• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நின் நெஞ்சம் நேர்பவளே ! - 4

Messages
37
Reaction score
20
Points
8
அத்யாயம் - 4


காலை அலார சத்தத்தில் எழுந்த கார்த்திக் பக்கத்தில் இருந்த குணாளை உதைத்து எழுப்பினான் திடுக்கிட்டு எழுந்தவன்

"என்னடா ஆச்சு", என்று பதற

'ஆஃபீஸ்க்கு லேட் ஆகுதுடா ' ,என்று சொல்ல .

இருவரும் வேகமாக தங்களை தயார் செய்தார்கள் .

மிரு தன்னை சீக்கிரம் ஆபீசுக்கு புறப்பட தயாரானாள்.

தயாரானவள் கீழே வர சிவகாமி வாயில் கையை வைத்தார் .

இன்னைக்கு என்ன மழை வரப்போகுதோ என கேட்டு மிருவின் எரிச்சலைக் கூட்ட

"அம்மா எனக்கு இன்னைக்கு சாப்பாடு வேண்டாம் நான் கேண்டின்ல சாப்பிடுகிறேன் ",

என்று சொல்ல.

சிவகாமியின் மனதில் தந்தை சொன்ன விடயத்தில் ஏதேனும் மனம் வாடுகிறாளோ என்று தோன்றியது அவளது எண்ணம் என்னவென்று தெரியவில்லை காலையில் சாப்பிடாமல் செல்கிறாள் என்ற மன குழப்பத்தில் சிவகாமி ஆனால் தந்தை சொன்னதற்கு ஆம் என்று பதிலை சொன்னாலே என்று யோசித்து விட்டு .

"நீ ரெசிக்னேஷன் லெட்டர் தந்துட்டு சீக்கிரம் வந்துடு ",

என்று சொல்ல .

"வரேன்னு மா",

என்று சொல்லி செல்பவளை பார்த்து ' போயிட்டு வரேன்னு சொல்லு டி ' அதற்குள் அவள் சென்று விட்டாள் .

பெங்களூர் சிட்டி நெரிசலில் தப்பித்து அலுவலகம் வந்த மிரு முதலில் தேடியது கார்த்திக்கை தான் அப்பொழுது தான் உள்ளே வந்த காவியாவிடம்

"கவி கார்த்திகை பார்த்தியா என்ற படபடப்பாக கேட்க என்ன ஆச்சு நேத்து நல்லா தானே இருந்த இப்போ என்ன பெய்றஞ்ச மாறி இருக்க ",

என்று கேட்டவளை கண்ணீர் வழிய நேற்று நடந்த அனைத்தையும் சொல்ல ஒரு அதிர்ச்சி தான் காவியாவிடம்

"சம்மதம் இல்லன்னு சொல்லிட்டா இந்த கல்யாணம் நடக்காது மிரு ".

"அப்படித்தான் அப்பா சொன்னாரு ......பட் ஏமேல வச்ச நம்பிக்கையை எப்படி உடச்சி நா கல்யாணம் பண்ணுவே நீயே சொல்லு என்று கேட்டாள் ".

"நீ சொல்றதும் கரெக்ட் தாண்டி காதல்ல இதுலாம் சகஜம் மிரு நீ பயப்படாத இன் பாக்ட் உன்னோட ப்ரெண்ட்ஸ் லவ் மேரேஜ் ", சமாதானம் செய்தாள்.

என்னோட சம்மதம் இல்லாமல் இது நடக்காது அந்த நம்பிக்கையில தான் இருக்கேன் கவி என்று சொல்லி கொண்டிருக்கும் போது அங்கு வந்த கார்த்திக்

"ஹாய்" என்று கையை அசைத்து சொல்லிக்கொண்டு வர மிரு மனம் பதறியது இன்னும் அவன் தான் அனுப்பிய செய்தியை பார்க்க வில்லை என்று .

"என்ன சீக்கிரம் வந்துட்ட" , என்று சர்வ சாதாரணமாக கேட்டவனை பார்த்த மிரு முகம் சிறியதாக மாற ஒரு மூலையில் மனம் வலித்தாலும் காட்டிக் கொள்ளாமல்

"மெசேஜ் அனுப்பியத பாக்கலையா", என்று சிறிய குரலில் கேட்க

சிரித்தவாறு சமாளிக்கும் விதமாக

"நைட்டு ஒரே டயர்டு அதனால சீக்கிரம் தூங்கிட்ட மிரு மார்னிங் லேட் அதனாலதான் பார்க்கல ",

என்று அவளை சமாதானம் செய்ய உடனே தொலைபேசியை எடுத்தவன் அப்படி என்ன முக்கியமான செய்தி என்று நினைத்தவாறு பார்த்தவனுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை

"எப்படி நீ தானே உங்க அப்பா கிட்ட பேசுறன்னு அதுக்குள்ள இது...", இழுத்தவன் .

அவனுக்குத்தான் வார்த்தையே வரவில்லையே இப்பொழுதுதான் தன் வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கிறது என்று நினைத்தவனுக்கு இது இடியாக இருக்க மிரு விரிவாக சொல்ல கொஞ்சம் மனம் மாறினாலும் மிருவின் தந்தை மீது கோபமாக வந்தது .

மிரு கலங்கும் தன் விழியை கட்டுப்படுத்தியவள் வலியை காட்டிக்கொள்ளாமல் தான் இங்கு வேலை செய்யப் போவதில்லை என்றும் எல்லாம்
கார்த்திக் கையில் தான் தனது வாழ்க்கை இருக்கிறது என்றும் சொல்லி விட்டு சென்றுவிட இப்பொழுது தலைசுற்றியது என்னவோ கார்த்திக்கு தான்.


இன்னும் இரண்டு வாரங்கள் இங்கு பணிபுரிவதாக காவியவிடம் சொல்லி சென்றாள் அவளது மனதில் பல குழப்பங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை இதை அனைத்தையும் எதிர்நோக்கும் கார்த்திக் சாதாரணமாக இருப்பது மனம் உறுத்தலாக இருந்தது அதனால் அவனிடம் பேசுவதை தவிர்த்து விட்டு காவியவிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டாள்.

இரண்டு வாரங்கள் சென்றதே தெரியவில்லை இந்த கம்பெனியில் இருந்து நின்றுவிட்டாlள் மிருதாளினி இரண்டு வாரங்கள் கார்த்திக்கிடம் அதிக பேச்சு வார்த்தை இல்லை யாரிடமும் அதிகம் பேசவில்லை மௌனமாக இருந்தால் அனைவரும் இவளை நிலைக்கு மாற்ற முயன்றார்கள் ஆனால் இவள் அப்படியே தான் இருந்தாள் காரணம் இன்னும் இரண்டு நாள் இன்னும் இரண்டே நாளில் பார்ட்டி நடக்க இருக்கிறது அந்தப் பார்ட்டியில் தான் சாராவாத்தை பார்த்து பேச வேண்டும் பேசிவிட்டு பிடித்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல வேண்டும் என்று தந்தை சொல்லி இருக்கிறார். இருப்பினும் இல்லை என்று சொன்னாலும் சம்மதிக்க வைப்பார்களா என்று தெரிய வில்லை .


அதை எண்ணிய இவள் வாடுகிறாள் கார்த்திக் முயன்றவரை சொல்லிப் பார்த்து விட்டான் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆனால் கார்த்திக் மீது மிருதாளினிக்கு நம்பிக்கை இல்லை இவனது அலட்சியம் தான் அதற்கு காரணம் நாட்கள் நீரோடை போல செல்ல அன்று இரவு நிலவின் ஒளியை விட அங்கு அலங்கரிக்கப்பட்ட செயற்கை விளக்குகளின் ஒளி பிரகாசிக்க தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் மருதாளினி .

தோட்டத்திற்கு வந்த சிவகாமியும் -"மிரு இன்னும் என்ன பண்ற டைம் ஆயிடுச்சு லேட் ஆகுது சீக்கிரம் குளிச்சிட்டு ரெடி ஆனா நம்ம பார்ட்டிக்கு போகணும் ஞாபகம் இல்லையா "

என்று சொல்ல செவிகளில் விழுந்த வார்த்தைகளில் தன் உணர்வுக்கு வந்த மிருதாளினி தன் அறைக்கு புறப்பட்டாள் இவளின் நடவடிக்கையை பார்த்த சிவகாமிக்கு மனம் ஏதோ உறுத்தலாகவே இருந்தது.


மாளிகை போன்ற வீடு அதற்கு முன் வந்து நின்றது ஒரு உயர் ரக கார் ராஜதேவ் வீட்டின் உள்ளே இருந்து வேகமாக வந்து கார் கதவு திறக்கும் நிமிடங்களை கூட பொறுத்திருக்க முடியாமல் படபடத்து கொண்டிருந்தார் பல நாள் கழித்து தன் மகனைப் பார்க்கிறோம் என்ற மன மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி நின்றார் அவரது மனைவி வேகமாக சென்று ஆராதி தட்டை எடுத்து வந்தார் காரில் இருந்து இறங்கிய சாரா வாத் தன் தந்தையை தோளோடு அணைத்தான் தாய் பக்கம் திரும்பியவன் ஆராதி தட்டுடன் நின்ற தாயைப் பார்த்து இதெல்லாம் எதுக்குமா இன்னுமா இத பாலோ பண்றீங்க என்று கேட்க அதெல்லாம் உனக்கு தெரியாது நீ அமைதியா நில்லு என்று சொல்லி தன் மகனை ஆனந்த கண்ணீர் வழிய வரவேற்றார்.

சாரா வாத் வந்ததுல இருந்து அதிகம் பேசவில்லை ஏனென்றால் ராஜ தேவ் அவன் வரும் முன் அனைத்து விடயத்தையும் கூறியிருந்தார் சார வாத் ஒரு தனி காரிலும் ராஜதேவ் மற்றும் திலகா ஒரு காரிலும் புறப்பட்டனர்.

சிவகாமி- " நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க பின்னாடி நான் இருக்கும்போது என்கிட்ட கேட்காம எதுக்கு கல்யாணம் பண்ணிங்கன்னு வந்து கேட்டா என்ன பண்ணுவீங்க".

வேதாச்சலம் - "இந்த காலத்துல அதெல்லாம் ஒன்னும் கிடையாது சிவகாமி என் பொண்ணுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என் பொண்ணு இத்தன நாள் வளர்த்தன அவளுக்கு எது நல்லது எது கேட்டது என்று சொல்றதுக்கு நான் இருக்கேன் அது யாரோ ஒருத்தர் கிட்ட கேட்டு பண்ணனும்னு அவசியம் எனக்கு கிடையாது நீ அதிகம் போட்டு குழப்பிக்காம பார்ட்டிக்குவா நம்ம வருங்கால மருமகளை பார்க்க போலாம் மிரு சீக்கிரம் ரெடி ஆயிட்டு வர சொல்லு" என்று சொல்லிவிட்டு போனில் கவனத்தை செலுத்தினார்.


இவர் எதுக்கு இப்படி பண்றாருன்னு தெரியல ராஜா அண்ணா வீட்டுக்கு பொண்ணு மருமகளா போனாலும் சந்தோஷம்தான் இருந்தாலும் ...... நினைத்துக் கொண்டிருக்க சிவகாமியை வேதாச்சலம் அழைக்க அத்துடன் மனதில் தோன்றியதை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டார்


தனது அறையில் கண்ணாடி முன் நின்று இருந்த மிருதாளினி பிளவுஸ் கொக்கியை போட போராடிக் கொண்டு இருந்தாள்

"எனக்கு வர கோபத்துக்கு",

என்று பல்லை கடித்தவள் ஒரு வழியா போட்டு முடித்தாள் தனது கோபத்தை காட்டியவள் இனிமே அந்த அக்கா கிட்ட சொல்லி வைக்கணும் இந்த போராட்டம் முடிந்ததும் தந்தை சொன்னதை நினைவில் வர சின்ன வயசுல இருந்தே தெரியும் அவனை எப்படி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறார்கள் இன்று பெருமூச்சு விட்டாள் நிதானமாக தன் பிம்பத்தை பார்த்து பார்ட்டிக்கு போகிறோம்

'நான் ஆல்ரெடி லவ் பண்றேன்னு சொல்லணும் நல்லா சாப்பிட்டு வீட்டுக்கு வரணும்'

தனது திட்டம் என்று நினைத்து சொல்லிப் பார்த்துக் கொண்டாள் .

சிவகாமி -"மிரு டைம் ஆச்சு சீக்கிரம் வா",

என்று அழைக்கிறேன் என்று கத்திக் கொண்டிருந்தார்.

"வரேன் மா " என்றவள் எழுந்து கண்ணாடியை பார்க்க அழகிய பிங்க் நிற லெஹங்கா டிரஸ் அவள் சிலை என காட்டிக் கொடுக்க ஒப்பனைகள் அதிகம் இல்லை என்றாலும் தேவதையாக இருந்தாள் மின்மினி பூச்சி போல ஒரு கல் பதித்த பொட்டு ஒன்றை எடுத்து வைத்தவள் இந்த பாட்டிக்கு இதுவே போதும் அதிகம் என்று நினைத்தவள் மீண்டும் ஒரு முறை பிம்பத்தை பார்த்தவள் சென்று விட்டாள்.

நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் அவர்களது குடும்பங்கள் என்று வருகை தந்திருக்க.

அந்த பெங்களூரின் இரவில் செல்லும் வாகனங்கள் சாலையோர தீப்பந்தம் போல் மனிதன் செய்த தீப்பந்தத்தின் அழகில் இன்னும் சற்று அழகாக காட்சியளித்தது பல நிறுவனங்களை தன்னுள் அடக்கிய அந்த நகரம்.


கொலாகரமாக இருந்த அந்த பார்ட்டியில் பப்பே முறையில் உணவு பரிமாற்றம் குடிப்பதற்கு பானங்கள் என அனைத்தும் சிறப்பாக இருந்தது ராஜதேவ் ஏற்கனவே அந்த விழாவிற்கு விரைவாக வந்திருந்தார் அந்த விழாவிற்குள் அப்பொழுது நுழைந்த வேதாசலத்தின் காரை எதிர்நோக்கி இருந்த திலகா உள்ளே நுழைந்தவுடன் தன் கணவரை கூப்பிட்டு உங்க பிரண்ட் வந்துட்டாங்க வாங்க போய் கூப்பிட்டு வரலாம் என்ற இருவரும் சென்று வரவேற்றனர்.

திலகாவிற்கு மிருதாளினி மீது ஒரு தனி அன்பு உண்டு அதனால் தன் மகனுக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் சிறுவயதில் இருந்து இவளை பார்த்த தனால் இவளின் குணங்களை தெரிந்திருந்த இவர் எப்பொழுதும் இவள் தன் மகனுக்கு மருமகளாக வரவேண்டும் என்று எண்ணம் தோன்றியிருக்கிறது அதனால் இவர்கள் இணைந்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது திலகா தான்.


வேதாச்சலம் மற்றும் ராஜதேவ் கட்டி அணைக்க சாரா வாத் கையை அசைத்து ஹாய் அங்கிள் , ஹவ் ஆர் யூ என்று நலன் விசாரித்தான் அவனின் பேச்சில் மகிழ்ந்தார்.


ஆண்கள் ஒரு புறம் பேசிக் கொண்டிருக்க சிவகாமியும் திலகாவும் தங்களது நலன்களை விசாரித்துக் கொண்டு மிருதாளனியின் பக்கம் திரும்பிய திலகா

"என் மருமக ரொம்ப அழகா இருக்கா ",

என்ற சிவகாமியின் பக்கம் திரும்பி சொல்ல மிருக்கு அங்கு நிற்கவே முடியவில்லை விட்டால் எங்காவது சென்று விடலாம் என்று தோன்றியது.


ராஜதேவ் வேதாச்சலத்திடம் நாமலே பேசிட்டு இருந்த எப்படி பசங்க பேசட்டும் என்று அவர்களுக்கு தனிமையை கொடுக்க விரும்பிய பெரியவர்கள் மிருதாளினி மற்றும் சாரா வாத் இருவரையும் தனியாக பேச சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.

சாரா வாத்திற்கு முதலில் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை தடுமாறினான் சிறுவயதில் இருந்து இருவரும் நண்பர்கள் தான் இருப்பினும் திருமணம் என்று வந்தால் அனைவருக்கும் உள்ள அதே உணர்வு தான் இவர்களுக்கும் மெதுவாக தலையை உயர்த்தி சாரா வார்த்தை கணக்கிட்டாள் அவனை பல நாள் கழித்து பல வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் பார்க்கிறாள் பெண்களை கவரும் அழகில்தான் இருந்தான் அது ஏதும் மூளையில் பதியவில்லை ஒரு தயக்கத்துடன் பேச ஆரம்பித்தான் சாராவாத்

"ஹாய் மிரு எப்படி இருக்க"

"நான்.....நல்லா இருக்கேன் "

"நீ ஏன் இத்தனை நாள் இந்தியாவுக்கு வரவே இல்ல "

"அது அங்கேயே படிச்சிட்டு இருந்தேன் இந்தியாவிற்கு வர பிடிக்கவில்லை அதனால் அங்கேயே ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன் இப்பொழுது தந்தையால் நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்று வற்புறுத்தியதால் இந்தியாவிற்கு வந்தேன் "

என்று கூறினான்.

"ஓ...." என்ற பதில் மட்டுமே மிருதலாவிடம்.


சாரா வாத் தயங்கிய வாரே-

"மிரு ஐ அம் சாரி டு சே தட்",

என்று சொன்னவனை தரையில் கோலமிட்டு இருந்தவள் வேகமாக நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் அவன் இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்லப் போகிறான் என்று காத்திருக்க.

"உனக்கு கேட்க கஷ்டமா தான் இருக்கும் எனக்கு வேற வழி தெரியல அம்மா சொன்னதால தான் இங்க வந்தேன்"

என்று நிறுத்தி அவளை உற்றுப் பார்த்தவன்

"ஐ திங்க் உனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம்"

என்று இழுத்தவன் அவள் வேகமாக மண்டையை ஆட்டினாள் .

"ஓகே நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் சோ நீ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை அதனால உன்னை புடிக்கல நீ அழகா இல்ல அந்த மாதிரி எல்லாம் எந்த ரீசன்சும் கிடையாது நம்ம வந்து எப்பவுமே பிரண்ட்ஸ் தான் நம்ம சின்ன வயசுல இருந்து பிரிஎண்ட்ஸ் சோ இப்பவும் நம்ம பிரண்ட்ஸாகவே இருந்திடலாம்".


அவன் கூறியதைக் கேட்ட மிருதுளா

"எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல பட் எங்க அப்பா என் மேல ரொம்ப நம்பிக்கை அவர கஷ்டப்படுத்த விரும்புல போர்மாலிட்டீஸ் ல முடிச்சு கேட்கும் பொது சொல்லிக்கலாம் னு இருந்தேன் ...

உங்க கிட்ட பேசலாம்னு வந்தேன் இத உங்ககிட்ட சொல்லலாம்னு நெனச்சேன் அதுக்குள்ள நீங்களே சொல்லிட்டீங்க "

சொல்லும்போது மிருதுளாவின் முகம் 1000 வாட்ஸ் பல்ப் போன்று மின்னியது கண்டிப்பா எங்க அப்பா கிட்ட நான் சொல்லிடுறேன் நீங்களும் வந்து இன்னிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு எங்க அப்பா கிட்ட சொல்லிருங்க அப்படி இல்லன்னா உங்க அப்பா கிட்ட சொல்லுங்க இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடலாம் என்று அவனுக்கு இவள் ஐடியா கொடுக்க இருவரும் புன்னகைத்துக் கொண்டனர் இப்பொழுது தான் பழைய நண்பர்களைப் போல பேச ஆரம்பித்தனர் இதை அனைத்தையும் தூரத்தில் இருந்து திலகாவும் சிவகாமியும் பார்த்துக் கொண்டிருக்க இருவருக்கும் சம்பந்தம் தான் போல என்ற அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.


இருவரும் அவர்களது குடும்பத்துடன் இணைய சிவகாமி திலகா பேச சென்று விட வேதாச்சலம் ராஜதேவ் சாராவாத் மூவரும் அவர்களது கம்பெனிக்கு வரப்போகும் சிறப்பு விருந்தினரை அழைக்க சென்று விட்டனர் தனியாக இருந்தது மிரு மட்டும்தான்.

அவள் எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டாலோ அந்த விடயம் இவ்வளவு எளிமையாக முடியும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை அதனால் மனதில் தோன்றிய மகிழ்ச்சியில் ஆதாரமாக முகத்தில் புன்னகையுடன் வளம் வந்தாள் மிருதுளா அங்கு விளையாடும் குழந்தைகளுடன் தானும் விளையாட ஆசை கொண்டாள் இருப்பினும் அவர்களை ரசித்தவாறு அமர்ந்திருந்தாள் இதை முதலில் கார்த்திக் கிடம் சொல்ல முற்பட்டாள் .


இருக்கையில் அமர்ந்தவாறு எப்பொழுது இந்த பாட்டி முடியும் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்.

சென்னையில் வளர்ந்து வரும் டாப் நிறுவனங்களில் புதிய சிந்தனைகளுடன் மிகச் சிறப்பாக வளர்ந்து வரும் இளம் வயதில் பொறுப்பாகவும் சிறப்பாகவும் செயல்படும் தேஜ் குரூப்ஸ் கம்பெனி நம்முடன் இணைந்து செயல்படுவது நல்ல முன்னேற்றத்தை தரும் என்று பேசிக்கொண்டு இருந்தார் ராஜதேவ் மேடையில் அந்த சிறப்பு விருந்தினர் இப்பொழுது இன்னும் சில வினாடிகளில் வரப்போகிறார் என்று வரப் போகும் விருந்தினரை போற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது சடன் பிரேக் போட்டு நின்றது உயர் ரக கார் அதிலிருந்து தன் கூலரை கழட்டியவன் அவனது உயரத்திற்கு நிமிர்ந்தவாறு நடந்து வந்தவனை கவனித்த ராஜதேவ் பூங்கொத்தை எடுத்து தயாராக வைத்தார் அவன் நடக்கும் தோரணையே சொல்லியது அவனின் திமிரையும் அவன் உறுதியையும் எதை செய்ய நினைத்தாலும் அதை செய்தே தீருவேன் எனும் பிடிவாதமும் இருக்க அவனது பார்வையோ கழுகு பார்வையை போல் எதிரியின் பலவீனத்தை கணித்து விடுபவன் ஆறடிக்கும் சற்று உயரமாகவே இருக்க அடர்ந்த சிகை ஆணுக்கு அழகு சேர்க்கும் தனது தாடியை டிரிம் செய்து மிகவும் நேர்த்தியான உடை அணிந்து கருப்பு நிற கோட் சூட்டில் கம்பீரமாக நடந்து வந்தான் அவன் நடந்து வரும் தோரணையை பார்த்து அனைவரும் ஒரு நிமிடம் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர் அவனை எதிர்பார்த்து இருந்த ராஜதேவ் இன் முகத்துடன் பூங்கொத்தை கொடுத்து விழாவிற்கு வரவேர்த்தார்.
 
Last edited:
Messages
37
Reaction score
20
Points
8
story nalla irukka ...........
exam irukku athu illa ma story nalla pogathonu thonuthu
sry dr nxt epi poda try pandra pa
 
Active member
Messages
276
Reaction score
183
Points
43
ஸ்டோரி நல்ல போகுது சிஸ்டர். உங்க எக்ஸாம் எல்லாம் முடிஞ்சதும் யுடி போட டிரை பண்ணுங்க சிஸ்டர். ஆல் த பெஸ்ட் ஃபர் யுவர் எக்ஸாம்ஸ் சிஸ்டர்😊
 
Top