- Messages
- 1,295
- Reaction score
- 3,827
- Points
- 113
நேரம் – 20 
தன் முன்னிருந்த மருத்துவ அறிக்கையைப் படித்த மருத்துவர் முகத்தில் சின்னதாய் ஒரு மெச்சுதல் தெரிந்தது. நிமிர்ந்தவர் உதடுகளில் சிநேகமான புன்னகை.
“ரொம்ப நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது. ஷீ இஸ் டெபனெட்லி ரெடி ஃபார் ஆப்ரேஷன்!” என மருத்துவர் கூறக் கேட்டதும், இசைவாணி தளர்ந்து அமர்ந்தாள். அவளது முகத்தில் நிம்மதி கீற்று படர்ந்தது.
“தேங்க் யூ டாக்டர். நான் பயந்துட்டே வந்தேன்!” என்றாள் சின்ன குரலில்.
“பயப்பட வேணாம் இசைவாணி. பீபி, சுகர் எல்லாம் கன்ட்ரோல்டா இருக்கு. மத்த விட்டல்ஸூம் நார்மல். நெக்ஸ்ட் வீக் தேர்ஸ் டே ஆப்ரேஷன் டேட் பிக்ஸ் பண்ணிடலாம். அப்போதான் சீஃப் டாக்டர் ப்ரீ. உங்களுக்கு ஓகே தானே? அமௌண்ட் ரெடி பண்ணிட்டீங்களா?” எனக் கேட்டார் அவர்.
“யெஸ் டாக்டர்... பணம் நான் ரெடி பண்ணிட்டேன். அதைப் பத்தி நோ இஷ்ஷூ. என் அம்மா நல்லபடியா ரெக்கவராகி வந்துட்டா போதும்!” என்றாள் இவள்.
“கண்டிப்பா ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆகிடும். நீங்களும் கடவுளை வேண்டிக்கோங்க. எங்க சைட்ல ஒவ்வொரு பேஷண்டுக்கும் நாங்க முழு எபெஃர்ட் போடுவோம். மீதி கடவுள் கைலாதான்!” அவர் நம்பிக்கையுடன் கூற, தலையை அசைத்தவள், எப்போது வந்து மருத்துவமனையில் தாயை சேர்க்க வேண்டுமென கேட்டறிந்தாள். ஞாயிற்று கிழமையே வருமாறு மருத்துவர் கூற, மேலும் சில விபரங்களைக் கேட்டறிந்தவள், தாயோடு வீடு நோக்கிப் புறப்பட்டாள். சுந்தரிக்கும் மருத்துவர் கூறியதில் மகிழ்ச்சி.
“ஆப்ரேஷன் முடிஞ்சதும் பழையபடி நான் நல்லாகிடுவேன். உனக்குப் பிறக்கப் போற புள்ளைங்களையும் நான்தான் வளர்க்கப் போறேன் வாணி. பையனோ பொண்ணோ, ரெண்டு பெத்துக்கோ டீ. என்னை மாதிரி ஒன்னோட நிறுத்திடாத. நம்மக் காலத்துக்குப் பிறகு ஒன்னுக்கொன்னுன்னு புள்ளைங்க துணையா இருந்துப்பாங்க!” என ஆசையாய் பேசிய தாயின் முகத்தைப் எதிர்நோக்க முடியாது பார்வையை சாலையில் பதித்திருந்தாள் இசைவாணி.
அவர் குரலிலிருந்த துள்ளலையும் மகிழ்ச்சியையும் கண்டு இவளுக்குப் பேச்சு வரவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து பரிதியோடான பந்தத்தை முறித்துக் கொள்ளும்போது சுந்தரி எப்படி எதிர்வினையாற்றுவார் என்ற கவலை இப்போதே அவளை அரிக்கத் தொடங்கியது. அவளால் அவரருகில் இயல்பாக இருக்க முடியவில்லை. குற்றவுணர்வு விருட்சமாக வளர்ந்து நின்று அவளது நெஞ்சை உலுக்கியது போல. தலையை உதறி இரண்டு வருடங்கள் கழித்து வரும் பிரச்சனையை அப்போது பார்த்துக்கொள்ளலாம் என மனத்தை திடப்படுத்தி, தாயின் சிகிச்சைக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதில் முனைப்பைக் காண்பித்தாள்.
வீடு சென்றவள் கமலா கொடுத்த தேநீரைத் தாயோடு கதை பேசியபடியே குடித்தாள். “ஆப்ரேஷனுக்குப் பணத்தை எப்படி ஏற்பாடு பண்ணப் போற வாணி?” சுந்தரி கவலையோடு கேட்டார்.
“ம்மா... பணம் ஒரு பிரச்சனையே இல்ல. நீ அதைப் பத்திக் கவலைப்படாத. நான் பார்த்துக்குறேன்!” என்றவள் அவளுக்கு சுந்தரி அணிவித்த ஐம்பது சவரன் நகையில் ஒரு ஆரத்தையும் கழுத்தணியையும் அடகு வைக்கலாம் என்ற முடிவிற்கு வந்தாள். லண்டன் சென்ற பிறகு அதை மீட்டுக் கொள்ளலாம். வெளியே கடன் வாங்குவதற்குப் பதிலாக இது நல்ல யோசனையாகப்பட்டது அவளுக்கு.
“சரிம்மா... நான் கிளம்புறேன். அவர் இதோட மூனு டைம் கால் பண்ணிட்டாரு!” என வராத அலைபேசியை அணைத்துவிட்டு அகன்றாள்.
“பக்கத்து தெருலயே புள்ளையைக் கட்டிக் கொடுத்தது ரொம்ப வசதியா போச்சும்மா. நான் கூட வாணியைத் தூரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்தா, அவ எப்படி இருக்கான்னு பார்த்துக்க முடியாதேன்னு கவலைப்பட்டேன். ஆனால் இப்போ பாருங்க, எட்டிப் பார்த்தா அவ வீடு தெரியுது. வளைகாப்பு, பேறுகாலம் எல்லாத்தையும் அவளுக்கு நானே பார்த்துடுவேன்!” என்ற கமலா தேநீர் குடித்த குவளைகளை எடுத்தார்.
“ஏன் கமலா... நீ பேறு காலம் பார்ப்ப. அப்போ நான் எதுக்கு இருக்கேன். ஆப்ரேஷன் முடிஞ்சதும் கொஞ்ச நாள்ல பழையபடி எல்லா வேலையும் நான் பார்க்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால் என் பொண்ணுக்கு நான்தான் எல்லாம் பார்ப்பேன்!” இவர் கமலாவை முறைத்தார்.
“ம்மா... நீங்க முத புள்ளைக்குப் பாருங்க. நான் ரெண்டாவது புள்ளைக்குப் பார்க்குறேன். இதுக்கு ஏன் சடைச்சுக்குறீங்க?” என அவர் முகத்தை தோளில் இடித்துவிட்டு அகல, சுந்தரிக்கு இப்போதே பேரக்குழந்தைகள் வீட்டை நிறைத்துவிட்டது போல மனம் நிறைந்து போனது.
அவருக்கு பேராசை எல்லாம் இல்லை. ஒரே ஒரு பேரக் குழந்தையாவது தொட்டுத் தூக்கி முத்தமிட்டு, அவனுக்கு வேண்டியதை செய்யும் வரையிலும் தன்னைக் கடவுள் நன்றாக வைத்திருக்க வேண்டும். மகள் புருஷன் பிள்ளைகள் என நிறைந்து வாழ்வதைக் கண்ணால் பார்த்துவிட்டாலே சுந்தரிக்குப் போதும். அதற்கு மேலும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற எண்ணமில்லை.
“வா வாணி... டாக்டர் என்ன சொன்னாங்க? ஆப்ரேஷனுக்கு தேதி கொடுத்துட்டாங்களா?” அவள் உள்ளே நுழைந்ததும் சிந்தாமணி கேட்க, மருத்துவர் கூறியதை சுருக்கமாக உரைத்தவள், உடை மாற்றி முகம் கழுவி வந்தாள். மாமியார் மீண்டும் ஒரு தேநீரைக் கொடுக்க, இவள் வேண்டாமென்று கூறாது வாங்கி குடித்துவிட்டு மடிக்கணினியை எடுத்து அமர்ந்தாள்.
எப்படியும் அடுத்த மாதத்தில் அவள் லண்டன் செல்ல வேண்டும். அதற்கு முன்னே அவள் இப்போது வேலை பார்க்கும் திட்டத்தில் அவளுக்குரிய பகுதியை சரியாய் முடித்து ஒப்படைப்பது பிரதான வேலை. அத்தோடு தாயின் சிகிச்சையையும் பார்க்க வேண்டும். அதனாலே நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்தாள்.
இரவு உணவுண்டு முடித்து அனைவரும் படுத்துவிட்டனர். பரிதிக்கு வாணி சுந்தரியை அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்வது தெரியும். ஆனால் அவனால் அனுமதி கேட்டு வர முடியாத சூழல். திருமணத்திற்கென்று விடுப்பெடுத்துவிட்டான். அதனாலே வேலை முடிந்ததும் மாமியாரைச் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தான்.
அவனுக்கு உறக்கம் வராமல் புரண்டு கொண்டே இருக்க, இசைவாணி சுவரோரமாய் சாய்ந்தமர்ந்து மடிக்கணினியில் வேலை பார்த்தாள். அங்கே வீட்டில் அவளுக்கென்று வசதியாய் மேஜை, நாற்காலி இருக்கும். ஆனால் இங்கே அப்படியெதுவும் இல்லாததால் தரையில் போர்வையை விரித்துப் போட்டு உட்கார்ந்து வேலை செய்தாள். அன்றைக்கு அவள் திட்டிவிட்டுப் போனப் பிறகு பரிதிக்கு ரோஷம் வந்து இரண்டு நாட்களாக அவளிடம் பேசவில்லை. பின்னர் தன்மீதான தவறை உணர்ந்து அவளிடம் இருமுறை பேச முயற்சித்தான். அவள் பிடி கொடுக்கவே இல்லை. எப்படி அவளிடம் பழைய நட்பை பெறுவது எனத் தெரியாமல் திண்டாடினான்.
இப்போது அவள்புறமாய் திரும்பி படுத்து அவளையேதான் பார்த்தான். கடந்த நான்கு நாட்களாக அவள் இரவில் எத்தனை மணிக்கு தூங்குகிறாள் என்பதே இவனுக்குத் தெரியவில்லை. அவளுக்கு வேலைப் பளு எனப் புரிந்துகொள்ள முடிந்தது. இவனுக்கு உறக்கம் வருமெனத் தோன்றாததால் எழுந்து கழிவறைக்குச் சென்று வந்தவன், தண்ணீர் குடித்துவிட்டு அவளுக்கும் ஒரு குவளையில் நீர் எடுத்து வந்து அருகே வைத்தான். அவளிடம் எதிர்வினை எதுவும் இல்லை.
பெருமூச்சுடன் அருகே அமர்ந்தவன், “வாணி... உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா? என்கிட்ட சொல்லு. முடிஞ்சா நான் பண்றேன். நீ நாலு நாளா லேட் நைட் தூங்கப் போற?” எனப் பரிவும் அக்கறையுமாய் கேட்டான். வாணியால் அவனைப் போல முகத்தில் அடித்தாற் போல பேச முடியவில்லை.
“வேணாம் பரிதி... இது ரொம்ப இம்பார்டென்ட் ப்ராஜெக்ட். நெக்ஸ்ட் மந்துக்குள்ள சப்மிட் பண்ணணும். அப்போதான் நான் லண்டன் போக கரெக்டா இருக்கும். உனக்கும் அதுக்குப் பின்னாடிதான் ஸ்பௌஸ் விசா எடுக்க முடியும். நான் டிலே பண்ண பண்ண உனக்குத்தான் கஷ்டம்!” என்றாள் திரையிலிருந்த பார்வையை மாற்றாது.
அவனுக்கு அவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவன் சுள்ளென பேசிவிட்டப் பிறகு இவனிடமிருந்து மொத்தமாய் விலகிவிட்டாள். ஒருவேளை கோபத்தில் சிகிச்சை முடிந்ததும் நுழைவு இசைவு வாங்கித் தர மாட்டாளோ என சின்னதாய் ஒரு சந்தேகம் சமீபகாலமாக முளைத்தது. வெறும் காகிதத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் கூட இவனுக்கு லண்டன் செல்லும்வரை நம்பிக்கை இருக்காது.
அப்படியிருக்க, அடிக்கடி இருவருக்குள்ளும் முட்டிக் கொள்கிறதே எனக் கவலைப்பட்டான். இசைவாணி ஏமாற்றிவிடுவாள் என அவன் எண்ணவில்லை. ஒருவேளைக் கோபத்தில் அவள் அப்படியொரு முடிவெடுத்துவிட்டால், அவன் அத்தனை முயற்சி செய்து இந்த திருமணத்தை நடத்தியதே விழலுக்கு இரைத்த நீராகப் போய்விடுமே என பல எண்ணங்கள் அவனைப் போட்டு அழுத்திற்று. தந்தை முகத்தை முன்பு போல பார்த்து முறைக்க முடியவில்லை. தவறு செய்துவிட்டோம் என ஏதோவொரு வகையில் அவரிடமிருந்து தள்ளி நிற்கிறான்.
ஆனால் இப்போது இசை வாணியின் வார்த்தையில் அவனுக்கு நிம்மதி அடர்ந்தது. அவள் சொந்த கோபதாபங்களை ஒப்பந்தத்தில் கொண்டுவரப் போவதில்லை என்றெண்ணி தளர்ந்து மூச்சை வெளியிட்டவன், அவளது வலது கையைப் பிடித்தான்.
“சாரி இசைவாணி... நான் உன்னை எவ்வளோ ஹேர்ட் பண்ணாலும் நீ எனக்காகப் பார்க்குற கஷ்டப்படுற. தேங்க் யூ சோ மச்!” என்றான் உணர்ந்து.
மெதுவாய் பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தவள், “இது உனக்காக இல்ல பரிதி. எனக்காக, என் மனசுல இருக்க கில்டை சீக்கிரம் போக வைக்கிறதுக்காக. என்னதான் அக்ரீமெண்ட் மேரேஜ்னு பேர் வச்சு நம்ப செஞ்ச தப்பை நியாயப்படுத்துனாலும், நம்பளோட சுயநலத்துக்காக இரண்டு குடும்பத்தையும் ஏமாத்துறோமேன்னு எனக்குத் தூக்கம் கூட சரியா வர்றது இல்லை. எங்கம்மா என்னடான்னா அதுக்குள்ளேயும் பேரப்புள்ளை ஆணா பெண்ணான்னு கேட்குறாங்க. உங்கம்மா, எல்லா சொந்தகாரங்ககிட்டேயும் என்னை மருமகன்னு இன்ட்ரோ பண்ணி சந்தோஷப்படுறாங்க. என் மேல ரொம்ப அன்பா இருக்காங்க. கீர்த்தனா அண்ணின்னு சுத்தி வரா. இவுங்க எல்லாரையும் என்னால ஃபேஸ் பண்ண முடியலை. முடிஞ்சளவுக்கு இந்த ரிலேஷன்ஷிப்ல இருந்து விலகிடணும்னு பார்க்குறேன். மெண்டல் பிரஷரா இருக்கு பரிதி!” என்றாள் கசப்பான முறுவலுடன். அவனுக்கும் குற்றவுணர்வு உண்டுதான். ஆனால் அவளைப் போல குழந்தை அது இதுவென யாரும் அவனிடம் கேட்கப் போவதில்லை. பெண் என்பதால் அவளுக்குத் தன்னைவிட அழுத்தம் அதிகம் எனப் புரிந்தது.
“ரெண்டு வருஷம் கண்டிப்பா ரிலேஷன்ஷிப்ல இருக்கணும்னு அவசியம் இல்ல பரிதி. உனக்கு விசா கிடைச்சுட்டா நீ அங்கே வந்து வேலை தேடி செட்டிலாகிடுவ. நான் என் ப்ராஜெக்டை சீக்கிரம் கம்ப்ளீட் பண்ணிட்டு வந்து என் அம்மாவோட இருந்துப்பேன். சோ ஒன் இயர்ல இதெல்லாம் முடிஞ்சிட்டாலும் அக்ரீமெண்டை ப்ரேக் பண்ணிடலாம். அதான் உன் வாழ்க்கைக்கும் நல்லது. எனக்கும் பிரஷர் குறையும்!” என்றாள்.
எப்போது இதெல்லாம் நடந்து முடியும் என அந்நாளுக்காக மனம் ஏங்கிற்று. பொய்யாய் அவளால் ஓரளவிற்கு மேல் நடிக்க முடியவில்லை. திட்டம் தீட்டும்போது அவளுக்கு நிதர்சன வாழ்க்கையைப் பற்றிய போதிய அறிவில்லை. ஆனால் நிஜவாழ்க்கை எனும்போது அவள் கற்பனைக்கு மீறிய சவால்கள் வழிமறித்து நின்றன. அன்பாய் பேசி அக்றையாகப் பார்த்துக்கொள்ளும் சிந்தாமணி, மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடிந்துவிட்டதென நிம்மதியாக இருக்கும் சுந்தரி என இருபெண்களும் மனதளவில் அவளைக் கொன்றனர்.
“ரொம்ப குழப்பிக்காத இசைவாணி. முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி இதெல்லாம் யோசிக்கணும். நம்ம உள்ளே வந்துட்டோம். நல்லபடியா நம்ம நினைச்சது முடிஞ்சதும் பிரிஞ்சு போய்டலாம்!” அவளுக்கு நம்பிக்கை அளித்தான் பரிதி. நீண்ட நாட்கள் கழித்து இருவருக்குமிடையே இயல்பான உரையாடல் நீண்டது. அவளுக்கும் இந்த விஷயத்தைப் பற்றி பகிரக் கூடிய ஒரே ஆள் பரிதி என்பதால், மனத்தில் உள்ளதைக் கூறினாள்.
“சரி... போதும். டைம் இப்பவே பனிரெண்டாகப் போகுது. நாளைக்குப் பாரு மிச்ச வொர்க்கை!” என அவள் மடிக்கணினியை இவன் மூடி வைக்க, அவளும் பெருமூச்சுடன் படுக்கச் சென்றாள்.
“எதையும் யோசிக்காம தூங்கு இசைவாணி. நாளைக்கு நடக்கப் போறதை நாளைக்குப் பார்த்துக்கலாம். எல்லாத்தையும் விட மெண்டல் ஃபீஸ் முக்கியம்!” என்றவன் தூங்கிப் போக, இவளும் முயன்று உறக்கத்தை தழுவினாள்.
அந்த வாரம் கடகடவென ஒட்டியிருக்க ஞாயிற்றுக்கிழமை மாலை சுந்தரியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென இசைவாணி ஏற்கெனெவே என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என எழுதி வைத்திருந்ததைப் பார்த்து உடைகள், வழலைக் கட்டி, பற்பசை என அனைத்தையும் எடுத்து வைத்தாள். கமலாவும் இப்போதுதானே மகளுடன் மருத்துவமனையில் தங்கிவிட்டு வந்தார். அந்த அனுபவத்தில் அவளுக்கு உதவினார்.
சுந்தரிக்கு மனதோரம் சின்னதாய் ஒரு பயம் மட்டும் அரித்தது. ஒருவேளை சத்திர சிகிச்சையில் தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிட்டால் மகள் தவித்துப் போய் விடுவாளே என்ற பயம்தான். சிறுவயதிலிருந்தே தாய் தந்தையின் காலைச் சுற்றி வளர்ந்தவள். அங்கே சென்னையில் பெரிதாய் உறவினர்கள் கிடையாது. அதனாலே தனியாய் வளர்ந்தவள். தன் கணவரின் இழப்பிலே அவள் துவண்டு மீள முடியாமல் அழுத அழுகை நினைத்து இவர் மனம் நடுங்கும். தானும் இல்லாது போய்விட்டால் அவள் எப்படி தாங்குவாள் என்ற எண்ணத்திலே அவர் முகம் சுணங்கியது.
பரிதி மாலை மருத்துவமனை வருவதாக கூற, இசைவாணி மறுத்தாள். “ப்ம்ச்... லூசா இசைவாணி நீ. நான் வந்தா ஆன்ட்டி தைரியமா ஃபீல் பண்ணுவாங்க. நீ உங்கம்மாவுக்கு ஏதாவதுன்னா உக்காரந்து அழத்தான் செய்வ. சட்டுன்னு என்ன பண்ணணும்னு உன் மைண்ட் யோசிக்காது. சோ, நான் வர்றேன்!” அவன் அழுத்தம் திருத்தமாக கூறிவிட, இவள் அதற்குமேல் மறுக்கவில்லை. அவன் கூறுவது போல உடன்வந்தால் சுந்தரியும் சற்றுத் தெளிவார் என்றுவிட்டாள்.
“வாணி... நான் வேணா உன் கூட மாமாவை அனுப்பி விடவா? இவனைவிட என் புருஷன் கொஞ்சம் விவரமானவரு. உங்கம்மாவை ஆஸ்பிட்டல்ல சேர்த்து விட்டுட்டு வரட்டும்!” சிந்தாமணி கூற, பரிதி தாயை முறைத்தான்.
“வேணாம் அத்தை.. அட்மிட் தானே பண்ணப் போறோம். பரிதி மட்டும்போது. அங்கிள் வேணாம். அவர் வேலையும் கெடும்!” என இவள் மறுதலித்தாள்.
அவரிடம் பேசிவிட்டு காலையிலே கிளம்பி தாய் வீட்டிற்கு வந்தவள்தான் அனைத்து ஆயத்தங்களையும் செய்தாள். பரிதி அவர்கள் கிளம்பும் நேரம் வந்தான்.
“என்ன ஆன்ட்டி... என்ன பண்றீங்க?” என இயல்பாக சுந்தரியிடம் பேசினான். அவர் முகம் அகத்தைப் பிரதிபலித்தது.
“இப்போதான் தம்பி கிளம்பி உக்கார்ந்தேன்!” என்றவர், “கமலா... மாப்பிள்ளைக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா!” என கமலாவைப் பணித்தார். பின்னர் இவன் முகம் பார்த்தார். ஏதோ அவர் பேச வந்து தயங்குவது போல இவனுக்குத் தோன்றிற்று. அவர் முகத்திலிருந்த பயம் இவனுக்குப் புரிந்தது.
“ஆன்ட்டி... ஏன் ஒருமாதிரி இருக்கீங்க. ஆப்ரேஷன் நல்லபடியா முடியும். நீங்க நல்ல ஹெல்தியா வீட்டுக்கு வருவீங்க. நாங்க எல்லாரும் உங்க கூட இருக்கோம். பயப்படாதீங்க!” அவர் கையைப் பிடித்தழுத்தினான்.
“என்னைப் பத்தின பயத்தைவிட என் பொண்ணைப் பத்திதான் அதிக பயமா இருக்கு தம்பி. அவளுக்கு நானும் அவரும்தான் உலகமே. அவர் போனப்பவே ரொம்ப உடைஞ்சு போய்ட்டா. இப்போ கூட சில நேரம் அவரை நினைச்சு அழுதிருக்கா. அப்படி இருக்கப்போ எனக்கு ஆப்ரேஷன் நல்லா முடியாம போய் ஏதாவதாகிட்டா அவளால தாங்கவே முடியாது!”
“நாங்க ரெண்டு பேர்தான் அவளோட உலகமே. நீங்கதான் அவளைப் பார்த்துக்கணும். நான் இல்லைன்னா கூட நீங்க கடைசிவரை அவளோட சந்தோஷமா வாழணும். என் பொண்ணு பொறுப்பானவதான். ஆனால் அன்புக்கு ரொம்ப ஏங்குவா. அவளை நல்லா பார்த்துக்கோங்கப்பா. இதை தவிர பெருசா நான் ஒன்னும் கேட்கலை!” என்றார் அவன் முகம் பார்த்துக் கலங்கிய குரலில். வாணி சொன்னபோது கூட அவனால் உணர முடியவில்லை. ஆனால் சுந்தரியின் பேச்சில் குற்றவுணர்வு அவள் கழுத்தைச் சுற்றிய பாம்பாக நெரித்தது. அவர் முகத்தை நேர்க்கொண்டு இவனால் பார்க்க முடியவில்லை.
தொண்டையைச் செருமி தன்னை சரி செய்தவன், “ஆன்ட்டி... நீங்க நல்லாகி வருவீங்க. உங்க கண்ணு முன்னாடியே உங்க பொண்ணு சந்தோஷமா வாழ்வா!” என்றவன், அதில் தன்னை இணைக்கவில்லை. வெகுகவனமாகத் தன்னை தவிர்த்தான்.
“ம்மா... போகும்போது என்ன பேச்சு இதெல்லாம். காலைல இருந்து படிச்சு படிச்சு சொல்லிட்டு இருக்கேன் நான். இப்போ ஹார்ட் ஆப்ரேஷன் எல்லாம் ரொம்ப நார்மலா பண்றாங்க. நீ சினிமா பார்த்துக் கெட்டுப் போய்ட்ட. சீக்கிரம் கிளம்பு. போனோமா ஒரு வாரத்துல வீட்டுக்குத் திரும்புனோமான்னு இருக்கணும்!” வாணி தாயை அதட்டினாள். அவளுக்கும் நெஞ்சு முழுக்க பயம்தான். ஆனால் தன்னுடைய சுணக்கம் அவரையும் சேர்த்து பாதிக்கும் என்பதால் எதையும் வெளிக்காட்டாமல் அவரை விரட்டினாள்.
அவள் பதிவு செய்த மகிழுந்து வந்துவிட்டது. கமலா வீட்டைப் பார்த்துக்கொள்ள, அவர்களுக்கு உணவை சமைத்துக் கொடுக்கவென வீட்டிலே இருக்க, இவர்கள் மூவரும் கிளம்பினர். மருத்துவமனை பத்து பதினைந்து நிமிடத் தூரத்தில்தான் இருந்தது. பரிதி செல்லும் வழியிலே சுந்தரியின் மருத்துவ அறிக்கையை எடுத்துப் படித்தான். நிறைய மருத்துவ சம்பந்தமான வார்த்தைகள் அவனுக்குப் புரியவில்லை என அலைபேசியின் உதவியை நாடினான்.
இதயத்தின் மைட்ரல் வால்வு சுருக்கத்தின் காரணமாக இதயத்திற்கு செல்லும் இரத்த அளவு குறைந்துள்ளதாக அதில் இருந்தது. மேலும் அது எந்தளவில் சுருங்கி உள்ளது என மற்ற விவரங்களையும் முழுவதுமாகப் படித்து முடிக்க, மருத்துவமனை வந்துவிட்டனர்.
படிவத்தை நிரப்பி பணம் செலுத்தி பரிதி வர, இவர்களுக்கான அறை ஒதுக்கப்பட்டது. அந்த மருத்துவமனையை ஒருமுறை பரிதி சுற்றிப் பார்த்தான். எங்கும் பணத்தின் செழுமை காணப்பட்டது. இவர்களது அறையிலே இசைவாணி தங்குவதற்கான வசதிகளும் இருந்தன.
செவிலியர் வந்து சென்றார். பின்னர் ஏழு மணிக்கு நரைத்த முடியும் தடித்த உடலுமாக ஒரு மனிதரோடு சுந்தரிக்கு எப்போதும் மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவரும் வந்திருந்தார்.
“இசைவாணி... இவர்தான் சீஃப், அம்மாவுக்கு ஆப்ரேஷன் பண்ணப் போறாரு!” என அவர் முதன்மை மருத்துவரை அறிமுகம் செய்தார்.
“டாக்டர் எனக்கு சில டவுட்ஸ் இருக்கு க்ளியர் பண்றீங்களா?” பரிதியின் குரலில் அந்த மனிதர் நிமிர்ந்தார்.
“ஆப்ரேஷன் பண்ணப் போறது என்னோட மாமியாருக்குத்தான்!” எனத் தன்னை அறிமுகம் செய்தவன், “இப்போதான் ரிப்போர்ட்ஸ் பார்த்தேன். உங்களோட ட்ரீட்மென்ட் ப்ளான் என்ன? எந்த மாதிரியான ஆப்ரேஷன் இது. ஐசியூல எத்தனை நாள் அப்சர்வேஷன் பண்ணுவீகளா? டேரக்டா ஹார்டை ஓபன் செஞ்சு சர்ஜரி பண்ணுவீங்களா? அனஸ்தீசியன் யாரு? கூட வரலையா? ரெக்கவராக எவ்வளோ டைம் எடுக்கும். ஆப்ரேஷன் டைமிங் என்ன? எவ்வளோ நாள் நாங்க அடுத்தடுத்து செக்கப் வரணும்? தையல் எப்போ பிரிப்பீங்க? உங்க வயசைப் பார்த்தா எக்ஸ்பீரியன்ஸ்ட் பெர்சன் மாதிரித்தான் இருக்கு. ஆப்ரேஷன் சக்ஸஸ் ரேட் என்ன? இதுக்கு முன்னாடி ஏவிஎஸ் வந்த பேஷண்டுக்கு ஆப்ரேஷன் பண்ணிருக்கீங்களா? அப்புறம் முக்கியமான விஷயம்,
ஹாஸ்பிட்டல்ல பில்லை தீட்டிடுவிங்களா? இல்ல சீக்கிரம் அனுப்பிடுவிங்களா?” என இவன் அடுக்கடுக்காய் கேட்க, அவன் கடைசி கேள்வியில் தலைமை மருத்துவர் முறைத்தார்.
“சாரி சார்... நீங்க போங்க, நான் பேசிக்கிறேன்!” பெண் மருத்துவர் பதறி அவரை அனுப்பிவிட்டு உள்ளே வந்தார்.
“இசைவாணி உங்க ஹஸ்பண்ட் ரொம்ப பேசுறாரு. கண்டிச்சு வைங்க!” என அவர் அகல,
“பரிதி... உன் வாலைக் கொஞ்சம் சுருட்டி வை!” என இவள் அதட்டினாள்.
“மாப்பிள்ளையை என் முன்னாடி பேர் சொல்லிக் கூப்பிடாத வாணி!” மகளை கண்டித்த சுந்தரி, “அவர் என் மேல இருக்க அக்கறைலதானே கேட்டாரு. நீயே இதெல்லாம் கேட்கலை” என குறையாய் கூறினார் அவர்.
“நீயே உன் மாப்பிள்ளையை மெச்சிக்கோ...” அவள் முணுமுணுக்க, காமராஜ் குடும்பத்தோடு வந்துவிடவே, இடம் கலகலவென மாறியது. செவிலியர் வந்து சத்தமிடாதீர்கள் என்றுவிட்டு போனார்.
“வாணி... நைட்டு நான் உன் கூட ஸ்டே பண்றேன். எனக்கு செமஸ்டர் ஹாலிடேய்ஸ்தான்!” சரவணன் கூற,
“ப்ரோ... என் பொண்டாட்டியையும் மாமியாரையும் நானே பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க” பரிதி அவன் தோளில் கைப்போட்டான்.
“ப்ரோ... இப்போதான் அவுங்க உங்களுக்கு மாமியார். முன்னாடில இருந்தே அவுங்க எனக்கு அத்தை!” இவன் முகத்தை தூக்கினான்.
“நீங்க ரெண்டு பேருமே வேணாம். ஒருத்தர்தான் அம்மா கூட இருக்கணும். அது நானாவே இருக்கேன். ஷீ இஸ் அ விமன். சோ, நானே பார்த்துக்கிறேன்!” இசைவாணி இடைபுக, அவள் கூற்றின் அர்த்தம் உணர்ந்து இருவரும் அமைதியாகினர். அம்சவல்லி சமைத்து எடுத்து வந்த உணவை உண்டுவிட்டு அனைவரும் கிளம்பினர்.
பரிதி வாணியையே பார்த்துக்கொண்டு அகலாமல் நிற்க, “என்னாச்சு?” எனக் கேட்டவாறே சுந்தரியின் கவனம் ஈர்க்காது இயல்பாய் அவனை வெளியே அழைத்துச் சென்றாள்.
“தனியா இருந்துப்பீயா இசைவாணி? நான் வேணா வெளிய உக்கார்ந்துக்கிறேன்...” என்னவோ முதல் நாள் பள்ளியில் குழந்தையைவிடத் தயங்கும் பாவனையிலும் குரலிலும் இவளது முகம் கனிந்தது.
“இவ்வளோ பெரிய ஹாஸ்பிடல். நைட் ட்யூட்டி நர்ஸ், டாக்டர்ஸ் எல்லாரும் இருக்காங்க. சோ, ஒன்னும் பிராப்ளம் இல்ல. நீ கிளம்பு பரிதி!” இவள் கூற, பரிதி அனிச்சையாய் அவளது கையைப் பற்றி மென்மையாய் அழுத்தினான். என்னவோ நானிருக்கிறேன் என்பது போல பரிவாய் பார்த்தவனின் கைசூட்டில் இவளிடமிருந்த சஞ்சலம் மெல்ல விடைபெறுவதை மனம் உணர, மூச்சை இழுத்துவிட்டு புன்னகைத்தாள் இசைவாணி. சண்டையிட்டுக் கொண்டே இருந்தாலும் கூட இருவருக்கும் இடையே என்னவோ ஒன்று கண்ணுக்குத் தெரியாமல் அவர்களைப் பிணைத்துப் போட்டிருந்தது.
“எந்த டைம்னாலும் யோசிக்காம கால் பண்ணு இசைவாணி. பத்து நிமிஷத்துல வந்து நிப்பேன். நம்ம சண்டையெல்லாம் இதுல இழுக்க கூடாது. உன்னைத் தெரியுறதுக்கு முன்னாடியே ஆன்ட்டிக்காக வந்து நின்னவன் நான். சோ, எதையும் மனசுல வச்சிட்டு என்கிட்ட ஹெல்ப் கேட்க கூடாதுன்னு நினைக்காத. நான் இப்போன்னு இல்ல, எப்பவும் உனக்கு ஒரு நல்ல ப்ரெண்டா இருப்பேன்!” என அழுத்திக் கூறிவிட்டு அவன் நடக்க,
“அம்மா உள்ளதானே இருக்காங்க. நீ ஏன்டா இவ்வளோ சீன் போட்ற” அவள் கேலி செய்ய, திரும்பி நின்று முறைத்தான்.
“போடா!” இவள் உதட்டை அசைக்க, பத்திரமென ஒற்றை விரலால் மிரட்டிவிட்டுப் போனவனைப் புரிந்து கொள்ள முடியாது பார்த்திருந்தாள் இசைவாணி. எந்த வகையிலுமே இவனை சேர்க்க முடியாத அதிசய பிறவி என மனம் கூற, இதழ்கள் முறுவலித்தன.
தொடரும்...