• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,115
Reaction score
3,189
Points
113
நெஞ்சம் – 6 💖

அந்த சம்பவம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. ஆதிரை கலந்து கொண்ட இரண்டு நேர்முகத் தேர்விலுமே தேர்ச்சி பெற்று வேலைக்கு அழைக்கப்பட்டிருந்தாள். இருபது நாட்களுக்குள் அவளது முடிவை கூறுமாறு அவர்கள் மின்னஞ்சல் செய்திருக்க, இவளுக்கு யோசனையாய் இருந்தது.

ஒரு வேலையில் முன்பை விட சம்பளம் குறைவுதான். ஆறுமாதம் அவளது வேலைத் திறமையைப் பார்த்துவிட்டு சம்பளத்தை உயர்த்துவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.‌ மற்றொருன்றில் மாலை ஏழு மணிவரை வேலை பார்க்க வேண்டும் என்று விதிமுறைகளிருக்க, இவளால் இரண்டையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேலை இல்லாது இரு மாதங்களைக் கடத்திவிட்டாள். இதற்கு மேலும் சும்மா இருப்பது சரிவராது என மனம் உரைத்தது.

இன்னும் ஒரு வாரம் இருந்தது. வேறு எதாவது வேலை கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் சம்பளம் குறைவு என்றாலும் அந்த வேலைக்கே சேர்ந்துவிடலாம் என முடிவெடுத்திருந்தாள். ஒரு மணி நேர பயண தூரத்தில் ஒரு கிராமத்தில் அமைந்திருந்தது அந்தப் பண்ணை. எப்படி தினமும் அவ்வளவு தூரம் சென்று வர முடியும். மகனும் தனியாய் இருப்பானே என மனம் சோர்ந்துதான் போனது.

அவளது இருப்பிடத்திற்கு அருகேயே வேலை கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில் தேடி தேடி இரண்டு மூன்று நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தாள். ஒன்றிலிருந்து கூட இன்னும் பதில் வந்தபாடில்லை. பெருமூச்சுடன் அந்த மடிக்கணினியை மூடி வைத்தாள். அன்றைக்கு சனிக்கிழமை என்பதால் காலை ஒன்பதைத் தொட்டும் இன்னும் அபினவ் எழுந்திரிக்கவில்லை. நன்றாய் போர்த்திக்கொண்டு உறங்கினான்.

“ம்மா... மார்னிங் சீக்கிரம் எழுந்து வொண்டர் லா போகலாம் மா... வாட்டர் கேம்ஸ் நிறைய இருக்குமாமே. நிக்கி சொன்னா மா. நம்பளும் போகலாம் மா!” என நேற்று இவளின் மேவாயைப் பிடித்துக் கெஞ்சி கொஞ்சி கன்னத்தில் முத்தமிட்டு முடியாது என்று கூறிய ஆதிரையை சம்மதிக்க வைத்திருந்தான் மகன்.

“வேணாம் அபி... ஏற்கனவே உனக்கு கோல்ட் அதிகமா இருக்கு. இதுல வாட்டர் கேம்ஸ் வேறயா? நோவே!” என்றவள் மகனின் வாடிய முகத்தைப் பார்த்து அரை மனதுடன் சம்மதித்திருந்தாள். அவர்கள் எப்போதும் சிகிச்சை பெறும் மருத்துவரிடமும் ஒரு வார்த்தைக் கேட்டப் பின்னர்தான் மனம் சமாதானம் அடைந்தது.

அபிக்கு இரண்டு வயதிருக்கும் போது சளி பிடித்திருந்தது‌. இவள் அதை சாதாரணமாக எடுத்து கண்டு கொள்ளாமல் விட, அன்றிரவே மூச்சுத் திணறி மூர்ச்சையாகிப் போயிருந்தான் சின்னவன். அன்றைக்கு அவள் பட்ட வேதனையும் பயமும் தூங்காத இரவுகளும் இன்றைக்கும் நினைவிருக்கிறது. அதனாலே இப்போதெல்லாம் அவனுக்கு சிறு சிறு உடல் உபாதை என்றாலும் உடனே மருத்துவரை அணுகிவிடுவாள்.

தூங்கிக் கொண்டிருந்தவன் அருகே சென்று அமர்ந்தவள், “சீக்கிரமா எழுந்து வொண்டர் லா போற பையனை எங்கப்பா?” எனக் காதருகே இவள் முணுமுணுக்கவும் மகன் படக்கென எழுந்து அமர்ந்திருந்தான்.

“ம்மா... டைமாகிடுச்சா மா? கிளம்பலாமா மா?” என வாரிசுருட்டி போர்வையோடு எழுந்து நின்றவனைக் கண்டு ஆதிரையால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“டேய்... எழுந்ததும் பிரஷ் பண்ணணும், குளிக்கணும். அப்புறம் சாப்ட்டு கிளம்பணும் டா. அப்படியே கிளம்ப முடியுமா என்ன?” என அவள் மென்மையாய் கடிந்து கொள்ளும் போதே குடுகுடுவென கழிவறைக்குள் நுழைந்திருந்தான் மகன்.

இவள் ஏற்கனவே குளித்து முடித்து சமைத்திருந்தாள். அவனும் கிளம்பி வர உண்டுவிட்டு அவர்கள் பகுதியில் புதிதாய் திறந்திருந்த வொண்டர் லா விளையாட்டு திடலுக்குப் புறப்பட்டனர்.

அன்றைக்கு கீழே விழுந்ததிலிருந்து ஆதிரை இப்போதெல்லாம் வெகு கவனமாய் வண்டி ஓட்டினாள். வளைவுகளில் திரும்பும்போது ஒலிப்பானை ஒலிக்க விட மறக்கவில்லை. மேடு பள்ளங்களில் ஏறியிறங்கும் போது வேகத்தைக் குறைத்தாள். இப்படியே உள்ளுணர்வு அவளை எச்சரித்துக் கொண்டே இருந்ததில் கவனத்துடன் பயணம் செய்தாள்.

நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த விளையாட்டு திடலுக்குள் நுழைவுச் சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். ‘ஒரு நாள் கூத்துக்கு ரெண்டாயிரமா?’ என அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. இருந்தும் மகன் ஆசைபட்ட காரணத்தால் வந்திருந்தாள்.

“ம்மா... ஃபர்ஸ்ட் வாட்டர் கேம்ஸ் மா. தென் ட்ரை கேம்ஸ் மா!” என அவன் உற்சாகத்துடன் குதிக்க, ஆதிரை சுற்றிலும் விழிகளை மேய விட்டாள். புதிதாய் திறந்திருந்தபடியால் ஊரில் பாதி பேர் குடும்பத்துடன் வருகை தந்திருந்தனர்.

பொருட்களைப் பாதுகாப்பாக அதற்குரிய இடத்தில் வைத்தவள், உடையை மாற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள். பெரிய பெரிய விளையாட்டுகளைக் கைகாட்டியவனை அதட்டி முதலில் சிறியவற்றில் நுழைந்தாள். இவர்களுக்கு முன்னே வரிசையில் ஒரு சாரர் நின்றிருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமா இருக்க, அதற்கு ஏற்றது போல பாதுகாப்பு வசதிகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

ஒவ்வொரு விளையாட்டிற்கும் குறைந்தது ஐந்து பயிற்சியாளர்கள் நின்றிருந்தனர். செயற்கையாய் தயாரிக்கப்பட்ட கடற்கரை (வேவ் பூல்) முன்னே நின்றவளின் முகம் மலர்ந்தது. அவளுக்கு நினைவு தெரிந்து ஒரே ஒருமுறை மெரீனா கடற்கரைக்குச் சென்றிருக்கிறாள். அன்றைக்கு அவளுடைய அனுபவம் வெகு மோசம். குப்பையும் கூளமும் மனித கழிவுகளும் என அசுத்தமாய் இருந்த நீரில் காலை நனைக்கவே அருவருப்பாய் இருக்க, அதிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் ஆசையே விட்டுப் போயிருந்தது.

ஆனால் இங்கோ பளிங்கு போல தெளிவான நீர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சுத்தமான மணல் என அத்தனை அழகாய் இருந்தது. வேகமாய் வந்த அலைகள் அவர்களை வாரிச் சுருட்டிக் கொள்ள, மகனும் தாயும் அதில் இழுபட்டு சுருண்டு விழுந்து பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்திருந்தனர்.

அபி உற்சாகத்துடன் உள்ளிறங்கி நீந்த, இவளும் அவனுடன் விளையாடினாள். நீண்ட நெடிய நாட்கள் கழித்து சுற்றம் மறந்து கவலைகள் துறந்து மகனுக்கு இணையாக ஈடுபாட்டுடன் விளையாடினாள். அப்படியே அருகே இருந்த நீச்சல் தடாகத்திற்கு சென்றனர்.

அங்கே தண்ணீர் எப்படி இருக்கிறது என இவள் ஆராய, “டெய்லி தண்ணீ மாத்திடுவோம் மேம்!” என ஊழியர் ஒருவர் கூற, மெல்லிய புன்னகையுடன் தலையை அசைத்தவள், தண்ணீரில் நனைந்தாலும் நீர் ஊடுருவாத வகையிலே உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்திருந்தாள். இடுப்பளவு நீரே இருக்க, அவனை நீந்தவிட்டு வேடிக்கைப் பார்த்தாள்.

சேம்பேறி அருவியில் சிறிது நேரம் விளையாடி பின்னர் செயற்கை மழையில் இசையுடன் நடனமாடி களைத்திருந்தாலும் முகம் மலர்ந்தே இருந்தது.

“போதும் அபி, ரொம்ப நேரம் தண்ணில விளையாடிட்டோம். ட்ரை கேம்ஸ் விளையாடலாம்!” என அவள் உடையிலிருந்த தண்ணீரை உதற, “ம்மா... லாஸ்டா ட்விஸ்டர்ஸ் மட்டும்!” என அவன் கைகாட்டியதை அண்ணாந்து பார்த்தாள் ஆதிரை. வெகு உயரத்திலிருந்து வளைந்து நெளிந்த பாதையில் பயணம் செய்து அப்படியே பொத்தன நீரில் விழுந்து கொண்டிருந்தனர் சிலர்.
இவளுக்கு பயமாய் போய்விட்டது.

“அபி... கண்டிப்பா ட்ரை பண்ணணுமா டா?” அவள் யோசனையுடன் கேட்க, “ப்ளீஸ் மா... போகலாம்மா!” என அனத்தியே அவளை அழைத்துச் சென்றிருந்தான். கீழிருந்து பார்க்கவே பயங்கரமாக இருந்த வளைவுகள் மேலே செல்லவும் இன்னுமே பயப்பட வைத்தது.

செல்ல வேண்டுமா என இவள் யோசிக்க, “அங்கிள், நெக்ஸட் நாங்கதான் வெயிட் பண்றோம். ட்யூப் எங்களுக்குத்தான்!” என அபினவ் சண்டையிட்டு பாதுகாப்பு வளையத்தை வாங்குவதைப் பார்த்தவளுக்கு மறுக்க மனம் வரவில்லை.

இவர்களது முறை வர, ஆதிரை பயத்தோடு அபியின் கையைப் பிடித்துக் கொள்ள, அவன் ஆ ஊ எனக் கத்த, இருவரும் அந்த வளைவு நெளிவுகளில் நுழைந்து அந்தப் பெரிய நீர் தடாகத்தில் பொத்தென விழ, அவளுக்கு அப்போதுதான் உயிரே வந்தது.

“ஒன்ஸ் மோர் மா!” எனக் கேட்டவனை அதட்டி உருட்டி, “ட்ரை கேம்ஸ் ட்ரை பண்ணலாம்!” என இழுத்து வந்திருந்தாள். இங்கேயும் நிறைய விளையாட்டுகள் விளையாடினர்.

மேவ்ரிக் எனப்படும் விளையாட்டில் தலைகீழாக சுற்றி கீழே இறங்கும் போது ஆதிரைக்கு காலையில் உண்ட உணவு தொண்டை வரை வந்திருந்தது. அவள் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து ஆசுவாசம் செய்ய, “ம்மா... ஆர் யூ ஓகே மா?” எனப் பாவமாய்க் கேட்டு தண்ணீரை நீட்டினான் அபினவ். அவள் சில பல நிமிடங்களில் தன்னை மீட்டிருந்தாள்.

“நான் ஓகே டா...” என ஆதிரை புன்னகைக்க, இவன் முகம் தெளிந்தது. மீண்டும் ஆபத்தில்லாத சிறு சிறு விளையாட்டுகள் விளையாடினர்.

“ம்மா...பசிக்குது மா!” களைத்த முகத்துடன் அபி வயிற்றைத் தடவ, இவளுக்கு முறுவல் பிறந்தது. பொருட்கள் வைத்திருக்கும் இடத்திற்கு சென்று கைப்பையை எடுத்துக்கொண்டு உடையை மாற்றிவிட்டு அங்கிருந்த உணவு விடுதிக்குள் நுழைந்தனர். அவனுக்கும் தனக்கும் உணவை வாங்கி வந்தாள் ஆதிரை.

அனைத்து மேஜைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்க, மெதுவாக நடந்து நிழலான பகுதியில் அமர்ந்து இருவரும் உண்டனர்.

“அம்மா... ஐ என்ஜாய்ட் மா. சோ ஹேப்பி. ரொம்ப நாளைக்கு அப்புறம் நீ என்கூட நிறைய நிறைய டைம் ஸ்பெண்ட் பண்றியிருக்க!” என்றவனை இவள் கனிவாகப் பார்த்திருந்தாள்.

உண்டு முடித்தவள், “ஐ யம் சோ டயர்ட் அபி. விளையாண்டது போதும் டா. கிளம்பலாமா?” என்றவளிடம் இவன் முடியாது எனத் தலையை அசைத்தாள்.

“ப்ம்ச்... போங்க மா!” என்றவன் அவர்களுக்கு அருகே நடந்து சென்றவனைப் பார்த்து, “ம்மா... நமக்கு ஹெல்ப் பண்ண அங்கிள் மா!” எனக் கூறி, “ஹாய் அங்கிள்!” என தேவநந்தனையும் கத்தி அழைத்திருந்தான்.

ஆதிரை யாரெனத் திரும்பிப் பார்க்க, தேவா இவர்களை நோக்கி வருவது தெரிந்தது. இவள் சம்பிரதாய புன்னகையை உதிர்க்க, அவளை முறைத்தவன் உதடுகளை இறுகப் பூட்டிக் கொள்ள, ‘போடா... போ!’ என இவளும் முகத்தை திருப்பினாள்.

அவனின் எதிர்வினை இப்படியாகத்தான் இருக்குமென ஆதிரையும் கணித்திருந்தாளே.
வந்தவன் அபினவைப் பார்த்து மெதுவாய் புன்னகைக்க, ஆதிரையும் அவனைப் பார்த்தாள்.

‘உதடு சுளுக்கிக்கப் போகுது!’ அவள் மனம் கேலியில் இறங்கியது.

“அங்கிள், நீங்களும் வந்து இருக்கீங்களா? எப்போ வந்தீங்க? வாட்டர் கேம்ஸ் விளையாடுனீங்களா?” என இவன் ஆர்வமாய்க் கேட்க, தேவா இளமுறுவலுடன் பதிலளித்தவாறே கையிலிருந்த ஐந்து வயது குழந்தையைக் கீழே இறக்க முயல, “ப்பா...” என அவள் சிணுங்கி இறங்க மறுத்தாள். பின்னர் அவளை நன்றாய் தூக்கினான். அவனது மகளாக இருக்கக் கூடுமென ஆதிரை எண்ணினாலும் இடையில் எதுவுமே பேசவில்லை.

“ஹே... ஆதி! வாட் அ சர்ப்ரைஸ்? உன்னை இங்க மீட் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை நான்!” திடீரென்று தனக்குப் பின்னிருந்து கேட்ட குரலில் அதிரையின் இதயம் ஒரு நொடி துடித்தடங்கிற்று.

உதடுகளை கடித்து அவனாக இருக்கக் கூடாது என்ற நப்பாசையுடன் திரும்பி பார்க்க, புன்னகைத்த முகமும் இதழ்களுமாக நின்றிருந்தான் ஒரு இளைஞன். வெள்ளை வெளீரென்ற நிறம் இன்னுமே கூடிப் போயிருந்தது. வயதிற்கு ஏற்ப மெலிந்த உடல் மாறி இப்போது ஆகிருதியாய் இருந்தான். தாடி மீசை இன்னுமே வசீகரத்தை கூட்டின. அந்த்க குரலக்குச் சொந்தக்காரன்
அவனே தான் என்பதை விழி பார்த்து மனம் ஏற்றுக் கொள்ள, தனக்குள் எழுந்த முதல்கட்ட அதிர்ச்சியை மறைத்தவள் முயன்று முறுவலைத் தந்தாள்.

“ஆதி... ஃபோன் நம்பரை மாத்தீட்டு ஒரு மெசேஜ் போட்றதுக்கு என்னடி? கிட்டத்தட்ட ஆறு வருஷமாச்சு உன்கிட்ட பேசி? எப்போ லண்டன்ல இருந்து இந்தியா வந்த? இப்போ எங்க இருக்க? உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் நான்!” என உரிமையாய்க் கேட்டு அவள் தோளில் கை வைத்தான் அந்த இளைஞன்.

“அப்பு... நான் வந்து ரொம்ப வருஷமாச்சு. நீ எப்படி இருக்க? உன் வொய்ஃப் எங்க?” எனக் கேட்டாள் தன்னை மீட்டு புன்னகையுடன். மெதுவாய் அவன் அமைப்பிலிருந்து விலகினாள்.

“நான் வெகேஷனுக்காக வந்தேன். வொய்ஃப் கூடதான் வந்தா. ஒன் மினிட் கூப்பிட்றேன்!” என்றவன் திரும்பி நின்று, “ரூபி... கம் ஹியர்!” என ஒரு பெண்ணை அழைத்தான். அவளும் அருகே நான்கு வயது பையனுமாக இவர்களை நோக்கி வந்தனர்.

“அப்புறம் மேரேஜ் ஆகிடுச்சா? ரெண்டு பேபி கூட இருக்கா? ஒரு வார்த்தை என்னை இன்வைட் பண்ணலை நீ!” அவன் கடிய, ஆதிரை அருகே இருந்த தேவநந்தனைத் தவிப்புடன் திரும்பிப் பார்த்துவிட்டு, “உன்னோட நம்பர் மிஸ்ஸாகிடுச்சு டா!” என்றாள் இயல்பாக இருக்க முயன்று தோற்ற குரலில்.

“இட்ஸ் ஓகே... ப்ரோ என்ன பண்றாரு?” என்றவன் தேவாவின் அருகே சென்று, “ஹாய் ப்ரோ...” எனக் கையை நீட்டினான்.

தேவா இப்போது ஆதிரையை உறுத்து விழிக்க, “ப்ளீஸ்...” என்றாள் உதடுகளை மட்டும் அசைத்து. எதையும் சொல்லி விடாதே என்ற இறைஞ்சல் முகம் முழுவதும் இருந்தது.

“ஹாய்...நைஸ் டூ மீட் யூ!” என தேவாவும் புதியவனிடம் கையைக் குலுக்கினான். ஆதிரையின் முகத்தில் நிம்மதி விரவியது.

“பேபி நேம் என்ன?” என தேவாவின் தோளிலிருந்த குழந்தையின் கன்னத்தை இவன் கிள்ள, அவள் கோபமாய் தட்டிவிட்டாள். அதில் அப்புவின் முகத்தில் புன்னகை பூத்தது.

“ஹே... ஆதி, என்னடி பேபி கூட உன்னை மாதிரியே பிஹேவ் பண்றா!” என்றான் பற்கள் தெரிய புன்னகைத்து. ஆதிரை அவனை மென்மையாய் முறைத்தாள்.

“உங்க பேரென்ன சேம்ப்?” என அபினவின் கன்னத்தை அவன் கிள்ள, “அபினவ் அங்கிள்...” என்றான் அவன். ஆதிரை அவர்கள் இருவரையும் உணர்வு துடைத்த முகத்துடன் பார்த்தாள்.

“நைஸ் நேம்...” என அவனது தோளில் அப்பு கையைப் போட, ரூபியும் அவர்களது மகனும் வந்துவிட்டனர்.

“ஆதி... ஷீ இஸ் மை வொய்ஃப் ரூபி அண்ட் அவன் என்னோட பையன் அனிருத்!” என அவர்களை அப்பு அறிமுகம் செய்ய, ஆதிரை அந்தக் குழந்தை வாஞ்சையுடன் பார்த்து தூக்கி கன்னத்தில் முத்தமிட்டாள். இத்தனை நேரம் அவள் முகத்திலிருந்த பாவனை முற்றிலும் மாறியிருந்தது.

அப்புவின்‌ முகம் கனிந்தது. ரூபி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள். மாநிறத்தில் அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாது இருந்தாலும் முகம் களையாக இருந்தது. கிராமத்துப் பெண் என பார்த்தவுடனே கூறிவிடும் தோற்றம். நவநாகரீக உடை அணிந்திருந்தாலும் கூட தனித்து தெரிந்தாள்.

“ரூபி... நான் லண்டன்ல இருக்கும் போது எனக்கு ஆதின்னு ஒரு ஃப்ரெண்டை இருக்கான்னு சொன்னேன் இல்ல. ஷீ இஸ் வெரி குட் கம்பேனியன் ஆஃப் மைன்!” என அவள் தோள் தட்டியவனை முறுவலோடு பார்த்தாள் இவள்.

“கல்யாணம் பண்ண மாட்டேன், பண்ண மாட்டேன்னு சொல்லி முத ஆளா நீதான்டா மேரேஜ் லைஃப்ல அடியெடுத்து வச்சிருக்க? ஹம்ம்!” போலியான கோபத்துடன் தன்னைக் கிள்ளியவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.

“ஆமா... நான் வாலண்டியரியா போய் வண்டில ஏறுனேன் பாரு. எல்லாம் என் மம்மியும்‌ கிராண்ட்‌ மம்மியும் பண்ண சதி!” என்றவனை ரூபி முறைத்தாள்.

தொண்டையைச் செருமியவன், “ஹம்ம்... மேரேஜ் லைஃபும் நல்லாதான் இருக்கு!” என்றான் மனைவியை ஓரக் கண்ணால் நோட்டமிட்டபடியே.

“பிழைச்சுக்குவா டா!” அவன் முதுகில் மெலிதாய் அடித்தாள் இவள்.

“சரி ஆதி, எங்களுக்கு டைமாச்சு. ஒரு நாள் உன் வீட்டுக்கு வரோம். ஆமா எங்க வொர்க் பண்றீ நீ?” எனக் கேட்டான்.

“உழவர் துணை பால் பண்ணைல!” தேவாவிடமிருந்து பதில் வர, இவள் தயக்கத்துடன் அவனைப் பார்க்க, முகம் சாதாரணமாக இருந்தாலும் அவன் உள்ளுக்குள்ளே கோபத்தை அடக்குவது இவளுக்குப் புரிந்தது. அப்பு கிளம்பியதும் அவன் தன்னை கடித்து துப்ப போகிறான் என்பதை உணர்ந்தே இருந்தாள் பெண்.

“சூப்பர்... நீங்க என்ன வொர்க் பண்றீங்க ப்ரோ?” என தேவாவிடம் அப்பு கேட்க, “அந்த பண்ணையோட மேனேஜிங் டேரக்டர் நான்!” என்றான் ஆதிரையை அழுத்தமாய்ப் பார்த்து.

“வாவ்... ரெண்டு பேரும் ஓன் ப்ளேஸ்ல வொர்க் பண்றீங்களா? சூப்பர்!” என்றவன் ஆதிரையின் இலக்கத்தையும் வீட்டு முகவரியையும் பெற்றுக் கொண்டான்.

“வரேன் ஆதி!” என்றவன் அவளை அணைக்க, அவளது மனம் திடுக்கிட்டாலும் இவனின் அணைப்பிற்கு பழகிப் போன உடல் இயல்பாய் அதை ஏற்றிருந்தது.

தேவாவையும் அணைத்துவிட்டு அவன் மனைவியோடு நகர, ஆதிரை தேவாவின் முகத்தைப் பார்க்க வெகுவாய் தயங்கினாள். அவனது அனுமதியின்றி இத்தனை பெரிய பொய்யில் அவனையும் கூட்டுச் சேர்த்துவிட்டாள். சும்மாவே அவன் ஆடுவான். எப்போது என்று காத்திருந்தவனுக்கு இவளே சலங்கையும் கட்டி விட்டிருக்க, இப்போது கூண்டில் சிங்கத்தோடு அகப்பட்ட பாவமான ஜீவனின் நிலையை ஒத்திருந்தாள்.

குழந்தையைக் கையிலிருந்து இறக்கி விட்டவன், “அத்தை கிட்டே போ ராகினி!” என்றான், அபினவையும் அவளுடன் அனுப்பி வைத்தான். தூரத்தே அவர்களை பார்த்து கையை அசைத்த பிரதன்யாவை நோக்கி குடுகுடுவென சின்னவள் ஓடினாள். அபியும் புதிய தோழி கிடைத்த மகிழ்ச்சியில் அவளோடு ஓடினான்.‌ அவனுக்கு ஆண்களைவிட பெண் நட்பில் நாட்டம் அதிகமென ஆதிரையே சிரித்திருக்கிறாள்.

இப்போது வெகு நிதானமாக அவள்புறம் திரும்பியவன், “வாட் தி ஹெல் மிஸ் ஆதிரையாழ்? ஹம்ம்... யாரைக் கேட்டு நீங்க என்னை உங்க‌ ஹஸ்பண்ட்னு சொன்னீங்க? ஒரு எலிஜிபிள் பேச்சிலர் நான். உங்களுக்கு ஹஸ்பண்டா ஆக்ட் பண்றதுக்குத்தான் நான் ஃபேமிலியோட வொண்டர்லா வந்தேனா? ஹம்ம்...இன்னைக்கு ரோட்ல அவர் முன்னாடி ஆக்ட் பண்ண வச்சீங்க சரி. நாளைக்கே பண்ணைக்கு வந்தா நான் உங்களோட புருஷனா நடிக்கணுமா? அதையும் இப்பவே சொல்லிட்டா பெட்டர் இல்ல?” அவன் வார்த்தைகளைக் கடித்து துப்ப, அவமானத்தில் சிவந்துவிட்ட முகத்தோடு அவனைப் பார்த்தாள் ஆதிரை.

“ஐ வாண்ட் ஆன்சர்‌ மிஸ் ஆதிரையாழ். உங்களோட பெர்சனல் லைஃப்ல என்னை இன்டர்பை பண்ணி இருக்கீங்க. என்னோட அனுமதி கூட கேட்கலை. ஹம்ம்... ஒரு ஆட்ல நடிக்க சொன்னதுக்கு உங்களால முடியாது. பட் நான் ரியலா உங்களுக்கு ஹஸ்பண்டா நடிக்கணும். ஹவ் சீப் பிஹேவியர்!” என அவன் மேலும் பேசும் முன்னே, “நான் நம்ப பண்ணைல ரீஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன்” என்று விட்டாள். அவனது பேச்சு மொத்தமும் நொடியில் நின்று போனது.

“வாட்... கம் அகைன்!” அவன் சுருங்கிய நெற்றியுடன் கேட்டான்.

“நான் ரீஜாய்ன் பண்றேன்!” என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்.

“பைன்‌...” என்றவன் பிடரியைக் கோதி கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான். ஆதிரை அவனைத்தான் பார்த்திருந்தாள். அவள் முகத்தைப் பார்க்கவில்லை தேவா.

“சாரி!” என்றாள் தயங்கியபடியே.

“இட்ஸ் ஓகே, நோ ப்ராப்ளம். உங்க முடிவுல மாற்றம் இல்ல தானே?” என்றான் உறுதிப்படுத்தும் விதமாக.

‘கெமிலியான்... பச்சோந்தி. எப்படி இவனால் இப்படி இருக்க முடிகிறது!’ என மனம் அவனைத் திட்டித் தீர்த்தது.

“யெஸ்... ரீஜாய்ன் பண்றேன்!” என்றவள், “அது என்னோட ஃப்ரெண்ட் அவன்!” என தன் தவறுக்கு வேறு அவள் விளக்கம் கொடுக்க முனைய, “தட்ஸ் நன் ஆஃப் மை பிஸ்னஸ் மிஸ் ஆதிரையாழ். ஐ டோன்ட் நீட் எனி எக்ஸ்ப்ளனேஷன்!” என முகத்தில் அடித்தாற் போல அவன் கூறிவிட, மீண்டுமொரு முறை அவமானப்பட்டாள் ஆதிரை. அவளுக்கே முகத்தை எங்கேனும் வைத்துக் கொள்ளலாம் என்பது போலிருந்தது.

“நாளைல இருந்து பண்ணைலை மீட் பண்ணலாம்!” அவன் கூறி அகல முனைய, “நோ... நோ மிஸ்டர் தேவா!” என்றுவிட்டு நாக்கை கடித்தவள், “நோ சார்!” என்றாள். அவனது காரப்பார்வை இவளைத் தொடர்ந்தது.

“இனிமே உங்களோட எம்ப்ளாயர் நான்தானே. கிவ் ரெஸ்பெக்ட் மிஸ் ஆதிரையாழ்!” என அவன் அழுத்தமாகக் கூற, இவள் அவன் முகத்தைப் பார்க்காது தலையை அசைத்தாள்.

“எனிதிங்க் எல்ஸ்?” அவன் கேட்க,

“நான் மண்டேல இருந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன். அண்ட் எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு!” என்றாள் முணுமுணுப்பாக.

“வாட்?” அவன் குரலில் அப்பட்டமான எரிச்சல்.

அதில் ரோஷம் வரப்பெற்றவள், “எனக்கு சேலரி இன்க்ரீமெண்ட் வேணும். தென் தர்ஷினி கோமதி வேலை பார்க்கலைன்னா என்னைத் திட்ட கூடாது. என்னோட வேலைல நான் கரெக்டா இருப்பேன் சார். இதுவரைக்கும் இருந்து இருக்கேன். அது உங்களுக்கே தெரியும். ஈவ்னிங் ஐஞ்சு மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட வேலை பார்க்க மாட்டேன்.
தேவையில்லாத ஆட்ல எல்லாம் என்னால நடிக்க முடியாது!” என்றவளை அவன் கேலியாகப் பார்க்க, கடைசி வரியில் குரல் உள்ளே சென்றுவிட்டது.

“பைன்... அவ்வளோதானா? இல்ல மேடம் வேற எதுவும் கண்டிஷன் வச்சு இருக்கீங்களா?” அவன் நக்கலாய்க் கேட்க, “அவ்வளோ தான்!” என்றாள் ரோஷமாய்.

“வெல், எனக்கு ஓகே. வேற எதுவும்னா ஆஃபிஸ்ல பேசிக்கலாம்!” என அவன் நடக்க, இவளும் கீழே வைத்திருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு அவன் பின்னே நடந்தாள். தேவா குடும்பத்தின் இளைய பட்டாளங்கள் அங்குதான் குழுமியிருந்தனர். அவனது தம்பி ஹரிநந்தனுக்கு மட்டுமே ஆதிரை பரிட்சயம். அதனால் அவன் இவளைப் பார்த்து புன்னகைக்க, முறுவலித்தவள், கீழே ராகினியோடு அமர்ந்து விளையாடும் அபியை அழைத்தாள்.

“ம்மா...‌ராகியோட விளையாடீட்டு போகலாம் மா!” அவன் தாயின் முகம் பார்க்க, “இன்னொரு நாள் விளையாடலாம் அபி. இப்போ கெட் அப், கிளம்பலாம்!” என்றாள் அதட்டலாய். அதில் அவன் முகம் வாடிப் போனது.

“பாய் ராகி... மிஸ் யூ!” என சின்னவள் கன்னத்தில் முத்தமிட்டு அபி எழுந்து நடக்க, சம்பிரதாயத்திற்காக இவள் அனைவரையும் பார்த்து தலையை அசைத்துவிட்டு தேவாவை நோக்க, அவன் இவளை அசட்டை செய்தான்.

‘போடா...’ மனதிலே அவனைத் திட்டிக்கொண்டு மகனோடு வெளியேறியிருந்தாள். ஒருவழியாய் இருவரும் வீடு சேர்ந்தனர்.

குளித்து முடித்து அபி விளையாண்ட களைப்பில் உறங்க முயல அவனை அதட்டி உண்ண வைத்தவள், தானும் பெயருக்கு உண்டு முடித்து படுக்கையில் விழுந்தாள். மகன் சில பல நிமிடங்களிலே உறங்கியிருக்க, இவள் உறங்காது விட்டத்தையே வெறித்திருந்தாள்.

கண்களை மெதுவாய் மூடவும், சிரித்த முகமாய் அப்புவும் அவன் மனைவி
குழந்தையும் வந்து நிற்க, படக்கென கண்ணை திறந்திருந்தாள். எழுந்து சென்று தைலத்தை தேடி எடுத்து நெற்றியில் தடவியவள், தலையணையைக் கட்டிக்கொண்டு உறங்கிப் போனாள்.

தொடரும்...

 
Well-known member
Messages
385
Reaction score
270
Points
63
Adei yarachum ethachum ozhunga solluriga la da yetho subtitle illama movie pakkura mathiri yae iruku .
Deva paesurathu ah ketkum pothu avolo doubt varuthu aana avan brother hari ku mattum eppudi ival ah theriyuthu athuvum andha deva nan bachelor nu vera solluran aniyathuku mandai ah kaya vaikuraga da pa
 
Top