• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,215
Reaction score
3,600
Points
113
நெஞ்சம் - 61 💖 இறுதி அத்தியாயம்

“ஃபைவ் ஹண்ட்ரட் டாலர்க்கு இப்போ ஷூ வாங்கணும்னு என்ன அவசியம் அப்பு?” ஆதிரை கடுகடுத்த முகத்தோடு கேட்டாள்.
கையில் செலவிற்கு கூட அவளிடம் போதுமான அளவு பணம் இல்லை. இரண்டு இடத்தில் பகுதி நேரமாக வேலைப் பார்த்து வந்ததில் உடல் அலண்டு போயிருந்தது அவளுக்கு. வந்ததும் வராததுமாய் கடன் வாங்கி இந்த மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு அப்பு காலணி வாங்கி வந்து நீட்டியதில், இவளுக்கு பொறுமை பறந்திருந்தது.

“ஆசையா உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன் ஆதி. நீ அதைப் பார்க்காம விலையைப் பார்க்குற. இப்போல்லாம் என்னை நீ ரொம்ப கண்ட்ரோல் பண்ற? எனக்குப் பிடிக்கலை அது!” அவளுக்காக அலைந்து திரிந்து வாங்கி வந்தால் இப்படி முகத்தில் அடித்தாற் போல பேசுகிறாளே என அப்புவிற்கு கோபம் பொங்கிற்று.

“பார்ட் டைம் ஜாபை விட்டுட்ட. இந்த மந்த்க்கு க்ரோசரி எதுவுமே வாங்கலை. என்னோட சேலரி வச்சு மட்டும் எப்படி மேனேஜ் பண்றது? இதுல நீ அனாவசிய செலவு நிறைய பண்ற? கடன் வாங்கி இதெல்லாம் வாங்கணும்னு என்ன இப்போ அவசியம் அப்பு?” அவளும் குரலை உயர்த்த, பட்டென தான் வாங்கி வந்த காலணியைத் தூக்கி அறையின் மூலையில் எறிந்த அப்பு விறுவிறுவென வெளியேறினான். ஆதிரை அவனை சில நொடிகள் வெறித்தவள், தோளை குலுக்கிக் கொண்டு பகுதி நேர வேலைக்கு கிளம்பிவிட்டாள்.

சென்ற வருடம்தான் ஆதிரையும் அப்புவும் லண்டன் மாநகரத்தில் முதுகலை படிப்பிற்காக இடம் பெயர்ந்திருந்தனர். இருவருக்கும் முன்பின் பழக்கம் எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால் தங்குமிடம் ஒன்றாய் அமைந்ததுதான் அவர்களின் அறிமுகத்திற்கு முழுமுதற் காரணம்.

ஆதிரை நான்கு பெண்களுடன் ஒரு வீட்டின் தரைதளத்தில் வசிக்க, அவ்வீட்டின் மாடியில் அப்புவும் அவனது தோழர்களுடன் குடிவந்திருந்தான். வந்து சில வாரங்களுக்கு இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர்கள் பார்க்க கூட வாய்ப்பு கிட்டவில்லை.‌

ஆதிரையுடன் அறையைப் பகிர்ந்திருந்த நால்வரும் இந்தியர்கள் இல்லை. வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ் முகத்தை ஒருமுறை காண மாட்டோமா என எங்காவது திராவிட நிற மக்களைக் கண்டதும் என்னவோ அவளுக்குள்ளே ஒரு ஆசுவாசம் பொங்கும்.

முதலில் இங்கு வந்தப் பொழுது அவள் எங்கேயும் தனியாய் செல்லவில்லை. புது நாடு, புது மனிதர்கள் என்ற முதற்கட்ட பயம் அகன்று அவள் வெளியே வரவே ஒரு மாதமாகியிருந்தது. அறைத் தோழி ஒருத்தியின் உதவியுடன் அருகே இருந்த திரையரங்கம் ஒன்றில் பகுதி நேரப் பணியில் இணைந்திருந்தாள். ஓரவிற்கு தைரியமாக அவள் வெளியே சென்று வரப் பழகியிருக்க, லண்டன் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது.

யாருமில்லாது தனியாய் இருக்கிறோம் என்ற பயம் நெஞ்சின் ஓரத்தில் இருந்தாலும், அந்த வயதிற்கே உரிய தைரியமும் அலட்சியமும் அவளிடம் அதிகம் இருந்தது. பகுதி நேர வேலை, படிப்பு என அவளுக்கு நாட்கள் நகர, ஒரு நாள் அதீத காய்ச்சலின் விளைவால் அவதியுற்றாள்.

வேலை முடிந்து வந்தவள் வீட்டின் திறவுகோலை எங்கே வைத்தோம் என மறந்துவிட்டாள். மற்ற மூவரும் அறையில் இல்லை. அதனாலே படியிலே அமர்ந்து விட்டாள். காலையில் ஒரு பாரசிட்டமாலை விழுங்கி இருந்தாள். இருந்தும் அவளுக்கு உடல் வெப்பம் மட்டுப்படவில்லை.

லண்டனுக்கே உரிய குளிர்காலம் துவங்கி இருந்தது‌. தமிழ்நாட்டின் மொட்டை வெயிலிலே பிறந்து வளர்ந்தவளால் இந்த நாட்டின் குளிரையும் சீதோஷ்ண நிலையையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடல் அவளைப் போட்டு படுத்தியது. உடன் ஒருவரும் பார்த்துக்க கொள்ள இல்லாததால் கொஞ்சம் உடலளவிலும் மனதளவிலும் பலகீனமாக உணர்ந்தாள். படுக்கையில் சுருண்டு கொள்ள வேண்டும் என உயர்ந்து கொண்டேயிருந்த உடல் வெப்பநிலை உந்தியது. அந்தப் படிகட்டின் கம்பியில் சாய்ந்து அமர்ந்தாள்.

“ஹலோ... எக்ஸ்யூஸ்மீ... டூ யூ நீட் எனி ஹெல்ப்?” எனக் கேட்ட குரலில் மங்கலாய் இருந்த கண்ணை சிமிட்டியவள், “யெஸ்... ஐ நீட் வாட்டர். தண்ணி வேணும்!” என்றாள் ஆங்கிலமும் தமிழும் கலந்து. எதிரே இருந்த ஆடவனின் முகம் அவன் இந்தியன் என பறைசாற்றியது. தமிழாக இருக்க வாய்ப்பு இருக்குமோ என்ற எண்ணத்தில் கடைசி இரண்டு வார்த்தையை இணைத்தாள்.

“தமிழா நீங்க... என் கையைப் பிடிச்சுக்கோங்க!” என்றவன் அவளைக் கைத்தாங்கலாக தன்னறைக்கு அழைத்துச் சென்றான். தெரியாத ஆடவனின் அறைக்குச் செல்கிறோம் என ஆதிரையின் மூளை விழித்தே கிடந்தது. அவளுக்கு நீரைப் புகட்டினான். வேறு எதாவது வேண்டுமா எனக் கேட்டான்.

“நோ... ஒரு ஹாஃப் அன் ஹவர் உங்க ரூம்ல படுத்துக்கலாமா? என் ரூம் கீ மிஸ்ஸாகிடுச்சு!” என ஆதிரை தயங்கினாள்.

“வொய் நாட்... தாராளமா. தமிழுக்கு தமிழ் உதவிங்க. நீங்க படுத்துக்கோங்க!” என்றவன் அவளுக்கு சூடாய் தேநீர் தயாரித்து வந்து கொடுத்தான். அது ஆதிரைக்குத் தேவையாய் இருந்தது. நன்றி கூறிப் பெற்றுக் கொண்டாள். அறைத் தோழி வந்ததும் அவனிடம் நன்றியுரைத்துவிட்டு கீழே சென்றாள். அவனே அவளை பத்திரமாய் அறை வரைக்கும் வந்து விட்டுச்சென்றான்.

“இது என்னோட நம்பர், உங்களுக்கு ஃபீவர் சரியாகலைன்னா கால் மீ. ஹாஸ்பிடல் போகலாம். வேற எதாவது ஹெல்ப்னாலும் கேளுங்க!” என்றுவிட்டுப் போனவனை முதல் பார்வையிலே ஆதிரைக்குப் பிடித்துப் போனது.

மறுநாள் அவளுக்காக மெனக்கெட்டு வந்து உடல்நிலையைப் பற்றி அக்கறையாக விசாரித்தவனை இவளுக்கு நிரம்ப பிடித்துப் போனது. தமிழ் என்ற ஒரு காரணம் அவர்களை இணைத்துப் போட்டது. அவ்வப்போது பார்த்துக் கொள்வது, சிரிப்பது, கடைக்கு ஒன்றாய் செல்வது என சின்ன சின்னதாய் நட்பை விரிவுபடுத்தினர்.

பின்னர் அப்புவிற்கு பகுதி நேர வேலை எதுவும் சரியாக அமையாமல் போக, ஆதிரை வேலைப் பார்க்கும் திரையரங்கிலே அவனும் சேர்ந்தான். அதனால் தினமும் சந்தித்துப் பேசி என கொஞ்சம் கொஞ்சமாக எதிர்பாலின ஈர்ப்பில் இருவரும் தெரிந்தே விழுந்தனர்.

அப்பு ஆதிரைக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து அக்கறையாக செய்ய, ஆதிரை உணர்வு ரீதியாக அவனிடம் நெருங்கத் தொடங்கினாள். யாருமே இல்லாது தனியாய் இருந்தவளுக்கு அந்த அன்பு உருகச் செய்தது‌. தானும் அவனுக்காகவென மெனக்கெட்டாள்.

அப்புவும் அவள் பார்வை தன்மீதே இப்போதெல்லாம் நிலைத்திருப்பதை உணர்ந்தே இருந்தான். இருவரும் வாய் வார்த்தையாக உரைக்க வில்லை. மற்றவர் அண்மையில் சுகமாய் நாட்களைக் கடத்தினர்.

“காலைல இருந்து உன் பார்வை ரொம்ப என்னை உரசுதே ஆதி!” என அப்பு அவளைக் கேலி செய்ய,

முறைத்துக் கொண்டே வந்தவள், “ஹேப்பி பெர்த்டே அப்பு!” என அவன் முன்னே சின்னதாய் அணிச்சலை நீட்டினான். அவனுக்கு முகம் நொடியில் மலர்ந்தது. வீட்டைவிட்டு பிரிந்து இருப்பதாலோ என்னவோ இந்தப் பிறந்தநாளைப் பற்றி பெரிதாய் அவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஆதிரை அவன் பிறந்த நாளைத் தெரிந்துக்கொண்டு ஆச்சரியப்படுத்தி இருந்தாள்.

“தேங்க்ஸ் ஆதி!” என்றவன் அவளது தோளை அணைத்து அணிச்சலை வெட்டி, அவளுக்கு ஊட்டிவிட்டான். அவளும் ஒரு துண்டை அவன் வாயில் திணித்தவள், பட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ நந்தா!” என்றுவிட்டாள். முதலில் அவளுக்கு நந்தாவாகத்தான் அவன் அறிமுகமாகி இருந்தான். ஒருமுறை அவனுடைய தாய் அலைபேசியில் பேசும்போது அப்பு அப்பு என அழைக்க, அவனை கேலி செய்வதற்காக அப்பு என கூப்பிட்டு அதுவே அவளுக்குப் பழக்கமாகி இருந்தது. நந்தா என்று வெகு சொற்பமாய்தான் அழைப்பாள்.‌

அவள் தந்த முத்தத்தில் இன்பமாய் அதிர்ந்த அப்பு, “ஹே... ஆதி!” என அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். இவளும் வெட்கத்தோடு அவன் மார்பில் புதைந்தாள். அன்றைக்குத் தொடங்கியது அவர்களது காதல். இன்னுமின்னும் ஒருவருக்கொருவர் நேரத்தை அதிகமாய் செலவிடத் தொடங்கினர்.

சின்ன சின்னதாய் அழைப்பு எப்போதாவது முத்தம் என அவர்கள் காதலுக்கு எல்லை வகுத்திருந்தான் அப்பு. அவன் அனைத்து வகையிலுமே அவளிடம் கண்ணியமாய் இருந்தான். அதனாலே ஆதிரை அவனை முழுமையாக நம்பினாள். அவனது அன்பிலே நாட்களை சுகமாய் கழித்தாள். தாய் தந்தையின் நடவடிக்கையில் திருமணத்தின் மீதெல்லாம் அவளுக்குப் பெரிதாய் உடன்பாடில்லை. அவளைச் சுற்றியிருந்த சமூகத்தின் லிவ்-இன் கலாச்சாரம் அவளை யோசிக்க வைத்தது. திருமணம் முடித்து பிடிக்காது பிரிந்து சென்று குழந்தைகளை பராமரிக்காது நிர்கதியில் விட்டுவிடும் இந்திய பாரம்பரியத்தை அவள் வெறுத்தாள்.

ஒருவருக்கொருவர் புரிந்து சேர்ந்து வாழ்வதில் தவறு இருப்பதாய் அவளுக்குத் தெரியவில்லை. மஞ்சள் கயிறு என்ன ஒரு உறவில் இருவரையும் பிணைக்கப் போகிறதா என்ன என அசட்டையாய் நினைத்தவள், தன் எண்ணத்தை அப்புவிடம் வெளிப்படுத்தினாள். ஆனால் அவன் மறுத்துவிட்டான். இந்தியா சென்று பெற்றவர்களிடம் முறைப்படி சம்மதம் பெற்று திருமணம் செய்தப் பின்னர்தான் வாழ வேண்டும் என அவன் எண்ணியிருக்க, அதையே கூறினான்.

ஆதிரை அவன் பேச்சில் விருப்பமில்லாமல் அப்படியே அதை முடித்துக் கொண்டாள். ஆனால் வெகு சில நேரத்தில் எப்படியாவது அவனை சம்மதிக்க வைக்க வேண்டும் என முயற்சித்தாள். அவையெல்லாம் தோல்வியிலே முடிந்து போயின. சரியென்று விட்டுவிட்டாள்.

பின்னர் ஒருநாள் அப்பு நண்பர்களுடன் கேலிக்கை விருந்து ஒன்றிற்கு சென்று குடிபோதையில் வந்தான். ஆதிரையைப் பார்க்கவென அவளது அறைக்குச் சென்றான்.

“குடிச்சிருக்கீயா டா? உன் ரூம்க்குப் போ!” என அவனை விரட்ட முயன்றாள். ஆனால் அவன் அங்கேயே படுத்துவிட்டான். மறுநாள் காலையில் எழுந்தவனுக்கு இரவு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

எழுந்து தலையில் கைவைத்து அமர்ந்தவன், “ஆதி... நான் அது இங்க எப்படி? நைட் என்னாச்சு? உன்கிட்ட மிஸ்-பிஹேவ் பண்ணிட்டேனா என்ன?” எனப் பதறிப் போனான்.

அவன் குடித்து வந்ததால் ஏற்பட்ட கடுப்பில் இருந்தவள், “ஆமா டா...!” என்றுவிட்டாள்.

சட்டென்று அவன் கண்களிலிருந்து சரசரவென நீர் இறங்கிற்று. அவன் அழுகிறான் என்பதை உணர்ந்தவள், “டேய்... அப்பு... நான் சும்மா சொன்னேன். எதுவும் ஆகலை!” என இவள்தான் அவனை சமாதானம் செய்ய வேண்டியதாகப் போனது.

“உண்மையா எதுவும் நடக்கலைல?” எனக் கேட்டவனைக் கண்டவளுக்கு மனதில் என்னவோ சொல்ல முடியாத உணர்வு. எத்தனையோ பேர் பெண்களைத் தவறான வழியில் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் இக்காலத்தில் அப்புவின் கண்களிலிருந்த ஈரம் அவளை இளகச் செய்தது. அவனது உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். முதலில் தயங்கியவன் அவள் இடையைத் தூக்கி தன்னோடு இறுக்கினான்.

முத்தம் முத்தமாக இருக்கும் என அவன் எண்ண, ஆதிரை அதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி இருந்தாள். அவனும் எல்லாவற்றுக்கும் உடன்பட்டான்தான். ஆனாலும் உள்ளுக்குள்ளே பதறியது. இந்நிகழ்வு முடிந்து இரண்டு நாட்கள் ஆதிரை முகத்தைப் பார்க்க தயங்கினான் அப்பு.

“லூசா டா நீ? நம்ப ரெண்டு பேருமே மேஜர்ஸ். ஏன் இப்படி பிஹேவ் பண்ற? இங்க நம்பளை சுத்திப் பாரு. ஸ்கூல் கிட்ஸ் கூட எப்படி லவ் பண்றாங்கன்னு!” என அவனை அதட்டி உருட்டி இவள்தான் சமாதானம் செய்ய வேண்டியதாகப் போயிற்று.

அடுத்தடுத்த நாட்களில் முத்தமும் அணைப்பும் தொடுகையும் அவர்களுக்கு வெகுபழக்கமாய் போய்விட்டது. அப்பு தயங்கினான். ஆதிரைக்கு சிறு வயதிலிருந்தே பாட்டியும் தாத்தாவும் கற்பித்த ஒழுக்க நெறி மனதை உறுத்தியது‌. ஆனாலும் அவளைச் சுற்றியிருந்த சமூகத்தை மனதில் நன்கு பதிய வைத்து அனைத்தையும் தட்டிவிட்டாள்.

உணர்வு ரீதியாக மட்டுமல்ல உடல் ரீதியாக இணைந்து விட்ட காரணத்தால் இருவரும் ஒரே வீட்டில் தங்கத் தொடங்கினர். ஆதிரைக்கு கேட்பாரற்றுப் போய்விட, யாரிடமும் பொய் சொல்லவோ, பதில் அளிக்கவோ அவசியமில்லாமல் போனது. அப்பு வீட்டில் பொய்யுரைத்தான். மனம் அவனுக்கு உறுத்தியது. ஆனாலும் ஆதிரை அவன் அருகில் இருக்கும்போது மற்றவை எல்லாம் மறந்து போனது. அவள் மீதான மயக்கம்தான் அவனைப் பொய் சொல்ல உந்தியது. இருவரும் நன்றாய் ஊர் சுற்றினர், ஒன்றாய் பொழுதைக் கழித்தனர்.

நெருக்கம் கூடிப் போனக் காரணத்தால் அப்பு இன்னுமே அவளை நன்றாய் பார்த்துக் கொண்டான். அவள் தன்னுடைய பொறுப்பு என எங்கேயும் ஆதிரையை தனியேவிடவில்லை. ஆதிரைக்கு இந்த அன்பு புதிது. அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். முதல் சில மாதங்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. சின்னதாய் கூட சண்டை இருவருக்கும் இடையில் வரவில்லை.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஆதிரை அப்புவின் பொறுப்பற்ற செயல்களைக் கண்டித்தாள். திருமணத்திற்குப் பின்பும் இவன் இப்படியே இருந்துவிடுவானோ என செலவைக் குறைக்க கூறினாள். கவனத்தைப் படிப்பில் செலுத்தக் வலியுறுத்தினாள்.

அப்புவிற்கு அதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை. படிப்பை பற்றி அவன் யோசிக்கவே இல்லை. பகுதி நேரத்தில் சம்பாதிப்பது, நண்பகர்களுடன் ஊர் சுற்றுவது, ஆதிரைக்கு விலையுயர்ந்த பொருட்களைப் பரிசளிப்பது என அவனுக்கு சந்தோஷமாகச் சென்ற காலம் அது.
 
Administrator
Staff member
Messages
1,215
Reaction score
3,600
Points
113
ஆதிரைக்கு அவன் அன்பு பிடித்தது. அக்கறை பிடித்தது. அற்காக இப்படி தான்தோன்றித்தனமாக வாழ்வதில் உடன்பாடில்லை. படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்து கல்விக் கடனைக் கட்ட வேண்டும் என்ற முனைப்பு அதிகமாய் இருந்ததால் அவனிடம் அவ்வப்போது அதைக் கூறிக் கொண்டே இருந்தாள்.

“ப்ம்ச்... சும்மா அதையே சொல்லாத டீ. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ என்னை மாதிரி என்ஜாய் பண்ணி வாழக் கத்துக்கோ!” என அவளுக்குப் பாடம் எடுத்தான். ஆரம்ப கட்டத்தில் காதல் கண்ணை மறைத்தது. தவறெல்லாம் சரியாய் தெரிந்தது. ஆனால் இப்போதுதான் அவளுக்கு நிதர்சனம் உறைத்தது. எப்படியாவது அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள். விளைவு அடிக்கடி இருவருக்கும் சண்டை வந்தது. அப்புவின் பகுதி நேர வேலை அவனது அலட்சியத்தால் பறிபோயிருந்தது.

“இதுக்குத்தான் டா நான் சொல்றேன். கொஞ்சமாச்சும் பொறுப்பா நடந்துக்கோ. மெச்சூர்டா பிஹேவ் பண்ணு!” ஆதிரை பொறுமையாய்தான் கூறினாள்.

ஏற்கனவே வேலைப் போன கடுப்பில் இருந்தவன், “வாயை மூடு ஆதி... எப்போ பார்த்தாலும் பொறுப்பா இரு. மெச்சூர்டா பிஹேவ் பண்ணுன்னுட்டு. நான் குழந்தை இல்ல. ஐ க்நோ வாட் ஐயம் டூயிங். கவலைப்படாதே... வேலைக்குப் போகாம உன் காசுல உக்காந்து நான் திங்கமாட்டேன்!” என சுள்ளென உரைத்துவிட்டு நண்பனின் அறைக்குச் சென்றுவிட்டான். ஆதிரை அவனது சொற்கள் தந்த காயத்தில் சுருண்டு போனாள். ஒருவாரம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.


ஆதிரையின் மனம் என்னவோ அவனை அதிகமாய் தேடியது. ஆனாலும் இறங்கிப் போகாது வீம்புடன் இருந்தாள். அப்புதான் கோபம் குறைந்ததும் வந்து இவளிடம் பேசினான்.

“சாரி டி... கோபத்துல பேசிட்டேன்!” என அவன் இறங்கி வர, இருவரும் சண்டையை முடிவுக்குக்கொண்டு வந்திருந்தனர். அவன் வேறு வேலை தேடிக் கொள்ளும் வரை இவளே அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக அவனை சமாதானம் செய்தாள். அவனும் ஒப்புக் கொள்ள, சிறிது நாட்கள் சண்டையின்றிப் போனது.

அப்புவும் வேலையில்லாததால் செலவை முடிந்தளவிற்கு குறைத்தான். ஆனால் எப்போதும் தாராளமாக செலவு செய்து பழக்கப்பட்டவனின் கை அவனை சும்மா இருக்கவிடவில்லை. கடன் வாங்கியாவது ஊரைச் சுற்றினான். ஆதிரைக்கு தெரிந்தாலும் மீண்டும் தான் ஏதாவது சொல்லச் சென்று அவன் சண்டையிட்டால் என்ன செய்வது எனப் பொறுமைக் காத்தாள்.

அவளுடைய சம்பளத்தை வைத்து இருவருக்கும் செலவழிப்பது கொஞ்சம் கடினமாய் இருக்க, இந்திய குடும்பம் ஒன்றில் குழந்தைகளுக்கு வாரியிறுதிகளில் தமிழ் கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டாள். அங்கேயும் சென்று, பகுதி நேர வேலையும் பார்த்து படிப்பிலும் கவனத்தை செலுத்துவது அவளுக்கு சிரமமாய் இருந்தது. இழுத்துப் பிடித்து அவள் அனைத்தையும் பார்க்க, இவன் கடன் வாங்கி ஐநூறு டாலருக்கு காலணி வாங்கி வந்திருக்கானே என கோபம் உச்சிவரை உயர்ந்தது. அதனாலே கோபமாய் பேசிவிட்டாள்.

அப்பு வழக்கம் போல அவனது நண்பனின் அறைக்குச் சென்றுவிட்டான். இந்த முறை இருவரும் இறங்கி வரத் தயாராக இல்லை. அவன் தவறை ஒப்புக் கொள்ளும் வரை இவள் அவனிடம் பேசக் கூடாது என உறுதியாய் இருந்துவிட்டாள்.

அப்பு இரண்டுமுறை நேரில் வந்து பேச முயற்சித்தும் ஆதிரை முகம் கொடுத்துப் பேசாது விட்டுவிட்டாள். அவனுக்கு ஒரு கட்டத்தில் பொறுமை பறந்தது.

“நீ முன்ன மாதிரி இல்லை ஆதி. எனக்கு உன்கூட பேசவே பயமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் சண்டை! சண்டை! ரூமுக்கு வரவே பிடிக்கலை. நான் எது செஞ்சாலும் அது உனக்குத் தப்பா தெரியுது. வெறுப்பா இருக்கு டீ. நம்ப கல்யாணம் பண்ணாலும் இப்படித்தான் வாழ்க்கைப் போகுமான்னு யோசிச்சா தலை வலியே வந்துடுது!” என அவன் பேசப் பேச ஆதிரைக்கு கண்களில் நீர் நிரம்பியது.

உருண்டு திரண்ட நீரை உள்ளிழுத்தவள், “ஃபைன்... நீ சொல்றது சரிதான். நமக்குள்ள சண்டைதான் அதிகமா வருது.
பேசாம நம்ப பிரிஞ்சுடலாம். அதுதான் நம்ப ரெண்டு பேருக்கும் நல்லது.
உனக்கு ஏத்த பொண்ணா நீ கல்யாணம் பண்ணிக்கோ. நான் உனக்கு செட்டாக மாட்டேன். எனக்கேத்த ஒருத்தனை நான் தேடிக்கிறேன்” என அவள் அழுத்தமாய்க் கூறிவிட்டு நடக்க, அப்பு தலையைக் கோதினான். உண்மையில் இருவருக்கும் சிறிது இடைவெளி தேவை என யோசித்தவன், அவளை சமாதானம் செய்யாது நண்பனின் அறையிலே தங்கினான். ஒருமாதம் கடந்திருக்க, ஊரில் அவன் தந்தைக்கு உடல்நிலை மிகவும் மோசமாய் இருப்பதாக அழைப்பு வந்தது.

அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு இந்தியா சென்றான்‌. போகும் அவசரத்தில் ஆதிரையிடம் எதையும் கூறாது விட்டுவிட்டான். அங்கே சென்று தந்தையைப் பார்த்து அவருக்கு அறுவை சிகிச்சைக்குப் பணத்தை ஏற்பாடுகள் செய்ய என அவனுக்கு நேரமே இல்லை.

ஆதிரை விஷயம் கேள்விப்பட்டு அவனுக்கு அழைக்க, அவளிடம் பேச நேரம் கிட்டாது போனது. இரண்டு நாட்கள் தொடர்ந்து இவள் அழைத்து ஓய்ந்து விட்டுவிட்டாள்‌.

அப்புவின் தந்தை அவனுக்குத் திருமணம் முடித்தால் ஒழிய சிகிச்சை செய்வேன். இல்லையெனில் சிகிச்சைக்கு உடன்பட மறுத்தார். அவனது அத்தைப் பெண் ரூபியை அப்புவிற்கு மணம் முடித்து வைக்குமாறு அவர் வற்புறுத்த, இவன் முடியவே முடியாது என்றான். அங்கே தனக்காக ஒருத்திக் காத்திருக்கிறாளே என அவனுக்குப் பதறியது. ஆனாலும் உண்மையை யாரிடமும் உரைக்கவில்லை.

அவன் பேச்சை ஒருவரும் காதில் வாங்கிக் கொள்ளாது திருமணத்தை நடத்துவதிலே குறியாய் இருந்தனர். அப்பு அடித்துப் பிடித்து ஆதிரைக்கு அழைக்க, அவள் கோபத்தில் அவன் அழைப்புகளை நிராகரித்திருந்தாள். நிர்பந்தத்தின் பெயரில் வேறு வழியற்று அத்தைப் பெண்ணை மணந்திருந்தான் அவன். ஆதிரையிடம் எப்படி இதைக் கூறப் போகிறோம் என்ற நினைப்பே அவனை நிம்மதியாய் இருக்க விடவில்லை.

அவன் திருமண விடயம் ஆதிரையின் காதிற்கும் எட்டிவிட்டது. முதலில் அவள் நம்பவேயில்லை‌. அன்றைக்குப் பிரிந்துவிடலாம் என்று கூறிய வார்த்தையிலே அவளுக்கு இரண்டு நாட்கள் தூக்கம் பறிபோயிருந்தது. ஆனால் உண்மை அவளை கத்திக்கொண்டு கிழித்திருந்தது. அப்புவும் ரூபியும் ஜோடியாய் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவள், விம்மி வந்த அழுகையை அடக்க முயன்றாள். முடியாது போனது. இரண்டு நாட்கள் அறையிலிருந்து வெளியே வரவேயில்லை. உண்ணாது உறங்காது பைத்தியம் பிடித்தது போல இருந்தாள். அவளை சமாதானம் செய்யவோ, தேற்றவோ ஒருவரும் வர மாட்டார்கள் என்ற உண்மை மெதுவாய் மனதிற்கு புரிந்தது. சுய சமாதானத்தில் தன்னை மீட்டாள். அது அத்தனை எளிதாய் இல்லை. அப்பு இவளிடம் விளக்கம் கூற முயன்றான்.

“உன் கல்யாணத்துல எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல அப்பு. ஐ யம் ஓகே. உனக்கு உன் அத்தைப் பொண்ணுதான் செட்டாவா. எனக்கேத்தவனா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!” என்றவள் இருப்பிடம், பகுதிநேர வேலை என அனைத்தையும் மாற்றிக் கொண்டாள். அப்புவிடமிருந்து மொத்தமாய் பிரிந்து போயிருந்தாள். தான் எங்கே இருக்கிறேன் என்பதைக் கூட அவனுக்குத் தெரியவிடாது பார்த்துக் கொண்டாள். அடுத்த ஒரு மாதத்தில் படிப்பு முடிந்துவிட, அப்பு இந்தியாவிற்கு சென்றுவிட்டான்.

ஆதிரை அங்கேதான் இருந்தாள். இந்தியாவிற்கு சென்றால் மட்டும் அவளுக்கென்று ஒருவரும் காத்திருக்கப் போகிறார்களா என்ற எண்ணம் தோன்றியதும் கசந்து வழிந்தது. என்னதான் அப்புவிடம் அப்படி பேசி அவனை அனுப்பிவிட்டாலும் இவளால் அவன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அத்தனை எளிதில் நகர முடியவில்லை. முதன்முதலாக பூத்த காதல் இப்படி முளையிலே கருகிப் போனதில் மனமும் உடலும் சோர்ந்து போயிருந்தது.

வேலை செய்ய முடியாது அடிக்கடி வாந்தி, மயக்கம் உடல் சோர்வு என அவளைப் படுத்தியது. நான்கு மாதங்களாக தவறியிருந்த மாதவிடாய் அப்போதுதான் அவளது சிந்தையை நிறைக்க, திடுக்கிட்டுப் போனாள். அப்படியிருக்குமோ? என நெஞ்சுப் பதறிப் போனது.

அருகிலிருந்த மருந்தகத்தில் கர்பத்தை உறுதி செய்யும் கருவி வாங்கி சோதித்துப் பார்க்க, அது இரட்டை கோட்டைக் காண்பித்தது. என்ன செய்வது என அவளுக்குத் தெரியாத நிலை. இந்தக் குழந்தை தனக்கு வேண்டுமா? இல்லையா என்ற தெளிவு கூட அவளிடம் இல்லை. முதலில் மருத்துவரிடம் சென்று சோதிக்க வேண்டும் என அவள் மருத்துவரை சந்திக்க முன்பதிவு செய்ய முயன்றாள். நம் நாட்டைப் போல அங்கே அத்தனை மருத்துவ வசதிகள் இல்லை. அவசரம் எனக் கேட்டும் மூன்று வாரங்கள் கழித்தே அவளுக்கு மருத்துவரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

குழந்தையை உறுதி செய்தவர், அதை கலைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். பன்னிரெண்டு வாரங்களைத் தாண்டி விட்டதால் குழந்தையைக் கலைப்பது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து என அவர் அறிவுறுத்த, ஆதிரைக்கு திக்கற்ற நிலை. ஒருவாறு குழந்தையைத் தனியாய் பெற்று வளர்க்கும் சூழ்நிலைக்கு ஏற்ப மனதை தயார் செய்தாள். பொறுப்புக் கூடிவிட்டதை உணர்ந்தாள்.‌

விரைவிலே தனக்கென ஒரு வேலையைத் தேடிக் கொண்டாள். மருத்துவ காப்பீட்டையும் உறுதி படுத்தினாள். தனியாய் குழந்தைப் பெற்றால் எப்படி வளர்க்க வேண்டும் என்று எல்லா வகையிலும் முன்யோசனையுடன் செயல்பட்டாள். அவர்கள் குடியிருப்பிலே தரைதளத்தில் வசிக்கும் எலானி என்பவரின் அறிமுகம் அவளுக்கு கிட்டியது. கணவரை இழந்து தனியாய் இருந்தார் அந்தப் பெண்மணி. லண்டன்வாசிதான் அவர். செவிலியராய் இருந்து பணி ஓய்வு பெற்றவர். அவருடைய உதவியுடன்தான் குழந்தையைப் பெற்றெடுத்தாள். முதல் ஆறு மாதம் வேலையில் பிரசவ விடுப்புக் கேட்டு வாங்கினாள்.

தனியாய் அபியை பார்த்துக் கொள்வது வெகு சிரமமாக இருந்தது. எலானிதான் அவளை அரவணைத்துக் கொண்டார். விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பினாள். குழந்தையை அவர் பார்த்துக் கொண்டார். ஆதிரை அவருடைய செலவுகளை தானே ஏற்றிருந்தாள். அவளுடைய கல்விக் கடன் முழுமையாய் அடைந்து முடிந்திருந்தது. அடுத்து தனக்கும் குழந்தைக்கும் என சேர்த்து வைத்தாள். அபிக்கு மூன்றரை வயதிருக்கும், எலானி வயது மூப்பின் காரணமாக இறந்துவிட, இவளுக்கு அதற்குமேலே அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

கையிலிருக்கும் சேமிப்பை வைத்து இந்தியா வந்துவிட்டாள். சொந்த ஊரான ரிஷிவந்தியம் செல்ல விருப்பமில்லை. தாய் தந்தை என்று பெயருக்கு கூட இல்லாதவர்களை சென்று சந்திக்க அவளுக்கு மனம் வரவில்லை. அதனாலே சென்னையை சுற்றியுள்ளப் பகுதியில் வீடு தேடினாள். அப்போதுதான் ருக்குவின் அறிமுகம் கிடைக்க, அவர் வீட்டில் குடிவந்தாள். அதற்குப் பின்னர் தேவாவின் உழவர் துணையில் வேலைக்குச் சேர்ந்து நாட்கள் அதன் போக்கில் நகரத் தொடங்க, அவளும் தனிமை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டிந்தாள்.

ஆதிரை நடந்து முடிந்ததை ஒருவழியாய் சொல்லி முடித்ததும் தேவாவின் முகம் பார்க்கத் தயங்கி கையிலிருந்த மருதாணியை மெதுவாய் பார்வையிட்டாள். இதுவரை யாரிடமும் அவள் நடந்ததைப் பகிர்ந்திருக்கவில்லை. என்னவோ தேவாவிடம் கூறிவிட்டால் மனம் சமாதானமாகிவிடும் எனத் தோன்ற கொட்டி கவிழ்த்திவிட்டாள். ஆனாலும் அவன் முகம் பார்க்கத் தயங்கியது இந்தப் பெண்.

“ஆ...” என ஏதோ மெல்லிய சப்தம் கேட்க ஆதிரை என்னவென நிமிர்ந்து பார்த்தாள். தேவா கொட்டாவி விட்டுக் கொண்டே ஒரு கரத்தால் வாயை மூடினான். அவன் கண்கள் உறக்கத்திற்கு இறைஞ்சின போல. ரெண்டும் சிவந்து கிடந்தது. அவள் கணவனை முறைத்துப் பார்த்தாள்.

“முறைக்காத டீ. ஒரு ட்விஸ்ட் இல்ல, டர்ன் இல்ல. ஃபைட் சீன் கூட உன் கதைல இல்ல. ரொம்ப போரிங்கா இருந்துச்சா... அதான் தூக்கமா வருது எனக்கு?” என அவன் வேண்டுமென்றே கண்ணைக் கசக்க, இத்தனை நேரம் ஆதிரையிடமிருந்த பதற்றமும் சங்கடமும் தேவையற்றது எனத் தெரிந்து ஓடிப் போயிருந்தது.

“என்ன தேவா...” என சிரிப்பும் முறைப்புமாய் அவனை அடிக்க சென்ற கையைப் பதறிப் பிடித்தவன், “ஏய்! ஏய்... ட்ரெஸ் அழுக்காகிடும் டீ!” என்றவனை அவள் முறைக்க, அவள் கழுத்தில் ஒற்றைக் கரத்தைப் போட்டுத் தன்னோடு இழுத்தணைத்துக் கொண்டான் தேவநநஆதிரையிடம் பெரும் ஆசுவாசம் ஒன்று வந்தமர்ந்தது.

“தேவா...” என அவனை மெல்லிய குரலில் அழைத்தாள்.

“என்ன டீ?” எனக் கேட்டான் அவன்.

“இல்ல... என் கதையைக் கேட்டு நான் கெட்ட பொண்ணு இல்ல, வேற எதாவதுன்னு என்னை ஜட்ஜ் பண்ணிங்களா?” தயங்கியபடியே கேட்டாள். இவனது உதட்டில் சின்ன முறுவல்.

“ப்ம்ச்... நான் அப்போ சொன்னதுதான் ஆதி. நான் அந்த சிட்சுவேஷனை ஃபேஸ் பண்ணாத வரை எனக்கு உன்னோட நிலைமை, ஃபீலிங்க்ஸ் எதுவும் புரியாது டி. உன்னோட பாஸ்ட்ல எந்த இடத்துலயுமே இல்லாத நான் எபப்டி உன்னை ஜட்ஜ் பண்ண முடியும்? மோர் ஓவர் அந்த வயசுல நீங்க ரெண்டு பேரும் இப்படித்தான் நடந்திருப்பிங்க. இட்ஸ் நேச்சுரல். சோ, நடந்ததை எதையும் நான் என் மண்டைக்குள்ளே ஏத்தலை. இன்பேஃக்ட் இதை தெரிஞ்சுக்குற ஆர்வம் கூட எனக்கு இல்லை. எங்க நீ வருத்தப்படுவியோன்னு கேட்டேன். மத்தபடி ஐ டோன்ட் கேர் அபவுட்‌ யுவர் பாஸ்ட். என் கண்ணு முன்னாடி இருக்க ஆதிரையை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பவும் பிடிக்கும். அவளை நான் தப்பா ஜட்ஜ் பண்ணலாம் மாட்டேன்!” எனக் கூறி மனைவியின் நெற்றி முட்டினான் தேவா.

அவளுக்கு ஒருமாதிரி சொல்ல தெரியாத ஒரு உணர்வு. குழந்தையைப் பற்றிக் கூறும் முன்னே தன்னுடைய கடந்தகாலத்தை அவனிடம் பகிர வேண்டும் என்றொரு எண்ணம். என்னவோ இத்தோடு அப்பு பற்றிய பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். இனி வாழ் நாளுக்கும் பேசக் கூடாது என்றுதான் அனைத்தையும் கொட்டி முடித்தாள். ஆனாலும் தேவா எப்படி இதை எடுத்துக் கொள்வான் என மனதோரம் சின்னதாய் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. அவன் பேச்சில் அதெல்லாம் கரைந்து போயிருந்தது.

“சரி... படுக்கலாமா ஆதி? உன் ஸ்டோரியைக் கேட்டு எனக்குத் தூக்கம் சொக்குது டீ!” என்றான் உண்மையாய் தூங்கி வழிந்தக் குரலில்.

அவனிடமிருந்து பிரிந்தவள், “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேனே... அதைக் கேட்கலை நீங்க?” என உதட்டைக் கோணினாள்.

“அதெல்லாம் காலைல கேட்குறேன் டீ!” என அவன் பாயில் குப்புறப்படுத்து தலையணையில் முகம் புதைக்க, இவள் அவனை முறைத்து விட்டு எழுந்து சென்று அந்தக் கருவியை எடுத்து வந்து அவன் தலையணைப் பக்கத்தில் வைத்தவள், “தேவா...” என மெல்லிய குரலில் அழைத்து மருதாணி இடாத கையால் அவன் தலையை மென்மையாய் கோதினாள்.

“என்ன டீ?” சலித்துக் கொண்டே அவள் கையைப் பிடித்து கன்னத்தை அழுத்தியவன் விழிகளைத் திறக்கவே இல்லை.

“தேவா... ப்ளீஸ் ஒரு நிமிஷம்!” என்றவள் குரலை புறக்கணிக்க முயன்று தலையைத் தூக்கியவன், “மனுஷனைத் தூங்கவிடாம என்ன டீ?” என அலுத்தவன் அவள் பார்வை எங்கே செல்கிறது எனப் பார்த்தான். என்னவென ஒருமுறை புரியாது விழிகளை சிமிட்டி பார்த்தவன், படக்கென படுத்த இடத்திலிருந்து வாரிசுருட்டி எழுந்து அமர்ந்துவிட்டான்.

அதைக் கையில் எடுத்தவனின் விழிகள் முதலில் நம்ப முடியாது அதிர்ந்து பின்னர் மெதுமெதுவாக சந்தோஷத்தில் மிளிர, ஆதிரை அவனைத்தான் பார்த்தாள். மனம் நிறைந்து போயிருந்தது. இரண்டு கோடுகளை ஒருமுறை அவனது விரல்கள் வருடின. தந்தையாகப் போகிறோம் என நினைத்ததும் உவகைப் பெருகிற்று.

மனைவியை நிமிர்ந்து முறைத்தவன் அவள் பின்னந்தலையில் கையை வைத்து இழுத்து இறுக்கி அணைத்தவன், “கிறுக்கச்சி... வந்ததும் இதை சொல்லாம என்ன டீ பண்ண?” எனக் கேட்டான்.

“தெரியலை தேவா..‌. என்னமோ நடந்ததை ஒரேதா சொல்லி முடிச்சிட்டா ரிலாக்ஸா இருக்குமேன்னு தோணுச்சு. அப்புறம் பேபி பத்தி சொன்னதும் உங்க ரியாக்ஷன் பார்க்க ஆசைப்பட்டேன். ஈவ்னிங்ல இருந்து இப்போ வருவீங்க, அப்போ வருவீங்கன்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன்‌. சார் ரொம்ப லேட்டாதான் வந்தீங்க. வந்ததும் போய் சாப்ட்டு தூங்கத்தான் ரெடியா இருந்தீங்க!” என குறைபடித்தாள் மனைவி.

“ஏய்... அது நான் செம்ம டயர்ட் டீ. அதுவும் இல்லாம உன்னைக் கிட்ட வச்சுட்டு சும்மா இருக்க முடியலை. அதான் தூங்கிடலாம்னு பார்த்தேன்!” என மென் குரலில் உரைத்தவனைப் பார்த்தவள் எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நீங்க சும்மா இருந்திருந்தா இந்த புள்ளை வந்திருக்குமா தேவா?” எனக் கேலியாய் கேட்டாள். முறைக்க முயன்றவனுக்கும் சிரிப்பு வந்தது.

“ரொம்ப பேசுற டீ...” என அவள் உதட்டை அளந்து குட்டியாய் முத்தமிட்டான்.

“திடீர்னு பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சு தேவா. அபியை நான் ப்ரக்னென்ட்னு தெரிஞ்சப்போ எப்படி தனியாளா குழந்தையைப் பெத்து வளர்க்கப் போறேன்ற பயம் மட்டும்தான் அதிகமா இருந்துச்சு. பட் இப்போ அந்த மாதிரி எதுவுமே இல்லை. குழந்தைன்னு கன்பார்ம் பண்ணதும் சந்தோஷமா... ம்கூம்... சரியா சொன்னா நிம்மதியா இருந்துச்சு தேவா. நீங்க எல்லாத்தையும் பார்த்துப்பீங்கன்ற நிம்மதி. உங்ககூட இருந்தா ஒன்னு என்ன இன்னும் ரெண்டு கூட எக்ஸ்ட்ரா பெத்துக்கலாம்ற தைரியம் வருதுங்க!” என்றவள் அவன் மார்பில் சாய்ந்து கொள்ள, தேவா அவளை வாஞ்சைமிகப் பார்த்தான்.

“இன்னும் ரெண்டெல்லாம் வேணாம் டீ. நாம் இருவர், நமக்கு இருவர் போதும். இப்போ இந்தக் குழந்தை பொறந்தாலே அவன் ஸ்கூல் முடிக்கும்போது நான் ஹாப் செஞ்சுரி அடிச்சிருப்பேன். அடுத்த குழந்தை எல்லாம் ரிஸ்க் டீ!” என்றான்

“அது சரி‌...” என்றவள் சிரித்தாள்.
பற்கள் தெரிய சிரித்த வசீகரப் புன்னகை இவனை ஈர்க்க, குனிந்து அவள் உதட்டில் முத்தமிட சென்றவன் சட்டென்று யோசனையுடன் பின்வாங்கி, “நாளைக்கு அங்க வந்து தூங்கிட மாட்டல்ல டீ?” என சற்றே கவலையுடன் கேட்டான். ஆதிரை கடகடவென சிரிக்கத் தொடங்கினாள்.

“ப்ம்ச்.‌.. தேவா, நான் சும்மா உங்களை வம்பிழுக்க சொன்னேன். இது பிரக்னென்சி சிக்னெஸ்‌. இப்படித்தான் இருக்கும்!” என்றாள் சிரிப்பினூடே.

“நம்பலாமா?” யோசனையுடன் அவன் கேட்க, “ப்ம்ச்... தேவா...” என அவனை அதட்டியவள், “நான் போய் மருதாணியைக் கழுவிட்டு வரேன்!” என எழுந்து சென்று கையைக் கழுவிவிட்டு வந்தாள். தேவாவும் தன் காலை கழுவி வந்து அமர்ந்தான்.

ஆதிரை அவன் காலை எடுத்து தன் மடியில் வைத்தவள், “அழகா இருக்குல்ல தேவா?” எனக் கேட்டு அவன் உள்ளங்காலை ஒரு விரலால் வருடினாள்.

கூச்சத்தில் கால்களை மடக்கி விரித்தவன், “ஹம்ம்...” என்றான் அவளைப் பார்த்து பெருமூச்சுவிட்டு.

“என்ன... என்ன வேணுமாம்?” சிரிப்புடன் கேட்டவள் அவனுக்கு அருகே சென்று அமர, “அது... ஹ்ம்ம் நீ ப்ரக்னென்டா இருக்கல்ல ஆதி. இப்போ... அது!” என அவன் தயங்க, இவளது முகத்தில் சின்னதாய் முறுவல் வந்து ஒட்டிக் கொண்டது. சிரிப்புடன் அவன் உதட்டில் தன் உதடுகளை ஒட்டி அவன் பேச்சை நிறுத்தினாள். ஆதிரையின் ஆட்சிதான் தேவாவை மொத்தமாய் சுருட்டி நிறைத்துப் போட்டிருந்தது.

தொடரும்...

நாளைக்கு எபிலாக். சோ, கதைக்கு எண்ட்
கார்ட் போட்றலாம் மக்களே! 😛🙊ஹே... நானும் ரைட்டர் தான்... நானும் ரைட்டர் தான். கதையை முடிக்கப் போறேன் 😉😃😌

 
Well-known member
Messages
1,020
Reaction score
753
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
471
Reaction score
342
Points
63
Athi kum appu kum andha age la vandha care and affection ah love nu ivanga la mudivu pannitaga but indha athuraiyazh oda love mr sidunmoonchi devanandhan ku nu than destiny declare panni iruku athu than ipadi character la north pole south pole ah iruku ah ivanga onnu ah travel panraga ah
 
Top