• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நினைவிழை - 17

Ush

Active member
Messages
76
Reaction score
200
Points
33
17

அபய்க்கு இருப்புக்கொள்ளவில்லை.. குட்டி போட்ட பூனை போல அலுவலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்க ஊழியர்களுக்கும் அவனது பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டது

“விஷ்ணு எங்கே?...இதென்ன பெட்டி ரிசப்ஷன்ல வச்சிருக்கீங்க?” அவனுடைய அழகும் நேர்த்தியுமான பளபள அலுவலகத்தின் வாசலில் இருந்த மரப்பெட்டியை கண்டு அவன் சத்தம் போட

வாசலில் இருந்து ஓடிவந்த விஷ்ணு “ஐயோ சார் இதை இப்போத்தான் இறக்கினோம்..” என்று அங்கிருந்து அகன்று கொண்டிருந்த அலுவலக வண்டியை காண்பித்தவன் “இதோ ஸ்டோருக்கு கொண்டு போய்டறேன்” என்றபடி எடுத்துக்கொண்டு போய் விட பிடரியை தடவிக்கொண்டவனுக்கு ரிசப்ஷனிஸ்ட்டின் பார்வை ஆனாலும் உனக்கு இதெல்லாம் ஓவரா தெரியலையா என்று கேட்பது போல தோன்றியது..

சங்கடமாய் எங்கோ பார்த்துக்கொண்டு அடுத்த மாடிக்கு சென்றவன் அங்கேயும் எல்லாம் சரியாய் இருப்பதை உறுதி செய்தபடி மூன்றாவது மாடியை பார்க்க சென்றான்.

அங்கேயும் சுழன்று பார்வையிட்டவன் போதும் என்று தன்னுடைய நான்காம் மாடியில் போய் அடைந்து கொண்டான்.

எப்போதுமே அலுவலகம் ஒரு குறையும் சொல்ல முடியாமல் வாவ் சொல்லவைக்கும் படிதான் இருக்கும் ஆனாலும் இன்றைக்கு எல்லாமே மிக நன்றாய் இருந்தாக வேண்டும் என்று மனதுக்குள் ஒரு அலைப்புறுதல்

நிரு வரப்போகிறாளே.. முதல் பார்வையிலேயே அவளுக்கு பிடிக்க வேண்டும், பெருமைப்பட வைக்க வேண்டும் என்று ஸ்கூல் பையனை போன வாரத்திலிருந்து மனதுக்குள் ஒரே துள்ளல்..

இந்த நாளுக்காய் எத்தனை வருஷம் காத்திருந்தான்?

காதல் சொல்லிகொள்ளாத காதலியுடன் மனஸ்தாபம் வேறு..இதில் என்னவென்று இதையெல்லாம் பகிர்ந்து கொள்வது? மனதின் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாமல் முட்டி நிற்பதில் அபய் அவனுடைய அன்னையை கொண்டு பிறந்து விட்டிருந்தானே..

யாருடனும் அவன் இதுவரை உரிமையெடுத்து பழகியதில்லை..

அவனுடைய தாயார்..நீ என்னிடம் இருந்து வந்தாய் ஆனால் என்னுடையவன் இல்லை உன் வாழ்க்கை உன்னுடையது என்ற கொள்கை உடையவர் கொஞ்சி கொஞ்சி எல்லாம் அவன் வளர்க்கப்படவே இல்லை.. தாத்தாவுக்கு ஆதவனை சுத்தமாய் பிடிக்காது ஆக அபயுடன் அவருக்கு ஈடுபாடு வரவில்லை..இவனும் அங்கே போவதே இல்லை.. அம்மாவை கூட தன்னுடைய உலகத்தில் இணைத்திராதவன் முதன் முறையாய் ஒருத்தியை தன்னுடைய வட்டத்துக்குள் அனுமதித்தான்.

அம்மா, அப்பா, தாத்தா என்று அவனறிந்த உறவுகள் எல்லாருக்குமே அவனை விட்டுக்கொடுத்து தானே பழக்கம்.. யாருமே அபய் தான் வேண்டும் என்று முன்னிலை கொடுத்ததில்லை.. அவன் அப்படி எதிர்பார்த்தும் வளரவில்லை.

அப்படிப்பட்டவனுக்கு அவனுக்கே அவனுக்காய் ஒருத்தி என்ற உணர்வு வந்த போது காய்ந்து போன நிலம் மழைத்துளியை தனக்குள் சுருட்டி ஒளித்துக்கொள்வதை போல அவளையும் உரிமை கோரி நின்றதே இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்.

எனக்கு அவள் தான் எல்லாம்..அதே போல் அவளுக்கும் நான் தான் எல்லாம்.. நான் அவளை எங்கும் விட்டு தர மாட்டேன், அவளும் என்னை விட்டுத்தர கூடாது என்ற எதிர்பார்ப்பெல்லாம் எப்படி அவள் மேல் முளைத்தது என்று அவனுக்கே தெரியவில்லை..

அப்போதெல்லாம் ஆதவன் அவனுக்கு எதிரி... இப்போது வலுக்கட்டாயமான அருகாமையில் பரஸ்பர பிரசன்னத்துக்கு இருதரப்பும் பழகிப்போன அமைதி தான் தொடர்கிறது.. அதுவும் அப்போதெல்லாம் அவருக்கு சர்ஜரி முடிந்து அனிருத்தன் வந்த பிறகு அவரும் அவனிடம் அனி அனி என்று உருகுவதை காணும் போதெல்லாம் தனக்கு நேர்ந்த அநியாயம் அவனை வாள் கொண்டு அறுக்கும்..

நீங்கள் காதலித்தால் உயிரே போனாலும் ஒரு நிலையில் நின்றிருக்க வேண்டும்.. நடுவில் அவனுடைய அம்மா வந்து பெற்றவர்களை வைத்து வற்புறுத்தியதற்காய் அவரை திருமணம் செய்திருக்க கூடாது.

செய்து விட்டால் வாழ்ந்திருக்க கூடாது.. வாழ்ந்து விட்டால் அந்த குழந்தையில் எனக்கும் பொறுப்பு இருக்கிறது என்ற நினைப்பு இருந்திருக்க வேண்டும்.

விவாகரத்து ஆனது தான் சாக்கென்று காதலியுடன் சேர்ந்துகொண்டு பழைய வாழ்க்கையை திரும்பி பார்ப்பதே அவரது மனைவிக்கு செய்யும் துரோகம் என்று எண்ணி அவனது பிறப்பை கூட தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்த நீங்களும் அம்மாவை போல குற்றவாளி தானே..

இரண்டு பேரும் நீயா நானா என்று நின்று வேண்டாவெறுப்பாய் என்னை பூமிக்கு கொண்டு வந்து விட்டு ஆளுக்கு ஒரு பக்கம் போய்விட்டீர்கள்.. யாருக்குமே வேண்டாதவன் நான் என்ற உணர்வை என்ன மேலே போயும் எவ்வளவு சாதித்தும் அவனால் விளக்கி தள்ளவே முடியவில்லை..

அப்பா மேல் அத்தனை வெறுப்பிருந்தும் ஏகலைவனாய் தூரத்தில் இருந்து அவரது தொழிலை ரசித்து, பாஷன் டிசைனிங் படித்த தன் மேலேயே அவனுக்கு வெறுப்பும் சுய பச்சாத்தாபமும்

இறுதி நேரம் அம்மா கேட்ட போது.. அவருடைய திறமைகளை நீயும் வளர்த்து அந்த பாதையிலேயே போனாயில்லையா..அங்கே போய் நிதமும் அவமானப்படு..அது தான் உனக்கு தண்டனை.. அப்படியாவது அதில் இருந்து நீ வெளியே வருகிறாயா பார்ப்போம் என்று ஒரு வகையான சுய தண்டனை மனோபாவத்தில் தான் அடீராவுக்குள் அவன் நுழைந்தான்.

அங்கே இப்படி ஒருத்தி எனக்கு பார்த்தசாரதியாய் கிடைப்பாள் என்றோ என் வாழ்க்கையின் மையமாய் மாறிக்கொள்வாள் என்றோ அவன் கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை.. பெற்றவர்களின் வாழ்க்கையே காதல், திருமணம் முதலான அவனது மெல்லிய உணர்வுகளை சிதைத்து சகமனிதர்கள் மீது எதற்கும் தங்கியிருக்க கூடாது என்று ஓர்மமாய் அவனை ஆக்கியிருந்ததே..

ஆனால் அவளை அவனுடையவள் என்று முடிவு செய்த பிறகு அவள் மேல் வைத்த காதலையே அவளுக்கு பாரமாக்கி விட்டேன் என்று அப்போதெல்லாம் அவனுக்கு புரியவில்லை.. அவள் அவனுடைய மனதை உடைத்ததும் எனக்கு யாரும் வேண்டாம்.. என்று மூர்க்கமாய் அவள் உட்பட எல்லாரையும் உதறி தள்ளினான்.

ஆனால் மெல்ல மெல்ல அவளது மௌனமான பிரசன்னமே அவனது காயங்களை மாற்றியது.. அது உடனே எல்லாம் நிகழ்ந்து விடவில்லை.. அவள் மேல் இருந்த கோபம் குறைந்ததும், நான் அவளுக்கு வேண்டாம் என்று இன்னொரு படிக்கு மனம் தாவிற்று.. ஆனால் அதிலும் தோல்வியாகி கடைசியில் எதுவாயிருந்தாலும் அவள் படித்து முடிக்கட்டும் அவளை குழப்பி நெருக்கடிக்க வேண்டாம் என்ற நிலைமையில் வந்து கல்லூரி முடிப்பதற்காய் அவன் காத்திருந்தான்.. கூடவே வாழ்க்கையில் யாரை வெறுக்கிறேன் என்று நினைத்தானோ அவரும் அவன் மனதில் ஒரு மென் கோணத்தை கைப்பற்றி கொண்டு விட்டார்..யாருமே நம்மை வேண்டுமென்றே விலக்கி தள்ளவில்லை..சூழ்நிலையே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள நிறைய காலம் எடுத்தது அபய்க்கு.

வர்ணாவை ஆரம்பித்தது உடனேயே ஆதவனுக்கு தெரியும். அவர் அதை அடீராவோடு இணைப்போம் என்று ஆன மட்டும் முயற்சி செய்தார்.. அனிருத்தனுக்கு ஆடை வடிவமைப்பு தெரியாது ஆனால் அவன் நிர்வாகத்தில் புலி. அபயக்கு நிர்வாகம் சரியாய் வராது, அவன் ஆடை வடிவமைப்பில் புலி..என்ன தான் சண்டை போட்டுக்கொண்டாலும் காலத்தோடு அவர்களுக்குள் உருவாகியிருந்த சகிப்புத்தன்மையும் சேர, இருவரும் சேர்ந்தால் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவார்கள் என்பது அவரது எண்ணம்..

அபய் மறுத்து விட்டான். அபராஜிதன் என்ற மனிதன் அவனுடைய பின்னணிகளால் உருவானவன், தொழில் அவனது அடையாளம், அவனில் ஒரு பகுதி.. அதில் ஆதவனின் சாயல் இருப்பது தான் அவனை பிரதிநிதித்துவப்படுத்தும், ஆதவனோடு கூட இருப்பதல்ல..அப்படியெல்லாம் நெருக்கமாய் உறவு கொண்டாட அவன் மனம் தயாரில்லை..

எப்போது வேண்டுமானாலும் அவன் விலகிக்கொள்வான் தயாராக இருங்கள் என்று மூன்று வருடங்கள் முன்னரே சொல்லியாயிற்று..

அபயக்கு பின்னரான அடீராவின் பாதையை அவர்கள் கண்டுகொண்டதை அறிவித்த போது தான் நிரு பாவம் விஷயம் தெரியாமல் உடைந்து மொத்தமாய் அவனுடைய கனவுகள் எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு போய்விட்டாள்..

அது எனக்கும் வேண்டியது தான்..என்னையும் என் வரலாறையும், உன் உடைந்து போன மனதையும் தான் பார்த்தேனே தவிர அவளை பற்றி சிந்திக்கவில்லை..அவளை சுற்றி எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று பார்த்த எனக்கு அவளது மனதை பார்க்க தெரியவில்லை.. எல்லோரும் என்னை நோகடித்தார்கள் என்பதற்காய் நான் அவளை நோகடித்தது அநியாயம் இல்லையா?

அவள் அவனுடைய வாழ்க்கையின் நங்கூரம் தான்.. அவளுக்கு தெரிந்தோ தெரியாமலோ அவனுடைய வாழ்க்கையை போக வேண்டிய இடத்துக்கு நகர்த்திக்கொண்டே செல்கிறாள்.. இப்போதைய அவளது வருகை கூட அதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருந்ததே. அவள் ஈமெயிலில் இணைத்திருந்த படங்களில் மீண்டும் ஒரு முறை கண்களை பதித்தான் அவன்

அடடே அவ்வளவு நல்லவனா நீ? எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறாய்? அவனது உதடுகளின் ஒரு ஓரம் லேசாய் சிரிப்பில் மேலெழுந்தது.

சரியாக அந்த நேரம் ரிசப்ஷனிஸ்டிடம் இருந்து போன் வரவே அந்த சிரிப்பு இன்னும் பெரிதானது..

வாங்க மேடம்.. உல்லாசமாய் வரவேற்றது அவன் மனம்.

“சார் வீ ஆர் எஸ்டேட்ல இருந்து இரண்டு பேர் உங்களோட பத்து மணி மீட்டிங்குக்கு வந்துருக்காங்க..மேலே அனுப்பவா?”

“அனுப்புங்க,,, “

லிப்ட் நான்காம் மாடியில் திறக்கும் மெலிதான டிங் சத்தத்தை தொடர்ந்து அவர்கள் கான்பரன்ஸ் ஹாலுக்குள் சென்று விட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு எழுந்தவன் உறுதியான நடையுடன் அறைக்குள் நுழைந்தான்.

அவனுக்கு எதிரே கண்களில் ஏகப்பட்ட உணர்வுகளை பிரதிபலித்துக்கொண்டிருந்த விழிகளில் தான் அவனது பார்வை நேராக பட்டது. எத்தனை மாற்றம் அவளில்! சட்டென்று சுற்றியிருந்த உலகமே மறந்து போய் அவளை அள்ளி அணைத்து தனக்குள் இறுக்கிக்கொள்ள வேண்டும் என்று கிளம்பிய பேராவலை பக்கத்தில் இருந்து புன்னகைத்த பெண்ணை கண்டதும் அடக்கி

“ஹலோ.. அபராஜிதன்” என்றபடி கைகளை நீட்டினான் அபய்

வெண்ணிலாவை தொடர்ந்து அவனுடைய கைக்குள் தன்னுடைய கரங்களை வைத்த நிருவோ அபயின் கண்களை சந்திக்க முடியாமல் ஆனால் அவனை பார்க்காமல் இருக்கவும் முடியாமல் திணறினாள்..அவர்களுடைய கடந்த காலங்கள் எல்லாம் யுகங்களை கடந்து நடந்தது போல அவளுக்குள் பிரமை தட்டிற்று

கமான் நிரு.. பீ ஏ ப்ரொபெஷனல்.. ஒரு வருங்கால பிரஷாந்த் கிஷோர் இப்படில்லாம் தடுமாறப்படாது..என்று அவள் மனமே ஊக்கப்படுத்துகிறதா நக்கல் செய்கிறதா என்று தெரியாமல் அடித்து விட்டு போக ஒரு வழியாய் அபய் மேல் விழிகளை பதித்தாள்.

அவனும் அவளையே தான் பார்த்திருந்தான்.. அழகா இருக்கான் என்பது தான் முதல் முதலாய் நிருவின் மனதுக்குள் வந்தது.

எப்போதுமே அவன் தோற்றம் அவளுக்கு அழகுதான்.. ஆனால் இப்போது வேறு விதமான அழகு. தன்னுடைய சொந்த இடத்தில், அதுவும் தானே வெற்றிகரமாய் தொழில் நடாத்தும் இடத்தில் இருப்பதோ என்னமோ கண்களில் பளபளப்பு, முகத்தில் தேஜஸ் எல்லாம் கூடி அவனது அழகை பன்மடங்காக்கி இருந்தது.

எவ்வளவு எதிர்பார்த்திருந்தாலும், வர்ணாவின் பிரமாண்டமும் அழகும் அவளது கண்களை விரிய வைத்திருந்தது. இதுவே ஆறு மாதம் முன்பு இங்கே வந்திருந்தால் கோபப்பட்டிருப்பாள், ஏமாற்றப்பட்டதாய் குன்றியிருப்பாள்.. இப்போது அவளது மனம் நிறைவாய் இருப்பதோ என்னமோ அவளுக்கு கோபமே வரவில்லை.. சந்தோஷமும் பெருமிதமும் மட்டும் தான் தோன்றியது. அபய்க்கும் அவளுக்குமான உறவு என்னவாக இருந்தாலும் அவன் நன்றாய் இருக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆழ் மனதின் ஆசை அது நடக்கும் போது மகிழாமல் இருக்குமா?

நிரு ..ஏய் நிரு..ரகசியமாய் காலை மிதித்த வெண்ணிலாவின் குரலில் குழப்பமாய் பார்த்தவள் தன் கரங்கள் இன்னும் அபயின் கரங்களுக்குள் இருப்பதையும் அவன் தன்னையே பார்த்திருப்பதையும் பார்த்து தடுமாற

“உங்க பெயரை சொல்லலையே” என்றான் அபய்..கன்னக்கதுப்புக்கும் சிரிப்பு ஒளிந்து கொண்டிருந்தது...

பல்லைக்கடித்தவள் நிருதி ...நிருதி மாணிக்கம் என்றாள் முறைப்பாய்.

அவன் எப்படி ஆரம்பிக்கிறானோ அதை பிடித்துக்கொண்டு தொடர்வோம் என்று தான் எண்ணியிருந்தாள்,,ஆனால் பெயரே தெரியாதது போலவா நடிப்பான்?

ஒன்று ஒன்றரை வருஷம் நிதி நிதி நிதி என்று கொண்டிருந்து விட்டு பிறகு மீதி வருஷங்கள் மாணிக்கம் மாணிக்கம் என்று என் அப்பாவின் பெயரை வேறு விடாமல் ஏலம் விட்டுவிட்டு இப்போ என் பெயரே உனக்கு தெரியாதா?

அவனும் வட்ட மேசையில் அவன் இடத்தில அமர வெண்ணிலாவோடு நிருவும் அமர்ந்து கொண்டாள்..

அவனே பேச ஆரம்பித்தான். “உண்மையை சொல்லணும்னா..உங்க ஈமெயில் எனக்கு ஆச்சர்யம் தான். நான் ரொம்ப நாளா தேடிட்டிருந்த விஷயம், அது தான் உடனேயே உங்களை பார்க்கணும்னு வர சொன்னேன்..”

இதுக்கு ஒரு அர்த்தமா ரெண்டு அர்த்தமா? நிருவின் நெற்றி சுருங்கியது.

“நீங்க தான் இனிமே சொல்லணும்.. என்கிட்டே உங்க எதிர்பார்ப்பு என்ன?” முதலாவதாய் இருந்த வெண்ணிலாவிடம் சொல்வது போலிருந்தாலும் பார்வை நிருவிடம் இருந்தது

அடேய்! இது டபிள் மீனிங்கே தான்.

யூ ஆர் ஏ ப்ரொபெஷனல்,,வருங்கால பிரஷாந்த் கிஷோர்..ரிமெம்பர்?

அதில் ஒரு அர்த்தத்தை மட்டும் பிரித்தெடுத்து நிரு விளக்கமாய் அவனுக்கு பதில் சொன்னாள்.

துளசியை பார்த்தது, அவள் பொழுதுபோக்குக்காய் மரப்பட்டை, இலைகள், பூக்களை வைத்து இயற்கைச் சாயத்தை உருவாக்கி துணிகளில் வரைவது, அவளது கேட்டற்குறைபாடு, அவள் வெளியே அதிக தூரமெல்லாம் பயணிக்காமல் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கிறாள், அதனால் உங்களிடம் பேசாமல் அவளுக்கு எந்த நம்பிக்கையும் கொடுக்க கூடாது என்றே அவளிடம் எதுவும் சொல்லவில்லை என்றபடி துளசியிடம் இருந்து வாங்கி வந்த அந்த சதுரத்துண்டுகள் சிலவற்றை அபயின் பக்கமாய் தள்ளினாள்

அவனது கைகள் அவற்றை எடுத்து அந்த வர்ணத்தீற்றல்களில் விரல்களை மென்மையாய் ஓடவிட நிருவோ அவனது கண்களையே பார்த்திருந்தாள்

ஸ்வாமிக்கு படைத்த பூக்களை ஏந்தும் பக்தன் போல அவனது விழிகளில் தோன்றிய அந்த பாவமே போதுமே .. அவளுக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது..

இட்ஸ் பியூட்டிபுல்... என்று சொல்லியபடி அந்த ஓவியங்களை விரல்களால் வருடிக்கொண்டே இருக்க நிருவின் மனமோ பறந்தது.. என்னமோ தவறி விழுந்த குஞ்சுகளை தாய்ப்பறவையின் கூட்டில் சேர்த்தது போல அந்த ஓவியங்களை அபயிடம் கொண்டு வந்து சேர்த்ததும் அதே உணர்வை தான் அவளுக்கு கொடுத்தது..

“சரி. இதில் உங்களோட எதிர்பார்ப்பு என்ன?” அவன் மௌனத்தை உடைக்க

இப்போது வெண்ணிலா பேசினாள். “எங்களுடைய கம்பனியுடைய வருடாந்த விழா வருகிறது. கடந்த வருஷங்கள் கம்பனிக்கு நல்லதா இருக்கலை சார். அதனால் எங்களோட நன்றியை செலுத்தும் படியா கிளையன்ட்சுக்கும் பங்குதாரர்களுக்கும் ஒரு பெரிய ஒன்றுகூடல் நடாத்தணும்னு நினைக்கிறோம்..அங்கே எல்லாருக்கும் பரிசாக கொடுக்கக்கூடிய கார்ப்பரேட் பாக்கேஜ் பற்றி யோசிக்கும் போது தான் நிரு இந்த ஐடியாவை கொண்டு வந்தா”

என்று விட்டு வெண்ணிலா அவளை பார்க்க “ துளசி, தேயிலை இலைகளின் சாயத்தை வச்சும் இந்த மாதிரி துணிகளில் பெயின்ட் செய்யலாம்னு சொன்னாங்க. எங்க எஸ்டேட் தேயிலையை வச்சே இப்படி ஒரு ப்ராடக்ட் செய்தால் எங்களுக்கும் நாங்கள் அதை கொடுப்பவர்களுக்கும் அர்த்தமுள்ளதா இருக்கும். இப்போ அவங்க பொழுதுபோக்குக்கு பண்றாங்க..திறமை இருக்கு பாட்டென்ஷியல் இருக்கு. ஆனால் உங்களை மாதிரி ஒரு டிசைனர் கூட அவங்க வேலை செய்தாங்கன்னா அது ஒரு அர்த்தமுள்ள ஆடையாவோ ஞாபகார்த்த பொருளாவோ மாறும்னு நினைக்கிறோம்.. என்ன இருந்தாலும் நாங்கள் ஒரு வளர்ந்து வர்ற எஸ்டேட் தான்..ஆக ஒதுக்கப்பட்டிருக்கும் பட்ஜெட்டுக்கு மேலே போக முடியாது..அதை பத்தி தான் உங்க கிட்ட பேசலாம்னு” என்று நிரு தொடர

கையை உயர்த்தி அவளை இடைமறித்தவன் “எஸ்டேட் தேயிலையை வச்சே எடுக்கற சாயத்தில் ஒரு ஞாபகார்த்த பொருள் பண்ண நினைக்கிறீங்க.. உங்க ஐடியா ரொம்ப நல்லா இருக்கு, அது வொர்க் அவுட் ஆகும் பட்சத்தில்..” என்றவன் பட்ஜெட் விஷயம்..என்று ஆரம்பித்து நான் முதலிலேயே சொன்னேன்.. இது சமீப காலமா நான் தேடிட்டு இருக்கற விஷயம், உண்மையான இயற்கை சாயத்தை தேடி சலிச்சே போயிட்டேன், நீங்க கொண்டு வந்த விஷயம் உண்மையா இருக்கும் பட்சத்தில் பட்ஜட் பத்தின கவலை உங்களுக்கு வேணாம்..அந்த ஆர்ட்டிஸ்ட் உங்களுக்கு வேண்டிய பொருளை பண்ணி கொடுக்கும் போது அதற்கான செலவை பார்த்தால் போதும்.. என்று விட்டான்

வெண்ணிலா எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க

நிருவுக்கும் அதே கேள்வி தான் நாவில் நின்றது

முதலில் நான் இந்த சாம்பிளை லாபுக்கு அனுப்பணும், சாயத்தோட தன்மை, அது எவ்ளோ காலம் நிலைச்சு நிற்கும், சாயம் போகுமா? எப்படி மெயின்டெயின் பண்ண முடியும் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். பொதுவா மூணு நாலு நாள்ல பதில் சொல்லிடுவாங்க..அவங்க எனக்கு பதில் சொன்ன அடுத்த நாள் நானே அங்கே வர்றேன் என்றான் நிருவையே பார்த்த படி...

நானே அங்கே வர்றேன்.. அவ்வ்

இவளுக்கு படபடப்பேறி கன்னம் லேசாய் சூடாக தொடங்கியது. அடங்கு மனமே அடங்கு.. இப்படியெல்லாம் பட்டென்று காலில் விழுந்து என் மானத்தை வாங்காதே

வெண்ணிலா நன்றிகளை சொல்லிக்கொண்டிருக்க நிருவும் இயந்திரமாய் நன்றி சொன்னாள்.. முடிந்ததா போகணுமா? என்று மனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது அவளுக்குள்..

“திரும்பவும் என்னை இந்த ப்ரபோசலுக்காக தெரிந்து கொண்டதற்கு நன்றி. இது மார்க்கட்டில் நிறைய சர்ச்சை கிளப்பி பேசுபொருளா இருக்கற விஷயம். எல்லாம் சரியா நடக்கும் வரை இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்..”

புரியுது சார்.. என்றபடி மீண்டும் வெண்ணிலா நன்றி சொல்லிக்கொண்டு எழ

நிருவும் பின்னாலேயே எழுந்தாள்.

அவர்கள் அந்த அறை வாசலை விட்டு வெளியேற... “உங்களுக்கு வர்ணாவை சுற்றி பார்க்கணும்னா.... பார்க்கலாம்” என்று தயக்கமான அபயின் குரல் கேட்க நிரு பட்டென அவன் முகத்தை பார்க்க அப்படியே ஐந்து வருஷம் முன்னான அபய் தான் அவளுக்கு தெரிந்தான்..அவளுக்கு புரிந்தது.. வர்ணாவை அவளுக்கு காண்பிக்க வேண்டும்..அதை ப்ரொபெஷனல் மீட்டிங்குக்கு வந்த இடத்தில் எப்படி கேட்பதென்று தெரியாமல் சங்கடமாய் கேட்டு விட்டான். பட்டுக்குட்டி என் ட்ராகன் குட்டி,, அடச்சே.. மானங்கெட்ட மனசே

“வித் ப்ளெஷர் சார்..” என்று வெண்ணிலாவே நிலைமையை கையில் எடுத்துக்கொண்டு சிரித்தபடி முன்னே செல்ல நிரு அவனையே பார்த்துக்கொண்டு பின்னே நடந்தாள்.

வெண்ணிலாவை இருவரும் மறந்தே போயினர். நான்காம் தளத்தை காண்பித்து விட்டு லிப்டில் முதலில் கீழ்த்தளத்துக்கு அழைத்துப்போனவன் குழந்தை தன்னுடைய முதலாவது ஓவியத்தை காண்பிப்பது போல ஒவ்வொன்றாய் அவர்களுக்கு சுற்றிக்காட்டிக்கொண்டு வந்தான்..

ப்ராடக்ஷன் எங்கே நடக்கும்? வர்ணாவுக்கு பாக்டரியும் இருக்கா சார்?

இப்போதைக்கு வெளியே சப் கான்றாக்ட் தான் பண்றோம்..கூடிய சீக்கிரம் வர்ணாவுக்குன்னே ஒரு பாக்டரியும் வந்துரும்.

வெண்ணிலா முன்னே நடக்க அபய் எப்படியோ பின் தங்கி நிருவின் அருகிலேயே நடந்து கொண்டிருக்க இவளுக்கு மேகங்களின் மீது நடப்பது போலத்தான் தோன்றியது..

எல்லாம் மூன்றாவது மாடி போகும் வரை தான்..

இது தான் என்னுடைய கோர் டீம் இருக்கும் இடம்..வர்ணாவின் டிசைன் டீம் இங்கே தான் இருப்பார்கள் என்று சொல்லிக்கொண்டே அவன் மூன்றாவது மாடியில் லிப்டில் இருந்து வெளிப்படவே

நிரு!!! என்ற குரல்கள் பல திசைகளிலும் இருந்து அவளை சூழ்ந்து கொண்டன..

அடப்பாவிகளா மொத்தமா அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டானா என்று அபயை நிரு பார்க்க சிரிப்பில் லேசாய் சுழிந்த உதடுகளோடு அபய் வெண்ணிலாவிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

எல்லாரும் அவளை சுற்றி நின்று “இதென்ன கெட்டப்?..சேலைலாம் கட்டிட்டு பெரிய பில்டப் பண்ணிட்டு வந்துருக்க” என்று ஓட்ட “நீங்க பேசிட்டு வாங்க என்று அபயும் வெண்ணிலாவும் கீழே சென்று விட்டனர்.

திடீர்னு காணாம போய்ட்ட ஒரு பேர்வெல் பார்ட்டி கூட கொடுக்கல..

ஓ உங்களுக்கு பார்ட்டி கொடுக்காதது தான் பிரச்சனை இல்லை?

அப்கோர்ஸ்

சௌமி மட்டும் வரலையா? என்று நிரு கேட்க

அ...அவ..அவ வரவே மாட்டேன்னுட்டா..” என்ற நரேனின் முகத்தில் விழிகளை கூர்மையாய் பதித்தவள் ஒன்றும் கேட்கவில்லை

ஓ..

அப்படியே கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிக்கொண்டு நின்று விட்டவள் வெண்ணிலா காத்திருப்பாள் என்ற எண்ணத்தில் விடைபெற்று முதலாவது தளத்துக்கு விரைந்தாள்.
 
Ush

Active member
Messages
76
Reaction score
200
Points
33
கீழே அவளுக்காய் இருவரும் காத்திருந்தனர். வெண்ணிலாவின் உயரத்துக்கு அபய் அவள் பக்கத்தில் இன்னும் உயரமாய் தெரிய ஒட்டகச்சிவிங்கி என்று மனதுக்குள் நொடித்துக்கொண்டவள் அவர்களை நோக்கி வந்தாள்.

அவனது பார்வை அவளையே தொடர்வதை இப்போது நன்றாகவே உணர முடிந்தது...

“அப்போ நாங்கள் கிளம்பறோம் சார். அலுவலகத்தை சுற்றிக்காட்டியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி..கூடிய சீக்கிரம் உங்களை ஏலச்சி மண்ணில் எதிர்பார்க்கிறோம்” என்று வெண்ணிலா சொல்ல நிருவோ அடுத்த கட்ட பயணத்துக்காய் அவனது உருவத்தை அவசரமாய் விழிகளில் நிரப்பிக்கொள்ளும் முயற்சியில் இருந்தவளுக்கு அவர்கள் இருந்த இடத்துக்கு வெகு பின்னே இருந்த லிப்ட்டுக்கு ஒரு உருவம் காபியோடு பதுங்கி போவது ஓரக்கண்ணில் படவும் திரும்பி பார்த்தவள் பல்லை கடித்தாள்

பிளடி பிஸ்கட்!

அவ்வளவு தான் போட்டுக்கொண்டிருந்த பார்மல் போர்வை மொத்தமாய் கிழிந்து போக வெறியோடு துரத்தி லிப்ட் மூடும் கணம் உள்ளே புகுந்தவள் சௌமியின் கழுத்தை பற்றியிருந்தாள்

“ஏன்டி துரோகி.. என்ன சொன்ன என்ன சொன்ன..எதிரி கூட சேரலாம்.. துரோகி கூட சேர முடியாதா? இது என்னடி?” என்று சௌமியையும் வர்ணா அலுவலகத்தையும் காண்பித்தவள் கோபமாய் கேட்க

கள்ளத்தனமாய் விழித்துக்கொண்டிருந்த சௌமியோ “ஹி ஹி பாஸ் தான் சொல்லக்கூடாதுன்னு சொன்னார்” என்று சமாளிக்க

“அவர் சொன்னா நீ கேட்டுடுவியா? நான் உன் பிரன்டுடி. என்ன ஏமாத்திருக்க? எவ்ளோ நாளா இங்க இருக்க?” என்று கேள்வி மழை பொழிந்தாள் நிரு

“அது அது பாஸ் வெளியே வந்து ஒரு வாரத்துல இருந்து”

“துரோகி...”

“நீ தான் துரோகி பாஸ் தான் உன்னோட ‘அந்த’ அண்ணான்னு நீ சொன்னியா? என்னை பார்க்க வர்றேன்னு சொல்லி சொல்லி பச்ச பிள்ளை என்னை ஏமாத்தி உன் ஆளை பார்க்க வந்து ரொமான்ஸ் பண்ணிருக்க”

ஹுக்கும்.. என்று நொடித்து கொண்டவள் “ அதெல்லாம் நீ வர முன்னே நடந்து முடிஞ்சும் போச்சு. எப்போவோ முடிஞ்சு போன கதைன்னு நான் உங்கிட்ட சொல்லல..:” என்று சமாளித்தாள்

பொய் சொல்லாதே..

ப்ச் நிஜம்டி..எங்க கதை எங்கே போகுதுன்னு எனக்கே சரியா தெரியாது, நான் என்னன்னு உன்கிட்ட சொல்ல? இப்போ கூட என் நிலைமை அதே தான்..

“முடிஞ்சு போன கதைக்கா பாஸ் என் கிட்ட இருந்து அப்டேட்ஸ் கேட்டுட்டு இருக்கார்?” நுணல் தன் வாயாலேயே கெட்டது/

அதை வேற பண்றியா நீ?

ஹி ஹி..ஒரு அணிலா உன் லவ்வுக்கு நான் ஹெல்ப் பண்றேன்னு நினைச்சேன்..

கடுப்பாகி போனவள் “உன் பாஸ் ஒரு கிரிமினல். போனது போகட்டும்..இனிமே இது கன்டினியூ ஆச்சு உன் ப்ரன்ஷிப்பை கட் பண்ணிருவேன்” என்று கோபமில்லாமல் மிரட்டியவள் “லீவ் போட்டுட்டு வாயேன். சம்யூ மிஸ் எங்களை வரசொல்லி கூப்பிட்டாங்க.. கவியையும் அங்கே கூப்பிடுவோம். இரண்டு அவர் மட்டும் கேட்டு வாங்கிட்டு வா..என்னோட ட்ரீட்” என்று கேட்டாள்

“சரி நீ போ.. நான் பாஸ் கிட்ட சொல்லிட்டு பன்னிரண்டு மணிக்கெல்லாம் அங்கே இருப்பேன்”

சரி..வெண்ணிலாக்கா வெயிட் பண்ணுவாங்க நா போறேன்..

சாரிடி

பிழைச்சுப்போ என்று திரும்பியவள் தனக்கு பின்னே வந்து கொண்டிருந்த அபயில் மோதப்பார்த்து சமாளித்து நின்றாள்

“நிரு சேலைல செம்ம அழகா இருக்கடி..” திரும்பி பார்த்தால் சௌமியை காணவில்லை குரல் மட்டும் வர பல்லை கடித்தாள் நிரு..இப்போ இந்த காம்ப்ளிமென்ட் நான் கேட்டேனா

போலாமா ..வெண்ணிலா வண்டில இருக்கேன்னு சொல்ல சொன்னாங்க..அவன் முகம் குனிந்திருக்க இவள் முகமோ வளைந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தது..

அச்சோ..வெண்ணி அக்கா விட்டுட்டு போய்ட்டாங்களா..: என்று தவிப்போடு அபயின் பின்னே வேகமாய் ஓடியவள் “நான் போய்டறேன்..நீங்க வேலையை பாருங்க” என்று சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.

பதிலே சொல்லாமல் அவளையே அவன் விழி எடுக்காமல் சவாலாய் பார்த்திருக்க வாயேன் எனக்கா அலைச்சல் என்று நொடித்துக்கொண்டவள் விடு விடுவென அவன் பின்னாலேயே லிப்டுக்குள் நுழைந்தவள் கையை கட்டிக்கொண்டு லிப்டின் ஓரம் நின்று கொண்டாள். உள்ளே வந்து நின்ற அவனை பார்க்கவே இல்லை..

லிப்டின் பின்னே இருந்த பிரமாண்ட கண்ணாடியோ வெள்ளையில் நீலக்கோடுகள் இட்ட பார்மல் ஷர்ட்டில் நின்றவனை அவளின் கரு நீல சேலைக்கு வெகு பொருத்தமான ஜோடியாக காண்பிக்க ஐயோ இது வேற சதி பண்ணுதே.. லிப்டா பஸ்ஸா இவ்ளோ ஸ்லோவா போகுது என்று அவள் அவஸ்தையாய் எல்லா இடமும் பார்த்துக்கொண்டு நின்றவள் இவன் என்ன பண்றான். இப்படில்லாம் அமைதியா இருக்க மாட்டானே என்று நிமிர்ந்து பார்த்தவள் பக்கென்று அதிர்ந்தாள்

அப்படியே அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்

தலையில் இருந்து கால் வரை சோம்பலாய் அவனது பார்வை பயணிக்க என்ன இவன் வேற ரூட்ல போறான் என்று அதிர்ந்து விட்டவள் அவன் ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து அவளை நோக்கி முன்னே வர லிப்டின் கம்பியை இறுக பிடித்துக்கொண்டாள்..

பேச்சு பேச்சா இருக்கணும்..இப்படில்லாம் அணு ஆயுதங்களை எடுக்க கூடாது..இது எதிக்கல் இல்லை. அவள் மனதுக்குள் தவித்துக்கொண்டிருக்க நன்றாக நெருங்கி விட்டிருந்தவனை கண்டு இறுக கண் மூடிக்கொள்ள முனைந்த கணம் லிப்ட் திறந்து அவன் காஷுவலாய் வெளியே போய்விட்டான்

கோபமாய் காலடி எடுத்து வெளியே வந்தவளுக்கு கொஞ்சம் முன்னே வெறி பிடித்தவள் போல ஓடியது ஞாபகம் வர அங்கிருந்தவர்களுக்கு பொதுவாக ஒரு அசட்டு சிரிப்பை ஓட்ட வைத்துக்கொண்டு வேகமாய் அபயின் பின்னே நடந்தாள்.

அலுவலகத்துக்கு வெளியே வந்ததுமே பை என்றவள் சாமி நா ஓடிர்றேன் என்று தப்பிக்க முனைய..அவனுக்கு விடும் எண்ணமில்லை

அவள் கூடவே நடந்து தரைத்தளத்தில் இருந்த பார்க்கிங்குக்கு போல அலுவலகத்தை சுற்றிக்கொண்டு கீழே இறங்கினான்.

பிரமாண்டமான உருளை சுவர்கள் நீண்டு கொண்டே போன அந்த தரைதளத்தின் சரிவில் அவனோடு இறங்குவது என்னமோ கடந்த காலத்துக்குள் புகுவது போலவே அவளுக்குள் தோற்ற மயக்கம்..

“அப்புறம் பெரியாளா ஆயிட்டீங்க போல.. வர்ணா எப்படியிருக்கு? ஒண்ணும் சொல்லல?”

எல்லாம் மறக்க “ரொம்ப நல்லாருக்கு..பார்த்து பார்த்து செஞ்சிருக்கீங்க” என்று முகம் மலர சொன்னவள் சட்டென்று வாடினாள்

“ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல..குறைஞ்சது ஒரு ஹின்ட்டாவது கொடுத்திருக்கலாமே” வார்த்தைகள் அவளது அனுமதியின்றி உதட்டை விட்டு தப்பித்து வந்து காற்றில் விழுந்திருந்தன.

“நீயும் நான் அப்படி பொய் சொல்லிருக்க கூடாது. நான் உங்களை தான் லவ் பண்றேன்னு வந்து சொல்லியிருக்கலாம்ல”

“ப்ச் அது இறந்த காலம்”

சொல்லும் போது எதிரே ஒரு வட்ட தூணை எதிர்கொண்டு பார்த்தது மட்டுமே அவளுக்கு ஞாபகம் இருந்தது.. அடுத்த கணம் அவளை இறுகத்தழுவி வெளிப்பார்வைக்கு மறைத்து அந்த தூணுக்கு கீழே கொண்டு வந்திருந்தான் அபய்.. அவளது நெற்றியில் தன்னுடைய தாடையை வைத்து “சாரி எல்லாத்துக்கும்” என்று சொல்ல இவளுக்கு எதுவுமே புரியவில்லை...அவள் உறைந்து போய் நின்றிருந்தாள்..

மனதை கூட வெளிப்படுத்தாத காதல் அவர்களது..சாதாரண தரம் கூட செல்லவில்லை. அதற்குள் மிகப்பெரும் இடைவெளி விழுந்து போனது.. அதை நிரப்பாமல் இப்படி உயர் தரத்துக்கு சட்டென்று பாய்ந்தால் அவள் என்ன செய்வாள்?

“நீ இடைவெளி வேணும்னு கேட்ட நிதி. என் பக்கம் தப்பு இருந்தது அதனால நானும் கொடுத்தேன்” என்றவன் ஆனா இன்றைய நாள் என்று அவர்கள் இருவரையும் சுட்டி காட்டியவன் அந்த இடைவெளி பிசினஸ் எல்லாம் ஓவர்.. எல்லாத்தையும் முதலில் இருந்து ப்ரஷ்ஷா ஆரம்பிக்கலாம் என்றவன் ரொம்ப அழகா இருக்க..என்று அவளின் கன்னத்தில் இதழ்களை பதிக்க அப்போது தான் உணர்வு வரப்பெற்றவளாய் பட்டென்று உதறி தள்ளினாள் நிரு.

பண்றதை எல்லாம் பண்ணிட்டு இவர் சாரி சொன்னா எல்லாம் சரியா போய் நாங்க பின்னாடியே போகணுமா? இதுல என்ன வேலை பார்க்குறான்

யாரை கேட்டு இப்படி பண்றீங்க.. லவ்வெல்லாம் அப்போ..வயசு கோளாறு.. முடிஞ்சு போச்சு..வாழ்க்கைல எப்போவும் பின்னாடி பார்க்க கூடாது..நானும் பார்க்க மாட்டேன்” என்று கோபமாய் அவள் சொல்லவும்

விலகி நின்றவனோ வாய் விட்டு சிரித்த படி அவளது தோளில் கையை போட்டு திருப்பி முன்னே நடக்க வைத்தவன் வளைவில் திரும்பியதும் கையை எடுத்துக்கொண்டான். முதலாவதாய் அவர்களுடைய வண்டி தானே நின்றிருந்தது.

வெண்ணிலாவுக்கு கண்ணாடி வழியே தலையசைத்து விடைதந்தவன் நிருவிடம் குனிந்து “நீ முன்னாடியே பார்..ஆனா என் கூட சேர்ந்து பார்” என்று கண் சிமிட்டி விட்டு விலகி நின்றான்

பேயடித்தது போல உட்கார்ந்திருந்த நிரு வண்டி பார்க்கிங்கை விட்டு வெளியேறத்தான் வெண்ணிலாவின் சிரிப்பை கவனித்தாள்..முகம் சிவப்பாகிப்போனது..புரிந்திருக்குமே..

“இவங்க தான் உங்க ட்ராகன்னு சொல்லவே இல்லையே நிரும்மா..இந்த ட்ராகனை வளர்க்குறதுக்கு ரொம்ப எனர்ஜி வேணும் தான்”

அக்கா!!

ஹாஹா
 
Last edited by a moderator:

Ush

Active member
Messages
76
Reaction score
200
Points
33
போன எபிசோடுக்கு கமன்ட் பண்ணின எல்லாருக்கும் நன்றி மக்களே..நான் காலைல வந்து ரிப்ளை பண்றேன்..சாரி ஒகே?

அப்புறம் இந்த மீம் கண்ல பட்டிச்சு.. சிரிப்பு வந்துச்சு

490422866_1643287879887245_5729584876389257516_n.jpg
 
New member
Messages
15
Reaction score
9
Points
3
I almost had a complete imagination for this episode including sowmy getting serupadi from Niru except that kiss scene. Athai appadiye padikka padikka semma galatta. A kid from a dysfunctional family gets a person as whole family makes things different. nee முன்னாடியே பாரு ஆனா என்னோட சேர்ந்து பாரு. பின்ற அபய். அந்த RW ah mattum ennanu sollidunga. Waiting to see Abay in ellachi
 
Last edited:
  • Love
Reactions: Ush
New member
Messages
13
Reaction score
7

Superb
 
Excellent
 
Thank you Mano ❤️ your comments are my energy boosters 😁. I know.. Until they come to terms with it, it's a walk on eggshells for their loved ones as well. Hiyo that RW is not worth the hype.. Initial episodes la niru abhai ai mind la thitrathukum athukum connnection iruku.. Reveal pannathum enaku than slipper shot pola..
 
Top