• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,104
Reaction score
3,173
Points
113
தூறல் – 2

“டைமாச்சு சீனியர், இதெல்லாம் லஞ்ச் டைம்ல வச்சுக்கோங்க. எழுந்துக்கோங்க!” என சந்தோஷ் கொடுத்தப் பூங்கொத்தை லாவகமாகத் தவிர்த்த துளசி அவனின் கையைப் பிடித்திழுத்து நிற்க வைக்க, அவனது முகத்தில் மெலிதான வருத்தத்தின் சாயல் படர்ந்தது.

அந்த முகத்தின் வாட்டம் இவளை ஏதோ செய்ய, “தேங்க் யூ சீனியர்!” என மலர்ந்த புன்னகையுடன் அந்தப் பூங்கொத்தை வாங்க கைகளை முன்னகர்த்தினாள்.

அந்த செய்கையில் தன் உணர்வுகள் மீதான அவளின் முக்கியத்துவத்தில் இவனது உதடுகளில் புன்னகை தொற்ற, “யூ ஆர் ஆல்வேய்ஸ் வெல்கம் துளசி!” என்றபடி மலர் கொத்தோடு மனதையும் மங்கையிடம் கொடுத்தான்.

“டைமாச்சு, லஞ்ச் டைம்ல பேசலாம்...” என்று உதடுகளை சுருக்கி முகத்தில் புன்னகை விரிய விடை பெற்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள். சந்தோஷும் அந்தப் புன்னகையை மனதிற்குள் சுருட்டிக் கொண்டவனாக தன்னுடைய அறைக்குள் நுழைந்தான்.

துளசி தனது வேலையில் ஆழ்ந்துவிட, நடந்ததை அமைதியாய் உள்வாங்கிய இளவேந்தன் விறுவிறுவென உள்ளே சென்றான். அவனது கண்கள் மகிழ்வேந்தன் என பெயரிடப்பட்டிருந்த அறையை மொய்க்க, கால்கள் அதை சமீபித்தன. அறையை கண்களால் ஊடுருவியபடி உள்ளே நுழைந்தவனின் வலக்கரம்
தனது அலைபேசியை எடுத்து உதவியாளருக்கு அழைத்தது.

“ஹலோ, சொல்லுங்க தம்பி, எதாவது உதவி வேணுமா? அஸீமை வர சொல்லவா?” என அவர் வினவினார்.

“நோ நீட் அங்கிள், நீங்க இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல இங்க இருக்கணும்...” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவனின் முகத்தில் சிந்தனை சுருக்கம்.

“இப்போதானே எதுவும் வேணாம், கிளம்புங்கன்னு சொன்னான். மறுபடியும் ஐஞ்சு நிமிஷத்துல அங்க வரணுமா. சீ... என்ன பொழப்பு டா இது?” எனத் தன்னை நொந்தபடியே குமரேசன் தனது இருசக்கர வாகனத்தை அலுவலகத்தை நோக்கித் திருப்பினார்.

மூச்சு வாங்க வியர்க்க விறுவிறுக்க தன் முன்னே வந்து நின்றவரைப் பார்த்தவன், “அங்கிள், ரிலாக்ஸ். ஏன் இவ்வளோ ஃபாஸ்டா வந்தீங்க?” என இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவரிடம் தண்ணீர் பொத்தலை நீட்டினான்.

“தேங்க்ஸ் தம்பி!” என்று அதை மடமடவெனக் குடித்துத் தன்னை ஆசுவாசம் செய்து கொண்டவர், இளவேந்தன் முகத்தை கேள்வியாய் நோக்கினார்.

“ஹம்ம்... எனக்கு எல்லாரையும் ஒரு தடவை மீட் பண்ணணும். சோ, சின்ன மீட்டிங் ஒன்னு அரேஞ்ச் பண்ணுங்க, தென் நான் இந்த பிஸ்னஸ்ஸை டேக் ஓவர் பண்றேன்னு அஃபிஷியலா அனௌன்ஸ் பண்ணிடுங்க!” என்றவனின் பேச்சை கிரகிக்க சில நொடிகள் தேவைப்பட்டன அவருக்கு. தன்னையே அதிர்ச்சியாய் நோக்கியவரின் முகத்தின் முன்னே கையை அசைத்தவன், “அங்கிள், ஆர் யூ ஹியர்?” என வினவினான்.

“ஆங்... ஓகே தம்பி, மகிழ் சார்கிட்ட சொல்லிடலாமா?” எனத் தயங்கினார். மனம் முழுவதும் அவனது பேச்சிலே வியந்திருந்தது. அரை மணிநேரம் முன்பு வீட்டிலிருந்து கிளம்பும்வரை கூட தன்னால் தொழிலைப் பார்த்துக் கொள்ள முடியாது என அழுத்தமாய் மறுத்தவனின் இந்தப் பேச்சு அவரை அதிசயிக்க செய்திருந்தது. அவர் நம்பவில்லை என்று குரலே மெய்ப்பித்தது. ஆனால் இளவேந்தன் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

“நோ டா அண்ணா, பிஸ்னஸ் எல்லாம் எனக்கு ஒத்து வராது. சொன்னா புரிஞ்சுக்கோ டா!” என்ற தம்பியை மகிழ் முறைத்தான்.

“வேந்தா கண்ணா, நம்ம அப்பா பிஸ்னஸ்ஸை நீங்க ரெண்டு பேரும் தானே பொறுப்பா பார்த்துக்கணும். ஒரு மாசம் போய் பார்த்துட்டு, அப்புறம் பிடிக்கலை, வேணாம்னா, அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன் டா!” என்ற நளினி மகனின் தலையைப் பரிவாகத் தடவினார். அவரின் முகத்தில் கெஞ்சலின் சாயல் படர்ந்தது.

“ம்மா, இன்னும் கொஞ்சம் செல்லம் கொஞ்சுங்க. அப்போ தானே கிட்டார், வயலின்னு அது பின்னாடியே சுத்துவான்!” என மகிழ் பொரிய, தீக்ஷிதா அவனை முறைத்தாள்.

“நீங்கதான் பிஸ்னஸ், பிஸ்னஸ்னு அது பின்னாடியே சுத்தீட்டு, குடும்பத்தைக் கண்டுக்கிறது இல்ல. அவனாவது சந்தோஷமா இருக்கட்டும்விடுங்க!” என கணவனிடம் எதிர்வாதம் புரிந்தாள்.

“தீக்ஷி, நீயும் அவனுக்கு சப்போர்ட்டா?” மகிழ் குரலை உயர்த்த, “எதாவது கேட்டா, வாய்ஸை ரெய்ஸ் பண்றது!” என முணுமுணுத்துக்கொண்டே தங்களது ஐந்து வயது மகள் ஆரண்யாவிற்கு தலையைப் பின்னலிட்டாள் தீக்ஷி.

“ம்மா... இட்ஸ் பெய்னிங், ஸ்லோவா பண்ணுங்க!” என சின்னவள் சிணுங்க, இவளது கவனம் குழந்தையிடம் குவிந்தது.

“இளா, நீ கொஞ்ச நாள் அண்ணாவோட சேர்ந்து பிஸ்னஸைப் பாரு. உனக்குப் பிடிக்கலைன்னா விட்றலாம். மகி அண்ணனும் பாவம் இல்ல. அப்பா கட்சி கூட்டம், மீட்டிங்க்னு போய்ட்றாரு. அண்ணன் தான் எல்லாத்தையும் தனியாளா பார்க்குது. நீயே யோசிச்சுப் பாரு!” என சைந்தவி கூற, தங்கையை முறைத்தான் இளவேந்தன்.

“போதும் நிறுத்துங்க, நான் ஆபிஸ் போறேன். பட், எனக்குப் பிடிக்கலைன்னா, கன்டினியூ பண்ண மாட்டேன்!” என்று அவன் பல்லைக் கடிக்க, மொத்த குடும்பமும் அகமகிழ்ந்து போனது. ஆனால் அவனது முகத்தில் சுத்தமாய் விருப்பமின்மை தெரிந்தது. அத்தனை பேரின் வார்த்தைகளுக்காக அவன் செவி சாய்க்கவில்லை. இத்தனை நாட்கள் தொழிலின் புறம் திரும்பாதவன் அதில் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தில் சரியென்று ஒப்புக்கொண்டான். சமீபகாலமாக அவனுக்கும் வாழ்க்கையில் விவரிக்க முடியாத வெறுமை ஒன்று சூழ்ந்திருக்க, அவன் பெரிதும் விரும்பும் இசையால் கூட அவ்விடத்தை நிரப்ப முடியாது போனது. மனதின் தேடல் எங்கெங்கோ பயணிக்க, சரியென தொழிலின் பக்கம் கவனத்தை திசை திருப்ப முடிவெடுத்திருந்தான்.

கல்லூரி முடித்து இசைக் கருவிகள் பின்னே வாழ்க்கையை மீட்டியவனுக்கு தந்தையுடன் சேர்ந்து அரசியலுக்கோ, இல்லை தமையனுடன் தொழிலைக் கவனித்துக் கொள்ளவோ துளியும் விருப்பமில்லை‌. அதனாலே படிப்பு என்றொரு வார்த்தையின் பின்னே வாழ்க்கையை மறைத்து தன் விருப்பம் போல் இத்தனை நாட்கள் வாழ்ந்து வந்தான்.

ஆனால், சந்தனவேலுக்கு மகனின் செயல் அத்தனை உவப்பாய் இல்லை‌. ஒரு மகனைத் தொழில் பின்னே ஓட வைத்தவருக்கு இளவேந்தனை தன்னுடன் அரசியலுக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் என்றொரு பேரவா. இயல்பிலே திறமையும் புத்திக் கூர்மையும் வாய்க்கப் பெற்ற மகனுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் உண்டு என அவர் மனம் கணிக்க, இளவேந்தனின் இமை முடியைக் கூட அவரால் அசைக்க முடியவில்லை. அவர் பெற்ற நான்கு செல்வங்களில் அவனொரு தனி ரகம். அவனுக்கு விருப்பமில்லை என்றால் அது எத்தனை பெரிய விஷயமாக இருந்தாலும் தொட்டுப் பார்க்கக் கூட விழையமாட்டான். அதே சமயம் அவன் விருப்பப்பட்டால் அதை எந்த வகையிலும் சாதித்துக் கொள்ளும் சாணக்கியன்.

அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்ட மகனை அப்படியே விட்டுவிட மனமில்லாத சந்தனவேல் மூத்த மகன் மகிழிடம் இவனது பொறுப்பை ஒப்படைத்திருக்க, அதனாலே காலையிலிருந்து இந்தப் பேச்சு தொடர்ந்தது.

“சரி டா, உனக்குப் பிடிச்சா பாரு. அது போதும்!” என நளினி மகனைக் கொஞ்ச, அவன் முகத்தைத் திருப்பினான். அவனைக் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து உணவை உண்ண வைத்தார் அவர். குமரேசன் இதையெல்லாம் வெறும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அங்கிள், நீங்க இவனைக் கூட்டீட்டுப் போங்க. ஒரு ஒன் வீக் கூட இருந்து எல்லாத்தையும் சொல்லிக் கொடுங்க!” என்ற மகிழ் நிம்மதிப் படர வெளியேறினான்.

தன் சிந்தனையிலிருந்து கலைந்த குமரேசன் அனைவரையும் கலந்துரையாடல் கருத்தரங்கிற்கு வர வைத்திருந்தார். சலசலப்பும் பேச்சுமாக ஊழியர்களின் பார்வை அறை வாயிலையே நோக்கின. புதிதாக வந்திருக்கும் முதலாளியைப் பற்றிய சிந்தனையே அவர்களது சிந்தையை ஆக்கிரமித்திருந்தது.

அவன் உள்ளே நடந்து வர, அனைவரது கால்களும் தன்னிச்சையாக எழுந்து நிற்க, “சிட் டவுன் ப்ளீஸ், நோ பார்மாலிட்டீஸ்!” என்று புன்னகையுடன் அனைவரையும் அமரச் செய்தான். துளசி இவனை இங்கே எதிர்பாராது திகைக்க, விழிகள் அதை அப்பட்டமாய் வெளிப்படுத்தின. இளவேந்தன் பார்வையும் அந்த விழிகளில்தான் நிலைத்தது.

நொடியில் பார்வையை அவளிடமிருந்து விலக்கி மற்றவர்களிடம் படரவிட்டவன், “ஹாய் கைய்ஸ், நான் இளவேந்தன், உங்களோட நீயூ மேனேஜிங் டைரக்டர்!” எனத் தன்னை அறிமுகம் செய்து சில நிமிடங்கள் பேச, அவனது உரையாடலே அனைவரையும் அத்தனை லாவகமாகக் கவர்ந்தது. குமரேசனும் சில நிமிடங்கள் பேசினார்.

துளசி முகத்தில் எந்த பாவனையுமின்றி அவனது பேச்சை அவதானித்தாள். ஏனோ காலையில் பார்த்த அவனின் முகமும் பணக்கார குணமும் அகத்தில் நன்றாய் பதிந்திருக்க, மூளை எளிதில் இந்த மனிதனை இனம் கண்டறிந்திருந்தது. சில நொடிகளில் பார்வையை விலக்கியவளின் செவிகள் பேச்சை உள்வாங்க, விழிகள் சுற்றிலும் அலைபாய்ந்தன. அந்த முகத்தைப் பாரக்க விருப்பம் இல்லாதது போலொரு பாவனை அவளது முகத்தில் படர, வேந்தனும் அதை கவனித்திருந்தான்.

“இப்போ எல்லாரும் உங்க வொர்க்கைப் போய் பாருங்க கைய்ஸ்!” என்றவனின் பேச்சில் மொத்த கூட்டமும் கலைய, துளசியும் நகர யத்தனித்தாள்.

“மிஸ் துளசி, நீங்க கொஞ்சம் நில்லுங்க!” என்ற இளவேந்தனின் குரலில் அவளின் நடை நிதானப்பட, எதுவும் பதிலளிக்காது நின்றுவிட்டாள். மனம் இதை எதிர்பார்த்ததோ என்னவோ. அதனாலே அவளிடம் பெரிதாய் எதிர்வினை இல்லை.

குமரேசனிடம் குனிந்தவன் ஏதோ பேசிவிட்டு, “சந்தோஷ், நீங்களும் இருங்க!” என்க, வாயிலருகே சென்ற சந்தோஷ் மீண்டும் உள்ளே நுழைந்தான். அனைவரும் சென்றுவிட, அந்த அறையை நால்வர் மட்டுமே நிறைத்திருந்தனர்.

“தம்பி, இவர் சந்தோஷ், ப்ராஜெக்ட் மேனேஜர். நம்ம மகிழ் சாருக்குத் தெரிஞ்சவர். சார் இல்லாத நேரம் இவர்தான் ஆபிஸைப் பார்த்துப்பாரு!” குமரேசன் சந்தோஷைப் பற்றி கூறவும், இளவேந்தன் தலை போதும் என்பதாய் அசைந்தது.

“வெல் சந்தோஷ், கிளாட் டூ மீட் யூ!” என அவனிடம் கையை நீட்டினான்.

“மீ டூ சார்!” என்று சந்தோஷ் மென் புன்னகையுடன் உரைத்தான்.

“உங்க வொர்க் ப்ரொஃபைல் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு... கீப் இட் அப்!” என்றவன், “தென், காலைலயே வாட் அ வெல்கமிங் சைட்?” என்றான் நக்கலாய். சந்தோஷ் புரியாது புருவத்தை சுருக்க, துளசிக்குப் புரிந்தது. அவளது பார்வை முழுவதும் வேந்தனிடம்தான்.

அதை உணர்ந்தாலும் அவள்புறம் திரும்பாதவன், “இல்ல, பொக்கே எல்லாம் கொடுத்து விஷ் இல்ல இல்ல ப்ரபோஸ் பண்ணீங்களே, அதைத்தான் சொல்றேன்!” என்றான் விளக்கமாய்.

சந்தோஷ் சங்கடமாகப் புன்னகைக்க, “ஹம்ம்... வந்ததும் லவ் பேர்ட்ஸைதான் பார்த்தேன். நீங்க லவ் பண்ணலாம் தப்பில்லை, பட் ஆஃபிஸ்ல ட்யூட்டி ஹவர்ல பண்றது தப்பாச்சே!” என்றான் சகஜ குரலில்.

“சாரி சார்!” சந்தோஷ் மன்னிப்பை வேண்ட, “இட்ஸ் ஓகே சந்தோஷ், யூ மே கோ!” என்று சின்ன புன்னகையுடன் அவனது தோளைத் தட்டினான். அதில் சந்தோஷ் மெல்லிய சிரிப்புடன் நகர்ந்தாலும் அவனது பார்வை துளசியைத் தொட்டு மீண்டது. வேந்தன் அதை கவனித்து தோளைக் குலுக்கினான்.

குமரேசன்புறம் திரும்பியவன், “அங்கிள்... நீங்க கிளம்பலாம். நான் அஸீமை கூப்ட்டு எதாவது ஹெல்ப் வேணும்னா வாங்கிக்கிறேன்!” என்றவனின் வார்த்தைகள் அவரை அறையைவிட்டு நகரச் சொல்லின.

“சரிங்க தம்பி, நான் வரேன்!” என அவர் வெளியேறினார்.

மேஜை மீது நன்றாக சாய்ந்து நின்றவன் அலைபேசியை எடுத்து விரல்களை அதில் அலையவிட்டான். “ஹம்ம்... ஷிவ துளசி, டிசைன் இன்ஜினியர். நாலு வருஷமா இங்கே வொர்க் பண்றீங்க வித் குட் ப்ரொபைல்...” என்று இழுத்தவன், “ஏஜ் ட்வென்ட்டி ஃபைவ்... ஓ வாவ், இன்னைக்கு தான் உங்களுக்குப் பெர்த் டே வா. வாட் அ சர்ப்ரைஸ்?” குரலில் போலி ஆச்சர்யத்தைத் தேக்கினான். அதில் இவளுக்கு எரிச்சல் படர்ந்தது. முகத்தில் காட்டாதிருக்க பிரம்மபிரயத்தனப்பட்டாள்.

“ஹேப்பி பெர்த் டே மிஸ் துளசி. சாரி, சாரி மிஸஸ் துளசி... சீக்கிரம் மிஸஸ் ஆகப் போறீங்க. ரைட்?” எனக் கேட்டவாறே தன் முன்னே நீண்ட கைகளை அழுத்தமாகப் பார்த்தவளின் கரங்கள் மருந்துக்கும் அசையவில்லை.

“ஓ... நோ! என்னோட விஷ் உங்களுக்கு வேணாமா?” எனக் கேட்டு வேண்டுமென்றே கையை முன்னும் பின்னும் ஆட்டியவன் விலை உயர்ந்த கடிகாரத்தை அவளிடம் காண்பித்தவாறு கரத்தைப் பின்னிழுக்க, இவளது உதடுகள் இகழ்ச்சியாய் வளைந்தன. காலையில் தன் கைகடிகாரத்தில் பதிந்த அவளது விழிகளை இவன் கவனித்திருந்தான். அதன் விளைவே இந்த எதிர்வினை.

‘அவ்வளவுதான் நீ?’ என்றொரு பார்வையை வீசியவள் விழிகளை வேறுபுறம் நகர்த்த, அதில் சீண்டப்பட்டான் வேந்தன்.

“மிஸ் துளசி, நான் பேசும்போது என் முகத்தைப் பார்க்கணும்!” என்றான் அழுத்தமாய். அவள் திரும்பவில்லை.

“உங்களைத்தான் சொல்றேன், திரும்புங்க!” என்றான் பல்லை நறநறத்து. அவளிடம் துளியும் எதிர்வினை இல்லை. இவனது பொறுமை பறந்தது.

“திரும்புன்னு சொன்னேன் துளசி!” என்றவன் பட்டென அருகிலிருந்த நீர் குவளையைக் கீழே தள்ளி உடைத்திருக்க, ஒரு நொடி அதிர்ந்தவளின் விழிகள் அந்த உடைந்த கண்ணாடியில் நிலைத்ததே தவிர, இவன் புறம் திரும்பவே இல்லை. இவனுக்குள்ளே ஏதோ ஒன்று பிரவாகமாக எழ, அவளைத் தனனைப் பார்க்க வைத்திடும் வேகம். அந்த விழிகளை தன் முகத்தில் நிலைக்க வைக்கும் எண்ணம் குபுகுபுவென மேலெழும்பி அவனது சிந்தனையை, பொறுமையை சிதறச் செய்தது. காலையில் அவளின் பார்வையிலே இவனது தன்முனைப்பு தூண்டப்பட்டிருக்க, இப்போது இன்னும் கோபம் பிறந்தது.

‘யூ ப்ளடி கேர்ள்!’ என மனதிற்குள் கத்தியவன், இரண்டு எட்டுகள் அவளை நோக்கி வைத்திருக்க, “தம்பி, மகிழ் சார் கிட்டே பேசிட்டேன். உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு!” என்று குமரேசன் உள்ளே நுழைந்து அலைபேசியை அவனிடம் நீட்ட, இருவரது தனிமையும் முற்று பெற்றிருந்தது. துளசியிடமிருந்தக் கவனம் தமையனிடம் குவிந்திருக்க, இருந்தும் பார்வை அவளிடம்தான். பக்கவாட்டாக நின்றிருந்தவளை கண்களில் என்ன உணர்வென்று தெரியாது வெறித்தான்.

“நீங்க போங்க மா, அப்புறம் பேசிக்கலாம்!” என குமரேசன் அவளை அகலச் சொல்ல, அவரிடம் தலையை அசைத்தவள் இவனை துளியும் பொருட்படுத்தாது திரும்பியும் பாராமல் சென்றுவிட, வேந்தன் கொதித்துப் போனான்.

அழைப்பை பேசி முடித்து துண்டித்தவன், “அங்கிள், இங்க நீங்க பாஸா? இல்ல நான் பாஸா?” என வினவினான். அவனது கேள்வியின் அர்த்தம் புரியாது விழித்தார் குமரேசன்.

“உங்கக் கிட்டேதான் கேட்டேன். ஆன்சர் மீ!” என்றான் அழுத்தமாய்.

“தம்பி, அது... அது நீங்கதான்!” என்று அவர் குரல் தடுமாறியது.

“தென் நான் பேசீட்டு இருந்த ஸ்டாஃபை நீங்க ஏன் போக சொன்னீங்க? இதுதான் நீங்க எனக்கு கொடுக்குற ரெஸ்பெக்டா?” என்றான் வார்த்தைகளைக் கடித்து துப்பி.

“ஐயோ, தம்பி நீங்க பேச டைமாகும். அதனாலே அந்தப் பொண்ணை வேலையைப் பார்க்க சொன்னேன். இப்போ போய் வர சொல்லவா தம்பி?” எனப் பதறினார் மனிதர். இந்த பையன் எப்போது எப்படி பேசுவான் என அவருக்குக் கணிக்க முடியாது போனது. அவரது பயந்த முகத்திலும் பாவனையிலும் இளவேந்தன் நிதானித்தான்.

“இட்ஸ் ஓகே அங்கிள், விடுங்க. நீங்க போங்க...” என்றவன், “அதுக்கு முன்னாடி கேண்டீன்ல போய் உங்க ஃபேவரைட் இஞ்சி டீ குடிச்சு ரிலாக்ஸ் பண்ணீட்டு கிளம்புங்க. நான் அஸீம்கிட்டே எல்லாத்தையும் பேசிக்கிறேன்!” என்றவனின் குரல் நிதானத்திற்கு வந்திருக்க, குமரேசன் அவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தார்.

அதில் இவனது அதரங்கள் புன்னகையில் விரிய, “டோன்ட் சர்ப்ரைஸ் அங்கிள், நான் பார்க்கும் போதெல்லாம் நீங்க இஞ்சி டீ குடிப்பீங்க. சோ, அதனால சொன்னேன். யூ மே கோ!” என்றவனிடம் முற்றிலும் இலகுவான பாவனை. அவர் விசித்திரமானப் பார்வையைச் செலுத்தி அகன்றிருந்தார்.

அஸீமை அழைத்தவன் தனக்குத் தேவையான தகவல்களை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டான். இத்தனை வருடத் தரவுகள் எல்லாம் மலை போல கோப்புகளாக இருக்க, அதையெல்லாம் பார்த்து முடிய ஒரு வருட காலம் தேவைப்படும் என மனம் மலைத்தது. அதனாலே முக்கியமான, குறிப்பிடத் தகுந்த திட்டங்களுக்கான கோப்புகளைத் தனியே பிரித்தெடுத்தான்.

கட்டிடங்கள் கட்டித் தரும் அரசு சாரா நிறுவனம் அவர்களுடையது. சந்தனவேல் கால் பதிக்காத இடமே இல்லை என்று வியக்கும் அளவிற்கு அத்தனை துறைகளிலும் தனது தடத்தைப் பதித்திருந்தார். அனைத்தையும் மகிழ் வேந்தனும் அவருடைய மூத்த மருமகன் அதியமானும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அதில்தான் இளவேந்தன் ஒரு சிறு பங்கில் தன்னுடைய காலடியை பதித்தான்.

“இப்போ கரென்ட்ல என்ன பிராஜெக்ட் போகுது அஸீம்?” என வினவியவன் கோப்புகளைப் புரட்ட, அவனுடைய கேள்விகளுக்குப் பதிலளித்த அஸீம் நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது பார்வை போகும் திசையில் விழிகளை சுழற்றியவன், “ஓ... லஞ்ச் டைம் ஆச்சா? ஓகே, நீங்க போய் சாப்பிடுங்க!” என்றான் சின்ன புன்னகையுடன்.

“தேங்க் யூ சார்!” என்றவர் வெளியேற, இருக்கையில் சாய்ந்தான். தொழிலைக் கவனித்துக் கொள்வது அத்தனை எளிதல்ல என்று மூளை உணர்த்த, அனைத்தையும் அலசி ஆராயும் எண்ணம். ஒரே நாளில் முடியாது, பொறுமையாய்க் கையாளலாம் என நினைத்துப்
பெருமூச்சுவிட்டவனின் வயிற்றில் அமிலம் சுரந்தது.

கைகளை நெட்டி முறித்தவன் உணவு உண்ணலாம் என வெளியே வந்தான். வரிசையாக ஒவ்வொருவராக கலைந்து உணவு கூடத்தை நோக்கி நடை போட, இவனைப் பார்த்ததும் ஒரு சிலர் புன்னகைக்க, இவனும் பதில் புன்னகையுடனும் தலையசைப்புடனும் கடந்தான்.

“ப்ம்ச்... துளசி, லஞ்ச் டைம் ஆகிடுச்சு. வா சாப்பிட போகலாம். இன்னைக்கு உன் பெர்த் டே ஸ்பெஷல். அம்மா செஞ்சு கொடுத்தாங்க!” சந்தோஷ் புன்னகையுடன் உரைத்தான். கரங்கள் உயர்ந்து முன்னுச்சியில் இருந்த முடியைப் பின்னே தள்ளின.
சின்ன கேலி சிரிப்புடன் அவனை நோக்கியவளின் முகத்தில் அதை நம்பாத பாவனை.

“சரி... சரி, சாரி. பொய்தான் சொன்னேன். மெய்ட் தான் குக் பண்ணாங்க. பட் உன் ஃபேவரைட் டிஷ்தான்!” என்றான் உண்மையாய். துளசி புன்னகையுடன் தலையை அசைத்தாள். அவள் சந்தோஷின் தாயைப் பற்றி நன்கு அறிவாள். ஏனோ அப்பெண்மணிக்கு இவளை ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது போனது. தவறு இருபுறமும் இல்லை.

சந்தோஷ் துளசியைப் பற்றி தாயிடம் புகழ்ந்து பேசியது அவரது மனதில் கசப்பை விதைத்திருந்தது. ஒற்றை மகன் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது தோழிக்கு கொடுத்தது அவருக்கு உவப்பாய் இல்லை. அவரைப் பொறுத்தவரை சந்தோஷின் உற்ற தோழி ஷிவதுளசி. ஆனால், சந்தோஷிற்கு மனம் நிறைந்தவள்.

இருவரும் ஒரே கல்லூரியில் பயின்றவர்கள். சந்தோஷ் துளசியை விட இரண்டு வயது மூத்தவன். கல்லூரி முடியும் தருவாயில் தனது விருப்பத்தை அவளிடம் தெரிவித்திருக்க, அவள் அதை ஏற்கவில்லை. சந்தோஷை தோழனாக மட்டுமே பார்த்திருந்தாள். அதுவுமின்றி அவளது குடும்ப சூழ்நிலை எங்கேயும் அவளை திசை திருப்பவிடவில்லை என்பதே உண்மை. ஆனாலும் சந்தோஷ் தான் வேலை பார்க்கும் அலுவலகத்திலே அவளைப் பரிந்துரை செய்து தனக்கு கீழே பணியமர்த்திக்கொண்டான். கண்டிப்பாக துளசியுடன்தான் தன் வாழ்க்கை என எண்ணி நான்கு வருடங்களாக பல முறை தன் காதலை வெவ்வேறு வழிகளில் தெரிவித்தான். துளசி சின்ன புன்னகையுடன் அவனைக் கடந்துவிடுவாள். சந்தோஷை அவளுக்கு நண்பனாக அத்தனைப் பிடிக்கும். அவளுக்கு உதவி எனும்போது அவனுடைய கரம்தான் முன்னே நீளும். தனக்காக காத்திருக்க வேண்டாம் என அவள் மறுத்தும் அவன் உறுதியாய் இருக்க, இவளுக்கு அதில் ஏக வருத்தம். வீட்டின் பொதி அவள் மீது சுமத்தப்பட்டிருக்க, திருமணம் என்ற வார்த்தைக்கு இன்றைய சூழலில் அவளால் மதிப்பளிக்க இயலவில்லை.

கண்டிப்பாக குடும்பத்தை இப்படியே நிர்க்கதியாக நிற்க வைத்துவிட்டு தன் திருமணம்தான் முக்கியமென வீட்டைவிட்டு அவளால் வெளியேற முடியாது. தங்கை படிப்பு முடிந்து அவள் ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும். தந்தைக்கு குணமாக வேண்டும். கடனில் மூழ்கிப் போன வீட்டை மீட்க வேண்டும் என எத்தனையோ கடமைகள் வரிசையில் நிற்க, காதலிக்கவோ திருமணம் செய்யவோ அவளுக்கு நேரமும் இல்ல, விருப்பமும் இல்ல‌.

தன்னுடைய சூழ்நிலையை விளக்கி அவனிடம் கூறியிருந்தாள். அதற்கு சிரித்த சந்தோஷ், “கடனை அடைச்சுட்டுத்தான் கல்யாணம் பண்ணணும்னா, ஊர்ல பாதி பேர் அன்மேரிட்தான் துளசி. இப்போ உன்னோட சேலரி மட்டும்தான். கல்யாணம் முடிஞ்சதும் என்னோட சேலரியும் சேர்த்து உங்க வீட்டை ஈசியா மீட்டுடலாம். அங்கிளுக்கும் நல்ல ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம். இது வெறும் வாய் வார்த்தை இல்ல, இட் ஸ் அ பிராமிஸ்!” என்று புன்னகைத்தவனைக் காண்கையில் விழியோரம் பனித்திருந்தது இவளுக்கு. அவனது மனம் இத்தனை பெரிதாக இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக அவனது தாய் இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளமாட்டார் எனப் புரிந்தவளின் மனதில் கசப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. அந்நொடி கூட அவனை பதிலில்லாது கடந்தவள், விதி எப்படி இருக்கிறதோ அப்படியே நடக்கட்டும் என விட்டுவிட்டாள்.

“இட்ஸ் கெட்டிங் லேட் துளசி!” என மென்முறைப்புடன் அவளது கைகளைப் பிடித்தான் சந்தோஷ்.
சரியாய் அந்நேரம் அப்பகுதியைக் கடந்த இளவேந்தனும் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டூ மினிட்ஸ் சீனியர்!” என்றவளின் வார்த்தைகளைக் கேட்காது எட்டி அவளது மடிக்கணினியை சந்தோஷ் அணைக்க, இருக்கையிலிருந்து எழுந்தாள் துளசி.

“ஏன் டி இவ்வளோ நேரம்... வா சாப்பிடலாம்!” என்ற சக தோழி, “இட்ஸ் மந்த் எண்ட்... சோ உனக்கு எக்ஸ்யூஸ் துளசி. சேலரி வந்ததும் பெர்த் டே ட்ரீட் வச்சுடணும்!” என்று கூறவும், துளசி சரியென்பதாய் மென்னகை புரிந்தாள்.

“ஆமா, இதென்ன ஆஷ் கலர் ட்ரெஸ். க்ரீன் சேரி தானே கட்டீட்டு வரேன்னு சொன்ன, இது பழைய சேரி தானே?” என அவள் ஆராய, “ஹம்ம்... ஆமா தேனு, காலைல கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன் அப்போ ஒரு கார் க்ராஸ் பண்ணும் சேரியெல்லாம் சேறும் சகதியும்பட்டதால ஸ்பாயில் ஆகிடுச்சு!” என்றாள் மெய்யும் பொய்யுமாக.

“நினைச்சேன்... கார்ல போறவனுகளுக்கு ஏதோ ப்ளைட்ல போறதா நினைப்புடி. சரி, சேலையோட பேச்சே, அதை நினைச்சு சந்தோஷப் படு. இருந்தாலும் அந்த ராஸ்கலை நீ சும்மா விட்டிருக்கக் கூடாது!” என தேனு வாயில் இளவேந்தன் அரைபட, அவனது செவியி
லும் விழத்தான் செய்தது. துளசியை அழுத்தமாய்ப் பார்த்தான் அவன். ஆனால், அவனை பொருட்படுத்தாமல் கடந்து சென்றவளில் இவனது பார்வை தங்கிவிட்டது.

தூறும்
 
Well-known member
Messages
932
Reaction score
682
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top