- Messages
- 1,104
- Reaction score
- 3,173
- Points
- 113
நெஞ்சம் – 3 
நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கையில் அந்த வண்ணக் கல்லை உருட்டியபடியே தேவா, தன் முன்னே அமர்ந்திருந்த திவினேஷை அங்குலம் அங்குலமாக அளந்திருந்தான்.
“சொல்லுங்க திவினேஷ், பிரது ஏதோ சொன்னா?” எனக் கேள்வியாய்ப் புருவத்தை உயர்த்தினான். திவினேஷ், பிரதன்யாவின் அண்ணன் அவளைப் போல பார்க்க சாதுவாக இருக்க கூடுமென எண்ணி வந்திருக்க, இங்கு தேவாயின் ஆகிருதியில் மிரண்டு போயிருந்தான். ஆறடிக்கு மேல் உயரம் போல. நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் அவனது உயரம் விழிகளைத் தொட்டது. சிரிப்பு மருந்துக்கும் இல்லை. கருப்பு என்று முழுதாய் கூற முடியாவிட்டாலும் மாநிறத்தில் இருந்தான். முகம் மட்டும் இறுக்கமாய் இருந்தது.
சில நொடிகள் தயங்கிய திவினேஷ், “சார், ஐ லவ் பிரதன்யா. காலேஜ் முடிஞ்சதும் நானே உங்ககிட்ட பேசலாம்னு நினைச்சேன். அதுக்கு முன்னாடி நீங்களே கூப்பிட்டுடீங்க!” என்றான் நிமிர்ந்து அமர்ந்து.
“ஓ... என்ன ஏஜ் தம்பி உனக்கு?” தேவா இவன் முகத்தை ஊன்றிப் பார்த்தான்.
“சார்... அது எனக்கு ட்வென்டி த்ரீ ஆகப் போகுது. பிரதுவை விட ரெண்டு வயசு மூத்தவன் நான்!” அவன் படபடவென ஒப்பித்தான்
“ஓஹோ... இந்த ஒரு ரீசன் போதும் அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க. ரைட்?” என தேவா புருவத்தை உயர்த்தியதும் எதிரிலிருந்தவன் சில நொடிகள் விழித்தான்.
“லீவ் இட்... வாட்ஸ் யுவர் ப்ளான் ஆப்டர் காலேஜ்?” அவன் கேட்டதும் திவினேஷ் முதலில் திணறினான்.
“சார்... அது, அப்பா ட்ராவல்ஸ் வச்சிருக்காரு. சோ எனக்கு வெளிய ஜாப் தேட்றதுல இஷ்டம் இல்ல. அதைப் பார்க்கலாம் இல்ல, உங்களை மாதிரி பிஸ்னஸ் பண்ண போறேன்!” என்றான் சமாளிப்பாக.
“ஓ... என்ன பிஸ்னஸ், என்னை மாதிரி பால் பண்ணையா? ஆர் வேற எதுவுமா?” தேவா கேட்டதும் இவனுக்குப் பொறுமை பறந்தது.
“சார்...நான் என்ன உங்களை மாதிரி உழைச்சாதான் சாப்பிட முடியும்னற குடும்பத்துலயா பொறந்து இருக்கேன். எங்கப்பா சேர்த்து வச்ச சொத்தே இன்னும் பல தலைமுறைக்கு காணும். அதனால உங்க தங்கச்சியை நல்லா வச்சுப்பேனான்னு கவலையெல்லாம் வேணாம் உங்களுக்கு!” அவன் கடுப்புடன் கூறினான்.
“ஓஹோ... அப்போ என் தங்கச்சி உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்னு நம்பிக்கை வேற இல்ல தினேஷ்?” தேவா எதிரிலிருந்தவனை உறுத்து விழித்தான்.
“ஏன்... ஏன் பண்ணித் தர முடியாதுன்னு சொல்வீங்களோ?” அவன் எகிற, இவன் சாவகாசமாக தலையை அசைத்தான்.
“இன்னும் படிச்சு முடிக்கலை, லைஃப்ல அடுத்து என்ன பண்ண போறோம்ன்ற ஒரு அக்கறை இல்லை. அப்பா சேர்த்து வச்ச சொத்துல ஊரை சுத்தீ ஊதாரியா சுத்துற உன்னை நம்பி எப்படி என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க சொல்ற. மோர் ஓவர் இது இந்த வயசுல வர்ற ஈர்ப்பு. நீயா லவ்னு நினைச்சுட்டு பிரதுவை தொல்லைப் பண்ற!” என்றவன் எழுந்து நின்று முன்னே வந்து மேஜையின் முனையில் அமர்ந்தான்.
“ஹம்ம்... நான் பிரது மாதிரி சாஃப்ட் கிடையாது. இதுதான் லாஸ்ட், இனிமே இந்த மாதிரி எல்லாம் என் தங்கச்சி பின்னாடி சுத்துற வேலை வச்சுக்கிட்டே, தொலைச்சுப்புடுவேன்!” என்றவன் முகத்தில் இருந்த கோபத்திலும் சிறிதே இழையோடிய நக்கலிலும் திவினேஷின் தனமானம் அடிவாங்கியது. சிறுபிள்ளை போல இவன் தன்னை மிரட்டுவதா என இளம் வயது எகிறியது.
தெனாவெட்டாக சாய்ந்து அமர்ந்தவன், “ஹம்ம்... உங்க தங்கச்சிதான் எனக்குப் பொண்டாட்டி. உங்களால கூட அதை மாத்த முடியாது!” என்றான் திமிராக.
“ஓ... ஐ சீ... என்னைத் தாண்டி உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. பட் பீ கேர் புல், பின் விளைவுகளை யோசிச்சுக்கோ!” தேவா கூற, திவினேஷ் முகத்தில் இகழ்ச்சியானப் புன்னகை.
“அட மச்சான்... இது என் டயலாக். என் அப்பா எம்.எல்.ஏ, என் தாத்தா பாலிடிக்ஸ்ல ஊறிப் போனவரு. அதனால நான்தான் இந்த டயலாக்கை சொல்லணும் மச்சான்!” என இழுத்தவன், “நீ சம்மதிச்சா உன் குடும்பத்துல இருக்க எல்லாரோட விருப்பத்தோட தாலி கட்டுவேன். இல்லைன்னா உன் தங்கச்சியைத் தூக்கிட்டுப் போய் என் பொண்டாட்டியாக்குவேன்!” என்றவன் முகத்திலே தேவா ஓங்கி ஒரு குத்து குத்தியிருக்க, திவினேஷின் மூக்கிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது.
“யாரு மேலடா கையை வச்ச, நான் யார்னு காட்டுறேன் உனக்கு. என்னைப் பத்தி உனக்குத் தெரியாது டா!” மூக்கிலிருந்து வழிந்த குருதியைக் கையால் துடைத்தவாறே அவன் பேச, அவன் சட்டையின் நுனியைப் பிடித்திழுத்த தேவா ஒரே தள்ளாக வெளியே தள்ளியிருந்தான். திவினேஷ் இதை எதிர்பாராது தடுமாறி நிலத்திலே பொத்தென குப்புற விழுந்திருக்க, முகம் முழுவதும் காயமாகியிருந்தது. அவன் வலியில் கத்த, அந்த சப்தத்திற்கு மொத்த ஊழியர்களும் என்னவோ ஏதோ என்று பதற்றத்துடன் அலுவலக அறையை முற்றுகையிட்டனர்.
“அக்கா... தேவா சார் யாரையோ அடிச்சு வெளுக்குறார் போல!” தர்ஷினி கையிலிருந்த சோதனைக் குழாயை மேடையில் வைத்துவிட்டு ஓட, அவளைத் திரும்பி முறைத்த ஆதிரை அதை எடுத்து அவளுடைய வேலையையும் சேர்த்து தானே தொடர்ந்தாள். சப்தம் கேட்டதும் முதல் ஆளாக கோமதி வெளியேறியிருந்தார். அவர்கள் இருவரையும் மனதிற்குள்ளே வசைபாடிய ஆதிரை நேரத்தைப் பார்த்துவிட்டு விறுவிறுவென பாலை சோதனை செய்து கணினியில் அதைப் பதிந்தாள்.
“என்னோட பேக்ரவுண்ட் என்னென்னு தெரியாம கை வச்சுட்ட டா. உனக்கு நான் யாருன்னு காட்டுறேன்!” என அவன் கத்தினான். முகம் முழுவதும் சிராய்ப்புகளுடன் ரத்தம் வழிந்தது. அனைவரும் நடப்பதை திகிலுடன் பார்க்க, தேவா பெரிதாய் சட்டை செய்யவில்லை.
அசட்டையுடன் நின்றவன், “ஒழுங்கா எழுந்திரிச்சு ஓடிடு டா. இல்ல உன் உசுரு உடம்புல இருக்காது. கேஸ் வந்தாலும் எப்படி டீல் பண்றதுன்னு எனக்குத் தெரியும்!” என்றான் எள்ளலாய்.
அதிலே திவினேஷ் முகம் லேசாய் வெளுத்துப் போனது. எழுந்து தேவாவை வன்மத்துடன் பார்த்தவன் மெதுவாய் நடந்தான். கீழே விழுந்ததில் கால்சராய் கிழிந்து முட்டியிலிருந்து குருதி வழிந்தது. ஒரு காலைத் தாங்கி சுவரில் கையை வைத்து மெல்ல எட்டு வைத்தான். அவனுடைய இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்தியிருந்தான்.
“இங்க என்ன மூவி ஓடுதா? எல்லாரும் போய் வேலையைப் பாருங்க!” தேவா கூட்டத்தைப் பார்த்து கோபத்தில் கத்த, அனைவரும் குடுகுடுவென ஓடிச்சென்று தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.
ஆதிரை கடைசி குடுவை பாலையும் சோதனை செய்து முடிவைப் பதிந்தவள், மெதுவாய் வெளியே எட்டிப் பார்த்தாள். தேவா கையிலிருந்த இரத்தத்தைக் குழாயில் கழுவிக் கொண்டிருந்தான். அவனை சில நொடிகள் யோசனையாய்ப் பார்த்தவளின் செவியில் மெல்லிய முனங்கல் விழ, வாயிலைப் பார்த்தாள். அவளது இருசக்கர வாகனத்தின் அருகேதான் நின்றிருந்தான் திவினேஷ். இரத்தம் வழிய நின்றவனைப் பார்த்து சட்டென இவளுக்கு இரக்கம் சுரந்தது. அதுவும் வலியில் முகம் சுளித்தபடியே அவன் நிற்பதைப் பார்த்தவளுக்கு என்ன பிரச்சனையாக இருப்பினும் இத்தனைக் கடுமையாய் தேவா அடித்திருக்க வேண்டாம் என மனம் திவினேஷூக்காகப் பரிதாபப்பட்டது.
இவளது இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்று யாருக்கோ அழைத்துப் பேசிக் கொண்டிருந்தான் அவன். தன்னால் இப்போது இருசக்கர வாகனத்தை இயக்க முடியாது எனத் தோன்றவும் நண்பனை அலைபேசியில் அழைத்தான். ஆதிரை விறுவிறுவென உள்ளே சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவனருகே செல்ல, அவளணிந்திருந்த மெல்லிய கொலுசின் ஒலி தேவாவைக் கலைக்க, இவன் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
“எக்ஸ்யூக்ஸ்மி, உங்களுக்கு பஸ்ர்ட் எய்ட் பண்ணி விடவா? யூ ஆர் நாட் வெல்?” என இவள் அனுமதி கேட்டு அவன் பதிலளிக்கும் முன்னே அவன் மூக்கிலிருந்த இரத்தத்தை சுத்தம் செய்தாள்.
“பரவாயில்லை... இருக்கட்டும்ங்க!” என அவன் தடுக்க, “ப்ம்ச்... எனக்கொரு தம்பி இருந்தா பண்ணி இருக்க மாட்டேனா?” என அவள் கேட்டு அவன் குருதியைத் துடைத்து பஞ்சை வைத்து அழுத்த, “ஷ்...” என முகத்தை சுளித்தவன், “என்னங்க பொசுக்குன்னு தம்பின்னு சொல்லிட்டீங்க. பார்க்க சின்ன பொண்ணா தெரியுறீங்க...” என அவன் கூற, கீழக் கண்ணால் அவனை முறைத்து காயத்தில் பஞ்சை வெடுக்கென அழுத்திவிட்டாள்.
“ஐயோ... வலிக்குதுங்க!” அவன் அலற, பின்னர் முகத்திலிருந்த சிராய்ப்புகளுக்கும் காலிலிருந்தவற்றிற்கும் மருந்தை தடவிவிட்டவள், “ரொம்ப வலிச்சா இந்த டேப்லெட்டைப் போடுங்க!” என்றாள் அவன் கையில் மாத்திரையைக் கொடுத்து.
“நீங்க டாக்டரா? அதான் பார்க்க க்யூட்டா இருக்கீங்க? பார்பி டால் மாதிரி!” அவன் கூறவும், நிமிர்ந்து அவனை முறைத்த ஆதிரை, “இப்படித்தான் தேவா சார் வீட்டு கேர்ள்ஸ் கிட்டே வம்பிழுத்தீங்களா என்ன? அதான் வெளுத்து விட்டுட்டாரா?” எனக் கேலியாகக் கேட்பாள்.
அதில் ரோஷம் வரப் பெற்றவன், “ப்ம்ச்... வம்பு எல்லாம் பண்ணலைங்க. நான் அவர் தங்கச்சியை சின்சியரா லவ் பண்றேன். பொண்ணு கேட்டேன். கொடுக்க மாட்டேன்னு சொல்லி அடிச்சுட்டான்!” என இவன் கடுப்புடன் கூற,
“இன்னும் காலேஜ் கூட கம்ப்ளீட் பண்ணலை. இந்த வயசுல இதெல்லாம் வர்றது சகஜம்தான். பட் லவ்னு நம்ப கன்ப்யூஸ் பண்ணிக்கிறோம். இது ஜஸ்ட் ஈர்ப்புதான். இதைக் கடந்துடணும். அப்போதான் லைஃப் நல்லா இருக்கும்!” என்றாள்.
“ஏங்க... அவனும் அப்படித்தான் சொல்றான். நான் என்ன சின்னக் குழந்தையா? காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்யாசம் தெரியாத வயசுலயா இருக்கேன். ஐ யம் ட்வென்டி த்ரீ. ஐ க்நோ எவ்ரிதிங்க்!” அவன் ரோஷமாய்க் கூற, இவளுக்கு முறுவல் பிறந்தது. ஏனோ இருபதுகளின் தொடக்கத்தில் தன்னைப் பார்ப்பது போலிருந்தது. அவளும் இப்படித்தானே கட்டுபாடற்ற சுதந்திரத்தின் ஒவ்வொரு நொடியையும் யோசிக்காது தன்னிஷ்டத்திற்கு வளைத்திருந்தாள். அதை நினைக்கையில் உதடுகள் கசந்து வழிந்தன.
அவனைப் பார்த்தவள், “உங்களைப் பார்க்கும் போது என்னை சின்ன வயசுல பார்க்குற மாதிரியே இருக்கு. இப்போ பேசுறதுக்கு எல்லாம் நல்லா இருக்கும். பட் ஆப்டர் தேர்ட்டி லைஃபை தொலைச்சுட்டு நிப்போம். அப்போ வருத்தப்பட்டா தொலைச்ச வாழ்க்கை கிடைக்காது. நல்லா படிச்சு முடிச்சு சொந்தமா சம்பாரிச்சு ஒரு பொண்ணைப் பார்த்துக்க முடியும்னு நம்பிக்கை வரப்போ வந்து உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ண அப்ரோச் பண்ணுங்க. கண்டிப்பா அப்போ யாரும் உங்களை ரிஜெக்ட் பண்ண மாட்டாங்க. கன்சிடர் பண்ண வாய்ப்பு அதிகம். நம்ப யார்ன்றதை விட நம்ப எப்படி இருக்கோம்ன்றதுதான் முக்கியம். பக்குவமில்லாத வயசுல படிச்சு கூட முடிக்காம கல்யாணம் பண்ணி வைங்கன்னு வந்து நின்னா யாரா இருந்தாலும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவாங்க!” என்றாள் பொறுமையாய்.
“அதுக்காக அவன் அடிச்சது சரின்னு சொல்ல வர்றீங்களா?” இவன் கோபத்தில் இரைந்தான்.
“அவர் அடிச்சதை நான் நியாயப்படுத்தலை ப்ரதர். உங்களோட தகுதியை வளர்த்துட்டு வந்து பொண்ணு கேளுங்க. அவரே உங்களை ரிஜெக்ட் பண்ண முடியாத அளவுக்கு நீங்க நல்ல பொஷிசன்ல இருக்கணும். உண்மையா அந்தப் பொண்ணை லவ் பண்ணா, நல்லா படிச்சு முன்னேற வழியைப் பாருங்க!” என்றவள் இரண்டு எட்டுகள் வைத்தாள்.
“ஏங்க, உங்கப் பேரை சொல்லலை?” அவன் மெலிதாய்க் கத்த, “ஆதிரையாழ்...” தேவா பல்லைக் கடித்து அவளை அழைத்தான்.
“நைஸ் நேம்ங்க!” என்ற திவினேஷ், “தேங்க் யூ ஃபார் அட்வைஸ். பொதுவா அட்வைஸ் பண்ற யாருக்கிட்டேயும் நான் பொறுமையா கேட்டது இல்ல. பட் நீங்க அழகா இருந்தீங்க. அதனாலே கேட்டேன். ஐ வில் ட்ரை டூ ஃபாலோ!” என அவன் கூற மென்மையாய் அவனை முறைத்து விட்டு தேவாவின் முன்னே சென்று நின்றாள் ஆதிரை.
“ஹம்ம்... வெல், நான் என்கிட்டே வேலை பார்க்க உங்களுக்கு சேலரி தர்றனா? இல்ல இப்படி போற வர்றவங்களுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ண தரேனா?” என பல்லைக் கடித்தான் அவன்.
“சாரி சார், டைம் இப்போ ஃபைவ் டென் ஆகிடுச்சு அண்ட் என் வொர்க் எல்லாத்தையும் முடிச்சுட்டுத்தான் நான் அவருக்கு ஹெல்ப் பண்ண போனேன். யூ கேன் செக்!” ஆதிரை ஆய்வகத்தை நோக்கி கையைக் காண்பிக்க, அவளை உறுத்து விழித்தான்.
“உங்க பொது சேவையை என் கேம்பஸ்குள்ள பண்ண ரைட்ஸ் இல்ல!” இப்போது அவன் எள்ளலாய்க் கூற, மெல்லிய பெருமுச்சுடன் அவன் முகத்தை ஊன்றிக் கவனித்தவள், “யெஸ், உங்க ப்ளேஸ்ல பொது சேவை செஞ்சது தப்புதான் சார். பட், ஒன் திங்க், அவரை நீங்க இப்படி மேன் ஹேண்டில் பண்ணி இருக்க வேணாம். திஸ் இஸ் பார் தி சேக் ஆஃப் யுவர் சிஸ்டர். இந்த வயசுல ஈர்ப்புக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாம வந்து நிக்கிற சின்ன பையன்கிட்டே பொறுமையா பேசி இருக்கலாம். யாரு வேணா கோபப்படலாம், கத்தலாம் அடிக்கலாம். பட், எல்லா சிட்சுவேஷனையும் நிதானமா கையாள்றது ரொம்ப கஷ்டம். ஏன்னா அந்தப் பையன் ரிவெஞ்ச் எடுக்குறேன்னு உங்க தங்கச்சிக்கிட்டே வம்பு பண்ண கூடாதுல்ல. ட்வென்டி போர் இன்டு செவன் நீங்க உங்க தங்கச்சிக்கு காவல் காப்பீங்களா என்ன?” எனக் கேட்டவள், “
அண்ட் சாரி டூ... திஸ் இஸ் நாட் மை பிஸ்னஸ். சொல்லணும்னு தோணுச்சு!” என்றாள்.