17
அபய்க்கு இருப்புக்கொள்ளவில்லை.. குட்டி போட்ட பூனை போல அலுவலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்க ஊழியர்களுக்கும் அவனது பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டது
“விஷ்ணு எங்கே?...இதென்ன பெட்டி ரிசப்ஷன்ல வச்சிருக்கீங்க?” அவனுடைய அழகும் நேர்த்தியுமான பளபள அலுவலகத்தின் வாசலில் இருந்த மரப்பெட்டியை கண்டு அவன் சத்தம் போட
வாசலில் இருந்து ஓடிவந்த விஷ்ணு “ஐயோ சார் இதை இப்போத்தான் இறக்கினோம்..” என்று அங்கிருந்து அகன்று கொண்டிருந்த அலுவலக வண்டியை காண்பித்தவன் “இதோ ஸ்டோருக்கு கொண்டு போய்டறேன்” என்றபடி எடுத்துக்கொண்டு போய் விட பிடரியை தடவிக்கொண்டவனுக்கு ரிசப்ஷனிஸ்ட்டின் பார்வை ஆனாலும் உனக்கு இதெல்லாம் ஓவரா தெரியலையா என்று கேட்பது போல தோன்றியது..
சங்கடமாய் எங்கோ பார்த்துக்கொண்டு அடுத்த மாடிக்கு சென்றவன் அங்கேயும் எல்லாம் சரியாய் இருப்பதை உறுதி செய்தபடி மூன்றாவது மாடியை பார்க்க சென்றான்.
அங்கேயும் சுழன்று பார்வையிட்டவன் போதும் என்று தன்னுடைய நான்காம் மாடியில் போய் அடைந்து கொண்டான்.
எப்போதுமே அலுவலகம் ஒரு குறையும் சொல்ல முடியாமல் வாவ் சொல்லவைக்கும் படிதான் இருக்கும் ஆனாலும் இன்றைக்கு எல்லாமே மிக நன்றாய் இருந்தாக வேண்டும் என்று மனதுக்குள் ஒரு அலைப்புறுதல்
நிரு வரப்போகிறாளே.. முதல் பார்வையிலேயே அவளுக்கு பிடிக்க வேண்டும், பெருமைப்பட வைக்க வேண்டும் என்று ஸ்கூல் பையனை போன வாரத்திலிருந்து மனதுக்குள் ஒரே துள்ளல்..
இந்த நாளுக்காய் எத்தனை வருஷம் காத்திருந்தான்?
காதல் சொல்லிகொள்ளாத காதலியுடன் மனஸ்தாபம் வேறு..இதில் என்னவென்று இதையெல்லாம் பகிர்ந்து கொள்வது? மனதின் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாமல் முட்டி நிற்பதில் அபய் அவனுடைய அன்னையை கொண்டு பிறந்து விட்டிருந்தானே..
யாருடனும் அவன் இதுவரை உரிமையெடுத்து பழகியதில்லை..
அவனுடைய தாயார்..நீ என்னிடம் இருந்து வந்தாய் ஆனால் என்னுடையவன் இல்லை உன் வாழ்க்கை உன்னுடையது என்ற கொள்கை உடையவர் கொஞ்சி கொஞ்சி எல்லாம் அவன் வளர்க்கப்படவே இல்லை.. தாத்தாவுக்கு ஆதவனை சுத்தமாய் பிடிக்காது ஆக அபயுடன் அவருக்கு ஈடுபாடு வரவில்லை..இவனும் அங்கே போவதே இல்லை.. அம்மாவை கூட தன்னுடைய உலகத்தில் இணைத்திராதவன் முதன் முறையாய் ஒருத்தியை தன்னுடைய வட்டத்துக்குள் அனுமதித்தான்.
அம்மா, அப்பா, தாத்தா என்று அவனறிந்த உறவுகள் எல்லாருக்குமே அவனை விட்டுக்கொடுத்து தானே பழக்கம்.. யாருமே அபய் தான் வேண்டும் என்று முன்னிலை கொடுத்ததில்லை.. அவன் அப்படி எதிர்பார்த்தும் வளரவில்லை.
அப்படிப்பட்டவனுக்கு அவனுக்கே அவனுக்காய் ஒருத்தி என்ற உணர்வு வந்த போது காய்ந்து போன நிலம் மழைத்துளியை தனக்குள் சுருட்டி ஒளித்துக்கொள்வதை போல அவளையும் உரிமை கோரி நின்றதே இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்.
எனக்கு அவள் தான் எல்லாம்..அதே போல் அவளுக்கும் நான் தான் எல்லாம்.. நான் அவளை எங்கும் விட்டு தர மாட்டேன், அவளும் என்னை விட்டுத்தர கூடாது என்ற எதிர்பார்ப்பெல்லாம் எப்படி அவள் மேல் முளைத்தது என்று அவனுக்கே தெரியவில்லை..
அப்போதெல்லாம் ஆதவன் அவனுக்கு எதிரி... இப்போது வலுக்கட்டாயமான அருகாமையில் பரஸ்பர பிரசன்னத்துக்கு இருதரப்பும் பழகிப்போன அமைதி தான் தொடர்கிறது.. அதுவும் அப்போதெல்லாம் அவருக்கு சர்ஜரி முடிந்து அனிருத்தன் வந்த பிறகு அவரும் அவனிடம் அனி அனி என்று உருகுவதை காணும் போதெல்லாம் தனக்கு நேர்ந்த அநியாயம் அவனை வாள் கொண்டு அறுக்கும்..
நீங்கள் காதலித்தால் உயிரே போனாலும் ஒரு நிலையில் நின்றிருக்க வேண்டும்.. நடுவில் அவனுடைய அம்மா வந்து பெற்றவர்களை வைத்து வற்புறுத்தியதற்காய் அவரை திருமணம் செய்திருக்க கூடாது.
செய்து விட்டால் வாழ்ந்திருக்க கூடாது.. வாழ்ந்து விட்டால் அந்த குழந்தையில் எனக்கும் பொறுப்பு இருக்கிறது என்ற நினைப்பு இருந்திருக்க வேண்டும்.
விவாகரத்து ஆனது தான் சாக்கென்று காதலியுடன் சேர்ந்துகொண்டு பழைய வாழ்க்கையை திரும்பி பார்ப்பதே அவரது மனைவிக்கு செய்யும் துரோகம் என்று எண்ணி அவனது பிறப்பை கூட தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்த நீங்களும் அம்மாவை போல குற்றவாளி தானே..
இரண்டு பேரும் நீயா நானா என்று நின்று வேண்டாவெறுப்பாய் என்னை பூமிக்கு கொண்டு வந்து விட்டு ஆளுக்கு ஒரு பக்கம் போய்விட்டீர்கள்.. யாருக்குமே வேண்டாதவன் நான் என்ற உணர்வை என்ன மேலே போயும் எவ்வளவு சாதித்தும் அவனால் விளக்கி தள்ளவே முடியவில்லை..
அப்பா மேல் அத்தனை வெறுப்பிருந்தும் ஏகலைவனாய் தூரத்தில் இருந்து அவரது தொழிலை ரசித்து, பாஷன் டிசைனிங் படித்த தன் மேலேயே அவனுக்கு வெறுப்பும் சுய பச்சாத்தாபமும்
இறுதி நேரம் அம்மா கேட்ட போது.. அவருடைய திறமைகளை நீயும் வளர்த்து அந்த பாதையிலேயே போனாயில்லையா..அங்கே போய் நிதமும் அவமானப்படு..அது தான் உனக்கு தண்டனை.. அப்படியாவது அதில் இருந்து நீ வெளியே வருகிறாயா பார்ப்போம் என்று ஒரு வகையான சுய தண்டனை மனோபாவத்தில் தான் அடீராவுக்குள் அவன் நுழைந்தான்.
அங்கே இப்படி ஒருத்தி எனக்கு பார்த்தசாரதியாய் கிடைப்பாள் என்றோ என் வாழ்க்கையின் மையமாய் மாறிக்கொள்வாள் என்றோ அவன் கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை.. பெற்றவர்களின் வாழ்க்கையே காதல், திருமணம் முதலான அவனது மெல்லிய உணர்வுகளை சிதைத்து சகமனிதர்கள் மீது எதற்கும் தங்கியிருக்க கூடாது என்று ஓர்மமாய் அவனை ஆக்கியிருந்ததே..
ஆனால் அவளை அவனுடையவள் என்று முடிவு செய்த பிறகு அவள் மேல் வைத்த காதலையே அவளுக்கு பாரமாக்கி விட்டேன் என்று அப்போதெல்லாம் அவனுக்கு புரியவில்லை.. அவள் அவனுடைய மனதை உடைத்ததும் எனக்கு யாரும் வேண்டாம்.. என்று மூர்க்கமாய் அவள் உட்பட எல்லாரையும் உதறி தள்ளினான்.
ஆனால் மெல்ல மெல்ல அவளது மௌனமான பிரசன்னமே அவனது காயங்களை மாற்றியது.. அது உடனே எல்லாம் நிகழ்ந்து விடவில்லை.. அவள் மேல் இருந்த கோபம் குறைந்ததும், நான் அவளுக்கு வேண்டாம் என்று இன்னொரு படிக்கு மனம் தாவிற்று.. ஆனால் அதிலும் தோல்வியாகி கடைசியில் எதுவாயிருந்தாலும் அவள் படித்து முடிக்கட்டும் அவளை குழப்பி நெருக்கடிக்க வேண்டாம் என்ற நிலைமையில் வந்து கல்லூரி முடிப்பதற்காய் அவன் காத்திருந்தான்.. கூடவே வாழ்க்கையில் யாரை வெறுக்கிறேன் என்று நினைத்தானோ அவரும் அவன் மனதில் ஒரு மென் கோணத்தை கைப்பற்றி கொண்டு விட்டார்..யாருமே நம்மை வேண்டுமென்றே விலக்கி தள்ளவில்லை..சூழ்நிலையே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள நிறைய காலம் எடுத்தது அபய்க்கு.
வர்ணாவை ஆரம்பித்தது உடனேயே ஆதவனுக்கு தெரியும். அவர் அதை அடீராவோடு இணைப்போம் என்று ஆன மட்டும் முயற்சி செய்தார்.. அனிருத்தனுக்கு ஆடை வடிவமைப்பு தெரியாது ஆனால் அவன் நிர்வாகத்தில் புலி. அபயக்கு நிர்வாகம் சரியாய் வராது, அவன் ஆடை வடிவமைப்பில் புலி..என்ன தான் சண்டை போட்டுக்கொண்டாலும் காலத்தோடு அவர்களுக்குள் உருவாகியிருந்த சகிப்புத்தன்மையும் சேர, இருவரும் சேர்ந்தால் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவார்கள் என்பது அவரது எண்ணம்..
அபய் மறுத்து விட்டான். அபராஜிதன் என்ற மனிதன் அவனுடைய பின்னணிகளால் உருவானவன், தொழில் அவனது அடையாளம், அவனில் ஒரு பகுதி.. அதில் ஆதவனின் சாயல் இருப்பது தான் அவனை பிரதிநிதித்துவப்படுத்தும், ஆதவனோடு கூட இருப்பதல்ல..அப்படியெல்லாம் நெருக்கமாய் உறவு கொண்டாட அவன் மனம் தயாரில்லை..
எப்போது வேண்டுமானாலும் அவன் விலகிக்கொள்வான் தயாராக இருங்கள் என்று மூன்று வருடங்கள் முன்னரே சொல்லியாயிற்று..
அபயக்கு பின்னரான அடீராவின் பாதையை அவர்கள் கண்டுகொண்டதை அறிவித்த போது தான் நிரு பாவம் விஷயம் தெரியாமல் உடைந்து மொத்தமாய் அவனுடைய கனவுகள் எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு போய்விட்டாள்..
அது எனக்கும் வேண்டியது தான்..என்னையும் என் வரலாறையும், உன் உடைந்து போன மனதையும் தான் பார்த்தேனே தவிர அவளை பற்றி சிந்திக்கவில்லை..அவளை சுற்றி எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று பார்த்த எனக்கு அவளது மனதை பார்க்க தெரியவில்லை.. எல்லோரும் என்னை நோகடித்தார்கள் என்பதற்காய் நான் அவளை நோகடித்தது அநியாயம் இல்லையா?
அவள் அவனுடைய வாழ்க்கையின் நங்கூரம் தான்.. அவளுக்கு தெரிந்தோ தெரியாமலோ அவனுடைய வாழ்க்கையை போக வேண்டிய இடத்துக்கு நகர்த்திக்கொண்டே செல்கிறாள்.. இப்போதைய அவளது வருகை கூட அதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருந்ததே. அவள் ஈமெயிலில் இணைத்திருந்த படங்களில் மீண்டும் ஒரு முறை கண்களை பதித்தான் அவன்
அடடே அவ்வளவு நல்லவனா நீ? எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறாய்? அவனது உதடுகளின் ஒரு ஓரம் லேசாய் சிரிப்பில் மேலெழுந்தது.
சரியாக அந்த நேரம் ரிசப்ஷனிஸ்டிடம் இருந்து போன் வரவே அந்த சிரிப்பு இன்னும் பெரிதானது..
வாங்க மேடம்.. உல்லாசமாய் வரவேற்றது அவன் மனம்.
“சார் வீ ஆர் எஸ்டேட்ல இருந்து இரண்டு பேர் உங்களோட பத்து மணி மீட்டிங்குக்கு வந்துருக்காங்க..மேலே அனுப்பவா?”
“அனுப்புங்க,,, “
லிப்ட் நான்காம் மாடியில் திறக்கும் மெலிதான டிங் சத்தத்தை தொடர்ந்து அவர்கள் கான்பரன்ஸ் ஹாலுக்குள் சென்று விட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு எழுந்தவன் உறுதியான நடையுடன் அறைக்குள் நுழைந்தான்.
அவனுக்கு எதிரே கண்களில் ஏகப்பட்ட உணர்வுகளை பிரதிபலித்துக்கொண்டிருந்த விழிகளில் தான் அவனது பார்வை நேராக பட்டது. எத்தனை மாற்றம் அவளில்! சட்டென்று சுற்றியிருந்த உலகமே மறந்து போய் அவளை அள்ளி அணைத்து தனக்குள் இறுக்கிக்கொள்ள வேண்டும் என்று கிளம்பிய பேராவலை பக்கத்தில் இருந்து புன்னகைத்த பெண்ணை கண்டதும் அடக்கி
“ஹலோ.. அபராஜிதன்” என்றபடி கைகளை நீட்டினான் அபய்
வெண்ணிலாவை தொடர்ந்து அவனுடைய கைக்குள் தன்னுடைய கரங்களை வைத்த நிருவோ அபயின் கண்களை சந்திக்க முடியாமல் ஆனால் அவனை பார்க்காமல் இருக்கவும் முடியாமல் திணறினாள்..அவர்களுடைய கடந்த காலங்கள் எல்லாம் யுகங்களை கடந்து நடந்தது போல அவளுக்குள் பிரமை தட்டிற்று
கமான் நிரு.. பீ ஏ ப்ரொபெஷனல்.. ஒரு வருங்கால பிரஷாந்த் கிஷோர் இப்படில்லாம் தடுமாறப்படாது..என்று அவள் மனமே ஊக்கப்படுத்துகிறதா நக்கல் செய்கிறதா என்று தெரியாமல் அடித்து விட்டு போக ஒரு வழியாய் அபய் மேல் விழிகளை பதித்தாள்.
அவனும் அவளையே தான் பார்த்திருந்தான்.. அழகா இருக்கான் என்பது தான் முதல் முதலாய் நிருவின் மனதுக்குள் வந்தது.
எப்போதுமே அவன் தோற்றம் அவளுக்கு அழகுதான்.. ஆனால் இப்போது வேறு விதமான அழகு. தன்னுடைய சொந்த இடத்தில், அதுவும் தானே வெற்றிகரமாய் தொழில் நடாத்தும் இடத்தில் இருப்பதோ என்னமோ கண்களில் பளபளப்பு, முகத்தில் தேஜஸ் எல்லாம் கூடி அவனது அழகை பன்மடங்காக்கி இருந்தது.
எவ்வளவு எதிர்பார்த்திருந்தாலும், வர்ணாவின் பிரமாண்டமும் அழகும் அவளது கண்களை விரிய வைத்திருந்தது. இதுவே ஆறு மாதம் முன்பு இங்கே வந்திருந்தால் கோபப்பட்டிருப்பாள், ஏமாற்றப்பட்டதாய் குன்றியிருப்பாள்.. இப்போது அவளது மனம் நிறைவாய் இருப்பதோ என்னமோ அவளுக்கு கோபமே வரவில்லை.. சந்தோஷமும் பெருமிதமும் மட்டும் தான் தோன்றியது. அபய்க்கும் அவளுக்குமான உறவு என்னவாக இருந்தாலும் அவன் நன்றாய் இருக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆழ் மனதின் ஆசை அது நடக்கும் போது மகிழாமல் இருக்குமா?
நிரு ..ஏய் நிரு..ரகசியமாய் காலை மிதித்த வெண்ணிலாவின் குரலில் குழப்பமாய் பார்த்தவள் தன் கரங்கள் இன்னும் அபயின் கரங்களுக்குள் இருப்பதையும் அவன் தன்னையே பார்த்திருப்பதையும் பார்த்து தடுமாற
“உங்க பெயரை சொல்லலையே” என்றான் அபய்..கன்னக்கதுப்புக்கும் சிரிப்பு ஒளிந்து கொண்டிருந்தது...
பல்லைக்கடித்தவள் நிருதி ...நிருதி மாணிக்கம் என்றாள் முறைப்பாய்.
அவன் எப்படி ஆரம்பிக்கிறானோ அதை பிடித்துக்கொண்டு தொடர்வோம் என்று தான் எண்ணியிருந்தாள்,,ஆனால் பெயரே தெரியாதது போலவா நடிப்பான்?
ஒன்று ஒன்றரை வருஷம் நிதி நிதி நிதி என்று கொண்டிருந்து விட்டு பிறகு மீதி வருஷங்கள் மாணிக்கம் மாணிக்கம் என்று என் அப்பாவின் பெயரை வேறு விடாமல் ஏலம் விட்டுவிட்டு இப்போ என் பெயரே உனக்கு தெரியாதா?
அவனும் வட்ட மேசையில் அவன் இடத்தில அமர வெண்ணிலாவோடு நிருவும் அமர்ந்து கொண்டாள்..
அவனே பேச ஆரம்பித்தான். “உண்மையை சொல்லணும்னா..உங்க ஈமெயில் எனக்கு ஆச்சர்யம் தான். நான் ரொம்ப நாளா தேடிட்டிருந்த விஷயம், அது தான் உடனேயே உங்களை பார்க்கணும்னு வர சொன்னேன்..”
இதுக்கு ஒரு அர்த்தமா ரெண்டு அர்த்தமா? நிருவின் நெற்றி சுருங்கியது.
“நீங்க தான் இனிமே சொல்லணும்.. என்கிட்டே உங்க எதிர்பார்ப்பு என்ன?” முதலாவதாய் இருந்த வெண்ணிலாவிடம் சொல்வது போலிருந்தாலும் பார்வை நிருவிடம் இருந்தது
அடேய்! இது டபிள் மீனிங்கே தான்.
யூ ஆர் ஏ ப்ரொபெஷனல்,,வருங்கால பிரஷாந்த் கிஷோர்..ரிமெம்பர்?
அதில் ஒரு அர்த்தத்தை மட்டும் பிரித்தெடுத்து நிரு விளக்கமாய் அவனுக்கு பதில் சொன்னாள்.
துளசியை பார்த்தது, அவள் பொழுதுபோக்குக்காய் மரப்பட்டை, இலைகள், பூக்களை வைத்து இயற்கைச் சாயத்தை உருவாக்கி துணிகளில் வரைவது, அவளது கேட்டற்குறைபாடு, அவள் வெளியே அதிக தூரமெல்லாம் பயணிக்காமல் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கிறாள், அதனால் உங்களிடம் பேசாமல் அவளுக்கு எந்த நம்பிக்கையும் கொடுக்க கூடாது என்றே அவளிடம் எதுவும் சொல்லவில்லை என்றபடி துளசியிடம் இருந்து வாங்கி வந்த அந்த சதுரத்துண்டுகள் சிலவற்றை அபயின் பக்கமாய் தள்ளினாள்
அவனது கைகள் அவற்றை எடுத்து அந்த வர்ணத்தீற்றல்களில் விரல்களை மென்மையாய் ஓடவிட நிருவோ அவனது கண்களையே பார்த்திருந்தாள்
ஸ்வாமிக்கு படைத்த பூக்களை ஏந்தும் பக்தன் போல அவனது விழிகளில் தோன்றிய அந்த பாவமே போதுமே .. அவளுக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது..
இட்ஸ் பியூட்டிபுல்... என்று சொல்லியபடி அந்த ஓவியங்களை விரல்களால் வருடிக்கொண்டே இருக்க நிருவின் மனமோ பறந்தது.. என்னமோ தவறி விழுந்த குஞ்சுகளை தாய்ப்பறவையின் கூட்டில் சேர்த்தது போல அந்த ஓவியங்களை அபயிடம் கொண்டு வந்து சேர்த்ததும் அதே உணர்வை தான் அவளுக்கு கொடுத்தது..
“சரி. இதில் உங்களோட எதிர்பார்ப்பு என்ன?” அவன் மௌனத்தை உடைக்க
இப்போது வெண்ணிலா பேசினாள். “எங்களுடைய கம்பனியுடைய வருடாந்த விழா வருகிறது. கடந்த வருஷங்கள் கம்பனிக்கு நல்லதா இருக்கலை சார். அதனால் எங்களோட நன்றியை செலுத்தும் படியா கிளையன்ட்சுக்கும் பங்குதாரர்களுக்கும் ஒரு பெரிய ஒன்றுகூடல் நடாத்தணும்னு நினைக்கிறோம்..அங்கே எல்லாருக்கும் பரிசாக கொடுக்கக்கூடிய கார்ப்பரேட் பாக்கேஜ் பற்றி யோசிக்கும் போது தான் நிரு இந்த ஐடியாவை கொண்டு வந்தா”
என்று விட்டு வெண்ணிலா அவளை பார்க்க “ துளசி, தேயிலை இலைகளின் சாயத்தை வச்சும் இந்த மாதிரி துணிகளில் பெயின்ட் செய்யலாம்னு சொன்னாங்க. எங்க எஸ்டேட் தேயிலையை வச்சே இப்படி ஒரு ப்ராடக்ட் செய்தால் எங்களுக்கும் நாங்கள் அதை கொடுப்பவர்களுக்கும் அர்த்தமுள்ளதா இருக்கும். இப்போ அவங்க பொழுதுபோக்குக்கு பண்றாங்க..திறமை இருக்கு பாட்டென்ஷியல் இருக்கு. ஆனால் உங்களை மாதிரி ஒரு டிசைனர் கூட அவங்க வேலை செய்தாங்கன்னா அது ஒரு அர்த்தமுள்ள ஆடையாவோ ஞாபகார்த்த பொருளாவோ மாறும்னு நினைக்கிறோம்.. என்ன இருந்தாலும் நாங்கள் ஒரு வளர்ந்து வர்ற எஸ்டேட் தான்..ஆக ஒதுக்கப்பட்டிருக்கும் பட்ஜெட்டுக்கு மேலே போக முடியாது..அதை பத்தி தான் உங்க கிட்ட பேசலாம்னு” என்று நிரு தொடர
கையை உயர்த்தி அவளை இடைமறித்தவன் “எஸ்டேட் தேயிலையை வச்சே எடுக்கற சாயத்தில் ஒரு ஞாபகார்த்த பொருள் பண்ண நினைக்கிறீங்க.. உங்க ஐடியா ரொம்ப நல்லா இருக்கு, அது வொர்க் அவுட் ஆகும் பட்சத்தில்..” என்றவன் பட்ஜெட் விஷயம்..என்று ஆரம்பித்து நான் முதலிலேயே சொன்னேன்.. இது சமீப காலமா நான் தேடிட்டு இருக்கற விஷயம், உண்மையான இயற்கை சாயத்தை தேடி சலிச்சே போயிட்டேன், நீங்க கொண்டு வந்த விஷயம் உண்மையா இருக்கும் பட்சத்தில் பட்ஜட் பத்தின கவலை உங்களுக்கு வேணாம்..அந்த ஆர்ட்டிஸ்ட் உங்களுக்கு வேண்டிய பொருளை பண்ணி கொடுக்கும் போது அதற்கான செலவை பார்த்தால் போதும்.. என்று விட்டான்
வெண்ணிலா எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க
நிருவுக்கும் அதே கேள்வி தான் நாவில் நின்றது
முதலில் நான் இந்த சாம்பிளை லாபுக்கு அனுப்பணும், சாயத்தோட தன்மை, அது எவ்ளோ காலம் நிலைச்சு நிற்கும், சாயம் போகுமா? எப்படி மெயின்டெயின் பண்ண முடியும் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். பொதுவா மூணு நாலு நாள்ல பதில் சொல்லிடுவாங்க..அவங்க எனக்கு பதில் சொன்ன அடுத்த நாள் நானே அங்கே வர்றேன் என்றான் நிருவையே பார்த்த படி...
நானே அங்கே வர்றேன்.. அவ்வ்
இவளுக்கு படபடப்பேறி கன்னம் லேசாய் சூடாக தொடங்கியது. அடங்கு மனமே அடங்கு.. இப்படியெல்லாம் பட்டென்று காலில் விழுந்து என் மானத்தை வாங்காதே
வெண்ணிலா நன்றிகளை சொல்லிக்கொண்டிருக்க நிருவும் இயந்திரமாய் நன்றி சொன்னாள்.. முடிந்ததா போகணுமா? என்று மனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது அவளுக்குள்..
“திரும்பவும் என்னை இந்த ப்ரபோசலுக்காக தெரிந்து கொண்டதற்கு நன்றி. இது மார்க்கட்டில் நிறைய சர்ச்சை கிளப்பி பேசுபொருளா இருக்கற விஷயம். எல்லாம் சரியா நடக்கும் வரை இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்..”
புரியுது சார்.. என்றபடி மீண்டும் வெண்ணிலா நன்றி சொல்லிக்கொண்டு எழ
நிருவும் பின்னாலேயே எழுந்தாள்.
அவர்கள் அந்த அறை வாசலை விட்டு வெளியேற... “உங்களுக்கு வர்ணாவை சுற்றி பார்க்கணும்னா.... பார்க்கலாம்” என்று தயக்கமான அபயின் குரல் கேட்க நிரு பட்டென அவன் முகத்தை பார்க்க அப்படியே ஐந்து வருஷம் முன்னான அபய் தான் அவளுக்கு தெரிந்தான்..அவளுக்கு புரிந்தது.. வர்ணாவை அவளுக்கு காண்பிக்க வேண்டும்..அதை ப்ரொபெஷனல் மீட்டிங்குக்கு வந்த இடத்தில் எப்படி கேட்பதென்று தெரியாமல் சங்கடமாய் கேட்டு விட்டான். பட்டுக்குட்டி என் ட்ராகன் குட்டி,, அடச்சே.. மானங்கெட்ட மனசே
“வித் ப்ளெஷர் சார்..” என்று வெண்ணிலாவே நிலைமையை கையில் எடுத்துக்கொண்டு சிரித்தபடி முன்னே செல்ல நிரு அவனையே பார்த்துக்கொண்டு பின்னே நடந்தாள்.
வெண்ணிலாவை இருவரும் மறந்தே போயினர். நான்காம் தளத்தை காண்பித்து விட்டு லிப்டில் முதலில் கீழ்த்தளத்துக்கு அழைத்துப்போனவன் குழந்தை தன்னுடைய முதலாவது ஓவியத்தை காண்பிப்பது போல ஒவ்வொன்றாய் அவர்களுக்கு சுற்றிக்காட்டிக்கொண்டு வந்தான்..
ப்ராடக்ஷன் எங்கே நடக்கும்? வர்ணாவுக்கு பாக்டரியும் இருக்கா சார்?
இப்போதைக்கு வெளியே சப் கான்றாக்ட் தான் பண்றோம்..கூடிய சீக்கிரம் வர்ணாவுக்குன்னே ஒரு பாக்டரியும் வந்துரும்.
வெண்ணிலா முன்னே நடக்க அபய் எப்படியோ பின் தங்கி நிருவின் அருகிலேயே நடந்து கொண்டிருக்க இவளுக்கு மேகங்களின் மீது நடப்பது போலத்தான் தோன்றியது..
எல்லாம் மூன்றாவது மாடி போகும் வரை தான்..
இது தான் என்னுடைய கோர் டீம் இருக்கும் இடம்..வர்ணாவின் டிசைன் டீம் இங்கே தான் இருப்பார்கள் என்று சொல்லிக்கொண்டே அவன் மூன்றாவது மாடியில் லிப்டில் இருந்து வெளிப்படவே
நிரு!!! என்ற குரல்கள் பல திசைகளிலும் இருந்து அவளை சூழ்ந்து கொண்டன..
அடப்பாவிகளா மொத்தமா அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டானா என்று அபயை நிரு பார்க்க சிரிப்பில் லேசாய் சுழிந்த உதடுகளோடு அபய் வெண்ணிலாவிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.
எல்லாரும் அவளை சுற்றி நின்று “இதென்ன கெட்டப்?..சேலைலாம் கட்டிட்டு பெரிய பில்டப் பண்ணிட்டு வந்துருக்க” என்று ஓட்ட “நீங்க பேசிட்டு வாங்க என்று அபயும் வெண்ணிலாவும் கீழே சென்று விட்டனர்.
திடீர்னு காணாம போய்ட்ட ஒரு பேர்வெல் பார்ட்டி கூட கொடுக்கல..
ஓ உங்களுக்கு பார்ட்டி கொடுக்காதது தான் பிரச்சனை இல்லை?
அப்கோர்ஸ்
சௌமி மட்டும் வரலையா? என்று நிரு கேட்க
அ...அவ..அவ வரவே மாட்டேன்னுட்டா..” என்ற நரேனின் முகத்தில் விழிகளை கூர்மையாய் பதித்தவள் ஒன்றும் கேட்கவில்லை
ஓ..
அப்படியே கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிக்கொண்டு நின்று விட்டவள் வெண்ணிலா காத்திருப்பாள் என்ற எண்ணத்தில் விடைபெற்று முதலாவது தளத்துக்கு விரைந்தாள்.