வர்ணா அலுவலகத்தின் நான்காம் மாடி முழுதுமே அபயின் ஸ்டூடியோ தான். பல மாடல் பொம்மைகள் ஆடை உருவாக்கத்தின் பல்வேறு நிலைகளில் முழுவதும் முடிக்கப்படாத உடைகளோடு இருக்க அவற்றில் ஒரு பொம்மையின் முன்னே ஒற்றைக்காலை மடித்துக்கொண்டு அமர்ந்திருந்திருந்தான் அபய்.
அவனது கைகள் தன்னிச்சையாய் மென்மையாய் கை தொட்டாலே வழுவி ஓடும் வைன் நிற சிவப்பில் இருந்த துணியை மெல்ல மெல்ல மடித்து பொம்மையின் இடுப்பில் பின் செய்து கொண்டிருந்தன. இது தற்போதைய நம்பர் ஓன் நடிகை என்று பெயர் வாங்கியவர் கொடுத்த ஆர்டர். ஒரு விருது விழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காய் கேட்டிருந்தார். இப்போதெல்லாம் அபய்க்கு மட்டும் தனியாய் இப்படியான ஆர்டர்கள் மாதத்தில் இரண்டாவது வந்து விடுகின்றன.
ஸ்டூடியோவின் கதவை தட்டும் சத்தம் கேட்க திரும்பிப்பார்த்தவன் கோர்ட் சூட்டில் உள்ளே வந்த கதிரை கண்டு மீண்டும் திரும்பி செய்யும் வேலையை தொடர்ந்தான்,, “என்னடா சீக்கிரம் வந்துட்ட? நீ அப்படியே வீட்டுக்கு போயிடுவன்னு நினைச்சேன்” என்று கேட்டபடி
அவனுக்கு பின்னே இருந்த லெதர் சோபாவில் தொப்பென்று வந்து புதைந்த கதிரோ “ப்ச்.. அவன் அடங்க மாட்டேங்கிறான்டா” என்று சலித்தான்.
“எவன்?” அபயின் கைகள் மடிப்புகளை ஸ்டீம் செய்து செட் செய்ய ஆரம்பித்திருந்தன.
“அதான் ஜெலீன்”
“தேவராஜா?”
ஹ்ம்ம்..”
“ஏதாவது சொன்னானா?”
“சொன்னானாவா? அரைமணி நேரமா என்னை பிடிச்சு வச்சு மண்டையை கழுவ முயற்சி பண்ணினான்டா. தலைவலியே வந்துடுச்சு. அதுதான் கிளம்பி வந்துட்டேன்” என்று கதிர் விளக்கம் கொடுக்க
அபயின் இதழ்கள் நக்கலாய் வளைந்தன. “போலி ப்ராடக்ட்டை அனுப்பி வச்சிட்டு பேச வேற செய்றானா அவன்?”..
“ஷ்.. நல்ல வேளை நீ இன்னிக்கு காதரிங்குக்கு வரலை.. வந்திருந்தா பொறுமையா இருந்துருக்க மாட்ட.. மார்க்கட்டில் இருக்கும் எதுவுமே நூறு வீதம் ஒரிஜினலா இருக்காதாம்..நீண்ட கால பாவனை தரம் இதெல்லாம் கருதி கண்டிப்பா கலப்படம் இருக்கும்னு மக்களுக்குமே தெரியுமாம்..பொருள் எங்கிருந்து வருதுன்னு மட்டும் தான் பார்ப்பாங்களாமாம்..எப்படி நியாயப்படுத்துறான் பாரேன்” என்ற கதிர்
அபய் தலையை இடமும் வலமுமாய் அசைத்துக்கொள்வதைக்கண்டு
“இதுக்கே சலிச்சுக்கிட்டா எப்படி? இதையும் கேள்” என்று சிரித்தவன் “இப்போதைக்கு மார்க்கட்டுல ஜெலீன் மாதிரி ஒரு பார்ட்னர் நமக்கு கிடைக்க மாட்டாங்களாம்..சந்தர்ப்பத்தை நம்ம பக்குன்னு பிடிச்சுக்கணுமாம்”
அப்புறம்...”
“இதுதான் பெஸ்ட் பார்ட்.. உங்கப்பா இன்டர்நாஷனல் பார்ட்னர்ஸ் கூட பிசினஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாராம். அவரை அடிக்கணும்னா நீ ஜெலீன் கூட சேர்த்தா தான் முடியுமாம்”
“லூசாடா இவன்” என்று கேட்டான் அபய் இமைகளை நெரித்தபடி
“உங்க நெருக்கம் தெரியாமல் நீ அவருக்கு எதிரின்னு நினைச்சிட்டிருக்கான். அந்த பார்ட்னரை உங்கப்பா கூட கோர்த்து விட்டதே நீதான்னு அவனுங்களுக்கு தெரிஞ்சா செத்துருவானுங்க” என்று கதிர் சிரிக்க அபயின் கை அந்தரத்தில் உறைந்தது
“நான் நெருக்கமா இருக்கேன், நீ பார்த்த”
“எப்பா டேய்.. எனக்கு நானே எப்போவோ காது குத்திக்கிட்டேன்டா.. , நீ அவங்களுக்கு ரூட் போட்டு தர்றதும், யாராவது பிரச்சனையான பார்ட்னர் கூட சேரப்போறோம்னு பேச்சு வெளியே போனா உங்கப்பா போன் பண்ணி எச்சரிக்கை பண்றதும், எல்லாத்துக்கும் மேல உன் தொம்பின்னு ஒருத்தன் இருக்கானே..என்னை பார்க்கிற இடமெல்லாம் அவன் வரல?ன்னு கேட்டு கண்ணடிச்சிட்டு போறான்..என்னை தப்பா நினைக்கப்போறாங்கன்னு நானே அவனை கண்டா தெறிச்சு ஓடிட்டிருக்கேன். இவனுங்க சண்டை போடுறாங்களாம் நாங்க நம்பணுமாம்..போங்கடா டேய்..”
“உனக்கு ஈவினிங் வேற வேலை எதுவும் இல்லையா? “ என்று அபய் பல்லைக்கடிக்க
“உண்மையை சொன்னா உனக்கு ஆகாதே.. உன்னையெல்லாம் நிரு ஸ்டைல்ல தான் டீல் பண்ணணும்.” என்று கதிர் சொல்லி முடிக்கவில்லை பக்கத்தில் இருந்த ஸ்கேலை எடுத்து அவனை நோக்கி அபய் வீச தப்பித்து ஓடி விட்டான் கதிர்.
அவளை பற்றி பேசியதுமே உதடுகள் இறுகிப்போயின..
அவ சொன்னதை கேட்டுட்டு சும்மா இருக்கேன்ல .. அதுதான் அவளுக்கு குளிர் விட்டுப்போச்சு. மனம் முறுக்கிக்கொண்டது..
அவன் அவளை பின் தொடர்ந்து கொண்டிருப்பான் என்று நன்றாக புரிந்து கொண்டு விட்டாள்.. நான் ஒரு மடையன் அந்த ஒரு கமன்டை போட்டு தொலைத்திருக்காவிட்டால் அவளும் அங்கே மண்டை காய்ந்து கொண்டிருந்திருப்பாள்.. அவசரப்பட்டு கமன்ட் செய்து நம்மை காட்டி கொடுத்து விட்டதால் அவளுக்கு தைரியம் வந்து விட்டது.
இன்ஸ்டாக்ராம் என்னும் மாயக்கண்ணாடி வழி அவனை வெறுமனே பார்வையாளனாய் மாற்றி விட்டு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறாள்..
இன்றைக்கு காலை கூட ஒரு பிளேட் சாலட், இயற்கை, அவளது வீடு, ஓய்வாய் இருந்த அவளது பாதங்கள் எல்லாவற்றின் புகைப்படங்களோடு சேர்த்து “நல்ல உணவு, கண்ணுக்கழகான சூழல், இதமான காலநிலை, ஓய்வு இதை தவிர வேறென்ன வேண்டும்?” என்று பதிவிட்டிருந்தாள்
சீண்டல் அவனுக்கு என்று தெரியாதா? பல்லைக்கடித்தபடி அங்கே வந்தேனென்றால் தெரியும் வேறென்ன தேவை என்று என்று கமன்ட் பண்ண கை துருதுருத்தது..
சரி நான் செய்ததும் தப்பு தான், ஒரு சின்ன விஷயத்துக்கு கோபத்தை இழுத்து பிடித்து அவளுக்கு பலதை தெரியப்படுத்தாமல் கஷ்டப்படுத்தி விட்டேன் தான்..அந்த ஒரு காரணத்துக்காய் தான் இடைவெளி கேட்டதும் கொடுத்தேன்..
இடைவெளி என்றால் அதற்கான கால எல்லை எவ்வளவு? ஐந்து மாதங்கள் முடியப்போகிறது அவளது முகத்தை நேரில் கண்டே..இனிமேல் முடியாது.. இன்று காலையோடு அவனது பொறுமை பறந்தே விட்டிருந்தது.
என் வாழ்க்கையை நானே கையிலெடுத்துக்கொள்ளும் நேரம் வந்து விட்டது. கையிலிருக்கும் வேலைகள் முடியட்டும்.. நேரிலேயே வருகிறேன். அபய் இங்கே ஒரு முடிவுக்கு வந்து விட்டிருக்க அவனுடைய தலைவலியோ ஏலச்சியில் மார்க்கட்டில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தாள்.
அன்றைக்கு வெள்ளிக்கிழமை..ஏனோ காலை எழுந்ததுமே இந்த நாள் எனக்கே எனக்கென வேண்டும் என்று மனம் கேட்டது. சரி என்று விடுப்பு சொல்லி விட்டவள் காலையில் எந்த கவலையும் இல்லாமல் காய்கறிகள், மற்றும் பன்னீரை ரோஸ்ட் செய்து சாலட் செய்திருந்தாள். அதை போட்டோவாக்கி வழக்கம் போல அபயை கடுப்பேற்றி விட்டு சாப்பிட்டு வீட்டில் கொஞ்ச வேலைகளை முடித்து விட்டு மார்க்கட்டுக்கு வந்திருந்தாள்.
மனம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.. முதலில் நம்மை நாமே அறிய வேண்டும், என் காதலையும் தள்ளி நின்று புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நினைத்து வந்தாள். இங்கே வந்து அவள் நினைத்ததை விடவே நிறைய நடந்தாயிற்று..ஒவ்வொரு நாளும் அவனது நினைவுகள் இன்றி அவனது புகைப்படங்கள் பாராமல் கடந்ததே இல்லை. இப்போது என்ன செய்வான்? என்னை நினைப்பானா? என்று மனம் எண்ணிக்கொண்டே தான் இருக்கும்.
நன்றாக புரிந்தது. அவன் எனக்காய் நான் கேட்டதற்காய் தான் தள்ளி இருக்கிறான். ஆனாலும் உன்னை பார்த்துக்கொண்டே தான் இருப்பேன் என்றும் காண்பித்து இருக்கிறான். ஆக பந்து இப்போது அவளிடம் தான் இருக்கிறது. மீள தொடர்பு கொள்ள அவளுக்கும் எந்த தடையும் இல்லை தான்...ஆனால் என்னவென்று சொல்லத்தெரியவில்லை.. ஏதோ ஒரு உணர்வு அவளை எந்த முயற்சியும் எடுக்க தோன்றவில்லை.. அவள் எதற்காக காத்திருக்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை..
பசுமையாய் உடன் பறிக்கப்பட்டவை என்று பார்த்தாலே புரியும் காய்கறிகளை பரப்பி வைத்திருந்த கடைகளில் ஒன்றின் முன்னே நின்று காய்கறிகளை ஆராய ஆரம்பித்தாள் நிரு
இங்கே வந்ததில் அவளை தொற்றிக்கொண்டிருந்த இன்னொரு விஷயம் சமையல்.. அவளுக்கு ரொம்ப பிடித்த விஷயமாய் மாறிக்கொண்டிருந்தது. உன்னை பேணுவதில் முதல் படி உடலுக்கு நல்ல உணவு அல்லவா.. தனிமை...கையில் நிறைய நேரம்,,அவளை சமையலில் கற்றுக்கொள்ள இடமளித்திருந்தது
“என்ன வேணும்மா?” காய்கறி வியாபாரி அவளிடம் கேட்டார்
“தக்காளி, வெங்காயம், கேரட், லீக்ஸ் என்று தொடர்ந்து நீளமாய் பட்டியலிட்டவள் அதோ மரவள்ளிக்கிழங்கு இருக்குல்ல..அதுவும் வேணும்” என்று கேட்டாக்
அது கருனைக்கிழங்கும்மா
“ஹி ஹி வெட்டி வச்சிருந்ததால கொஞ்சம் குழம்பிட்டேன். அதுவும் கொடுங்க..”
அவமானத்தை வீரமாய் சமாளித்து ஷாப்பிங் பை நிறைய காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்தவளை மார்க்கட்டில் பார்த்த நிறையபேர் இன்றைக்கு அலுவலகம் போகலையா என்று கேட்டார்கள்.. ஐந்து மாசமாய் இந்தப்பக்கத்தில் சுற்றுவதால் நிருவும் அங்கே பரிச்சயமான முகமாய் மாறிவிட்டாள்.
மார்க்கட் வீடு இருந்த பகுதியை விட கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்தது. ஆகவே திரும்பி சரிவில் இறங்கி போவது கனமான பையை சுமந்திருந்தாலும் காற்று தள்ளிக்கொண்டு போவது போலவே இருக்க களைப்பில்லாமலே நடந்து கொண்டிருந்தவளின் பார்வை சுற்றுப்புறத்தின் அழகில் லயித்திருந்தது. விளைவு மூன்றாவது திருப்பத்தில் திரும்ப வேண்டியவள் இரண்டாவதில் திரும்பி விட்டாள்.
கனவு கண்டு கொண்டு நடந்து வந்தவளோ பாதை மாறியதை கவனிக்கவே இல்லை. வெகு தாமதமாய் தான் எங்கேடா வீட்டை காணோம் என்று குழம்பி பரிட்சயமான காட்சி எதுவுமே இல்லையே என்று யோசித்து கூகிள் மாப்பை எடுத்துப்பார்த்தால் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருகிறாய் என்றது கூகிள்..
அய்யோடா இது வேறயா.. இன்றைக்கு லீவை அனுபவிக்க வேண்டும் என்று வந்தால் இப்படி சொதப்பிட்டியே நிரு..
தன்னையே நொந்து கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தவளுக்கு பின்னே மெல்லிய செருப்பு சத்தம் கேட்டதில் திரும்பிப்பார்த்தால் ஒரு வயதான அம்மா கையில் பெரிய பையோடு நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு அறுபது வயதாவது இருக்கும்.
இவள் நின்று திரும்பி புன்னகைக்க அவளையும் பையில் இருந்த காய்கறிகளையும் பார்த்தவர் யார்மா பார்த்த முகமாய் இல்லையே என்று விசாரித்தார்.
“நான் வீ ஆர் எஸ்டேட்ல வேலை பார்க்கிறேன் பாட்டி, பாக்டரி ஓடவே என் வீடு இருக்கும்.. நான் இங்கே வந்தே ஆறு மாசமாக போவுது” என்று நிரு தன்னை அவருக்கு அறிமுகப்படுத்த
“நானும் பாக்டரில வேலை பார்த்தேன்மா. இப்போல்லாம் முடியறதில்லை.. அதனால ஒரு அஞ்சு வருஷமா அங்கே போறதில்லை..” என்றார் அவர்
இந்த ஊரில் யார் தான் அங்கே வேலை செய்யலை? என்று ஆச்சர்யமாய் எண்ணிக்கொண்டவள் அந்த பாட்டியிடம் உற்சாகமாய் பேச்சுக்கொடுத்துக்கொண்டே நடந்தாள்
அவருடைய கணவர் இறந்து விட்டார், ஒரே மகள், அவரும் வேறு ஊரில் இருக்கிறார், அவருடைய கேட்டல் குறைவுள்ள மகள் மட்டும் பாட்டியோடு இருக்கிறாள்.
படிக்கிறாங்களா பாட்டி? என்று நிரு கேட்க
:அவளுக்கு உன் வயசு இருக்கும்மா. என் வீட்டுக்காரர் துணிக்கு சாயம் போடுற வேலை பார்த்தார். இவ அவர்கிட்ட கத்துக்கிட்டதை வச்சு கொஞ்சமா வீட்ல பண்ணுவா... இப்போ கூட அதை தான் காய வச்சு எடுத்துட்டு வர்றேன் என்று பையில் மடித்து வைத்திருந்த துணியை காண்பித்தார் அந்த பாட்டி
ஆர்வமாய் வாங்கிப்பார்த்தாள் நிரு.. வழக்கமாய் காட்டன் துணிகளில் காணும் பிரின்ட் தான்.. வர்ணப்பூக்கள் நீல உடலில் தெறித்திருந்தன..
மெஷின் எதுவும் வச்சு செய்வாங்களா பாட்டி?
இல்லம்மா,,இவ கையாலேயே தான் பண்ணுவா.. அந்த துணியை எல்லாம் பக்கத்துல இருக்கற கடையில் தான் கொடுப்போம். அதிகமா எல்லாம் தரமாட்டான்மா.. அவனே கொடுத்தாலும் இதை வாங்கிட்டு போய் கடைல கொடுக்கற இவளோட மாமன் காரன் கொடுக்க மாட்டான்” என்று வருத்தமாய் சொன்னவரை சட்டென்று கேள்வியாய் பார்த்தவள்
ப்ச்.. இவங்களே நேர்ல கொண்டு போய் கொடுக்கலாம்ல பாட்டி..என்று கேட்டாள்
“அவளால தூரமா எங்கும் போக முடியாதும்மா..நானும் அனுப்ப மாட்டேன். அந்த கடைக்காரனும் இவனும் பேசி வச்சிருப்பாங்க போல..நா ஒரு தடவை போய் பேசினேன்..ராகவன் மேல மட்டும் தான் நம்பிக்கை அவன் கொண்டு வந்து கொடுத்தா மட்டும் தான் வாங்குவோம்னு சொல்லிட்டான்”
வேறு வழி இல்லாமல் இருப்பவர்கள் என்று தெரியும்போது எல்லாரும் சுரண்டத்தான் பார்க்கிறார்கள்..என்ன செய்வது.. என்று பெருமூச்சு தான் வந்தது நிருவுக்கு
கையாலேயே பிரின்ட் செய்வதை பார்க்க ஆர்வமாய் இருக்கவே நான் வந்து பார்க்கலாமா என்று கேட்டாள்
தாராளமா வாம்மா என்றபடி கொஞ்சம் தூரம் நடந்து பிறகு கிளைபிரிந்த இன்னொரு பாதையால் திரும்பி ஒரு சின்ன பழைய வீட்டுக்குள் நிருவை அழைத்துப்போனார் அந்த பாட்டி
சுற்றிலும் பெரிதாய் நிலம் இல்லை.. ஆக வாசலிலேயே சாயங்கள் தீற்றப்பட்ட மேசைகள் , வெவ்வேறு டிசைன்கள் கொண்ட மர அச்சுகள் என்று வாசலில் நின்று பார்க்கும் போதே எல்லாம் தெரிந்தது...கூடவே சற்று தொலைவில் இருந்த மேசையில் கவிழ்ந்து நின்று கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்த அவரது பேத்தியையும்.
பாட்டி அந்த பெண்ணை நெருங்கி “உன் கைவேலையை பார்க்க வந்துருக்கா இந்த பொண்ணு” என்று அறிமுகம் செய்தார்.
அவளது வயது இருக்கும் தான்..ஆனால் அகன்ற விழிகளில் இருக்கும் பளபளப்பு தவிர வயதுக்கேற்ற உற்சாகத்தை வறுமை பறித்திருந்ததோ.. எதிரில் நின்றிருந்த பெண்ணை நிருவின் விழிகள் நொடியில் கணக்கெடுத்தாலும் அதை மறைத்துகொண்டபடி தன்னை அறிமுகப்படுத்தினாள்
கொஞ்சம் சத்தமா பேசினா தான் அவளுக்கு கேட்கும்மா என்று பாட்டி சொல்ல
சாரி என்றவள் கொஞ்சம் உரத்த குரலிலேயே தன்னை அறிமுகம் செய்தாள்
மெல்லிய சிரிப்போடு என் பெயர் துளசி என்றாள் அவளும்..
அழகான பெயர்.. சமீப காலமா எனக்கு பிடிச்ச பெயர் உங்களது என்று சிரித்தவள் எப்படி வேலை செய்றீங்கன்னு பார்க்க வந்தேன்.. தொல்லை இல்லையே என்று கேட்க
இல்லை இல்லை என்றவள் கொஞ்சம் உரத்த குரலிலேயே சாயங்கள், மர அச்சுக்கள், பெயின்ட் பிரஷ் எல்லாம் வைத்து ஒவ்வொரு துணியையும் எவ்வாறு பிரின்ட் செய்வாள் என்று விளக்கி காண்பித்தாள்.நிருவின் வரவு அவளுக்கு உற்சாகம் கொடுத்தது என்று ஆர்வமாய் எல்லாவற்றையும் காண்பித்ததிலேயே புரிந்தது.
நிருவுக்கு எல்லாமே ஆச்சர்யமாக இருந்தது.. ஒரு துணியை தயார் செய்வதே ஒரு நாள் இழுக்கும் வேலை.. முதுகு ஒடிந்து விடும்.. எப்படி தினமும் செய்ய முடிகிறது? இப்படியெல்லாம் மனிதர்கள் உழைக்கும் போது நாம் எத்தனை சிறுபிள்ளை தனமாய் இருந்து விட்டோம் என்று இப்போது அவளுக்கு தோன்றியது
சாயம் எப்படி தயார் செய்வார்கள் என்று துளசி விளக்க ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தவளின் கவனத்தை விடு விடுவென உள்ளே வந்த கரடு முரடான ஆணின் குரல் கலைத்தது..
“ஏய் துளசி..எங்கே துணியெல்லாம் எடுத்து வச்சிட்டியா... போன முறை போகும் போதே அவன் எதுவும் விக்கலைன்னு சொன்னான் இந்த தடவை எப்படியோ தெரியல” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவன் தான் அந்த ராகவன் என்று உடனேயே நிரு ஊகித்து விட்டாள்.
ஒரு லத்தியை எடுத்து வெறிகொண்டு அவனை அடித்து துவைக்க வேண்டும் போலிருந்தது.
அவனுக்கும் அவளை கண்டதும் யார் இவள் என்ற குழப்பம் வந்திருக்கும் போலிருக்கிறது, நெற்றி சுருக்கி பிறகு முறைப்பு பார்வையை அவள் மேல் வீசி விட்டு பாட்டியிடம் அவள் யார் என்று விசாரித்து...
“தனியா இருக்கீங்க, யார் வர்றேன்னு சொன்னாலும் கூப்பிட்டு வந்து உக்கார வைப்பியா ? “ என்று கேட்டு திட்டு விழுவது இவளுக்கு நல்லாவே கேட்டது
ஹுக்கும் நான் ஒண்ணும் உனக்கு பிசினஸ் போட்டியில்லை.. என்று மனதுக்குள் நொடித்துக்கொண்ட நிரு அவனை கிஞ்சித்தும் கருத்தில் எடுக்காமல் துளசியின் வேலையை ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருக்க அதற்குள் துளசி உள்ளிருந்து எடுத்து வந்த துணிகளை வாங்கி பையில் போட்டுக்கொண்டு நிருவை முறைத்த படியே கிளம்பி விட்டான் அவன்..
தான் திருடன் பிறரை நம்பான்னு சும்மாவா சொன்னாங்க என்ற படி வந்த பாட்டி மதியம் ஆகப்போகுது.. இனிமே போய் சமைக்க வேற வேணுமா? எங்க கூட சாப்பிட்டு போம்மா என்று அழைத்தார்.
அச்சோ இல்ல பாட்டி நான் இப்படி கையாலேயே பெயின்ட் பண்ணத பார்த்ததே இல்லைன்னு தான் பார்க்க வந்தேன்..நான் கிளம்பறேன் என்று அவசரமாய் மறுத்து விட்டு எழுந்து கொண்டாள் நிரு.
ஆனால் “இருங்களேன்” என்று அவளை துளசியும் கேட்க பிறகு மறுக்க முடியவில்லை
சோறு, அதே கருணைக்கிழங்கு குழம்பு, காரட் பொரியல் என்று எளிமையான ஆனால் வெகு சுவையான உணவு.. ரசித்து சாப்பிட்டவள் துளசியிடம் அவள் படித்தது, எதிர்காலம் பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள். மனதின் ஓரம் இவளுக்கு நாம் ஏதும் உதவி செய்யலாமா என்ற எண்ணமும் ஓடியது..
ஆனால் அவளால் என்ன உதவ முடியும்? அந்த பெண்ணால் அதிக தூரம் பயணித்து பொருட்களை சந்தைப்படுத்த முடியாது. ஊரில் இந்த ராகவனை மீறிக்கொண்டு அவளால் எதுவும் செய்யவும் முடியாது.. சமூக வலைத்தளம் மூலமாய் விசினஸ் செய்வதை பற்றி சொல்லி கொடுக்கலாம் என்றால் அது எந்தளவுக்கு சரியாய் வரும் என்று அவளுக்கு தெரியவில்லை.
கையால் செய்யும் டிசைன்கள் என்றாலும் துளசி செய்தவற்றில் புதுமையாய் ஏதும் அவள் மனதை கவரவில்லை..ஆறு வருஷ அடீரா அனுபவம் கொண்டவள் அத்தோடு ஒரு டிசைனரின் காதலி இல்லையா.. ஓரளவுக்கு மதிப்பீடு அவளுக்கு புரியுமே..ஆக சமூக வலைத்தளங்களுக்கு வந்தாலும் அது மூலமாய் பெரிய வருமானம் வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது.. வேண்டுமானால் நாம் ஒன்றிரண்டை வாங்கி கொள்ளலாம்..அதை தவிர இங்கே நாம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
யோசனையோடேயே எழுந்தவள் கைகழுவி விட்டு ஓரமாய் இருந்த பெஞ்சில் அமரப்போக அங்கே இருந்த பெட்டி ஒன்று கீழே விழுந்து அதில் இருந்து கைக்குட்டை அளவில் சதுரமாய் வெட்டப்பட்டிருந்த துணித்துண்டுகள் கீழே விழுந்து சிதறின..
ஐயோ சாரி சாரி என்று பதறிப்போனவள் அவற்றை எடுக்க குனிய.. சிரித்த துளசி “விடுங்க..அதெல்லாம் நான் என் பொழுதுபோக்குக்கு பண்ணது..இயற்கை சாயத்தை வச்சு பெயின்ட் பிரஷ் வச்சு வரைஞ்சேன்..” என்று சமாதானம் செய்தபடி தானும் குனிந்து அந்த பெட்டியை எடுத்தாள்.
அதற்குள் ஒன்றிரண்டு துணிகளை கையில் எடுத்திருந்த நிரு அப்படியே உறைந்து நின்றாள்..இந்த நிறக்கலவை. வரை கலையின் நேர்த்தி, அந்த தீற்றல்கள் துணியில் படர்ந்திருப்பது ஒரு வண்ணாத்துப்பூச்சியின் இறகுகளை தொடும் உணர்வை கொடுத்தது அவளுக்கு..விரல் தொட்டாலே கலைந்து விடுமோ என்னும் படி
“நீ ஒரு ஆர்டிஸ்ட் துளசி.. ஐயோ எவ்வளவு அழகாயிருக்கு...” ஒவ்வொன்றாய் பார்க்க ஆரம்பித்திருந்தாள் நிரு.
இதெல்லாம் பெரிய அளவில பண்ண தனியாளான என்னால முடியாதுங்க. இதோட சாயம் ரொம்ப நாள் நிக்குமா, துவைக்கும் பொது சாயம் போகுமா? இதுக்கெல்லாம் நான் பதில் சொன்னா நம்ப மாட்டாங்க.. சும்மா ஆசைக்கு பண்ணிட்டிருப்பேன்..
துளசி சொன்னது எங்கே கேட்டது நிருவுக்கு..மீண்டும் மீண்டும் அந்த வர்ண தீற்றல்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்..
வாங்கி வந்த காய்கறிகளை மொத்தமாய் பாட்டியிடமே ஏதேதோ சொல்லி வற்புறுத்தி கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடந்தவளின் மனமெல்லாம் துளசியின் தூரிகை கோடுகளும் வர்ணங்களுமே நிரம்பி இருந்தன.
மனம் முடிவு செய்து விட்டது.. வேளை வந்து விட்டது.
முதலில் நிதர்ஷனனுக்கு அழைத்தாள். அவள் கேட்டதற்கு, ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் அடங்கினால் சரி என்று அவன் பச்சை சமிக்ஞை கொடுத்துவிட்டு “லீவ்ல போனாலும் போன் போட்டு தொந்தரவு பண்ற எம்ப்ளாயி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்..” என்று அவளை கிண்டலும் செய்து விட்டு போனை வைத்து விட்டான்
அடுத்தது தான் முக்கியமான விஷயம்.
மொபைலில் கான்டாக்ட் லிஸ்ட்டில் RW வை எடுத்து வைத்துக்கொண்டு யோசித்த படி குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்
ஹாய் சார் என்பதா அபய் என்பதா? ஆரம்பமே கன்பியூஷன்.
பிறகு எப்படி விஷயத்தை சொல்வது?
அவள்: இங்கே ஒரு பெண்ணை பார்த்தேன்..நீங்க அவங்க கூட வேலை செய்தால் நல்லா இருக்கும்...
அவன்: நீ எப்படி அதை சொல்லலாம்.
ஷ்
தலையை பிய்த்து விட்டு பார்மலாகவே அணுகி விடுவோம் பிரச்சனை முடிந்தது என்று எண்ணிக்கொண்டவள்
ஈமெயிலை திறந்து அபய்க்கு டைப் செய்ய ஆரம்பித்தாள்.
எழுதி எழுதி அழித்துகொண்டே இருந்து ஒரு வழியாய் சுருக்கமாய் விஷயத்தை சொல்லி போட்டோக்களையும் இணைப்பதற்குள்ளே படபடத்து போய்விட்டாள்.
இரண்டாவது தடவை யோசித்து எழுதியதை எல்லாம் அழிப்பதற்குள்ளே ஈமெயிலை அனுப்பியும் ஆயிற்று
கண்ணை மூடிக்கொண்டே சிறிது நேரம் அப்படியே இருந்தவளுக்கு சிரிப்பும் படபடப்பும் தாங்க முடியவில்லை..
அபய் வருவான்..அவளுக்கு தெரியும்.
தரையில் சிதறிக்கிடந்த துணிகளில் விழிகள் பதிந்த அடுத்த கணமே அவளுக்கு அபய் தான் நினைவில் வந்தான். இது அவனுடைய விளையாட்டு திடல்..கண்டிப்பாய் வருவான்..
டிடிப்... இமெயில் வந்த சத்தம் கேட்டது ..ஆண்டவா... யார் நீன்னு கேட்டாலும் கேட்டிருப்பான்.. என்று பதறி அவசரம் அவசரமாய் ஈமெயிலை பிரித்தாள்.
ஹாய் ஹலோ, டியர் மேடம் எதுவும் கிடையாது..வெறுமனே
நேரில் சந்தித்து பேசவேண்டும்.. காரியதரிசியை மெயிலில் இணைத்திருக்கிறேன்.அவர் மீட்டிங் நேரம் குறித்து உங்களோடு பேசுவார்.
-A
நான் கோடு போட்டேன் அவன் அதில் ஹைவே போட்டு காசும் வாங்க ரெடி பண்ணிட்டான்..
அவள் உதட்டை கடிக்க
டிடிப்.. அடுத்த ஈமெயில். அவனது காரியதரிசி தான், நாட்காட்டியை இணைத்திருந்தார். அதில் திங்கள், செவ்வாய், வியாழன் மூன்று நாட்களில் ஏதாவதொன்றை தெரிவு செய்யும் படி கேட்க செவ்வாய் கிழமையை தெரிவு செய்து விட்டு கைகளால் முகத்தை இறுக பற்றிக்கொண்டாள் நிரு.
ட்ராகனை அதன் இடத்திலேயே சந்திக்க போகிறேன்..ஐயையோ..இவ்வளவு நாள் நன்றாய் வெறுப்பேற்றி விட்டோமே.. வச்சு செய்வானே..
புதிய கவலை தொற்றிக்கொண்டது.

Last edited by a moderator: