- Messages
- 997
- Reaction score
- 2,811
- Points
- 93
நெஞ்சம் – 24
உமையாள் என்றுரைத்த பிரபஞ்சனுக்கு அப்படியொரு அதிர்ச்சி. உமையாளுடைய கடந்த காலம் மோசமானது எனத் தெரிந்தாலும், அவள் உடலளவிலும் மனதளவிலும் இத்தனை துன்பத்தை அனுபவித்து இருப்பாள் எனப் பிரபஞ்சன் எண்ணி இருக்கவில்லை. நெஞ்சம் அவளது கடந்த காலத்தைக் கேட்டுத் துடித்துப் போனது.
ஆனால், உமையாளோ எந்தவித உணர்ச்சியுமின்றி கூறிவிட்டு அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள். அந்தச் சிரிப்பின் பின்னே அவள் சந்தித்த வேதனையும் வலியும் வாதையும் மட்டுமே இருப்பதை இப்போதுதான் கணவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. எப்படி இந்தப் பெண்ணால் இத்தனை கஷ்டங்களையும் கடந்து தன்னம்பிக்கையுடன் மீண்டு வர முடிந்தது. கண்டிப்பாக அந்த நேரத்தில் அவளுக்கு ஆறுதலாக ஒருவர் கூட இருந்திருக்க மாட்டார்கள் என அவளது பேச்சிலே உணர்ந்தான்.
“உமையா...” என்றவன் என்ன சொல்வது எனத் தெரியாது மனைவியை அணைத்துக்கொண்டான். இப்போது அவனால் அவளுக்குக் கொடுக்க முடிந்தது இந்த ஆறுதலான அணைப்பு மட்டும்தானே. ஏனோ அவளை முன்பே தான் சந்தித்து இருந்தால் இந்த வலியும் வேதனையும் அவளை அண்டியிருக்காதோ? எனத் தோன்றியது அந்த ஆடவனுக்கு.
“என்ன செய்றது? யார்கிட்டே போறதுன்னு திக்குத் தெரியாம குழந்தையை வச்சுட்டு ரோட்ல நிக்கிறது எல்லாம் பெரிய கொடுமைங்க...” என்றவளிடம் மெல்லிய விசும்பல். இத்தனை நேரம் உறுதியாய் இருந்தவள், கணவனின் அணைப்பில் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. அப்போது அவளிடம் எதுவுமே இல்லை. படிக்கவும் இல்லையே! படித்து இருந்தால் கூட, அது அவளுக்கு பெரிய நம்பிக்கையை உறுதியை அதைவிட வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை பல மடங்கு கொடுத்திருக்குமே.
அமுதா அன்று வரவில்லை என்றால் என்ன ஆகியிருப்போம் என்ற நினைவே அச்சத்தைப் பரப்பியது. இன்னும் சில அந்தரங்கமான விஷயங்களைக் கூட கணவனிடம் கூறினாள். மனம் வலித்தது. இதுவரை யாரிடமும் பகிர முடியாத வலி அது. உலகத்தைப் பொறுத்தவரை ஆண்களுக்கு மட்டும்தான் உணர்வுகளும் ஆசைகளும் இருக்கும். பெண் என்பவள் ஜடமாகத்தான் இருக்க வேண்டும். பெண்ணாய் பிறந்ததால், எவ்வளவு அடி வாங்கினாலும், எதையும் வெளியே கூறக்கூடாது என்பது எழுதப்படாத விதியாகிற்றே!
பிரபஞ்சனுக்கு வீரா மீது அத்தனை கோபம் வந்தது. என்ன மனிதன் அவன் என தனக்குத் தெரிந்த ஆங்கில கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தவன், மனைவியின் முகத்தைப் பார்த்தான். இன்னும் அவளது விசும்பல் அடங்கவில்லை. தான் மிகவும் தைரியமான பெண் என்று எல்லோரிடமும் விரிக்கும் பிம்பம் இன்று பிரபஞ்சன் முன்னே தூள் தூளாய் சிதறிப்போனது. அழுதாள், மனதில் உள்ள பாரம் தீர அழுதுத் தீர்த்தவள், கணவன் மடியிலே அப்படியே உறங்கிப் போனாள். பாரத்தை இறக்கி வைத்தவள் உறங்கிப் போக, அதை பெற்றுக் கொண்டவனுக்கு மனதை அழுத்தியது.
‘எப்படி இப்படி அவர்களால் நடக்க முடிந்தது? மனைவி என்ற எண்ணம் இல்லாவிடினும், சக மனுஷியாய் அவளுக்கு மரியாதைக் கொடுத்து இருக்கலாமே! இந்த அளவிற்கு மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தி இருக்கிறார்களே!’ என்ற எண்ணத்தில் நெஞ்சம் விம்மியது பிரபஞ்சனுக்கு. இத்தனை வலிகளையும் கடந்துவந்த மனைவியைப் பார்த்தான். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டான். பின்னர் ‘சாரி’ என முணுமுணுத்தான்.
மறுநாள் காலையில் உமையாள் எப்போதும் போல வேலைக்கு கிளம்பினாள். ஆனால், பிரபஞ்சன் முகம்தான் சரியில்லாமல் இருந்தது. கணவன் முகத்தை அவளும் கவனித்துதான் இருந்தாள். காலையிலிருந்த வேலையில் அவனிடம் பேச நேரமே அமையவில்லை. குழந்தையை கிளப்பி அவளை பள்ளியில் விட்டுவிட்டு மூவரும் ஆடைத் தயாரிப்பகம் சென்றனர்.
மாலை வீட்டிற்க்கு வந்தப் பிறகும் மனைவி பார்த்தால் கூட, விழிகளை எட்டாத புன்னகையுடன் பிரபஞ்சன் கடந்தான் . எதுவும் கூறாதவள், குழந்தைக்கு பாலை காய்ச்சிக் கொடுத்துவிட்டு சாரதாவிற்கு குளம்பியைக் தந்துவிட்டு தனக்கும் கணவனுக்கும் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
“காஃபி குடிங்க...” அவனருகே குவளையை நகர்த்தியவள், தானும் பருக ஆரம்பித்தாள். அவளது முகத்தையே பார்த்தான் பிரபஞ்சன்.
பின்னர் சில நொடிகளுக்குப் பின்னே குவளையைக் கைகளில் எடுத்து மெதுவாய் குளம்பியைப் பருகினான். ஆனால், பார்வை மட்டும் மனைவியிடம் மட்டும்தான்.
அவனைப் பார்த்து மெதுவாய் புன்னகைத்தவள், குவளையை மேஜை மீது வைத்துவிட்டு, கணவனது கரங்களை தன் கைகளுக்குள் பொதிந்துகொண்டாள்.
“இன்னும் நான் சொன்னதையே நினைச்சுட்டு இருக்கீங்களா?” மென்னகையுடன் கேட்டாள். பதில் கூறாது அவளைப் பார்த்தான் பிரபஞ்சன்.
லேசாய் புன்னகைத்தவள், “நீங்கதானே சொன்னீங்க, அதெல்லாம் கடந்த காலம்னு. இப்பவும் நான் அதைத்தான் சொல்றேன். கடந்த காலம், எதையும் நம்மலாள மாத்த முடியாது. இப்படியெல்லாம் நடக்கணும்னு என் விதியில இருக்கோ என்னவோ?
இப்போ இந்த நிமிஷம் நான் சந்தோஷமா இருக்கேன். அதை மட்டும் பாருங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு என்ன பிடிக்கும்னு என் முகம் பார்த்து நடக்குற ஒருத்தர் என் வாழ்க்கைத் துணையா அமைஞ்சு இருக்காரு. உங்களோடு இந்த வாழ்க்கை எனக்கு சந்தோஷத்தை மட்டும் இல்லை, நிறைவும் கொடுத்து இருக்கு. சோ, அதை நினைச்சு நீங்க வருத்தப்படக் கூடாது. இதனால்தான் நான் உங்ககிட்டே இத்தனை நாள் எதுவும் சொல்லலை!” என்றவளுக்குத் தெரியுமே. பிரபஞ்சன் எத்தனை மென்மையானவன் என்று. அன்று மணி விஷயத்திலே யாரோ ஒரு பெண்ணாக தானிருக்கும் போதே அப்படி தவித்து துடித்துப் போனான். இப்போது மனைவியாய் இருக்கும்போது கடந்த காலம் எனினும், தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவனைப் பாதிக்குமென அறிந்தவள், கணவன் கைகளைத் தட்டிக் கொடுத்தாள்.
உமையாளின் கைகளை எடுத்து உதட்டில் ஒற்றியவன், “சாரிங்க...” என்றான். இவளுக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.
“எதுக்கு இந்த சாரி?” உமையாள் வினவ,
“இந்த மாதிரி ஒரு கஷ்டமான சிட்சுவேஷன்ல என்னால உங்கக் கூட இருக்க முடியலையே!” உண்மையான வருத்தத்துடன் கூறிய கணவனை அன்பாய்ப் பார்த்தாள். அப்படியும் மனிதர்கள், இப்படியும் மனிதர்கள்.
“நான் உங்களுக்குத் தெரிஞ்சு ஒரு உமையாள். தெரியாம எத்தனை உமையாள் இருக்காங்களோ? இதுக்கெல்லாம் நீங்க மன்னிப்புக் கேட்க கூடாது. முதல்ல நான் சொன்னதை எல்லாம் ஜஸ்ட் பாஸ்ட்னு நினைச்சு மறந்துடுங்க...” உமையாள் இப்போது அதட்ட, பிரபஞ்சன் இதழ்களில் மென்னகை.
“சரி, இந்த வார ஞாயிற்றுக்கிழமை எங்கப் போகலாம். சொல்லுங்க” மனைவி ஆசையாய் கேட்க, கணவன் மனதும் அதில் திரும்பியது.
“சரி சொல்லுங்க, எங்கப் போகலாம்?” பிரபா வினவ,
“ஹம்ம்... எனக்கு மெரீனா போக ரொம்ப ஆசை. சின்ன வயசுல அம்மா எங்கேயும் அனுப்ப மாட்டாங்க. அப்பாவுக்கும் வேலை இருக்கும். அதனாலே நான் பீச்சை பார்த்ததே இல்லை. போகலாமாங்க?” கண்கள் மின்ன கேட்ட உமையாளிடம் சின்ன சிரிப்புடன் தலையை அசைத்தான். மனைவி கேட்டு அவனால் மறுக்க முடியுமா என்ன?
அந்த வார ஞாயிற்றுக்கிழமையே கோகுல், பிரபஞ்சன், உமையாள், ஆராதனா என நால்வரும் மகிழுந்தில் கிளம்பினர். அதிகாலை ஐந்து மணிக்கே விழுப்புரத்திலிருந்து பயணத்தைத் தொடங்கினார்கள். எட்டு மணி போல அவர்கள் மெரீனா கடற்கரையை அடைந்திருந்தனர்.
மகிழுந்தை ஓரமாய் நிறுத்திவிட்டு, மணலில் இறங்கி மூவரும் நடக்க, ஆராதனா பிரபஞ்சன் கையில் இருந்தாள். சூரியன் நடுவில் தன் பொன்னிறக் கதிர்களை சிதறி நடுநாயகமாக நிற்க, சுற்றிலும் நீல வண்ணம் சூழ்ந்த கடல். அந்தக் காலை நேரத்தில் பரபரப்பு எதுவுமின்றி அமைதியாய் அதே சமயம் கொஞ்சம் இயற்கையின் ஆர்ப்பாட்டத்தோடு காணப்பட்டது.
கொஞ்சம் ஆச்சரியமும் சந்தோஷமுமாய் கடலை பார்த்துக்கொண்டே நடந்த மனைவியைப் பார்த்து பிரபஞ்சனுக்குப் புன்னகை பிறந்தது.
கடலுக்கு அருகே விரைந்ததும் உமையாள் நின்றுவிட்டாள். “அப்பா உள்ள போகலாம் வாங்க...” ஆராதனா முதன்முதலில் கடலைப் பார்த்த ஆர்பரிப்பில் துள்ளினாள்.
“என்ன நின்னுட்டீங்க... வாங்க உள்ள” பிரபஞ்சன் உமையாள் கையைப் பிடிக்க, தலையை இடம் வலமாக அசைத்தாள்.
“பயமா இருக்குங்க...” சொல்லும்போதே வெட்கமாய் தயங்கிச் சொன்னாள் பெண்.
“அட, நான் இருக்கும்போது என்ன பயம்?” என அவன் வினவிக் கொண்டிருக்க, “நீ வா அம்மு, நம்ம உள்ள போவோம். உங்க அப்பா, அம்மா இப்போதைக்கு வர மாட்டாங்க” எனக் குழந்தையைக் கோகுல் வாங்கிக்கொண்டு கடலுக்குள்ளே சென்றான்.
“என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” பிரபஞ்சன் உமையாளை நோக்கி கையை நீட்ட, மெதுவாய் அவன் கரத்துடன் கரம் கோர்த்தாள். இருவரும் கடலுக்குள் இறங்கினர். முட்டிவரை நீர் வந்ததும், கணவன் கரங்களை இறுகப் பிடித்துக்கொண்டாள் உமையாள். கொஞ்சம் கொஞ்சமாய் உடல் அந்த நீருக்கு பழகியது. சிரிப்புடன் அவன் கரங்களுடன் தனது கரங்களைப் பிணைத்தபடி கடலை வேடிக்கைப் பார்த்தாள். நீண்ட நாள் ஆசை, கனவென்று கூடச் சொல்லாம். மனைவி முகத்திலிருந்த சந்தோஷத்தில் இவனுக்கு அப்படியொரு நிறைவு.
நீண்ட நேரம் தண்ணீரில் ஆடிவிட்டு அருகிலிருந்த உணவகத்திற்கு சென்று உணவை உண்டுவிட்டு அப்படியே சென்னையை சுற்றிப் பார்க்க கிளம்பினர். உமையாளுக்கு சொல்லவே தேவையில்லை அத்தனை ஆசையாய் பயணத்தையும் கணவனையும் ரசித்தாள். மீண்டும் சூரியன் மறையும் நேரம் கடற்கரைக்கு வந்து ஆட்டம் போட்டுவிட்டுதான் வீட்டிற்குக் கிளம்பினர்.
சூரியன் மறையும் காட்சியை அழகாய் தங்களது அலைபேசியில் புகைப்படம் எடுத்தான் கோகுல். பின்னர் நாலவரும் இணைந்து சுயமிப் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினர்.
வீடு சென்று சேர இரவு பத்தை நெருங்கிவிட்டது. பிரபஞ்சன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வர, “ஆராவை என்கிட்ட கொடு டா. நீங்க ரெண்டு பேரும் குளிச்சுடுங்க முதல்ல!” என்ற சாரதா குழந்தையை வாங்கி தனதறைக்கு தூக்கிச் சென்றுவிட்டார்.
உமையாள் முதலில் குளித்து வர, அடுத்ததாக பிரபஞ்சன் குளித்து வந்தான். தலையை ஓரளவிற்கு காய வைத்தவள், கால்களில் வலி. இன்று முழுவதும் ஊரைச் சுற்றியது. கட்டிலில் காலை நீட்டி அமர்ந்துவிட்டாள்.
அவள் முகத்தைப் பார்த்த பிரபஞ்சன், “மேடம் டயர்டா?” என புன்னகையுடனே அவளுக்கு அருகில் அமர்ந்தான்.
“கொஞ்சம் டயர்ட்தான். பட், ரொம்ப சந்தோஷமா இருந்தேன்!” என கணவனைப் பார்த்து புன்னகைத்தவள், அவன் தோளில் சாய்ந்தாள்.
“உமையா ஹேப்பினா, பிரபஞ்சனும் ஹேப்பிதான்” என்றவனின் கரங்கள் மனைவியின் முடியை ஒதுக்கித் தள்ளியது.
“தேங்க்ஸ்...” மலர்ந்த புன்னகையுடன் கூறிய உமையாள் பிரபஞ்சனை முழுவதும் நிறைத்தாள்.
“ஏனாம்?” இவனது புருவங்கள் புன்னகையில் விரிந்தன.
“ஹம்ம்... நான் கேட்டதும் உடனே பீச்சுக்கு கூட்டீட்டுப் போனதுக்கு. எனக்கும் மனசு இருக்கும், அதுல ஆசைகள் இருக்கும்னு எல்லாத்தையும் ஒவ்வொன்னா நிறைவேத்துறதுக்கு...” என்றாள். குரல் முழுவதும் பிரபஞ்சன் மீதான நேசம் மிளிர்ந்தது. அதில் தன்னைத் தொலைத்தவன்,
“ஓஹோ...” என இழுத்துப் பின்,
“வேற எதுவும் ஆசை இருக்கா என் பொண்டாட்டிக்கு?” என வினவினான்.
“ஹம்ம்... ரொம்ப பெரிய ஆசை ஒன்னு இருக்கே!” மனைவியின் கைகளும் அதன் போல அழகாய் விரிந்தது.
“அப்படியென்ன பெரிய ஆசை?” குறும்பாய் பிரபா வினவினான்.
“எனக்கு உங்களைப் போல ஒரு பையனை பெத்துக்கணும். உங்க அம்மா, என் அத்தை உங்களை எப்படி வளர்த்து இருக்காங்களோ, அதே போல வளர்க்கணும்!” ஆசையாய் கூறிய மனைவியை அள்ளியணைத்து அவளது முகம் முழுவதும் முத்தமிட்டவன், “ம்ப்ச்... உன் புருஷன் அவ்வளோ நல்லவன் இல்லையே மா!” என்றான்.
“ஓஹோ... என் புருஷனைப் பத்தி உங்களுக்கு என்னங்க தெரியும்?” ரோஷமாய் கேட்டவள், சற்றே முட்டிப்போட்டு அமர்ந்தாள்.
“என் புருஷன் ஒரு குழந்தை...” என பிரபஞ்சன் இரண்டு கன்னங்களையும் பிடித்து ஆட்டினாள். இப்போது பிரபஞ்சனின் முகத்தில் வெட்கப் புன்னகை.
“உங்க புருஷன் கோபக்காரர் ஆச்சே...” பிரபா இழுக்க,
“யார் அவரா? அவர் அமுல் பேபி. அவருக்கு கோபம் எல்லாம் படத் தெரியாதே!” பாவனையாய் சொன்ன மனைவியை பிடித்திழுத்தவன், “அடியே!” என்றான்.
அவன் அழைப்பில் உமையாள் விழிகள் விரிந்தன. “என்ன சொன்னீங்க புருஷர்?” சின்ன சிரிப்புடன் வினவினாள்.
அவளது பாவனையில் தொலைந்தவன், “மதுரையில எல்லாரும் பொண்டாட்டியை இப்படித்தான் கூப்பிடுவாங்களாம். அதான் நானும் இனிமே இப்படியே கூப்பிட்றேன்!” குறும்பாய் கூறியவனின் மீசைக்கு அடியில் சின்னதாய் சிரிப்பு பொங்கியது.
“அட...” பொய்யாய் ஆச்சரியம் காட்டி அவனின் மீசையை லேசாய் இழுத்தாள் மனைவி. அதில் சொக்கிப் போனவன், “அடியே பொண்டாட்டி...” என அவளை இழுத்து இறுக அணைத்தான். அவனது மார்பில் சுகமாய் புதைந்தவளின் காதில், “ஐ லவ் யூ...” என்றான் காதலாக. உமையாள் உடல் சிலிர்த்தது. உதட்டில் புன்னகையும் இதழ்களிலும் மெல்லிய ஈரமும் கசிந்தது.
“நானும்தான் ரொம்ப லவ் யூ...” என கணவனின் நெஞ்சில் முத்தமிட்டாள். பிரபஞ்சனிடம் இன்பமான அதிர்வு. அவளது முகத்தை தாங்கி முத்த மழை பொழிந்தவன், மனைவியை முத்தாடத்தொடங்கி இருந்தான்.
(கீழே தொடர்ந்து படிக்கவும்)

Last edited: