• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,289
Reaction score
3,801
Points
113
நேரம் – 15 💜

நான்கு நாட்களாக நிழலில் காய வைத்திருந்த கறிவேப்பிலையை தூசி தட்டி எடுத்து வந்த சிந்தாமணி வடைசட்டியில் போட்டு லேசாய் வறுத்தெடுத்து அருகேயுள்ள கிண்ணத்திற்கு மாற்றியவர், வத்தக் குழம்பு பொடிக்குத் தேவையானவற்றை வறுக்கத் தொடங்கினார்.

கீர்த்தனாவிற்கும் அஜித்திற்கும் மாலைநேர வகுப்பு என்பதால் அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. மார்த்தாண்டம் கடையிலிருக்க, பரிதி அப்போதுதான் அலுவலகம்விட்டு வந்திருந்தான்.

யாரும் வீட்டில் இல்லை என்பதை ஒருமுறை கண்களை சுழற்றி உறுதிப்படுத்தியவன், லேசாய் தொண்டையைச் செருமிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான்.

“டீ வச்சிருக்கேன் பாரு டா. போய் ஹால்ல உக்காந்து குடி. இங்க நெடி ஏறுது!” இருமிக்கொண்டே சிந்தாமணி உரைக்க, இவன் அவர் கொடுத்த மிதமான தேநீரை ஒரே மிடறில் குடித்துவிட்டான்.

“சூடாறிப் போச்சா டா? நீ வந்ததும் குடிப்பேன்னு பார்த்தா அரைமணி நேரம் கழிச்சு ஆட்டி அளப்பி வர்ற!” என அவனை நொடித்தார் பெரியவர். பரிதிக்கு அதெல்லாம் செவியிலே ஏறவில்லை.

காலையில் வாணி பேசியதைத்தான் ஒருமுறை மனதில் ஓட்டிப் பார்த்தான். இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இரண்டு நாட்களாகியிருக்க, இன்றைக்கு காலை அவனுக்கு அழைத்துவிட்டாள் இசைவாணி. இவனும் அவள் அழைப்பிற்கு காத்திருந்தான்.

எந்தவித முகமனும் அற்று, “பரிதி... நான் இன்னைக்கு ஈவ்னிங் என் அம்மாகிட்டே நம்ப விஷயத்தை ஷேர் பண்ண போறேன். நீயும் உன் வீட்ல பேசு. அவங்களும் யோசிச்சு பதில் சொல்ல டைம் வேணும்ல. பட், வீ டோன்ட் ஹேவ் மச் டைம். நெக்ஸ்ட் மந்த் மிட்க்குள்ளே மேரேஜ் முடிச்சாதான் மந்த் எண்டிங்ல அம்மா ஆப்ரேஷன் முடிக்க முடியும். தென், நான் கிளம்புறதுக்கும் சரியா இருக்கும். சோ, டிலே பண்ணாத!” என்றாள் மனதில் நாட்களைக் கணக்கிட்டவாறே.

“ஹம்ம்... பேசுறேன். உங்கம்மா ஓகே சொல்லிடுவாங்களா? எங்க வீட்ல நான் போய் ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னா யாருமே என்னை சீரியஸா எடுத்துக்க மாட்டானுங்க!” என்றான் சலிப்புடன்.

“ஏன்?” அவள் கேட்டதும், தொண்டையைக் கனைத்தவன், “இல்ல... அது இதுக்கு முன்னாடி ரெண்டு டைம் இப்படி சொல்லி எங்கப்பா பெல்டால விளாசிட்டாரு!” என்றான் பிடரியைக் கோதியபடி.

“ரெண்டு டைமா? எப்போ?” இவள் ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

“ஸ்கூல் படிக்கும்போது பசங்களோட பெட் கட்டிட்டேன். எப்படியாவது அம்மா, அப்பாகிட்டே நான் லவ் பண்றேன்னு சொல்லி நம்ப வைக்கிறேன்னு. சோ, என் ஸ்கூல் ப்ரெண்ட் ஒரு பொண்ணை அழைச்சுட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போதான் அப்பா படிக்கிற வயசுல என்னடா லவ்வுன்னு அடிச்சு வெளுத்துட்டாரு. அப்புறம் அது பொய்யி, பெட் கட்டி அப்படி ஙெஞ்சுட்டேன்னு தெரிஞ்சதும் டபுள் மடங்கு அடிச்சாரு!” என்றான். அன்றைய அவர் அடி இப்போதும் இவனது உடலை சிலிர்க்க வைத்தது. அப்படியொரு வலியை அவன் வேறு எப்போதும் அனுபவித்ததாய் நினைவில் இல்லை.

அவன் கூறியதில் சிரித்துவிட்ட இசைவாணி, “தென் நெக்ஸ்ட் எப்போ?” எனக் கேலியாகக் கேட்டாள்.

“காலேஜ் டைம்ல. அப்போ என் க்ளாஸ்ல ஒரு பொண்ணு. அழகா இருப்பா. அவளே வந்து என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா. என்னால நம்ப முடியலை. சரின்னு ரெண்டு பேரும் லவ் பண்ணோம். ஒரே மாசத்துல அவங்க வீட்ல தெரிஞ்சு போச்சு. உடனே அவ என் வீட்ல பேச சொன்னா. எனக்கு எங்கப்பா அடிச்ச அடியோட வலி இப்பவுமே மறக்கலை. அப்போ எப்படி இருக்கும்னு யோசிச்சுக்க. நான் ஏதோ விளையாட்டுத்தனமா லவ் பண்ணா, அவ திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூப்பிட்டா. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்போ ரெண்டு பேருக்குமே மெச்சூரிட்டியும் இல்ல, கல்யாண வயசும் இல்ல.”

“ஆனால், அவ அழுதான்னு எங்கம்மாகிட்டே போய் மெல்ல விஷயத்தை சொன்னேன். அவங்க ரெண்டு அடி போட்டு ஒழுங்கா படிச்சு முடிச்சு வேலைக்குப் போற வழியை பாரு. உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா உன்னை வீட்டுக்குள்ளே சேர்க்க மாட்டாருன்னு புத்தி சொல்லவும், அந்த லவ்வுக்கு மூடு விழா நடத்திட்டேன். சோ, அதுலருந்து நான் லவ்னு சொன்னாலே வீட்ல எல்லாரும் சிரிக்கத்தான் செய்வாங்க. யாருமே என்னை சீரியஸா ட்ரீட் பண்றது இல்ல!” என்றான் பல்லைக் கடித்து. இதெல்லாம் விவரம் தெரிந்தபோது செய்த காதல்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது பக்கத்து வீட்டுப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்வேன் என சிந்தாமணியிடம் அடம் பிடித்து அடிவாங்கியது, கணக்கு ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத்தது, தனக்குப் பிடித்த பெண்ணை தன் பெயர் சொல்லி அழைத்து வம்பிழுத்தது என அவனின் புகார் பட்டியல் வெகுநீளம். அதெல்லாம் பப்பி லவ் என்ற வரையறைக்குள் வந்துவிடுவதால் யாரிடமும் பெரிதாய் பகிர மாட்டான்.

அவன் கூறிய காதல் கதையில் முறுவலித்தவள், “ப்ம்ச்... உங்கம்மா சொன்ன மாதிரி அப்போ நீ ரொம்ப சின்ன பையன். யூ ஆர் நாட் மெச்சூர்ட் டூ ஹேண்டில் மேரேஜ். பட் இப்போ அப்படி இல்லை. படிச்சு முடிச்சு ஒரு வேலைல இருக்க. குடும்பத்தை பார்த்துக்கிற, அவங்க மேல அக்கறையா இருக்க. உன் வாழ்க்கையை டிசைட் பண்ற உரிமை உன்கிட்டே இருக்கு. தைரியமா போய் பேசு. முதல்ல உங்கம்மாகிட்டே சொல்லு. அவங்க உன் அப்பாகிட்டே கன்வே பண்ணுவாங்க. ஷீ வில் ஹேண்டில் ஹிம். அவசரக்குடுக்கை மாதிரி எதையும் உளறி வைக்காம, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு, எனக்கும் அப்படித்தான். என் அம்மா ஹெல்த்னால நம்ப மேரேஜ் சீக்கிரம் நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன்னு பொறுமையா சொல்லு. உங்கம்மா புரிஞ்சுப்பாங்க!” என அவள் கூறிய தைரியத்தின் பெயரில்தான் இவ்வளவு தூரம் வந்திருந்தான்.

ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னே சிந்தாமணியிடம் இரண்டு மூன்று வருடங்களுக்கு திருமணப் பேச்சை எடுத்தால் நான் மனுஷனாக இருக்க மாட்டேன் என சூளுரைத்தது நினைவு வர, தன்னையே நொந்து கொண்டான்.

‘பரவாயில்லை... எங்கம்மா தானே? அதெல்லாம் மறந்து புள்ளையை மன்னிச்சிடும்!’ எனத் தன்னையே தேற்றிக்கொண்டு அவரிடம் பேசுவறத்கு ஆயத்தமானான்.

“டேய்... கூப்பிட கூப்பிட என்ன யோசனை வேண்டி கிடக்கு உனக்கு? அந்த மிளகாய் பொடி டப்பாவை எடுத்துக்குடு. வேலை எதுவும் இல்லைன்னா அப்பாவை வரச் சொல்லு. அவர் டீ குடிச்சிட்டு செத்த நேரம் உட்கார்ந்துட்டுப் போவாரு!” சிந்தாமணி குரலில் நடப்பிற்குத் திரும்பியவன், அவர் கேட்ட மிளகாய் பொடியை எடுத்துக் கொடுத்தான்.

“போறேன்மா, அதுக்கு முன்னாடி உன்கிட்டே கொஞ்சம் பேசணும்!” என்றான் தயங்கியபடியே.

“சீக்கிரம் சொல்லிட்டுக் கிளம்பு!” என்றவர் வறுத்த பொருட்களை மின்விசிறிக்கு கீழே காய வைத்தார்.

அவர் பின்னே வால் பிடித்து வந்தவன், “ம்மா... அது... ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நீ ஒரு விஷயம் பேசுனீயே... அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என அவரை ஆர்வமாகப் பார்த்தான்.

யோசனையுடன் மகனைப் பார்த்த சிந்தாமணி, “டேய்... நான் ஆயிரம் விஷயம் பேசிருப்பேன். நீ இப்படி மொட்டைக் கட்டையா சொன்னா என்ன அர்த்தம்? எதைப் பத்தி?” எனக் கேட்டார் அவர்.

“அது... அது உன் அண்ணன் பொண்ணை எனக்கு மேரேஜ் பண்றதைப் பத்தி... ஐ மீன் என் மேரேஜ் பத்தி!” என்றான் சின்ன குரலில்.

அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவர், “டேய்... இனி நீ ஒத்தக் கால்ல நின்னா கூட என் அண்ணன் மக‌ உனக்கு கிடையாது டா. அவளுக்கு பல் டாக்டர் மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம். அடுத்த மாசம் கல்யாணம்!” என்றவர்,

“கைல இருக்கப்போ ஒரு பொருளோட அருமை தெரியாதாம். கையைவிட்டு போனப்புறம் ஐயோ அம்மான்னு கதறுவானாம். போடா!” என அவர் மேலும் திட்ட வாயெடுத்தார்.

“ப்ம்ச்... ம்மா உன் அண்ணன் மகளை நினைச்சு யாரும் இங்க உருகி மருகி கிடக்கலை. சும்மா உன் சொந்தக்காரங்களை சொல்லி இர்ரிடேட் பண்ணாத!” என்றான் குரலை உயர்த்தி.

“டேய்... எதுக்கு டா இப்போ குரலை உசத்துற? நானா உன்கிட்ட இப்போ அவங்களைப் பத்தி ஆரம்பிச்சேன். நீதானே வந்து அவுகளைப் பத்தி கேட்ட!” அவர் மகனை முறைத்தார்.

“நான் அவுங்களைப் பத்தி பேச வரலை. என்னைப் பத்தி, என் கல்யாணத்தைப் பத்தி பேச வந்திருக்கேன். எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு. நீதான் அப்பாகிட்டே பேசணும்!” எ படபட பட்டாசாய் வெடித்தான்.

நிதானமாக அவனை மேலிருந்து கீழாய் அளந்தவர், “ரெண்டு மூனு வருஷத்துக்கு கல்யாணமே வேணாம்னு சொன்ன என் மவன் மானஸ்தனைக் காணோமே!” என நக்கலடித்தார்.

தன் பேச்சை அவர் பெரிதாய் எடுக்கவில்லை எனப் பல்லைக் கடித்தவன், “ம்மா... அது ஏதோ கோபத்துல சொன்னது. அதெல்லாம் மனசுல வச்சுக்காதம்மா. உன் மகனுக்கு கல்யாணம் பண்றது உன் கடமை!” என்றான் வேகமாக.

“அடேய் யப்பா... கடமையை செய்றேன்னு சொன்னதுக்குத்தானே தையத் தக்கான்னு குதிச்ச. உனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம். ரெண்டு வருஷம் வெளிநாடு போய்ட்டு வா. ஆற அமர பார்த்துக்கலாம்!” என்றார் அலட்சியமாக.

அதில் கடியானவன், “ம்மா... என்னம்மா நீ?” என அவர் கையைப் பிடித்தான்.

“டேய்... நான்தான் உன் கல்யாண விஷயத்துல தலையிட மாட்டேன்னு அன்னைக்கே சொல்லிட்டேன்ல. அப்படி உனக்கு கல்யாணம் பண்ணியே ஆகணும்னா, நேரா உங்கப்பாகிட்டே போய் பேசு. நீயாச்சு, அவராச்சு. ஊடால நான் எதுக்கு நந்தி மாதிரி. இப்போ கல்யாணம் பண்ணி வைன்னு சொல்லுவ. இதுவே நானா கேட்டா உச்சாணிக் கொம்புல ஏறி நிப்ப. உன்னோட என்னால் மல்லுக்கட்ட முடியாது. எதுனாலும் அவர்கிட்டே பேசு!” என்றார் தோளைக் குலுக்கி.

“பழி வாங்குறீயாம்மா நீ?” அவன் தாயை முறைத்தான்.

“டேய் பழி வாங்க என்ன இருக்கு? உங்கப்பாதானே இந்த வீட்ல எல்லா முடிவையும் எடுப்பாரு. அதனால நேரா அவர்கிட்டே நீ பேசிடு!” இவர் உறுதியாக மறுத்தார்.

“அவர்கிட்டே பேச பயமா இருக்கும்மா. அடிச்சு வெளுத்துடுவார். அதான் உன்கிட்டே செஞ்சிட்டு கிடக்கேன்!” புலம்பினான் மகன்.

“அப்பனுக்கு பயப்படுறவனுக்கு எல்லாம் காதல் எதுக்கு டா? பேசாம அந்தப் பொண்ணை வேணாம்னு சொல்லிடு. இதென்ன புதுசா உனக்கு?” இவர் வெகு சுலபமாக கூற, அவன் அதிர்ந்தான்.

“ச்சு... ம்மா, அதெல்லாம் பப்பி லவ். பட் இவளை நான் சீரியஸா லவ் பண்றேன்!” அவன் பேசும்போதே,

“டைம் ஏழாச்சு... கண்மணி நாடகம் போட்ருவாங்க!” என அவர் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்கச் செல்ல, இவனுக்கு மண்டைக் காய்ந்தது.

அவரிடமிருந்த தொலைவியக்கியைப் பிடித்திழுத்தவன், “ம்மா... நிஜமா ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவ வேற யாரும் இல்ல, நம்ப கடைக்கு ஆப்போசிட்ல சில மாசத்துக்கு முன்னாடி குடி வந்தாங்களே.. அவங்க வீட்டுப் பொண்ணு இசைவாணியைத்தான் லவ் பண்றேன். ஆன்ட்டிக்கு உடம்புக்கு முடியலைன்னு உனக்குத் தெரியும்தானே? அவங்களுக்கு பெரிய ஆப்ரேஷன் ஒன்னு பண்ண போறாங்களாம். அதுக்கு முன்னாடி அவளுக்கு கல்யாணம்
பண்ணி வைக்கலாம்னு நினைக்குறாங்க. சோ, நீதான் அப்பாகிட்டே இதைப் பத்தி பேசணும்!” மூச்சு வாங்காமல் கடகடவென கூறினான் பரிதி.

“என்னடா... மனப்பாடம் பண்ணதை ஒப்பிக்கிற மாதிரியே சொல்ற? நீ சொல்றதெல்லாம் என்னால நம்ப முடியாது!” இன்னுமே அவர் தன் பேச்சை மூளையில் ஏற்றவில்லை எனக் கடியானான் பரிதி. அவன் வேறு ஏதும் பேசும்முன்னே, மார்த்தாண்டம் வீட்டிற்குள்ளே நுழைந்தார்.

“சிந்தாமணி டீ போட்டுக் கொண்டா! செட்டி வயலுக்காரங்க பத்திரிக்கை வைக்க வந்திருக்காங்க!” என அவர் கூற, அவர் பின்னே வயதான தம்பதியர் வந்தனர். அவர்களை வரவேற்ற சிந்தாமணி தேநீர் கொடுத்தார். சிறிது நேரம் பேசியவர்கள், தங்கள் கடைசி மகனுக்குத் திருமணம் என அழைப்பிதழ் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

“ஏங்க... பரிதிக்குப் பின்னாடி பொறந்தவன்தானே அந்தப் பையன். அதுக்குள்ளேயும் அவனுக்கு கல்யாணம் பண்றாங்களா?” பத்திரிக்கையைப் புரட்டிப் பார்த்தவாறே கேட்டார் சிந்தாமணி.

“ஆமா சிந்தா... அவுகளுக்கும் வயசாகிடுச்சு. ரெண்டு பேரும் நல்லா இருக்கும்போத கடைசி புள்ளையையும் கரையேத்திடணும்னு நினைக்குறாங்க. அதுக்கேத்த மாதிரி அவங்க புள்ளையும் பொறுப்பா இருக்கான்!” என்றார் மகனை ஒரு பார்வைப் பார்த்து. அவன் முகத்தைக் கோணித் திருப்பினான்.

“ஏன்... என் புள்ளையும்தான் பொறுப்பா இருக்கான். வைகாசி வந்தா அவனுக்கு இருபத்தேழாகப் போகுதுங்க. இவனுக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடலாமா? ஜோசியக்காரர் கூட வியாழ நோக்கம் வந்துடுச்சு.
இப்போ பரிதிக்கு கல்யாணம் பண்ணா, அவன் நல்லா வருவான்னு சொன்னாருங்க!” எனக் கணவன் முகத்தைப் பார்த்தார் சிந்தாமணி.

“ஏன்... உன் மவன் இப்போ என்னத்தக் கிழிச்சுப்புட்டான்னு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நேமிச்சு நிக்கிற? முதல்ல வீட்டு மேலருக்க கடனை அடைச்சு, பத்திரத்தை மீட்டுத் தரச் சொல்லு. அப்புறம் அவனுக்கு கல்யாணம் பண்ணலாம். அதுவரைக்கும் இந்தப் பேச்சு வேணாம்!” என்றவர் அவனை முறைத்துவிட்டே கடையைத் திறக்க சென்றார்.

“ம்மா... என்னம்மா உன் புருஷன் இப்படி பேசிட்டு போறாரு!” பரிதி தாயின் முகம் பார்த்தான்.

“ப்ம்ச்... நீ லவ் பண்றேன்னு சொன்னதும் என்ன ஏதுன்னு கேட்காம சரின்னு சொல்வாங்களா டா? கொஞ்சம் கொஞ்சமாத்தான் அவரை சரி சொல்ல வைக்க முடியும்!” என்றவர்,

“டேய்... அந்தப் புள்ளையை நான் ஒரு ரெண்டு தடவைத்தான் பார்த்திருப்பேன். ஆனால் சரியா ஞாபகம் இல்ல. ஆள் பார்க்க எப்படி இருப்பா டா? நல்லா இருப்பாளா?” என ஆர்வமாகக் கேட்ட தாயை மென்மையாய் முறைத்தான். இவ்வளவு நேரம் அவனிடம் காட்டிட சால்ஜாப்பு என்ன. கணவர் வந்ததும் அவரிடம் தனக்கு ஆதரவாகப் பேசியதென என நினைத்ததும் புன்னகை அரும்பிற்று.

“எப்படியும் இந்த வீட்டுக்குத்தானே மருமகளா வரப் போறா. அப்போ பார்த்து அழகா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணிக்கோ. இப்போ எப்படியாவது அப்பாவை சமாளிச்சு ஓகே பண்ணும்மா!” என்றான் அவர் தோளில் கைப்போட்டுக் கெஞ்சலான குரலில்.

“அவரை நான் பார்த்துக்கிறேன் டா. ஆனால் நீ எப்பவும் போல இதுல விளையாடலை தானே? உன்னால ஒரு பொண்ணு பேர் கெட்டுப் போய்ட போகுது டா!” என்றார் கவலையுடன்.

“ம்மா...‌ என்ன பண்ணுனா நீ நான் சீரியஸா பேசுறேன்னு நம்புவ?” எனக் கேட்டவன், “உன் மேல சத்தியமா அவளை லவ் பண்றேன்!” என சிந்தாமணி தலையில் சத்தியம் செய்ய வந்தவன், திடுக்கிட்டு பின்னர் கையைப் பின்னகர்த்தினான்.

‘ஐயோ... அம்மா பாவம். பொய் சத்தியம் பண்ணி அவங்களுக்கு எதுவும் ஆகிடப் போகுது!’ எனப் பதறியவன், “இல்ல... இல்ல. என் மேல சத்தியமா அந்தப் பொண்ணை லவ் பண்றேன்!” என்றான் அவசரமாக.

வெடுக்கென தன் தோளிலிருந்த அவன் கையைத் தட்டிவிட்ட சிந்தாமணி, “நீ சத்தியம் பண்ற அழகுலயே தெரியுதே உன் காதல் லட்சணம். நல்லவேளை, அந்தப் புள்ளையைப் பத்தி உங்கப்பாகிட்டே சொல்லாம போனேன். இல்லைன்னா உன்னோட சேர்த்து எனக்கும் நாலு திட்டுக் கிடைச்சிருக்கும்!” என அவர் மகனை முறைத்துவிட்டு செல்ல,

‘சொதப்பிட்டடா பரிதி!’ எனத் தன்னையே குட்டிக் கொண்டான் இவன்.

***

உணவு டப்பாவை கைப்பையில் வைத்து, அதை தோளில் மாட்டிய இசைவாணிக்குத் தாயின் குறுகுறு பார்வையில் முறுவல் பிறந்தது. நிமிர்ந்து அவரை மென்மையாய் முறைத்தவள், “ஈவ்னிங் வரைக்கும் டைம் இருக்கு. நல்லா யோசிமா, மாமாகிட்டே பேசு. டேக் யுவர் டைம். உன் பேச்சை மீறி நான் எதுவும் பண்ண மாட்டேன்!” என்றாள்.

மகளைக் கனிவுடன் பார்த்தவர், “அதெல்லாம் எனக்குத் தெரியும் வாணி. நீ வேலைக்கு கிளம்பு!” என சடைத்தார் அவர். இவள் சிரிப்புடன் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அகன்றாள்.

மனத்துக்குள் சின்னதாய் உறுத்தினாலும் தான் எடுத்த முடிவு சரியென ஆழ்மனத்தில் பதிய வைத்தவள், நேற்று மாலை தாயும் மகளும் விச்ராந்தையாய் அமர்ந்து கதை பேசும்போது தயக்கத்தை உதறி இளம்பரிதியைத் தனக்குப் பிடித்திருக்கிறது எனப் போட்டு உடைத்துவிட்டாள் இசைவாணி.

சுந்தரிக்கு மகள் கூற்றில் ஒரு நொடி பேச்சே வரவில்லை. அவள் விளையாடுகிறாளா என ஒன்றுக்கு நான்குமுறை அவர் கேட்க, “ம்மா.. நிஜமாத்தான் சொல்றேன். எனக்குப் பரிதியை பிடிச்சிருக்கு. நீங்க அவன் வீட்ல பேசுங்க. அவங்களுக்கும் ஓகேன்னா ப்ரொசீட் பண்ணலாம். எனக்கு... அது பரிதியோட வாழ்ந்தா லைஃப் பெட்டரா இருக்கும்னு தோணுதும்மா!” என்றாள் கடைசி வாக்கியத்தை மட்டும் முணுமுணுத்து, அவர் முகம் பார்ப்பதை தவிர்த்தாள்.

அவருக்கு சில நொடிகள் என்ன எதிர்வினையாற்றுவது என்றே தெரியவில்லை. “அது... அவங்க நமக்கு ஒத்து வருவாங்களா வாணி. பிறந்ததுல இருந்தே நீ வேற மாதிரி வளர்ந்தவ. அவங்க நம்பளவுக்கு இல்ல. வீட்டைப் பார்த்திருக்கேன் நான். அந்த அண்ணனையும் கடைல பார்த்திருக்கேன். ஆனால்!” அவருக்கு மகளை அங்கு கொடுப்பதில் சற்றும் விருப்பமில்லை.

சின்னதாய் ஒரு மளிகை கடை, ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீடு, போதாதற்கு மூன்று பிள்ளைகள், பரிதிதான் மூத்தவன் எனும்போது தம்பி தங்கைகளின் பொறுப்பும் அவன் தலையில்தானே விழும். பொருளாதார ரீதியில் அவர்கள் தங்களைவிட பல மடங்கு பின்தங்கியவர்கள். என்னதான் தற்போதைக்கு அவர்களிடம் சொத்துக்கள் என்று பெரிதாய் இல்லையென்றாலும் அவர்கள் வாழ்ந்த வசதியான வாழ்க்கை கண்முன்னே வந்து சென்றது. தன் கணவர் இருந்திருந்தால் இப்படியொரு இடத்தில் பெண்ணுக்கு மணம் முடிப்பாரா என்ற கேள்வி அவரைப் போட்டு அழுத்திற்று.

மகளாக வந்து கேட்டும் கூட தாயால் உடனடியாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. பரிதியை அவருக்குப் பிடிக்கும். அதற்காக எந்த பின்புலமும் இல்லாத சொற்ப சம்பளத்தில் வேலை பார்க்கும் அவனுக்குத் தன் மகள் பொருந்துவாளா என்ற கேள்வி அவரை அச்சுறுத்தியது. எல்லாவற்றையும் விட அவர்கள் வீட்டில் ஒப்புக் கொள்வார்களா என்ற கேள்வி தொக்கி நின்றது.

“வாணி... அது அந்தப் பையன்கிட்டே எதுவும் நீ பேசுனீயா? அவனோட விருப்பம் என்னவாம்? ஏன்னா இப்போலாம் புள்ளைங்க மனசுல என்ன இருக்குன்னு பெத்தவங்களுக்குத் தெரியுறது இல்ல. பிரதீப் விஷயம் மாதிரியாகிடப் போகுது. அவனுக்கு வேற யாரையும் பிடிச்சிருக்கப் போகுது டா” என மகளிடம் கேட்டார் சுந்தரி.

“ம்மா... அவனுக்கும் என்னை பிடிச்சிருக்கும்மா. அதனால்தான் உன்வரை இந்த விஷயத்தை எடுத்துட்டு வந்தேன். பரிதி அவங்க வீட்ல பேசுறேன்னு சொல்லிட்டான். இரண்டு குடும்பமும் யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்க!” என நேற்றிரவு இவள் முடித்துவிட, சுந்தரிக்கு தூக்கம் மொத்தமும் பறிபோயிருந்தது. காலையிலும் அதே சிந்தனைதான் அவருக்கு. அதனாலே அவரது பார்வை மகளைத் தொடர, அவள் சிரித்துவிட்டுப் போனாள்.

அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக பரிதிக்கு அழைத்துவிட்டாள். அவன் அழைப்பை ஏற்றதும், “என்னாச்சு? உங்கம்மாகிட்டே பேசிட்டீயா நீ?” எனக் கேட்டாள்.

“எல்லாம் மண்ணாச்சு!” என சலித்தவன், நடந்ததை ஒரு வார்த்தை விடாமல் ஒப்பித்தான்.

அனைத்தையும் கேட்டவள், “எனக்குத் தெரியும். நீ சொதப்பிடுவேன்னு. பரவாயில்லை விடு. நான் பார்த்துக்கிறேன்!” என்றாள் அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக.

“எங்க வீட்ல நீ என்ன பார்க்க முடியும்? என்னையவே ஒரு ஆளா மதிக்க மாட்றானுங்க. இதுல உனக்கு கல்யாணம் ஒரு கேடான்னு எங்கப்பா லுக்கு விட்டுட்டுப் போறாரு!” கடுகடுத்தான் அவன்.

“பரிதி‌... ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. எப்படியும் அம்மா மாமாகிட்டே சொல்லி உன் ஃபேமிலி பேக்ரவுண்ட் பத்தி விசாரிப்பாங்க. அவங்களுக்கு ஓகேன்னு தோணுச்சுன்னா உங்க வீட்ல வந்து பேசுவாங்க!”

“ஏன்... விசாரிக்க என்ன இருக்கு? நான்லாம் ரொம்ப தங்கமான பையன்!” அவன் கூற,

“ப்ம்ச்... இதெல்லாம் பார்மாலிட்டி பரிதி. இத்தனை வருஷமா வளர்த்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்போது உங்க குடும்பத்தை பத்தி விசாரிப்பாங்க. எதுவுமே தெரியாம சும்மா பொண்ணைத் தூக்கி கொடுக்க முடியுமா?” இவள் அதட்டினாள்.

“அதெல்லாம் சரி. பட் விசாரிச்சுட்டு வேணாமான்னு சொல்லிட்டாங்கன்னா?” அவன் சந்தேகத்தை முன் வைத்தான்.

“ஏன்... நீ க்ரிமினல் வேலை எதுவும் பார்த்திருக்கியா என்ன? நான் வேற உன் பேக்ரவுண்ட் எதுவும் செக் பண்ணலை!” என அவள் கேட்டதும்,

“ஏய்... சீ! சீ. அதெல்லாம் இல்லவே இல்ல. நான் டீசன்ட் கை!” அவன் உடனடியாக மறுப்புத் தெரிவிக்க,

“அப்போ சரி. அவங்க விசாரிச்சு ஒரு முடிவெடுத்துட்டு என்கிட்டேதான் பேச வரு
வாங்க. நான் என்னென்னு உனக்கு அப்டேட் பண்றேன். நீயும் உங்க வீட்ல ஏதாவதுன்னா மெசேஜ் போடு!” என மேலும் சில நிமிடங்கள் பேசி அழைப்பைத் துண்டித்தாள்.

தொடரும்…

 
Well-known member
Messages
1,090
Reaction score
778
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top