- Messages
- 1,293
- Reaction score
- 3,820
- Points
- 113
நேரம் – 18 
மணமக்கள் முதலில் பெண்வீட்டிற்கு சென்று சில சம்பிரதாயங்கள் முடிந்ததும், பின்னர் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சுந்தரியும் கமலாவும் உடன் வர, காமராஜ் குடும்பமும் வாணியின் அப்பா சொந்தத்தில் ஒரு சிலரும் மாப்பிள்ளையின் இருப்பிடத்திற்கு வந்தனர்.
பரிதியின் வீடு கையளவே என்பதால் அத்தனைப் பேர் அதில் அமர முடியவில்லை. மார்த்தாண்டம் முன்பே யோசித்து வீட்டின் முன்னே கொட்டகைப் போட்டிருந்தார். வாயிலில் வண்ண விளக்குகள் ஒளிர, நாற்காலிகள் இடப்பட்டிருந்தன. அங்கேயே உறவினர்கள் அமர்ந்துவிட்டனர்.
“ஏன் சுந்தரி... உன் வீட்டுக்காரர் இல்லைன்னு நீ உன் புள்ளையை இப்படியா வந்து கொடுப்ப? படிச்ச தெளிவான பொறுப்பானவ உன் மக. கொஞ்சம் வசதியான இடமா பார்த்திருக்கலாம் இல்ல. எல்லாரும் வந்தா உக்கார கூட இடம் பத்தலை!” என உறவினர் ஒருவர் முணுமுணுக்க, சுந்தரி அவரிடம் சங்கடமாய் சிரித்து வைத்தார். பதில் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. ஒருசிலர் இதே கேள்வியை வெவ்வேறு வகையில் கேட்க, அம்சவல்லி பதில் சொன்னார். ஆனாலும் எல்லோருடைய வாயையும் அடைக்க முடியவில்லை.
இரவுணவு மாப்பிள்ளை வீட்டில்தான் என்பதால் ஒவ்வொருவராக உண்ண, இசைவாணி குளித்து முடித்து புது புடவை ஒன்றை உடுத்தி மெல்லிய ஒப்பனையோடு உண்ண அமர்ந்தாள். அவளுக்கு அருகே பரிதி அமர, அற்புதாவும் சரவணனும் அவர்களுடன்தான் சாப்பிட்டனர். சுந்தரியும் கமலாவும் வயிராற உண்டார்களா என இவள் அவ்வப்போது அவர்களை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே உண்டாள்.
சிந்தாமணி அனைவரையும் எவ்வித குறையுமில்லாமல் பார்த்து பார்த்து செய்தார். தாவணி கட்டியிருந்த கீர்த்தனா, அதன் அசௌகரியத்தை ஆங்காங்கே யாருமறியாமல் சரிசெய்தபடி, பாவடையைக் கையில் தூக்கிக் கொண்டே தாயிற்கு உதவ, அஜித் தன் நண்பர்களை அழைத்து வந்து உண்ண வைத்தான். கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றிருக்க, வீட்டினர் மட்டுமே எஞ்சி நின்றனர்.
“வாணிமா...” என மகளின் கைப்பிடித்து நின்றார் சுந்தரி. மகள் ஆசைப்பட்டவனை மணந்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், ஒரே மகளைவிட்டுப் பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் அவர் முகம் கசங்கியது. அவள் பிறந்ததிலிருந்து இன்றுவரை பெரிதாய் அவளைப் பிரிந்தது போல அவருக்கு நினைவில்லை. தாயின் முகத்தைப் பார்த்தே அகத்தை அறிந்த இசைவாணி அவரை அணைத்துக் கொண்டாள்.
“ம்மா... ரொம்ப எமோஷனலாக கூடாது. அது உன் உடம்புக்கு நல்லதில்ல. இங்க தானே இருக்கப் போறேன் நான். டெய்லி நம்ப வீட்டுக்கு வருவேன்!” என கனிவாய் கூறியவள், “கமலாம்மா... போனதும் அம்மாவுக்கு டேப்லெட் கொடுத்துடுங்க. மகளுக்கு கல்யாணமான சந்தோஷத்துல அம்மா மாத்திரை போட மறந்துடுவாங்க!” என்றாள் கேலியாக. சுந்தரி மகளை மென்மையாய் முறைத்தார்.
“ஏன்த்தை... உனக்கே இது ஓவரா தெரியலை. உன் வீட்டு வாசல்லருந்து வாணின்னு கத்துன்னா இங்க கேட்கப் போகுது. என்னமோ அவளை வேற கண்டத்துல தனியா விட்டுட்டுப் போற ஃபீல் எதுக்கு உனக்கு?” சரவணன் கேலிக் குரலில் அனைவரது முகத்திலும் புன்னகை படர்ந்தது. சுந்தரி பரிதியைப் பார்த்தார். அவன் அவரிடம் புன்னகைத்தான். இசைவாணி அவனிடம் கண்ணைக் காண்பித்தாள்.
முதலில் புரியாது விழித்தவன், பின்னர், “ஆன்ட்டி, உங்கப் பொண்ணைப் பத்தி இனிமே எந்தக் கவலையும் வேண்டாம். என் பொண்டாட்டியை நான் நல்லா பார்த்துப்பேன். நீங்க அதைப் பார்த்து சந்தோஷப்பட போறீங்க!” என்றான் அவர் மனதறிந்து. அவன் கரம் இயல்பாக இசை வாணியின் தோளைச் சுற்றி பின்னிப் படர்ந்தது. அதில் திடுக்கென அவள் அதிர்ந்தாலும், இன்னும் இரண்டு வருடங்களுக்கு இதெல்லாம் சகஜமென தன்னை அருகிலிருந்தவனுக்குப் பழக முயன்றாள்.
“கேட்கவே நிம்மதியா இருக்கு தம்பி!” என்றவர், “என் பொண்ணு ரொம்ப பொறுப்பானவ. செல்லம் கொடுத்தாலும் நல்லது கெட்டது சொல்லித்தான் வளர்த்திருக்கேன் அண்ணி. நீங்கதான் அவ ஏதாவது தப்பு செஞ்சா சொல்லி புரிய வைக்கணும்!” என சிந்தாமணியிடம் உரைத்தார். இந்த சில வாரப் பழக்கத்தில் மார்த்தாண்டம் அண்ணனாகவும், இவர் அண்ணியாகவும் மாறிப் போயிருந்தார்.
“அட... இதுல என்ன இருக்கு சம்பந்தி. இசைவாணி இனிமே எங்க வீட்டுப் பொண்ணு. நான் பார்த்துக்கிறேன்!” என்றார் புன்னகை முகமாக. மகள் கூறியது போல இவர்களிடம் பணமில்லாமல் இருக்கலாம். ஆனால் நல்ல குணமும் மனமும் இருக்கிறதென சுந்தரிக்குத் திருப்தி படர்ந்தது. மகளை ஒரு நல்ல குடும்பத்தில் சேர்த்த நிம்மதியில் அவர்களிடமிருந்து விடை பெற்றார்.
அற்புதா இசைவாணியைத் தனியே தள்ளிக்கொண்டு சென்றாள். “வாணி... ஆல் தி பெஸ்ட்!” என்றவள் வேறு ஏதோ கூற வரும் முன், அவள் வாயைப் பொத்திய வாணி, “அம்மா அற்புதா, எனக்கு உங்க அட்வைஸ் எதுவும் வேணாம். நீங்க இங்கருந்து கிளம்புனாலே அது பெரிய ஹெல்ப். அப்புறம் கமலாம்மா அம்மாவுக்கு டேப்லெட் கொடுத்தாங்களான்னு பார்த்துட்டு எனக்கு டெக்ஸ்ட் பண்ணு. மார்னிங் பார்க்கலாம்!” என அவளைத் துரத்தி விட்டிருந்தாள்.
அனைவரும் விடை பெற்றதும் வீடே வெறிச்சோடி போனது. அக்கம் பக்கத்தினர் மட்டுமே இருந்தனர். அனைவரும் இரவு உண்டு முடிய, சாப்பாடு
கொஞ்சம் மிஞ்சிவிட்டது. பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என அனைவரையும் அழைத்துப் பேசியபடியே சாம்பார், இட்லி, கேசரி என அனைத்தையும் கொடுத்தார் சிந்தாமணி. இசைவாணி என்ன செய்வதெனத் தெரியாமல் கூடத்திலிருந்த பாயில் கீர்த்தனாவோடு அமர்ந்துவிட்டாள். பரிதி தன் நண்பர்களை வழியனுப்பிவிட்டு வந்தான்.
பாத்திரங்களைக் கழுவி முடித்த சிந்தாமணி கூடத்திலிருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தார். “என்னக்கா... ஜோசியர் எப்போ நல்ல நேரம் குறிச்சுக் கொடுத்திருக்காரு?” அவருக்கு உதவிய பக்கத்துவீட்டு பெண்மணி பாக்கியம் கேட்க,
“பத்து மணிக்குத்தான் பாக்கியம். மணி ஒன்பதே முக்காலுச்சு!” என கையை சேலையில் துடைத்தவர், வெளியே எட்டிப் பார்த்தார். கீர்த்தனா இசைவாணியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
மகளை அழைத்தவர், “இந்த சாம்பாரைக் கொண்டு போய் பாக்கியம் அத்தை வீட்ல கொடுத்துட்டு வா. அப்படியே உனக்குப் போரடிச்சுதுன்னா மலரோட டீவியைப் பாத்துட்டு செத்த நேரம் கழிச்சு வா!” என்றார் அவளிடம்.
“ம்மா... எனக்குத் தூக்கமா வருதும்மா. டீவி எல்லாம் பார்க்கலை!” என்றவள், அவர் கொடுத்த பார்த்திரத்தை வாங்கினாள்.
“அடியே... பாக்கியம் எனக்கு உதவிக்கு இருக்கா. மலர் புள்ளை அங்க தனியா இருப்பா. போ... போய் செத்த நேரம் துணைக்கு இரு!” என அவளை அனுப்பிவிட்டார். அஜித் நண்பர்களோடு வெளியே கிளம்பிவிட, மருமகளை அழைத்தார் பெண்மணி.
இசைவாணி வந்து நிற்க, அவள் தலை நிறைய மல்லிகை பூவை சூடிவிட்ட பாக்கியம், “உம்மருமக அழகா இருக்காக்கா!” என்றார் புன்னகையுடன். அதில் சிந்தாமணிக்கும் பெருமைதான்.
“பின்னே... என் மகன் செலக்ஷன்ல. எப்படி இருக்கும். அவனுக்கேத்த மாதிரி அழகான புள்ளையைத் தானே கட்டிருக்கான்!” என்றவரைப் பார்த்து இவள் முறுவலித்தாள். அவளுக்கு அழகு என்ற வார்த்தைக்கு பரிதியின் அழ(ள)வு கோல் நினைவு வந்தது. இதைக் கேட்டால் அவன் ஏதாவது கேலி செய்து சிரிப்பான் என்றெண்ணியபடியே அவனைத் தேடிக் கண்களை சுழற்றினாள்.
“அவன் ரூம்க்குள்ளே போய்ட்டான் ஆத்தா. நீயும் போ!” அவள் பார்வை உணர்ந்து சிந்தாமணி உரைத்ததும், சட்டென இவளிடம் ஒரு சங்கடம் பரவிற்று. அவரைப் பார்த்து புன்னகைத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
“நல்லா இரும்மா... என் வம்சம் நல்லபடியா தழைக்கணும்!” என அவர் பூரிப்போடு கூற, இவள் அறைக்குள் நுழைந்தாள். பட்டு வேட்டி சட்டையில் கட்டிலில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்தான் பரிதி.
இவள் உள்ளே நுழைந்து கதவை தாழ்போட்டதும் கட்டிலிலிருந்து குதித்து கீழிறங்கியவன், “வாவ்... ப்யூட்டீ... நான் இந்த கான்ட்ராக்ட் மேரேஜ்லயே நான் ரொம்ப ஆவலா எக்ஸ்பெக்ட் பண்ண சீன் இதான். வா... வா, ஐ யம் வெய்டிங்!” என்றவனைக் கீழ் கண்ணால் முறைத்தவாறே பாலை மேஜையில் வைத்தாள்.
“ஏய் இசைவாணி... நான் சீரியஸா சொல்றேன். ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட் பத்தி என்ன நினைக்கிற. எனக்கு அதுல எந்த அப்ஜெக்ஷனும் இல்ல...” என்றவன் முன்முடியைக் கோதியபடியே, “நான் வேற அழகான பையன். உனக்கு நோ சொல்ல சான்ஸே இல்லைல!” என்றான் போலியான ஆவலைக் குரலில் தேக்கி.
அவனைக் கண்டனமாகப் பார்த்து அருகே சென்ற இசைவாணி, “பரிதி, நீ கொஞ்சம் சத்தமா பேசுனாலும் வெளியே கேட்டிடும். இந்த டூ இயர்ஸூம் அக்ரீமெண்ட், கான்ட்ராக்ட், பெனிஃபிட்னு எந்த வார்த்தையும் உன் வாய்லருந்து வரக் கூடாது. யாருக்கும் டவுட் வர்ற மாதிரி உளறக் கூடாது. பீ பெர்ஃபெக்ட்!” என்றாள் அழுத்தமானக் குரலில்.
“ஓ... நான் ஏதோ காலைல தெரியாம உளறிட்டேன். அதுக்காக டீச்சர் மாதிரி என்னை மிரட்டாத!” என்றான் ரோஷக் குரலில்.
“ஷ்...” எனத் தளர்வாய் அவன் கட்டிலில் அமர்ந்தவள், “பரிதி... ஊரைப் பொறுத்தவரைக்கும் உனக்கு கல்யாணமாகிடுச்சு. சோ கொஞ்சமாச்சும் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ!” என்றவளைப் பார்த்து தாடையைத் தடவியவன்,
“ஓஹோ... அப்போ புருஷனா நடந்துக்கணுமா இசைவாணி?” என்றான் கண்ணை சிமிட்டி கேலியாக.
‘உன்னையெல்லாம் திருத்த முடியாது!’ என நினைத்தவள், “சேரியோட படுத்தா எனக்குத் தூக்கம் வராது. உன்னோட ட்ரெஸ் ஏதாவது குடு!” என்றாள் அலமாரியில் கண்களை ஓட்டியபடியே.
“நோ... நோ. உன் சைஸ்க்கெல்லாம் என்கிட்ட ட்ரெஸ் கிடையாது. மினியனுக்கெல்லாம் அளவெடுத்துதான் தைக்கணும்!” என்றவனைக் கண்டு கொள்ளாதவள், அலமாரியிலிருந்து அவளே ஒரு மேல்சட்டையும் கால்சராயும் உருவினாள்.
அவள் கையிலிருந்த சட்டையை வெடுக்கென பிடுங்கியவன், “இது அஜித்தோடது. ட்ராக் பேண்ட் என்னோடதுதான், யூஸ் பண்ணிக்கோ!” என்றவன், துழாவியெடுத்து தன்னுடைய மேல்சட்டை ஒன்றைக் கொடுத்தான்.
அவள் உடைமாற்றி வரும்முன்னே முழு கட்டிலிலும் கையைக் காலை விரித்துப் படுத்திருந்தான். சின்ன கட்டில்தான் அது. அஜித்தும் இவனும் கட்டிப் பிடித்து தூங்கும்போது வசதியாய் இருந்தது. ஆனால் அவளோடு படுக்க முடியாது என்றுணர்ந்தவன், போர்வை தலையணையை தரையில் வைத்திருந்தான்.
அவனை ஒரு பார்வைப் பார்த்தாள். அவள் பார்க்கும்போது வேண்டுமென்றே தூங்குவது போல இறுக கண்ணை மூடிக் கொண்டான். இதென்ன சிறுபிள்ளைத் தனம் என அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
சரி போ என போர்வையை விரித்துக் கீழே படுத்தாள். அலைபேசியை எடுத்து வாழ்த்து கூறியவர்களுக்கு பதிலை அனுப்பினாள். வினோத் காலையிலிருந்து நான்கைந்து முறை அழைத்திருந்தான். இவள் நேரத்தைப் பார்த்துவிட்டு காலையில் பேசலாம் என்ற குறுஞ்செய்தியோடு சுந்தரி மாத்திரை சாப்பிட்டுவிட்டார் என்பதை அற்புதாவிடம் கேட்டு உறுதி செய்தவள், அலைபேசியை தூரமாய் வைத்துவிட்டுப் போர்வையை கழுத்துவரைப் போர்த்தினாள்.
அவளுக்குத் தரையில் படுத்து பழக்கமே இல்லை. பஞ்சு மெத்தையில் உருண்டு பிரண்டு அதன் மென்மைக்கு சுகம் கண்டிருந்தது உடம்பு. போதாதற்கு புது இடம் என்பதால் உறக்கம் வரவே இல்லை. காலையில் தாயின் பூரித்த முகமும் மாலை அவர் கசங்கிய முகமும் நினைவு வர, உதட்டைக் கடித்தபடியே அதையே யோசித்தாள்.
‘அம்மாவுக்காகத்தான் எல்லாம். ச அவங்க நல்லா குணமாகிடுவாங்க. இரண்டு வருஷம் சீக்கிரம் கடந்து போய்டும். அப்புறம் அவங்ககிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம்!’ தவறென உணர்த்திய மூளையை மனம் சமாதானம் செய்தது. சட்டென ஏதோ வித்தியாசமான ஒலி கேட்க, தலையை உயர்த்திப் பார்த்தாள். பரிதியிடமிருந்துதான் மெல்லிய குறட்டை ஒலி வந்தது.
'இது வேறா?' என சலித்தவள், கண்களை மூடி உறங்க முயன்றாள்.
சிந்தாமணி கூடத்தை சுத்தம் செய்து பாயை விரித்தார். வெளியே சென்றிருந்த அஜித் வந்தான். “கீர்த்தி மலர் வீட்ல இருக்கா. போ... போய் அவளைக் கூட்டிட்டு வாடா!” என்றவர், மற்றொரு பாயை விரிக்க, மார்த்தாண்டம் வெளியே யாரிடமோ பேசிவிட்டு வந்தார். அவர் முகத்தில் களைப்பு அப்பியிருந்தது.
“இந்நேரத்துல என்னங்க பேச்சு. போய் தூங்குங்க!” என அவரைக் கடிந்தார் பெண்மணி. அவர் பதில் பேசாது உறங்க சென்றுவிட்டார். இவர் வாயிலையே பார்த்து நின்றார்.
சாம்பார் கொடுத்து துணைக்குச் சென்ற கீர்த்தனா அங்கேயே பாய் போட்டு உறங்கிவிட்டதாகவும், பாக்கியம் அத்தை அவளைக் காலையில் அனுப்புவதாகவும் தன்னிடம் அவர் கூறியதை அஜித் தாயிடம் பகிர்ந்தான்.
“சரி போ... ஃபோனை நோண்டாம நீயும் காலகாலத்துல படு!” என்றவரிடம் அவன் தலையை அசைத்தான். வேலை செய்த களைப்பில் அனைவருமே படுத்தவுடன் உறங்கிவிட்டனர்.
***
காலை ஏழு மணியைத் தொட்டதும் புரண்டு படுத்தாள் இசைவாணி. அனிச்சையாய் அவள் கைகள் தரையைத் தடவ, மெத்தையில்லாமல் வேறொங்கோ படுத்திருக்கிறோம் என்ற உணர்வில் திடுக்கிட்டு விழித்தாள். போர்வை ஒரு ஓரமாய் சுருண்டு கேட்பாரற்று கிடந்தது. கண்ணைத் தேய்த்து சுற்றம் உணர்ந்தவள், பரிதியைப் பார்த்தாள். காலுக்கடியில் ஒரு தலையணையை இருத்தியபடியே குப்புறப் படுத்திருந்தான் அவன்.
இவள் எழுந்து முகம் கழுவி தலையிலிருந்த பூவைத் தூக்கிப் போட்டுவிட்டு நகைகளைப் பத்திரப்படுத்தினாள். பரிதியின் உடையோடு வெளியே செல்ல தயக்கமாய் இருக்க, மெதுவாய் கதவைத் திறந்தாள். அதிகாலையில் உறக்கம் கலைந்து எழுந்து வந்த கீர்த்தனா தந்தைக்கும் தமையனுக்கும் இடையே உறங்கிக் கொண்டிருந்தாள். மூவருக்கும் திருமண நாளின் களைப்பு. அடித்துப் போட்டது போல தூங்கினர். சிந்தாமணியின் அரவம் சமையலறையில் கேட்டது.
அலைபேசியை எடுத்து சரவணனுக்கு அழைத்தாள். அவன் இரண்டுமுறை துண்டித்து மூன்றாவது முறை ஏற்றான். “சரோ... என் பீரோல ஃபர்ஸ்ட் ஷெல்ப்ல ஒரு கவர்ல ட்ரெஸ் வச்சிருக்கேன். அற்புதாகிட்டே கேட்டு அதை எடுத்துட்டு வந்து தாடா. நான் கிளம்பி மறுவீட்டுக்கு அங்க வரணும்!” என்றாள்.
“பத்து மணி மறுவீட்டுக்கு எதுக்கு இப்பவே குளிக்கணும். நைன் ஓ க்ளாக் குளிக்கலாம் இல்ல?” உறக்கம் கலைந்த கடுப்பில் கேட்டான் அவன்.
“டேய்! ப்ளீஸ் டா. வாயேன்!” அவள் கெஞ்ச, “சரி... சரி வந்து தொலைக்கிறேன்!” என அலுத்தபடியே எழுந்தான். அசைவ உணவு வாசனை மூக்கைத் துளைத்தது.
‘நான் கூடத்தான் முறைக்கு இந்த அத்தைக்கு மருமகன். எனக்கு என்னைக்காவது இப்படியெல்லாம் வகைவகையா வாசனை வர்ற மாதிரி சமைச்சு கொடுத்திருக்கா. சரியான செல்பிஷ் உலகம்டா சரோ. விடு, நீயும் கல்யாணம் பண்ணி மாமியார் கையால வெரைட்டியா சாப்பிடலாம்!” எனப் புலம்பியவன், சமையலறைக்குள்ளிருந்த மூன்று பெண்மணிகளையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அகன்றான். அவர்கள் அவனைக் கவனிக்கவில்லை.
இசைவாணி இரவு உடுத்திய சேலையை எடுத்து மீண்டும் அணிந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்த சிந்தாமணி, “என்ன வாணி... சீக்கிரம் எழுந்துட்ட? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமில்ல. பத்து மணிக்குத்தானே மறுவீடு?” எனக் கேட்டார்.
“இல்ல அத்தை... தூக்கம் போய்டுச்சு. எப்பவும் நான் எழுந்திரிக்கிற டைம்தான் இது” எனப் புன்னகைத்தாள் இவள்.
“சரிம்மா..டீ போட்றேன். குடிச்சுட்டுப் போய் குளிச்சு ரெடியாகு” அவர் கூற,
“இல்ல அத்தை... சரோ வந்துடுவான். நான் குளிச்சிட்டு வந்து டீ குடிக்கிறேன்...” என்றவள் வாயிலைப் பார்க்க, சரவணன் வந்து நின்றான். அவனிடம் பையை வாங்கிக் கொண்டாள்.
“சீக்கிரம் கிளம்பி வாங்க ரெண்டு பேரும். தூக்கம் கலைஞ்சு போச்சு எனக்கு. நீங்க வந்தாதான் தாய்மார்கள் எல்லாரும் சோத்தைக் கண்ல காட்டுவாங்க போல!” என அவன் உதட்டைச் சுழித்துவிட்டு அகல, இவள் முறுவலித்தாள்.
அந்தப் பையில் தனக்குத் தேவையான பற்பசை, துலக்கி, வழலைக் கட்டி, உடைகள் என ஏற்கனவே எடுத்து வைத்திருந்தாள் இசைவாணி. இப்போது அலுப்புத் தீர தலைக்கு குளித்து வந்தாள். மணி எட்டாகியிருக்க, இன்னும் பரிதி எழவில்லை.
“பரிதி... டைமாச்சு. எழுந்திரி, மறுவீடு போகணும் நம்ப!” அவள் உலுக்கலில் உறக்கம் கலைந்தவனுக்கு மெதுவாய் நேற்றைய திருமணத்தின் நினைவு வர, கெட்டாவி விட்டவாறே மங்கலாயிருந்தக் கண்ணைத் தேய்த்தான்.
குளித்து முடித்து ஊதாநிற மென்பட்டில் மிளிர்ந்தவளைப் பார்த்து இனிமையாய் அதிர்ந்தவன், “சே... செம்ம சீன் இசைவாணி. இந்த மூவிஸ்ல காட்டுற மாதிரியே மேரேஜ் முடிஞ்ச மறுநாள் நீ வந்து என்னை எழுப்புற. என்ன இதுவே நிஜக் கல்யாணமா இருந்தா உன் கையை சுண்டிவிட்டு, பக்கத்துல இழுத்து அப்படி இப்படின்னு ஏதாவது ரொமான்ஸ் பண்ணிருப்பேன்” என்றவனைத் தீயாய் முறைத்தாள் இவள்.
“சரி... சரி. அதுக்கெல்லாம் எனக்கு கொடுத்து வைக்கலை. இப்போ நீ என்ன பண்ற, போய் சூடா டீ போட்டு எடுத்து வந்து என்னை எழுப்புவியாம். அதுவரைக்கும் நான் விட்ட தூக்கத்தை புடிப்பேனாம்!” என அவளை வம்பிழுக்கவென்றே பரிதி மீண்டும் படுத்துக் கொண்டான். அவனை முறைத்தவள் வெளியே சென்றாள்.
“முடியில ஈரம் காயலையா வாணி? ஏன் இப்படியே வந்த? துண்டை கட்டலாம் இல்ல. அது தண்ணியை உறிஞ்சும்!” என்ற சிந்தாமணி அவளது முடியைத் தட்டிவிட்டார்.
“பரவாயில்லை அத்தை... ட்ரையர் இருந்தா ஈஸியா காஞ்சு போய்டும்!” இவள் சங்கடத்துடன் மறுக்க, அவர் இருபுறமும் சின்னதாய் ஒரு சில முடிக்கற்றைகளை எடுத்து கவ்வியில் அடக்கினார்.
“ஆமா, உன் புருஷன் எழுந்துட்டானா? இல்ல இன்னும் தூங்கிட்டு இருக்கானா?” அவரின் புருஷன் என்ற சொற்பதத்தில் அதிர்ந்தவள், பின்னர் சுதாரித்து, அவன் என கூற வாயெடுத்து, “அவர் இன்னும் எழலை அத்தை. அவருக்கு பெட் காஃபி கொடுத்தாதான் எழுவாராம்!” என்றாள் தயங்கி.
“அட... அப்படியெல்லாமா சொன்னான். பல்லு விளக்காம டீ குடிச்சா அவுங்கப்பா அடிச்சு வெளுத்துப் போடுவாரே! சும்மா விளையாடிருப்பான். நீ அதையெல்லாம் கண்டுக்காத!” என்றவர் அவளுக்குத் தேநீரை சூடு செய்து கொடுத்தார். மற்ற மூவரும் கூட எழுந்துவிட்டனர்.
“ஆமா... அந்த அரக்கு கலர் புடவை கட்டி ஒரு அம்மா உக்கார்ந்திருந்தாங்களே! அவுக யாரு? ரொம்ப வசதியோ?” என இவர் இயல்பாக கேட்டார்.
“என் அப்பாவோட பெரியம்மா பொண்ணு. எனக்கு பெரியத்தை, பணக்காரங்கதான். ஆனால் குணக்காரங்க இல்ல. அவுங்க பணம் அவங்களுக்கு மட்டும்தான் உதவும். எனக்கு அவுங்களையெல்லாம் மேரேஜ்க்கு கூப்பிட இஷ்டமே இல்லத்தை. அம்மாதான் அப்பா வீட்டு சொந்த விட்டுப்போய்டக் கூடாதுன்னு இன்வைட் பண்ணாங்க!” என்றாள் கசப்பாய் முறுவலித்து.
“ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு மாதிரித்தான் ஆத்தா. அதுக்காக யாரையும் வேணாம்னு ஒதுக்க முடியாது. என்னான்னா, என்னன்னு முடிச்சுக்கணும். ஆயிரம் இருந்தாலும் உங்கப்பா வீட்டு சொந்தம்தானே?” இவர் கேட்டதும்,
“அத்தை... அவங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. ஊரையே வாங்குற அளவுக்கு சொத்து இருந்தும் கூட கஷ்டக் காலத்துல கைக்கொடுத்து உதவ மனசில்லாதவங்க. முதல்ல நானும் அத்தை, அத்தைப் பசங்கன்னு பாசமாதான் இருந்தேன். என்னைக்கு என் அப்பா சாவுக்கு வந்துட்டு மூணாவது மனுஷங்களா நின்னுட்டு போனாங்களோ, அப்பவே வெறுத்துப் போச்சு. உண்மைலயே பணத்தை விட மனுஷங்கதானே முக்கியம் அத்தை. அது அவங்களுக்கு ஒரு நாள் புரியும்!” என்றாள் மனத்தாங்கலுடன்.
“சரி விடு வாணி!” இவர் அவளது கையைத் தொட்டு சமாதானம் செய்தார்.
அவரைப் பார்த்து மூச்சை இழுத்துவிட்டு சிரித்தவள், “உங்கப் பையனை மட்டும் பிடிச்சு போய் நான் கல்யாணம் பண்ணலை அத்தை. நீங்க, கீர்த்தனா, அஜித், அங்கிள்னு எல்லாரையும் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. என் பெரியத்தையை விட எல்லா வகையிலும் நீங்க உசத்திதான் அத்தை!” என்றாள் சிரிப்புடன். சிந்தாமணிக்கு அவள் பேச்சில் சிரிப்பும் வெட்கமும் வந்தது.
“டீ கேட்டு அரைமணி நேரமாச்சு. என்ன பண்றா இவ!” எனப் பல்லைக் கடித்து எழுந்த பரிதி, முகம் கழுவி வெளியே வந்தான். சமையலறை வாசலிலே அவன் கால்கள் நின்று போயின. சிந்தாமணி முகத்திலிருந்த சிரிப்பும் வாணியிடம் அவர் இணக்கமும் இவனுக்கு வியப்பைக் கொடுத்தன.
‘நடிக்கதானே இவளைக் கூட்டிட்டு வந்தேன். நிஜமாவே பெர்பாமென்ஸ் பண்றாளே! ஆஸ்கர் அவார்டே தரலாம் போல!’ என அதிர்ந்தவன், “இசைவாணி!” என்றான் அதட்டல் குரலில்.
ஒரு நொடி திடுக்கிட்டவள், “என்னங்க?” என்றாள் பன்மை விளிப்பைக் கஷ்டப்பட்டு உட்புகுத்தி. வலிந்து தன் மனத்தில் அவனுக்கான மரியாதையை திணித்தாள்.
அவளின் என்னங்கவில் ஒரு நொடி வாயைப் பிளந்தவன், “மரியாதைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. உன்கிட்ட டீ கேட்டு எவ்வளோ நேரமாச்சு. இங்க நின்னு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?” என்றான் கடுப்பான குரலில். எதற்காக அவன் கோபம் கொள்கிறான் என இவளுக்குப் புரியவில்லை.
“டேய்... என்ன அதிகாரமா கேட்குற? கல்யாணமாகிட்டா உனக்கு கொம்பு முளைச்சிடும்மா? இத்தனை நாள் எப்படி டீ குடிச்ச?” மகனை அதட்டிய சிந்தாமணி, “வீட்டுக்கு வந்த மருமககிட்டே இப்படித்தான் நடந்துப்பியா?” என்றார் கண்டிப்பு மிகுந்த குரலில்.
“இப்போ அரட்டி உருட்டுற இவுக அப்பாவே கல்யாணமான எனக்கு அடங்கி ஒடுங்கி இருந்தவருத்தான். இவன் என்னனான்னா இப்பவே எப்படி பேசுறான் பாரு வாணி!” என்றவர் நங்கென அவன் கையில் தேநீரைத் திணித்தார். தாயை முறைத்தவன், கண்ணாலே அவளை அறைக்குள்ளே வரச் சொல்லி சென்றான்.
“அத்தை.. நான் போய் கிளம்புறேன்!” என்றவள் அறைக்குள்ளே நுழைந்ததும் அவன் கத்தினான்.
“நீ நடிக்கத்தான் வந்திருக்க!” எனப் பரிதி குரலை உயர்த்த, இவள் பட்டென்று அவன் வாயிலே ஒரு அடி போட்டாள். அவன் அதிர்ந்து விழித்துப் பின் கோபப்பட்டான்.
“எதுக்கு இப்போ நீ என்னை அடிச்ச?” அவன் சீற,
“பின்னே கொஞ்சுவாங்களா உன்னை? எதுக்கு வாய்ஸை ரெய்ஸ் பண்ற? இதென்ன சவுண்ட் ப்ரூஃப் ரூமா? உன் குரல் வெளிய வரக் கேட்கும். கத்தக் கூடாதுன்னு நேத்து ராத்திரிதானே வார்ன் பண்ணேன் உன்னை?” என்றாள் எரிச்சலாக. இரண்டு நாட்களே இவனுடன் போராட முடியவில்லை என்ற சலிப்பு அவளிடம்.
“ஏதா இருந்தாலும் வாய்ல சொல்லிப் பழகு. கை நீட்டுற வேலை வச்சுக்காத!” குரலை தழைத்து கடுகடுத்தவன், “எங்கம்மாகிட்டே என்ன அப்படியொரு சிரிப்பு வேண்டி கிடக்கு உனக்கு?” என்றவனைப் புரியாது பார்த்தாள்.
“என் ஃபேமிலில எல்லார்கிட்டேயும் லிமிட்டோட பழகு. நீயென்ன எனக்கு ஒரிஜினல் பொண்டாட்டியா? இரண்டு வருஷம் முடிஞ்சதும் நீ யாரோ? நான் யாரோ தானே? அப்புறம் என்னதுக்கு ஓவர் பெர்பாமென்ஸ்?” என்று எரிச்சலானவன்,
“அப்புறம் பிரியும் போது என்னால உன் பேமிலியை மறக்க முடியலை. எனக்கு இங்கேயே இருக்கணும் போலருக்குன்னு எ
தாவது எமோஷ்னல் ட்ராமா பண்ண வேண்டியது. இந்த கேர்ள்ஸ் எல்லாம் வெரி டேஞ்சரஸ்!” என்றவனை சில நொடிகள் அமைதியாய் பார்த்தவள், எழுந்து சென்று கதவை தாழிட்டு வந்தாள்.