன்றைக்குத்தான் அவன் வயிறும் மனதும் நிரம்பும் வரை உண்டிருக்கிறான். இசைவாணி அவன் வரும் நேரத்தை சரியாய்க் கணக்கிட்டு சமைத்து முடித்து உண்டு கொண்டிருக்க, தன் பொதிகளோடு உள்ளே நுழைந்தான் பரிதி.
“அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ...” என்றாள் உண்டு கொண்டே. அவன் அறைக்குள் பைகளை வைத்துவிட்டு தன்னை சுத்தம் செய்துகொண்டு வந்தான்.
“குக் பண்றது மட்டும்தான் என் வேலை. உனக்குப் பசிச்சா நீதான் போட்டு சாப்பிடணும். நான் கூப்பிட்டு உனக்கு சர்வ் பண்ணுவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ண கூடாது. இதொன்னும் உன் வீடும் இல்ல. நான் உன் பொண்டாட்டியும் இல்ல!” எள்ளலாக கூறியபடியே அவள் உண்ண, இவனுக்கு கடுப்புதான். ஆனால் ரோஷப்பட்டு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லுமளவு அவன் வயிறு அவனை விடவில்லை. மூன்று மாதங்களும் காய்ந்த ரொட்டி, பாஸ்தா, நூடுல்ஸ் என சாப்பிட்டு நாக்கு செத்துப் போனது. வயிறு கூட புண்ணாகிப் போனதொரு எண்ணம்.
அவளை முறைத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவனின் முகம் பொத்தான் போட்டது போல பளிச்சென மின்னியது. சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு, அப்பளம், தயிர் என அவள் சமைத்ததை திறந்து பார்த்தவனுக்குப் பேய் பசி. எவ்வளவு சாப்பிட்டான் எனத் தெரியாத அளவிற்கு வயிறு நிரம்பும் அளவிற்கு உண்டான்.
சிந்தாமணியின் சமையலை விட வாணி ருசியாய் சமைத்திருந்தாள். மூன்று முறை சோறு போட்டு சாப்பிட்டு, பின்னர் இதற்கு மேலும் உண்டால் வாந்தி எடுத்து விடுவோம் என்ற நிலையில்தான் போதுமென நிறுத்தினான். அப்படியிருக்கையில் தானே சமைத்துக் கொள்வதா என அவன் முகம் அதிர்ந்தது. அவனுக்குப் பெரிதாய் சமைக்க வராது.
அதனாலே அவளிடம் பதில் பேச முடியாமல் திணற, அவன் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தவள், “நான் வெளிய போறேன் இப்போ. நான் வர்றதுக்குள்ளே வீட்டைக் க்ளீன் பண்ணி வைக்கிற. முக்கியமா உன் ரூம்ல ரூம் ஸ்ப்ரே எல்லாம் போடணும். ரூமை ப்ராப்பரா மெயின்டெய்ண் பண்ணணும்!” என வந்த அன்றே அவள் கட்டளையோடு அகல, இவனுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்தது. ஆனாலும் தன்னிலையை நொந்து கொண்டே வேலை செய்தான்.
வெளியே சென்றுவிட்டு வந்த வாணி, “வீட்டுக்குள்ள நடக்கும்போதே மண்ணு நெருடுது. என்ன க்ளீன் பண்ண நீ? ஒழுங்கா ஒரு தூசி கூட இல்லாம வேக்கம் போடு!” என்றாள் கண்டிப்பான குரலில்.
“எனக்குத் தெரிஞ்சளவுதான் வேலை பார்க்க முடியும். உன் இஷ்டத்துக்கு என்னை வளைக்காத!” சுள்ளென அவன் பேசிவிட்டு செல்ல, சில நொடிகள் அவனை வெறித்தாள் இவள்.
இரவு பசித்ததும் பரிதி சமையலறையை எட்டிப் பார்த்தான். வாணியின் அரவம் தென்படவில்லை. என்ன சமைத்திருக்கிறாள் எனப் பார்த்தான். இட்லி சுட்டு சட்னி அரைத்திருந்தாள். ஆசையாய் உண்ண அமர்ந்தவன் முகம் சட்னியிலிருந்த உப்பில் அஷ்டக் கோணலானது.
“இசைவாணி...” அவன் உச்சஸ்தாயியில் கத்த, அப்போதுதான் பக்கத்து வீட்டு பெண்மணியிடம் பேசிவிட்டு உள்ளே வந்தாள் அவள்.
“எதுக்கு இப்போ கத்துற நீ?” அவள் அலட்டிக்காது கேட்க,
“சட்னில உப்பை போட்டீயா? இல்ல உப்புல சட்னியைப் போட்டீயா?” அவன் இரைய, இவளது இதழ்கள் கோணலாக வளைந்தன. சமைத்ததும் உண்டவள், அவனுக்கான சட்னியில் உப்பை அள்ளிக் கொட்டிவிட்டாள்.
“ப்ம்ச்... எனக்கு இவ்ளோதான் சமைக்க வரும். இஷ்டம் இருந்தா சாப்பிடு. இல்லைன்னா பட்டினி கெட!” தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றவளை தீயாய் முறைத்தான். தான் பேசியதற்குத்தான் பழிவாங்குகிறாள் எனப் புரிந்தவன், மறுநாள் கடுப்புடனேனாலும் சிரத்தையுடன் வீட்டை சுத்தம் செய்தான். வேலை முடிந்து வந்தவள், வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்து கண்களால் மெச்சினாள்.
‘இவ பாராட்டு இப்போ யாருக்கு வேணும்?’ மனத்தில் நொடித்தான் அவன்.
“பரிதி... ரிமோட்டை டீவி பக்கத்துலயே வை. வேக்கம் க்ளீனரை அதோட இடத்துல ப்ளேஸ் பண்ணு. எந்தப் பொருள் எங்க எடுத்தியோ, அங்கதான் திருப்பி வைக்கணும். உன் இஷ்டத்துக்கு கண்ட இடத்துல வைக்கப் பழகாத. என்னால தேடீட்டு இருக்க முடியாது...” என மறுநாள் கண்டித்தாள். அவனால் எதிர்த்துப் பேச முடியவில்லை. அப்படி பேசினால் உணவில் கை வைத்து விடுவாள் என்பதால் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான். அதற்கடுத்த நாள் பகுதி நேர வேலைக்குச் சென்று கேட்டு அவன் சேர்ந்து கொள்ள, இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது.
இவனுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை. திங்கள் முதல் வெள்ளி வரை காலை ஏழு மணி முதல் மதியம் பன்னிரெண்டு வரை வேலை. வியாழன் முதல் சனி வரை மாலை மூன்று முதல் எட்டு வரை என இரண்டு சுழற்சியாக பணிக்குச் சென்று திரும்பினான்.
இசைவாணிக்கு எப்போதும் அலுவலகம் பத்து மணிக்குத்தான். மாலை ஐந்திற்கு முடிந்துவிடும். சனி, ஞாயிறு வாரயிறுதி கண்டிப்பான முறையில் விடுமுறை கொடுத்துவிடுவார்கள். அப்படியிருக்கையில் அவள் முதல் மூன்று நாட்கள் தனக்காக எழுந்து மெனக்கெட்டு சமைப்பாள் என அவனுக்கு நம்பிக்கையே இல்லை. எப்படியும் தன்னைப் பட்டினி போடப் போகிறாள் என அவன் கவலையோடு வார நாட்களைத் தொடங்கினான்.
பரிதி ஆறரைக்கு வெளியே வர, ஏதோ நல்ல வாசனை அவன் நாசியைத் துளைத்தது. படக்கென சமையலறைச் சென்று பார்த்தான். ஐந்து மணிக்கே எழுந்து ஒருமணி நேரத்தில் சமைத்துவிட்டு மீண்டும் வாணி உறங்க சென்றிருந்தாள் போல. ஏற்கனவே வட்டமாய் தேய்த்து பாதியாய் வேக வைத்திருக்கும் சப்பாத்தியை வாங்கி வந்து, முழுதாய் வேக வைத்து எளிமையான பன்னீர் குருமா ஒன்றை செய்து வைத்திருந்தாள். இவன் திறந்ததும் குருமாவின் வாசனையோடு சூடும் முகத்தில் படர்ந்தது. இவனுக்குப் பெரிய ஆச்சர்யம்தான். அதே எண்ணத்தோடு உண்டுவிட்டு வேலைக்கு கிளம்பினான்.
அந்த ஒருநாள் மட்டுமன்று அவன் வேலை நேர சுழற்சியைப் பொறுத்து சரியான நேரத்திற்கு அவனுக்கு உணவிட்டாள் வாணி. அதற்குப் பதிலாக வீட்டு வேலை அனைத்தையும் அவனிடமே கொடுத்தாள். சலித்துக் கொண்டேனும் பரிதி வேலை செய்தான். வாரயிறுதி அவளுக்கு விடுமுறை என்றாலும் கூட இவனுக்காக எழுந்து உணவு செய்தாள்.
‘என் அம்மாவும் கூட இல்ல. அவங்கம்மாவும் கூட இல்ல. யாருக்காக இப்படி ஆக்ட் பண்றா. நல்லவ வேஷம் போடுறா. பட் இருந்தாலும் நல்லதுதான். என் வயிறு காயாம இருக்கு!’ என்ற எண்ணத்துடன் அவன் மூன்று வேளையும் விதவிதமாக உண்டான். ஞாயிற்றுக்கிழமை பிரியாணி, இறால் தொக்கு என வகையாய் செய்தாள். மூன்று மாதத்தில் குறைந்த இரண்டு கிலோவையும் ஒரே மாதத்தில் ஏற்றிவிட்டது போல முகம் புசுபுசுவென மாறியது பரிதிக்கு.
பகுதிநேர வேலைக்குச் செல்வதால் இளமதியோடு அவனால் ஊர் சுற்ற செல்ல முடியவில்லை. அலைபேசியில் மட்டும் பேசி தங்கள் உறவை வளர்த்தான். அவன் ஏன் திடீரென இடம் மாறினான் என அவள் கேட்க, “இங்க ரூம் ரென்ட் கம்மி. அதுவும் இல்லாம என்னோட ரிலேட்டீவ் ஒருத்தவங்களோட தங்கியிருக்கேன். அந்தப் பொண்ணு நல்லா குக் பண்ணுவா. சோ, எனக்கு வேலையெல்லாம் மிச்சம். காசைக் கொடுத்தா நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும்!” என்றிருந்தான். அவளும் அதற்குமேல் தோண்டித் துருவி எதுவும் கேட்கவில்லை.
அந்த வாரயிறுதி இருவரும் வெளியே செல்வதாக திட்டமிட்டிருந்தனர். பன்னிரெண்டு மணியானதும் இளமதி அவனுக்கு அழைக்க, அவன் ஏற்கவேயில்லை. பத்து நிமிடங்கள் பொறுத்தவள், வீட்டிற்கே வந்துவிட்டாள்.
இசைவாணி அப்போதுதான் மதியத்திற்கு என்ன சமைக்கலாம் என யோசித்து மீன் குழம்பு வைத்துவிடலாம் என்ற முடிவுடன் மீனை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். காலையில் சமைத்துவிட்டு மீண்டும் உறங்கி எழுந்ததால் குளிக்க சோம்பேறித்தனமாக இருந்தது போல. இன்றைக்கு விடுமுறை என்பதால் குளிப்பதற்கும் சேர்த்து விடுப்பு எடுத்தவள், ஏதோ ஒரு பாடலை பின்னணியில் கசிய விட்டுக்கொண்டே வேலை செய்தாள். வீட்டின் அழைப்புமணி இசைக்க சென்று பார்த்தாள்.
முட்டியளவு குட்டைப் பாவடை முழுக்கை சட்டை என இளமதி புன்னகையுடன் நின்றிருந்தாள். “நீங்க வாணியா? இளாவோட ரிலேடீவ்?” அவளாக கேட்கவும், வாணியின் தலை அசைந்தது.
“இளா வெளியப் போகலாம்னு சொன்னான். பட், கால் பண்ணா எடுக்கலை. அவனைக் கூப்பிட்றீங்களா?” இவள் கொஞ்சும் குரல் வாணிக்கு எரிச்சலாக இருந்தது.
“அவன் இன்னும் வொர்க் முடிஞ்சு வரலை!” வாணி பதிலளிக்க, அவளைத் தாண்டிக்கொண்டு சென்று இளமதி இருக்கையில் அமர்ந்தாள். அவள் செய்கையில் வாணி முகத்தைச் சுளித்துவிட்டு சமையலைத் தொடர செல்ல,
“வாணி... ரொம்ப தாகமாக இருக்கு. கேன் ஐ ஹேவ் எனி கூல் ட்ரிங்க்ஸ்?” இளமதி கேட்டதும்,
“ஃப்ரிட்ஜ்ல இருக்கு. எடுத்துக் குடிச்சுக்கோங்க...” என்றுவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.
‘இவனுக்கு வேலை செய்றதும் இல்லாம, இவளுக்கு வேற சேவகம் செய்யணுமா?’ எனக் கடுப்புடன் வாணி மீனை சுத்தம் செய்தாள்.
‘சே... வீட்டுக்கு வந்த கெஸ்ட்க்கு குடிக்க ஏதாவது சர்வ் பண்ணணும்ன்ற பேசிக் சென்ஸ் கூட இவளுக்கு இல்ல. இந்தப் பரிதியை சொல்லணும். கண்டவளோட ரூமை ஷேர் பண்ணிருக்கான்!’ என புலம்பிக் கொண்டே பழச்சாற்றை எடுத்து அருந்தியவள், வாணியின் கழுத்திலிருந்த தாலியையும் நெற்றியிலிருந்த குங்குமத்தையும் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டாள்.
அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பதில் இவளுக்கு நிம்மதி. என்னதான் நீண்ட வருடங்களாக லண்டனில் வசித்தாலும் கூட அவளுக்குப் பிடித்த ஆணொருவன் ஒரு பொண்ணோடு தங்கி இருப்பதை அறிந்து மனத்தில் உறுத்தல்தான். அது தற்போது அகன்றிருந்தது. பரிதி வந்துவிட்டான்.
“இளா... ஏன் என் கால்ஸை அட்டென்ட் பண்ணலை?” எனக் கேட்டு அவனை அணைக்கச் சென்றாள் இவள்.
“வெயிட்... வெயிட். வர்ற வழியில சில லண்டன் பாய்ஸ் இண்டியன் கேர்ளை டீஸ் பண்ணிட்டு இருந்தாங்க!” என அவன் தொடங்க,
“ப்ம்ச்... அவங்களோட நீ சண்டை போட்டீயா? எதுக்கு உனக்குத் தேவையில்லாத வேலை? தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ் இளா. இங்க அதெல்லாம் சகஜம்!” மதி இரைந்தாள்.
“மதி ஸ்டாப்... நான் எதுவும் பண்ணலை. அவங்க விட்டுட்டுப் போனதும் அந்தப் பொண்ணை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன். தட்ஸ் இட்!” இவன் இடைபுகுந்தான். இவர்கள் உரையாடலைக் கேட்ட இசைவாணியின் உதடுகள் கோணலாய் வளைந்தன.
பத்து நிமிடத்தில் அவன் குளித்து தயாராகி வர, இருவரும் வெளியே கிளம்பினர்.
“பரிதி...” என்றழைத்து அவனைத் தடை செய்த வாணி, “உனக்கும் சேர்த்துதான் நான் லஞ்ச் ப்ரிபேர் பண்ணிருக்கேன்...” என்றாள்.
“நீ சாப்பிட்டு எடுத்து வை. நான் நைட்டு வந்து சாப்பிட்டுக்குறேன்!” இவன் பதிலளிக்க,
“இப்போ குக் பண்ணதை போய் நீ நைட் சாப்பிடுவீயா இளா நீ? டின்னர் முடிச்சிட்டுத்தான் நம்ப வருவோம். சோ, வாணி நீங்க சாப்பிட்டு மிச்சத்தை டஸ்ட்பின்ல போட்டுட்டுங்க!” என மதி இடைபுக, வாணியின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல்.
“என்னால சாப்பாட்டை வேஸ்ட் பண்ண முடியாது. நைட் எவ்ளோ டைமானாலும் நீ இங்க வந்துதான் சாப்பிடணும்...” மதியை அலட்சியம் செய்து பரிதியிடம் கட்டளையிட்டாள் அவள்.
அதில் சீண்டப்பட்ட மதி, “லுக் வாணி... அவனுக்கும் சேர்த்து குக் பண்றதுக்குத்தானே அவன் உங்களுக்கு பே பண்றான். அப்புறம் என்ன? என்னவோ சும்மா குக் பண்ணித் தர்ற மாதிரி பேசுறீங்க? எவ்வளோ வேணுமோ வாங்கிக்கோங்க. அவனை அதிகாரம் பண்ற வேலையெல்லாம் வேணாம்!” என்றாள் எள்ளலாக. வாணியின் முகம் கோபத்தில் சிவந்தது.
பரிதி அவளைத்தான் பார்த்தான். மதியை சமாளிப்பதற்காக தான் கூறிய பொய் இப்போது தன்னையே பதம் பார்ப்பதை உணர்ந்து பார்வையை மாற்றியவன், “மதி... என்ன நீ?” அவளை அதட்டிவிட்டு, “வாணி, நீ எடுத்து வச்சிடு. நைட் நான் வந்து சாப்பிட்டுக்கிறேன்...” என மதியை இழுத்துச் சென்றான். இசைவாணி அவனைக் கோபமாய் உறுத்திருந்தாள்.
இளமதி போகும்போதே அவனிடம் சண்டையிட்டாள். தான் வந்ததும் அவள் மரியாதைக்காக கூட உள்ளே அழைக்கவில்லை. குடிக்க எதுவும் கொடுக்கவில்லை. அலட்சியமாக நடந்து கொண்டாள் என புகார் வாசித்தவள், “பார்க்க ஆன்ட்டி மாதிரி இருக்கா அவ. அவளோட போய் நீ வீட்டை ஷேர் பண்ணிருக்க. வேற யாரும் பாய்ஸே கிடைக்கலையா உனக்கு? நல்லவேளை அவ மேரீட். சோ நீ அங்க தங்குறது ஓகேதான். இருந்தாலும் அவ உன்கிட்ட வாய்ஸை ரெய்ஸ் பண்ணது எனக்குப் பிடிக்கலை!” எனப் புலம்பிக் கொண்டே வந்தாள்.
“மதி, அவளோட குணமே அப்படித்தான். யார் என்னென்னு பார்க்காம இப்படி பேசிடுவா. கைண்ட் ஆஃப் விஷம் அவ. நீ ப்ரியா விடு...” இவளை சமாதானம் செய்தான் பரிதி.
“சே... ரூமேட்டா இருக்க உன்னையே இந்தப் பாடு படுத்துறா. பாவம் அவளோட புருஷன். என்னக் கஷ்டப்படுறானோ?” என இவள் கூறியதும், பரிதி இருமினான்.
அவள் கழுத்தில் கட்டியிருக்கும் தாலி இவன்தான் கட்டியது எனத் தெரிந்தால் மதி என்ன சொல்வாள் எனப் பயமாய் இருந்தது. அவர்களுக்கு இடையேயான உறவிற்குப் பெயர் வைக்காதவரை தங்களைப் பற்றி அவளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்ற முடிவிலிருந்தான் பரிதி.
வாணியையே மதி திட்டிக் கொண்டே வர, இவன்தான் அவளை முயன்று திசை திருப்பினான்.
பரிதி வீடு திரும்ப இரவு பத்தானது. இசைவாணி உறங்க செல்லாமல் கூடத்திலே அமர்ந்திருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் இவளை எதிர்பார்க்காமல் திகைத்துப் பின்னர் தலையைக் குனிந்து கொண்டே அறைக்குச் சென்று ஐந்து நிமிடத்தில் அவள் மதியம் சமைத்த உணவைத் தட்டிலிட்டுக் கொண்டு வந்து அவளருகே அமர்ந்தான். வாணி அவனது செய்கைகளை அழுத்தமாய் பார்த்திருந்தாள்.
அவள் முகத்தை தயங்கிப் பார்த்தவன், “வாணி...” என ஏதோ கூற வர, கையைக் காண்பித்து அவனைத் தடுத்தவள், சாப்பிடு என்பதாய் சைகை செய்தாள். இந்த உணவில் என்னக் கலந்து வைத்திருக்கிறாளோ என்ற பயத்துடன் உணவை வாயிலிட்டான். அப்படியே அவன் தாய் செய்யும் கைப்பக்குவத்தில் அவனுக்குப் பிடித்த ஐயிரை மீன் குழம்பு தொண்டையில் ருசியாய் இறங்கியது. மதி இவனை இரவு உணவு சாப்பிட வைத்தே அனுப்ப வேண்டும் என்ற உறுதியோடு ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள்.
தனக்குப் பசிக்கிறது எனக் கூறி நிறைய உணவு வகைகளை வரவழைத்தவள், பின்னர் சாப்பிட முடியவில்லை என்று இவனை சாப்பிட வைத்துவிட்டாள். ஏற்கனவே வயிறு நிரம்ப உண்டு வந்தவன், இசைவாணியின் அழுத்தமான பார்வைக்குப் பயந்து அவள் சமைத்த உணவை உள்ளே தள்ளினான். நான்கு வாய் எடுத்து வைத்ததும் அவனுக்கு வாந்தி வந்துவிட, ஓடிச்சென்று வாந்தியெடுத்து வந்தான்.
இசைவாணி அமைதியாய் அவன் செய்கைகளைப் பார்த்தாள்.
“இப்படியே பார்த்துட்டே இருந்தா என்னன்னு நான் அர்த்தம் எடுக்குறது இசைவாணி? மதி பேசுனது தப்புதான். சாரி!” என்றான் அவனாக.
“ஐயோ சார், நீங்க ஏன் என்கிட்ட சாரியெல்லாம் கேட்குறீங்க? நீங்கதான் எனக்கு சம்பளம் கொடுக்குற முதலாளியாச்சே. ஆனால் என்ன, எவ்வளோ சேலரின்றதை மட்டும் பேச மறந்துட்டீங்க போல. நானே கால்குலேட் பண்ணவா?” என நக்கலாக கேட்டாள். அவன் அமைதியாயிருந்தான்.
“ஹம்ம்... எனக்கு ஆபிஸ் டென் ஓ க்ளாக்தான். பட் நீங்க ஏழு மணிக்கு பார்ட் டைம் போகணும்னு நான் அலாரம் வச்சு சீக்கிரமா எழுந்து சமைக்கிறேன். சோ, அதுக்கு எவ்வளோ சேலரி கேட்கலாம். ஒருநாளைக்கு ரெண்டு தடவை மூனு வேளைக்கு சமைக்கிறேன். மாசத்துக்கு தேர்டி டேய்ஸ். சோ, ஒன் டேக்கு பிஃப்டீ பௌண்ட்ஸ் வச்சுப்போமா. நெக்ஸ்ட் மந்த்லருந்து ஒன்னாந் தேதியான கரெக்டா எனக்கு தௌசண்ட் ஃபைவ் ஹண்ட்ரட் பௌண்ட்ஸ் சேலரியா வேணும். ஐ’யம் நாட் ஜோக்கிங். நீதானே என்ன மெய்ட்னு சொன்ன. சோ, அதை உண்மையாக்கிடலாம்!” அவள் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.
“சாரி இசைவாணி... நான்!” அவன் விளக்கம் கொடுக்க முற்பட, “ஜஸ்ட் ஷட் அப் பரிதி. நான் உனக்கு வேலைக்காரியா? வேலை கிடைக்காம கையில காசும் இல்லாம கஷ்டப்படுறீயேன்னு உனக்கு தங்க இடம் கொடுத்து வகைவகையா சமைச்சுப் போட்டா என்னை வேலைக்காரின்னு சொல்லுவ நீ?” சினத்தோடு அவனை உறுத்துப் பார்த்தாள்.
“ப்ம்ச்... நான் ஏன் அப்படி சொன்னன்னு தெரிஞ்சுட்டுப் பேசு. எல்லாம் நமக்காகத்தான். ஒரு பொண்ணும் பையனும் ஒரே வீட்ல இருந்தா எல்லாரும் தப்பா பேசவாங்க. என் கேரக்டரை தப்பா நினைச்சுடுவாங்க. அதான் நான் உன்னை மெய்ட் மாதிரின்னு சொல்ல வேண்டியதா போச்சு. எனக்கு என் கேரக்டர் ரொம்ப முக்கியம். யாரும் அதை ஸ்பாயில் பண்றதை நான் விரும்ப மாட்டேன். இது வெறும் அக்ரீமெண்ட் மேரேஜ் தானே? சோ இங்க நான் உன் புருஷன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. எனக்கு அப்படி சொல்ல பிடிக்கலை. ஐ ஃபீல் அனீசி!” என்றான் சின்ன குரலில். அவன் பேச்சில் வாணியின் முகம் குன்றியது. அதை அவனிடம் காண்பிக்காமல் முகத்தில் அலட்சியத்தைக்கொண்டு வந்தாள்.
“ஓஹோ... வெரி குட். உன் கேரக்டர் ஸ்பாயிலாக கூடாதுன்னு எனக்கு மெய்ட் பட்டம். வெரி குட், அதை உண்மையாக்கிடலாம். நீதான் பார்ட் டைம் போறீயே. சோ, நெக்ஸ்ட் மந்த்லருந்து உன் எக்ஸ்பென்ஸை நீயே பார்த்துக்க!” என்றாள் அழுத்தமாய்.
அவன் முகம் மாறியது. பகுதி நேரத்தில் கிடைக்கும் பணத்தை வீட்டிற்கு அனுப்பும் எண்ணத்திலிருந்தான். கல்வி கடனுக்கு வட்டிக் கட்ட வேண்டும், வீட்டு செலவிற்கென இவன் பங்குக்கு கொடுக்கலாம் என திட்டம் தீட்டி வைத்திருந்தான்.
“நான் சொன்னது தப்புதான். பட் அதுக்காக என்னால காசெல்லாம் கொடுக்க முடியாது இசைவாணி. என் ஃபேமிலி சிட்சுவேஷன் உனக்கே தெரியும். நான் பார்ட் டைம் சேலரியை வாங்கி வீட்டுக்கு அனுப்பணும். சோ, இப்போதைக்கு நீதான் என் செலவை பார்க்கணும். சும்மா ஒன்னும் நீ எனக்கு செலவு பண்ண வேணாம். நான் வேலைக்குப் போனதும் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுத்துடுறேன். அதனால இதை வச்சு என்னை இன்சல்ட் பண்ணாத. நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” என ரோஷத்தில் அவன் பொரிந்துவிட்டு அறைக் கதவை அறைந்து சாற்றினா
ன். இசைவாணி அவனை அற்பமாய் பார்த்திருந்தாள்.
‘சே! என்ன மனுஷன் இவன்?’ அவள் முகத்தில் அசூயையான பாவம் வந்து போனது.
தொடரும்

Last edited: