- Messages
- 545
- Reaction score
- 735
- Points
- 93
அவள்.....
Episode 5
அவளின் புன்னகையை விரும்பியவர்கள் பலர்... ஆனால் அவளோ புன்னகைக்க நேரம் இல்லாமல் இல்ல... அவள் புன்னகைப்பது சிலருக்கு பிடிப்பது இல்லை...
"நீ முத்தம் ஒரு கொடுத்தால்
முத்தமிழ்.."
என்று பாடி கொண்டே உள்ளே நுழைந்த துளசி அவர்கள் இருவரையும் பார்த்து வேகமாக திரும்பி கொள்ள...
துளசி : அடேய் திரவி அவளை விடு டா...
இருவரும் வேகமாக விலக...
அவள் : "அக்கா அது வந்து..."என்று திருதிருவென முழிக்க...
துளசி : ஏலே உனக்கு வேலைக்கு நேரமாகலையா... இங்க என்ன டா பண்ற...
திரவியம் :"சில பூஜையில் கரடி..."என்று முனுமுனுத்து கொண்டே "என்ன பண்ணாங்க னு நீ பாக்கல..."என்று கேட்க..
துளசி : அத தான் நா பாத்துட்டேனே... ஏன் டா கதவை சாத்திக்க வேண்டியது தானே...காலைலேயே வா டா...
திரவியம் : ம்ம்ம் நீ சிவாக்கு கொடுக்க மாட்டியா என்ன...
துளசி : அடேய் வாய மூடிட்டு கிளம்பு டா...
திரவியம் : நீ எதுக்கு வந்த...
துளசி : "அவ market போகனும் னு சொன்னா டா... நானும் Market தான் போறேன்... அவளையும் கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்... வந்து பாத்தா..."என்று இழுக்க...
திரவியம் : அது தான் பாத்தீயே...அப்படியே போக வேண்டியது தானே... சின்னஞ்சிறுங்க அப்படி தான் இருப்போம்... நீங்க தான் கண்டுக்காம போகனும்...
துளசி : வாய் வாய் என்ன பேச்சு பேசுற... இதையே குமுதவள்ளி கிட்ட பேசு சொல்லு... ஊமைத்துரை மாதிரி போயிடுவ...
திரவியம் : "எனக்கு மணி ஆச்சு... நா கிளம்புறேன்..."என்று வேகமாக அங்கே இருந்து கிளம்ப...
மணி 9 அடித்தது.......
துளசி : சாப்டியா...
அவள் : இன்னும் இல்ல கா...
துளசி அவளுக்கு சாப்பாடு போட்டு எடுத்து வந்தாள்...
அவள் : என்ன கா நா போட்டுக்க மாட்டேனா...
துளசி : என் தங்கச்சிக்கு நா பண்றேன்...சாப்டு...
அவள் அமைதியாக சாப்பிட்டாள்...
துளசி : நீ ஏன் டி இப்படி இருக்க... இந்த இடத்துலே நா இருந்திருந்தா... அவ்ளோ தான் குடும்பம் ரெண்டாகிருக்கும்... என் கிட்ட ஒரு வார்த்தை சொல்ல முடியாது... உடனே கோவப்பட்டுருவேன்... ஆனா நீ இவ்ளோ அமைதியா அதுவும் சிரிச்சுக்கிட்டே போயிடுறீயே... அதுவும் அந்த குட்டி சாத்தான் ஜனனி என்ன பேச்சு பேசுறா... நீயும் எதுவும் சொல்ல மாட்ற... இப்படி எல்லாம் பேசாத ஜனனி னு சொல்றது இல்லையா...
அவள் சிரித்து கொண்டே "நா எப்படி கா சொல்ல முடியும்... நா இந்த வீட்டுக்கு வாழ வந்தவ... ஜனனி இந்த வீட்டுல பொற்ந்தவ... என்னைய விட அவளுக்கு தான் உரிமை அதிகம்... அதுவும் இல்லாம இன்னும் ஒரு வருசமோ இல்ல ஒன்றரை வருசமோ தான் இருக்க போறா... அப்புறம் கல்யாணம் பண்ணி போயிடுவா... இதுல சின்ன பொண்ணு கா அவ...
துளசி : சின்ன பொண்ணு னா சின்ன பொண்ணு மாதிரி நடந்துக்கனும்... அது விட்டுட்டு இப்படி எல்லாமா பேசுவாங்க...
நீ குனிய குனிய கொட்டிக்கிட்டே தான் இருப்பாங்க...
அவள் மெலிதான புன்னகைத்து "அக்கா நா குனிய குனிய கொட்டுவாங்க சரி... அவங்க கொட்டுனா நா குனிய தானே முடியும்..."என்று சாப்பிட...
துளசி : அதுக்கு னு நீயும் எவ்ளோ தான் குனிவ... ஒரு தடவ தான் நிமிர்ந்து தான் பாரேன்...
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க...
துளசி :இதே நானா இருந்திருந்தா அவ்ளோ தான்... சண்டை வந்து குடும்பமே ரெண்டாகிருக்கும்... அவ அவ மாமியாரை ஊதி தள்ளுறா... நாத்தனாரை நசுங்கி தள்ளுறா... ஆனா நீ சிரிச்சுக்கிட்டே போயிடுற...எப்படி டி முடியுது... ஒரு நாளாவது எதிர்த்து பேசு டி...
அதற்கும் அவள் அமைதியாக இருக்க...
துளசி : எதுவும் பேசாத... நா market க்கு போறேன்... வரியா டி...
அவள் : ம்ம்ம் வரேன் கா...
துளசி : "இதுக்கு மட்டும் வேகமாக பேசு... நா போய் வண்டிய எடுக்குறேன்... கை கழுவிட்டு வா..."என்று எழுந்து சென்றாள்...
துளசி : சீக்கிரம் வா டி...
அவள் வேக வேகமாக வந்தாள்...
துளசி : எவ்ளோ நேரம்...
அவள் : போலாம் கா...
இருவரும் வண்டியில் market சென்று காய் வாங்கி வந்தனர்...
வீட்டு திண்ணையில் மாமனாரின் அப்பா யோகநாதன் அமர்ந்திருந்தார்...
அவள் : "தாத்தா எப்போ வந்தீங்க...வந்து ரொம்ப நேரம் ஆச்சா... மன்னிச்சுக்கோங்க... காய் வாங்கி போய் இருந்தேன்...ஒரு call பண்ணி இருந்தா நா உடனே வந்து இருப்பேனே... எவ்ளோ நேரமா உட்காந்து இருந்தீங்களோ... இருங்க தாத்தா நா போய் உங்களுக்கு நீராகாரம் எடுத்துட்டு வரேன்..."என்று காய் பையை திண்ணையில் வைத்து விட்டு கதவை திறந்து வேகமாக உள்ளே ஓட...
யோகநாதன் : பேத்தி பாத்து போ மா... எதுக்கு இம்புட்டு ஓட்டம்...
துளசி ஒரு cover ஐ எடுத்து கொண்டு அங்கே வர...யோகநாதன் அமர்ந்திருப்பதை பார்த்து "hi old man... எப்போ வந்த... பாத்து ரொம்ப நாள் ஆச்சு... என்ன மக வீட்டுக்கு போனா நாங்க எல்லாரும் கண்ணுக்கு தெரிய மாட்டோமா...நீ இல்லாம உன் பேத்தி ய உன் மருமக படுத்துறா..."என்று சொல்லி "இந்த இது பலாச்சுளை இருக்கு எடுத்துக்கோ...உன் பேத்தி வாங்குனா... வீட்டிலேயே வச்சுட்டு வந்துட்டா..."என்று கொடுக்க...
யோகநாதன் : "என் பேத்திக்கிட்டேயே கொடு... அவ நல்லா சாப்படுவா... என் பேத்திக்கு பிடிக்குனும் னு வரும்போது பாத்தேன்... எங்கேயும் காணோம்..."என்று தான் கொண்டா வந்த பையில் இருந்து ஒரு டப்பா வை எடுத்து "இந்தா என் மக என் பேத்திக்கு பிடிக்கும் னு காரப்பணியாரம் செஞ்சு கொடுத்து விட்டா...நீயும் எடுத்துக்கோ..."என்று கொடுக்க...
அவள் வேகமாக வந்து "தாத்தா இந்தாங்க நீராகாரம்..."என்று கொடுக்க...
யோகநாதன் சிரித்துக் கொண்டே "நீ தான் பேத்தி நா எங்கே வெளிய போயிட்டு வந்தாலும் நீராகாரம் கொடுக்குற... என் பொண்டாட்டி கூட கொடுக்க மாட்டா... அம்மாடி இந்தா உன் சித்தி உனக்கு காரப்பணியாரம் கொடுத்து விட்டா... நல்லா சாப்டு... அப்புறம் என் பேரன் உன் தம்பி தினேஷ் அக்காவுக்கு பால்கோவா பிடிக்கும் னு பால் பண்ணை ல போய் வாங்கிட்டு வந்தான்... அதுவும் என்ன சொல்லி விட்டான் னு தெரியுமா...பால்கோவா வ அக்கா கிட்ட மட்டும் கொடு தாத்தா... அத்தையோ இல்ல அந்த சின்ன பெருச்சாளி இருக்கும்போதோ கொடுக்காத... நா அக்கா கிட்ட call பண்ணி கேட்பேன் னு சொன்னான்... தாத்தா உனக்கு என்ன வாங்கிட்டு வந்தேன் னு தெரியுமா..."என்று ஒரு cover ஐ எடுத்து கொடுக்க...
அவள் அதை கண்டு பிடித்தாலும் சொல்லாமல் "என்ன தாத்தா வாங்கிட்டு வந்தீங்க..."என்று கேட்க...
யோகநாதன் : அது வரும் நஸீர் கடை வழியா வந்தேன்... உனக்கு தான் பிரியாணி பிடிக்குமே...வாங்கிட்டு வந்தேன்...
அவள் : "அய்யோ தாத்தா பிரியாணி யா...என் செல்ல தாத்தா..."என்று அவர் கன்னத்தை பிடித்து கிள்ளி "உங்களுக்கு hair colour பண்ணி pant shirt போட்டா அப்படியே 20 வயசு சின்ன பையன் மாதிரி இருப்பீங்க... பொண்ணு பாக்கலாமா தாத்தா..."என்று கண் அடிக்க..
யோகநாதன் : "அடி கழுதை என்ன பேச்சா பேசுற... என் பேரனுக்கு எதிர்மறையா வந்து இருக்கா..."என்று சிரித்துக் கொண்டே கை ஓங்க...
அவள் அவர் மீசை முறுக்கி விட்டு பையை எடுத்து சிரித்து கொண்டே வேகமாக உள்ளே ஓடினாள்...
அவள் சிரிப்பதை பார்த்து அவர் சந்தோஷப்பட... துளசி அதை பார்த்து கொண்டே இருந்தாள்...
யோகநாதன் : என்ன துளசி அப்படி பாக்குற...
துளசி : இல்ல தாத்தா உன் மருமக உன் சின்ன பேத்தி ய தவிர மத்த எல்லாருக்கும் இவளை பிடிச்சு இருக்கு... அப்படி என்ன அவங்க ரெண்டு பேருக்கும் கோவம்...
யோகநாதன் : உன் மருமக எல்லார் கிட்டையும் இப்படி தான் நடந்துக்குறா... சின்ன பொண்ணு அப்படியே அவ அம்மா மாதிரி... அது தான் அப்படி நடந்துக்குறா... திரவியம் மட்டும் வாய திறந்து பேசுனா அடங்குவாங்க...
ஒரு பேரன் ரொம்ப செல்லம் கொடுத்துட்டேன்... சின்னகுழந்தை மாதிரியே இருக்கான்... சொல்றத அவனால புரிஞ்சுக்க முடியல...அது என்னமோ தெரியல.... நாலு தலைமுறையா ஒரு பையன் ரெண்டு பொண்ணு தான் பொறக்குது....
அதனாலேயே நாலு தலைமுறையா பொறந்த பையனுக்கு செல்லம் கொடுத்தே வளர்த்தாங்க... நானும் இப்படி ல என் மகனும் இப்படி இல்ல... திரவியம் மட்டும் தான் இப்படி இருக்கான்....
அவள் : போதும் தாத்தா எத்தனை நாள் தான் இப்படியே சொல்லிட்டு இருப்பீங்க... சாப்பாடு போட்டு வரேன்... சாப்டுங்க...
யோகநாதன் : இல்ல பேத்தி... என் மக வீட்டுல சாப்பிட்டு அப்படியே இருக்கு... நீ போய் பிரியாணி ய சாப்புடு... நா அப்படி அக்கடா னு படுக்குறேன்...
அவள் : உள்ள வந்து படுக்க தாத்தா...
யோகநாதன் : இல்ல தாயி... நல்லா காத்து வருது... இங்கே படுக்குறேன்...
அவள் :"சரி தாத்தா..."என்று ஒரு செம்பில் தண்ணி எடுத்து வைத்து மூடி விட்டு "தாத்தா தண்ணி வச்சு இருக்கேன்... குடிச்சுக்கோங்க..."என்று சொல்லி "துளசி அக்கா வாங்க சாப்டலாம்..."என்று சொல்ல...
துளசி : அடியேய் அது உனக்கு வாங்கிட்டு வந்தது... நீ சாப்டு...
அவள் : "ப்ச்... வா கா..."என்று இழுத்து சென்றாள்...
துளசி : குமாரி அத்தை உன் மேல இவ்ளோ பாசமா இருக்காங்க...இந்த தினேஷ் பய விளையாட்டு பையன் னு நினைச்சேன்... அவனை பாரேன்... பால்பண்ணை ல போய் பால்கோவா வாங்கிட்டு வந்து இருக்கான்...
அவள் : "ராஜகுமாரி சித்தி மட்டும் இல்ல கா... ராஜலட்சுமி சித்தியும் என் மேல பாசமா தான் இருப்பாங்க... ராஜலட்சுமி சித்தி பசங்க ராகவியும் மனோகரனும் கூட பாசமா இருக்காங்க... Daily call பண்ணி பேசிருவாங்க..."என்று துளசிக்கு ஒரு தட்டில் பிரியாணி எடுத்து வைத்து இன்னொரு தட்டில் அவளும் சாப்ட...
துளசி அவள் கன்னத்தில் முத்தமிட்டு "நீ சிரிக்கும் போது உன்னோட சிங்கப்பல் இருக்கே...அது அழகா இருக்கு... ஆனா நீ தான் சிரிக்கவே மாட்ற..."என்று அவளுக்கு ஊட்டி விட... அவளும் துளசிக்கு ஊட்டி விட்டாள்....
(அவளுக்கு என்ன பெயர் என்று நான் சொல்லவில்லை... நான் ஒரு பெயர் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்... உங்களுக்கு அவளுக்கு என்ன பெயர் வைக்கலாம் னு என்று தோன்றுகிறதோ... சொல்லுங்க...)
தொடரும்.......