• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,215
Reaction score
3,604
Points
113
நெஞ்சம் – 59 💖

ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீடே ஆழ்ந்த அமைதியில் இருந்தது. காலைக் குளிர் குளுகுளுவென உள்ளே நுழைய, தேவாவும் ஆதிரையும் ஒரு போர்வையில் சுருண்டுப் படுத்திருந்தனர்.

எட்டு மணியைக் கடந்தும் இருவருக்கும் உறக்கம் தெளியவில்லை போல. அறையில் துயின்று கொண்டிருந்த அபினவ் எழுந்துவிட்டான். அவன் கண்கள் தாயைத் தேடின.

அவள் சமையலறையில் இருப்பாள் என எண்ணி வெளியே வந்தவன் தேவாவும் ஆதிரையும் கூடத்தில் படுத்திருப்பதைக் கண்டு அவர்களுக்கு அருகே சென்றான். பின்னிருந்து தேவா மனைவியை அணைத்திருக்க, அபி முன்பக்கமாய் அவளை அணைத்துக் கையைப் போட்டு படுத்தான்.

சில பல நிமிடங்களில் வெறுமனே மூடியிருந்த கண்ணை விழித்தவன், “ம்மா...” என்றான் ஆதிரை இமையைப் ஒற்றைக் கையால் பிரித்துவிட்டு.

“ஹம்ம்... தூங்கு அபி!” என்ற அதட்டலோடு அவன் கையை எடுத்துவிட்டாள் அவள்.

“ம்மா... எழுந்திரும்மா. எய்ட் ஓ க்ளாக் ஆகிடுச்சு. எனக்குப் பசிக்குது!” அபி அவளுடன் ஒண்டியபடியே கூறினான்.

அந்தக் குரலில் இமையைப் பிரித்தவள், “பசிக்குதா என் தங்கத்துக்கு?” சின்ன புன்னகைப்புடன் வினவினாள்.

“ஆமாம்மா... வயித்துல சத்தம் கேட்குதும்மா!” என அவன் உதட்டைப் பிதுக்க, இவளுக்கு சிரிப்பு வந்தது.

“சரி அம்மா பூஸ்ட் கலக்கித் தரேன். நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா!” என்றாள். அவன் குடுகுடுவென ஓட, தேவாவின் கையை மெதுவாய் எடுத்துவிட்டவள் எழுந்து அமர்ந்தாள். இரண்டு கைகளாலும் முகத்தையும் கண்ணையும் தேய்த்தாள். பின்னர் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு அவனுக்கு பாலைக் காய்ச்சி சத்துமாவைக் கலந்து கொடுத்தாள். தனக்கும் ஒரு குளம்பியைக் கலக்கிக் கொண்டாள். தேவா எழவில்லை‌.

‘மிஸ்டர் பெர்பெக்ட் இன்னும் தூங்குறாரே! இந்நேரம் சண்டேன்னு கூடப் பார்க்காம எழுந்து வேலைக்கு ஓடிருப்பாரே!’ என கேலியாய் நினைத்தவள், “அங்கிளைப் போய் எழுப்பு அபி. அவருக்கு வொர்க்குக்கு டைமாச்சு!” என அபியை அனுப்பினாள்.

இவன் சென்று தேவாவை எழுப்ப, “என்ன டா?” எனக் கேட்டவன் எழுந்தமர்ந்தான்.

“அம்மாதான் எழுப்ப சொன்னாங்க அங்கிள்...” தேவாக்கு அருகே நின்றான்.

“என்னைத் தூக்கிவிடு!” என அவன் கையைக் கொடுக்க, சின்னவன் சிரிப்புடன் அவனைப் பிடித்து தூக்க முயன்றான்.

“அங்கிள்... ஹம்ம்... கொஞ்சம் லூசா விடுங்க!” என அவன் மூச்சைப் பிடித்து பெரியவனை இழுக்க, ஆதிரை என்ன செய்கிறார்கள் என எட்டிப் பார்த்தாள்.

தாயைக் கண்டதும், “ம்மா... வாங்க, அங்கிளை எழுப்பிவிடலாம்!” என அவளையும் அழைத்தான் சின்னவன்.

“என்ன விளையாட்டு இது?” என சிரிப்புடனே அவளும் தேவாவின் மற்றொரு கையைப் பிடித்து தூக்க முயன்றாள். அவன் உயரத்திற்கு ஏற்ற நல்ல உடல்வாகு. இருவராலும் அசைக்க கூட முடியவில்லை.

“போங்க.‌.. என்னால முடியலை!” ஆதிரை பின் வாங்க, அபி விடவில்லை. மீண்டும் முயற்சிக்கவும் அவனுக்காகப் பார்த்து தேவா எழுந்துவிட்டான்.

“ம்மா... ஐ யம் ஸ்ட்ராங்க் பாய்!” என அவன் புஜத்தைக் காண்பித்து பற்கள் தெரிய கூறவும், ஆதிரை அவன் கையில் வலிக்காது மெல்லமாய் கிள்ளினாள்.

“ரொம்ப ஸ்ட்ராங்க்தான் போ...” என அவள் கூறும்போதே தேவா முகம் கழுவி வந்தான். மனைவி அவனுக்கு கொடுத்த குளம்பியை ஆற அமர உட்கார்ந்து பருகினான். ஆதிரை காலையில் என்ன சமைப்பது என யோசித்தபடியே குளிர்சாதன பெட்டியிலிருக்கும் பொருட்களை துழாவினாள்.

“தேவா... என்ன குக் பண்ணட்டும். சிக்கன் வாங்கி பிரியாணி பண்ணட்டுமா?” என கணவனிடம் கேட்டாள்.

“நோ...‌ மார்னிங் எதாவது குக் பண்ணு. லஞ்ச்க்கு வெளிய போகலாம்!” அவன் கூற,

“ஏன்... நீங்க இன்னைக்கு வேலைக்கு போகலையா?” எனக் கேட்டாள் ஆதிரை.

“இல்ல... போகலை. இனிமே சண்டேஸ் லீவ் எடுக்கலாம்னு இருக்கேன். வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கது பிடிக்கலை. உங்க கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணணும்ல?” எனக் கேட்டவனைப் புருவம் உயர்த்திப் நம்பாமல் பார்த்தாள் மனைவி.

“ம்ப்ச்... உண்மை டீ!” என அவளருகே எழுந்து வந்தான்.

“உண்மையா இருந்தா சந்தோஷம்!” என உதட்டை வளைத்துக் கொண்டே சமைக்கச் சென்றாள். இவன் தோளைக் குலுக்கினான்.

அபி தேவாவின் அலைபேசியில் ஏதோ விளையாட கேட்க, “ஃபோன்ல எனிடைம் கேம் விளையாடக் கூடாது அபி. வா, டீவி பார்க்கலாம்!” என சின்னவனை அழைத்துச் சென்று அவனுக்கு ஏற்றது போல திரைப்படத்தை ஒலிக்கவிட்டான். இருவரும் அமர்ந்து பார்க்க, தேவாவின் அலைபேசி இரண்டு முறை அழைத்தது.

எதுவும் அவசர அழைப்பாக இருக்கும். சுபாஷ் தான் அலுவல் சம்பந்தமாக அழைத்திருப்பான் என எண்ணியபடியே அலைபேசியை எடுத்துப் பார்த்தான். ஹரிதான் அழைத்திருந்தான்.

“சொல்லு ஹரி...” எனக் கேட்டான் இவன்.

“ப்ரோ... செகண்ட் ரிலீஸ் பண்ணிட்டேன் நான். மார்னிங்தான் பையன் பொறந்திருக்கான்!” ஹரியின் குரலில் தேவாவின் முகம் மலர்ந்தது.

“கங்கிராட்ஸ் டா. எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க? ஜனனி எப்படி இருக்கா?” எனக் கேட்டான்.

“பேபியும் மதரும் சேஃப் ப்ரோ. சி-செக்ஷன் தான்... இப்போதான் வார்ட்க்கு மாத்தப் போறாங்க. சகாயம் ஹாஸ்பிடல்ல தான்!” அவன் பதிலளிக்க,

“ஓகே டா... நாங்க வர்றோம்!” என அழைப்பைத் துண்டித்தவன் நேரே மனைவியிடம் சென்று கூறினான். அவளது முகத்தில் புன்னகை படர்ந்தது.

“கெட் ரெடி ஆதி... போய் பார்த்துட்டு வரலாம்!” என கூறியபடியே அபியை அழைத்து அவனையும் கிளப்பி தானும் தயாராகினான். ஆதிரை சமைத்து முடித்தவள், குளித்துவிட்டு ஒரு புடவையை அணிந்தாள். மூவரும் உண்டுவிட்டு கிளம்பினர்.

ஆதிரையின் கையிலிருந்த பெரிய பையைப் பார்த்தவன், “பேக்ல என்ன வச்சிருக்க ஆதி?” எனக் கேட்டவாறே மகிழுந்தை இயக்கினான்.

“டிஃபன் தேவா... யாரும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க இல்ல? சரி அதான் இட்லியும், சாம்பாரும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செஞ்சு பேக் பண்ணிக்கிட்டேன்!” அவள் பதில் கூற, இவன் முகத்தில் சின்னதாய் புன்னகை வந்தது. அவன் இதையெல்லாம் யோசிக்கவில்லை. ஆதிரை உணவை மட்டுமல்ல ஜனனிக்கு வேற என்னென்ன தேவைப்படலாம் என யோசித்து அதையும் செல்லும் வழியிலே வாங்கிக் கொண்டாள்.

இவர்கள் உள்ளே செல்ல பிரசவப் பகுதியில் கோபால் வெளி இருக்கையில் அமர்ந்திருந்தார். மகனை இரண்டு வாரங்கள் கழித்துக் கண்டதும் அவருக்கு என்னவோ போலானது. பிறந்தது முதலே பிரியாத மகனைத் தனித்திருந்ததில் அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.

“வா தேவா... வாம்மா!” என்றவர் வந்து அவன் கையைப் பிடித்தார். அவர் கைகளின் மெல்லிய ஸ்பசரித்தை இவனும் உணர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

“உள்ளேதான் இருக்கா ஜானு, போய் பாருப்பா!” என அவர் கூறவும், இவர்கள் மூவரும் அறைக்குள் நுழைந்தனர்.

ஜனனி, அவளது தாய் மற்றும் பொன்வாணியும் அங்குதான் இருந்தார். தேவா தாயைப் பார்க்காது நேரே குழந்தையிடம் சென்றுவிட, அவர் முகம் வாடியது. இரண்டு வாரத்திலே மகன் இளைத்துவிட்டான். இவள் சரியாய் உணவு சமைத்துக் கொடுக்கிறாளா? இல்லையா? என மனம் பதறிற்று அவருக்கு. இத்தனை நாட்கள் கண்ணில் படாததது கருத்திலும் பதியவில்லை என்பது போல முறுக்கிக் கொண்டிருந்தவரால் தேவாவை கண்ணுற்றதும் அப்படி இருக்க முடியவில்லை . என்னவோ அடக்க முடியாத அழுகை வரப் பார்த்தது. சட்டென பிரிவுத் துயரொன்று அவரது தொண்டையை அடைத்தது.

ஜனனி தேவாவைப் பார்த்து புன்னகைத்து, “வாங்க மாமா... வாங்க கா!” என்றாள்.

“ஹம்ம்...” இவன் தலையசைப்புடன் குழந்தையைப் பார்த்தான். ரோஜா வண்ணத்தில் ஹரியைப் போல முக அமைப்பைக் கொண்டிருந்தான் சின்னவன்.

“ஜானு... இதுல இட்லியும், சாம்பாரும் இருக்கு. உங்களுக்கு என்னென்ன பேசிக் திங்க்ஸ் தேவைப்படும்னு யோசிச்சு வாங்கிட்டு வந்திருக்கேன். வேற எதுவும் வேணும்னா சொல்லுங்க!” தான் கொண்டு வந்த பையை மேஜை மீது வைத்தாள் ஆதிரை.

“தேங்க்ஸ் கா... நெக்ஸ்ட் வீக்தான் பெய்ன் வரும்னு நானுமே எதையும் பேக் பண்ணவே இல்லை. இப்போதான் ஹரி கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வரேன்னு போய்ருக்காரு!” என்றாள் நன்றியாய்.

தேவா குழந்தையின் கன்னத்தை தொட, “அங்கிள்... தம்பி அழகா இருக்கான்!” என அபியும்‌ குழந்தையின் மறுகன்னத்தை தொடச் சென்றான். ஆதிரைக்கு சட்டென மனதில் ஏதோ தோன்ற,

“அபிம்மா... தம்பியை தொடக் கூடாது. ஹேண்ட் வாஷ் பண்ணலை இல்ல‌ நீ. அவனுக்கு இன்ஃபெக்ஷன் ஆகிடப் போகுது!” என அபியைத் தன்னருகே இழுத்தாள். தேவா அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“ம்மா... அங்கிள் மட்டும் தொடுறாரு. ஒரே ஒரு டைம் தொட்டுப் பார்க்குறேன் மா. தம்பி பிங்க் கலர்ல க்யூட்டா இருக்கான் மா!” அவன் அடம்பிடிக்க,

“அபிம்மா... அம்மா சொன்னா கேட்கணும்!” என்றாள் கண்டிப்பான குரலில். ஆதிரை எப்போதாவது இப்படி பேசுவது உண்டு. அவள் குரலின் தொனியை வைத்தே செய்ய கூடாது என்று உணர்ந்த அபி தலையை மட்டும் அசைத்துவிட்டு வெளியே ஓடினான். அவனுக்கு கோபமும் அழுகையும் வந்தது.

“அக்கா... என்ன நீங்க? சின்ன பையனைப் போய் அதட்டுறீங்க. அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அழுதுட்டுப் போறான் பாருங்க. முதல்ல அவனை சமாதானம் பண்ணுங்க!” ஜானு கூற, இவள் வேண்டாம் என சின்ன புன்னகையுடன் மறுத்தாள்.

“வேணாம் ஜானு... குழந்தை வளர்ந்ததும் அபி தொடட்டும் தூக்கட்டும். அதான் எல்லாருக்கும் நல்லது!” என்றாள் முறுவலித்து. அவள் கூற்றின் பொருளில் வாணிக்கு சுருக்கென்றது‌. உண்மையில் அபி குழந்தையைத் தொட்டால் அதற்கும் வாணி எதாவது பேசுவார்.

அவளுக்கு தன் மகன் யாரிடமும் இப்படி அனாவசியமாக திட்டு வாங்குவதில் விருப்பம். அதுவும் இல்லாது அவர் என்ன பேசினாலும் இவளும் பதிலுக்கு பேசச் சென்றால் சண்டையாகிவிடும். தேவையற்ற பிரச்சனைகளை பொது இடத்தில் தவிர்க்கவே அப்படி கூறினாள். தேவாவிற்கும் அது புரிய மனைவியை முறைத்தான்.

“ரொம்ப பண்ணாத ஆதி. சின்ன பையன் அவன்!” அவளருகே வந்து மெல்லிய குரலில் கடிந்தான் அவன்.

“ஜானு... ஒரு நாலு பேர் சாப்பிட்ற அளவுக்கு டிஃபன் இருக்கு. எப்படியும் நீங்க சாப்பிடக் கூடாதுல்ல. சோ, மத்தவங்க சாப்பிடுவாங்க. நைட்டு நானே எதாவது குக் பண்ணி எடுத்துட்டு வரேன்!” கணவன் கூறியதைக் கண்டு கொள்ளாமல் ஜானுவிடம் பேசினாள். அவள் குரலில் உண்மையான அக்கறை இருந்தது.

“இல்லைம்மா... அதான் வீட்ல சமையக்காரம்மா இருக்காங்களே. அவங்க சமைப்பாங்க. உனக்கு எதுக்கு சிரமம். இல்ல நானே பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை மட்டும் பாரும்மா!” ஜனனியின் தாய் பட்டென்று கூறிவிட்டார். என்னவோ அவருக்கு ஆதிரையைப் பிடிக்கவில்லை. உண்மையில் பொன்வாணியின் வாய்வழியாக அவளைப் பற்றி அறிந்திருந்தவருக்கு அவள் மீது எவ்வித நல்ல எண்ணமும் இல்லை. என்னவோ இதெல்லாம் அவளை நல்லவளாக காண்பிக்க செய்தது போல தோன்றிற்று.

“அத்தை...” என தேவா அவரை அதட்டினான். என்ன இப்படி முகத்தில் அடித்தாற் போல பேசுகிறார் என அவனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

ஆதிரை அவர் கூறியதில் முகம் மாறாதிருக்க சிரமப்பட்டவள், கணவனின் கையைப் பிடித்து அவனைப் பேசாதிருக்க கண் சைகை செய்தவள், “சரிங்க, நீங்களே பார்த்துக்கோங்க!” என்று ஜானுவின் தாயிடம் கூறிவிட்டு, “தேவா, நான் வெளிய வெயிட் பண்றேன். நீங்க பேசிட்டு வாங்க!” என விறுவிறுவென வெளியேறினாள். தேவா தன் அத்தையை முறைத்துப் பார்த்தான்.

“ஏம்மா... அவங்க எனக்காகத்தானே இதை செஞ்சு எடுத்துட்டு வந்தாங்க. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவீயா நீ? பாவம் ஆதிக்கா முகமே வாடிப் போச்சு!” ஜனனி தாயைக் கடிந்தாள்.

“ஏன் டீ... நான் என்னத்த சொல்லிட்டேன். அந்தப் பிள்ளைக்கு எதுக்கு சிரமம்? நான் இருக்கேன்ல, நானே பார்த்துக்கிறேன்னு சொன்னேன். என் பேச்சே அப்படித்தான். அவ தப்பா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்?” என அவர் அங்கலாய்த்தார்.

தேவா அவரை முறைத்ததும், “டேய் தேவா... என்ன அப்படி முறைக்கிற? நான் உன் அத்தை டா. பொண்டாட்டி வந்ததும் நான்லாம் கண்ணுக்கே தெரியலை போல. உள்ள வந்தீயே... எப்படி இருக்கீங்க அத்தைன்னு ஒரு வார்த்தை கேட்டீயா?” அவன் பேசுவதற்குள் முந்தினார் பெரியவர்.

“உங்களுக்கு என்ன அத்தை. நல்லாதானே இருக்கீங்க. அடுத்தவங்க மனசைக் கஷ்படப்படுத்திட்டு அதைப் பத்தி கவலைப்படாதவங்க நீங்க. உங்களுக்கு என்ன வரப் போகுது?” நக்கலாய் அவரிடம் கூறயவன், “ஜானு... நான் போய்ட்டு வரேன்!” என்றான்.

“சாரி மாமா... அம்மாவுக்காக நான் மன்னிப்பு கேட்குறேன். நீங்க அக்காவை சமாதானம் பண்ணுங்க!” ஜானு கவலையுடன் பேச,

“ஏன்டீ... நான் என்ன சொல்லிட்டேன்னு அவன் என்னை முறைக்கிறான். நீ மன்னிப்பு கேட்டுட்டு கிடக்க?” அவர் இடைபுக, வாணி இத்தனை நேரம் மகனைத்தான் பார்த்திருந்தார். சண்டையிட வேணும் அவன் மற்றவர்களிடம் பேசினான். ஆனால் வந்ததிலிருந்து ஒரு நொடி கூட தன் முகத்தைப் பார்க்கவில்லையே என ஏங்கிப் போனார் பெண்மணி.

பெரியவரின் பேச்சுப் பிடிக்காத தேவா, “நான் வரேன் ஜானு!” என விறுவிறுவென வெளியே சென்றான்.

ஹரி மாமனாருடன் மனைவிக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தான். அறை வாயிலில் ஆதிரையும் அபியும் நிற்க, “மாமா... நீங்க இதை எடுத்துப் போய் அத்தைகிட்டே குடுங்க. நான் வரேன்!” என அவரை அனுப்பிவிட்டு இவர்களிடம் வந்தான்.

“அண்ணி... வாங்க, குழந்தையும் ஜானுவையும் பார்த்தீங்களா?” எனக் கேட்டான். அபி முகம் அவன் அழுதிருப்தை அப்படியே காண்பிக்க, அதை கவனித்துவிட்டே இவளிடம்‌ பேச வந்தான்.

“பார்த்துட்டேன் ஹரி. அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் பையன்!” ஆதிரை சின்னதாய் முறுவலித்தாள்.

“சரி... அபி முகம் ஏன் அழுத மாதிரி இருக்கு. என்னாச்சு?” எனக் கேட்டவன் சின்னவனை தன்புறம் இழுத்தான்.

“சும்மாதான் ஹரி... ஒன்னும் இல்ல. நீங்க போய் ஜானுவைப் பாருங்க!” என்றாள் இவள்.

“ பொய் சொல்லாதீங்க அண்ணி...” என அவளை முறைத்தவன், “அபி, என்னாச்சுன்னு சித்தப்பாகிட்டே சொல்லு!” என சின்னவனிடம் கேட்டான்.

தாயின் முகத்தைப் பார்த்த அபினவ், “அது... ஐஸ்க்ரீம் கேட்டேன் ஹரிப்பா. அம்மா வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க!” எனப் பொய்யுரைத்தான். ஆதிரை மகனை சில நொடிகள் பார்த்திருந்தாள். அவனுக்கு அனைத்தும் புரகிறது என அவளுக்குத் தெளிவாகிற்று.

“ம்ப்ச்... ஐஸ்க்ரீம் தானே? சித்தப்பா வாங்கித் தரேன் டா. எத்தனை வேணும்? என்ன ப்ளேவர்ல வேணும்னு
சொல்லு!” என அபியை அவன் சமாதானம் செய்ய, தேவா மனைவியை சமாதானம் செய்யலாம் என அவளுக்கருகே செல்லும்போது கோபால் மகனை அழைத்து விட்டார்.
 
Administrator
Staff member
Messages
1,215
Reaction score
3,604
Points
113
பத்து பதினைந்து நாட்கள் பார்க்காததால் அவனிடம் கேட்க அவருக்கு நிறைய இருந்தன. அவர் முகத்தைப் பார்த்தவனுக்கு சட்டென்று விலகி செல்ல முடியவில்லை.

“ப்பா... நான் நல்லா இருக்கேன். என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க!” என அவர் கையை அழுத்தினான்.

“அதெல்லாம் என் மருமக நல்லாத்தான் பார்த்துப்பா!” இவன் தோளை அவர் தட்டவும், தேவாவின் உதட்டில் சின்ன புன்னகை வந்தமர்ந்தது.

“தேவா... என்னையும் உன் அம்மாவையும் வீட்ல கொண்டு வந்து விடுறீயா டா. வரும்போது ஹரி கார் புக் பண்ணான். நாங்க போய் குளிக்கணும். அப்படியே ராகினியையும் பிரதன்யாவையும் கூட்டீட்டு வருவோம். ராகினி தம்பியை பார்க்கணும்னு அடம்புடிக்கிறான்னு உன் தங்கச்சி ஃபோன் பண்ணா. உனக்கு எதுவும் வேலை இருக்காப்பா?” எனக் கேட்டார் பெரியவர்.

மனைவியைத் திரும்பி பார்த்துவிட்டு, “சரிப்பா... போகலாம். வாங்க!” என்றான்.

“ஹம்ம்...” எனத் தலையை அசைத்தவர், “ஹரி... உங்கம்மாவை வர சொல்லு டா. தேவாவோட வீட்டுக்கு போய்ட்டு வரோம்!” என்றார்.

“ஏன்... நீங்க போய் கூப்பிட வேண்டியது தானே?” என முனங்கிக் கொண்டே சென்றான் அவன்.

தேவா ஆதிரையிடம் செல்ல, “என்ன தேவா, கிளம்பலாமா?” என அவன் முகம் பார்த்தாள். வரும் போதிருந்த உற்சாகம் அவளிடம் குறைந்திருந்தது. அவனுக்காகப் பார்த்து முகத்தை இயல்பாக்கி இருக்கிறாள் எனப்‌ புரிந்தது.

“ஆதி, அப்பாவையும் அம்மாவையும் வீட்ல விடப் போறேன். போய்ட்டு வர கொஞ்ச நேரமாகும். உனக்கு வேற வேலை எதுவும் இருக்கா? வெயிட் பண்றீயா?” எனத் தயங்கி கேட்டான்.

“ஓ...” என்றவள், “போய்ட்டு வர எவ்வளோ நேரமாகும்ங்க?” என யோசனையுடன் வினவினாள்.

“ஒன் ஹவர்க்கு மேல ஆகும்!” என்றவன், “நான் உனக்கு கேப் புக் பண்றேன். நீயும் அபியும் வீட்டுக்கு கிளம்புங்க!” என்றான் அவன்.

“இல்ல தேவா... நீங்க போங்க. நான் பார்த்துக்குறேன்!” என அவள் தலையசைத்தாள்.

“தேவா... போகலாமா?” என கோபால் குரல் கொடுக்க, “சரி... பத்திரமா போ ஆதி. வீட்டுக்குப் போய்ட்டு இன்பார்ம் பண்ணு!” மனதே இல்லாமல் அவன் அகன்றான்.

ஆதிரை அலைபேசியை எடுத்து மகிழுந்தை முன்பதிவு செய்ய முயல, “அண்ணி...” என ஹரி அவளை முறைத்துக் கொண்டே வந்து நின்றான்.

“சொல்லுங்க ஹரி!” நிதானமாய் கேட்டாள் ஆதிரை.

“அபியை எதுக்கு குழந்தையைத் தொட வேணாம்னு சொன்னீங்க. அப்போ நீங்க எங்களை சொந்தமா நினைக்கலையா?” என ஆதங்கத்துடன் கேட்டான்.

“அப்படிலாம் இல்ல ஹரி. பிரச்சனை எதுவும் வேணாம்னு நினைச்சுத்தான் நான் அப்படி சொன்னேன். அபி பேபியைத் தொட்டா உங்கம்மா எதுவும் சொல்லுவாங்க!” என்றாள் அமைதியான குரலில்.

“ப்ம்ச்... அண்ணி, அம்மா எது சொன்னாலும் நாங்க பார்த்துட்டு இருப்போமா? அவங்க செஞ்சதுக்காக நீங்க எங்களைத் தள்ளி வைக்காதீங்க. என் பையன் அபிக்கு தம்பி தானே? அப்போ அபி அவனோட தம்பியைப் பார்க்குறதுக்கு யார் என்ன சொல்லப் போறா? அப்படியேனாலும் என் அம்மாவை நான் பார்த்துக்கிறேன்!” என கோபமாய் கூறியவன் அபியை அழைத்துச் சென்று ஆசைத் தீர குழந்தையைக் கொஞ்ச வைத்தான். தன் மாமியாரையும் ஒரு வாங்கு வாங்கியிருந்தான். தேவாவிடம் பேசியது போல இடக்காக ஹரியிடம் அவரால் பேச முடியாது. மருமகனாகிற்றே எனப் பொறுமையாய் இருந்தார் பெண்மணி.

தேவா பெற்றவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். “உள்ளே வா டா!” என கோபால் மகன் கோபத்தில் உள்ளே வராது சென்றுவிடுவானோ என்றெண்ணி அவனை தயங்கி அழைத்தார்.

“ப்பா...” என அவரை மென்மையாய் முறைத்தவன் உள்ளே வந்து அமர, பொன்வாணி தேநீரைக் கலக்கி கணவனுக்கு கொடுத்துவிட்டு மகனருகே சென்றார்.

“டீ குடி தேவா!” அவர் மெல்லிய குரலில் கூற, தலையை மட்டும் அசைத்தான் மகன். அவர் முகத்தைப் பார்க்கவில்லை.

“அம்மா முகத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு நான் வேண்டாதவளா போய்ட்டேனா தேவா?” எனக் கேட்ட பொன்வாணியின் குரல் கமறிப் போயிருந்தது. அவரது கண்ணீர் துளி மகன் கையில் பட்டுத் தெறிக்க, எத்தனை முயன்றும் தேவாவால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. கோபம் என்பதைக் காட்டிலும் ஆதங்கம்தான் அவனிடம் நிறைய இருந்தது.

நிமிர்ந்து அவரைப் பார்த்தவன், “ம்மா... அப்படிலாம் இல்லைமா!” என்றான் தாயை சமாதானம் செய்யும் விதமாக.

“இல்லை டா... நீ பொய் சொல்ற. உனக்குப் பெத்தவங்க வேணாம்னு நீ முடிவு பண்ணிட்ட. அதான் தனியா போய்ட்ட. நாங்க என்ன பண்ணுறோம்னு ஒரு வார்த்தை வந்து பார்க்க தோணுச்சா உனக்கு? நான் வயசுக்கு மூத்தவ... ரெண்டு வார்த்தைப் பேசுனா அவளால பொறுக்க முடியாதா டா?” எனக் கேட்டவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. கணவனின் பாரா முகத்திலே வாணியின் வெட்டி வீம்பு தளர்ந்து போயிருக்க, மகனைக் கண்டதும் அனைத்தும் மறந்திருந்தது. ஏனோ மூத்த மகன் மீது உயிரை வைத்திருப்பவரால் அவனைப் பிரிந்திருக்க முடியவில்லை.

“ம்மா... நீங்க என் பொண்டாட்டியை வீட்டை விட்டுப் போக சொன்னது என்னை சொன்ன மாதிரிம்மா. நான்தானே அவளைக் கடைசிவரை காப்பாத்துவேன்னு நம்பிக்கை கொடுத்து கூட்டீட்டு வந்திருக்கேன். நீங்க அவளைப் போக சொன்னா, அது என்னை சொன்ன மாதிரிம்மா. அவளைப் பேசுனா எனக்கு வலிக்கும்னு சொல்லியும் நீங்க பேசியிருக்கீங்க!” இவன் ஆதங்கத்துடன் கேட்டான்.

“ஆமா டா... பேசுனேன். அன்னைக்கு கோபத்துல பேசுனேன்தான். அதுக்காக எங்க உறவே வேணாம்னு இருந்துடுவீயா நீ?” எனக் கேட்டவர் அழப் பொறுக்காதவன், அவருடைய கண்ணீரைத் துடைத்தான்.

“ம்மா... உங்களைலாம் விட்டுட்டு எங்கம்மா போகப் போறேன்?” எனக் கேட்டவன், “கொஞ்ச நாள் தனியா இருக்கோம். உங்களுக்கும் அபியையும் ஆதிரையையும் அக்செப்ட் பண்ண டைம் வேணும். அவளும் கூப்பிட்டா இங்க வர மைண்ட் செட்ல இல்ல. நிரந்தரமா எல்லாம் தனியா இருக்க மாட்டேன் மா. கொஞ்ச நாள் போகட்டும்!” என்றான் தாயின் முகம் வாடப் பொறுக்காது.

“நீ உன் பொண்டாட்டியையும் அவ புள்ளையும் கூட்டீட்டு வாடா. நான் அவங்களை எதுவும் சொல்ல மாட்டேன். எனக்கு எம்புள்ளை வேணும். அவனைத் தனியா விட எனக்கு இஷ்டம் இல்ல!” என்றார் அடமான குரலில்.

அவரைப் பார்த்து கசப்பாக சிரித்தவன், “அபியை என்னைக்கு என்னோட மகன்னு உங்க வாய்ல இருந்து வருதோ, அன்னைக்கு நாங்க வர்றோம்மா. அதுவரை நாங்க தனியா இருக்கதுதான் எல்லாருக்கும் நல்லது!” என்றான் முடிவான குரலில். பொன்வாணியால் இன்னுமே அபியை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வர முடியவில்லை எனத் தெளிவாய் அவனுக்குப் புரிந்தது.

பொன்வாணி வேறு எதுவும் பேசும் முன்னே, “வாணி... அவன்தான் இவ்வளோ தூரம் சொல்றான் இல்ல? அவனுக்கு கொஞ்சம் டைம் குடு. செய்றதை செஞ்சிட்டு இப்பவும் உன் இஷ்டத்துக்கு எல்லாமே நடக்கணும்னு நினைக்காத. உன் புள்ளை அவன் உனக்காக அட்ஜஸ்ட் பண்ணுவான். ஆனால் அந்தப் பொண்ணை பத்தி யோசிக்க மாட்டீயா? வீட்டைவிட்டு வெளிய போன்னு தொரத்தி விட்டுட்டு மறுபடி எதுவும் நடக்காத மாதிரி எப்படி ஆதிரையை வர சொல்ற?” என அதட்டியவர், “அவன் கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும்!” என்றார் கண்டிப்புடன். இத்தனை நாட்கள் கழித்து கணவன் பேசியதில் மகிழ வேண்டிய மனது அவர் அதட்டலில் துவண்டது.

“ப்பா... என்ன நீங்க?” எனத் தந்தையைக் கடிந்தவன், “ம்மா... போய் கிளம்புங்க!” என தாயை அனுப்பினான். முகத்தை தொடங்கப் போட்டுக் கொண்டே வாணி சென்றார்.

ராகினியைக் கிளப்பிய பிரதன்யா, “உன் தேவாப்பா வந்துட்டாரு போல. குரல் கேட்குது... போ அவர்கூட ஓடு!” சின்னவளை அனுப்பியவள், முடியைப் பின்னலிட்டு நெற்றியில் பொட்டை ஒட்டினாள். ஓரமாய்க் கிடந்த துப்பட்டாவை எடுத்து இரண்டு தோளிலும் போட்டுவிட்டு வெளியே சென்றாள்.

“அண்ணா...” எனத் தேவாவின் அருகே அமர்ந்தவள், “எப்போண்ணா வீட்டுக்கு வருவ? உன்னை, அண்ணி, அபின்னு எல்லாரையும் மிஸ் பண்றேன்!” என்றாள் அவன் கையில் கை கோர்த்து. இவனது முகத்தில் சின்ன புன்னகை.

“வரோம் பிரது!” என்றான் அவள் கையைத் தட்டிக் கொடுத்து.

“நீ இல்லாம இந்த வீட்ல யாருமே என்னை அதட்டுறது இல்ல, உருட்டுறது இல்ல. ஜாலியா இருக்குத்தான். பட் அப்பப்போ உன் உர்ருன்னு இருக்க முகத்தை மனசு தேடுது. பொறந்ததுல இருந்தே கூட இருந்து என் தலைல கொட்டீட்டே இருப்பல்ல? திடீர்னு போகவும் ஒரு மாதிரியா இருக்கு!” முதலில் கேலியாய் ஆரம்பித்தாலும் முடிக்கும் போது அவள் குரலில் சின்னதாய் ஏக்கம் வெளிப்பட்டது. அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான் அண்ணன்காரன். மற்ற இருவரும் கிளம்பி வர நேரமானது. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

மகனை நகர விடாமல் பிடித்துக் கொண்டார் பொன்வாணி. ஏற்கனவே அவர் முகம் அழுது சிவந்திருக்க, இவனால் கோபம் கொள்ள முடியவில்லை. ஆதிரைக்கு அழைத்தான். அவள் அபியை நீச்சல் வகுப்பிற்கு அழைத்துச் சென்றிருப்பதாக கூறினாள்.

“சரி... சரி... போகும்போது நான் பிக்கப் பண்ணிக்கிறேன் ஆதி!” என இவன் கூற, “நீங்க லஞ்ச் சாப்பிட்டீங்களா தேவா? டைமாச்சு!” எனக் கேட்டாள் மனைவி.

“தேவா... ஃபோனை அப்புறம் பேசு டா. வந்து சாப்பிடு வா!” என பொன்வாணி குரல் கேட்டதும், ஆதிரைக்கு அவர்கள் சமாதானமாகிவிட்டது புரிந்தது.

“போய் சாப்பிடுங்க... முடிஞ்சா கூப்பிட வாங்க. இல்லைன்னா நாங்களே போய்க்கிறோம் தேவா!” என அவள் கூற, “இல்ல... நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்!” என்று அழைப்பைத் துண்டித்தான்.

மாலை ஐந்து மணிக்கு தேவா கிளம்பலாம் என எண்ண, “தேவா... உங்க அத்தையும் என்னையும் வீட்ல விட்டுட்றீயாப்பா?” என ஜனனியின் பெற்றவர்கள் வந்து நின்றனர். அத்தையின் மீதிருக்கும் கோபத்தை மாமா மீது காண்பிக்க விருப்பமில்லை அவனுக்கு. மனைவி காத்துக் கொண்டிருப்பாளே என மனம் அவளிடம்‌ சென்றது.

“ம்மா... என் பீரோல மெட்டர்னிட்டி ட்ரெஸ் வச்சு இருக்கேன். அதை எடுத்து மாமாகிட்டே கொடுங்க!” என ஜனனி தேவாவின் முகம் பார்த்தாள்.

அவனும் சரியெனக் கூற, ‘சாரி ஆதி... ஐ காண்ட் பிக் அப் யூ. ஐ புக்ட் அ கேப் ஃபார் யூ. கோ சேஃப்லி!’ என அவர்களுக்கு பதிவு செய்த மகிழுந்தின் விவரங்களைப் பகிர்ந்திருந்தான்.

‘நீங்க அங்கப் பாருங்க தேவா...’ என்றதோடு அவள் முடித்துக் கொண்டாள்.

‌தேவா அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். இருவரும் குளித்து கிளம்பினர். ராகினிக்கு என்று எதையோ தாயார் செய்தார் மூத்த பெண்மணி. அவர்களை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீடு வர நேரம் ஒன்பதை தாண்டியிருந்தது. அன்றைக்கு முழுவதும் அலைச்சலில் உடல் சோர்ந்தது அவனுக்கு.

கதவு பூட்டாது திறந்திருக்க மெதுவாய் அதை தள்ளி உள்ளே சென்றான். மெல்லிய விளக்கொளி மட்டுமே முகப்பறையை நிறைத்திருக்க, தொலைக்காட்சியில் ஏதோ ஓடிக் கொண்டிருந்தது. ஆதிரை ஒற்றைக் கையில் தலையைத் தாங்கி நீள்விருக்கையில் சாய்ந்து அரை உறக்கத்தில் இருந்தாள்.

இவன் மெதுவாய் உள்ளே நுழைந்தும் கூட அவள் விழித்துவிட்டாள். கண்ணை சிமிட்டி எழுந்தவள் முகத்தை மறைக்கும் முடியைத் தூக்கி கட்டியவாறே, “வாங்க...” என்றாள் சோம்பலான புன்னகையுடன்.

“தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தானே ஆதி!” என தேவா கடிய,

“தூக்கம்தான்… பட் நீங்க சாப்பிட்டிருக்க மாட்டீங்க இல்ல?” எனக் கேட்டு முறுவலித்தவளை அவன் அணைக்க வர, ஆதிரை படக்கென்று விலகிவிட்டாள். கணவன் முகம் மாறியது.

“ஹாஸ்பிடல் போய்ட்டு வந்து குளிக்காம என்னைக் கட்டிப் பிடிப்பிங்களா? நான் இப்போதான் தலைக்கு குளிச்சேன். எப்போ ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தாலும் குளிக்கணும். தட் தஸ் ஹைஜீன்!” என்றவளை முறைத்துக் கொண்டே அவன் குளித்து வந்தான். ஆதிரை கூட தலைக்கு குளித்து முடியை உலர வைத்திருந்தாள். இப்போதுதான் தூக்கி கொண்டையிட்டாள்.‌

தேவா குளித்து வந்ததும் நீள்விருக்கையில் அமர, மேஜை மீது அவனுக்கு உணவை எடுத்து வைத்திருந்தாள் மனைவி. தட்டில் நான்கு சப்பாத்திகளை இட்டவள் பன்னீர் குருமாவை ஊற்றினாள். மெதுவாய் உண்டவன் தனக்கு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தவளை அடிக்கடி பார்த்துக் கொண்டான்.

“என்ன... அடிக்கடி பார்வை என் முகத்தை உரசுது?” என புருவத்தை தூக்கினாள் ஆதிரை.

“இல்ல... அது சாரி ஆதி. அத்தை அப்படி பேசியிருக்க கூடாது!” என்றான் தயங்கியே.

“விடுங்க... அவங்க பேசுனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? நான்தான் லூசு மாதிரி அந்தக் குடும்பத்துல ஒட்டப் பார்க்குறேன். ஜானு அம்மாவுக்கு என்னைப் பிடிக்காதுன்னு இப்போதானே தெரியும். இனிமே அவங்ககிட்டே பெருசா பேச்சு வச்சுக்க மாட்டேன்!” என்றாள் முறுவலித்து. கணவன் தனக்காகப் பேசியிருப்பான் என அவளுக்குத் தெரியும். தேவா தலையை மட்டும்
அசைத்துவிட்டு உண்டான்.

“அகைன் ஒரு சாரி ஆதி... நான் உன்னைப் பிக்கப் பண்ண வரலாம்னு நினைச்சேன். பட் அத்தையும் மாமாவும் அவங்களை வீட்ல விட்டுட்டு வர சொன்னாங்க. அதான் உன்னை கூப்பிட வரலை டீ!” என்றான் மென்குரலில். ஆதிரை சிரித்தாள்.

“இப்படி நீங்க பம்மி பம்மி பேசுறதும் நல்லதான் இருக்கு!” என்றாள் கேலியாய். கணவன் முறைத்தான்.

“நான்தான் சொன்னேனே தேவா. உங்களோட ப்ரசென்ஸ் அங்க இம்பார்டெண்ட்னு‌. ஐ க்நோ, ஹரிக்கு அண்ணனா நீங்க இதெல்லாம் செய்ய வேண்டியது உங்களோட கடமை. அதுக்கெல்லாம் என்கிட்ட சாரி கேட்கணும்னு இல்லங்க!” என்றாள். அவள் பேச்சில் கணவன் முகத்தில் புன்னகை பூத்தது.

அவன் தலையை அசைத்து உண்ண, “உங்கம்மாவோட சமாதானமாகிட்டீங்க போலயே தேவா?” என திடீரென்று அவள் கேட்கவும், இவன் நிமிர்ந்து ஆமாம் என ஆமோதித்தான். சாப்பிட்டுவிட்டு தாயிடம் பேசியதை மனைவியிடம் பகிரலாம் என நினைத்திருந்தான் தேவா.

“ப்ம்ச்... உங்க அம்மா அப்பாவும் பாவம்தானே தேவா. பத்து வருஷமா வளர்த்த என் பையனை என்னால பத்து நாள் கூட பிரிஞ்சு இருக்க முடியாது. முப்பத்து மூனு வருஷமா கைக்குள்ள வச்சு வளர்த்தப் புள்ளை இப்போ திடீர்னு பொண்டாட்டி பேச்சை கேட்டு விட்டுட்டுப் போய்ட்டானேன்னு அவங்களுக்கு வருத்தமா இருந்திருக்கும். உங்க அம்மா என்கிட்ட பேசுது தப்புதான். பட், அதுக்காக அவங்க உங்க அம்மா இல்லைன்னு ஆகிடாது இல்ல. காலம் முழுக்த தொடரப்‌ போற ரிலேஷன்ஷிப். அவங்களுக்கு என் மேல கோபம். ரொம்ப கரெக்டா சொன்னா நீங்க எனக்கு கொடுக்குற ப்ரையாரிட்டி பிடிக்காம அப்படி பண்ணி இருக்காங்க. போகுது விடுங்க, ஒரு பையனா நீங்க உங்களோட கடமை எல்லாத்தையும் சரியா செய்யணும் தேவா. இந்த டைம்ல அவங்க இன்செக்யூர்டா ஃபீல் பண்ணுவாங்க. எப்பவும் அவங்களுக்காக நீங்க இருப்பீங்கன்றதை புரிய வைங்க தேவா!” என்று ஆதிரை வாணியின் இடத்தில் யோசித்துப் பேசவும் என்னவோ தேவாவிடம் இத்தனை நேரம் ஊசலாடிக் கொண்டிருந்த பிரச்சனையின் கயிறு அவிழ்ந்து விழ, உடல் தளர்ந்தது.


உண்மையில் பொன்வாணியின் கண்ணீரைப் பார்த்து தேவாவிற்கு நிறைய வலித்தது. என்ன இருந்தாலும் அவனுடைய தாய், விவரம் தெரிந்தது முதல் எல்லாமுமாய் இருப்பவர். அவர் செய்தது தவறு என்றாலும் வெறுத்து ஒதுக்கிட‌ முடியாதே. அந்த நேரத்து கோபம்தான். இப்போது எங்கே சென்றதென தெரியவில்லை. தாய் என்ற காரணத்திற்காக அவன் அவரைப் புரிந்து கொண்டான். மன்னித்து ஏற்க தயாராகினான். ஆனால் மனைவி என்ன நினைப்பாளோ? யோசிப்பாளோ என மனம் அவளையே சுற்றியது.
இப்போதைய ஆதிரையின் பேச்சில் அவனது பயம் தேவையற்றது என உத்தமமாய் புரிந்தது.

அவளையே பார்த்தவன், “ஆதி இங்க வாயேன்!” என்றான்.

“என்ன வேணும் தேவா?” எனக் கேட்டு அருகே வந்தவளின் இடையோடு ஒற்றைக் கையால் அணைத்து அவள் வயிற்றில் முகம் புதைத்தவன், “தேங்க்ஸ் டீ!” என்றான் உணர்ந்த குரலில். அவளுக்குப் புரியவில்லை.

“என்னாச்சுங்க? எதுக்கு தேங்க்ஸ்?” என அவன் முகத்தை நிமிர்த்தினாள்.

“சும்மாதான்!” என்றவனை முறைத்தவளின் வாயில் கடைசி விள்ளல் சப்பாத்தியை அடைத்தவன் கையைக் கழுவி வந்தான். ஆதிரை அன்றைக்கு அறைக்குள்ளே தரையில் பாயை விரித்திருந்தாள்.

தேவா உள்ளே நுழைய தலையணையில் தலை வைத்து படுத்தாள் அவள். இவன் சென்று அறையின் விளக்கை அணைத்துவிட்டு அவளருகே பாயில் விழ, “தேவா... ரூம் ரொம்ப இருட்டா இருக்கு. விடி பல்பை போடுங்க!” என எழச் சென்றாள்.

அவளை இழுத்து தன்னோடு இறுக அணைத்தவன், “லைட் வேணாம் டீ!” என்றான் அவளை ஆழமாய் வாசம் பிடித்து.

அதில் நெளிந்தவள், “தேவா... நீங்க டயர்டா இல்லையா? இன்னைக்கு ரொம்ப அலைச்சல் இல்ல?” என்றாள் அவன் உதட்டின் மீது கையை வைத்து தள்ள முயன்று. அவள் உள்ளங்கையில் முத்தமிட்டவன் அவள் கேள்விக்கு ஏதோ கிசுகிசுப்பாக பதில் அளிக்க, அதில் இவளின் முகம் குப்பென சிவந்தது.

“தேவா...” என அவனை வலிக்காது கிள்ளினாள்.

“என் பெண்டாட்டி டெய்லி டிப்ரெண்ட் டிப்ரெண்டா தெரியுறா எனக்கு!” என்றான் அவள் கழுத்தில் முகத்தைப் புரட்டி.

“இருக்கும்... இருக்கும். கண்ணை செக் பண்ணுங்க!” என வேறு ஏதோ பேச வந்தவளின் உதட்டை தன் உதட்டால் மூடினான் ஆதிரையின் தேவநந்தன்.

அவன் இடைவெளிவிட்டதும், “என்னங்க...” என அவள் ஏதோ பேச வர, “ப்ம்ச்... எனக்கு முன்னாடி பெறந்தவன் டீ. செகண்ட் ரிலீஸ் பண்ணிட்டான். நமக்கு ஒன்னு தானே இருக்கு. நெக்ஸ்ட் ரிலீஸ் பண்ணணும். க்வாப்ரேட் பண்ணு டீ பொண்டாட்டி!” என்றவன் குரலில் ஆதிரைக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் அவனிடம் தன்னை முழுதாய் ஒப்புக் கொடுத்துக் கண்ணை மூடினாள்.

தேவா ஆர்ப்பாட்டம் இல்லாது மெல்லிய குரலில் மனைவியை வர்ணித்துக் கொண்டே அவளில் மூழ்கினான். அவன் வாயிலே அடித்தாள் ஆதிரை. அதையெல்லாம் பொருட்படுத்தாதவன் இதுவரை நல்லவன் என்ற பெயரை மொத்தமாய் மாற்றி எழுதும் அளவிற்குப் பேசினான். ஆதிரைக்கு வெட்கமாய் வந்தது.
தேவாவா இது என ஆச்சர்யம் ஒருபுறம் அவஸ்தை ஒருபுறம் என நெளிந்தாள்.

ஆடையில்லாத உடல்கள் இரண்டும் போர்வையில் சுருண்டிருந்தனர். தேவா ஆதிரையின் வெற்று வயிற்றில் முகம் புதைத்து அவள் தழும்புகளை மென்மையாய் வருடினான். அவள் கண்களை மூடி கணவன் கொடுத்த உணர்வில் கிறங்கிக் கிடந்தாள்.

அவன் வருடலில் கண்விழித்து,
“இது நல்லா இல்லைல தேவா?” எனக் கேட்டாள். மனைவியை முறைத்தவன் அந்த தழும்பில் மென்முத்தமிட்டான். அவளுக்கு கூசியது. உடலை வளைத்தாள்.

“இது எல்லாம் சேர்ந்ததுதான் என் பொண்டாட்டி...” உதட்டை அவள் உடலிலே அசைத்து ஆழ்ந்த குரலில் உரைத்தான்.

அவன் தலையை வயிற்றோடு இறுக்கி கொண்டவள், “யோவ் தேவா...” என்றாள் அதிகாரக் குரலில்.

அவன் நிமிர்ந்து பார்க்க, “மேக் மீ எக்ஸாஸ்டட்!” என மெல்லிய குரலில் முணுமுணுத்தவளின் கண்களின் மயக்கம் கணவனையே போதைக் கொள்ள செய்தது. அவன் பார்வையில் வெட்கம் கொண்டவள் போர்வையால் முகத்தை மூடி அவஸ்தையை ஒளித்து வைத்தாள்.

அவனுக்கு முகம் முழுவதும் சிரிப்பு படர்ந்தது. அவளை இறுக்கி அணைத்து அவள் ஒளித்து வைத்த மிச்ச சொச்சங்களை கண்டறிந்து அவளை இன்னுமின்னும் சோர்ந்து போகச் செய்தான்.

தொடரும்...

 
Well-known member
Messages
471
Reaction score
342
Points
63
Aathi ku varutham irundhalum deva kaga neraiya edathula amaithi ah iruku ah and atha ava mature ah vum handle panra ah aana andha maturity periyavanga nu sollikiravaga kita illa .
 
Active member
Messages
219
Reaction score
169
Points
43
Eagerly waiting for the final epi sis.
 
Top