- Messages
- 1,215
- Reaction score
- 3,603
- Points
- 113
நெஞ்சம் – எபிலாக் 
சில பல வருடங்களுக்குப் பிறகு,
அதிகாலை வேளை அந்த வீடே பரபரப்பாய் இருந்தது. பிரதன்யா கண்ணாடி முன்பு அமரவைக்கப்பட்டு மணப்பெண்ணுக்கே உரிய அலங்காரத்தில் ஜொலித்தாள். அவளுக்கு அருகே அவளது தோழிகள் இரண்டு பேர் அமர்ந்து ஏதோ கிசுகிசுவென பேசி சிரிக்க, இவள் அவர்களை முறைத்தாள்.
“மேடம்... இங்கப் பாருங்க. என்னைப் பார்த்தாதான் ஐ லேஷ் வைக்க முடியும். கண்ணை மூடுங்க!” அலங்கார நிபுணர் இவளை அழைத்ததும் அவர்கள்புறமிருந்த பார்வையை திருப்பினாள் பிரதன்யா. இன்றைக்கு அவளுக்குத் திருமணம்.
வீட்டின் கடைசி பெண் என்பது மட்டுமல்ல அக்குடும்பத்தின் ஒரே செல்ல மகள் என்பதால் பெற்றவர்களும் சரி, உடன்பிறந்தவர்களும் சரி அவளது திருமணத்தை வெகுவிமரிசையாக செய்ய வேண்டும் என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தனர்.
இந்த மூன்று வருடத்தில் எல்லோருடைய வாழ்க்கையிலும் நிறைய நிறைய மாற்றங்கள் புகுந்திருந்தன. பிரதன்யா படித்து முடித்து தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு நல்ல வேலையில் அமர்ந்திருந்தாள். பொன்வாணி அவள் வேலைக்கு எல்லாம் செல்ல வேண்டாம், திருமணம் செய்துவிடலாம் என கூற, கோபால் மறுத்துவிட்டார். அவள் விருப்பப்படி இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த பிறகுதான் திருமணம் என அவர் உறுதியாய் கூறிவிட, பிரதன்யாவிற்கு அப்போதுதான் மூச்சுவிட முடிந்தது.
சரியாய் இரண்டு வருடம் எப்போது முடியும் எனக் காத்திருந்த பொன்வாணி திருமணம் என்று பேச்சைத் தொடங்கியதும், மகள் சென்று இரண்டு தமையன்களிடம் சரணடைந்துவிட்டாள். அவர்களுக்கு முதலில் புரியவேயில்லை. என்ன ஏதென அவளை அதட்டி உருட்டி விசாரித்ததில் திவினேஷ் என்ற பெயர் வெளிவந்திருந்தது.
அந்தப் பெயரைக் கேட்டதும் தேவா பல்லைக் கடித்தான். அவனுக்கு அந்தப் பெயரும் அதற்குரியவனும் இன்றும் நினைவில் இருக்க, தங்கையிடம் முடியவே முடியாது என மறுத்தான். என்னவோ முதல் பார்வையிலே திவினேஷை அவனுக்குப் பிடிக்காது போய்விட்டது. அரசியல்வாதியின் மகன் என்ற பெயரில் பொறுப்பற்று திரிபவனுக்கு என் தங்கையை மணம் முடிக்க வேண்டுமா என அவன் பிரதன்யாவிடம் காய்ந்துவிட்டான்.
“அண்ணா... இப்போ அவன் அசிஸ்டன்ட் கமிஷ்னர். எக்ஸாம் முடிச்சிட்டு ட்ரைனிங்ல இருக்கான். அவனைக் கன்சிடர் பண்ணுண்ணா. முன்ன மாதிரி இல்ல அவன், ரொம்ப பொறுப்பா இருக்கான்!” என அவள் எத்தனையோ எடுத்துக் கூறியும் தேவா உடன்பட மறுத்தான். ஹரிதான் அவள் கூறுவது எல்லாம் உண்மையா என விசாரித்தான்.
பிரதன்யா கூறுவது போல திவினேஷ் காவலர் பயிற்சியில் இருப்பது உறுதியாகிவிட, அவனது குடும்பத்தைப் பற்றியும் அலசி ஆராய்ந்தான். அரசியல்வாதியின் குடும்பம்தான். ஆனாலும் அவர்களுக்கு நல்ல பெயர்தான் இருந்தது. ஹரிக்கு திருப்தியாகிவிட, தேவாவை சம்மதிக்க வைத்தான். ஆதிரையும் கணவனிடம் சொல்லிப் புரிய வைத்திருந்தாள் இல்லையில்லை, மிரட்டியிருந்தாள்.
“ஏன்... ஐயா லவ் மேரேஜ் பண்ணுவீங்க? உங்க தங்கச்சி லவ் மேரேஜ் பண்ண கூடாதோ? ஒரே வீட்ல இத்தனை வருஷம் இருந்தும் உங்கம்மாவுக்கு இப்போ வரை என்னைப் பிடிக்கலை தானே? அதுக்காக நீங்க என்னை வேணாம்னு விட்டுடீங்களா என்ன? உங்களுக்கு ஒரு நியாயம்? அவளுக்கொன்னா? நீங்க பார்த்த திவினேஷ் காலேஜ் படிக்கிற பையன். அவர்கிட்ட என்ன மெச்சூரிட்டி இருக்கப் போகுது? இப்போ அசிஸ்டன்ட் கமிஷ்னராகப் போறான். நான் அவரைப் பார்த்துப் பேசுனப் பிறகுதான் பிரதன்யாவுக்கு சப்போர்ட் பண்றேன். ஒழுங்கா சம்மதிங்க!” என கணவனை அரட்டி உருட்டி மிரட்டினாள். தேவா முழுமனதுடன் சம்மதம் கூறவில்லை. இருந்தும் பிரதன்யா இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்தான். ஆதிரையை சமாதானம் செய்யவே அவன் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. அதைவிட பொன்வாணியை இப்போதும் அவனால் சம்மதிக்க வைக்க முடியவில்லை.
ஆதிரை கருவுற்றிருந்த செய்தி கேட்டு வாணியைத் தவிர மற்ற அனைவரும் வந்து இவளைப் பார்த்தனர். இது போன்ற நேரத்தில் தனியாய் இருக்க வேண்டாம் என கோபால் கூற, ஆதிரை அங்கே வர மறுத்துவிட்டாள்.
“ப்பா... கொஞ்ச நாள் போகட்டும்பா!” என தேவாவும் மனைவியின் பக்கம் நின்றான். அவனுக்கும் ஆதிரை குழந்தையை சுமக்கும் நேரம் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் எனத் தோன்றிற்று. அதனாலே தற்போதைக்கு அங்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்திருந்தான். ஆதிரையை ருக்கு பார்த்துக் கொண்டார். அவருக்கு வயது மூப்பின் காரணமாக பெரிதாய் மெனக்கெட முடியவில்லை. இருந்தாலும் தனக்குத் தெரிந்தவற்றை அவர் சொல்லிக் கொடுத்தார்.
ஜானு கைக்குழந்தையுடன் இருப்பதால் இவளை அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ள முடியவில்லை. அது போல சமயங்களில் பிரதன்யா அண்ணிக்கு துணையாக இருந்தாள். ஒருவரும் இல்லாத நேரத்திலே ஆதிரை அபியை தைரியமாக பெற்றெடுத்திருந்தாள். இப்போது இத்தனை பேர் இருக்கையில் அவளுக்குப் பயம் எதுவும் இருக்கவில்லை. அனைத்திற்கும் மேலே பக்கபலமாய் தேவா இருக்கும்போது எந்தக் கவலையும் அற்றுப் போனது. ஏழு மாதங்கள் வரை பணிக்குச் சென்றாள். எட்டாம் மாதத்திலிருந்து மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டான் தேவநந்தன்.
அவள் இல்லாத இடத்தை நிரப்புவதால் இரண்டு மடங்கு அவனுக்கு வேலை இருந்தது. ஆதிரையுடன் எல்லா நேரமும் அவனால் இருக்க முடியவில்லை. பிரதன்யா இங்கே தன் ஜாகையை மாற்றிக்கொண்டு ஆதிரையைப் பார்த்துக் கொண்டாள். வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி பணியை மாற்றிக் கொண்டாள்.
ஆதிரை முதலில் வேண்டாம் என மறுத்தாள். தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறேன் என அவள் மறுக்க, தேவாவும் பிரதன்யாவும்தான் அவளை சம்மதிக்க வைத்தனர். அவளும் சரியென்றுவிட்டாள். முன்பு நாத்தனார் என்ற வகையில் பிரதுவிடம் அவளுக்கு அன்பிருந்தது. ஆனால் இந்த நிகழ்விற்கு பிறகு இருவரும் இன்னும் நெருங்கிப் போயினர். ஆதிரைதான் திருமண விஷயத்தில் சின்னவளுக்கு ஆதரவாய் இருந்தாள்.
அடுத்து ஒரு பெண் குழந்தையோ அல்லது ஆண் குழந்தையோ அதோடு போதும் என தேவா அடிக்கடி ஆதிரையிடம் கூறினான். அவளும் சரி சரியென தலையாட்டினான். ஆனால் மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்து அவர்களுக்கு இரட்டை குழந்தை எனக் கூறியதும் அனைவருக்கும் இரட்டை மகிழ்ச்சி பொங்கிற்று. அதன்பின்பு இன்னுமே மனைவியைக் கவனமாய் பார்த்துக் கொண்டான். இரட்டை குழந்தை என்ற காரணத்தாலே பிரதன்யா அண்ணியோடு ஒட்டிக் கொண்டாள்.
வீட்டிலே எளிமையாய் ஒன்பதாம் மாதத்தில் ஆதிரைக்கு சின்னதாய் வளைகாப்பை முடித்திருந்தனர். ஹரியும் ஜனனியும்தான் வளைகாப்பை எடுத்து நடத்தியது. வாணி எதிலுமே கலந்து கொள்ளவில்லை. ஆனால் மகனிடம் மட்டும் உறவு கொண்டாடினார். அவனை வரச் சொல்லி அடிக்கடி பார்த்தார். அவனுக்கு அவரது செயலில் அதிருப்தி பரவியது. ஆனாலும் தாயாய் போய்விட்ட காரணத்தினால் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை.
வளைகாப்பு நடந்த இரவு ஆதிரை கணவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள். யாருமே இல்லாது இப்படியே வாழ்ந்து காலம் முடிந்திடும் என்றெண்ணிய வாழ்க்கையில் நுழைந்து மொத்தமாய் தன் வாழ்க்கையை வசந்தமாய் மாற்றி விட்டானே என கணவன் மீது அவளுக்கு அன்பு பெருகிற்று. அபியும் தேவாவும் அவளது இரு கண்களாகிப் போயினர்.
அதோ இதோவென பிரசவ தேதி வர, அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு குழந்தைகளை நல்லபடியாக பெற்றெடுத்திருந்தாள் ஆதிரை. இரட்டைக் குழந்தைகள் என்பதால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு குறைவு என மருத்துவர் அறிவுறுத்த, தேவா சிகிச்சை செய்ய எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. அவனுக்கு மனைவியும் குழந்தையும் முக்கியம் என்பதால் சரியென்றுவிட்டான். ஆதிரை வெகுதிடமாய் இருந்தாள். குழந்தைகளும் தாயும் நலமாய் வீடு திரும்பினர். தேவா ஆதிரையைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆளை நியமித்தான். ஆறுமாதம் வரை அவர் உடனிருந்தார். அதற்குப் பின்னே ஆதிரையே அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். அப்படியே நாட்கள் கடகடவென உருண்டோடின.
கோபால் இதற்கு மேலும் மகனைத் தனியாய் விடவில்லை. வீட்டிற்கே வரக் கட்டாயப்படுத்த, அவன் இருபக்கமும் யோசிக்க வேண்டி இருந்தது. மனைவியும் வேண்டும், குடும்பமும் வேண்டும் என எண்ணியவன், தங்கள் வீட்டின் மேல்தளத்தில் ஆறே மாதத்தில் ஒரு வீட்டைக் கட்டிவிட்டான். அங்குதான் ஆதிரை, அபி, தேவா, இரண்டு குட்டி வாண்டுகள் ஹர்ஷன், ஹர்ஷிதாவும் வசிக்கின்றனர். இரு பக்கத்தையும் அவன் திருப்திபடுத்திவிட்டான்.
பொன்வாணி பேரன் பேத்திகளை எந்நேரமும் தன்னருகே வைத்துக் கொண்டார். குழந்தை பிறந்த போது தயங்கி தயங்கி குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என அவர் மகனிடம் கேட்டார்.
“என் பொண்டாட்டி வேணாம்... ஆனால் புள்ளைகளை மட்டும் வேணுமா மா?” எனக் கடுமையாய் பேசிவிட்டான் தேவா. இப்படியே இருந்தால் எப்படி குடும்பத்தை ஒன்றிணைப்பது என அவனுக்குத் தெரியவில்லை. அதனாலேயே தாயிடம் கண்டிப்புடன் நடந்தான். அவருக்கு மகனின் சுடு சொற்களில் அழுகையே வந்துவிட்டது.
பின்னர் அவன்தான் தாயை சமாதானம் செய்து பிள்ளைகளைக் காண அழைத்துச் சென்றான். தேவாவின் இரத்தம் எனத் தோன்றியதும் பேரன் பேத்தியை உச்சி முகர்ந்து கொண்டாடித் தீர்த்திருந்தார். அதிலிருந்தே வாராவாரம் இங்கே வந்து குழந்தைகளைப் பார்த்து செல்வார்.
ஆதிரை எதுவுமே பேசவில்லை. அவரை வர வேண்டாம் என்றோ, பிள்ளைகளக் கொஞ்ச வேண்டாம் என்று எவ்வித தடையும் அவள் போடவில்லை. வாணி இங்கு வந்தால் அந்த இடத்தில் அவளது இருப்பு இருக்காது. மாமனாரும் மாமியாரும் சேர்ந்துதான் வாரம் ஒருமுறை இங்கு வந்தனர். தேவாவின் பிள்ளைகள் மீது அவர்களுக்கும் உரிமை உண்டு எனத் தனக்குப் பிடிக்கவில்லை, எனனினும் வாணியின் வருகையைப் பொறுத்துக் கொண்டாள். இருவருக்கும் இன்று வரை எதுவுமே சுமூகமாகவில்லை.
தேவா மனைவியை சமாதானம் செய்ய முயன்றான். அவள் முடியாது என்றுவிட்டாள்.
“சாரி தேவா, நீங்க உங்கம்மாகிட்டே பேசுங்க, பழகுங்க. அவங்க குழந்தையைக் கொஞ்சுறதுக்கோ, பார்க்குறதுக்கோ நான் தடை சொல்ல மாட்டேன். உங்களுக்கு உங்க குடும்பம் முக்கியம்னு தெரியும். பட் என்னோட ஃபீலிங்ஸ்க்கும் ரெஸ்பெக்ட் குடுங்க. எனக்கா தோணுச்சுன்னா உங்கம்மாவோட பேசுறேன். அதர்வைஸ் என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க!” என்றுவிட்டாள் மனைவி. வாணியும் அவளிடம் பேசி உறவு கொண்டாடும் மனநிலையில் இல்லை. ஆனால் குழந்தைகளிடம் முழு உரிமைக் கொண்டாடினார்.
அபி தங்கை, தம்பியுடன் நேரம் செலவழித்தான். அவனுக்குப் பத்து வயதாகி இருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் புரிய ஆரம்பித்தது. தாய்க்கு உதவியாக இருந்தான். குழந்தைளைப் பார்த்துக் கொண்டான். அவனின் பெரிய மனித தோரணையில் ஆதிரைக்கு சிரிப்பு வரும்.
“அம்மா... நான் கடைக்குப் போய்ட்டு வரேன், நானே ஸ்கூலுக்குத் தனியா போய்க்கிறேன்!” எனத் தாயை ஒருவகையில் அவன் தாங்கினான். ஆனாலும் ஆதிரை அவனை அப்படியெல்லாம் விட்டுவிடவில்லை. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் வந்துவிட்டதால், அவன்மீதான அன்பு அவளுக்கு எங்கேயும் குறையவில்லை என மகனுக்கு புரிய வைத்தாள்.
குடும்பத்திலிருந்த அனைவரும் ஹர்ஷிதாவையும், ஹர்ஷனையும் கொண்டாடி மகிழ்ந்தனர். மகன் அதையெல்லாம் பார்த்து பாசத்திற்கு ஏங்கிவிடக் கூடாது என ஆதிரை முன்பைவிட அபியை அக்கறையெடுத்துப் பார்த்தாள். தேவாவின் திட்டப்படி அங்கே மாடியில் குடியேறியப் பிறகு ஆதிரைக்கு கொஞ்சம் மூச்சுவிட நேரம் கிடைத்தது. இரவு நேரத்தில் குழந்தைகள் அவளைத் தூங்கவிடாமல் தொல்லை செய்தன.
சின்னவன் தூங்கினால் ஹர்ஷிதா எழுந்துவிடுவாள். இவள் தூங்கிவிட்டால், அவன் எழுவான். இருவரையும் பார்த்துக் களைத்துப் போயிருந்தாள். அதனாலே பகல் நேரத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை வாணியும், ஜனனியும் ஏற்றிருந்தனர். கோபாலுக்கு பேரன் பேத்திகளோடு நேரம் பறந்தது.
ஹர்ஷிதா, ஹர்ஷனுக்கு இரண்டு வயது முடிந்தப் பிறகுதான் ஆதிரை மீண்டும் பணிக்குத் திரும்பினாள். அவளது இடத்தில் மற்றொரு பெண் வேலை பார்க்க, தேவா மூன்றாவது கிளையைத் தொடங்கி மனைவியை அங்கே தலைமை பணியில் அமர்த்திவிட்டான். அவள் முதலில் முடியாது எனத் தயங்கினாள்.
“வேணாம் தேவா... ரிஸ்க் எடுக்காதீங்க. நான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவேனான்னு டவுட்டா இருக்கு!” என அவள் தயங்க, கணவன் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆதிரை எண்ணியபடி எந்த சொதப்பலும் அற்று அவள் திறமையாய் அனைத்தையும் கையாண்டாள். முதல் மூன்று மாதங்கள் அருகே இருந்து அனைத்தையும் சொல்லிக் கொடுத்த தேவா, பின்னர் மொத்தமாய் அவளிடம் ஒப்படைத்துவிட்டான். இப்போது ஆதிரைதான் அந்தக் கிளையை முழுமையாகப் பார்த்துக் கொள்கிறாள். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நகரத் தொடங்கியிருந்தது.
“ம்மா... ரெடியாகிட்டீங்களா இல்லையா?” அபி அறைக்கு வந்து தாயை முறைத்தான்.
“ப்ம்ச்... இதோ, ரெண்டு நிமிஷம் டா!” எனத் தலையில் பூவை சூடியவள், அலைபேசியைக் கையிலெடுத்துவிட்டு வீட்டைப் பூட்டினாள். குழந்தைகள் இருவரையும் குளிக்க வைத்து கிளப்பி ஜனனியிடம் விட்டுவிட்டு இவள் தயாராக நேரமாகிவிட்டது.
கடகடவென படிகளில் இறங்கினாள் ஆதிரை.
“வாங்க கா!” ஜனனி அவளை மென்மையாய் முறைக்க, “சாரி ஜானு...” என்றவாறே அவள் முகப்பைக் கடக்க, வெளி கதவைப் பூட்டிவிட்டு மகிழுந்தில் ஏறினர். பிரதன்யா, வாணி, கோபால் மற்றும் தேவா சற்று நேரம் முன்பே கிளம்பிவிட்டனர்.
ஹரி மகிழுந்தை இயக்க, இவள் உள்ளே ஏறினாள். ஹர்ஷிதா தாயிடம் தாவினாள். ஹர்ஷனை அபி மடியில் வைத்திந்தான். அவர்களுக்கு பின்னே ஜானு, அவளது இரண்டு பிள்ளைகளும் அமர்ந்திருந்தனர்.
“எல்லாம் எடுத்தாச்சுதானே அண்ணி?” எனக் கேட்டு உறுதி செய்த ஹரி பதினைந்தே நிமிடத்தில் மண்டபத்தை அடைந்தான்.
அப்போதே பாதி மண்டபம் உறவினர்களால் நிறைந்து போயிருந்தது. இவர்கள் சென்று ஆளுக்கு ஒரு வேலையை செய்தனர். தேவாவும் ஹரியும் அனைத்தும் சரியாய் இருக்கிறதா என அங்குமிங்கும் அலைந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் அரசியல் பின்புலம் என்பதால் நிறைய கட்சி ஆட்களும் வந்தனர்.
தேவா, மேடையிலிருந்த ஐயர் எதையோ கேட்டார் என வாங்கி வந்து கொடுத்தவன் திவினேஷை ஒருமுறை முறைத்துவிட்டே போனான்.
“ஏன் கா... உங்க ஊட்டுக்காரர் ஏன் என்னை எப்ப பார்த்தாலும் பாசமா பார்க்குறாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த வீட்டு மாப்பிள்ளையாக்கும் நானு. அதுக்குரிய மரியாதையைக் குடுக்க சொல்லுங்க!” ஆதிரையிடம் அவன் விறைப்பாக கூற, அவனை மெலிதாய் முறைத்தவள், ஏதோ கூற வந்தாள்.
“அக்கா, ஒரு நிமிஷம் இருங்க...” என அவளை நிறுத்திய ஜானு, “அதாவது மரியாதைக்குரிய மாப்பிள்ளை, இன்னும் கல்யாணமாகலைப்பா. என் மாமா ஃபுல் பார்ம்ல இருக்காரு. எதாவது ஏத்திவிட்டா கப்புன்னு புடிச்சிப்பாரு... என்ன சொல்றீங்க?” என வில்லி சிரிப்புடன் கேட்டாள்.
“ஐயோ... அக்காமார்களே... என் வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்றாதீங்க. பாவம் நானு... எல்லாரையும் சம்மதிக்க வச்சு கல்யாணம் பண்றதுக்குள்ள எனக்கு கை கால் இழுத்துக்கிச்சு. இதுக்கும் மேல தெம்பில்லைக்கா!” என அவன் பட்டென சரணடைந்துவிட, ஆதிரை கடகடவென சிரிக்கத் தொடங்கினாள். யாரிடமோ பேசிக் கொண்டிருந்த தேவாவின் பார்வையும் அவளிடம்தான்.
குழந்தை பிறந்தப் பின்னே உடல் எடை கூடிப் போயிருந்தாள் அவள். எவ்வளோ குறைக்க முயன்றும் கருவுற்றப் போது போட்டிருந்த எடையில் பாதியைத்தான் அவளால் குறைக்க முடிந்தது. அவ்வப்போது கணவனிடம், “தொப்பை வச்சு அசிங்கமாகிட்டேனாங்க? கன்னமெல்லாம் புஸ் புஸ்ஸூன்னு இருக்குல்ல?” எனக் கேட்பாள்.
“சே... சே. எனக்கு ரொம்ப கம்பர்டபிளா இருக்கு டீ!” என இழுத்து அவள் வயிற்றில் முகம் புதைப்பவனை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது.
இப்போதும் சற்று பூசினார் போலத்தான் இருந்தாள் ஆதிரை. அவன் தேர்வு செய்த அரக்கும் சந்தனமும் கலந்தப் புடவை அவளை பாந்தமாக தழுவி நின்றது. கண்ணை நிறைத்தாள் மனைவி. அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டே வந்தவர்களை வரவேற்றான்.
நல்ல நேரம் வந்ததும் இரண்டு வீட்டுப் பெற்றவர்களும் மேடையேறினர். பிரதன்யா அழைத்து வரப்பட்டதும் திவினேஷ் அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக்கிக் கொண்டார். அவர்களுக்கு இடையே காதல் மலர்வதற்கு முழுமுதற் காரணம் தேவாதான் என அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போனது. அடுத்தடுத்து சடங்குகள் நடக்க, உணவு பரிமாற என நேரம் பறந்தது.
நேரம் முன்மாலைப் பொழுதை தொட்டதும் உறவினர்கள் கலையத் தொடங்கினர். மணமக்கள் இருவரும் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இத்தனை நாட்கள் உடனிருந்த மகளைப் பிரிவதில் பெற்றவர்களுக்கு கண்கலங்கியது. இருந்தும் அவள் முன்னே முகத்தை வாடாமல் பார்த்துக் கொண்டனர். அவளுக்கு ஆயிரம் பத்திரம் கூறினர் பெரியவர்கள்.
“பிரது, நல்லபடியா போய்ட்டு வா!” என இரு அண்ணிகளும் கூற, “உங்களை நான் மிஸ் பண்ண மாட்டேன் அண்ணி. நீங்க பெத்த லட்டு குட்டீஸைதான் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்!” எனக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சியவள் கண்களில் நீர் நிரம்பியது.
“பிரது!” தேவா அதட்ட, “போண்ணா...” என்றவளை, ஹரி அணைத்துக் கொண்டான். தேவாவை அவளே அணைத்தாள். அவன் முகத்தின் மெல்லிய புன்னகை.
“ஹாஃப் அன ஹவர் தூரத்துல தானே இருக்கோம். அதுக்கு ஏன் இவ்வளோ அழுகை?” திவினேஷ் மெல்லிய குரலில் கடிந்தான்.
“மாப்பிள்ளை... தங்கச்சி பத்திரம்!” ஹரி அவன் தோளில் கையைப் போட்டு இறுக்க, தேவா ஒரு பார்வைதான் பார்த்தான்.
‘யப்பா... ரெண்டு பேரும் ரெண்டு ஹல்க் மாதிரி இருக்கானுங்களே!’ எனப் பதறிய திவினேஷ் சிரித்து வைத்தான். பின்னர் மாப்பிள்ளை பொண்ணும் அகல, இவர்கள் குடும்பத்தோடு வீட்டிற்குச் சென்றனர். தேவாவும் ஹரியும் மண்டபத்தில் அனைத்தையும் பர்த்து பணம் கொடுக்க வேண்டியவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அங்கே சிறிது நேரம் இருந்தனர்.
காலையிலிருந்து அங்கும் இங்கும் அலைந்ததில் குழந்தைகள் வரும் வழியிலே தூங்கிவிட, வாணி அவர்களைத் தங்களது அறைக்குத் தூக்கிச் சென்றுவிட்டார். ஆதிரையும் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என அறைக்கு வந்தாள். கணவன் வரவில்லை என வாயிலைப் பார்த்தாள். அபி கீழே இருந்தான்.
புடவையை அவிழ்க்கச் சென்றவள், அப்படியே விட்டுவிட்டாள். என்னவோ காலையிலிருந்து கணவன் பார்வை தன்னைத் துரத்துவதை உணர்ந்தே இருந்தாள். உதட்டோரம் சின்னதாய் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அவன் வரட்டும் என முகம் கழுவிவிட்டு வந்தவள், அலைபேசியை எடுத்து அதில் கண்களை ஓட்டினாள்.
தேவாவும் ஹரியும் சிறிது நேரத்திலே வந்துவிட்டனர். தேவா மாடியேற, ஹரி உள்ளே நுழைய சென்றவன், “ப்ரோ... உன் கால்ல என்ன?” என தமையனைப் பார்த்துக் கேட்டான்.
“என்ன என் கால்ல?” எனக் கேட்ட தேவா யோசனையுடன் ஒற்றைக் காலைத் தூக்க, நேற்று இரவு மனைவி வைத்துவிட்ட மருதாணி உள்ளங்காலில் சிவந்து கிடந்தது. அவன் காலில் என்னவென பார்க்க வந்த ஹரி பக்கென சிரித்துவிட, தேவாவிற்கு நொடியில் சங்கடம் பரவிற்று. முகம் மெல்லியதாய் சிவந்து போனது.
“ப்ரோ... ட்ராஸ்டிக் சேஞ்ச்!” என அவன் ஏதோ கூற வர, “போடா...” என அவன் தோளில் தட்டி கீழே தள்ளியவன், விறுவிறுவென மாடியேறினான்.
ஆதிரை அவன் வந்ததும் அலைபேசியிலிருந்து நிமிர்ந்து புன்னகைத்தாள். சோர்வாய் இருந்தாலும் மனைவி இன்றைக்கு அவனைக் கொள்ளையடித்தாள். அவளை முறைத்துக் கொண்டே வந்தமர்ந்தான் தேவா.
“என்ன முறைப்பு?” அவள் கேட்க,
“கால்ல மருதாணி வேணாம்னு சொன்னா கேட்குறீயா? ஹரி பார்த்ததுட்டு சிரிச்சிட்டுப் போறான்!” என்றான் சங்கடமான குரலில்.
சிரிப்புடன் அவன் கன்னம் கிள்ளியவள், “உங்களை யார் அவர்கிட்டே காலைக் காட்ட சொன்னது?” என்றாள் உதட்டிலிருந்த புன்னகை மறையாது. அவன் எடுத்துக் கொடுத்த புடவை, காலையில் வைத்த மல்லிக்கைப் பூ வாடினாலும் வாசனை நாசியை நிரடியது.
அவளை இழுத்து மடிமீது அமர்த்தியவன், “வந்து இவ்வளோ நேரமாச்சே! ஏன்டீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலை?” என அவள் உதட்டில் மென்முத்தமிட்டான்.
“ஹம்ம்... சுரைக்காய்க்கு உப்பில்லைன்னுதான் தேவா. விடுங்க, நான் போய் சேரியை மாத்துறேன்!” பொய்யாய் சடைத்தவளை அனாயசமாக அடக்கியவன் அவளை அணைத்துக் கொண்டான்.
“ப்பா... பெத்தாலும் பெத்த ரெண்டு புள்ளைங்களை. முடியலை டீ. உன் பக்கத்துலயே விட மாட்றானுங்க!” தேவா புலம்ப, இவளுக்கு சிரிப்பு வந்தது.
“அப்பாவை மாதிரித்தானே புள்ளைங்க இருக்கும்!” என அவள் உதட்டை சிலுப்பியதும் இவனது முகம் சிவந்து பின் மலர்ந்தது. ஆதிரை பொங்கிச் சிரித்தாள்.
“ம்மா...” என அபியின் சப்தம் கேட்டதும் படக்கென இருவரும் பிரிந்தனர்.
“ஹர்ஷன் எழுந்துட்டான்ம்மா!” என தாயிடம் குழந்தையைக் கொடுத்தவன், “தேவாப்பா... தாத்தா கூப்பிட்றாரு உங்களை!” என்றான் இவனிடம். கடந்த சில வருடத்தில் அபிக்கு தேவா அப்பாவாகிப் போயிருந்தான்.
தம்பி, தங்கை அவனை தேவாப்பா என அழைப்பதை பார்த்தவன் ஒருநாள், “அங்கிள், நானும் உங்களை அப்பான்னு கூப்பிடலாமா?” எனத் தயங்கித் தயங்கி கேட்க, தேவாவின் முகம் மலர்ந்தது.
“உன் இஷ்டம் அபி. எப்படி தோணுதா, அப்படி கூப்பிட்டுக்கோ!” அவன் கூறியதும், அன்றிலிருந்து அபி தேவாப்பா என்றுதான் அழைக்கிறான்.
“நீ போ அபி... நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்!” என்றவன் உடை மாற்றி கீழே செல்ல, அனைவரும் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். கோபால் இவனிடம் ஏதோ கேட்க, பதிலளித்தான். ஆதிரை உடைமாற்றி மகனை அழைத்து வந்தாள். வந்தவன் ஓடிச் சென்று தந்தையின் மடியில் அமர்ந்தான்.
ஆதிரை ஜனனி பக்கத்தில் சென்று அமர்ந்தாள்.
இங்கு குடிபெயர்ந்த போது ஆதிரை கீழிருந்த வீட்டிற்கு வரத் தயங்கினாள். ஆனால் ஒரே வீட்டின் மாடியிலிருந்து கொண்டு கீழே வராமல் அவளால் தவிர்க்க முடியவில்லை. குழந்தைகளும் அடிக்கடி தாத்தா பாட்டீயிடம் செல்ல, அவர்களை அழைக்க, ஜானுவிடம் அரிசி பருப்பு கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குழந்தைகளுக்கு ஏதாவது செய்தால், ஹரியின் பிள்ளைகளுக்கும் அதைக் கொடுக்க என நிறைய காரணிகள் அவள் கோபத்தை மட்டுப்படுத்தியிருந்தன.
“அக்கா.. டீ குடிக்குறீங்களா?” எனக் கேட்ட ஜானு இவளுக்கு சூடாய் தேநீர் கொடுத்தாள். ஹரி குழந்தைகளிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான், வீடே கசகசவென்றிருந்தது. ஆதிரை கணவனை சிரிப்புடன் பார்த்தவள், பின்னர் குழந்தையிடம் திரும்பினாள். என்னவோ மனம் அவளுக்கு நிறைந்து போயிருந்தது.
தேவா அவள் பார்வை உணர்ந்து கண்ணாலே என்னவென விசாரிக்க, ‘ஒன்னுமில்லை!’ எனத் தோளைக் குலுக்கியவளை முறைத்தவன் வேறுபுறம் திரும்ப, இவ
ள் உதட்டில் முறுவல் பூத்தது.
அந்த வீட்டிலிருந்த சப்தமும் சந்தோஷமும் எப்போதும் இப்படியே இருக்க வேண்டும் என மனதில் வேண்டிக் கொண்டாள்.
*சுபம்*
கதை எப்படி இருந்துச்சு? உங்களுக்கெல்லாம் பிடிச்சதா? ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க. நானும் சந்தோஷப்படுவேன். கொஞ்சம்ம்ம் பெரியயய ஸ்டோரி தான். பட் நான் ரொம்ப ரொம்ப என்ஜாய் பண்ணி எழுதுனேன். நிறைய கேரக்டர்ஸ், சீன்ஸ்னு ரசிச்சு எழுதுனேன். இன்னும் கொஞ்ச நாளுக்கு தேவா, ஆதி வாசம் என்கிட்டேருந்து போகாது. அடுத்த கதை பொங்கலுக்குத்தான்
நான் ரெஸ்ட் மோட்க்கு போறேன் 
கதையைப் பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன