- Messages
- 1,294
- Reaction score
- 3,823
- Points
- 113
நேரம் – 19 
பரிதி இசைவாணியின் அறையைச் சுற்றிப் பார்த்தான். அவர்கள் தெருவிலே இந்த வீடுதான் பெரியது என இப்போதுதான் அவனுக்குத் தெரிந்திருந்தது. வெளியே இருந்து பார்க்கும்போது இரண்டு படுக்கையறைக் கொண்ட அளவான அழகான வீடு என்றெண்ணியிருக்கிறான். ஆனால் இவளது அறையே அவன் வீட்டின் முகப்பறை அளவிற்குப் பெரிதாயிருந்தது.
உள்ளே தனியாய் நவீன அலமாரி, நிலைப்பேழை, மேஜை, நாற்காலி, கண்ணாடியுடன் கூடிய நாற்காலி, ஒரு பீன் பேக், சின்னதாய் அழகு சாதனப் பொட்களின் கடை, கூடை ஊஞ்சல் என மெதுவாய் விழிகளை சுழற்றி சுவாதீனமாக அனைத்தையும் எடை போட்டான்.
அவளது பஞ்சு மெத்தையில் அமர்ந்தான். அப்படியே மென்பஞ்சு உள்ளிழுத்தது. கைகளால் தடவிப் பார்த்தான். கண்டிப்பாக இது விலையுயர்ந்த மெத்தைதான். அவன் வீட்டின் மெத்தை கல்லுப் போலிருக்கும். ஆனால் இங்கே பூ போன்ற மெத்தை, இரண்டு புசுபுசு தலையணை, கண்ணைப் பறிக்கும் மென்போர்வை என அவள் வாழ்வின் செழுமையை நொடியில் கணக்கிட்டவனிடம் சற்றே மலைப்பு தோன்றியது.
தன் வீட்டைப் பற்றி யோசித்ததும் பெயர்ந்து விழும் வண்ண சுவர் பூச்சும், பெயருக்கு சுழலும் காற்றாடியும், கறை படிந்த சுவரும் என முகத்தைச் சுளித்தபடியே நிமிர்ந்து குளிரூட்டியைப் பார்த்தான். இன்று முழுவதும் அவன் வெளியே சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மையை உணரவேயில்லை. இதுவே தங்களது வீடாகயிருந்தால் வியர்த்து ஊற்றி இருக்கும் என நெற்றியை ஒருமுறைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
‘எப்படி இந்தப் பெண் தன் வீட்டில் பொருந்திப் போகிறாள்?’ என சந்தேகம் வந்தது. நேற்றைக்குத் தான் மெத்தையில் படுத்ததும் ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் அவள் தரையில் படுத்தது அப்போதைக்கு அவனுக்குப் பெரிய விடயமாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது ஆச்சர்யம் தோன்றிற்று. காலையில் சரவணன் இவனுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டுகிறேன் என சேட்டை செய்திருந்தான்.
மறுவீட்டு விருந்து என மூன்று வேளையும் மூச்சு முட்ட உண்ட பரிதிக்கு எளிதில் உறக்கம் வருமென தோன்றாததால், மீண்டுமொருமுறை அவனோடு வீட்டைச் சுற்றினான். மேல்தட்டு வர்க்கம் எப்படியிருக்கும் எனக் கண் கூடாக இன்றுதான் பார்க்கிறான்.
உண்ட உணவு செரிக்க வேண்டுமென இளையவர்கள் கேரம் விளையாட உட்கார, இசைவாணி தான் வரவில்லை என்றுவிட்டாள்.
“ஏன் வாணி... நாளைக்கு நாங்க ஊருக்கு கிளம்பிடுவோம். அப்புறம் எப்போ விளையாட்றது. வா!” அற்புதா அவளைக் கட்டாயப்படுத்தி அழைக்க, அவள் மறுத்துவிட்டாள்.
“ரொம்ப டையர்டா இருக்கு எனக்கு. அம்மா, நீங்க உங்க மருமகன், தம்பி பசங்களோட விளையாடுங்க. உங்களுக்குத்தான் விளையாட வருமே. நான் போய் தூங்குறேன்!” என அறைக்குள் அடைந்தாள். இவர்கள் சிறிது நேரம் விளையாடினர். அவள் தன்னால்தான் விளையாட்டைத் தவிர்க்கிறாள் என செல்லும் அவளையே பார்த்திருந்தான் பரிதி.
பின்னர் காமராஜ் இளையவர்களை அதட்டி படுக்கச் சொல்ல, முனங்கிக் கொண்டே அகன்றனர். பரிதியும் இசைவாணியின் அறைக்குள்ளே நுழைந்தான். அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அதனாலே அறையை ஆராய்ச்சி செய்தான்.
உண்ட மயக்கத்தில் உறக்கம் சொக்க, எங்கே படுப்பது எனப் பார்த்தான். தரையில் விரிப்பது போல புது மெத்தை, தலையணை, போர்வை என தனியாய் அவனுக்கு எடுத்து வைத்திருந்தாள் இசைவாணி. நேற்றைக்கு அவளுக்குத் தான் என்ன செய்தோம் என தன்னையே திட்டிக் கொண்டான். காலையில் சண்டை அறையோடு முடிந்தது என்பது போல எங்கேயும் அவனை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்டாள். உணவு உண்ணும்போது அவருக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும் எனப் பார்த்து பார்த்து பரிமாறினாள். மதியம் சிறிது நேரம் ஓய்வெடுக்கப் பணித்தாள். இப்போதும் அவனுக்காக யோசித்திருக்கிறாள்.
அவனுக்கு சட்டென குற்றவுணர்ச்சியாகப் போயிற்று. காலையில் தான் பேசிய முறை நிரம்ப தவறு. ஆனால் அதன் சாராம்சம் தவறில்லை என மனம் வாதாடியது. யோசனையுடன் உறங்கிப் போனான். மறுநாள் மாப்பிள்ளை வீட்டில் கறிவிருந்து ஏற்பாடாகியிருந்தது. இப்போதைக்கு சீர் பொருட்கள் எதுவும் வேண்டாமென சிந்தாமணி கூறிவிட்டார்.
அவர்கள் வாங்கிக் கொடுக்கும் பொருட்களை வைப்பதற்கு தங்கள் வீட்டில் தோதுபடாது என்றவர், எதிர்காலத்தில் பெரிய வீடு கட்டியதும் வாங்கிக் கொள்கிறோம் என தன்மையாய் மறுத்துவிட்டார். சுந்தரிக்கு அதில் வருத்தம்தான். இருந்தும் தானே கொடுப்பதாக கூறியும் அவர்கள் வேண்டாமென்றதில் சற்றே நிம்மதியும் கூட. வரதட்சணை கொடுமையெல்லாம் எத்தனையோ செய்தியில் பார்த்திருக்கிறார். மகள் புகுந்த வீடு எப்படியோ என்ற சிறு சஞ்சலமும் அகன்றது.
கறி விருந்தோடு உறவினர்கள் அகன்றனர். காமராஜ் குடும்பமும் அன்றைக்கு மாலை விடுபெறுவதாக ஏற்பாடு. சரவணனிடம் தன் துணிகள், பொருட்கள் என அத்தியாவசியமானவைகளை இங்கே எடுத்து வரப் பணித்தாள்.
“ஏன்... உன் புருஷன் என்ன பண்றாரு? என்னைக் கட்டிக்கோன்னு சொன்னா மாட்டாளாம். ஆனால் வேலை செய்ய மட்டும் நானாம்?” என அவளை வம்பிழுத்துக் கொண்டே பொருட்களை எடுத்து வந்து கொடுத்தான் அவன். அற்புதாவும் அவளும் சேர்ந்து சிலவற்றை பரிதியின் அறையில் அடுக்கினர்.
“போதும்... நீயும் உன் புது புருஷனும் எனி டைம் ரொமான்ஸ் பண்ணாம இதை எல்லாத்தையும் அடுக்கி முடிங்க. இவ்ளோதான் என்னால செட் பண்ண முடிஞ்சது!” என இரண்டு கையையும் உதறி அவள் கண்ணடிக்க, அவள் பேச்சில் முறைத்தாள் இசைவாணி. சிந்தாமணி மாலைத் தேநீர் மற்றும் சிற்றுண்டி கொடுக்க, அதைப் பருகிவிட்டு அவர்கள் விடை பெற்றனர்.
கல்யாண பரபரப்பு அற்று வீடே வெறிச்சோடி கிடந்தது. சிந்தாமணி மொத்த வீட்டையும் நாளை சுத்தம் செய்ய வேண்டுமென அலுக்க, “நான் ஹெல்ப் பண்றேன் அத்தை. ரெண்டு பேர் சேர்ந்து செஞ்சா வேலை ஈஸியா இருக்கும்!” என்றாள் இசைவாணி.
“நீ சொன்னதே ரொம்ப சந்தோஷம்த்தா. உனக்கு எப்போ வேலைக்குப் போகணும்? லீவ் எத்தனை நாள்? அவனுக்கு ஒரு வாரம் லீவு கொடுத்திருக்காங்க?” என அவர் கேட்டார்.
“நாளைக்கு லீவ்தான் அத்தை. நாலு நாள்தான் கேட்டு வாங்குனேன். மாசக் கடைசி அம்மாவுக்கு ஆப்ரேஷன் டேட். சோ அப்போ ஒரு டென் டேய்ஸ் லீவ் கேட்டிருக்கேன். அதனால இப்போ பெருசா எடுக்க முடியலை!” இவள் பதிலளித்தாள்.
“சரி வாணி... நீ சொல்றதும் கரெக்ட்டுத்தான். அம்மாவை ஹாஸ்பிடல்ல பார்த்துக்கணும் இல்ல?” என அவர் பரிவுடன் கேட்க, இவள் பதிலளித்தாள். பரிதி அவர்கள் பேசுவதையே இருமுறைக்கும் மேல் நிமிர்ந்து பார்த்துவிட, அவளால் அதற்குமேல் பேச்சை வளர்க்க முடியவில்லை.
“நைட்டுக்கு என்ன டிஃபன் அத்தை? வாங்க குக் பண்ணலாம்!” என எழுந்தாள்.
“கறிக்குழம்பு இருக்கு, கோழிக் கறி கூட்டும் இருக்குல்ல, இட்லி மட்டும் சுட்டுட்டா போதும். நானே பார்த்துக்கிறேன்!” என அவர் கூறியும் கேட்காமல், இவள் இட்லி சுட்டாள். மார்த்தாண்டம் இரண்டு நாட்கள் விடுப்பு விட்டிருந்த கடையை இன்றைக்கு திறந்துவிட்டார். பரிதி மூன்று நாட்களாக கடைக்குச் செல்லவில்லை. புது மாப்பிள்ளை என்பதால் மார்த்தாண்டம் எதுவும் சொல்லவில்லை. அதுவும் இல்லாமல் அவன் கடைக்கு வந்து அமர்ந்தால் இசைவாணி ஏதும் அவனை குறைவாக நடத்திவிடக் கூடாதென எண்ணி அவரும் அழைக்கவில்லை.
“அம்மா... பசிக்குது!” தொலைக்காட்சியைப் பார்த்தவாறே கீர்த்தனா கத்தினாள்.
“இட்லி சுட்டுட்டேன் கீர்த்தி!” என்றவள், “கீழே எடுத்து வைக்கவா அத்தை? எல்லாரும் சாப்பிடலாம்!” எனக் கேட்டாள்.
“நான் எடுத்து வைக்கிறேன். நீ தட்டெடுத்துட்டு வா!” என்றவர் கோழிப் பிரட்டலை சூடு செய்து எடுத்து வந்தார்.
“பரிதி வா... நீயும் வந்து சாப்பிடு!” அவர் குரலில் பரிதி கீர்த்தனாவோடு அமர்ந்தான். அஜித் படிப்பதாக கூறி நண்பனின் வீட்டிற்குச் சென்றவன், இன்னும் வரவில்லை.
“பரிதி... அஜித்துக்குப் ஃபோன் போடு டா. இன்னும் வரக் காணோம் அவனை!” சிந்தாமணி நேரத்தைப் பார்த்துவிட்டு கூறவும், பரிதி தமையனுக்கு அழைத்து அலைபேசியை தாயிடம் நீட்டினான்.
“ஏன்டா... நீ கேட்க மாட்டீயா எப்போ வருவான்னு. சின்ன புள்ளைங்க மாதிரி இப்பவும் சண்டை போட்டுட்டு சுத்துறானுங்க!” அவர் அலுத்துக் கொண்டே அலைபேசியில், ஹலோ சொன்ன மகனிடம் கவனம் வைத்தார்.
“சாப்பிட வா அஜித். மிச்சத்தை வீட்ல வந்து படிச்சுக்கோ!” என அவன் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தார். இசைவாணி அவர்களுக்கு பரிமாறினாள்.
இரண்டு இட்லி போதுமென கீர்த்தனா கூற, “ரெண்டு இட்லி எப்படி பத்தும் கீர்த்தனா?” என அதட்டியவள், அவள் தட்டில் மற்றொரு இட்லியை சேர்த்து வைத்தாள். பரிதி தட்டில் ஐந்தாறு இட்லிகளை வைத்து கோழிக் கறியை வைக்கவும், போதுமென அவன் கையை நீட்டி சைகை செய்ய, நிறுத்திக் கொண்டாள்.
“நீயும் சாப்பிடு வாணி!” என்ற சிந்தாமணி அவளுக்கு உணவைப் பரிமாறினார்.
“நீங்க அத்தை?” என்ற கேள்வியோடு அவள் இட்லியைப் பிய்த்து வாயில் வைத்தாள்.
“நான் அவரோட சாப்பிட்டுக்கிறேன் வாணி!” என்றவர் மகன் தட்டில் மேலும் மூன்று இட்லிகளை வைத்தார். அவன் சத்தமில்லாமல் சாப்பிட்டு எழுந்துவிட, கீர்த்தனா நெளிந்து கொண்டேயிருந்தாள்.
“உடனத்தவன் சாப்பிட்டு எழுந்து போய்ட்டான். நீ இன்னும் மூனு இட்லியை சாப்பிடாம என் முகத்தையே ஏன் பார்க்குற?” என மகளை அதட்டினார் பெரியவர்.
“மதியேமே கறிச்சோறு நிறைய சாப்பிட்டேன் மா. இப்போ உள்ளே இறங்கலை!” என தாயையும் அண்ணியையும் பாவமாய் பார்த்தாள்.
“போ...போய் நாய்க்கு வச்சிட்டு தட்டை கழுவி வை!” என சிந்தாமணி கூறி முடிக்கும் முன்னே சிட்டாகப் பறந்திருந்தாள் சின்னவள்.
“இந்த வீட்ல சாப்பிட்றதுக்கு மூக்கால அழுவுறது இவ ஒருத்திதான். ஆம்பளை பசங்க ரெண்டு பேரும் வஞ்சனையில்லாம சாப்பிடுவானுங்க!” என்றவர், “பரிதி... நீ போய்ட்டு அப்பாவை அனுப்பிவிடு...” என்றார்.
அவன் சரியென அகலப் பார்க்க,
“வாணி... உங்கம்மா சாப்பிட்டிருப்பாங்களா இந்நேரம்?” எனக் கேட்டார்.
“சாப்பிட்ற நேரம்தான் அத்தை!” இவள் யோசனையுடன் கூற, மகனை நிறுத்தியவர், ஒரு கிண்ணத்தில் கறிக் குழம்பை ஊற்றிக் கொடுத்தார்.
“வாணி அம்மாகிட்ட கொடுத்துடு டா!” என அவன் கையில் திணித்தார் பெரியவர்.
“அத்தை... பரவாயில்லை. கமலாமா குக் பண்ணிடுவாங்க!” இவள் மறுப்பதை அவர் பெரிதாய் எடுக்கவில்லை.
பரிதி சுந்தரியிடம் குழம்பைக் கொடுத்துவிட்டு இரண்டு நிமிடங்கள் பேசி வந்தவன், தந்தையை உணவுண்ண அனுப்பினான். அவர் சாப்பிட்டு வர, சிறிது நேரம் இருவரும் கடையைப் பார்த்துக் கொண்டனர். மணி ஒன்பதரையாகவும் கடையை அடைத்துவிட்டுப் படுக்க சென்றனர்.
பரிதி அறைக்குள் நுழைய, நேற்று அவள் வீட்டில் படுத்திருந்த மெத்தையை தரையில் விரித்து அமர்ந்திருந்தாள் இசைவாணி. அலைபேசியில் யாரிடமோ உரையாடிக் கொண்டிருந்தாள்.
“ப்ம்ச்... அதெல்லாம் இல்ல வினோத். அத்தை ரொம்ப நல்ல மாதிரி. எனக்கு புது இடத்துக்கு வந்த ஃபீலே இல்ல. இங்க எல்லாருமே கேரிங்தான்!” என்றவள், இவனைப் பார்த்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள்.
அவள் அழைப்பைத் துண்டிக்கும் வரைக் காத்திருந்தவன், “இசைவாணி... நீ மேல படுத்துக்கோ. எனக்கு கீழே படுக்குறதுல பிராப்ளம் இல்ல!” என்றான் மென்குரலில்.
“நோ நீட்!” ஒரே வார்த்தையில் பதிலளித்தாள் இவள்.
‘பெத்த அம்மாகிட்டே நான் பேசுறதையே இவனால பொறுத்துக்க முடியலை. இதுல கட்டிலை விட்டுத் தரானாம். இப்போ கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு நாளைக்கு குத்திக் காட்டிப் பேசுவான். இவனெல்லாம் திருந்தாத ஜென்மம். நான்தான் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்!’ மனதில் நினைத்ததை வெளியே கூறவில்லை. அவனிடம் பேசி வம்பளக்க பிடிக்காது ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள். அவனுக்கு நெருடியது. நேற்றைக்கு அவள் வீட்டைப் பார்த்தப் பின்பும் அவள் தரையில் படுப்பது இவனுக்குப் பெரிதாய் உறுத்தியது. ஆனாலும் மேலும் பேசாது படுத்துவிட்டான்.
இசைவாணியின் மௌனம் அவனுக்கு உவப்பாய் இல்லை. என்ன சண்டையென்றாலும் வாய்க்கு வாய் பேசி அவன் மூக்கை உடைக்கும் குணம் அவளுடையது. ஆனால் இரண்டு நாட்களாக அவளுடைய அதீத அமைதி மெல்ல அவனை அசைத்துப் பார்த்தது. அவளிடம் நட்பு கரத்தைக் கேட்டுப் பெற எண்ணம் உதித்தது. பாதி தவறு தன் மீதுதான் என உணர்ந்தவன், நாளை அவளை சமாதானம் செய்துவிட முடிவு செய்து உறங்கிப் போனான். ஆனால் அது அத்தனை எளிதில்லை என்பதை உணர்ந்து நிஜத்தில் மலைத்துப் போனான்.
காலையில் இசைவாணி விரைவாகவே எழுந்து விட்டாள். இங்கே அவளுக்கு உறங்கப் பழக நாளெடுக்கும் என்ற எண்ணத்தோடு அன்றைய நாளைத் தொடங்கினாள். பிள்ளைகள் இருவரும் பள்ளி கிளம்பிவிட, மார்த்தாண்டம் கடை திறக்கச் சென்றுவிட்டார். சிந்தாமணி மொத்த வீட்டையும் கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். திருமண நாளின் கசகசப்பில் வீடே அழுக்கானது போலத் தோன்றியது அவருக்கு. ஒருமுறை துடைத்துவிடலாம் என நினைத்து சுத்தம் செய்தார்.
“அத்தை... நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா? நீங்க தனியாளா பார்க்குறீங்களே!” என இவள் உதவிக்குச் சென்றாள். அவர் மறுப்பாகப் பார்க்க, ஏற்கனவே அவர் வாளியில் பிடித்து வைத்திருந்த நீரை எடுத்து வீட்டைத் துடைக்கத் தொடங்கினாள்.
“வாணி... நீ போ... குளிச்சிட்டு சாப்பிடு. உன் புருஷன் எழுந்துட்டா அவனுக்கு டீயை சூடு பண்ணிக் குடு. நீ ஏன் கஷ்டப்படுற?” பணக்கார வீட்டு மருமகள் இந்த வேலையெல்லாம் தன் வீட்டில் பார்த்திருப்பாளோ எனத் தயங்கி அவர் மறுத்தார்.
“அத்தை... அங்க என் வீட்டை நான் ஒரே ஆள் க்ளீன் பண்ணி மாப் போடுவேன். நம்ப வீடு அதைவிட சின்னதுதானே? நீங்க சீக்கிரம் கூட்டுங்க. நான் அப்படியே மாப் போட்டுட்டே வந்துட்டா ஈஸியா முடியும்!” என்றாள் இயல்பாக. அவள் வீட்டை சிறியது என விளித்ததில் பெரியவர் முகம் மாறியது. ஏற்கனவே வீட்டின் அளவை வைத்துதான் சீர் பொருட்களை தாங்கள் மறுத்திருக்க, அதையே இவள் சொல்லிக் காண்பிக்ககவும் சின்னதாய் சஞ்சலம் வந்தமர்ந்தது.
அவர் முகத்தைக் கவனித்துவிட்டவள், “ஐயோ அத்தை! நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. பெரிய வீட்டையே யாரோட ஹெல்பும் இல்லாம க்ளீன் பண்ணேன். சோ இது கஷ்டமா இருக்காதுன்னு சொல்ல வந்தேன்!” என்றாள் அவசரமாக அவருக்குப் புரிய வைக்கும் நோக்கோடு.
“சரிம்மா... நானும் தப்பா எல்லாம் எடுத்துக்கலை. எலி வலைனாலும் தனி வலை. இருபது வருஷமா நானும் என் புருஷனும் சிறுக சிறுக சேர்த்துக் கட்டுன வீடு இது. வீட்டு சுவர் முழுக்க என் புருஷனோட வியர்வை வாசம் வீசும்!” என்றார் கணவரின் உழைப்பை மெச்சியபடி. நாங்கள் உழைத்துக் கட்டிய வீடு எங்களுக்கு எப்போதும் உசத்திதான் என்ற தொனியில் பேசினார் அவர்.
அவரை சிரிப்புடன் பார்த்த இசைவாணி, “தெரியும் அத்தை.. உங்க புள்ளை சொல்லிருக்காரு. மாமா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்புறம் பொறுப்பானவருன்னு....” என்றாள் உதட்டோடு உறைந்த புன்னகையுடன்.
சிந்தாமணி அறைக்குள்ளும் கூட்ட, இவள் உள்ளே துடைத்தெடுத்தாள். இருவரும் மெல்லிய குரலில் பேசியபடியே வேலை பார்த்தனர். அது எதையும் காதில் வாங்காமல் பரிதி நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான்.
வீட்டை சுத்தம் செய்ததும் சிந்தாமணி மூன்று நாட்களாக துவைக்காத துணியை பின் கட்டிற்குச் சென்று இரண்டு வாளிகளில் ஊற வைக்க, இவள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“அத்தை... இவ்வளோ துணியை ஹேண்ட் வாஷ் பண்ணுவீங்களா?” எனக் கேட்டாள்.
“அரைமணி நேரத்துல துவைச்சு அலசி போட்ருவேன் வாணி. வீட்ல எனக்கு என்ன வேலை பெருசா இருக்கு சொல்லு. காலைல எழுந்து சமைக்கிறது, வீட்டைக் கூட்டுறது, துணி துவைக்கிறது. இது மூனும்தான் பெரிய வேலை. மத்த எல்லாம் கொசுறு!” என சலவைப் பொடியை துணியுடன் கலந்தார்.
“சொல்றதுக்கு ஈஸியா இருக்கு. பட் நிஜத்துல டெய்லி கைலயே துவைச்சா கை வலிக்குமே உங்களுக்கு. பேசாம ஒரு வாஷிங் மெஷின் வாங்கலாமா?” என அவரிடம் பரிவோடு கேட்டாள்.
“அதெல்லாம் வேணாம்த்தா... கரண்ட் பில்லு எகிறிடும். சும்மா டீவியைத்தானே பார்த்துட்டுக் கிடப்பேன். அந்த நேரத்துக்கு துவைச்சுப் போடப் போறேன்!” என்றவர் மகன் எழுந்து வரவும், அவனுக்குத் தேநீரைக் கொடுத்தார்.
“டீயைக் குடிச்சிட்டு அப்பாவை வரச் சொல்லு டா. அவர் சாப்பிட்டுப் போகட்டும். நீ இப்பதானே எழுந்திருச்ச, லேட்டாதானே சாப்பிடுவ?” அவர் கேட்க, இவன் பார்வை மனைவியிடம்தான்.
சரியென தலையாட்டலுடன் அவன் அகல, மார்த்தாண்டம் வந்ததும், “வா வாணி... நீயும் சாப்பிடு. சாப்பிட்டு வேலை பார்க்கலாம். மணி பத்தாகப் போகுதுல்ல?” எனக் கேட்டு அவளோடு அமர்ந்து உண்டார். அவர் நேற்றைக்கு மீதமான பழைய சோற்றை உண்ண, இவளும் மார்த்தாண்டமும் தோசை சாப்பிட்டனர். நேற்று மதியம் வைத்த கறிக்குழம்பை சுண்ட வைத்து இப்போதும் ஊற்றினார். அவளுக்கு அது தொண்டையில் இறங்கவில்லை. நேற்று முழுவதும் அதே குழம்பு. இன்றைக்கும் அதுவா என சலிப்புடன் அரை வயிற்றோடு எழுந்தாள்.
மார்த்தாண்டம் சாப்பிட்டுவிட்டு கடைக்குச் சென்றுவிட, “நான் போய் துணியை அலசிக் காயப் போட்டுட்டு வரேன். நீ டீவியைப் பாரு இசைவாணி!” என சிந்தாமணி பின்கட்டுக்குச் செல்ல, இவள் அவர் பின்னாலே சென்றாள்.
“அத்தை... நான் டீவி பெருசா பார்க்க மாட்டேன். நீங்க துவைங்க, நான் ஹெல்ப் பண்றேன்!” என அவரருகே ஒரு கல்லை எடுத்துப் போட்டு அமர்ந்தாள். அவர் ஒரு வாளித் துணியை தன்னருகே நகர்த்தி ஒவ்வொரு உடையாக எடுத்து சோப்பு போட்டு கும்ம, இவள் வாளியில் நீரைப் பிடித்து அலசினாள்.
சூரியன் சுட்டெரித்தான். சுற்றிலும் மரங்கள் இருந்ததால் பெரிதாய் வெப்பம் பரவவில்லை. ஆனாலும் இசைவாணிக்கு வியரத்து வழிந்தது. அவள் வீட்டிலே கமலா இயந்திரத்தில்தான் துணியைப் போட்டு எடுப்பார். இதுதான் முதல்முறையாக அவள் கையில் துவைக்கிறாள். குனிந்து நிமிர்ந்து அலசிப் போடுவதில் சிரமமாயிருக்க, கையால் துணி துவைப்பது அத்தனை எளிதல்ல என மூளை கூறியது.
சட்டென அவர்கள் முன்னிருந்த வெயில் தாள, பின் வாசல்படியே மறைத்தவாறு வந்து நின்ற பரிதி இசைவாணியைத்தான் பார்த்தான். சில நொடிகளில் மகன் வரவை உணர்ந்த சிந்தாமணி, “வாணி... போதும் போ... மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன். நீ போய் அவனுக்கு சாப்பாடு போடு!” என மருமகளை விரட்டினார் பெரியவர். அவள் எதுவும் பேசாது உணவை எடுத்து வந்து கூடத்தில் வைத்து தட்டில் பரிமாற, பரிதி அவளையேத்தான் பார்த்தான். அவள் இரண்டு நாட்களாக அவன் முகத்தைக் கூட சரியாகப் பார்த்து பேசவில்லையென மனம் சுணங்கியது.
தோசை வைத்த கையைப் பிடித்தவன், “இசைவாணி... இப்போ எதுக்கு மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்க நீ?” என சின்ன குரலில் அதட்டினான்.
“தொட்டுப் பேசாத பரிதி. நான் ஏற்கனவே சொல்லிருக்கேன். கையை விடு!” என அவள் கரத்தை உருவப் பார்க்க,
“நீ முதல்ல நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்துப் பேசு!” என்றான் அழுத்தமாக. சில நொடிகள் தாமதித்துவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.
“சாரி... அது... நான் பேசுன முறை தப்புதான். பட் சொல்ல வந்த விஷயம் தப்பு கிடையாது!” தயங்கியபடியே கூறியவனிடம் அவள் பதிலேதும் உரைக்கவில்லை.
“நீ ஒன்னும் இங்க பெர்மனன்டா இருக்கப் போறது இல்லையே. அப்புறம் ஏன் அம்மாவோட ரொம்ப க்ளோசா பழகுற? ரெண்டு வருஷம் கழிச்சு பிரியும்போது உனக்கும் கஷ்டம், அவங்களுக்கும் கஷ்டம். லிமிட்டோட பழகுனா பிராப்ளம் இருக்காதுன்னுதான் சொல்ல வந்தேன். பட் அன்னைக்கு நீ அம்மாவோட சிரிச்சு பேசவும் கொஞ்சம் பொறாமையாகி அப்படி கத்திட்டேன். தட் வாஸ் நாட் அ இன்டென்ஷனல். நீ ஹேர்ட்டாகியிருந்தா ஐ’யம் ரியலி சாரி!” மனதிலிருப்பதை கூறிவிட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.
“சரிதான்... நீ சொன்ன மாதிரியே நான் உன் ஃபேமிலியோட லிமிட்டா பழகிக்கிறேன்!” அவள் மறுப்பேதும் கூறாமல் ஒப்புக் கொண்டதில் அவன் முகத்தில் ஏமாற்றத்தின் கீற்று பரவிற்று. அவள் ஏதாவது சண்டையிடுவாள், அதை வைத்து சமாதானம் செய்யலாம் என எண்ணினான். ஆனால் இசைவாணி அத்தனை எளிதில் இறங்கி வரவில்லை. அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு குழம்பை அவன் தட்டில் ஊற்றினாள்.
இரண்டு தோசையை உண்டவன், “நீ ஏன் வேலையெல்லாம் இழுத்துப் போட்டு செய்ற?” எனக் கேட்டான். இவள் பதில் கூறாமல் அவனைப் பார்த்தாள்.
“இல்ல... உன் வீட்ல நீ இந்த வேலையெல்லாம் செஞ்சு பழகியிருக்க மாட்ட. நீ டேடிஸ் லிட்டில் ப்ரின்சஸ் மாதிரி வளர்ந்திருப்ப? எதுக்கு கஷ்டப்படுற. அம்மா கீர்த்தனாவையே வேலை வாங்க மாட்டாங்க!” என்றான்.
“டேடிஸ் லிட்டில் ப்ரின்சஸ்தான். அதுக்காக போற எல்லா இடத்துலயும் நான் சலுகையை எக்ஸ்பெக்ட் பண்ண முடியாது. உங்க குடும்பத்துல நான் மருமகளா வாழ வந்திருக்கேனா, அதுகேத்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணணும். போற இடத்துக்கு தக்கன நம்பளை மாத்திட்டாதான் நம்ப சர்வைவ் பண்ண முடியும். மோர் ஓவர் உங்கம்மாவுக்கும் என் அம்மாவுக்கும் ஒரே வயசுதானே. எப்பவோ என் அம்மா ஹவுஸ் ஹோல்ட் வொர்க்லருந்து ரிட்டையராகிட்டாங்க. அப்போ உன் அம்மாவுக்கு கொஞ்சமாச்சும் ரிலாக்ஸேஷன் வேணும்னுதான் நான் ஹெல்ப் பண்றேன். மத்தபடி உன் அழகைப் பார்த்து மயங்கி உன்னை சுருட்டி என் நைட் ட்ரெஸ்ல முடிஞ்சுக்க கிடையாது. பெரிய மனமதன் நானுன்னு கனவு காணாம சாப்பிட்டு எழுந்திரி!” என்றாள் எள்ளலாக. அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.
“என்ன முறைப்பு உனக்கு. சும்மா நான் என்ன பண்றேன்னு என்னை வாட்ச் பண்றதே வேலையா வச்சுக்காத. நீ பார்த்துட்டே இருக்கது எனக்கு இர்ரிடேட்டாகுது. நானும் மனுஷி தான். வானத்துல இருந்தா குதிச்சு வந்தேன். தெரிஞ்சா செய்யப் போறேன். இல்லன்னா கத்துக்கிட்டு செய்ய போறேன். எல்லாத்துலயும் குறை கண்டுட்டே இருக்காத!” என கண்டித்தவள், எழுந்து சிந்தாமணிக்கு உதவச் சென்றுவிட்டாள்.
பரிதி செல்லும் அவளையே பார்த்திருந்தான். அங்கே அவள் வீட்டில் பார்த்த வாணிக்கும் இங்கே தன் மனைவியானவளுக்கும் இடையே ஏழு வேறுபாடுகளை மனம் கண்டறிய முயன்றது. சாப்பிட்டுவிட்டு எழுந்தவன், அறைக்குச் சென்று நோட்டை எடுத்து சாரி என நூறு முறை எழுதி முடித்தான்.
சிந்தாமணியோடு துவைத்த உடைகளை காய வைத்துவிட்டு, நனைந்து போயிருந்த தன்னுடைய ஆடையையும் வெயிலில் காண்பித்து அவரோடு சிறிது நேரம் அளவளாவிக்
கொண்டிருந்த இசைவாணி அறைக்குள்ளே நுழைய, அவளுக்காகத்தான் காத்திருந்தான் பரிதி.
வாணி வந்ததும் தயங்கியபடியே அந்த நோட்டை அவளிடம் கொடுத்தான். என்னவென புரியாது பார்த்தவளின் உதடுகள் வளைந்தன.
“இதெல்லாம் திருந்துறவங்கதான் எழுதணும் பரிதி. நீயெல்லாம் ஆயிரம் இல்ல, லட்சம் முறை எழுதுனாலும் உன்னை மாத்திக்க மாட்ட. நான் என்ன உன்னோட ஒரிஜினல் பொண்டாட்டியா? உன்னைத் திருத்த? நீ உன் இஷ்டப்படியே இருந்துக்கோ. ஐ டோன்ட் ஹேவ் எனி அப்ஜெக்ஷன். இன்னும் கொஞ்ச நாள்ல நான் லண்டன் போனதும் உனக்கு விசாக்கு ஏற்பாடு பண்றேன். அவ்வளோ தான் நமக்குள்ள, வேற எதுவும் கிடையாது. வெளிய எல்லார்கிட்டயும் ஆக்ட் பண்ணிக்கலாம். ரூம்ல என்னால நடிக்க முடியாது. லெட் மீ பீ மைசெல்ஃப் இன் திஸ் ரூம்!” என அவள் அகல, இவன் அவளை சமாதானம் செய்ய வழியறியாமல் மலைத்துப் போனான்.
தொடரும்...

Last edited: