- Messages
- 1,115
- Reaction score
- 3,189
- Points
- 113
நெஞ்சம் – 9 
“ஷ்யூர் சார், கரெக்டா சொன்ன டேட்ல பாலை டெலிவரி பண்ணிடுவோம்!” என தேவா புன்னகையுடன் எதிரே இருந்தவரிடம் கூற, அவர் எழுந்து நின்று கையைக் குலுக்கி விடை பெற்றார். இவன் வாயில் வரை சென்று விட்டுவிட்டு வந்தான்.
“ஆதிரையாழ், கம் டு மை ரூம்!” என ஆய்வகத்தின் வாயிலில் நின்று உரைத்தவன் விறுவிறுவென அறைக்குள் நுழைய, சுபாஷ் அவன் பின்னோடு வந்தான்.
ஆதிரையும் வர, “இன்னும் டூ வீக்ஸ்ல ஒரு மேரேஜ் பங்க்சனுக்கு நூறு லிட்டர் பால் டெலிவரி பண்ணணும். சொன்ன டைம்ல எப்பவும் போல பெர்பெக்டா பண்ணிடணும். டோன்ட் டேக் லீவ் ஆன் தட் டே!” என்றவன், “ஆதிரை, சுபாஷ்க்கு இது புதுசு. சோ நீங்கதான் அவருக்கு எல்லாத்தையும் கைட் பண்ணணும்!” அவள் புறம் பார்வையைப் பதித்தான்.
“ஓகே சார்!” அவள் தலையை அசைக்க, “ஹம்ம்... கஸ்டமர் டீடெயில்ஸ் எல்லாம் நான் எக்ஸெல் ஷீட்ல ஏத்திட்றேன். வேற எதுவும் டவுட்னா என்கிட்டே கேளுங்க!” என்றவன் அவர்களை அகலக் கூற, ஆதிரை அறையைவிட்டு வெளியேறும் போது நவநாகரீகமான பெண்ணொருத்தி வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தாள். தனது இருசக்கர வாகனத்தை அவள் நிறுத்தி அதிலிருந்து இறங்கி நிற்க, ஆதிரை அவளுக்கு அருகே சென்றிருந்தாள். சுபாஷ் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
அவள் வாடிக்கையாளராக இருக்கக் கூடுமென எண்ணிய ஆதிரை, “ஹாய் மேம், என்ன வேணும் உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
“நான் மிஸ்டர் தேவநந்தனைப் பார்க்கணும்!” உதட்டு சாயமிட்டிருந்த இதழ்கள் மெலிதாய் புன்னகைத்தன.
“ஓ... சாரைப் பார்க்க வந்துருக்கீங்களா மேம்? அவர் ரூம்ல இருக்காரு!” என தேவாவின் அறையைக் கைகாண்பித்தாள். அந்தப் பெண் தலையை அசைத்து விடை பெற்றாள்.
“யார் ஆதி அவங்க?” சுபாஷ் இவளது காதருகே கேட்க, “தெரியலை சுபாஷ், சாரோட ரிலேட்டீவா இருக்கும்!” என்றவள், “கோல்ட் ரூம் டெம்ரேச்சரை நோட் பண்ணிட்டீங்களா?” என அலுவலகப் பேச்சிற்கு தாவ, இருவரும் உள்ளே சென்றனர்.
“எக்ஸ்யூஸ் மீ?” அறையைப் பகுதியாகத் திறந்த அந்தப் பெண் குரல் தேவாவை அடைய, “யெஸ் ப்ளீஸ்...” என அவளை வரவேற்றான்.
“உட்காருங்க...” அவன் சம்பிரதாய புன்னகையுடன் கூற, இவள் தலையை அசைத்து அமர்ந்தாள்.
“ஹம்ம்... பால் ஆர்டர் கொடுக்கணுமா மேம்? டேட் எப்போன்னு சொன்னீங்கன்னா, நான் எங்க ஷெட்யூல் பார்த்து சொல்லிடுவேன்!” இவ்வளவு நேரம் அவன் அணிந்திருந்த கடல் வண்ண சட்டையையும் அடர் கருமைக் கால்சராயிலும் பார்வையைப் படரவிட்டு அவன் முகத்தை அளந்த கண்களில் மெல்லிய அதிர்ச்சி.
“ஹே... தேவா, ஐ யம் விஷாலி!” என்றாள் திகைப்புடன். அவனது முகத்தில் புரியாத பாவனை.
“சாரி விஷாலி, நீங்க?” அவள் யாரெனத் தெரியாது தடுமாறினான். அவளது முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என மூளையின் கடைசி அடுக்கைத் தூசி தட்டியும் நினைவில் வரவில்லை. அவன் பதிலில் இவளது முகத்தில் மெல்லிய அதிருப்தி பரவியது.
“ஐ யம் டென்டிஸ்ட் விஷாலி, உங்க வீட்ல இருந்து மேரேஜ் ப்ரோபோசல் வந்துச்சு. சோ இன்பார்ம் பண்ணீட்டு உங்களைப் பார்க்க வந்தேன். ஹோப் யூ ரிமைண்ட் மீ?” என அவள் பொறுமையாய்க் கூற, “ஷ்...” என நெற்றியை சொரிந்தான் தேவா.
“சாரி... சாரி மிஸ் விஷாலி, நான் நேத்து உங்க போட்டோ ஒரு தடவைதான் பார்த்தேன். அதுவும் இல்லாம நேம் மறந்து போச்சு. டோன்ட் மைண்ட் எனிதிங்க்!” என்றான் சங்கடமான குரலில். அவளது முகத்தில் இப்போது மெல்லிய புன்னகை படர்ந்தது.
“ஹம்ம்... நான் அழகா இல்லையா தேவா?” அவள் புருவத்தை உயர்த்திக் கேட்டதும், இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பளிச்சென வெள்ளை வெளீரென நிறம், பெரிய கண்கள், கொஞ்சம் சப்பையான மூக்கு, அழகான உதடுகள் என பார்ப்பதற்கு விஷாலி லட்சணமாக இருந்தாள். அதுவும் அவளது கிளி பச்சை வண்ண பருத்தி சுரிதாருக்கு சிவப்பு நிற துப்பட்டா இன்னுமே அவளைத் தனித்துக் காண்பித்தது.
“ஹம்ம்... என்னைப் பார்த்துட்டீங்கன்னா ஆன்சர் பண்ணலாம்!” அவள் கூறியதும் இவன் தலையைக் கோதியவன், “யூ ஆர் லுக்கிங் சோ ப்யூட்டி ஃபுல்!” உதடுகளின் ஓரத்தில் முறுவல் தெரிந்தது.
“ஓஹோ...அப்போ ஏன் ஒன் டைம் பார்த்ததும் மறந்துட்டேன்னு சொல்றீங்க? யூ க்நோ, உங்க போட்டோவை அப்பா அனுப்பிவிட்டதும் ரெண்டு டைம் பார்த்தேன் நான். அந்தப் பிக்சர்ல நீங்க ஆலீவ் க்ரீன் ஷர்ட்டுக்கு மேட்சா டார்க் டெனீம் ஜீன்ஸ் போட்டு இருந்தீங்க. ஷேவ் பண்ணி டூ வீக்ஸ்ல தாடி மீசை வளர்ந்திருக்க மாதிரி இருந்துச்சு. போட்டோல கொஞ்சம் டஸ்கியா தெரிஞ்சாலும் நேர்ல ஓகே தான். சிக்ஸ் பீட் ஹைட், குட்டியா கண்ணு, ஷார்ப் நோஸ், சிகரெட் பழக்கம் இல்லாத பிங்க் லிப்ஸ். மொத்தத்துல அப்பியரன்ஸ் வைஸ் யூ ஆர் குட் அண்ட் ப்ரொபஷனல் வைஸ் டூ. இந்த ஃபர்மை நியர்லி நைன் இயர்ஸா ரன் பண்ணீட்டு வரீங்க. அம்மா, அப்பா அண்ட் தங்கை. தம்பிக்கு அத்தைப் பொண்ணோட கல்யாணமாகி ஒரு குழந்தை உண்டு. உங்களோட மேரேஜ் பொண்ணுக்கு விருப்பம் இல்லாம கொலாப்ஸ் ஆகிடுச்சு. சோ தேர்டி டூல தான் நீங்க எனக்கு இன்ட்ரோ ஆகி இருக்கீங்க?” என்றவள் சாய்ந்து அமர, தேவா திகைத்துப் போனான்.
“கொஞ்சம் தண்ணி குடுக்குறீங்களா தேவா?” என விஷாலி நாற்காலியில் சாய்ந்து வசதியாய் அமர்ந்து புசுபுசுவென மூச்சை வெளியிட்டபடி கேட்க, இவன் தண்ணீர் பொத்தலை அவளுக்கு அருகே நகர்த்தி வைத்தான்.
நிதானமாக நீரை அருந்தி முடித்தவள், “ஹம்ம்... சொல்லுங்க தேவா. என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” எனக் கேட்க, அவன் சில நொடிகள் விழித்தான். முதல்முறையாக தேவநந்தன் தன்னைவிட சிறிய வயது பெண்ணிடம் பதில் கூற முடியாது விழித்து நின்றான்.
“ஹம்ம்... இந்த மேரேஜ்ல உங்களுக்கு விருப்பம் இருக்கா? இல்லையான்னு தெரிஞ்சா ஃபர்தரா பேசலாம்!” என அவள் முறுவலிக்க, “சாரி விஷாலி, ஐ யம் தேர்டி டூ. டீனேஜ் பையன் இல்லை. அண்ட் நாட் அ எக்ஸ்பிரஸீவ் பெர்சன் டூ. நேத்துதான் உங்க போட்டோ அண்ட் நேமை பார்த்தேன். தென் வொர்க் டென்ஷன்ல மறந்துட்டேன். மத்தபடி ஐ யம் ஓகே வித் திஸ் ப்ரபோசல். ஐ நீட் டைம் டூ நோ அபவுட் யூ!” என்றான் சங்கடத்துடன்.
“நோ இஷ்ஷூ தேவா... நான் எக்ஸ்பிரசீவ் டைப். ஃபர்ஸ்ட் டைம் உங்களை மீட் பண்ணப் போறேன்னு நேத்து அலைஞ்சு திரிஞ்சு ஷாப்பிங் பண்ணி இந்த குர்தி செட் வாங்குனேன். அண்ட் ரொம்ப எக்ஸைட்டடா மேக்கப் எல்லாம் போட்டு கிளம்பி வந்தா, நீங்க யாருன்னு கேட்கவும் சின்ன டிசப்பாய்ண்மென்ட்!” என்றாள் மனதில் உள்ளதை மறைக்காது.
“ஐ க்நோ விஷாலி, ஐ யம் ரியலி சாரி. எனக்கு கேர்ள்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் கிடையாது. சோ நீங்கதான் எனக்கு எல்லாத்தையும் சொல்லித் தரணும். முன்ன பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!” அவன் முகத்தை சுருக்கி கெஞ்சலாய்க் கேட்டான். தேவாவிற்கு இப்படியெல்லாம் பேச வராது. ஆனாலும் திருமணம் என்று வருகையில் ஒரு பெண்ணிற்கு எதிர்பார்ப்புகள் இருக்குமென அவனுக்கும் புரிந்தே இருந்தது.
“சரி ஓகே, ஃபர்ஸ்ட் டைம். சோ மன்னிச்சுடலாம். இனிமே நம்ப மீட் பண்ணதும் என்னோட அவுட் ஃபிட் எப்படி இருக்குன்னு நீங்க கமெண்ட் பண்ணணும். ஏன்னா உங்களுக்காக பார்த்து பார்த்து ரெடியாகுற எங்களுக்கு கிடைக்கிற சின்ன சின்ன காம்ப்ளிமெண்ட்ஸ்தான் நம்பளை இன்னும் புரிஞ்சுக்க, நெருங்க வைக்கும். ஹம்ம், எனக்கு ட்வென்டி எயிட்டாச்சு. மேரேஜ் பண்ண வேணாம்னு தள்ளி போட்டுட்டே இருந்து, இப்போதான் உங்களைப் பார்த்து வீட்ல பிக்ஸ் பண்ணாங்க. எனக்கும் மறுக்குறதுக்கு எந்தக் காரணமும் தெரியலை. சோ ஐ அக்ரீட். லெட்ஸ் ஸ்டார்ட் தி ஜர்னி ப்ரம் நவ்!” உதடுகளில் மெல்லிய புன்னகை இழையோட கூறினாள்.
“வெல்கம் டூ அவர் லைஃப் விஷாலி!” என்றவன், சுபாஷை அழைத்தான்.
“சார், கூப்டீங்களா?” அவன் வந்து நிற்க, “மேடம்க்கு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வாங்க!” என்றுவிட்டு அவள்புறம் திரும்பினான்.
“சாரி விஷாலி, ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் பெஸ்டா இருக்கும். பட் இங்க வொர்ஸ்டா போய்டுச்சு. ஐ க்நோ, நான் இப்படித்தான். பட் ஐ வில் ட்ரை டூ சேஞ்ச்!” என்றான்.
“இட்ஸ் ஓகே தேவா, மாற முடியாதுன்னு சொன்னாதான் தப்பு. நீங்கதான் ட்ரை பண்றேன்னு சொல்றீங்களே. தட்ஸ் டூ குட்!” என்றவள், “எப்படி, என்கிட்ட இம்பரெஸ் ஆனீங்களா?” என ஆர்வமாய் முன்னே நகர்ந்தாள்.
“டெபனட்லி... நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை. யூ நோ எவ்ரிதிங்க் அபவுட் மீ!” ஆச்சரியம் விலகாது கூறினான்.
“ஹம்ம்... ஹேப்பி டு ஹியர். தென் பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்றது அவ்வளோ ஈஸி இல்ல பாஸ். நீங்க எப்படி? தேறீடுவீங்களா?” அவள் குறும்பாய் கேட்டாள்.
“பார்டர்ல பாஸ் பண்ணுவேன். பட் டோன்ட் எக்ஸ்பெக்ட் டூ மச்!” அவன் குரலில் உண்மை இருந்தது.
“ஹம்ம்... அதை எயிட்டி பெர்சன்டேஜா மாத்திடுங்க தேவா. எனக்குன்னு மேரேஜ் லைஃப் பத்தி எக்ஸ்பெக்டேஷன் இருக்கு. அம்மாவும் அப்பாவும் ஸ்டில் அதே லவ்வோட லைஃபை லீட் பண்றாங்க. அவங்களே மாதிரியே லவ் அண்ட் என்ஜாய்மெண்டா வாழணும்னு நிறைய கனவெல்லாம் வச்சுருக்கேன் பாஸ்!” என்றாள் முகம் மலர. இவன் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டான்.
சுபாஷ் பழச்சாறை இருவருக்கும் கொடுத்துவிட்டு அகல, அதைப் பருகி முடித்து நிமிர்ந்தவள், “ஐ டோன்ட் லைக் ஆரஞ்ச் ஜூஸ்!” என்றாள் அவன் முகம் பார்த்து.
அவன் என்ன பதிலளிப்பது எனத் தெரியாது விழிக்க,
“ஹம்ம்... அப்புறம் ஏன் குடிச்சேன்னு பார்க்குறீங்களா? ஃபர்ஸ்ட் டைம் நீங்க வாங்கிக் கொடுக்குறது. சோ வேண்டாம்னு சொன்னா நல்லா இருக்காது. இதை நோட் பண்ணிக்கோங்க. இனிமே எனக்கு ஜுஸ் வாங்கித் தரணும்னா ஆப்பிள் ஜூஸ் வாங்கித் தரணும்!” என்றாள் விளையாட்டான கண்டிப்பு குரலில்.
“ரொம்ப சொதப்புறேனோ?” அவன் தலையில் கை வைக்க, “இல்லை...” எனக் கூறி தலையை அசைத்து ஆமாம் என முடித்தவளின் உதடுகளின் ஒரத்தில் மெல்லிய புன்னகை பரவிற்று.
“ப்ம்ச்... சாரி!” அவன் கேட்க, “பரவாயில்லை தேவா... போக போக புரிஞ்சுக்கலாம்!” என்றவள், “நானே பேசிட்டே இருக்கேன். உங்களுக்கு எதுவும் கேட்கணும்னா கேட்கலாம்!” என்றாள் அவன் மனதை அறியும் விதமாக.
சில நொடிகள் தயங்கியவன், “உங்களுக்கு இந்த மேரேஜ்ல முழு சம்மதம் தானே. ஃபேமிலிக்காக ஓகே சொல்லலையே?” எனக் கேட்டான்.
அநத்க் கேள்விக்கு முறுவலித்தவள், “ட்ரஸ்ட் மீ தேவா... எனக்குப் பிடிக்கலைன்னா அது வேணாம்னு சொல்ற தைரியத்தை என் பேரண்ட்ஸ் கொடுத்திருக்காங்க. ப்யூர்லி எனக்கு இதுல சம்மதம்தான். பாஸ்ட் லவ் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். காலேஜ் படிக்கும்போது பப்பி லவ் மாதிரி. இன்டர்ன்ஷிப்ல அது ப்ரேகப் ஆகிடுச்சு. சோ அப்புறம் மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்லாம நாலு வருஷம் தள்ளிப் போட்டு இப்போ என்னோட சம்மதத்துலதான் எல்லாம் நடக்குது. உங்களோட பாஸ்ட் எனக்குத் தெரியும். சோ பயம் வேண்டாம். உங்களைப் பிடிச்சதாலதான் நான் இவ்வளோ தூரம் பார்க்க வந்தேன்!” அவன் மனதறிந்து பேசிவளைப் பார்த்து தேவாவின் உதடுகளில் புன்னகை ஏறின.
“தேங்க்ஸ் ஃபார் அண்டர்ஸ்டாண்டிங் மீ விஷாலி!” என்றான் மனநிறைவுடன்.
“பரவாயில்லை தேவா... தென் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்றதால உங்களுக்கு ஒரு கிஃப்ட்!” என அவன் முன்னே சிறிய டப்பாவை நகர்த்தினாள்.
“கிஃப்ட் எல்லாம்... ஐ மீன் பிக்ஸ் ஆகிட்டுதான் வந்தீங்களா விஷாலி?” அவன் ஆச்சர்யத்துடன் அந்தப் பரிசை பிரித்தான்.
“அப்படின்னு சொல்ல முடியாது தேவா. உங்களைப் போட்டோல பார்த்ததும் லுக் ஓகே. பட் கேரெக்டர் தெரியாம எப்படி ஓகே சொல்றது. அரேஞ்ட் மேரேஜ்னாலும் எனக்கு உங்களைப் பத்தி தெரியணும். இன்னும் ஒரு முப்பது வருஷமாவது சேர்ந்து வாழ்வோம். சோ, பேசி பழகி புரிஞ்சுக்கிறது பெட்டர்னு வந்தேன். பிடிச்சிருந்தா கிஃப்ட் பண்ணலாம். இல்லைன்னா சாரி சொல்லிட்டு கிளம்பிடலாம்னு நினைச்சேன்!” என்றவளைப் புன்னகையுடன் பார்த்து பரிசைப் பிரித்தான். வெள்ளியிலான எழுதுகோல் ஒன்று இருந்தது.
“இட் லுக்ஸ் நைஸ் விஷாலி. ஐ லைக் இட்!” அவன் பளிச்சென புன்னகைக்க, “தேங்க் யூ தேங்க் யூ... சிங்கப்பூர்க்கு டூர் போனப்ப வாங்கினது. உங்களுக்கு கிஃப்ட் பண்ணணும்னு இதுல எழுதி இருக்கு போல. நூறு வெள்ளிதான். எனக்கு ரொம்ப பிடிச்சு போய் வாங்குனேன். உங்களுக்கும் பிடிச்சதுல நான் ஹேப்பி!” என்றாள். அவள் நூறு வெள்ளி என்றதுமே தேவாவின் மனம் இந்திய நாட்டு ரூபாய்க்கு
அதைக் கணக்கிட்டது.
கிட்டத்தட்ட ஆறாயிரத்தை விலை தாண்டியிருக்க, “சிக்ஸ் தௌசண்ட் ருபீஸ்க்கு யாராவது பென் வாங்குவாங்களா விஷாலி. டூ மச் காஸ்ட்லி!” அவன் மெலிதாய் கண்டித்தான்.
எழுந்து நின்று கைப்பையை மாட்டிக் கொண்டிருந்தவள் இடுப்பில் கையை வைத்து அவனை முறைத்தாள். “ஆறாயிரமோ ஆறு ரூபாயோ... அது நான் உங்களுக்கு முதல்ல தர்ற கிஃப்ட். விலையைப் பார்க்க கூடாது. நம்ப மீட் பண்ண நாளுக்கான மெமரீ இது. ஒவ்வொரு வருஷமும் நான் கேட்பேன், நீங்க என்கிட்ட இதைக் காட்டணும். அண்ட் கிஃப்ட் பண்ணா விலையை ஃபாதர் பண்ணக் கூடாது பாஸ். தட்ஸ் நாட் அ குட் ஹேபிட்!” விழிகளை உருட்டி அவள் அதட்ட, இவன் அரைகுறையாக புன்னகைத்தான்.
“ஓகே... நான் கிளம்புறேன் தேவா. நைஸ் டூ மீட் யூ. கிஃப்டோட விலையைப் பத்தியே யோசிக்காம பத்திரமா அதை எடுத்து வைங்க!” எனக் குறும்பாய் உரைத்தவளை மென்மையாய் முறைத்துக் கொண்டே அவளுடன் நடந்தான் தேவா.
விஷாலி தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தவள், “இந்த வீக்கெண்ட் அவுட்டிங் போகலாம்!” என்றாள் தலையைத் திருப்பி அவனைப் பார்த்து.
“நோ... எங்கேஜ்மெண்ட்க்கு ஆஃப்டர் அவுட்டிங் போகலாம்!” அவன் மறுக்க, இவள் முறைத்தாள்.
“சரி... சரி, வரேன்!” தேவா முணுமுணுப்புடன் ஒப்புக் கொள்ள, “வொர்க்கஹாலிக்கா நீங்க!” எனக் கேட்டாள்.
“ஹம்ம்...” என்றவன், “யெஸ்... ரொம்பவே!” என்றான்.
“இதுவரைக்கும் எப்படியோ தெரியாது. பட் இனிமே எனக்குன்னு நீங்க டைம் ஸ்பெண்ட் பண்ணணும். மேரேஜ்க்கு அப்புறம் குழந்தை பொண்டாட்டிக்காகன்னு வேலையைத் தள்ளி வைக்கிறதுல தப்பில்லை மிஸ்டர் தேவா. இப்போல இருந்தே பழகிக்கோங்க. ஏன்னா வேலையவே கட்டி அழணும்னு அவசியம் இல்லை. பேமிலியோட ஊரையும் சுத்தி என்ஜாய் பண்ணலாம். அப்போதான் ரிலாக்ஸ்டா வொர்க்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியும்!” என்றவாறு அவள் அகல, இவன் இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளிவிட்டான்.
‘கேர்ள்ஸ் ஆர் வெரி வெரி டிபிகல்ட் டு அண்டர்ஸ்டாண்ட். எப்படி மேனேஜ் பண்ணப் போறேனோ?’ என தேவாவிற்கு இப்போதே அயர்ச்சியாய் வந்தது. அதே நினைவுடனே வேலையை முடித்து வீட்டிற்கு கிளம்பினான்.
அவன் வந்ததும் பொன்வானி மகனின் முகத்தைப் பார்த்தவாறே குளம்பியைக் கொடுத்தார். தன்னை சுத்தம் செய்து வந்தவன் கோப்பையைக் கையிலெடுத்துப் பருக, “என்ன அண்ணா, அண்ணி எப்படி? பிடிச்சிருக்கா? எல்லாம் ஓகே வா?” என பிரதன்யா அவனை இடித்துக் கொண்டே அமர்ந்தாள்.
மெலிதாய் அவளைக் கண்டனத்துடன் பார்த்தவன் விலகி அமர்ந்து, “ஓகே தான், எனக்கும் விஷாலியைப் பிடிச்சிருக்கு. எங்கேஜ்மெண்ட்க்கு டேட் பிக்ஸ் பண்ணிடுங்கம்மா!” என இவன் தங்கைக்கும் தாய்க்கும் சேர்த்தே குரல் கொடுக்க, “சரி டா... உனக்குப் பொண்ணைப் பிடிச்சிருச்சுல்ல. அதுவே போதும் டா. மத்ததை நாங்க பார்த்துக்குறோம். பொண்ணு வீட்டுக்குப் நானும் உங்கப்பாவும் போய் பேசிட்டு வரோம்!” என்றார் நிம்மதியான குரலில்.
“ஜனனி... சக்கரையைத் தூக்கலா போட்டு பாயாசம் வை. நான் போய் சாமிக்கு நன்றி சொல்லிட்டு வரேன்!" அவர் அகல, ஜனனிக்கும் முகமும் மலர்ந்திருந்தது.
இரவு உணவு உண்ணும்போது கூட மொத்தக் குடும்பமும் திருமணத்தைப் பற்றியே பேசினர். எங்கே வைப்பது, யார் யாரை அழைக்க வேண்டும் என உரையாடல் அதையொட்டியே நகர, தேவா யோசனையுடன் உண்டு முடித்து அறைக்குள் நுழைந்தான். ஹரியும் தமையனைப் பார்த்துக்கொண்டு தானே இருந்தான்.
அவனோடு பின்னே சென்றவன், “என்ன ப்ரோ... ஏதோ யோசனைலயே இருக்கீயே?” எனக் கேட்டுக் கொண்டே மெத்தையில் பொத்தென அமர்ந்தான்.
“ஒன்னும் இல்ல டா... விஷாலியைப் பத்தி திங்க் பண்றேன்!” அவன் பதிலளிக்க,
“சூப்பர் ப்ரோ... அண்ணியைப் பத்தி நினைக்கிறதுல தப்பே இல்லை. பட் உன் முகத்துல டோபமைனைக் காணோமே. அட்ரீனல்தான் இருக்க மாதிரி தெரியுது? பயத்துல இருக்க போல?” அவன் குறும்பாய்க் கேட்டதும் தேவா அவனை முறைத்தான். ஆனால் வாயைத் திறக்கவில்லை.
“ப்ம்ச்... அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ப்ரோ? வாட் இஸ் ஈட்டிங் இன் யூ? அதை சொல்லு. என்னால முடிஞ்சா சொல்யூஷன் சொல்றேன்...” என்றான் விளையாட்டைக் கைவிட்டு.
“ஒன்னும் இல்லை டா!” தேவாவின் குரலில் சலிப்பிருந்தது.
“ப்ரோ... யூ க்நோ, நான் இப்போ குடும்பஸ்தன். அதனால நீ என்கிட்ட அட்வைஸ் கேட்கலாம். தப்பில்லை, எது உன் மண்டையைப் போட்டு உடைச்சிட்டிருக்கு?” கேலியாகக் கேட்டாலும் நீ சொல்ல வேண்டும் என்றொரு அழுத்தம் இருந்தது.
மூச்சை இழுத்து வெளிவிட்ட தேவா, “வொய்ஃபை மெயிண்டெய்ன் பண்றது கஷ்டமா டா?” அவன் சோர்வாய்க் கேட்டதும் ஹரிக்கு உதடு தாண்டி சிரிப்பு வந்தது.
“சே... சே கஷ்டமெல்லாம் இல்லை ப்ரோ.... அது ரொம்ப ரொம்ப பெரிய கஷ்டம்... துயரம் ப்ரோ. வெளிய அம்மா முன்னாடி பொட்டிப் பாம்பா இருக்கவ ரூம்க்குள்ள படையெடுத்திருவா!” என்றான் சிரிப்புடன்.
“டேய்..” என்ற தேவாவின் உதடுகளிலும் புன்னகை தொற்றியது.
“சில் ப்ரோ... ஏன் இப்படியொரு க்வஸ்டீன். அண்ணி என்ன பேசுனாங்க?” எனக் கேட்டான்.
தேவா தங்களுக்குள்ளே நடந்த உரையாடலை சுருக்கமாகக் கூறியவன், “விஷாலியோட எக்ஸ்பெக்டேஷன் அதிகமா இருக்கு டா. என்னால மேனேஜ் பண்ண முடியுமான்னு டவுட்டா இருக்கு!” என்றான் தெளிவற்றக் குரலில்.
அவன் தோளில் தட்டிய ஹரி, “தேவா... ஒன்னை நீ புரிஞ்சுக்கோ. அம்மா, அப்பா பொறந்த இடம்னு எல்லாத்தையும் சேஞ்ச் பண்ணிட்டு வர்றவங்களுக்கு எக்ஸ்பெக்டேஷன் இருக்கதுல தப்பில்லை. நியாயமான எதிர்பார்ப்பா இருந்தா அதை நிறைவேத்தி வை. சப்போஸ் உனக்குப் புடிக்கலைன்னா அண்ணிக்குப் புரிய வை. அவங்களுக்காக சில விஷயத்துல நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகலாம், தப்பில்லை. அதே மாதிரி அவங்களும் உனக்காக விட்டுக் கொடுப்பாங்க. எல்லாரும் எல்லாரையும் முழுசா புரிஞ்சுகிட்டுத்தான் கல்யாணம் பண்ணணும்னா, இங்க முக்கால்வாசி பேருக்கு கல்யாணமே நடக்காது டா. அதனால எதையும் போட்டு ரொம்ப குழப்பிக்காத. மேரேஜ்க்கு ப்ரெஷா ரெடியாகு!” என்றான்.
“எங்களோட கேரக்டர் மொத்தமா ஆப்போசிட்டா இருக்கும் போல!” அவன் பெருமூச்சுடன் கூறினான்.
“ஹக்கும்... நானும் ஜானுவும் சின்ன வயசுல கத்தி சண்டை போடாதது ஒன்னுதான் குறை. ஆனால் இப்போ பார்த்தீயா, பசை போட்டு ஒட்டி வச்ச மாதிரி சுத்தலை. அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்காது டா. ஆனால் அவ மேல எனக்கு ஒரு ஈர்ப்பு லைக் தட் எதுவோ. அதனால நான்தான் அவ பின்னாடியே ரெண்டு வருஷம் சுத்தி லவ் பண்ண வச்சு, வீட்ல ஓகே வாங்கி மேரேஜ் பண்ணேன்.”
"இப்பவும் எங்களுக்குள்ள எல்லாம் ஒத்துப் போகுதுன்னு நினைக்கிறீயா? பாதிக்கு பாதி கூட ஒத்துப் போகாது. ஆனாலும் நாங்க சந்தோஷமாக வாழ்றோம்!” என்றவன்,
“வேலை அது இதுன்னு வெளிய சுத்தீ முடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் அப்பான்னு காலைப் புடிச்சு தொங்குற மகளும், சாப்பிடுங்கன்னு சொல்ற பொண்டாட்டியும் சொர்கம்டா. எத்தனை நாள் நான் வேலைல இருக்க டென்ஷனை அவகிட்டே காட்டியிருக்கேன். அப்போ எல்லாம் அவ என்னை அனுசரிச்சுப் போவா டா. உங்க மேல எதாவது குறை இருந்தா ரூம்க்குள்ள வந்ததும் அவ ஆடுவா. அந்த டைம் அவளை நான் அரவணைச்சுப்பேன்!” என்றவனின் முகம் மனைவியின் நினைவில் கனிந்து போயிருந்தது.
“உனக்கொன்னு தெரியுமா டா.. இதுவரைக்கும் நான் எத்தனை தடவை அவ கால்ல விழுந்திருக்கேன்னே கணக்கே இல்லை?” எனக் கேட்டு ஹரி கடகடவென சிரிக்க, தேவா அவனை நம்பவில்லை.
“பொய் சொல்லாத டா... ஜனனி அப்படிலாம் இல்லை!” இவன் அவளுக்கு ஆதரவு கரம் நீட்டினான்.
“ஹக்கும்... அதெல்லாம் வெளிய டா. புருஷன் பொண்டாட்டிக்குன்னு ஒரு பரிமாணம் இருக்கும். கோபம், சண்டை, சமாதானம் எல்லாம் எங்க ரெண்டு பேருக்கு இடையில மட்டும்தான் இருக்கு. ஊர் முழுக்க சொல்லிட்டாடா இருக்க முடியும். பட் ஒன் திங்க் சண்டை முடிஞ்சு சமாதானம் ஆனப் பின்னாடி பொண்டாட்டி மடியில படுத்துட்டே சண்டை போட்டதை நினைச்சு சிரிப்போம் பாரு... அதெல்லாம் பரம சுகம்டா. உனக்கெங்க தெரியப் போகுது. கல்யாணம் ஆகாத மொட்டைப் பையடா நீ!” என்றான் தமையனை வம்பிழுக்கும் பொருட்டு. தேவா அவனை முறைத்தான்.
“ஃபைனலா என்னதான் டா சொல்ல வர?” கடுப்புடன் கேட்டான் அண்ணன்.
“ஹம்ம்... பொண்டாட்டின்றவ நமக்கான சந்தோஷம் டா. புள்ளைன்றது எனர்ஜி பஸ்டர்டா... எதுக்காக வாழ்றோம்னு நினைக்கும்போது ரெண்டு பேரும்தான் முதல்ல கண்ணு முன்னாடி நிப்பாங்க. அம்மா அப்பா காலத்துக்கு அப்புறம் அவங்கதான் டா உலகமே. ராகினியை முத முதல்ல நான் கைல வாங்கும்போது எப்படி இருந்துச்சு தெரியுமா டா? இந்த உலகத்தையே ஜெய்ச்சுட்ட ஃபீல். உனக்கு கல்யாணமாகி குழந்தை பொறக்கும் போது அதெல்லாம் புரியும். கடைசி வரை சிங்கிளா வாழ்றதுக்கெல்லாம் மனதிடம் வேணும். அதெல்லாம் ஆகாத வேலை டா. புள்ளை பொண்டாட்டின்னு வாழ்க்கையை அனுபவிச்சு வாழு டா. அப்பான்னு ராகி வாயைத் தொறந்து கூப்ட்டால்ல, அது சொர்கம். அது தர்ற போதையை யாராலும் தர முடியாது. அதனால ஒழுங்கா சம்சாரிய வாழ்க்கைல ஈடுபடு...” என்றவன், “அண்ணி மேல சின்னதா ஈர்ப்பு இருக்கா உனக்கு?” எனக் கேட்டான்.
“ஹம்ம்... யெஸ், ஐ லைக் ஹெர். இன்னைக்குப் பேசுனப்புறம் கொஞ்சம் பிடிச்சது டா!” என்றான்.
“அது போதும் டா... இந்த சின்ன ஈர்ப்ப வச்சே உனக்கான வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணு ப்ரோ... ஆல் தி பெஸ்ட். ரொம்ப யோசிக்காத. ப்யூச்சர்ல என்ன பிரச்சனைனாலும் டக்குன்னு பொண்டாட்டி கால்ல விழுந்துடு. அப்புறம் பிரச்சினையே வராது!” என்றான் கேலியுடன்.
“அப்போ கல்யாண வாழ்க்கை இனிக்கும்னு சொல்ற?" என தேவா யோசிக்க, "இனிக்க மட்டும் இல்ல ப்ரோ, கசப்பு, புளிப்பு, துவர்ப்புன்னு எல்லாமே இருக்கும். டேஸ்ட் பண்ணி என்ஜாய் பண்ணு டா!” என்றான் கேலியாய்.
தேவா அவனது முதுகிலே வலிக்காமல் அடித்தவன், “என்னமோ போ டா..
ஏதோ சொல்ற. ஹம்ம், பார்க்கலாம். லவ் ஈர்ப்பு இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல. வாழ்ந்து பார்க்குறேன்!” அலட்டிக்காது பதிலுரைத்தான்.
“அண்ணியோட பாடு ரொம்ப கஷ்டம் ப்ரோ... மணிரத்னம் ஃபேன் நான். தேடி தேடி லவ் டயலாக் சொன்னா, இப்படி பொசுக்குன்னுட்ட. போயா!” என அவன் முனங்கிக் கொண்டே போக, தேவாவின் முகத்தில் முறுவல் பிறந்தது.
தொடரும்...