• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நேசப்புயல் 13

Administrator
Staff member
Messages
429
Reaction score
700
Points
93
நேசப்புயல் 13:

“டேய் சீக்கிரம் வாங்கடா டைம் ஆச்சு லேட்டா போனா அகில் திட்டுவான்” என்று வர்ஷினி விறுவிறுவென நடக்க,

“இது அவன் திட்றதுக்காக வேகமா போற போல தெரியலையே அவனை பாக்குறதுக்காக போற மாதிரி இருக்கே…” என்று ரம்யா இழுக்க,

சட்டென்று திரும்பி அவளை முறைத்த வர்ஷி, “ரம்ஸ் உனக்கு எத்தனை டைம் சொல்றது. நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லைன்னு. அகில் என்னோட அண்ணியோட தம்பி” என்றுவிட்டு நடையின் வேகத்தை குறைத்தாள்.

“ஓஹோ… அப்புறம் ஏன் நடை ஸ்லோவாகிட்டு” என்று ப்ரியா கேட்டு வைக்க,

“நீங்க தான வேகமா போனா அவனை பாக்க போறேன்னு சொன்னிங்க. அதான் ஸ்லோவாகிட்டேன்” என்றவளது விளக்கத்திற்கு,

“நாங்க சொன்னா நீ ஸ்லோவா நடப்பியா? உன்கிட்ட தான் கள்ளமில்லையே நீ பாஸ்டாவே போயிருக்கலாமே…” என்று சிரிப்புடன் இழுத்தாள் ப்ரியா.

“சரிதான்” என்று அவளை திரும்பி பார்த்துவிட்டு வர்ஷி சற்று வேகமாக நடக்க துவங்க,

“இங்க பாரு ப்ரியா இதான் சாக்குனு வேகமா ஓடுறாள்” என்று ரம்யா கலாய்க்க,

“ப்ச் டேய் உங்களோட என்னால முடியலை. இப்போ நான் என்ன தான் பண்ணனும்னு சொல்றிங்க” என்று இடுப்பில் கையூன்றி முறைக்க,

“நாங்க சொன்னா நீ கேட்கவா போற. உன் இஷ்டத்துக்கே பண்ணு” என்றுவிட்டு இருவரும் நடக்க,

‘இதுங்களை திருத்தவே முடியாது’ என்று மனதிற்குள் சலித்து கொண்டவள் அவர்கள் பின்னோடு நடக்க,

“என்ன மச்சி இன்னைக்கு பச்சை போட்டு இருக்கா? அவனும் பச்சையில வருவானோ?” என்று பிரவீன் வினவ,

“வாய்ப்பு இருக்கும்” என்று மகேஷ் மொழிய இருவரும் அவர்களுடன் இணைந்து கொண்டதும்,

பிரவீன், “பச்சை நிறமே பச்சை நிறமே…” என்று பாட துவங்க,

“பச்சை நிறமே பச்சை நிறமே…” என்று சிரிப்புடன் மற்றவர்களும் கோரஸ் பாட,

வர்ஷிக்கு புரிந்தது தன்னை தான் கலாய்க்கிறார்கள் என்று.

திரும்பி அவர்களை முறைத்துவிட்டு வேக நடையில் நடக்க துவங்க வேண்டுமென்றே அவளை இடித்து கொண்டு முந்தி சென்ற ரம்யா,

“ஹே க்ரீன் கலர் சிங்க் ஆகுது…” என்று சிறிய குரலில் மொழிய,

“டேய் அப்போ இது அதுதானடா…?” என்று பிரவீன் வினா தொடுக்க,

“ஆமா ஆமா” என்று மகேஷ் தலையசைத்தான்.

இங்கு வர்ஷினிக்கு உள்ளுக்குள் ஒரு வித இனம் புரியாத உண்ர்வு பரவியது. அதனை முகத்தில் காண்பிக்காது மறைத்தவள்,

“டேய் போதும் விட்ருங்கடா என்னால முடியலை” என்று அலுத்து கொள்ள,

“அதெப்படி விட முடியும். இனிமேல் தான இருக்கு கச்சேரியே” என்ற ப்ரியா வேகமாக சென்று அகிலின் அருகில் அமர்ந்தவள்,

“ஹாய் அகில் குட் மார்னிங்” என்றிட,

“ஹாய் குட் மார்னிங்” என்று பதிலுக்கு மென்னகை புரிந்தான்.

ப்ரியாவின் செயலில் வர்ஷியின் முகம் என்னவோ போல ஆகிவிட்டது.

வழக்கமாக வர்ஷி தான் அகிலனது அருகில் அமர்வாள். ஆனால் இப்பொழுது எல்லாம் அவளை வம்பிழுப்பதற்காகவே யாராவது ஒருத்தர் சென்று அவனருகே அமர்ந்து கொள்கின்றனர்.

இவளால் கேட்கவும் முடியவில்லை. இப்பதோ இவ்வளவு கலாய் கலாய்க்கிறார்கள். கேட்டுவிட்டால் உறுதியே செய்துவிடுவார்கள்.

மற்றவர்கள் சென்று அருகில் அமர அகிலன் அவர்களுக்கு அன்றைக்கு சொல்லி கொடுக்க வேண்டிய பாடங்களை கற்றுத் தர துவங்கினான்.

வர்ஷினியின் கவனம் அவனது பாடத்தில் இருந்தாலும் விழிகள் அவ்வபோது அவனை அளவிட்டது.

பச்சை நிறத்தில் டீ சர்ட்டும் அதற்கு தோதாக க்ரீம் நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தவனது சிகை அடிக்கடி முகத்தில் வந்து மோதியது.

வலது கரம் அவர்களுக்கு சொல்லி கொடுக்க இடது கரம் அவ்வபோது சிகையை எடுத்துவிட்டது.

சிவந்த நிறத்தில் மெலிதான புன்னகையுடன் சொல்லி கொடுப்பவனை காண்கையில் உள்ளம்,

‘ஹ்ம்ம் அழகன் தான்’ என்று மெச்சி கொண்டது.

சட்டென்று தான் செய்து கொண்டிருப்பதை உணர்ந்து மானசீகமாக தலையை தட்டி கொண்டவள் படிப்பை கவனித்தாள்.

‘எல்லாம் இவர்களால் தான் நல்லா இருக்கும் பிள்ளையின் மனதை கலாய்த்து விடுகிறார்கள்’ என்று அவர்கள் மீது பழியை போட,

‘ஓஹே அதற்கு முன்பு நீ அவனை பார்க்கவில்லையே… நீ ஒரு முறை ஓரப்பார்வையில் ரசித்ததை கண்டுவிட்டு தானே அவர்கள் கலாய்க்கிறார்கள்’ என்று மற்றொரு மனம் எள்ளி நகையாடியது.

உண்மை தான் அகிலன் தனக்காக பழியை ஏற்று கொண்டு தன்னை காப்பாற்றியதில் இருந்து அவன் மீது ஒரு விருப்பம் ஏன் ஈர்ப்பு என்று கூட கூறலாம்.

தனக்காக தான் கேட்காமலே பழியை ஏற்று கொண்டு அவப்பெயரை பெற்று கொண்டவன் மேல் ஏதோ ஒரு வகை பிடித்தம் தான்.

தான் கேட்டதும் பாடத்தை சொல்லி கொடுக்க சம்மதித்ததும் அளவே இல்லாத மகிழ்ச்சி தான் வர்ஷினிக்கு.

பாடத்தை கற்க ஆர்வமாக வந்து கொண்டு இருந்தவளது ஆர்வம் எப்போது அவன் மீது மாறியதென்று அவளுக்கே தெரியவில்லை.

தினமும் அவனை காண போகிறோம் என்ற என்றே அவளை அத்தனை மகிழ்ச்சியாய் படிக்க வைத்தது.

ஒரு நாள் ஆகாய நீல நிற உடையில் ஆளை கவரும் வகையில் வந்திருந்தவன் மீது பார்வையை விளக்க முடியாதவள் சற்று அதிகமாக ஓர விழிப்பார்வையால் ரசித்திட அது ரம்யாவின் விழிகளில் பட்டுவிட்டது.

இதோ அன்று முதல் நால்வரும் வர்ஷியை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவள் நடந்தால் கேலி அவனுடன் பேசினால் கேலி என அனைத்திற்கும் கேலி என கலாய்த்து தள்ளி கொண்டிருக்கின்றனர்.

அவர்களது பேச்சு ஒருவகையில் உள்ளுக்குள் ஏதோ ஒரு வித சிலிர்ப்பை தோற்றுவித்தாலும் வெளியே காண்பித்து கொள்ளவில்லை.

எங்கே இவர்கள் அவனிடமே தன்னை காண்பித்து கொடுத்துவிடுவார்கள் என்று எண்ணி தான் பெரிதாய் எதையும் காட்டி கொள்ளவில்லை.

அதுவும் அவளுக்கே இந்த உணர்விற்கு பெயர் தெரியவில்லை. என்னவோ அவனை பிடித்திருக்கிறது பார்க்க பிடிக்கிறது பேச மனது அவா கொள்கிறது அந்தளவில் தான் அவளுடைய தற்போதைய எண்ணம்.

“வர்ஷி என்ன திங்கிங் உன்கிட்ட தான கேட்டுட்டு இருக்கேன்?” என்று அகிலன் அழுத்தமாக வினவியதும்,

“ஹான்” என்று விழித்தவள்,

“சாரி என்ன கேட்ட?”என்றிட,

ரம்யா அருகில் சென்று,

“ஹ்ம்ம் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டான்” என்று மெது குரலில் முணுமுணுக்க,

இவளுக்கு ஒரு கணம் இதயம் நின்று துடித்தது.

“ப்ச் சும்மா இருடி” என்று தோழியை கடிந்தவள்,

அவனிடம் கேள்வியை மீண்டும் கேட்டு பதிலை கூற,

“கான்சன்ட்ரேட் பண்ணி படி வர்ஷினி” என்று அகிலன் கூறியதும் தலையை சம்மதமாக அசைத்தாள்.

அகிலனுக்கு இவர்களது எந்தவித கேலியும் வர்ஷினியின் பார்வையும் கருத்தில் இல்லை.

அவனுடைய வேலை அவர்களுக்கு பாடம் கற்பிப்பது. சாதாரணமாக சொல்லி கொடுத்தால் பரவாயில்லை இவர்கள் வேறு அவன் செயலுக்கு ஊதியம் வேறு கொடுக்கின்றனர்.

வர்ஷினி பணம் கொடுக்கிறேன் என்று கூறிய கணம் முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காண்பிக்காதவன் சம்மதமாய் தலை ஆட்டியிருந்தான்.

ஆக கை நீட்டி சம்பளத்தை பெற்று கொள்ளும் போது வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணி அவர்கள் விளையாட்டு தனமாக முன் பின் இருந்தாலும் இழுத்து பிடித்து அன்றைய பாடத்தை கற்பித்த பின்னர் தான் விடுவான்.

பிரவீன், “அகில்” என்று தொடங்க,

அவன் கூற வந்த விடயத்தின் சாராம்சம் உணர்ந்தவன்,

“இந்த டாபிக்க முடிச்சிட்டா நீங்க போகலாம்” என்றவன் முடித்திட,

“அகில் டைம் ஆச்சு” என்று மகேஷ் மொழிந்தான்.

“ஓகே தாரளமா போங்க” என்றதும் எல்லோரும் வேகமாக புத்தகத்தை மூடி வைக்க விழைந்தார்கள்.

“ஆனால் நாளையில இருந்து படிக்க வராதிங்க…” என்று என்றவனது கூற்றில் சட்டென்று புத்தங்கள் மீண்டும் திறந்து கொண்டது.

‘ஐயோ விடமாட்றானே லேட்டா போனா மாஸ்டர் வேற கத்துவானே…’ என்று மனதில் புலம்பியபடி ரம்யா ப்ரியாவை பார்த்தாள்.

இருவரும் ஒன்று சேர்ந்து வர்ஷினியை கவனிக்க அவளோ கர்ம சிரத்தையாக படித்து கொண்டிருந்தாள்.

ரம்யா, “என்னடி இவ ஏதோ ராக்கெட் விட்ற சைன்டிஸ்ட் ரேஞ்ச்க்கு படிச்சிட்டு இருக்கா பர்ஸ்ட் மார்க் வாங்கிடுவாளோ” என்று சந்தேகிக்க,

“ம்ஹூம். வாய்ப்பில்லைடி” என்ற ப்ரியா,

“ஒருவேளை தப்பி தவறி நடந்திடுமோ நோ விடக்கூடாது” என்றவள்,

“இப்போ எப்படி எஸ்கேப் ஆகுறோம்” என்று வர்ஷினியை சுரண்டினாள்.

“என்ன?” என்று வர்ஷினி புருவம் உயர்த்த,

“உன் ஆள்கிட்ட கேட்டு சீக்கிரம் விட சொல்லுடி” என்றிட,

“ஆளா…?” என்ற வர்ஷினி அதிர்ந்து விழிக்க,

“ஆமா ஆள் தான் கேட்டு சொல்லு” என்று ரம்யாவும் மொழிந்தாள்.

“பைத்தியம் மாதிரி உளறாம பிடிச்சிட்டு கிளம்புங்க” என்றாள்.

“ஓ… கிளம்புங்கன்னா உன் ஆளை விட்டு வர உனக்கு விருப்பம் இல்லையா?” என்று கண்ணடிக்க,

வர்ஷினி அவளை முறைத்தாள்.

“நீ என்னவோ பண்ணு. எங்களுக்கு தேவையில்லை. நீ சொன்னா தான் அவன் கேட்பான் ஒழுங்கா எங்களை விட சொல்லு” என்று ரம்யா மிரட்ட,

“முடியாது போங்கடி” என்றவள் படிக்க துவங்க,

“ஓஹோ முடியாதா…?” என்று இருந்து ஒரு சேர ஒரு மாதிரி குரலில் வினவ,

வர்ஷினிக்கு உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.

இருந்தும் அதனை மறைத்து கொண்டு,

“ஆமா முடியாது” என்றாள்.

“சரி விடு நாங்க அகில்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்றோம்” என்றாள் ரம்யா.

“என்ன என்ன சொல்லுவிங்க”என்று வர்ஷினி வினவ,

“ஹ்ம்ம் நீ அவனை ரொம்ப லவ் பண்ற. உனக்கு அகில்னா ரொம்ப இஷ்டம். அவனை பாக்க தான் தினமும் படிக்க வர்றேன்னு சொல்லுவேன்” என்று ரம்யா இழுக்க,

வர்ஷினி அதிர்ந்து பார்த்தாள்.

“அதுவுமில்லாம தினமும் ஹாஸ்டல்ல அவனை பத்தி பேசி தொல்லை பண்ற. சீக்கிரம் அவனை அக்சப்ட் பண்ணிக்கன்னு சொல்லுவோம்” என்று ப்ரியாவும் கூற,

“நோ” என்று அதிர்ந்து விழித்தாள் வர்ஷினி.

ரம்யா, “எஸ் நீ இப்போ எங்களை விட சொல்லலைன்னா நாங்க சொல்லுவோம்” என்றிட,

“ம்ஹூம் நான் கேக்க மாட்டேன்” என்று வர்ஷினி தலையசைக்க,

“சரி நாங்க சொல்றோம்” என்றவள்,

“அகில்” என்று உரக்க அழைத்திட,

வர்ஷினிக்கு இதயம் பந்தயத்தில் ஓட துவங்கியது. காரணம் இவர்கள் விளையாட்டுக்கு கூறினாலும் அதனை செய்துவிடுவார்கள்.

அகிலனிடம் தான் அவனை விரும்புவதை கூறிவிட்டால் அதன் பிறகு அகிலனது முகத்தில் எப்படி விழிக்க முடியும் என்று உள்ளுக்குள் ஒரு பதட்டம் ஊற்றெடுத்தது.

“ப்ளீஸ் வேணாம் வேணாம்” என்று உதடசைத்து அவர்களிடம் கெஞ்ச,

அகில், “என்ன ரம்யா?” என்று வினா எழுப்பினான்.

ரம்யா சிரிப்புடன் வர்ஷினியை பார்த்துவிட்டு அகிலிடம்,

“எனக்கு இந்த மெக்கானிஸம் புரியலை கொஞ்சம் சொல்லிக்கொடு” என்று மொழிய,

வர்ஷினிக்கு போன உயிர் திரும்பி வந்தது.

“அந்த பயம் இருக்கட்டும்” என்றவள் அகிலிடம் கேட்க துவங்கினாள்.

“என்னடி நான் கேட்கவா?” என்று ப்ரியா வினா எழுப்பியதும்,

“நோ நானே அவன்கிட்ட பேசுறேன்” என்றவள் ரம்யாவிற்கு விளக்கும் வரை பொறுமையாக இருந்துவிட்டு,

“அகில் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் விட்றேன். லேட்டா போனா மாஸ்டர் திட்டுவாரு பாவம் இவங்க. கல்சுரல்ஸ் முடிஞ்சதும் கரெக்டா வந்திடுவோம். எக்ஸ்ட்ரா டைம் கூட படிக்கிறோமே…” இந்த கண்களை சுருக்கி கெஞ்ச,

அகிலனது பார்வை அவளது சுருங்கிய விழிகளில் பதிந்தது.

நொடிகள் கடக்க,

“சரி இந்த டைம் மட்டும் தான். நெக்ஸ்ட் வீக் இந்த வீக்கோட டாபிக்ஸ சேர்த்து முடிச்சிடணும்” என்றிட,

எல்லோர் முகத்திலும் ஒளிவட்டம் ஜனித்தது.

“பாரேன் இவ்ளோ நேரம் நாம கேட்டோம் விடலை. இவ லைட்டா கெஞ்சுனதும் விட்டுட்டான்” என்று மகேஷ் முணுமுணுக்க,

“கேக்குறவங்க கேட்டாதான் கரெக்டா எல்லாம் கிடைக்கும் போல” என்று பிரவீன் மொழிந்தான்.

எல்லோரும் புத்தகத்தை எடுத்து வைக்க,

ரம்யா, “வர்ஷி எங்களுக்கு தான டான்ஸ் பிராக்டிஸ் இருக்கு. நீ சும்மா தான அங்க வேடிக்கை பாக்க போற பேசாம இங்க உட்கார்ந்து படிச்சிட்டு வந்திடு”. என்றவாறு எழ, வர்ஷினி விழித்தாள்.

ப்ரியா வேறு அருகில் சென்று, “ஆல் தி பெஸ்ட்” என்றுவிட்டு செல்ல,

போகும் அவர்களையே பார்த்தவள் அகிலை பார்த்து பாவமாய் முழிக்க,

“படிச்சிட்டு போறீயா?” என்று அகிலன் வினா தொடுக்க,

“ஹ்ம்ம்” என்று மீண்டும் பாவமான பாவனையில் தலையசைத்து வைத்தாள்.

அகிலுக்கே அவளை பார்க்க என்னவோ போல இருக்க,

“சரி நீயும் அவங்களோடவே படிச்சிக்க” என்றதும் தான் தாமதம் சிரிப்புடன் வேக வேகமாக புத்தகத்தை எடுத்து வைத்தாள்.

அதனை கண்ட அகிலுக்கு புன்னகை முகிழ்ந்திட,

அவனது புன்னகையில் இவள் அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு எழுந்து ஓடிவிட்டாள்.

மறுநாள் கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஆதலால் எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண உடைகளில் மாணவர்கள் ஆராவாரம் செய்து கொண்டிருக்க,

ஒலிப்பெருக்கியில் இன்னும் சில நிமிடங்களில் நிகழ்ச்சி துவங்க இருப்பதால் எல்லோரும் கலையரங்கத்திற்கு விரைவில் வருமாறு அறிவிக்கப்பட்டது.

“ஹே சீக்கிரம் வாங்கடி. ஸ்டார்ட் பண்ணிட போறாங்க” என்ற வர்ஷினி அந்த ஊதா நிற லெஹெங்காவினை கையில் தூக்கி பிடித்தபடி வேக நடையில் நடக்க,

“ஹ்ம்ம் வந்திட்டு தான இருக்கோம். அதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிட மாட்டாங்க”என்ற ப்ரியா மற்றும் ரம்யாவும் பேண்ட் மற்றும் டீசர்டில் இருந்தனர்.

குழு நடனம் ஆடுவதற்காக ஒரே போல உடை அணிந்து இருந்தனர்.

நடந்து கொண்டிருந்த ரம்யா திடீரென நின்றிட,

வர்ஷினி, “என்னடி நின்னுட்ட?” என்று வினவ,

“வர்ஷி இங்க என்ன பாத்து சொல்லு உனக்கு அகில் மேல இன்ட்ரஸ்ட் இருக்கா?” என்று தன்புறம் திருப்பி வினா தொடுக்க,

இங்கு வர்ஷினி தான் இவளுக்கு கேள்வியில் சட்டென்று ஜெர்க் ஆகி,

‘எதாவது கலாய்க்க தான் கேட்கிறாள்’ என்று நினைத்து,

“இல்லை” என்று தலையை இடம் வலமாக அசைத்தாள்.

“ஆர் யூ ஸ்யூர்?”

“ஸ்யூர்”

“அப்போ ஓகே இனிமே அவன் பிராப்பர்டி. நேவி ப்ளூ டீசர்ட்ல என்னமா அழகா இருக்கான். பாலிவுட் ஆக்டர்ஸ்கே டஃப் கொடுப்பான் போல” என்றிட,

“என்ன?” என்ற வர்ஷினியின் முகத்தில் ஏகமாய் அதிர்வு.

“ஆமாடி” என்று ப்ரியாவும் ஜொள்ளினாள்.

வர்ஷினி சடுதியில் திரும்பி பார்க்க நேவி ப்ளூ நிறத்தை டீசர்ட்டும் சந்தன நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தவனது மேலிருந்து இவளால் விழியை அகற்ற இயலவில்லை.

சட்டென்று சுதாரித்தவள்,

“ரம்ஸ் அது அவன் என்னோட…” என்றவள் திணற,

ரம்யா, “அதான் வேணாம்னு சொல்லிட்டேல நீ விலகு” என்றிட,

“நோ எனக்கு வேணும்” பட்டென்று பதில் பொழிந்தாள்.

ப்ரியா, “நீங்க இங்க சண்டை போட்டுட்டு இருங்க. அதுக்குள்ளயும் அவனை யமுனா கரெக்ட் பண்ணிட்டு போய்டுவா” என்று ப்ரியா சிரிக்க,

இருவரும் ஒரு சேர திரும்பி பார்க்க அங்கு அகிலன் மென் சிரிப்புடன் வகுப்பு மாணவி யமுனாவிடம் பேசி கொண்டு இருந்தான்.

யமுனாவிற்கு அகிலன் மீது ஒரு விருப்பம் என்று அவளது சமீபத்திய நடவடிக்கைகளில் இவர்களுக்கு தெரிந்திருந்தது.

“நோ” என்று வர்ஷி பரிதாபமாய் விழிக்க,

“என்ன நோ. ப்ரெண்டா போய்ட்டதால உனக்கு போனா போகுதுனு விட்டு தர்றேன். ஓடிப்போய் சீக்கிரம் ப்ரோபோஸ் பண்ணிடு” என்று ரம்யா மொழிய,

“இல்லை எனக்கு அவன் மேல இருக்க பீலிங்க்ஸ பத்தி நான் ஒரு கன்பர்மேஷனுக்கு வரலை” என்றாள் வர்ஷி.

“ஆமா நீ கன்பார்ம் பண்ணு. அதுக்குள்ள அவ கல்யாணம் பண்ணிடுவா” என்று ரம்யா இழுக்க,

“ரம்ஸ்” என்று உதடு பிதுக்கினாள் வர்ஷினி.

“இங்க பாத்து என்ன யூஸ் போ இது தான் சான்ஸ் போய் அவன்கிட்ட ப்ரபோஸ் பண்ணிடு”என்று அவளை தள்ளிவிட,

வர்ஷியும் ஒரு ஆர்வத்தில்
அவனருகே சென்றுவிட்டாள்.

தன்னை நோக்கி வருபவளை கண்ட அகில் கேள்வியாக பார்க்க,

இவளுக்கு தான் வார்த்தை வரவில்லை.

“அகில் அது வந்து…” என்று இழுத்தபடி அவனை நோக்க,

“என்ன வர்ஷினி சொல்லு” என்று அவனும் இயம்ப,

இவள் தான் நண்பர்கள் பேச்சை கேட்டு வந்து என்ன பதில் அளிப்பதென்று தெரியாது விழித்து நின்றாள்.







 
Well-known member
Messages
774
Reaction score
576
Points
93
Intha friends lam sernthu varshi ya usuppethi vittuttanga, paavam enna solla poralo Akil kitta
😆😆😆😆😆
 
Active member
Messages
316
Reaction score
211
Points
43
Ada appracentigala nega panra velai ah la ava ethanai thadavai than ipadi avan kita enna sollurathu nu theriyama muzhipa ah
 
New member
Messages
16
Reaction score
14
Points
3
madam nesa puyal is resting for more than a week .All your fans are waiting waiting, please
 
Top