• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தென்றல் 1

New member
Messages
21
Reaction score
1
Points
3
தென்றல் 1

ஹீரோயின் ரியாசந்தானம் ஒரு ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு... அப்பா அம்மாவின் செல்லமான பொண்ணும் கூட... கூடவே சுட்டித்தனமும் அசட்டுத் தைரியமும் அவளுக்கு அதிகம்...



அவள் வெளியே போய் வீடு வந்து சேரும் வரை நெஞ்சில் நெருப்பை சுமந்து கொண்டிருப்பார் மோகனா... யாருகிட்ட வம்புக்கு போவாளோ எந்த சண்டையை கையோடு இழுத்துக்கிட்டு வருவாளோன்னு...



சென்னையில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் ஆடை வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்றிருக்கிறாள் ரியா... தனக்கான ஆடைகளை அவளே வடிவமைத்துப் போட்டுக்கொள்வாள், அது அவளுக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கும்...



ஆனால் என்ன?.. மோகனா தான் தலையிலேயே அடித்துக் கொள்வார் ... டிசைன்கற பேர்ல கண்டபடி தைச்சு போட்டுகிட்டு அவள் சுத்தும் பொழுது மோகனாவுக்கு பகீரென்றிருக்கும், எங்கே எது கழன்று விழுமோ என்று



அத்துறையில் பேராசிரியராக பணிபுரிய ரியாவுக்கு நீண்ட நாள் ஆசை... தனக்கு மட்டும் அல்லாது இன்னும் நிறைய பேருக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பெரும் ஆவல் கொண்டிருந்தாள்.



அப்பா சந்தானம் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்... அம்மா மோகனாம்பாள் படித்திருந்தும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார்...



ஒரு தம்பி இருக்கான் அவன் பெயர் ராஜா... கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறான்...சென்னையை விட்டு மும்பைக்கு மொத்தமாக குடி வந்து இருப்பதால்... மும்பையில் தன்னுடைய அடுத்த வருட படிப்பைத் தொடர்வான்...



அவள் அக்கா சுதா இப்போ கன்சிவா இருக்காங்க ... ஏழாவது மாதம்


அக்காவை புனேயில் உள்ள வினுவுக்கு கட்டி கொடுத்தார்கள்... வினுவுக்கு சொந்தமென்று யாருமில்லை... அதனால் சுதாவை அருகில் இருந்து கவனிக்க யாரும் இல்லாததால் வேறு வழியின்றி அவளைப் பார்த்துக் கொள்ள குடும்பத்தோடு அவர்களும் மும்பைக்கு வந்து விட்டார்கள்...



இப்போதான் ஒரு மாதம் ஆகிறது அவர்கள் சென்னையில் இருந்து மும்பைக்கு குடி பெயர்ந்து...



நடுத்தரமான சந்தோசமான குடும்பம் அவர்களுடையது... சந்தானம் குடும்பத்திற்கு நிறைய சேமிப்பு இருக்கு பேங்கில்... சோ கவலை இல்லை அவர்களுக்கு பணத்தை நினைத்து...



மும்பையில் உள்ள புகழ் பெற்ற RVK கல்லூரியில் பேராசிரியர் பணிக்காக அப்ளிகேஷன் போட்டிருந்தாள் ரியாசந்தானம்... இன்டர்வியூக்கு வரச் சொல்லி அதற்கான அனுமதிக் கடிதம் வந்திருக்கவும்...



அதற்கு தயாராகி கொண்டிருக்கிறாள் நான்கு நாட்களாக வீட்டை இரண்டு பண்ணிக் கொண்டு... அவளால் ரொம்பவே கஷ்டம் தான் வீட்டினருக்கு...



கல்லூரிக்கு இன்டர்வியூ செல்லும் நாளும் வரவே... தயாராகி வந்தவளைக் கண்டு திறந்த வாய் மூடாது பார்த்த சுதா



"ஏண்டி வாலு இப்டியே வாஆஆ ... போகப் போற காலேஜுக்கு?"... அதட்டினாள் ரியாவை சுதா



சுதா கேட்டதில் தவறொன்றும் இல்லை... ஏனெனில் ரியா வந்த விதம் அப்படி...



ஸ்கை ப்ளூ கலர் டாப்ஸ் அணிந்து... முத்துக்களால் கோர்த்து வலை போன்ற அமைப்பில் இருக்கு ஆனா இல்லைன்னு சொல்வது போல தன் கைகளாலேயே வடிவமைத்த ஷாலை கழுத்தில் ஸ்டைலாக சுற்றியிருந்தவள்... அதற்கு மேட்ச் ஆக ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டிருந்தாள்...



அரைத்த சந்தன நிறத்தில் சிற்பம் போல அவள் மிளிர... பூனை கண்கள் மினுமினுவென்று ஒளிர... குறும்பு புன்னகை எப்போதும் உதட்டில் உறைந்திருக்கும்... லேயர் கட் செய்த ஹேர் அலையாக பறந்து தோள்களில் படர்ந்தது...



அவளது தோற்றத்தில் ஒரு கம்பிரம் இருக்கும் எப்போதும்...


அவளை பார்க்கும் எவரும் பேராசிரியை என்றால் சத்தியம் செய்தால் கூட நம்பவே மாட்டார்கள்...



"அடியேய் நீ நிஜமாவே உத்தியோகம் பார்க்கப் போறியா இல்லை படிக்கப் போறியா?... இல்லை நான் சும்மாதான் கேட்கறேன் என்ன நினைப்புலே இப்படி போறே?"... சுதா அவளை மிரட்ட...



"அய்யோ!... அக்கா !... பயந்துட்டேன் பயந்துட்டேன்... ம்ஹம்..ம்ம்...சுதா மிரட்டாதே என்னை" ... கண்களை விரித்து கைகளை குறுக்கி பயப்படுவது போல நடித்தவள்...



"இது மும்பை சிஸ்... சோ இப்படித்தான் போகணும் புரியுதா ?... அதுக்குத்தான் நாலெழுத்து படிக்கணும்னு சொல்றது... எங்கே அதெல்லாம் தானா வரணும்"...



அக்காவை வம்பிலுத்தவாறே ஓடினாள் ரியா... அவளை தொடர்ந்து அக்காவின் வசவு குரல் ஒலித்தது...



"அடியேய் படிக்கலைன்னாலும் நான் தான் செல்ல பொண்ணு அப்பாக்கு, போடி அறிவு கெட்ட ரிக்கு"...



"ஆஆ... சொன்னாங்க சொன்னாங்க போடி சுக்கு அக்கா... அப்பாவுக்கு நான் தான் செல்லக் குட்டிப் பொண்ணு இல்லப் பா?"... அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு ரியா கேட்கவும்...



"ஆமாம்டா ராஜாத்தி நீ தான் எங்களோட செல்லம்"... அவள் தலையை வருடியவாறே சந்தானம் கூற... அவரை தொடர்ந்து சுதாவும் அணைத்து கொண்டாள் ரியாவை அன்புடன்...



"சரியான லூசுடி நீ... இப்படி எல்லாம் கேட்பாங்களா என்ன?... எங்க எல்லோருக்கும் நீன்னா உசுருடி"... பேசும் போதே கண்ணீர் வழிந்தது சுதாவுக்கு...



"அச்சோ அக்கா இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு கண்கலங்கறீங்க நீங்க?... நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்... இப்போ அழுகையை நிறுத்துங்க, ப்ளீஸ்க்கா அப்புறம் மாமா என்கிட்டே சண்டைக்கு வருவாரு... என் சுதாவை ஏன் அழ விடுறீங்கன்னு"... கண்களை சுருக்கி அவள் பேசவும்... சிரித்து விட்டாள் சுதா...



"எல்லோரும் என்ன செய்கிறீங்க இங்கே... நல்ல நேரம் முடியறதுக்குள்ள ரியா இன்டர்வியூக்கு கிளம்பட்டும் விடுங்க"... சுதாவையும் சந்தானத்தையும் கண்களால் மிரட்டி எச்சரித்தார் மோகனா...



சுதாரித்து கொண்ட சுதா அங்கே ஹாலில் இருந்த தன் கணவனிடம் சென்று


"வினு நீங்க இவளை அழைச்சுட்டு போய் காலேஜில் விட்டுட்டு வந்துடுங்க சரியா?" ... வினுவைப் பார்த்து சுதா சொல்ல



சுதாவின் சொல்லுக்கு சரியெனக் கூறிய வினு ரியாவை தன்னோடு அழைத்துப் போனான் கல்லூரிக்கு... எல்லோரிடமும் எப்படியோ மாமாகிட்ட மட்டும் மரியாதையாக இருப்பாள் ரியா... அவள் வினுவிடம் பேசுவதைக் கேட்டு ஆச்சரியமாக இருக்கும் அனைவருக்கும்... அவர்கள் வீட்டை விட்டுச் சென்றவுடன்



"அறிவிருக்கா உங்க ரெண்டு பேருக்கும்... அவ முன்னாடி என்ன பேச்சு பேசறீங்க?...

அவளுக்கு அப்பா அம்மா இல்லை எப்படி நம்மகிட்ட வந்தான்னு தெரிஞ்சா மனசு உடைஞ்சு போய்டுவா புரியுதா?... அதுவும் ராஜாவுக்கு மட்டும் தெரிஞ்சா உளறிடுவான் அவகிட்டே... சின்ன பையன் தானே அவன்?... கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டிங்களா?... 24 வயசு ஆச்சு அவளுக்கு இப்போ இந்த சமயத்துல சென்னையில் இருந்தா பிரச்சனைன்னு தானே இங்கே வந்திருக்கோம். இங்கேயும் வந்து ஆரம்பிக்கணுமா?"...



அவர்களிடம் கோபமாக பேச ஆரம்பித்த மோகனா ராஜா வருவதைக் கண்டு பேசுவதை நிறுத்திக் கொண்டார்...



"அம்மா எங்கே வால் முளைத்த ரிக்கு?"... ராஜா அம்மாவிடம் கேட்க அவர் கோபம் மறைந்து செல்லமாக அலுத்துக் கொண்டார்...



"வேலைக்கு போகத்தான் போறேன்னு பிடிவாதமாகப் போறா... யாருகிட்ட வம்பிலுத்துகிட்டு வரப்போறான்னு தெரியல இவளை வெளியே விட்டா பயந்தே சாகணும் நான் என்ன பொண்ணோ போ... உங்கப்பாகிட்ட சொன்னாலும் கேட்க மாட்டேங்குறார். அவ வேலைக்கு போய்தான் சாப்பிடணுமா நாம... ம்ம்ம் எல்லாம் தலை எழுத்து போடா"... மோகனா புலம்பவும்



"அப்போ இன்னைக்கு புது படம் பார்க்கலாம்னு சொல்றே நீ"... குறும்புடன் சிரித்தான் ராஜா...



"டேய் நீ இருக்கியே"... அவன் தலையிலேயே கொட்டினார் மோகனா...



அதே நேரம் ரியாவை காலேஜில் கொண்டு விட்ட வினு


"ரியா நான் வேணா உன் கூடவே காலேஜ்கு உள்ளே வரட்டுமா துணைக்கு?" ...



அவன் கேட்டதும் பக்கென்று ஆனது அவளுக்கு...



"இல்லை ...இல்லை வேணாம் மாமா தேவைன்னா நானே கூப்பிடறேனே ... நீங்க இப்போ கிளம்புங்க மாமா"... அவள் அவசரமாக வினுவை வழி அனுப்பவும் அவளை சந்தேகமாகப் பார்த்தவன்... தலையசைத்தவாறே கிளம்பினான்...



'அப்பாடா இனி நம்ம ராஜ்ஜியம் தான் நிம்மதியோ, நிம்மதி'... சந்தோசப்பட்டவளாக உள்ளே போனவள் அங்கே நடந்து கொண்டிருக்கும் அநியாயம் கண்டு அதிர்ந்து நின்று விட்டாள்...



சுற்றி பல பேர் நின்று வேடிக்கை பார்க்க... கூட்டமாக இருந்தது அவ்விடத்தில்... நடுவில் என்ன நடக்குதுன்னு இங்கிருந்து எட்டி எட்டிப் பார்க்க அங்கே நடப்பது என்னவென்று தெரியவில்லை அவளுக்கு...



"எந்த ஊரா இருந்தாலும் சுத்தியடுச்சு வேடிக்கை பார்க்கறதுலே மட்டும் என்னா ஒற்றுமை டா சாமி' மனதுக்குள் சிலாகித்தாள்...



'சரி நாமும் போயி பார்ப்போம்... அப்புறம் யூனிவர்ஸ் நம்மை தப்பால்ல நினைக்கும்?'... நினைத்தவாறே ஆர்வத்துடன் அங்கு சென்றவள்... கூட்டத்தை விலக்கிப் பார்க்க அதிர்ந்துதான் போனாள்...



நெடு நெடுன்னு பயில்வான் போல இருந்தவன்... ஒருவனை புரட்டிப் புரட்டி அடித்துக் கொண்டிருக்க, அவன் கண்களில் இருந்த உக்கிரம் எரியும் நெருப்பை போன்று இருக்க... அடி வாங்கியவன் வலி தாளாது கெஞ்சிக் கொண்டிருந்தான்...



மற்றவர்கள் தடுக்காது பயத்துடன் வேடிக்கை மட்டும் பார்க்க...



'அடப்பாவிகளா நீங்களுமா?... என்னமா வேடிக்கை பார்க்குறிங்க டா அவன் அடிக்குறதை?... பிலிமா காட்டுறான் அவன்?... வாய் மூடாது பாக்க.... ம்ம்ம் எல்லாம் காலக் கொடுமை'...



அலுத்துக் கொண்டவள் கவனத்தை சண்டையில் செலுத்தினாள்... இன்னமும் அடித்துக் கொண்டுதான் இருந்தான்



'டேய் செத்துடுவான்டா, பாவம் டா அவன் எருமை மாடு அடிக்காதேடா அவனை!...


மவனே நீ மட்டும் என்கிட்ட படிக்க வந்தேன்னு வையு... சிக்குனடா நீ ... மண்டைலயே நங்கு நங்குன்னு கொட்டுவேண்டா'... கருவினாள் மனதுக்குள்...



அடித்துக்கொண்டிருந்தவன் அடித்துக் கொண்டே அவள் புறம் திரும்ப...



அரண்டு போனாள் ரியா 'ஆத்தி மீ எஸ்கேப்பு' குனிந்து கொண்டாள் வேறு புறம்...



டம்மி பீசுடா ரியா பொண்ணு நீ மனசாட்சி காரி துப்ப... மனசாட்சிக்கு பெயர் செல்லம்னு ரியா பெயர் வச்சிருக்கா...



'போதும் நிறுத்து செல்லம் எனக்கு வேலை இருக்கு அப்புறம் பேசிக்கலாம் நம்ம' அதனை அடக்கியவள் கேம்பஸுக்குள் சென்றாள்...



எதிர் பட்டவர்களிடம் வழி கேட்டறிந்தவள் நேரே ஆஃபீஸ் ரூமுக்கு சென்று தான் வந்திருப்பதை கூற... அவர்கள் ப்ரின்ஸியை சென்று பார்க்கச் சொன்னார்கள்...



அங்கிருந்து ப்ரின்சிபால் அறைக்குச் சென்றாள் ரியா...



வெகு அழகாக டால் மாதிரி இருந்த ஏஞ்சலினா வில்லியம் தான் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியரும் கூட... அவள் அந்த கல்லூரி தாளாளரின் சகோதரி ஆனால் அது யாருக்கும் தெரியாது...



வயதான ப்ரின்ஸியை எதிர்பார்த்து வந்து, அழகான இளமையான ப்ரின்ஸியை பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருக்க இயல்பாகப் புன்னகைத்தாள் சிநேகமாக...


"ஹாய் மேம் ஹாப்பி மார்னிங்"...


அப்புறம் நான் ரியா!... ஆடை வடிவமைப்பு துறையில் பேராசிரியராக பணிபுரிய எனக்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு"...


தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் ரியா கல்லூரி முதல்வரிடம்...



"வெல்கம் ரியா.... நான் ஏஞ்சலினா வில்லியம்ஸ் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... உங்கள் உடை ரொம்ப அழகு... அது உங்களை தேவதையா காட்டுது"...



ரியா அணிந்திருந்த உடையை ஏஞ்சலினா புகழவும்... இதுவே போதுமே ரியாவுக்கு... தனது வடிவமைப்பை பாராட்டிய ஏஞ்சலினாவை மானசிகமான தோழியாக ஏற்றுக் கொண்டாள் உடனே...


அவளை நோக்கி தனது கையை நீட்டிய ரியா… "இன்றிலிருந்து உங்களை எனது தோழியாக அப்பாயின்மெண்ட் பண்றேன் நான்... சோ நீங்க?"... ஏஞ்சலினை கேள்வியாகப் பார்த்து தலையை குறும்பாக சரித்துக் கன்னடித்தாள் ரியா....



சிறிது நேரம் ஒன்றும் புரியாது முழித்த ஏஞ்சலினா ரியாவின் குறும்பைக் கண்டு கொண்டாள்... அவளுக்கு அக்கணமே ரியாவை மிகவும் பிடித்து போயிற்று...



இரு கரங்களையும் நீட்டி அவளது கைகளை பிடித்துக் கொண்டாள் ஏஞ்சலினா...



"ரியா சான்ஸே இல்ல போங்க... ரொம்ப குறும்பு பொண்ணா இருக்கீங்க நீங்க... உங்களை எனக்கு ரொம்பவும் பிடிச்சுருக்கு... இன்னையில் இருந்து நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஓகே?"... ஏஞ்சலின் புன்னகையுடன் கேட்க


எந்த மனிதர்களாக இருந்தாலும் தனது மனதுக்கு பிடித்தால் மட்டுமே நண்பர்களாக முடியும்... அது போல நொடியில் இரு பெண்களும் தோழிகளாயினர்...


சிறிது நேரம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் ஏஞ்சலினாவுக்கு அழைப்பு வரவே...



"ஓகே ரியா நாம் அப்புறம் சந்திக்கலாம்... நீங்க எப்போ வேலையில் சேருகிறீங்க?"...



"நாளை மறுநாள் வந்து சேர்ந்துக்கிறேன்"... கூறியவாறே விடைபெற்று கொண்டாள் ஏஞ்சலினாவிடம் இருந்து...



சுற்றிலும் வேடிக்கை பார்த்தவாறே ஏனோ தானோவென காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தவள் அதிர்ந்து போனாள் எதிரே பார்த்து...



அப்பொழுது ஒருவன் வேகமாக தலை தெறிக்க ஓடி வர அவனை துரத்திக் கொண்டு வந்தான் அவன்... வரும் போது அவள் பார்த்த ரவுடி...



தப்பி ஓடி வந்தவன் எதிரே வந்து கொண்டிருந்த ரியாவை விலக்கித் தள்ளி விட்டு ஓடினான்...


அவன் தள்ளிவிட்டு ஓடவும் அப்படியே சுழன்று கையில் இருந்த பைல் பறக்க பின்னாடியே துரத்தி வந்தவன் மேலே சாய்ந்தவள் கிரிப்புக்காக அவனது தோள்களை இரண்டு கரங்களாலும் தழுவிக் கொண்டாள் ரியா...


துரத்துவது ஒன்றையே கவனமாகக் கொண்டு ஓடி வந்தவன்... ரியா தன் மேலே வந்து விழுகவும் நிலை தடுமாறிப் போனவன் அவளையும் தாங்கி கொண்டு சாய்ந்தான் கீழே... அவள் போட்டிருந்த சால் இருவரது முகத்தையும் மூட...


பின்னாடியே தொடர்ந்து வந்த நண்பர்கள் நால்வரும் அதிர்ந்து தான் போனார்கள்...


"பாவம் டா அந்த பொண்ணு... போயும் போயி இவன்கிட்ட மாட்டிக்கிட்டா... பொண்ணுங்கனாலே எட்டி ஓடுவான்... இனி மேலேயே விழுந்துட்டா இந்த பொண்ணு, பேசியே கொன்னுடுவான் போ"... டேனியல் பரிதாபப்பட்டான் ரியாவுக்காக


"டேய் என் தலை சிங்கம் டா பாரேன்?.. அவளை லெப்ட் கன்னத்தில் ஒன்னு, ரைட் கன்னத்தில் ஒன்னு கொடுக்க போறார்"... பெருமை பட்டான் நிக்...


"என்னடா மச்சி கிஸ்ஸா?" கேலியாக கேட்டான் ஜான்...



"வாயை மூடிட்டு இரு ஜான். என் தலை பிரம்மச்சாரிடா... நான் தான் அவருக்கு பாடிகார்டு... பொண்ணுங்ககிட்டே இருந்து நான் தான் அவருக்கு பாதுகாப்பு கொடுப்பேன் சரியா?"...



"அதாவது அவரோட வாழ்க்கையை கெடுப்பேன்னு சிம்பாலிக்கா சொல்றே இல்லடா ராசா?"... மைக் அவனைக் கடுப்படிக்க... டேனியலும் ஜானும் சிரித்தனர்...



"அதை சொல்லு மச்சி இந்த கருப்பு ஆடு பண்ற வேலை நமக்கும் ஒரு பிகர் கிடைக்க மாட்டேங்கறது"... நிக்கை திட்டினான் டேனியல்...



"இருங்கடா என் தலை எழுந்ததும் சொல்றேன் நீங்க எல்லாம் என்ன பேசறீங்கன்னு?"... நிக் கருவினான் அவர்களிடம்...



"அடேய் கருப்பு ஆடு அக்கட சூடு டா வீணா போனவனே... அங்கே என்ன நடக்குதுன்னு?"... டேனியல் கை காட்ட...



"எனக்கு என்ன தோணுதுன்னா உன் தலை விழுந்து கிடக்கறதைப் பார்த்தா சாகர வரைக்கும் எழுந்திருக்க மாட்டார் போலவே ஓஹோ..ஹோ" கை தட்டிச் சிரித்தான் ஜான்...



"டேய் பாவிகளா அப்படி எல்லாம் இருக்காதுடா"... பதறிப்போய் இருவரையும் கூர்ந்தான் நிக்...



கிழே விழுந்தவர்கள் உருண்டு பிரண்டு ஓரிடத்தில் நிலை கொண்டனர்...

*******
 
Top