- Messages
- 1,215
- Reaction score
- 3,604
- Points
- 113
நெஞ்சம் - 61
இறுதி அத்தியாயம்
“ஃபைவ் ஹண்ட்ரட் டாலர்க்கு இப்போ ஷூ வாங்கணும்னு என்ன அவசியம் அப்பு?” ஆதிரை கடுகடுத்த முகத்தோடு கேட்டாள்.
கையில் செலவிற்கு கூட அவளிடம் போதுமான அளவு பணம் இல்லை. இரண்டு இடத்தில் பகுதி நேரமாக வேலைப் பார்த்து வந்ததில் உடல் அலண்டு போயிருந்தது அவளுக்கு. வந்ததும் வராததுமாய் கடன் வாங்கி இந்த மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு அப்பு காலணி வாங்கி வந்து நீட்டியதில், இவளுக்கு பொறுமை பறந்திருந்தது.
“ஆசையா உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன் ஆதி. நீ அதைப் பார்க்காம விலையைப் பார்க்குற. இப்போல்லாம் என்னை நீ ரொம்ப கண்ட்ரோல் பண்ற? எனக்குப் பிடிக்கலை அது!” அவளுக்காக அலைந்து திரிந்து வாங்கி வந்தால் இப்படி முகத்தில் அடித்தாற் போல பேசுகிறாளே என அப்புவிற்கு கோபம் பொங்கிற்று.
“பார்ட் டைம் ஜாபை விட்டுட்ட. இந்த மந்த்க்கு க்ரோசரி எதுவுமே வாங்கலை. என்னோட சேலரி வச்சு மட்டும் எப்படி மேனேஜ் பண்றது? இதுல நீ அனாவசிய செலவு நிறைய பண்ற? கடன் வாங்கி இதெல்லாம் வாங்கணும்னு என்ன இப்போ அவசியம் அப்பு?” அவளும் குரலை உயர்த்த, பட்டென தான் வாங்கி வந்த காலணியைத் தூக்கி அறையின் மூலையில் எறிந்த அப்பு விறுவிறுவென வெளியேறினான். ஆதிரை அவனை சில நொடிகள் வெறித்தவள், தோளை குலுக்கிக் கொண்டு பகுதி நேர வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
சென்ற வருடம்தான் ஆதிரையும் அப்புவும் லண்டன் மாநகரத்தில் முதுகலை படிப்பிற்காக இடம் பெயர்ந்திருந்தனர். இருவருக்கும் முன்பின் பழக்கம் எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால் தங்குமிடம் ஒன்றாய் அமைந்ததுதான் அவர்களின் அறிமுகத்திற்கு முழுமுதற் காரணம்.
ஆதிரை நான்கு பெண்களுடன் ஒரு வீட்டின் தரைதளத்தில் வசிக்க, அவ்வீட்டின் மாடியில் அப்புவும் அவனது தோழர்களுடன் குடிவந்திருந்தான். வந்து சில வாரங்களுக்கு இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர்கள் பார்க்க கூட வாய்ப்பு கிட்டவில்லை.
ஆதிரையுடன் அறையைப் பகிர்ந்திருந்த நால்வரும் இந்தியர்கள் இல்லை. வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ் முகத்தை ஒருமுறை காண மாட்டோமா என எங்காவது திராவிட நிற மக்களைக் கண்டதும் என்னவோ அவளுக்குள்ளே ஒரு ஆசுவாசம் பொங்கும்.
முதலில் இங்கு வந்தப் பொழுது அவள் எங்கேயும் தனியாய் செல்லவில்லை. புது நாடு, புது மனிதர்கள் என்ற முதற்கட்ட பயம் அகன்று அவள் வெளியே வரவே ஒரு மாதமாகியிருந்தது. அறைத் தோழி ஒருத்தியின் உதவியுடன் அருகே இருந்த திரையரங்கம் ஒன்றில் பகுதி நேரப் பணியில் இணைந்திருந்தாள். ஓரவிற்கு தைரியமாக அவள் வெளியே சென்று வரப் பழகியிருக்க, லண்டன் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது.
யாருமில்லாது தனியாய் இருக்கிறோம் என்ற பயம் நெஞ்சின் ஓரத்தில் இருந்தாலும், அந்த வயதிற்கே உரிய தைரியமும் அலட்சியமும் அவளிடம் அதிகம் இருந்தது. பகுதி நேர வேலை, படிப்பு என அவளுக்கு நாட்கள் நகர, ஒரு நாள் அதீத காய்ச்சலின் விளைவால் அவதியுற்றாள்.
வேலை முடிந்து வந்தவள் வீட்டின் திறவுகோலை எங்கே வைத்தோம் என மறந்துவிட்டாள். மற்ற மூவரும் அறையில் இல்லை. அதனாலே படியிலே அமர்ந்து விட்டாள். காலையில் ஒரு பாரசிட்டமாலை விழுங்கி இருந்தாள். இருந்தும் அவளுக்கு உடல் வெப்பம் மட்டுப்படவில்லை.
லண்டனுக்கே உரிய குளிர்காலம் துவங்கி இருந்தது. தமிழ்நாட்டின் மொட்டை வெயிலிலே பிறந்து வளர்ந்தவளால் இந்த நாட்டின் குளிரையும் சீதோஷ்ண நிலையையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடல் அவளைப் போட்டு படுத்தியது. உடன் ஒருவரும் பார்த்துக்க கொள்ள இல்லாததால் கொஞ்சம் உடலளவிலும் மனதளவிலும் பலகீனமாக உணர்ந்தாள். படுக்கையில் சுருண்டு கொள்ள வேண்டும் என உயர்ந்து கொண்டேயிருந்த உடல் வெப்பநிலை உந்தியது. அந்தப் படிகட்டின் கம்பியில் சாய்ந்து அமர்ந்தாள்.
“ஹலோ... எக்ஸ்யூஸ்மீ... டூ யூ நீட் எனி ஹெல்ப்?” எனக் கேட்ட குரலில் மங்கலாய் இருந்த கண்ணை சிமிட்டியவள், “யெஸ்... ஐ நீட் வாட்டர். தண்ணி வேணும்!” என்றாள் ஆங்கிலமும் தமிழும் கலந்து. எதிரே இருந்த ஆடவனின் முகம் அவன் இந்தியன் என பறைசாற்றியது. தமிழாக இருக்க வாய்ப்பு இருக்குமோ என்ற எண்ணத்தில் கடைசி இரண்டு வார்த்தையை இணைத்தாள்.
“தமிழா நீங்க... என் கையைப் பிடிச்சுக்கோங்க!” என்றவன் அவளைக் கைத்தாங்கலாக தன்னறைக்கு அழைத்துச் சென்றான். தெரியாத ஆடவனின் அறைக்குச் செல்கிறோம் என ஆதிரையின் மூளை விழித்தே கிடந்தது. அவளுக்கு நீரைப் புகட்டினான். வேறு எதாவது வேண்டுமா எனக் கேட்டான்.
“நோ... ஒரு ஹாஃப் அன் ஹவர் உங்க ரூம்ல படுத்துக்கலாமா? என் ரூம் கீ மிஸ்ஸாகிடுச்சு!” என ஆதிரை தயங்கினாள்.
“வொய் நாட்... தாராளமா. தமிழுக்கு தமிழ் உதவிங்க. நீங்க படுத்துக்கோங்க!” என்றவன் அவளுக்கு சூடாய் தேநீர் தயாரித்து வந்து கொடுத்தான். அது ஆதிரைக்குத் தேவையாய் இருந்தது. நன்றி கூறிப் பெற்றுக் கொண்டாள். அறைத் தோழி வந்ததும் அவனிடம் நன்றியுரைத்துவிட்டு கீழே சென்றாள். அவனே அவளை பத்திரமாய் அறை வரைக்கும் வந்து விட்டுச்சென்றான்.
“இது என்னோட நம்பர், உங்களுக்கு ஃபீவர் சரியாகலைன்னா கால் மீ. ஹாஸ்பிடல் போகலாம். வேற எதாவது ஹெல்ப்னாலும் கேளுங்க!” என்றுவிட்டுப் போனவனை முதல் பார்வையிலே ஆதிரைக்குப் பிடித்துப் போனது.
மறுநாள் அவளுக்காக மெனக்கெட்டு வந்து உடல்நிலையைப் பற்றி அக்கறையாக விசாரித்தவனை இவளுக்கு நிரம்ப பிடித்துப் போனது. தமிழ் என்ற ஒரு காரணம் அவர்களை இணைத்துப் போட்டது. அவ்வப்போது பார்த்துக் கொள்வது, சிரிப்பது, கடைக்கு ஒன்றாய் செல்வது என சின்ன சின்னதாய் நட்பை விரிவுபடுத்தினர்.
பின்னர் அப்புவிற்கு பகுதி நேர வேலை எதுவும் சரியாக அமையாமல் போக, ஆதிரை வேலைப் பார்க்கும் திரையரங்கிலே அவனும் சேர்ந்தான். அதனால் தினமும் சந்தித்துப் பேசி என கொஞ்சம் கொஞ்சமாக எதிர்பாலின ஈர்ப்பில் இருவரும் தெரிந்தே விழுந்தனர்.
அப்பு ஆதிரைக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து அக்கறையாக செய்ய, ஆதிரை உணர்வு ரீதியாக அவனிடம் நெருங்கத் தொடங்கினாள். யாருமே இல்லாது தனியாய் இருந்தவளுக்கு அந்த அன்பு உருகச் செய்தது. தானும் அவனுக்காகவென மெனக்கெட்டாள்.
அப்புவும் அவள் பார்வை தன்மீதே இப்போதெல்லாம் நிலைத்திருப்பதை உணர்ந்தே இருந்தான். இருவரும் வாய் வார்த்தையாக உரைக்க வில்லை. மற்றவர் அண்மையில் சுகமாய் நாட்களைக் கடத்தினர்.
“காலைல இருந்து உன் பார்வை ரொம்ப என்னை உரசுதே ஆதி!” என அப்பு அவளைக் கேலி செய்ய,
முறைத்துக் கொண்டே வந்தவள், “ஹேப்பி பெர்த்டே அப்பு!” என அவன் முன்னே சின்னதாய் அணிச்சலை நீட்டினான். அவனுக்கு முகம் நொடியில் மலர்ந்தது. வீட்டைவிட்டு பிரிந்து இருப்பதாலோ என்னவோ இந்தப் பிறந்தநாளைப் பற்றி பெரிதாய் அவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஆதிரை அவன் பிறந்த நாளைத் தெரிந்துக்கொண்டு ஆச்சரியப்படுத்தி இருந்தாள்.
“தேங்க்ஸ் ஆதி!” என்றவன் அவளது தோளை அணைத்து அணிச்சலை வெட்டி, அவளுக்கு ஊட்டிவிட்டான். அவளும் ஒரு துண்டை அவன் வாயில் திணித்தவள், பட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ நந்தா!” என்றுவிட்டாள். முதலில் அவளுக்கு நந்தாவாகத்தான் அவன் அறிமுகமாகி இருந்தான். ஒருமுறை அவனுடைய தாய் அலைபேசியில் பேசும்போது அப்பு அப்பு என அழைக்க, அவனை கேலி செய்வதற்காக அப்பு என கூப்பிட்டு அதுவே அவளுக்குப் பழக்கமாகி இருந்தது. நந்தா என்று வெகு சொற்பமாய்தான் அழைப்பாள்.
அவள் தந்த முத்தத்தில் இன்பமாய் அதிர்ந்த அப்பு, “ஹே... ஆதி!” என அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். இவளும் வெட்கத்தோடு அவன் மார்பில் புதைந்தாள். அன்றைக்குத் தொடங்கியது அவர்களது காதல். இன்னுமின்னும் ஒருவருக்கொருவர் நேரத்தை அதிகமாய் செலவிடத் தொடங்கினர்.
சின்ன சின்னதாய் அழைப்பு எப்போதாவது முத்தம் என அவர்கள் காதலுக்கு எல்லை வகுத்திருந்தான் அப்பு. அவன் அனைத்து வகையிலுமே அவளிடம் கண்ணியமாய் இருந்தான். அதனாலே ஆதிரை அவனை முழுமையாக நம்பினாள். அவனது அன்பிலே நாட்களை சுகமாய் கழித்தாள். தாய் தந்தையின் நடவடிக்கையில் திருமணத்தின் மீதெல்லாம் அவளுக்குப் பெரிதாய் உடன்பாடில்லை. அவளைச் சுற்றியிருந்த சமூகத்தின் லிவ்-இன் கலாச்சாரம் அவளை யோசிக்க வைத்தது. திருமணம் முடித்து பிடிக்காது பிரிந்து சென்று குழந்தைகளை பராமரிக்காது நிர்கதியில் விட்டுவிடும் இந்திய பாரம்பரியத்தை அவள் வெறுத்தாள்.
ஒருவருக்கொருவர் புரிந்து சேர்ந்து வாழ்வதில் தவறு இருப்பதாய் அவளுக்குத் தெரியவில்லை. மஞ்சள் கயிறு என்ன ஒரு உறவில் இருவரையும் பிணைக்கப் போகிறதா என்ன என அசட்டையாய் நினைத்தவள், தன் எண்ணத்தை அப்புவிடம் வெளிப்படுத்தினாள். ஆனால் அவன் மறுத்துவிட்டான். இந்தியா சென்று பெற்றவர்களிடம் முறைப்படி சம்மதம் பெற்று திருமணம் செய்தப் பின்னர்தான் வாழ வேண்டும் என அவன் எண்ணியிருக்க, அதையே கூறினான்.
ஆதிரை அவன் பேச்சில் விருப்பமில்லாமல் அப்படியே அதை முடித்துக் கொண்டாள். ஆனால் வெகு சில நேரத்தில் எப்படியாவது அவனை சம்மதிக்க வைக்க வேண்டும் என முயற்சித்தாள். அவையெல்லாம் தோல்வியிலே முடிந்து போயின. சரியென்று விட்டுவிட்டாள்.
பின்னர் ஒருநாள் அப்பு நண்பர்களுடன் கேலிக்கை விருந்து ஒன்றிற்கு சென்று குடிபோதையில் வந்தான். ஆதிரையைப் பார்க்கவென அவளது அறைக்குச் சென்றான்.
“குடிச்சிருக்கீயா டா? உன் ரூம்க்குப் போ!” என அவனை விரட்ட முயன்றாள். ஆனால் அவன் அங்கேயே படுத்துவிட்டான். மறுநாள் காலையில் எழுந்தவனுக்கு இரவு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
எழுந்து தலையில் கைவைத்து அமர்ந்தவன், “ஆதி... நான் அது இங்க எப்படி? நைட் என்னாச்சு? உன்கிட்ட மிஸ்-பிஹேவ் பண்ணிட்டேனா என்ன?” எனப் பதறிப் போனான்.
அவன் குடித்து வந்ததால் ஏற்பட்ட கடுப்பில் இருந்தவள், “ஆமா டா...!” என்றுவிட்டாள்.
சட்டென்று அவன் கண்களிலிருந்து சரசரவென நீர் இறங்கிற்று. அவன் அழுகிறான் என்பதை உணர்ந்தவள், “டேய்... அப்பு... நான் சும்மா சொன்னேன். எதுவும் ஆகலை!” என இவள்தான் அவனை சமாதானம் செய்ய வேண்டியதாகப் போனது.
“உண்மையா எதுவும் நடக்கலைல?” எனக் கேட்டவனைக் கண்டவளுக்கு மனதில் என்னவோ சொல்ல முடியாத உணர்வு. எத்தனையோ பேர் பெண்களைத் தவறான வழியில் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் இக்காலத்தில் அப்புவின் கண்களிலிருந்த ஈரம் அவளை இளகச் செய்தது. அவனது உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். முதலில் தயங்கியவன் அவள் இடையைத் தூக்கி தன்னோடு இறுக்கினான்.
முத்தம் முத்தமாக இருக்கும் என அவன் எண்ண, ஆதிரை அதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி இருந்தாள். அவனும் எல்லாவற்றுக்கும் உடன்பட்டான்தான். ஆனாலும் உள்ளுக்குள்ளே பதறியது. இந்நிகழ்வு முடிந்து இரண்டு நாட்கள் ஆதிரை முகத்தைப் பார்க்க தயங்கினான் அப்பு.
“லூசா டா நீ? நம்ப ரெண்டு பேருமே மேஜர்ஸ். ஏன் இப்படி பிஹேவ் பண்ற? இங்க நம்பளை சுத்திப் பாரு. ஸ்கூல் கிட்ஸ் கூட எப்படி லவ் பண்றாங்கன்னு!” என அவனை அதட்டி உருட்டி இவள்தான் சமாதானம் செய்ய வேண்டியதாகப் போயிற்று.
அடுத்தடுத்த நாட்களில் முத்தமும் அணைப்பும் தொடுகையும் அவர்களுக்கு வெகுபழக்கமாய் போய்விட்டது. அப்பு தயங்கினான். ஆதிரைக்கு சிறு வயதிலிருந்தே பாட்டியும் தாத்தாவும் கற்பித்த ஒழுக்க நெறி மனதை உறுத்தியது. ஆனாலும் அவளைச் சுற்றியிருந்த சமூகத்தை மனதில் நன்கு பதிய வைத்து அனைத்தையும் தட்டிவிட்டாள்.
உணர்வு ரீதியாக மட்டுமல்ல உடல் ரீதியாக இணைந்து விட்ட காரணத்தால் இருவரும் ஒரே வீட்டில் தங்கத் தொடங்கினர். ஆதிரைக்கு கேட்பாரற்றுப் போய்விட, யாரிடமும் பொய் சொல்லவோ, பதில் அளிக்கவோ அவசியமில்லாமல் போனது. அப்பு வீட்டில் பொய்யுரைத்தான். மனம் அவனுக்கு உறுத்தியது. ஆனாலும் ஆதிரை அவன் அருகில் இருக்கும்போது மற்றவை எல்லாம் மறந்து போனது. அவள் மீதான மயக்கம்தான் அவனைப் பொய் சொல்ல உந்தியது. இருவரும் நன்றாய் ஊர் சுற்றினர், ஒன்றாய் பொழுதைக் கழித்தனர்.
நெருக்கம் கூடிப் போனக் காரணத்தால் அப்பு இன்னுமே அவளை நன்றாய் பார்த்துக் கொண்டான். அவள் தன்னுடைய பொறுப்பு என எங்கேயும் ஆதிரையை தனியேவிடவில்லை. ஆதிரைக்கு இந்த அன்பு புதிது. அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். முதல் சில மாதங்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. சின்னதாய் கூட சண்டை இருவருக்கும் இடையில் வரவில்லை.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஆதிரை அப்புவின் பொறுப்பற்ற செயல்களைக் கண்டித்தாள். திருமணத்திற்குப் பின்பும் இவன் இப்படியே இருந்துவிடுவானோ என செலவைக் குறைக்க கூறினாள். கவனத்தைப் படிப்பில் செலுத்தக் வலியுறுத்தினாள்.
அப்புவிற்கு அதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை. படிப்பை பற்றி அவன் யோசிக்கவே இல்லை. பகுதி நேரத்தில் சம்பாதிப்பது, நண்பகர்களுடன் ஊர் சுற்றுவது, ஆதிரைக்கு விலையுயர்ந்த பொருட்களைப் பரிசளிப்பது என அவனுக்கு சந்தோஷமாகச் சென்ற காலம் அது.