• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 35 ❤️ (இறுதி அத்தியாயம்)

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
Chap – 35 final
மருத்துவமனையை விட்டு வெளியில் வந்த ஆதி கண்ணில் சிக்கினாள் அவன் மான்குட்டி. வராத சிரிப்போடு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தவள் கண்ணில் அத்தனை பரிதவிப்பு.
அவளை பிடித்து வைத்திருந்த நண்பர்களுக்கு நன்றியை மனதின் உள்ளே உரைத்தவன் வேகமாக அவர்களை நோக்கி கால்களை அகற்றினான்.
ஆதி வருவதை பார்த்தவள் அவசரமாக நண்பர்களிடம் விடைபெற்று நகர்ந்தாள்.
“ஆதவா கார் கீ தா” காலில் வெந்நீரை ஊற்றியது போல் துடித்தவன் கண்கள் மொத்தமும் நடந்து செல்லும் அவனவள் தான்.
காற்றில் பறந்துகொண்டிருந்த அவன் கையில் சாவி விழுந்ததையும் கவனிக்கவில்லை ஆதி.
“சாவி வச்சு ஒரு மணி நேரமாச்சு நீங்க கைய கீழ இறக்கலாம்” தமிழ் குரல் கேட்டு அப்பொழுது தான் அதை கவனித்தான் ஆதி.
‘ஈஈ...’ பற்களை காட்டி சிரித்தவன் துரிதமாக வாகனத்தை நோக்கி நகர அவன் கையை பிடித்து நிறுத்தினான் கெளதம், “எங்க போற?”
“மான்குட்டிக்கு கால் வலிகிதாம்... அது தான் ஜண்டு பாம் வாங்கி தர போறேன்” – ஆதி
மீண்டும் பறக்க தயாராக இருக்க இன்னும் விடவில்லை கெளதம்.
“ஏதேய்??!!...” – கெளதம்
“கால் வலிக்கு ஜண்டு பாம் போடணும்னு நான் இப்போ தான் கேள்வி படுறேன்” – தமிழ்
“அடேய் கலாய்க்கிற நேரமில்லைடா இது மான்குட்டி ஓடுது... கைய விடுடா பேமானி” என்ன பேசியும் கெளதம் நண்பனின் கையை விடவில்லை.
“தழல் சீரியஸ் கண்டிஷன்ல இருக்கானாம். ஈஸ்வரன் அதே நிலைமை தான்” இவன் நம் பேச்சை கேட்கப்போவதில்லை என்று ஒப்புவித்தான் தமிழ்.
ஒரு நிமிடம் நின்று அவன் பேசியதை கேட்டவன், “அவனுகள விட்டுட சொல்லுடா... உள்ள இருக்கறவன் காலு காலுன்னு கத்துறான்”
நண்பர்கள் விசித்திரமாக அவனை பார்க்க, “என்னடா அப்டி பாக்குறீங்க? தழல் மேல கூட எனக்கு பெருசா கோவம் இல்ல, ஈஸ்வரன் மேல தான் வெறியேறுது. நாம அவன அடிச்ச அடிக்கு வெளிய போனாலும் ஒரு மணி நேரம் கூட தாங்க மாட்டான். ஏதாவது காட்டுக்குள்ள விட்டுட்டு வர சொல்லிடு. நம்மளால அவன் சாக கூடாது அவ்வளவு தான். ஆனா அவன் துடி துடிச்சு சாகனும். அத மட்டும் ஜெயன பாத்துக்க சொல்லு”
ஆதவனை பார்த்து, “சஹானாவை வீட்டுல விட்டுடு நான் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்” மறைமுகமாய் அவர்கள் காதலுக்கு பச்சை கொடி காட்டியவன் வாகனத்தினுள் நுழைந்தான்.
“தமிழு, கௌதமு... இவன் என்னோட லவ்க்கு ஓகே சொல்லிட்டானா?” நம்ப முடியாமல் நண்பர்களிடம் சந்தேகம் கேட்டான்.
“கல்யாணத்துக்கே ஓகே சொல்லிட்டாண்டா என் வென்று” சந்தோசமாக நண்பனை அடித்தான் கெளதம். அங்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றவன் வேகமாக நடந்து செல்லும் மணிமேகலையை மறித்து அந்த கூட்ட நெரிசலான சாலையில் நிறுத்தினான்.
மறித்து நின்றவன் கண்ணாடியை இறக்கிவிட்டு, “ஹாய் டா மான்குட்டி” உற்சாகமாக வணக்கம் வைத்தான்.
“போங்க நான் பேச மாட்டேன்” மான்குட்டி அழைப்பில் மனதில் இருந்த சோகம் எல்லாம் வீதி என்றும் பாராமல் கண்ணீரை அவனிடம் காட்டினாள்.
“போக மாட்டேன். வா வண்டில வந்து ஏறு” – ஆதி
“உங்க கூட எல்லாம் நான் வர மாட்டேன். போங்க... போங்க” என்றாள் இன்னமும் அழுகையுடன். சில நொடிகள் பொறுமை காத்த வாகன ஓட்டிகள் பொறுமை தாளாமல் ஹாரன்களை இஷ்டத்திற்கு அலறவிட்டனர்.
“இப்போ என்ன வேணும் உங்களுக்கு? டிராபிக் ஆகிட போகுது. கிளம்புங்க” என்றாள் மனமே இல்லாமல். பின்னால் இரைச்சல் சத்தம் கூடிக்கொண்டே சென்றது.
“நீ இல்லாம வண்டி ஒரு இன்ச் கூட நகராது” அவனும் பிடிவாதமாய் இருக்கையில் வசமாய் சாய்ந்து அமர்ந்து ஏதோ பாட்டை முணுமுக்க துவங்கினான்.
“யார்டா நீ... நடு ரோட்டுல வண்டிய சாவகாசமா நிப்பாட்டிட்டு இருக்க, எடுடா...”
“யோவ் வேலை வெட்டி இல்லனா ஓரமா போய் நின்னு ஒய்யாரமா ஓய்வெடு, உயிரை வாங்கனே நிக்கிறானுக பாரு”
பார்ப்போர் எல்லாம் ஆதியை கண்டமேனிக்கு திட்ட அவனோ எதையும் காதில் வாங்காமல் உல்லாசமாக அமர்ந்திருந்தான். திருட்டு முழியோடு நின்ற மணிமேகலையை ஒட்டி உரசி இருசக்கர வாகனங்கள் செல்ல துவங்க இருந்த ட்ராபிக் நெரிசலை பார்த்த ஒரு காவல் அதிகாரியும் வருது தெரிந்த உடன் வேகமாக காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டாள் மணிமேகலை, “பிடிவாதம்” என்ற முணுமுணுப்புடன்.
அவனோ அவளை முன்னே இருந்த கண்ணாடி வழியாக பார்த்து, “இங்க மச்சான் பக்கத்துல வந்து ஒக்காருடா” என்றான் ஆசையாக.
உதட்டை சுளித்தவள் முகத்தை சாலையில் திருப்பிவிட பெருமூச்சு விட்ட ஆதி, “இதுவும் நல்லதுக்கு தான்” வாகனம் மெல்ல அந்த இடத்தை விட்டு அகன்றது.
வேகமாக சென்ற வாகனம் தன் இல்லத்தை நோக்கி செல்லவில்லை என்பது புரிந்தும் அவனிடம் எதுவும் பேசவில்லை மணிமேகலை, மனதிலிருந்த பாரம் வார்த்தைகளை சிறைசெய்திருந்தது. இடை இடையே ஆதியின் கெஞ்சல் அழைப்புகளை கேட்க கேட்க மாரி பொழிய இருந்த கண்ணீர் துளிகள் தடையே இல்லாமல் வெளியேற ஆதியின் கைகளின் வாகனம் இன்னும் வேகமெடுத்து பிரீசி பீச் இருந்த இடத்தில் வந்து நின்றது.
பொதுவாகவே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த கடலில் வார நாளான இன்று சுத்தமாகவே ஆட்கள் இல்லாமல் போயினர். வாகனத்தை நிறுத்திய ஆதி, மணிமேகலை அருகில் வந்து அமர்ந்தவன் கதவை அடைத்து அவள் கைகளை பற்றினான். ஆதியின் கைகளில் இருந்த சூட்டினை உள் வாங்கியவளுக்கு அதை பிரிய மனம் வரவில்லை.
“மான்குட்டி அழுகாதடி” அவள் கண்ணீரை பொறுக்க முடியாதவனாய் கெஞ்சினான். ஆனால் அவளுக்கோ இன்னும் இன்னும் தான் அழுகை வந்தது.
“நான் அழுவேன் நீங்க யாரு அத சொல்ல?” – மணிமேகலை
“நான் யாரா? உன்னோட ஆதிடி நான்” – ஆதி
“இல்ல, நீங்க தான் என்ன வேணாம்னு சொல்லிட்டீங்கல்ல? அப்றம் எப்படி என்னோட ஆதியா இருப்பிங்க?” – மணிமேகலை
“ஹே அது நான் என்னோட கண்ட்ரோலயே இல்ல மேகா” பேசியபடியே அவன் மடியில் சாய்ந்து படுத்தான்.
அதில் விக்கித்தவளோ, “என்... என்ன பண்றீங்க?”
“யார் மடிலயாவது சாயனும் போல மனசு கொஞ்சம் பாரமா இருக்குடி ப்ளீஸ்”
“யாராவது பாத்துட்ட போறாங்க... பப்ளிக் ப்ளேஸ் இது” அவன் தலையை தன் மடி மீதிருந்து உயர்த்தினாள்.
அவனோ அவள் கையை தன்னுடைய நெஞ்சில் வைத்துக்கொண்டு, “பாக்கட்டும். உன் மாமன் ஹக்கிங், கிஸ்ஸிங் எல்லாம் தாண்டி போய்ட்டான். நான் இப்போ தான் மடிலேயே சாஞ்சிருக்கேன். விடு மேகா” என்றவன் மேலும், “உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?” வாடியது அவன் முகம்.
“ஆமா நான் ரொம்ப அழுதேன் தெரியுமா?” சிறு பிள்ளையாய் கேள்வி எழுப்பியவளை இப்படி மனம் நோகும்படி செய்துவிட்டோமே என்ற வருத்தம் தான் மேலும் கூடியது ஆதிக்கு.
“பாதிலயே உன்ன விட்டுட என்னைக்குமே நான் யோசிச்சது கூட இல்ல மேகா... ஆனா திடீர்னு சஹானாக்கு நடக்க முடியாதுன்னு சொன்னதும் எல்லாமே மாறிடுச்சு. ஆதவன் வீட்டுல நடக்க முடியாத என் தங்கச்சிய மருமகளா ஏத்துக்க முடியல போல.
அவனோட அப்பா நடவடிக்கைல மொத்தமா வித்யாசமா இருந்தது, அவனோட அம்மா கடமைக்கே-னு மகனுக்காக சஹானாவை பாத்துகுட்டாங்க. அப்டி இருக்கறப்ப அந்த வீட்டுல என் சஹானாவை குடுக்க எனக்கு மனசு வரல. அப்ப இதே நிலைமை தானே எங்க சஹானாவை கல்யாணம் பண்ணி குடுத்தாலும் வரும்?”
“முதல அவங்க வேற பையனுக்கு ஓகே சொல்லுவாங்கனு நீங்க நினைக்கிறதே தப்பு” ஆதியை இடையிட்டு அவன் எண்ணங்களை திருத்தினாள்.
“அதுவும் ஒரு காரணம் தான். இப்போ சொல்லு... சஹானாவை வீட்டுல வச்சிட்டு நாம நம்ம கல்யாணம் பத்தி எல்லாம் பேச முடியுமா?” தயக்கமாய் அவனை பார்த்த அவள் கைகள் அவன் கூற்றை ஆதரிக்கும் வகையில் ஆதியின் சிகையில் அவள் கைகள் விளையாடியது.
“என் நிலைமை புரியுதா மேகா?” – ஆதி
கண்ணீரில் ஈரமான அவன் கணங்களை காய வைக்க கொடி கம்பியை தன் உள்ளங்கையை கொடையாக தந்தாள். காரில் இருந்த ப்ளூடூத் உதவியுடன் பாடலை போட்டான் ஆதி.

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்

“பாட்டுக்கு எந்த குறையும் இல்ல... நீங்க சொல்றது நல்லாவே புரியுது, ஆனா மனசுக்கு புரிய மாட்டிகித்தே... உங்களையே சுத்தி சுத்தி வந்து நின்னா, அப்டி ஒருத்தி இருக்குற மாதிரியே நடந்துக்க மாட்டீங்க நீங்க”
பாடலை நிறுத்திய ஆதி அவர்களுடைய பாடலை போட்டுவிட்டான்.
♪ என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே ♪
ஏனோ இந்த பாடல் அவளை அவனிடம் நெருங்கி வைக்கும் எப்பொழுதும். பாடலில் மலர்ந்திருந்த மணிமேகலை கன்னத்தில் ஆதியின் கை மெதுவாக ஊற, அவன் கையில் தன் கை பிடித்து அதன் போக்கை நிறுத்தினாள்.
“மேகா...” தாபமாக வந்த குரலின் வீரியத்தில் மணிமேகலையின் உள்ளம் பனிக்கட்டியாய் இலகிட இறுக்கமும் நீங்கியது. அவள் நிலையை கண்கள் பார்த்தே படித்தவன் மெல்ல அவள் நாசியினை வருடியவன் கைகள் அவள் மூக்குத்தில் வந்து நின்றது. அதிர்ந்தாள் பெண்.
“அன்னைக்கே பாத்துட்டேன் இந்த டாலடிச்ச மூக்குத்திய” கன்னம் கிள்ளி கொஞ்சினான்.
“பொய் சொல்றிங்க” – மணிமேகலை
“முதல் நாள் நான் ஆசைப்பட்டு கேட்ட பச்சை கல்... அப்றம் அடுத்த நாளே இந்த வெள்ளை கலர் மாத்திட்ட... கரெக்ட்டா?”
ஆச்சிரியமாக இதழ்களை விரித்தவளை நொடி வீணாகாது அவள் கழுத்தோடு பிடித்து கீழே இழுத்து திறந்திருந்த இதழ்களை தன்னுடைய இதழ் கொண்டு மூடினான் அவள் காதலன். அமுதமாய் இனித்த இந்த இதழ்களின் சுவையை சுவைத்திட எந்த வித தடையும் இல்லாமல் ஆதியின் இதழ்கள் பயணிக்க அவளுக்கோ வேறொரு உலகத்திற்கு பயணித்தது போன்ற உணர்வு. அடி வயிறில் பூதாகரமாக ஏதோ பனிப்பாறையை வைத்து அழுத்துவது போல் உணர்ந்தாள்...
கண்களை மூடி அனுபவிக்க கூறி மனம் வேண்டிட யோசிக்காமல் அதன் கட்டளையை நிறைவேற்றிட சென்றது. அவன் இதழ் மேல் அவளுக்கு இன்றியமையாத ஓர் பிரியம்...! தூரத்தில் நின்றே அவன் சிரிப்பை ரசித்திருந்தவளுக்கு இதழ் ஒற்றலை நினைத்து சில முறை வெட்கப்பட்டு கண்ணாடி முன் நின்று சிரித்துளாள்.
அந்த உணர்வு எப்படி இருக்கும்? இன்று செயல்முறையில் புரியவைத்தான். தன் மேல் விழுந்த முதல் மழைத்துளியை பூமி உறிஞ்சுவது போல் அவளை உட்கொள்கிறான் திருடன். தூரத்தில் நின்று பார்த்த அலைகள் கூட அவர்கள் அழகிய நொடிகளை கலைக்க விரும்பாமல் வெட்கத்துடன் மௌனமாய் சென்றன.
சுட்டெரிக்கும் வெம்மை தாளாது குளிர் பரவிக்கொண்டிருக்கும் அந்த வாகனத்தினுள்ளே இருந்தாலும் ஆதியின் கைவளையில் இருந்தவளுக்கு அவன் நெருக்கத்தின் காரணமாக வியர்வை துளிகள் முகத்தில் விழிந்திட, அவள் இதழ்வழி அவன் இதழில் வந்து நின்ற நீரால் தான் மணிமேகலையின் மூச்சிற்கு காற்று கிடைக்க வேண்டும் என்று விதியோ என்னவோ.
அந்த ஒற்றை துளியில் நிதானித்தவன் அவள் இதழுக்கு தற்காலிக ஓய்வை கொடுத்து விடுவிக்க, முகம் சிவந்தவள் இதழை கை கொண்டு மூடி வெளியே பார்த்தாள், ஆதியின் முகம் காண வெட்கம் கொண்டு. ஆனால் அவள் இதழ்கள் கூறும் மகிழ்ச்சியை விட அந்த மான் கண்கள் அதிகம் ஒளியை கக்கியதல்லவா... சிரித்தவன் அப்படியே அவள் வயிற்றில் முகம் புதைத்து இடையை கட்டிக்கொண்டான்.
‘போதுமே’ முதல் முத்தத்திலே அவள் மீளாமல் இருக்க, அவன் மீசையின் குறுகுறுப்பு அவள் வயிற்றில் சொல்ல முடியாத ஆசைகளை சுரக்க செய்தது.
அவன் தலையை பிடித்து தள்ளி நிறுத்தி, “ப்ளீஸ் ஆதி...” என்று கெஞ்சினாள். முகத்தை கைகள் கொண்டு துடைத்தவன் அவள் மடியிலிருந்து எழுந்து அவள் கைகளை பிடித்தான்.
“என்னைக்கும் உன்ன இனிமேல் கைவிட மாட்டேன்டா மான்குட்டி. என்ன நம்பி வீட்டுக்கு போ. அப்பாகிட்ட உதய் சரியானதும் வந்து பேசுறேன். சஹானா கல்யாணம் ஆகட்டும் அடுத்து ஒடனே நம்ம கல்யாணத்த வச்சுக்கலாம்... ம்ம்ம்?” தலையை குனிந்து அவள் முகத்தை பார்த்து கேட்டான்.
சிரிப்போடு அவன் கேள்விக்கு தலையை ஆட்டி பதில் கூற, தன்னுடைய மான்குட்டியை தன்னுடன் முன்னே அமர வைத்து அவள் வீட்டின் வாசலில் இறக்கிவிட வாகனத்தை நிறுத்தினான். தன்னுடைய பையில் இருந்து சாவியை ஆதியின் முன் நீட்ட, அவன் முகம் வாடியது.
“இது எப்படி உங்கிட்ட வந்துச்சு?” இறுக்கமாய் கேட்டான்.
“சஹானாக்கு நீங்க பைக்க வேலைக்கு விட்ருக்குற மாதிரி தெரியல்னு டவுட் இருந்துச்சு. அது தான் வீட்டுல நேத்து தேடி நீங்க அடகு வச்ச பேப்பர்ஸ் எடுத்தோம்” – மணிமேகலை
“அதுக்கு உன்னோட அப்பன் காச போட்டு திருப்பி வந்துட்ட?” காட்டமாக வந்தது ஆதி வார்த்தைகள்.
“இதுல என்ன தப்பு இருக்க போகுது? ஏன் என்கிட்டே ஒரு எமெர்ஜென்சி-கு கூட எதுவும் கேக்க கூடாதா?” – மணிமேகலை
“கூடாது... என்னோட பிரச்னையை நானே பாத்துக்குறேன். என்னோட பொண்டாட்டியா என் வீட்டுக்கு நீ வந்து என்ன வேணாலும் பண்ணலாம் சந்தோசமா ஏத்துக்குவேன். ஆனா நீ இப்போ வேற வீட்டு பொண்ணு. எனக்கு நீ இது பண்ணது உன் அப்பாக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாரு? கல்யாணமே ஆகல, அதுக்குள்ள பணத்தை அனுபவிக்கிறான்..
அப்ப அவன் நோக்கம் கூட இதுவா இருக்குமோனு சந்தேகம் வந்துட்டா அடுத்து எப்பையுமே உன் அப்பாக்கு என் மேல நம்பிக்கை வராது”
அவன் கூறுவதை மனம் ஆமோதித்தாலும் முகத்தை சுருக்கமாக வைத்து, “இது என்னோட காசு இல்ல, என் அப்பா காசும் இல்ல. உங்க காசுல நீங்க உங்க தங்கச்சிக்கு வாங்கி குடுத்த நகையை பேங்க்ல வச்சு தான் வண்டிய திருப்பி வந்தேன். சஹானாக்கு அவங்க அண்ணன் புல்லட்ல வந்தா தான் புடிக்குமாம்” நொடித்துக்கொண்டவள் வேகமாக வெளியில் செல்ல பார்க்க, அவள் கையை சிரிப்போடு பற்றி நிறுத்தினான்.
“கோவம் வருது வர வர என் மான்குட்டிக்கு” என்றவன் கண்கள் அவள் இதழில் தண்டனை கொடுக்கவா என்று கேட்டது...
“சாவி வேணாம்னா போங்க” என்றாள் மீண்டும். மணிமேகலை கையிலிருந்த சாவியை வாங்கி பாக்கெட்டில் சொருகியவன் இன்னொரு கை அவளது கைக்குள் தன் கையை பிணைத்துக்கொண்டது.
“மச்சானுக்கு பாய் சொல்லாம போற?” புன்னகை இழைந்தோடியது ஆதியின் இதழில்.
“பாய்” அவன் சிரிப்பில் மயங்கியவள் இதழிலும் சிரிப்பு தான். ஆனாலும் வெளியில் செல்ல முடியவில்லை அவன் மான்குட்டியால்.
“விட்டு போகவே மனசில்லை, வர்றியா வீடு வரைக்கும்? பைக்ல ஒரு ரவுண்டுஸ் போகலாம்...” – ஆதி
“அப்பாகிட்ட வந்து பெர்மிஷன் கேளுங்க... வர்றேன்” அவனுக்கு ஏற்றபடி வாயாடினாள் கிண்டலாக.
ஒரு சில நொடிகள் யோசித்தவன் அவள் கையை விட்டு வாகனத்திலிருந்து இறங்கி வந்து மணிமேகலை பக்கம் வந்து நின்றான். அவன் இறங்கியதும் அவளும் இறங்கி ஆதியின் முகத்தை கேள்வியாய் பார்த்தாள். அவள் கை பற்றி அவள் வீட்டினுள் அழைத்து செல்ல பார்க்க அவன் நோக்கம் புரிந்தவள் கால்களை நிலத்தில் அழுத்தி பதித்து, “தெரியாம சொல்லிட்டேன்... ப்ளீஸ் வேணாம்” கெஞ்சினாள் வீட்டினுள் செல்லாமல்.
“இல்ல டா மான்குட்டி இன்னைக்கு என் மாமன்கிட்ட பேசிட்டு தான் அடுத்த வேலை” – ஆதி
“ப்ளீஸ் ப்ளீஸ் தெரியாம சொல்லிட்டேன். இன்னொரு நாள் பேசுங்க. அப்பா ஏற்கனவே அப்செட்டா இருக்காங்க” – மணிமேகலை அவன் கையை பிடித்து வீட்டிற்குள் செல்லாமல் இழுத்தாள்.
அவனோ அவள் இழுவைக்கெல்லாம் சிறிதும் பாதிப்படையவில்லை, “அப்ப இது தான் நல்ல சந்தர்ப்பம், மாமனை சிரிக்க வச்சு மயக்கிட வேண்டியது தான்” – ஆதி
“ஐயோ கடவுளே... ப்ளீஸ் ஆதி” – மணிமேகலை
“ப்ளீஸ் டா மான்குட்டி” – ஆதி
இவன் சொன்னால் அடங்க மாட்டான் என்று அறிந்தவள் அவனை அமைதியாக்க இருக்கும் ஒரே வித்தையை கையிலெடுத்தாள். திமிறி நின்ற அவன் தோளை பற்றி அவனே சுதாரிக்கும் முன்னர் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றை வைத்து அவன் திகைத்த நொடியை தனக்கு சாதகமாக்கி, “பாய் ஆதி” என்று வீட்டிற்குள் நுழைந்து மாயமானாள்.
வெளியில் அவள் இதழ்கள் தந்த தித்திப்பில் ஒரு நிமிடம் தன்னை மறந்து நின்ற ஆதிக்கு உடல் எங்கும் மின்சார அதிர்வு எப்பொழுதும் போல். சிறு பிள்ளையாய் துள்ளி அவன் மனதை கொள்ளையிடும் அவன் மேகா செய்யும் சிறு சேட்டையோ, ஆசையோ அவன் மனதில் என்றும் மலைச்சாரலாய் இதத்தை மட்டுமே கண் மூடி தந்தது... என்றும் தரும்...
ஏழு மாதங்கள் பிறகு...
ஆவடியில் உள்ள அந்த ஆலிவ் கார்லாண்ட் என்ற இடமே அமர்களப்பட்டிருந்தது. மொத்தமும் வெட்டவெளியாக கிடந்த அந்த இடம் இப்பொழுது விளக்குகள், வண்ண பட்டு துணிகள், பூக்கள் கொண்டு அரண்மனை போல் பிரமாண்டமாய் இருந்தது.
எங்கு திரும்பியும் வண்ண வண்ண ஆடைகள், இளசுகள், பெரியவர்களின் சிரிப்பலைகள் என மொத்தமும் அமளி துமளி நிலை தான். நேற்று இரவு நடந்தேறிய நிச்சியத்தை தொடர்ந்து இன்னும் சில நிமிடங்களில் திருமணம் நடப்பதற்கான மொத்த மேடை அலங்காரங்களும் தயார் நிலையில் வைத்து இருந்தனர்.
மேடையின் பின்னணியில் மொத்தமும் வெள்ளை மற்றும் சிகப்பு நிற ரோஜாக்கள் அலங்கரித்திருக்க, மேடையின் மேல் கூரை மொத்தமும் மஞ்சள் விளக்குகள் ஆங்காங்கே தொங்கி வண்ணமயமாய் ஒளிர்ந்தது. மேடையின் நடுவில் சிறு கல் மண்டபம் போல் அமைத்து அதில் திருமணத்திற்கான ஹோமம் வளர்க்கும் சடங்குகள் துவங்கப்பட்டிருந்தன.
“வசதி கம்மி தான் ஆனா பொண்ணு அழகு...”
“ஆமா ஆதவன் இத்தனை வருஷம் இந்த பொண்ணுக்காக வெயிட் பண்ணதுல தப்பே இல்ல”
“ஆமா ஷர்மி, ஜோடி பொருத்தம் அமோகமா இருந்தது. வசதியா முக்கியம்? கட்டுக்கோப்பான குடும்பத்துக்கு பொண்ணும் அதே குணத்துல கிடைச்சிருக்குதுல அதுவே மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ராம் குடுத்து வச்சிருக்கணும்”
பெண்களின் உரையாடலை கேட்டுக்கொண்டே அருகிலிருந்த ஒரு மேஜையில் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கில் மின்சாரம் கசியவில்லை என்பதை உறுதி செய்துகொண்டிருந்தான் ஆதி. தாய் தந்தை இல்லை என்றாலும் சகோதரி மூன்றாம் நபரிடம் வாங்கும் பெயர் எல்லாம் சகோதரனானவனுக்கு பெருமை தான்.
இடத்தை விட்டு சிரிப்போடு அகன்றவன் சமையலறை நோக்கி செல்லும் வழியிலேயே மேளத்திற்கு அழைத்தான், “அண்ணே எங்க இருக்கீங்க? முகூர்த்தத்துக்கு நேரமாகிட்டே இருக்கு ஆளுங்க வேற வந்துட்டே இருக்காங்க...”
அந்த பக்கம் ஏதோ தகவல் வர, “சரிண்ணே சீக்கிரம் வாங்க” நடையிலேயே ஓடிய ஆதி சமையலறையை அடைந்திருந்த நேரம் உள்ளே நின்று உணவின் சுவையை பரிசோதித்துக்கொண்டிருந்தான் உதய்.
வழக்கமாய் அவன் அணியும் வெள்ளை சட்டை தான் ஆனால் இன்று சற்று மாறி வேஷ்டியை மடித்து கட்டி கம்பீரமாய் நின்றான். “தம்பி ஸ்பூன் கொண்டு வரவா?”















































































































 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
தட்டிலிருந்து உணவை உதடு குவித்து ஊதிக்கொண்டிருந்தவன், “வேணாம் ண்ணே...” என்று சுட சுட ஆவி பறக்கும் கேசரியை உண்டவன் நெற்றியில் சமைலறையின் சூட்டில் வியர்வை வழிந்தது.
“ண்ணே நெய் பத்தலையே... வாசனை கூட வரல” – உதய்
“ஊத்திடலாம் தம்பி” – சமையல் மாஸ்டர்
“சில்லி பரோட்டா எனக்கு டேஸ்ட் ரொம்ப கம்மியா தெரியுது. ஏதாவது பண்ண முடியுமா பாருங்க” – உதய்
“தம்பி... அது... நாம பேசுன மாஸ்டர் வரல ப்பா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே” தயக்கத்தோடு கூறினார் சமையல் மாஸ்டர்.
“மாஸ்டர் வரலையா? என்ன ண்ணே இது இப்டி சொல்றிங்க? நேத்து பேசுனப்ப கூட வந்துடுவாருனு சொன்னிங்க. காச பத்தி பிரச்சனை இல்ல டேஸ்ட் தான் முக்கியம்ன்னு சொன்னேன்ல? இப்ப மாஸ்டர் வரலன்னு சொல்றிங்க?”
சட்டையை மடித்து விட்டு சண்டைக்கு சென்ற நண்பனை தடுத்த ஆதி, “டேய் ஏன்டா கோவம் வருது? விடு. பரோட்டா மாஸ்டர் பொண்ணுக்கு ஏதோ பிரச்சனை போல... நைட் மாவு பிணஞ்சு வச்சிட்டு இருந்தப்ப தான் போன் வந்துச்சு. நான் தான் கிளம்ப சொன்னேன்” – ஆதி
“அப்ப சாப்பாடை டேஸ்ட்டா கொண்டு வர முடியல-னு சொல்லி அந்த ஐட்டம நிறுத்திருக்கணும்”
பற்களை கடித்து கூறியவன் சமையல் மாஸ்டர் பக்கம் திரும்பி, “இது இலைக்கு வர கூடாது. வேற ஏதாவது ஒரு ஐட்டம் இலைக்கு வரணும்” என்ன செய்தாலும் அதில் திருத்தம் எதிர்பார்க்கும் உதய்க்கு உணவில் கவனக்குறைவாக இருப்பது புடிக்கவில்லை.
“ஒரு மணி நேரத்துல எப்படி டா புதுசா ஒன்னு செய்ய முடியும்? உன்ன மொத யார் இங்க வர சொன்னது? அண்ணே நீங்க போங்க... இருக்குறத பரிமாருங்க” நண்பன் கையை பிடித்து சமையலறை விட்டு வெளியில் வந்த ஆதி அவன் நெற்றியில் இருந்த வியர்வையை துடைக்குமாறு தன்னுடைய கைக்குட்டையை கொடுத்தான்.
“என்னடா இது கோலம் இன்னும் குளிக்கலயா நீ?” சாதாரண ட்ராக் பாண்ட், டீ-ஷர்ட் அணிந்து முகம் மொத்தமும் களைந்து இருந்தான்.
சகோதரியின் திருமணம் ஆயிற்றே... அத்தனை வேலைகளையும் நின்று பார்க்க வேண்டிய கடமை. இரவு அரை மணி நேரம் மட்டுமே உறங்கியிருப்பான். அவன் எழுந்ததும் ஆதவன் அறையில் இருந்த உதய்யும் உடனே எழுந்து நண்பனுக்கு உதவி செய்ய சென்றுவிட்டான் ஆதவனை மிரட்டி உறங்க வைத்து.
“குளிக்கிறேன். உன்ன தான் நான் கொஞ்ச நேரம் படுக்க சொன்னேன்ல... யார் இங்க வர சொன்னது? நிம்மதியா சமைக்க விடுடா அந்த மனுசனை” – ஆதி
“எனக்கு ஒடம்பு சரியாகி மூணு மாசத்துக்கு மேல ஆச்சு ஆதி. சும்மா இன்னும் பேஷண்ட் மாதிரி ட்ரீட் பண்ணிட்டு இருக்காத. இது என்னோட தங்கச்சி கல்யாணமும் தான். சமையல் எப்படி இருக்கணும்னு சொல்ல எனக்கும் உரிமை இருக்கு. போய் குளிச்சிட்டு வா”
நேரமாவதை உணர்ந்து சரி என தலையை ஆட்டியவன் அறையை நோக்கி செல்ல, “ஆதவன் ரூம்க்கு போகாதடா... உன்னோட டிரஸ் எல்லாம் ஹரி ரூம்ல இருக்கு” – உதய்
“சரி ஸ்டேஜ்ல போய் நில்லு. நான் பத்தே நிமிசத்துல வந்துடுவேன்” இதற்கு மேல் வேலை ஏதாவது செய்தாய்... என்ற முறைப்போடு ஆதி சென்றான்.
ஏழு மாதங்களில் நண்பர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிறையவே நிகழ்ந்திருந்தது. உதய் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் முதலில் செய்தது சஹானாவை தனது சிற்றன்னையோடும் ஆதியோடும் சிகிச்சைக்காக ஒரு மாதம் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தான். ஆதிக்கு வேலையை கவனிக்க வேண்டிய கட்டாயம் வந்தால் சகோதரர்களை ஆஸ்திரேலியா அனுப்பி வைத்து ஆதியை தாயகம் திரும்ப கூறிடுவான்.
மருத்துவரின் கண்காணிப்பில் எந்நேரமும் இருந்த சஹானாவிற்கு நிறையவே முன்னேற்றம் தெரிந்தது. ஒரு மாதத்திற்கு பிறகு மாதம் இரண்டு முறை மட்டும் ஆஸ்திரேலியா சென்று வர வேண்டும் என்று கூறிவிட, ஆதவனின் அன்னை தானே அழைத்து செல்வதாக கூறியும் வீராப்புடன் திரிந்தவன் கோவத்தை பார்த்து ஒரு நாள் ஆதவனின் தந்தையே ஆதியின் வீட்டிற்கு வந்து பெண் கேட்டுவிட்டார்.
நேரடியாகவே தங்களுக்கு இந்த திருமணத்தில் முழு மனதோடு சம்மதம் இருந்தால் மட்டும் திருமண பற்றி மேலே பேசலாம் என்று கூறிவிட்டான். அடுத்து ஆக வேண்டிய வேலைகளை உடனே ஆதவன் குடும்பம் செய்ய நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அழைத்து சிறிய அளவில் பூ வைக்கும் நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக முடித்து வைத்தனர்.
இதனிடையே தமிழ்-மகிழி திருமணமும், கெளதம் – பவித்ரா திருமணமும் நடந்து முடிந்தது.
சிகிச்சை தொடங்கி ஐந்தே மாதத்தில் சஹானா ஓரளவிற்கு நன்றாகவே நடந்திருக்க அவளை பார்க்கும் ஆதிக்கு தான் தன்னையே அறியாமல் கண்கள் கலங்கிவிடும்.
மகனின் மனம் புரியாமல் அவனை வார்த்தைகளால் வதைத்த ரகுநந்தன் கண்ணீர் மல்க மகனின் கை பிடித்து தான் பேசியதை எல்லாம் மறந்து மீண்டும் அலுவகம் வருமாறு கூற கண்கள் கலங்க தந்தையின் அழுகையை பார்த்தும் அவர் பேசியதை எல்லாம் பின்னுக்கு சென்று தந்தையின் கை பற்றி இவ்வாறெல்லாம் பேச வேண்டாம் என்று ஆணையை கூறிவிட்டான் உதய்.
அன்று ஆள் நடமாட்டமே இல்லாத காட்டில் விட்டு வந்த ஈஸ்வரன் பற்றிய தகவல் சில நிமிடங்களிலேயே மொத்த குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. எந்த மகளுக்காக சொந்தங்களையே ஏமாற்றினாரோ அந்த மகளின் மணக்கோலத்தையே காணாமல் விண்ணுலகை அடைந்தார் பசி பட்டினியுடன். அவரின் மரணத்தில் சந்தேகமிருந்த காவல்துறையினரை உதய்யின் ஆட்கள் கவனித்துக்கொண்டனர்.
நீரஜ் தழல் நிலையை தந்தையாய் ரகுநந்தன் கையில் எடுக்க அவரின் கடுமையை புரிந்திருந்த நீராஜின் தந்தை அவனை இனி உதய் பக்கமே வர விட மாட்டேன் என்று சாத்தியங்கள் பல செய்திருந்தார்... காரணம் மகனை அன்று ஒரு நாள் முழுதும் காணாமல் தவித்த பாசம். உடனே நீரஜை நாடுகடத்துயிருந்தார்.
அதன் பிறகே தந்தையானவருக்கு மனம் சற்று நிம்மதியானது ஆனாலும் இனி உதய் மேல் என்றும் ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தார் ரகுநந்தன். உதய் உடல் நிலை கருதி ரகுநந்தன் புதல்வர்களை தன் பார்வைக்குலேயே வைத்து ஆறு மாதமாக பார்த்துக்கொள்கிறார்.
யாழினியின் வீட்டில் மகனின் விருப்பத்தை உணர்ந்து மொத்த குடும்பமும் சென்று பெண் கேட்க முதலில் தயங்கிய யாழினியின் அன்னை பிறகு நளினியின் நல்ல விதமான பேச்சில் மகளுக்கு எந்த விதமான மன கசப்பும் ஏற்பாடாதென்று உணர்ந்து சம்மதித்தார். திருமணத்தை சஹானாவின் திருமணத்திற்கு பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று முடிவானது.
ஆனால் யாழினியின் வரவு மட்டும் உதய்யின் இல்லத்தில் அடிக்கடி நிகழ்வதாயிற்று. அவளும் முதலில் ரகுநந்தன் மேல் சற்று மரியாதையுடன் நடக்க ஒதுங்கி இருந்தாள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவள் சேட்டையிலிருந்து அவராலும் தப்பிக்க இயலாமல் போனது. எவரையும் விட்டுவைக்கவில்லை.
அனைவரிடமும் தன்னுடைய வார்த்தை ஜாலத்தை கட்டி மிரளவும் வைப்பாள் சிரிக்கவும் வைப்பாள்.
மகிழ்ச்சியாகவே செல்லும் அவர்கள் வாழ்க்கையில் ஆதி ஒருவனே, “என்ன எவனாவது கவனிங்கடா... எனக்கு மான்குட்டி வேணும்” என்று நண்பர்களை நச்சரித்தே உதய்யோடு நண்பர்கள் பட்டாளம், அவர்கள் குடும்பம் என இருவது பேர் மணிமேகலையின் வீட்டிலே தர்ணா போராட்டம் நடத்தி மணிமேகலையின் தந்தையை ஒப்புக்கொள்ள வைத்தனர்.
இதோ நேற்று நடந்த சஹானாவின் நிச்சய விழாவில் கூட தாய்மாமன் முறையில் அமர்ந்தது எல்லாம் செந்தமிழரசன் தான்.
மகிழ்ச்சியில் திளைத்து போனான் ஆதி. எந்த சொந்தங்கள் தன்னையும் தன்னுடைய சகோதரியையும் வேண்டவே வேண்டாம் என்று உதறி தள்ளியதோ, இப்பொழுது அதே உறவுகள் அத்தனை மனிதர்களையும் அழைத்து அவர்கள் முன்னாள் தனக்கும் பெரிய சொந்தங்கள் இருக்கின்றது என்று கட்டியிருந்தான்.
மொத்த காரணமும் உதய் மட்டுமே இருந்தான். திருமணத்தை எளிதாக நிகழ்த்திவிடலாம் என்று அனைவரும் நினைத்திருக்க உதய் தான் குறுக்கிட்டு, ‘நடந்தால் விமர்சையாக மட்டுமே நடக்கும்’ என்று சஹானாவின் சகோதரனாக மாறி தன்னுடைய தாய் மாமனிடம் சஹானாவிற்கும் தாய் மாமன் முறையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க உதய் வார்த்தையை தட்டாமல் செய்பவருக்கு இப்பொழுது ஆதியும் மருமகனாகிவிட மகிழ்ச்சியோடு தம்பதி சமயோஜிதராய் அனைத்தையும் செய்தார்.
நளினி, ஜெயநந்தன் தாய் தந்தையாய் நின்று தாம்பூலம் மாற்றிக்கொள்ள உதய் சகோதர சகோதரிகள் அட்டகாசத்துடன் எந்த விதமான தடங்கலும் இன்றி சிறப்பாகவே அத்தனையும் நிகழ்கின்றது. அந்த ரிசார்ட்டில் தங்குவதற்கென்று விடுதியிலிருந்து பாதிக்கும் மேற்பட்ட அறைகளை முன்பதிவு செய்து வைத்திருந்தனர்.
வீட்டிற்கு சென்று மீண்டும் இங்கு வர நேரமெடுக்கும் என்பது ஒரு காரணமாக இருக்க நண்பர்கள் கதை பேச ஒன்றாக இருக்க என மகிழ்ச்சியில் திளைக்க தான் இந்த ஏற்பாடு. நேரம் ஆகிக்கொண்டே செல்வதை உணர்ந்து ஆதி ஓட்டமும் நடையுமாக ஹரி விஷ்ணு தங்கியிருக்கும் அறைக்கு செல்ல கதவு கொஞ்சம் திறந்திருந்தது.
‘பரவால்ல எந்திரிச்சிட்டாய்ங்க போல’ என்று பாராட்டியபடியே உள்ளே சென்ற ஆதிக்கு நடக்க கூட வழி இல்லாமல் போனது. கதவின் ஓரம் கெளதம் குப்புற படுத்து ஓரமாக கிடந்த காலணிகளை கட்டிப்பிடித்து உறங்கிக்கொண்டிருக்க, அவனுக்கு சற்று தள்ளி விஷ்ணு வாயை திறந்து வைத்து உறங்கிக்கொண்டிருந்தான்.
அவன் முகத்திற்கு நேராக அருகிலிருந்த கட்டிலில் படுத்திருந்த ஹரியின் கால்கள் தொங்கியது. ஹரிக்கு அருகிலே தமிழ் சட்டையை அவிழ்த்து நிம்மதியாக துயில் கொண்டிருந்தான். அமைதியாக நால்வரின் கைப்பேசியையும் ஒழித்து வைத்து அறையிலிருந்த கடிகாரத்தில் எல்லாம் நேரத்தை மாற்றி வைத்து கதவையும் உள் வழியாக பூட்டி குளியலறை சென்றவன் ஒரு வாளி நிறைய சில்லென்று வந்த தண்ணீரை பிடித்து வெளியில் வந்தவன் முதலில் ஹரியின் முதுகில் ஓங்கி அடி ஒன்றை வைக்க பதறியவன் கால்கள் எதேர்ச்சியாக வேகமாக எழ பார்க்க சரியாக ஹரியின் ஷூ கால்கள் விஷ்ணுவின் முகத்தில் ஓங்கி விழுக வலியில் கதறி மூக்கை பிடித்துக்கொண்டே விஷ்ணு எழும் முன் வாளியில் இருந்த மொத்த தண்ணீரையும் நண்பர்கள் முகத்தில் ஊற்ற நால்வரும் பதறி தான் எழுந்தனர்.
“லூசு பயலே...” – கெளதம்
“வெண்ண... இப்படியாடா காலைல எழுப்புவ?” என தமிழும் ஆதியை திட்ட, ஹரி விஷ்ணுவின் வீங்கிய மூக்கை பார்த்து அந்த நிலையிலும் சிரித்துக்கொண்டிருந்தான்.
“காலைலயா? எவன்டா சொன்னான் காலைல-னு? மணி இப்ப பதினொன்னு இருபத்தி மூணு” பொய் கூறுவதற்கான எந்த தடயமும் முகத்தில் இல்லை, மாறாக முகத்தை கோவமாக வைத்துக்கொண்டான்.
“அய்யய்யோ அப்போ கல்யாணம் முடிஞ்சதா?” சிரிப்பை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து சீரியஸ் மோடிற்கு சென்றான் ஹரி.
“பின்ன உங்களுக்காக வெயிட் பண்ணுவாய்ங்களா? சரி வந்து எழுப்பி விடலாம்னு பாத்தா எவனும் போன் எடுக்குறதில்ல, கதவையும் லாக் பண்ணிடுறது... உதய் உங்க அம்மா அப்பா எல்லாம் செம்ம கடுப்புல இருக்காங்க... முக்கியமா ஆதவன்...”
ஆதியின் சட்டை வேறு அழுக்காய் இருக்க அவன் கூறுவதும் சரியாக இருக்குமோ என்று அனைவரும் குழம்பி போயிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி துணியை எடுத்து குளியலறைக்குள்ளே சென்றுவிட்டான்.
“கௌதமு அலாரம் வைக்க சொன்னேன்ல ஏன்டா வைக்கல?” – தமிழ்
“என் போன்ல சவுண்ட் நல்லா வராதுன்னு விஷ்ணுகிட்ட சொன்னேன்... விஷ்ணு நீ வச்ச தான?” – கெளதம்
“வச்சேன்... ம்ம்ம் ஆமா வச்சேன்... ஆனா ஏ.எம்-ஆ பி.எம் வச்சேன்னானு தெரியலையே தூக்க கலகத்துல கவனிக்கல” பேந்த பேந்த விழித்த விஷ்ணுவை எதை கொண்டு அடிக்கலாம் என்று யோசித்த ஹரி தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தான்.
“என்ன ஏன்டா அடிக்கிற? நீ அலாரம் வச்சிருக்கலாமே” – விஷ்ணு
“நான் தான் மொபைல் சார்ஜ் இல்லனு சொன்னேன்ல உன்கிட்ட” – ஹரி
“சரி கதவை எவன்டா பூட்டுனது?” கொந்தளித்தான் கெளதம்
“தோ இவன் தான்” ஹரி விஷ்ணுவை கை காட்டினான்.
“ஐயோ நான் இல்ல ண்ணே... சும்மா தள்ளி விட்டேன் அது மூடுச்சா என்னனு கூட பாக்கல ஒருவேளை தூங்குனதும் கால் பட்டு பூட்டிக்கிக்கோ என்னவோ” அப்படியும் இருக்குமோ என்று சந்தேகத்துடன் தாடையை தடவிக்கொண்டு யோசித்தான் விஷ்ணு.
“நல்ல செருப்பு போட்டு வந்துட்டேன்... இல்லனா அது நாறு நாரா பிஞ்சு போகுற வர உன்ன விட்ருக்க மாட்டேன்...” கடுப்பான கெளதம் விஷ்ணுவை கழுவி ஊற்ற வழக்கம் போல் பற்களை காட்டி சமாளித்து முடித்தான் விஷ்ணு.
“அது எப்படி டா நாலு பேரும் கதவு தட்டுற சத்தம் கூட கேக்காம இருப்போம்?” – தமிழ் சந்தேகமாய் அங்கிருந்த மணியை பார்க்க ஆதி கூறியது போல தான் இருந்தது.
“நடந்துபோச்சு... வெளிய போய் ஏதாவது ஒரு கதை கட்டணும் அதுக்கு யோசிங்க” – ஹரி
“சரி தான்... என் பொண்டாட்டிகிட்ட சொல்லவே ஒரு தனி கதை வேணும்” தலையை சொரிந்தான் தமிழ்.
“ஏன்டா பொண்டாட்டிக்கு இப்டி பயப்புடுற?” ஏளனமாக சிரித்த கெளதம் சுகமாய் மெத்தையில் அமர்ந்து, “என்ன மாதிரி இருக்கனும்... பாரு ராஜா மாதிரி ஜாலியா சுத்துறேன். லவ் மேரேஜ் இஸ் ப்ளிஸ்டா மாப்பிள்ளை” கால் மேல் கால் போட்டு ஒரு நிமிர்வுடன் பெருமிதத்தோடு கூறினான்.
“கெளதம் அண்ணே சும்மா கத விடாத... நேத்து பவித்ரா சேலைய புடிச்சிட்டே ‘மாலா மாலா’-னு நீ ஓடுனத நா தா பாத்தேனே” விஷ்ணு கூற கௌதமை பார்த்து காரி துப்பினான் தமிழ்.
“அப்றம் பேசலாம். இப்போ பொய் ரெடி பண்ணுங்க. நேரமாகிட்டே இருக்கு” ஹரி நினைவூட்ட, “நீங்க தான் நல்லா நடிப்பீங்களே... உங்களுக்கு வீசிங் வந்துடுச்சுனு ஹாஸ்பிடல் போய்ட்டோம்-னு சொல்லிடலாம்” என்றான் தமிழை காட்டி.
“நல்லா ஐடியா” – விஷ்ணு
“எவனும் நம்ப மாட்டானுக... இவனுக்கு ஒரு காய்ச்சல் கூட எனக்கு தெரிஞ்சு வந்ததில்லை இதுல வீசிங் வந்து கிழிக்கும்” – கெளதம்
“பேசாம இவன் லவ் ப்பைலியர் ஆகிடுச்சுனு பினாயில குடிச்சிட்டு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டானு சொல்லிடலாமா?” – தமிழ்
“ப்பைலியர் வேணாம்... லவ் பண்ண பொண்ணு இவன விட்டுட்டு வேற பையன் கூட ஓடிடுச்சுனு வச்சுக்கலாம்.. அப்ப தான் கேக்க நல்லா இருக்கும்” – விஷ்ணு
“ஏன் இந்த தூக்க மாத்திரை, பாய்சன் எல்லாம் தெரியாதா பினாயில் மட்டும் தான் தெரியுமா?”
தமிழ் தோள் சுரண்டி ஹரி கேட்க, “ச்ச ச்ச அதெல்லாம் டீசெண்டா இருக்கும். இது தான் கேக்கவே அசிங்கமா இருக்கும்” மற்ற இருவர் பக்கம் திரும்பி, “என்ன பா சரி தானே?” என்றான்.
“இதுல ஒரு சின்ன சட்ட சிக்கல் இருக்கே...” என்றவாறு தலையை துவட்டி இடையில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வந்தான் ஆதி, இவர்கள் பேச்சை எல்லாம் உள்ளிருந்து கேட்டுக்கொண்டு.
“இதுல என்ன சிக்கல் இருக்க போகுது?” கெளதம்
ஆதியிடம் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே கதவு தட்டும் சத்தம் கேட்டது. “போச்சு யாரோ வந்துட்டாங்க... ஹரி டேய் பெட்ல போய் செத்து போன மாதிரி மூஞ்சிய வை... அதாவது காதல் தோல்வில மன்மதன் படம் மொட்டையன் மாதிரியே பொலம்பனும்” என்று நின்றுகொண்டிருந்தவனை கெளதம் கட்டிலில் தள்ளி படுக்க வைக்க, அந்த இடைவேளையில் குளியலறை சென்ற விஷ்ணு அங்கிருந்த பினாயில் பாட்டிலை எடுத்து வந்து ஹரியின் சட்டையில், முகத்தில் எல்லாம் ஆங்காங்கு ஊற்றினான்.
“என்னடா பண்றீங்க என்ன வச்சு?” பதறிய ஹரியின் சட்டையை சில இடங்களில் கிழித்தான் தமிழ்.
“என்ன பண்ணாலும் சரியா இருக்கனும்டா” என்று அவன் தலையை வேறு தமிழ் கசக்கிவிட,
“நீங்க பண்றதெல்லாம் பாத்தா சூசைட் பண்ணவனு எவனும் நம்ப மாட்டாய்ங்க. ரேப் பண்ண மாதிரி சட்டையெல்லாம் கிளிக்கிறீங்களேடா பேப்பயலுகளா” கிட்டத்தட்ட அழுதேவிட்டான் ஹரி.
இவர்கள் சேட்டை எல்லாம் பார்த்துக்கொண்டே வேகமாக கிளம்பிய ஆதி வேஷ்டியை கட்டிவிட்டு, “டேய் ஏன்டா இவ்ளோ ட்ராமா போடுறீங்க... நீங்க நைட் ஏதோ பிட் படம் பாத்துட்டு தூங்கிட்டிங்கல... நாங்க வந்து பாதப்ப படம் ஓடிட்டு இருந்துச்சு உதய் பாத்துட்டு கோவமா டிவிய ஆப் பண்ணிட்டு போனான்” பேசிக்கொண்டே ஆதி சிரிக்க, அவன் கிளம்பி நின்ற கோலத்தை கூட கவனிக்காமல் வைத்தது ஆதி கூறிய செய்தி.
“டேய் என்னடா பண்றீங்க? கதவை தொறக்க போறிங்களா இல்லையா?” காரமாக வெளியில் இருந்து கதவை தட்டிக்கொண்டே அழைத்தான் உதய்.
“செத்தோம் செத்தோம்... போச்சு... கருமம் கருமம் வேணாம்னு சொன்னேன் கேட்டீங்களாடா பரதேசிகளா” மூவரையும் அசிங்கமாய் பார்த்தான் தமிழ்.
“சரி நடந்து போச்சு ண்ணே... ரெண்டு திட்டு திட்டு வாங்குறதுக்குள்ள கதவை தொறந்து ஒடனே ஆளுக்கு ஒரு கால புடிச்சிடலாம்” பினாயில் தெளித்த சட்டையை அவிழ்த்துப்போட்டு வெற்று உடம்போடு பாதி தொடை வர தொட்டிருந்த ஷார்ட்ஸ் போட்டு நின்றான் ஹரி.
“ஏய் ச்சீ போய் சட்ட போடுடா... ஏற்கனவே உங்களால பிரச்னை இதுல பிட் படத்துல நடிக்கிறவன் மாதிரி நிக்கிறான்” பதட்டத்தில் சிடுசிடுத்தான் தமிழ். மீண்டும் கதவு தட்டும் சத்தம்.
“அண்ணே பேசாம கதவை திற... கால்ல விழ எல்லாரும் ரெடி ஆகுங்க” என்று நால்வரும் வரிசையாக நிற்க தானே கதவை திறந்துவிட்டு அதே இடத்தில் வந்து நின்றுகொண்டான்.
அறைக்குள் நுழைந்த உதய் கோவத்தோடு, “என்ன டா பண்றீங்க நீங்க அங்க...”
உதய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நால்வரும் யோசிக்காமல் அவன் காலில் விழுந்துவிட்டனர்.
“அண்ணே எங்களை உன் பிள்ளையா நெனச்சு மன்னிச்சு வுற்று ண்ணே. ஏதோ தெரியாம பண்ணிட்டோம்” என விஷ்ணுவும், “ஆமா ண்ணே எத்தனையோ தப்ப மன்னிச்சிருக்க இதையும் மன்னிச்சுடு ண்ணே” என ஹரியும் தலையை தூக்கி சகோதரனிடம் கெஞ்ச,
தங்கள் பங்கிற்கு, “மச்சான் டேய்... ஏதோ சின்ன பசங்க பேச்ச கேட்டு நாங்க அப்டி எல்லாம் பண்ணிட்டோம். இனிமேல் இந்த மாதிரி எந்த தப்பும் நடக்காதுடா...” எச்சிலை எடுத்து கன்னத்தை நனைத்தான் தமிழ்.
“என்னடா...”
உதய் பேசுவதற்கும் இடையிட்ட கெளதம், “எங்களை பேச விடு மாப்பிள்ளை. ஆமாடா யாரும் வர மாட்டாங்கன்னு இவனுக சொன்ன நம்பிக்கைல ரொம்ப நாள் ஆச்சே-னு ஒரே ஒன்னு... மம்மி ப்ராமிஸ் மாப்பிள்ளை... ஒரு பிட்டு படம் தான் உதய் பாத்தோம்...”
“என்னது பிட் படம் பாத்திங்களா?” இது தான் அவனுக்கு புதிய தகவலாயிற்றே அதனால் தான் அதிர்ச்சியிலிருந்தான். அந்த நேரத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் உதய்யை ஒட்டி நின்ற ஆதவனுக்கும் அதிர்ச்சியே...
“கல்யாண வீட்டுல இதெல்லாம்... என்னடா?” – ஆதவன்
“மாப்பிள்ளை பையா மன்னிச்சுடுடா. அதுனால தான் எங்களால கல்யாணத்துக்கு வர முடியல” என்று ஆதவனிடமும் மன்னிப்பை கெளதம் வேண்ட, உள்ளே இருந்த ஆதி சிரிப்பை அடக்கியவாறு ஈரத்தலையோடு இருந்த சிகையை சீப்பின் உதவியுடன் அடக்கும் முயற்சியில் இருந்தான்.
“ஏதேய்?” தனக்கே தெரியாமல் தன்னுடைய திருமணம் எப்பொழுது நடந்தது என்ற குழப்பம் ஆதவனுக்கு.
“அண்ணே மன்னிச்சுடு... அந்த படத்தை பாத்துட்டே தூங்கிட்டோம் போல, ஆறு மணிக்கு வச்ச அலாரம் கூட அடிக்காம போய்டுச்சு... இப்போ பாரு பதினொன்றைக்கு மேல ஆகிடுச்சு. உன் கல்யாணத்துல நாங்க டான்ஸ் பெர்பாமன்ஸ் எல்லாம் பண்ணனும்னு பிளான் பன்னிருந்தோம்... எவ்ளோ ஆசையா ரெடி ஆனோம்ல ஹரி?”
எழுந்து நின்று சகோதரனிடம் விஷ்ணு கேட்க, ‘இது என்ன புது கதையால இருக்கு’ என்று முதலில் விழித்த ஹரி பிறகு அதற்கும் பலமாய் தலையை ஆட்டி வைத்தான்.
“இப்போ வருத்தப்பட்டு என்ன ஆகுறது? உன் கல்யாணமே முடிஞ்சிடுச்சே” சோகமாய் தமிழ்.

























































































 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93

“தண்ணி அடிச்சிருக்கீங்களா?” – உதய்
“அது அடிச்சிருந்தா கூட இன்னேரம் தெளிவா இருந்து இவன் கல்யாணத்துக்கு வந்துருப்போமே...” வருத்தம் மேலிட்டது கெளதம் வார்த்தைகளில்.
“பரதேசி நகருங்கடா... கல்யாணத்துக்கு நேரமாச்சு” நால்வருக்கும் இடையில் புகுந்த ஆதவன் அறைக்குள்ளே சென்று நேற்று தான் விட்டு சென்ற கைக்கடிகாரத்தை தேட துவங்கினான்.
“கல்யாணத்துக்கு நேரமாச்சா? கல்யாணம் முடியல?” குழப்பமாய் ஹரி...
“மாப்பிள்ளை இங்க இருக்கறப்ப எப்படிடா கல்யாணம் அதுக்குள்ள முடியும்?” – ஆதவன்
“அப்போ மணி இப்போ பதினொன்னுக்கு மேல இல்லையா?” இல்லை என்றவன் தேடுதல் வேட்டையில் தான் இன்னும் இருந்தான் ஆதவன்.
“அப்போ நாங்க பிட் படத்தை போட்டுட்டே தூங்குன நேரம் நீ வந்து டிவி ஆப் பண்ணலயா?”
இவர்களின் குழப்பத்தில் ஆதி சத்தமாக சிரித்துக்கொண்டிருக்க, நால்வரையும் முறைத்துக்கொண்டு, “வெக்கமா இல்ல... பண்ணாதே தப்பு இதுல அந்த கருமத்தை நூறு தடவ சொல்லிட்டே இருங்க... இந்த கருமத்தை நான் நேர்ல பாத்திருந்தேன் அந்த நிமிஷமே நாலு பேரையும் கொன்னு பொதச்சிருப்பேன்” உதய் சீறினான்.
“அட கிரதகா...” கெளதம் ஆதி பக்கம் திரும்ப இப்பொழுது தான் ஆதியின் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது.
“மணி ஆறே ஹால் தான் டா வெண்ணெய்களா” சத்தமாக சிரித்தவன் இப்பொழுது அழகாய் அடர் நீல நிற ஷர்ட் அணிந்து வேஷ்டியில் கம்பீரமாய் நின்றிருந்தான்.
“செத்தடா இன்னைக்கு” ஆதி நோக்கி பாய்ந்த கௌதமை தொடர்ந்து மற்ற மூவரும் பறக்க அவர்கள் பிடியிலிருந்து சிக்காமல் சிறுத்தையை போல் பறந்து அறையை விட்டு வெளியேறியவன், “இலை தூக்க ஆள் இல்லயாம், குளிக்காம கூட அப்டியே வாங்க டா” என்றான் உதய்யின் பக்கம் நின்று.
“வேலைய விட்டுட்டு என்ன இது?” உதய் ஆதியை முறைக்க, அவன் தலையை பிடித்து சிகையை களைத்து விட்டவன், “பரோட்டா சாப்புட போறேன்... வர்றியா?” உதய்யின் பதிலை கூட எதிர் பார்க்காமல் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் சகோதரர்களையும் தோழர்களையும் பார்த்தவன், “பத்து நிமிசத்துல நாலு பேரும் ஸ்டேஜ்ல நிக்கணும்... வரல கொன்னுடுவேன்” என்ற எச்சரிக்கையோடு அறைக்குள் இருந்த மாப்பிள்ளைக்கு போடும் நகைகளை எடுத்துக்கொண்டு சென்றான்.
அங்கு பசிக்கு உணவை தேடி சமையலறை சென்ற ஆதிக்கு கம்பெனி தருவதற்காகவே எதேச்சையாக காத்திருந்தாள் அவன் மான்குட்டி. மயில் வண்ண பட்டுப்புடவையில் ரோஜா நிற பார்டர் வைத்து, அதே ரோஜா நிற ரவிக்கை அணிந்து சுட சுட இருந்த தோசையை சாம்பார் ஊற்றி ஊதி ஊதி வயிற்றை நிரப்பி கொண்டிருந்தாள்.
“பச்சை கல்லு மூக்குத்தி எல்லாம் பலமா இருக்கே” சிரிப்போடு அவள் அருகே சென்ற ஆதிக்கு அவள் அழகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வது போல் இருந்தது. ஆனால் என்றும் மறையாதது அந்த சிறு குழந்தையின் செயல்கள்.
“சாரீக்கு மேட்ச்சா இருக்கா?” என்றால் ஆசையாக.
அவள் மூக்கை பிடித்து சிரிப்போடு ஆட்டியவன், “என் அழகிக்கு அழகு கூடிட்டே போகுது” அவன் பாராட்டில் வெட்கம் கூடி போக கையிலிருந்த உணவும் கூட மறந்து போனது மணிமேகலைக்கு.
“ஹ்ம்ம் இப்போ இன்னும் இன்னும் அழகா இருக்கியே... சிவந்த கன்னத்தை கடிச்சு சாப்பிடவா?” வெட்க சிரிப்போடு அவனை ஏறிட்டவள் அவன் நெஞ்சில் மெல்லிதாக அடிக்க, அவனுக்கும் இருந்த அலுப்பேலாம் சென்று ஒரு புத்துணர்ச்சி பிறந்தது.
“பசிக்கிது மேகா...” குழந்தையாய் அவளிடம் கெஞ்ச கையிலிருந்த தட்டிலிருந்து தோசையை பிய்த்து அவனுக்கு ஊட்டிவிட்டவள் கண்கள் அவன் சிகைக்கு சென்றது.
சிறிதும் காயாமல் இருக்க அவன் கையை பிடித்து மின்விசிறி இருந்த பக்கம் அழைத்து சென்று அதற்கு நேராக அவனை அமர வைத்து சிகையை கலைத்துவிட்டாள்.
“இவ்ளோ ஈரமா இருக்கு காய வைக்காம ஏன் அதுக்குள்ள தலையை சீவிருக்கிங்க?”
பட்டு புடவை என்றும் பாராமல் முந்தானை எடுத்து அவன் தலையை துவட்ட அதை தடுத்தவன், “வேணாம்டி... பாக்குறவங்க ஏதாவது நினைக்க போறாங்க”
“நினைக்கட்டுமே... நான் என்னோட ஆதிக்கு தானே ஹெல்ப் பண்றேன்” உணவை அவனுக்கு ஊட்டிக்கொண்டே பேசினாள்.
“உன் அப்பன் எம்டன் வந்தாலும் இப்டி நிப்பியா?”
“அப்பாவ அப்போஸ் பண்ணி மூக்குத்தியை குத்தினேன்... இன்னுமா இந்த கேள்வி?” அவனை மணிமேகலை முறைக்க எவரும் இல்லை என்று பார்த்துக்கொண்டு அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டான் ஆதி.
விழிகள் விரிய அவன் செயலை பார்த்தவள் தோசை வாங்கி வருவதாக கூறி சிரிப்போடு அகன்றாள். அவள் நழுவி செல்வதை பார்த்தவன் இதழ்களில் வற்றாத புன்னகை கீற்று.
உதய்க்கு மீண்டும் மீண்டும் அழைப்பு வந்துகொண்டே இருந்தது யாழினியிடமிருந்து கடந்த பதினைந்து நிமிடங்களாக. வேலையில் மூழ்கியவன் அதை எடுக்காமல் இருக்க இப்பொழுது அவளும் விடுவதாக இல்லை பல்லவி, திவ்யா, தன்னுடைய தங்கை குழலினி என மூவரை வைத்து அவனை அழைத்துவிட இப்பொழுதும் அவள் அழைக்கும் எந்த அழைப்பிற்கும் அசராமல் இருந்தவனுக்கு, சகோதரன் மற்றும் நண்பர்களை மிரட்டிவிட்டு வந்தவனை தடுத்தார் நளினி.
“என்ன உதய் இது பிடிவாதம்? பிள்ளை கூப்புடுத்துல... என்னனு தான் ஒரு நிமிஷம் கேட்டுட்டு வா போ”
இதற்கு மேலும் இழுக்க முடியாமல் சகோதரிகள், யாழினி, மணிமேகலைக்கு என ஒதுங்கியிருந்த அறைக்கு சென்றான்.
கதவை தட்ட திறந்த யாழினி, “ஒரு தடவ கூப்டா ஒரு நிமிஷம் வந்துட்டு போக கூடாதா சார்? தூதுக்கு ஆள் அனுப்பிட்டே இருக்கணுமா?” கோவமாக கேட்டவளை திட்ட தான் வந்தான்.
ஆனால் ஆகாய நீல நிற புடவையில் சிகப்பு நிற பார்டர் வைத்து, சிகப்பு நிற ரவிக்கை அணிந்து காட்சியளித்தவளை பார்த்தவனுக்கு கோவம் எங்கோ ஓடிப்போனது. வெளியில் எவரும் இல்லை என்று பார்த்து உள்ளே சென்ற உதய் கதவை சாற்றி வந்தான்.
“எதுக்கு யாழினி கூப்பிட்ட? வேலை இருக்கு” என்றவன் கையில் ஒரு சிறிய பெட்டியை கொடுத்தாள் பார்த்தாலே தெரிந்தது நகைப்பெட்டி என்று.
திறந்து பார்த்தான். எளிமையான தங்க மோதிரத்தின் நடுவில் வெள்ளை வைரம் ஒன்று. எளிமையாக இருந்தது...
“என்ன இது யாழினி?”
“மோதிரம் சார்..”
“சார் சொல்லாதடி...” – உதய்
“சரிங்க... மோதிரம் புடிச்சிருக்கா?” – யாழினி
“நல்லா தான் இருக்கு. ஆனா ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு வாங்குற?” – உதய்
முகத்திற்கு கண்ணாடியின் முன் நின்று சிறிது அழகு சேர்க்க ஏதோ ஒரு கிரீமை போட்டுக்கொண்டிருந்தவள் கண்ணாடி வழியாக அவனை பார்த்து, “ஆசையா செய்றதுக்கு எல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவாய்ட் பன்னாதீங்க ப்பா ப்ளீஸ். நான் உங்களுக்கு வாங்கி தர்ற முதல் கிபிட் ப்ளீஸ்”
முகத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் போதுமென உணர்ந்தவள் ரவிக்கையில் பின் இருந்த கயிற்றை கட்டிக்கொண்டிருக்க அவளை நிறுத்தியவன் அவள் கையிலிருந்ததை வாங்கி தன் கையிலிருந்த சின்ன பெட்டியை அவள் கையில் திணித்தான்.
வேதனையோடு அவனை திரும்பி பார்த்தவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் பேசாமல் அந்த க்னாட்டை முடிச்சிட்டு அவள் பட்டு முதுகிலும் மறக்காமல் இதழ் பதித்தான். ஆனால் அவளோ அவன் செயல்களை அனுபவிக்கும் நிலையில் இல்லையே... மனம் வலித்தது.
அவளை தன் பக்கம் திருப்பிய உதய், “எதுக்கு அதுக்குள்ள கண் கலங்குது? ம்ம்?” இல்லை என்று தலையை ஆட்டியவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் வழிய அந்த கண்ணிலே தன்னுடைய மீசை குறுகுறுக்க முத்தமிட்டான்.
“நீயே போட்டு விடுடி... அதுக்கு தான் கைல குடுத்தேன். ஒடனே அழுகுறது. ஊர்ல இருக்குற எல்லாரையும் ஆட்டி படைக்கிறியே நான் என்ன சொன்னாலும் அழுதுடு” மற்றொரு கண்ணை விறல் கொண்டு துடைத்தான்.
கண்ணீரோடு சிரித்தவள் மோதிரத்தை அவன் கையில் போட்டுவிட, அவன் கைகளுக்கு அது அழகாகவே இருந்தது. குனிந்து அவளை கைகளில் அள்ளியவன் அவளை இரண்டு சுற்று சுற்றி கீழே இறக்கிவிட்டு ஆசையாக அவன் இதழ்களை நெருங்கும் சமயம் அவன் இதழில் கை வைத்து நிறுத்தினாள். “என்ன இப்போ வேலை இல்லையா?”
“உன்ன பாத்துட்டு வேலைய சுறுசுறுப்பா பாக்குறேன்” யாழினியின் கை பிடித்து இதழுக்கு வழி ஏற்படுத்தியவன் அவளை நோக்கி குனிய கதவு தட்டி அவர்கள் இருவரின் தனிமையை கலைத்தது.
“போடி நீ இன்னைக்கு தப்பிச்ச” அவளை திட்டிக்கொண்டே வெளியில் உதய் செல்ல மீண்டும் அவளை பார்த்தவனுக்கு பறக்கும் முத்தத்தை கொடுத்து அவன் மனதில் சலனத்தை தீயாய் பற்றவைத்தாள் அவன் பட பட பட்டாசு.
மேள தாளங்கள் முழங்க திருமண மேடையில் மன பெண் அலங்காரத்தில் பச்சை பட்டுடுத்தி சிரிப்போடு அமர்ந்திருந்த சஹானாவின் முகத்தை கள்ளத்தனமாக பார்த்த ஆதவனுக்கு முழுதாய் அவளிடம் திரும்பி திருமண கோலத்தில் இருக்கும் தன்னவளை ஒரு நிமிடம் முழுதாய் பார்க்கும் ஆசை ஓங்கி நின்றது. ஆனால் அவர்களை சுற்றி நிற்கும் நன்பர்கள் பட்டாளமும் குடும்பத்தினரும் விடுவார்களா என்ன? சந்தர்ப்பத்தை தேடி தேடி காத்திருந்தனர் அனைவரும்.
“டேய் மாப்பிள்ளை ரொம்ப வெக்கப்படாதடா பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வித்யாசம் தெரியாம போய்டும்” – கெளதம் கலாய்க்க சிரிப்பலை அந்த மேடையில்.
“என்னமோ டான்ஸ் ஆட போறேன்னு சொன்னிங்க வந்து ஆடுங்கடா” – ஆதி
திரு திருவென முழித்த விஷ்ணுவும் ஹரியும் என்ன கூறுவதென்று தெரியாமல் நின்றனர். அவர்களே ஆதவன் மனதை குளிர்விக்க அப்பொழுது கூறிய பொய்யை இப்படி ஆதி கேட்பான் என்று சிறிதும் எதிர் பார்க்கவில்லையே, “இல்ல இந்த ஹால்ல ஸ்பீக்கர் வேலை செய்யலன்னு சொன்னாங்க” மழுப்பினான் ஹரி.
“நான் இருக்கேன்ல அத வேலை செய்ய வைக்கிறது தானே என்னோட வேலை”
சவுண்ட் சர்வீஸ் இருந்த இடத்திற்கு நடந்த ஆதியின் கையை பிடித்து நிறுத்திய விஷ்ணு, “அண்ணே சும்மா அடிச்சு விட்டேன். நீ ஒடனே பட்டு போட்டு இத்தனை பொண்ணுங்க முன்னாடி அசிங்கப்படுத்திடாத... ப்ளீஸ்” நைசாக ஆதியிடம் வந்து மன்றாடினான் விஷ்ணு.
“லஞ்சம்?” – ஆதி
“என்ன வேணாலும் தர்றேன்” – விஷ்ணு
“உன் பி.எம்.டபில்யூ பைக் ஒரு மாசம் என்கிட்டே தான் இருக்கனும்” – ஆதி
“அது வாங்கி ரெண்டு நாள் கூட ஆகல, நானே இன்னும் ஒழுங்கா ஓட்டலை” சிறு பிள்ளையின் அடம் இருந்தது விஷ்ணுவின் முகத்தில்.
“என்ன பட்டு வேணும்ன்னு சொன்ன?” – ஆதி
“சரி ரெண்டு வாரம் தர்றேன்” இறங்கி வர வைத்தான் ஆதி.
“மூணு மாசம்” – ஆதி
“இருவது நாள்” – விஷ்ணு
“ஆறு மாசம்” – ஆதி
“சரி நாப்பத்தி அஞ்சு நாள்” – விஷ்ணு
மொத்தமும் சிரிப்பின் உருவமாய் மாறியது ஆதியின் முகம், “டீலு”
உற்சாகமாக மேடை நோக்கி சென்ற ஆதி உதய் அருகில் நிற்க தன்னையே பார்த்துக்கொண்டிருந்த உதய்யிடம், “மம்முட்டியான் பாட்டுக்கு தான் ஆடுவேன்னு நிக்கிறான். அதான் நீ ஆடவே வேணாம்னு இழுத்துட்டு வந்துட்டேன்” பொய் கூறி சமாளித்த நண்பனை நம்பாமல் பார்த்த உதய் பார்வையை ஆதியிடமிருந்து மாற்றவில்லை.
“யாழினி அந்த பக்கம் நிக்கிறா” குறு குறு பார்வையை தாங்காமல் ஆதி.
“என்னடா டீல் பேசுன அவன்கிட்ட?” நண்பனை கண்டுகொண்டான் உதய்.
பற்களை காட்டி, “ஹீஹீ... புதுசா ஒரு பைக் வாங்கிருக்கான்ல அதான்” எப்பொழுது தான் இவன் வளருவான் என்று சந்தேகத்தில் சிரிப்போடு நகர்தான் உதய்.
சபையினரிடம் ஆசி வாங்க சென்ற தலையை சிரிப்போடு எடுத்து வந்த ஆதவனின் அன்னை அய்யரிடம் தாம்பூலத்தை கொடுக்க அய்யரின் கெட்டிமேளம் ஆணையில் நாதஸ்வரம், மேளம், மோகன வாத்தியங்களின் இன்னிசையோடும் சபை நிறைந்த மக்கள் மனதிலிருந்த ஆசீர்வாதம் பூக்கள் மூலம் மணமக்களை அடைந்து ஆதவன் – சஹானா வாழ்க்கையின் தொடக்கத்திற்கு இனிதே வித்திட்டது.
மணமக்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விட நண்பர்கள் தங்கள் இணைகளோடு எடுத்துக்கொண்ட புகைபடம் தான் அதிகம் ஆனது. அடுத்தடுத்து நடக்க வேண்டிய சடங்குகள் அத்தனையும் இனிதே முடிய மொத்தமாக நண்பர்கள் குடும்பம் அனைவரையும் ஒரு புகைப்படத்திற்கு சங்கமிக்க வைக்க ஹரி விஷ்ணு தான் படாதபாடு பட்டுப்போயினர்.
இறுதியாக அனைவரையும் நிறுத்தி கூட்டு குடும்பம் போல் ஒரு புகைப்படத்தை எடுத்தவுடன் மணப்பெண், அன்னை தங்கை காதலி மனைவி என அனைவரையும் தள்ளி நிறுத்திய நண்பர்கள் பஞ்ச பாண்டவர்களாய் ஐவர் மட்டும் புகைப்பட எடுத்துக்கொள்ள நிற்க
அவர்களை பார்த்து கருவிக்கொண்டிருந்த அவர்களது இணைகள், “போட்டோ நல்லாவே வராது” என்று ஆளுக்கொரு சாபங்களை விட்டாலும் அதை கேட்கும் நிலையில் நிச்சயம் ஐவரும் இல்லை.
“டேய் தலையை சரி பண்ணு” என்று தன்னுடைய பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்து கெளதம் ஆதியிடம் கொடுக்க, உதய்யின் சட்டையை சரி செய்துகொண்டிருந்தான் ஆதவன், தமிழ்.
“போதும்டா வாங்க” தன்னுடைய தலை சரியானதும் ஆதி அழைக்க புகைப்படத்திற்கு தயாராகினர் ஐவரும்.
“இவன் ரெடி ஆகிட்டா எல்லாரும் ரெடி ஆகிடனும். அவசரத்துக்கு பொறந்தவன்” நண்பனை திட்டி தன்னையே சரி செய்துகொண்டான் தமிழ்.
“அண்ணே கிளாரிட்டி நல்லா இருக்கனும். முக்கியமா சுத்தி நிக்கிற எந்த விஷ கிருமிகளும் ப்ரேம்குள்ள வர கூடாது சொல்லிட்டேன்”
கறாராக புடைப்பட கலைஞருக்கு ஆணை பிறப்பித்து உதய் பக்கம் திரும்பியவன், “போட்டோ எடுத்த அடுத்த செகண்ட் நீ சாப்புடுற இல்லனா இங்கையே வச்சு ஊட்டி விட்டுடுவேன்” கட்டளையை கொடுத்து புகைப்படத்திற்கு ஆதி நேராக திரும்பிவிட்டான்.
இந்த பரபரப்பிலும் தான் உண்டேனா என்று பார்த்துக்கொண்டே இருக்கும் நண்பனை பார்த்த உதய்க்கு தன்னுடைய தாயே தன் அருகில் நின்றது போன்ற எண்ணம் தோன்ற இமை தட்டாது கண்கள் குளமாகி இருந்த நிலையில் நண்பனை பார்த்து நின்ற உதய்யின் நிலையை அப்படியே புகைப்பட கருவி தன்னுள் அழகாய் பதித்துக்கொண்டது.
ஆசை, பேராசை, பொறாமை, க்ரோதம் என சக மனிதர்களுக்குள், உறவுகளுக்குள் இருப்பது போல் அல்லாமல் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியை அந்த நொடி அனுபவித்தது வாழ வேண்டும் என்பதை எந்நேரமும் உணர்த்தும் நட்பு பொக்கிஷம் என்றால், மன வேறுபாடு, துன்பங்கள், துரோகங்களை தாண்டி ஒற்றுமையின் பெயரில் அனைவர் கண்ணையும் தன் மேல் பதித்து நிற்கும் இந்த ஐவரின் நட்பில் எந்த நாளும் எவரின் தீய பார்வையும் படாமல் இதே சிரிப்போடும் எதிர்பார்ப்பில்லாத பாசத்தோடும் இவர்கள் நட்பு எந்நாளும் வளர்ந்துகொண்டே செல்லட்டும்...
முற்றும்...


PS: கதை முடிஞ்சது இனியாவது சைலன்ட் ரீடர்ஸ் கமெண்ட் சொல்லலாமே...

















































































































 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
மான் குட்டி போற 🤩ஆதி கௌதம் தமிழ் விடுங்க அவனா 😂😂ஆதவா ஆதி சொல்லுற கேளு ஈஸ்வரன் நிரஜ் விடுறு இல்லனா உதய் கோவா பட போற😬
ஆதவா ஆதி உன்னோட love green single குடுத்துடன் சஹானா பாக்க போலாம்😻😻
மணி சிகிரமா கார்ல ஏறு அவன் ஒரு பிடிவாதகரான் 🙊பீச் லா romance நல்ல இருக்கு ❤️❤️சந்தோசமா இருக்கணும்🥳
உதய் நல்ல இருக்கான்🤗🤗
சஹானா நடந்துட சூப்பர்😊
ராகு அப்பா இப்பதான் அவரு பண்ண தப்பா சரி பன்றரு 👬இதோ உதய் யாழின் கல்யாணத்தகு சம்மதம் சொல்லி பேசி இருக்கிறது💫💫
ஆதி மணி கூட கல்யாணம் ✨✨என்னது குடும்பமா தர்ண போராட்டமா மாமா ok சொல்லிட்டாரு😹😹
தமிழ் கௌதம் கூட கல்யாணம் ஒவர் போல😻😻
ஆதவன் சஹானா கல்யாணம்🥳🥳
தமிழ் கௌதம் ஹரி விஷ்ணு நீங்க பண்ற சேட்டை அளவு இல்லாம போகுது 🤣🤣ஆதி நீ அதுகும் மேல time la change பண்ணி சிரிப்பா அடக்க முடியல😂😂 அதுவும் இல்லாம ஹரி love failure பெனியோல் ஆயோ 🤭🤭உதய் கிட்ட ஆடி தான் ஒழுக door open பண்றது surrenderதான்😅😂 4 பேரும் உண்மை உதய் கிட்ட தெரியும் ஒலாருதுக 😜😜உதய் ஆதவா நோ ஷாக் பிட்டு படம் முடியல சிரிப்பா அடக்க மாப்பிள்ளை இங்க இருக்கான் கல்யாணத்துக்கு வர முடியல 🤪🤪டான்ஸ் பிளான் வேற😝 சாரி லூசு தான் எல்லாம் டேய் 🥴🥴எல்லாம் இந்த ஆதி கேசவன் பண்ண சேட்டை தான் உதய் warning kuduthudan ஒழுக போங்க ஸ்டேஜ்⭐⭐
அடுத்து dinning table கூட ஆதி மணி romance💞💞
உதய் யாழினி romance room la💕💕
ஆதவன் சஹானா ஸ்டேஜ் லா romance💓💓
Gowtham நல்ல கிண்டல் பண்ணற😹
விஷ்ணு ஹரி ஆதி டான்ஸ் பிட் போடுற deal வேற bike ya super🙊🙈
ஆதவன் சஹானா கல்யாணம் முடித்தது✨✨🥳🥳🥳
ஃபோட்டோ ஜோடி ஜோடியா👩‍❤️‍💋‍👨📸📸
Family ஃபோட்டோ 📸இப்படி எல்லாரும் ஓன்ன பாக்க சந்தோசமா இருக்கு🌠🌠😍😍
Atlast finally ஃப்ரெண்ட்ஸ் ஃபோட்டோ📸 ஆமா நீங்க பஞ்ச பாண்டவர்கள் தான்🎊🎊 டேய் உங்க wife எல்லாருக்கும் பொறாமை ,நல்ல பேசட்டும்😾 ஃபோட்டோ ரொம்ப ரொம்ப அழகா வரும் 🙈🙈உங்களுக்கு அவுங்க சொன்ன ஏதுவும் கேக்கல அப்படிதான ஆமா 😌😌இந்த frame குள்ள எந்த விஷ ஜந்து allow பண்ண கூடாது😛😛
இப்படி எல்லாரும் ஒருத்தர் ஒருத்தர் makeup பண்ணி விடுற அழகு அழகுதான் 🥰🥰இப்போ கூட ஆதிக்கு உதய் சாப்பிடல தெரியுது உண்மையா அவன் உதய்க்கு ஒரு அம்மா தான் 👬அதுமாரி தான் உதய் ஆதிக்கு மட்டும் இல்ல அவன் family frds எல்லாருக்கும் ஒரு அம்மா👨‍❤️‍💋‍👨
என்ன கோவம் சண்டை இருத்தாலும் இந்த ஐந்து பேரும் ஒருத்தர்க்கு ஒன்னுன வந்து நீன்னாகளா அது தனா நட்பு😎😎😇
சரி ஃபோட்டோ📸 smile please ☺️பாக்க பாக்க ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு😉 இந்த பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் 🔥இப்படி அழகா போஸ் குடுகுறங்க🔥 ஒருதான் ஒரு ஒரு விதமாக அன்பா கட்டுன ஐந்து ஜீவன்களின் நட்பு நண்பன் என்று வார்தை லா சொன்ன போதாது வாழந்து காட்டனும் 🥺🥺💥💥
பொறாமை சண்டை கோவம் அன்பு இது எல்லாம் கலந்த கலவை தான் நட்பு 💥💥அதுக்கு இங்கு இருக்கும் இந்த ஐந்து
நண்பர்கர்கள் தான் சாட்சி😙💖💖😙 வாழ்நாள் முழுவதும் ஃப்ரெண்ட்ஸ் தோளோடு தோல்🤝💪👨‍❤️‍👨 குடுத்து எல்லாருமே பாத்து ஆசந்து போகணும் உங்க நட்பு பாத்து நல்ல இருங்க இந்த சந்தோசம் என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் 🥰😚
First time நான் உங்க ஸ்டோரி read பண்ணான் செம்ம ஸ்டோரி கண்டிப்பா நான் இந்த ஃப்ரெண்ட்ஸ் மிஸ் பண்ணுவேன்❣️❣️🥺🥺
Next story ஓட சிக்கிரமா வாங்க அக்கா👌👌👍👍
 
Last edited:
Messages
37
Reaction score
4
Points
8
மான் குட்டி போற 🤩ஆதி கௌதம் தமிழ் விடுங்க அவனா 😂😂ஆதவா ஆதி சொல்லுற கேளு ஈஸ்வரன் நிரஜ் விடுறு இல்லனா உதய் கோவா பட போற😬
ஆதவா ஆதி உன்னோட love green single குடுத்துடன் சஹானா பாக்க போலாம்😻😻
மணி சிகிரமா கார்ல ஏறு அவன் ஒரு பிடிவாதகரான் 🙊பீச் லா romance நல்ல இருக்கு ❤️❤️சந்தோசமா இருக்கணும்🥳
உதய் நல்ல இருக்கான்🤗🤗
சஹானா நடந்துட சூப்பர்😊
ராகு அப்பா இப்பதான் அவரு பண்ண தப்பா சரி பன்றரு 👬இதோ உதய் யாழின் கல்யாணத்தகு சம்மதம் சொல்லி பேசி இருக்கிறது💫💫
ஆதி மணி கூட கல்யாணம் ✨✨என்னது குடும்பமா தர்ண போராட்டமா மாமா ok சொல்லிட்டாரு😹😹
தமிழ் கௌதம் கூட கல்யாணம் ஒவர் போல😻😻
ஆதவன் சஹானா கல்யாணம்🥳🥳
தமிழ் கௌதம் ஹரி விஷ்ணு நீங்க பண்ற சேட்டை அளவு இல்லாம போகுது 🤣🤣ஆதி நீ அதுகும் மேல time la change பண்ணி சிரிப்பா அடக்க முடியல😂😂 அதுவும் இல்லாம ஹரி love failure பெனியோல் ஆயோ 🤭🤭உதய் கிட்ட ஆடி தான் ஒழுக door open பண்றது surrenderதான்😅😂 4 பேரும் உண்மை உதய் கிட்ட தெரியும் ஒலாருதுக 😜😜உதய் ஆதவா நோ ஷாக் பிட்டு படம் முடியல சிரிப்பா அடக்க மாப்பிள்ளை இங்க இருக்கான் கல்யாணத்துக்கு வர முடியல 🤪🤪டான்ஸ் பிளான் வேற😝 சாரி லூசு தான் எல்லாம் டேய் 🥴🥴எல்லாம் இந்த ஆதி கேசவன் பண்ண சேட்டை தான் உதய் warning kuduthudan ஒழுக போங்க ஸ்டேஜ்⭐⭐
அடுத்து dinning table கூட ஆதி மணி romance💞💞
உதய் யாழினி romance room la💕💕
ஆதவன் சஹானா ஸ்டேஜ் லா romance💓💓
Gowtham நல்ல கிண்டல் பண்ணற😹
விஷ்ணு ஹரி ஆதி டான்ஸ் பிட் போடுற deal வேற bike ya super🙊🙈
ஆதவன் சஹானா கல்யாணம் முடித்தது✨✨🥳🥳🥳
ஃபோட்டோ ஜோடி ஜோடியா👩‍❤️‍💋‍👨📸📸
Family ஃபோட்டோ 📸இப்படி எல்லாரும் ஓன்ன பாக்க சந்தோசமா இருக்கு🌠🌠😍😍
Atlast finally ஃப்ரெண்ட்ஸ் ஃபோட்டோ📸 ஆமா நீங்க பஞ்ச பாண்டவர்கள் தான்🎊🎊 டேய் உங்க wife எல்லாருக்கும் பொறாமை பேசடும்😾 ஃபோட்டோ ரொம்ப ரொம்ப அழகா வரும் 🙈🙈உங்களுக்கு அவுங்க சொன்ன அதுவும் கேக்கல அப்படிதான ஆமா 😌😌இந்த frame குள்ள எந்த விஷ ஜந்து allow பண்ண கூடாது😛😛
இப்படி எல்லாரும் ஒருத்தர் ஒருத்தர் makeup பண்ணி விடுற அழகு அழகுதான் 🥰🥰இப்போ கூட ஆதிக்கு உதய் சாப்பிடல தெரியுது உண்மையா அவன் உதய்க்கு ஒரு அம்மா தான் 👬அதுமாரி தான் உதய் ஆதிக்கு மட்டும் இல்ல அவன் family frds எல்லாருக்கும் ஒரு அம்மா👨‍❤️‍💋‍👨
என்ன கோவம் சண்டை இருத்தலும் இந்த ஐந்து பேரும் ஒருத்தர்க்கு ஒன்னுன வந்து நீன்னாகளா அது தனா நட்பு😎😎😇
சரி ஃபோட்டோ📸 smile please ☺️பாக்க பாக்க ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு😉 இந்த பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் 🔥இப்படி அழகா போஸ் குடுகுறங்க🔥 ஒரு ஒரு விதமாக அன்பா கட்டுன ஜீவன்கள் நட்பு நண்பன் என்று வார்தை லா சொன்ன போதாது வாழந்து காட்டனும் 🥺🥺💥💥
பொறாமை சண்டை கோவம் அன்பு இது எல்லாம் கலைந்த கலவை தான் நட்பு 💥💥அதுக்கு இங்கு இருக்கும் இந்த ஐந்து
நண்பர்கர்கள் தான் சாட்சி😙💖💖😙 வாழ்நாள் முழுவதும் ஃப்ரெண்ட்ஸ் தோளோடு தோல்🤝💪👨‍❤️‍👨 குடுத்து எல்லாருமே பாத்து ஆசந்து போகணும் உங்க நட்பு பாத்து நல்ல இருங்க இந்த சந்தோசம் என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் 🥰😚
First time நான் உங்க ஸ்டோரி read பண்ணான் செம்ம ஸ்டோரி கண்டிப்பா நான் இந்த ஃப்ரெண்ட்ஸ் மிஸ் பண்ணுவேன்❣️❣️🥺🥺
Next story ஓட சிக்கிரமா வாங்க அக்கா👌👌👍👍
romba romba thank you sis 😍 constant ah enaku support panni comment potute irukinga. thank u soo much. ithu ennoda fav story. ennoda matha stories elam amazon la iruku or other site la iruku.


ithu ennoda group link or akila ravi novels nu search panunga you can find my group. thank u so much once again❤️😍💐
 
New member
Messages
1
Reaction score
0
Points
1
I really loved this story dear author. This is really really amazing. eppudi ippudi yosikkiringandu theriyala. May God bless you to have more success in the future. Thank you for this wonderful masterpiece. rommmbe alaha kazaya kondu poninge sis. ellarde characteristics um elllorde importance um rommbe alaha sollapattikizu. good luck dr author
 
Top