- Messages
- 1,115
- Reaction score
- 3,189
- Points
- 113
நெஞ்சம் – 7 
திங்கட்கிழமை காலை வேளை, அபியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஆதிரை பால் பண்ணையை நோக்கி நகர்ந்தாள். முழுதாய் இரண்டு மாதங்கள் கழித்து உள்ளே வந்ததும் ஏதோ வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்புவது போல மனம் சில நொடிகள் களிப்புற்றது. வாகனத்தை நிறுத்திவிட்டு இயற்கை காற்றை சுவாசித்தவள், வெகுவாயத் தயக்கத்துடன் சோதனைக் கூடத்திற்குள் நுழைந்தாள்.
கோமதி இன்னும் வந்திருக்கவில்லை. தர்ஷினியோடு வேறு இரண்டு பெண்கள் இருந்தனர். இவர்கள்தான் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருப்பவர்களாக இருக்கக் கூடுமென எண்ணியவாறே கைப்பையை அதற்குரிய இடத்தில் வைத்தாள்.
“ஏன் மா... யார் நீங்க? லேப்க்குள்ள எல்லாம் வரக் கூடாது!” ப்ரியா அதட்டல் போட, ஆதிரை முகம் மாறாதிருக்க சிரமப்பட்டாள்.
“அக்கா... மறுபடியும் வேலைக்கு வந்துட்டீங்களா?” அதிர்ச்சி விலகாத குரலோடு கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு குடுகுடுவென ஓடி வந்த தர்ஷினி இவளை அணைத்துக் கொள்ள, ஆதிரைக்கு கூச்சமாகப் போய்விட்டது.
“ஏய் தர்ஷினி, என்ன இது?” அவள் அதட்டலிட, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கா. உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் நான்!” எனத் துள்ளியவள், “நீங்க இல்லாததால புதுசா வந்தவங்க எல்லாம் ஆட்டம் போட்றாங்க!” ப்ரியாவைப் பார்த்து அவளுக்கு கேட்க வேண்டும் என்று சத்தமாய்
முணுமுணுத்தாள்.
ப்ரியா அவளை முறைத்தவள், “வேலை நேரத்துல வேலையைப் பார்க்காம என்ன அரட்டை வேண்டி கிடக்கு மிஸ் தர்ஷினி!” என அதட்ட, ‘பார்த்தீங்களாக்கா?’ என தர்ஷினி ஆதிரையிடம் கண்ணைக் காண்பித்தாள்.
“தர்ஷினி, நீ போய் வொர்க்கைப் பாரு!” என அவளை அனுப்பியவள், “ஹாய்...” என்றாள் இருவரையும் பார்த்து சிநேகமாக.
“யார் நீங்க?” பதிலுக்கு புன்னகையை சிந்தாத ப்ரியாவின் குரல் அதிகாரமாக வர, “நான் ஆதிரை, டூ மந்த்ஸ் முன்ன வரை இங்கதான் உங்க போஸ்ட்ல வொர்க் பண்ணேன்!” என்றாள் இவளும் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
“சோ வாட்? அதான் நீங்களே வொர்க் பண்ணேன்னு பாஸ்டென்ஸ்ல சொல்லிட்டீங்களே? ரிசைன் பண்ண உங்களுக்கு என்ன வேலை இங்க? சம்பள பாக்கி எதுவும் வாங்க வந்து இருக்கீங்களா? சாரோட ரூமை போய் பார்க்கலாம். இங்க வொர்க் நடத்துற இடத்துல டோன்ட் மேக் எனி நாய்ஸ்!” என்றாள் அலட்சியமாக. அதில் ஆதிரைக்கு எரிச்சல் படர்ந்தது.
“மேடம்... பார்த்து பேசுங்க. ஐஞ்சு வருஷமா இங்கதான் அக்கா வொர்க் பண்ணாங்க. மைண்ட் யுயர் வேர்ட்ஸ்!” தர்ஷினி ஆற்றமாட்டாமல் ஆதிரைக்கு ஆதரவாகப் பேசினாள்.
“தர்ஷினி, நீங்க உங்க வேலையை மட்டும் பார்த்தா போதும். யாருக்கும் கொடி பிடிக்கணும்னு அவசியம் இல்ல. சீக்கிரமா டெஸ்ட் பண்ணி ரிப்போர்டை சப்மிட் பண்ணுங்க!” ப்ரியா கடித்து துப்ப, அதற்கு மற்றவள் பதில் பேச வரும் முன்னே, “தர்ஷினி, நான் பார்த்துக்கிறேன்!” என ஆதிரை அவளைக் கைகாட்டி அமைதிப்படுத்தினாள்.
பின்னர் ப்ரியாவிடம் திரும்பியவள், “நான் இங்க ரீஜாய்ன் பண்ண வந்திருக்கேன், உங்களுக்கு ஹெட்டா!” என்றாள் அழுத்தமாய்.
“ஐ சீ... ஹெட்டா? வாட் ரப்பிஷ். நீங்களா வேலைக்கு வந்திருக்கேன்னு சொன்னா உடனே நாங்க மேடம்னு கூப்பிடணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க. தேவா சார் அபீஷியலா எதுவுமே இன்பார்ம் பண்ணலை. சோ, யூ மே கோ நவ். அவர் வந்ததும் சொல்லட்டும். நீங்க ஹெட்டா இல்லை அசிஸ்டென்டான்னு!” அவள் குரலில் கேலியோ என்னவோ இருந்தது.
அது அதிரையின் தன்மானத்தை சீண்டிவிட, விறுவிறுவென நடந்தவள் தேவாவின் அறைக்கு வெளியே சென்று நின்றாள். முகம் கடுகடுவென்று இருந்தது. நேற்று வந்த ஒரு பெண் எவ்வித மரியாதையும் அளிக்காது இப்படித் தன்னை வெளியே அனுப்பியதை ஆதிரையால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இது அவளது சோதனைக் கூடம். ஐந்து வருடங்களாக இங்குதானே வாசம் செய்கிறாள். அப்படியிருக்கையில் புதியவள் தன்னை அதிகாரம் செய்கிறாளா என கோபம் சுறுசுறுவென பொங்கியது.
‘எல்லாம் இந்த தேவாவை சொல்ல வேண்டும். வேலைக்கு வாவென்று அழைக்க மட்டும் தெரியும். நான் மீண்டும் வேலைக்கு சேருகிறேன் என ஒருவரிடமும் உரைக்க மாட்டானா என்ன?’ மனதில் அவனைக் கடித்து துப்பியபடி நின்றிருந்தாள்.
ஊழியர்கள் ஒரு சிலர் அவள் நிற்பதைப் பார்த்து அருகே வந்து, “மேடம்... ஏன் இங்க நிக்குறீங்க?” எனக் கேட்டு அவள் நலத்தையும் விசாரித்து மீண்டும் வேலைக்கு வந்துவிட்டாள் என்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.
பத்து நிமிடங்கள் கடந்ததும் அதிரையின் கோபம் மட்டுப்பட்டது. ஆனாலும் தேவா வந்ததும் நடந்ததை உரைக்காவிட்டால் அவளுக்கு மனதே ஆறாது. அவளை மேலும் சிறிது நேரம் காக்க வைத்துவிட்டே தேவநந்தன் வந்து சேர்ந்தான்.
அவள் வெளியே நிற்பதைப் பார்த்தவன் அலுவலகக் கதவை திறந்து, “கெட் இன் மிஸ் ஆதிரையாழ்!” என்றான். ஒரு சிறிய தலையசைப்போடு உள்ளே நுழைந்தவள் அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.
“வந்து வொர்க்கைப் பார்க்காம ஏன் என் ஆஃபிஸ்க்கு வெளில வெய்ட் பண்றீங்க?” அவன் கேட்கவும், நிமிர்ந்து அவனை முறைத்தவள், “நீங்க அபிஷியலா சொல்லாம நான் லேப்க்குள்ள வரக்கூடாதாம் சார். அப்படியெல்லாம் நான் உடனே போய் வொர்க் பண்ண கூடாதாம். நீங்க வந்து இன்ட்ரோ பண்ணா மட்டும்தான் லேப்க்குள்ள எனக்கு பெர்மிஷனாம்!” என இவள் கடுப்புடன் கூறினாள்.
“யாரு இப்படி சொன்னது?” எனக் கேட்டவன் யோசித்து, “ப்ரியாவா?” எனக் கேட்டான். அவளைத் தவிர ஒருவரும் இதுபோல முகத்தில் அடித்தது போல பேச வாய்ப்பில்லை என அவனுக்கே தோன்றிற்று.
“பேரெல்லாம் தெரியாது. ரீஜாய்ன் பண்ணுன்னு சொன்னீங்களே சார், நான் வரேன்னு யார்கிட்டேயும் சொல்லலையா?” என்றாள் எரிச்சலாய்.
“ரிலாக்ஸ் ஆதிரை. இட்ஸ் மை மிஸ்டேக்!” என அவன் அவளைப் பொறுமையாய் இருக்க கூறி தண்ணீரை எடுத்து நீட்ட அதைப் பருகி தன்னை சமன் செய்தாள்.
“நீங்க என்கூட வாங்க. ஐ வில் இன்பார்ம் அபிஷியலி!” என்றவன் எழுந்து சோதனைக் கூடத்திற்கு செல்ல, ஆதிரையும் அவன் பின்னே சென்றாள்.
“லிசன் கைய்ஸ்!” தேவாவின் சத்தத்தில் சோதனைக் கூடத்திலிருந்த மூன்று பேரும் எழுந்து நிற்க, ப்ரியா மட்டும் பொறுமையாக மடிக்கணினியிலிருந்து தலையை உயர்த்தினாள். அதில் இவனுக்குமே எரிச்சல் படர்ந்தது.
“மிஸ் ஆதிரையாழ் இங்க தான் பைவ் இயர்ஸா வொர்க் பண்ணாங்க. டூ மந்த்ஸ் முன்னே ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல ரிசைன் பண்ணிட்டுப் போனவங்க இப்போ ரீஜாய்ன் பண்றாங்க!” என்றவன், “கோமதிக்கும் தர்ஷினிக்கும் ஏற்கனவே அவங்களைத் தெரியும். ப்ரியா அண்ட் ஆதிலா, நீங்க இன்ட்ரோ பண்ணிக்கோங்க. அண்ட் நீங்க நாலு பேரும் இவங்களுக்கு கீழோதான் ரிப்போர்ட் சப்மிட் பண்ணணும்!” என்றான் தெளிவாக.
“சாரி சார்... என்னைவிட அனுபவமும் வயசும் கம்மியா இருக்கவங்க கீழே என்னால வொர்க் பண்ண முடியாது!” ப்ரியா எழுந்து கடுப்புடன் கூற, தேவா முகத்திலிருந்த இயல்பு தொலைந்து போனது.
“ப்ரியா... அவங்க ஃபைவ் இயர்ஸா இங்க வொர்க் பண்ணி இருக்காங்க. ஷீ க்நோஸ் எவ்ரி இன் அண்ட் அவுட் ஆஃப் திஸ் டெய்ரி பார்ம்!” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
“சார்...நானும் இங்க டூ மத்ந்ஸா வொர்க் பண்றேன். ஐ க்நோ ஆல் இன் அண்ட் அவுட்!” அவள் குரலில் பிடிவாதம் இருந்தது. அதிலே தேவாவின் பொறுமை காற்றில் பறந்திருந்தது.
அவன் ஏதோ கோபமாக பேசும் முன்னே, “சார்... இட்ஸ் ஓகே, அவங்களே ஹெட்டா இருக்கட்டும். நானும் கூட இருக்கேன். இவங்க மூனு பேர் ரிப்போர்ட் பண்ணட்டும். நோ இஷ்ஷூ!” என ஆதிரை பிரச்சனையை முடித்து வைத்திருக்க, “ஓகே... பார்த்துக்கோங்க ஆதிரை...” என அவன் அகன்றான்.
கோமதியும் தர்ஷினியும் அவளை அருகே அமர்த்தி வேலை செய்து கொண்டே இந்த இரண்டு மாதத்தில் நடந்த என அனைத்தையும் ஒப்பித்திருக்க, இவள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள்.
“லாக் புக் ஏன் ப்ராப்பரா மெயின்டெய்ண் பண்ணலை? என்ன இது?” என அவள் புத்தகத்தை கையிலெடுத்து புரட்டியபடியே வினவ,
“அக்கா... லாக் புக் எழுத வேண்டியது எங்க வேலை இல்லையே. யார்கிட்டே கேட்ணுமோ அங்க கேளுங்க!” என தர்ஷினி ப்ரியாவைப் பார்த்தாவாறே நொடித்தாள்.
“ப்ரியா, ஏன் லாக் புக்ல டீடெயில்ஸ் நிறைய மிஸ்ஸாகுது. இந்த டேட்ல எல்லாம் ஏன் எண்ட்ரி போடலை?” எனக் கேட்டாள் வெறுமையானப் பக்கங்களை சுட்டிக் காண்பித்து.
“ஆதிரையாழ், என்னைக் கேள்வி கேட்குற ரைட்ஸ் உங்களுக்கு இல்ல. தேவா சார் கேட்டா, நான் ஆன்சர் பண்ணிக்கிறேன். டூ யுவர் வொர்க்!” என அவள் முகத்தைத் திருப்ப, ‘ஈகோவோட மொத்த ரூபமா இருக்காங்களே!’ என ஆதிரை அயர்ந்து போனாள்.
விடுபட்ட பக்கங்களை நிரப்ப வேண்டும் என்றால் மடிக்கணினி வேண்டும். அதில்தானே அனைத்து தரவுகளும் இருக்கிறது எனத் தோன்ற, திரும்பி ப்ரியாவைப் பார்த்தாள். அவள்தான் மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். தான் அதைக் கேட்டால் அதற்கும் ஏதாவது கூறுவாள் எனத் தோன்ற, நேரே தேவாவிடம் சென்று நின்றாள்.
“சார், ஐ நீட் லேப்டாப்!” என அவள் கூற, தேவாவிடம் வேறு மடிக்கணினி இல்லை.
“இப்போதைக்கு என்னோட லேப்டாப் யூஸ் பண்ணுங்க ஆதிரை. டூ டேய்ஸ்ல புதுசு வாங்கித் தரேன்!” என்றான். தலையை அசைத்து அவனுடைய மடிக்கணினியை எடுத்துக் கொண்டாள்.
அதை உயிர்ப்பித்ததும் அகமும் முகமும் மலரப் புன்னகைத்தப்படி முகப்பிலிருந்தான் தேவநந்தன். அவன் கையில் அன்றைக்குப் பார்த்த சிறுமி. இன்னுமே சிறியவளாகத் தெரிந்தாள். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னே எடுத்திருக்க கூடும். அவனுக்கு அருகே ஹரிநந்தன் ஒரு பெண்ணின் தோளில் கையைப் போட்டு நின்றிருக்க, அவனது மனைவியாக இருக்கும் என அடுத்துப் பார்த்தாள்.
கனத்த உடம்பும் தீர்க்கமான பார்வையுடன் ஒரு ரூபாய் அளவிற்கு நெற்றிப் பொட்டுடன் இருந்தப் பெண்மணிக்கு அருகே மீசையை முறுக்கிவிட்டு பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். அவர்களை ஒட்டி இளம் வயது யுவதி ஒருத்தி. தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் மட்டுமே இருக்க, தேவாவின் மனைவி எங்கே என மனம் கேட்க, ‘எலிஜிபிள் பேச்சிலர்!’ என அவன் அன்றைக்கு கத்தியது நினைவு வர, இன்னும் இவனுக்கு திருமணமாகவில்லையா என்ற ஆச்சர்யம் மேலேழுந்தது. அவளைவிட அவனுக்கு ஓரிரண்டு வயதாவது கூட இருக்கும். அடுத்து மனம் அவனது குடும்பத்தை அலச முனைய, அடுத்தவர் தனிபட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்காதே என ஆர்வ மனதை அதட்டி அடக்கிவிட்டாள்.
அன்றைக்கு லாக் புத்தகத்தில் அனைத்தையும் எழுதி முடிக்கவே நாள் சென்றிருந்தது. மற்ற மூவரும் பாலை சோதனை செய்ய, ப்ரியா அவர்களை மேற்பார்வை பார்த்தாள். ஓரிரண்டு நாட்கள் நகர, ஆதிரை தான் விட்டுச் செல்லும் போது பண்ணையிலிருந்த நேர்த்தியை கொண்டு வர முனைந்தாள். பல நேரங்களில் அவளுக்கும் ப்ரியாவிற்கும் முட்டிக் கொண்டது. ஆதிரை அதைப் பெரிதுபடுத்தாமல் கடக்க, இவள் அனைத்தையும் சென்று தேவாவிடம் ஒப்பித்து வந்தாள்.
இரண்டு நாட்களில் நான்கு முறை அவள் ஆதிரையைப் பற்றிக் குறை கூற, தேவாவிற்கு எரிச்சலாய் வந்தது. பேசாமல் ப்ரியாவை வேலையைவிட்டு நிறுத்தி விடலாமா என யோசித்தான். ஆதிரை அன்றைக்கு வேலை முடிந்து லாக் புத்தகத்தை அவனிடம் கொடுக்க, “மிஸ் ஆதிரையாழ், வாட் ஹேப்பண்ட். ஏன் ப்ரியா உங்க மேல கம்ப்ளைண்டா பண்றாங்க?” எனக் கேட்டிருந்தான்.
“சாரி சார், தட்ஸ் நாட் மை மிஸ்டேக். அவங்களுக்கு ஈகோ அதிகமா இருக்கு. நான் எதுவும் பண்ண முடியாது. முடிஞ்சளவுக்கு நானும் பொறுமையா ஹேண்டில் பண்ணலாம்னு பார்த்தாலும் ஓவர் ஆட்டிட்யூட் காட்றாங்க. வாட் ஷூட் ஐ டூ!” என்றவள் சில நொடிகள் நிறுத்தி, “ஒன்னு அவங்க இங்க வொர்க் பண்ணணும். இல்ல, நான் பண்ணணும் சார். அவங்களோட வொர்க் பண்றதுல எனக்குப் பிரச்சனை இல்ல. நீங்கதான் இப்போ டிசைட் பண்ணணும்!” என்றுவிட்டு இவள் அகல, அவனும் யோசனையில் ஆழ்ந்தான். என்ன செய்வது என அவன் பொறுமையாய் சிந்திக்க, இரண்டு நாட்களில் ப்ரியாவே வந்து வேலையிலிருந்து விலகிக் கொள்கிறேன் எனக் கூற, இவனுக்கு வெகுவாய் நிம்மதி படர்ந்தது. அவளது சம்பளத்தைக் கொடுத்து புன்னகை முகமாகவே அனுப்பிவிட்டான்.
ப்ரியா சென்றதும் சோதனைக் கூடத்திலிருந்து தேவையில்லாமல் ஒரு சப்தம் கூட கேட்கவில்லை. வேலை எல்லாம் சரியாய் நடந்தது. ஒரே வாரத்தில் ஆதிரையாழ் அனைத்தையும் நேர்ப்படுத்தியிருக்க, தேவநந்தனுக்கு வேலை பாதியாகக் குறைந்திருந்தது. முன்பு போல தூக்கம் கெடவில்லை. நிம்மதியாய் தூங்கி எழுந்தான். தன் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தான்.
ஆனாலும் இந்தப் பெண்ணை மட்டுமே நம்பி பண்ணை இருப்பது தவறு என மூளைக் கூற, அதற்கான வேலைகளை செய்தான். நுனி முதல் அடி வரை ஆதிரை வேலை பார்ப்பதை குறைத்தான். அவளுக்கென குறிப்பிட்ட வேலைகளை ஒதுக்கிவிட்டு மீதமிருக்கும் வேலையை அவனே முன்னின்று செய்தான். ப்ரியா வேலையை விட்டு நின்றுவிட்டதால் அவளுக்குப் பதிலாக பண்ணைக்கென மேற்பார்வையாளர் ஒருவனை நியமித்தான்.
அவன்தான் மொத்தப் பண்ணையையும் மேற்பார்வை பார்த்தான். தேவா இல்லாத சமயங்களில் அவனுடைய இடத்திலிருந்து மற்றவற்றைக் கவனித்துக் கொண்டான். ஏற்கனவே இரும்பு உற்பத்தி செய்யும் தொழில்சாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்த அனுபவத்தில் இங்கே அனைத்தையும் சரியாய் அணுகினான். எவ்வித முகச்சுளிப்பும் இன்றி அனைவரிடமும் இன்முகமாகப் பேசி தட்டிக் கொடுத்து வேலை வாங்கியதால் ஒரு மாதத்திலே நன்றாய் பொருந்திப் போனான் புதியவன்.
தேவாவும் அந்தப் பண்ணைக்கும் இந்தப் பண்ணைக்கும் அடிக்கடி சென்று வந்ததால், சுபாஷின் இருப்பு வெகுவாய் உதவியது. அப்படியே நாட்கள் நகர, அன்றைக்கு தொழில்சாலைக்கு உணவுத் தர கட்டுப்பாடு துறையிலிருந்து சோதனை செய்ய ஆட்கள் வந்திருந்தனர்.
தேவா தொழில்முறை உறவினர் ஒருவரை சந்திக்க காஞ்சிபுரத்திற்கு சென்றிருக்க, அவனால் இங்கே உடனடியாக வர முடியாது போயிற்று.
“சுபாஷ், எதுனாலும் பார்த்துக்கோங்க. நான் வர எப்படியும் டூ ஹவர்ஸாவது ஆகும். ஆதிரையைக் கூட வச்சுக்கோங்க. ஷீ வில் ஹேண்டில் எவ்ரிதிங்க். அப்படியும் முடியலைன்னா கால் மீ. நான் எதாவது பண்ண முடியுதான்னு பார்க்குறேன்!” என அவன் பதற்றப்படாது பொறுமையாய் பேச, “டோன்ட் வொர்ரீ சார். நாங்க பார்த்துக்கிறோம்...” என சுபாஷ் அலைபேசியை துண்டித்துவிட்டு அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த ஆதிரையுடன் இணைந்து கொண்டான்.
“டெய்லி பைப் எல்லாம் வாஷ் பண்ணிடுவீங்களா? டெம்ப்ரேச்சர் எவ்ளோ வச்சிருப்பீங்க? கோல்ட் ரூம் ஸ்டெரிலைஸ்டா இருக்கா?” என இரண்டு அதிகாரிகள் ஆதிரையைக் குடைந்து கொண்டிருக்க, மூன்று பெண் அதிகாரிகள் சேமித்து வைத்திருந்த பாலிலிருந்து மாதிரிகளை சேகரித்து அங்கேயே சோதனை செய்யத் தொடங்கினர். அரைமணி நேரம் கடந்திருக்கும்.
“எக்ஸ்யூஸ் மி சார்... ஐ யம் ஹரி நந்தன். ஓன் ஆஃப் தி ஷேர் ஹோல்டர்ஸ் ஆஃப் திஸ் பர்ம்!” என ஹரி உள்ளே நுழைந்தான்.
சுபாஷ் அவனை ஆராய்ச்சியாகப் பார்க்க, “வாங்க சார்!” என ஆதிரை அவனை வரவேற்றாள்.
அவன் வந்தது இவளுக்கு கொஞ்சம் தெம்பாய் இருந்தது. என்னதான் இவள் அனைத்தையும் சரியாய் செய்தாலும் பண்ணையின் சொந்தங்களில் ஒருவர் இருந்தால்தான் நன்றாய் இருக்குமென அவள் எண்ணியதைத்தான் தேவாவும் யோசித்து ஹரியை அனுப்பி வைத்தான்.
இரண்டு மணி நேரத்தில் சோதனை முடித்திருக்க, உழவர் துணை பாலின் தரத்தில் எவ்வித குறையும் இல்லாததால் அதிகாரிகள் இன்முகமாக விடைபெற, ஹரியும் சுபாஷூம் அவர்களை வாயில் வரை விட்டுவிட்டு வந்தனர்.
“ஆல்ரெடி டூ ஹவர்ஸ் ஓடிடுச்சு. சோ சாப்ட்டு வந்து சீக்கிரம் வேலையை பாருங்க. அப்போதான் ஈவ்னிங் டைம்க்கு கிளம்ப முடியும். இல்லைன்னா லேட்டாகிடும் கைய்ஸ்!” என ஆதிரை ஊழியர்களிடம் கண்டிப்புடன் கூறிக் கொண்டிருக்கும் போதே வாயில் வழி வந்த மொத்த சூரிய ஒளியையும் மறைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் தேவா.
அவனைப் பார்த்ததும் ஆதிரை, “எதுவும் ப்ராப்ளம் இல்லை சார்!” என்றாள் உதடுகளை எட்டாத புன்னகையுடன். அதை இவன் தலையை அசைத்து ஏற்றுக் கொள்ள, அவள் அகன்றாள். அனைவரும் உண்ண செல்ல, இவன் தனது அறைக்குள் நுழைய, அவனைத் தொடர்ந்து ஹரியும் சுபாஷூம் வந்துவிட்டனர்.
“டேய்... ஏன் இவ்வளோ சீக்கிரம் வந்த. போன வேலை என்னாச்சு? அதான் நாங்க இருக்கோம் இல்ல, பார்த்துக்க மாட்டோமா?” என ஹரி கடிய, தேவா தோளைக் குலுக்கினான்.
“சாருக்கு எதுவும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வரவா சார்?” சுபாஷ் தேவாவிடம் கேட்க, “நோ... நோ. எனக்கு எதுவும் வேணாம் டா!” என்ற ஹரி, “நீங்க போய் வேலையைக் கவனிங்க சுபாஷ்...” என அவனையும் அனுப்பி வைத்தான்.
“சரி டா... நான் கிளம்புறேன்!” என்றவன், “ஆதிரை ரொம்ப க்ளவர். எல்லாத்தையும் பெர்பெக்டா ஹேண்டில் பண்ணிட்டாங்க. இப்படியொரு ஆளைக் கூட வச்சிட்டு நீ எதுக்கு மேன் அவசர அவசர அவசரமா வந்த?” என மீண்டுமொரு தமையனைக் கடிந்தான். தேவா பதிலுரைக்கவில்லை.
“ப்ரோ... எனக்கொரு ஐடியா தோணுது. பேசாம ஆதிரையை அந்தப் பண்ணைக்கு அனுப்பிடேன். எனக்கு கொஞ்சம் ப்ரீத் பண்ண வசதியா இருக்கும். இன் அண்ட் அவுட்னு எல்லாத்தையும் நான் ஒரு ஆளே பார்க்குற மாதிரி கடுப்பா இருக்கு. நீ இங்க இல்லைன்னதும் ஸ்டாஃப்ஸ் எல்லாம் எப்படி அவங்கவங்க வொர்க்கைப் பார்க்குறாங்க. ஆனால் நான் இப்போ இல்லைல. என்ன பண்ணுவாங்கன்னு நினைக்கிற. ஃபோன் பார்ப்பதுட்டு ஓபி அடிப்பாங்க டா!” என்றான் கடுப்புடன்.
“எல்லாம் நீ குடுக்குற இடம்டா. நீ இருக்கும்போது வேலை நடக்குறது பெருசு இல்ல. நீ இல்லாதப்பவும் வேலை நடந்தாதான் நீ சரியா இருக்கன்னு அர்த்தம்!” தேவா அழுத்தமாய்க் கூறினான்.
“ம்கூம்... அதான் டா வர மாட்டுது. உன்னைப் பார்த்தா மட்டும் சின்சியரா இருக்க மாதிரி நடிக்கவாது செய்றானுங்க. நான்னா, என்ன முதலாளின்னு என் தோள்ல கைப் போட்டு ரீல்ஸ் பண்ண கூப்பிட்றாங்க!” அலுத்தான் சின்னவன்.
“ஹம்ம்... எப்போ பார்த்தாலும் இளிச்சவாய் மாதிரி சிரிச்சிட்டே இருந்து நீ ஈஸிலி அப்ரோச்சபிள் ஆகிட்ட டா. உன் பார்வையிலயே அவங்க எல்லாம் வொர்க் பண்ணணும். அந்த மாதிரி ஒரு ஆட்டிட்யூடை வளர்த்துக்கோ. சிரிக்கிறதை குறை, அளவா பேசு. எல்லார்கிட்டயும் கொஞ்சம் சிடுசிடுன்னு இரு. அப்போதான் பயம் வரும்!” தேவா கூற,
இருக்கையில் இருந்து எழுந்த ஹரி, “ப்ரோ... நான் ஸ்மைலி பேஸ் ப்ரோ. உன்னை மாதிரியே சிடுசிடுன்னு இருக்க முடியுமா?” என சடைத்தவன், “என் வொர்க்கர்ஸை சிரிச்சு பேசி தட்டி வேலை வாங்குவேன் நான். உன் ஸ்டாப்ஸ் சின்சியரா இருக்காங்கன்னு ரொம்ப பண்ணாத நீ...” என அவன் முறைத்துக் கொண்டே அகல, இவன் தோளைக் குலுக்கிக் கொண்டான். அடுத்தடுத்த வேலைகளை அவன் கவனிக்க அகன்று வி
ட்டான்.
ஆதிரை வேலை முடித்து கிளம்பும் நேரம் வந்து நின்ற அப்புவைப் பார்த்து திகைத்துப் போயிருந்தாள்.
தொடரும்...