- Messages
- 1,042
- Reaction score
- 2,986
- Points
- 113
chap - 3
"அண்ணா... ப்ச்... சொல்றதக் கேளு, தேவ இல்லாத வேலையபப் பாக்குற" பல்லவி நடுங்கிக் கொண்டே சுற்றும் முற்றும் எவரேனும் உதவிக்கு வர மாட்டார்களா என்ற ஏக்கத்தோடுப் பார்த்தாள். ஆனால் ஒருவரையும் காணவில்லை.
"அட..! இரு மா பயப்படாத நான் பாத்துக்குறேன்" நெஞ்சை நிமிர்த்திப் பேசியது வீர தீர விஷ்ணு தான்.
"அண்ணா ப்ளீஸ் வா இப்ப கூட ஒன்னும் இல்ல ஓடிறலாம்" - பல்லவி
எவ்வளவு கெஞ்சினாலும் கண்டுக்கொள்ளாமல் தான் எடுத்த காரியத்தில் கண்ணாய் இருந்தான் விஷ்ணு. வேறு வழி இல்லாமல் திவ்யாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியபடியே சகோதரனை இயலாமையுடன் மீண்டும் கெஞ்சினாள் பல்லவி.
சகோதரனின் அறைக்குள் நுழைந்து கார் சாவியினை திருடவே இந்த வேலை.
"கொஞ்ச நேரம் பேசாம மட்டும் இரு. ஐஞ்சே அஞ்சு நிமிஷம் தான். சாவி அய்யா கைல தான் இருக்கு"
அவன் உள் நுழைத்து 4 வது சாவியை முயற்சி செய்ய அதுவும் திறக்க மறுக்க, 'ப்ச்' எரிச்சலோடு அடுத்த சாவியை நுழைத்தவன் பின்னால் இருந்து ஒரு குத்து விழுந்தது.
"டேய் முட்டா பயலே ஏண்டா இங்க திருடிட்டு இருக்க?"
ஹரி ஹஸ்கி குரலில் கேட்க, "அவன் கார் கீய ஒளிச்சு வச்சிருக்கான் டா அதான் எடுக்க போறேன், உன் பைக் கீ வேணுமா?" - என்றான் விஷ்ணு
"அஹ்ஹ்... அப்டியே கல்லாச் சாவியும் எடு" ஹரி கேலியாக கூற,
பல்லை காமித்து, "ஹ்ம்ம் .. இதுவும் நல்லா இருக்கே" என பதிலளித்த விஷ்ணுவை அடித்து துவைக்கும் வேகம் ஹரிக்கு.
"நீ ரொம்ப ஓவரா பண்ற மாட்டுனோம் செத்தோம் டா" - ஹரி
ஹரி எச்சரிக்கை எல்லாம் காதில் கேட்டால் தானே விஷ்ணுவிற்கு, "ஒழுங்கா என் கார் சாவிய குடுத்திருந்தா நான் ஏன் இப்டி திருடன் மாறி போகப் போறேன்? இல்ல ஒரு அண்ணனா நடந்துருந்தா நான் உரிமையோடு உள்ள போயிருப்பேன்"
விஷ்ணுவிற்கு சகோதரன், சகோதரனாக நடக்கவில்லை என்பது வருத்தம் இல்லை, கோவம், "புடிக்கலைனா நீ கிளம்பு" என்றான் முறைப்போடு.
"பல்லவி நீ கிளம்பு நான் சாவியோட வரேன், போறப்ப இந்த தொடை நடுங்கியயும் கூட்டிட்டு போ" தன்னை முறைத்த ஹரியை கண்டுக்கொள்ளவே இல்லை.
அடுத்தச் சாவி உள்ளேச் சென்று கதவை 'க்ளிக்' திறந்து விட்டது. வெற்றிக் களிப்பில் அறைக்குள்ளே சென்றவன் ஒவ்வொரு இடமாகத் தேட ஆரம்பித்தான்.
எங்கும் பைலை மட்டுமே காட்டியது அந்த அறை. தாடையை தடவியபடி, 'ஒரு வேலை ஸ்டடி ரூம்ல வச்சிருப்பானோ' என்று நினைத்து திரும்பியவன் வெளியே செல்ல எத்தனிக்கும்போது, வேகமாக உதய் மாதவன் உள்ளே நுழைவதை பார்த்துத் திடுக்கிட்டான்.
உள்ளே இருப்பவனை கண்டதும் யோசனையுடன் 'என்ன' என்று புருவத்தை உயர்த்தி கேட்ட தமையனைப் பார்க்க கை நடுங்கியது விஷ்ணுவுக்கு.
"அதுது.. வந்து சாந்த் கன்ஸ்டிரக்ஷன்ஸ் ஃபைலை எடுக்க வந்தேன்" ஒரு நிமிடம் விஷ்ணுவை உதய்யின் பார்வை அளந்தது.
'ஐயையோ கண்டு புடிச்சிருவானோ' தம்பியின் நெற்றியில் வேர்வை வடிவதை உணர்ந்து, உதய் ஏ.சி ஆன் செய்து விட்டு, "கதவ பூட்டு" என்றதும் 'சரி' என்று கூட தலையை அசைக்க வில்லை வேகமாக சென்று கதவை பூட்டியவன், மீண்டும் பூனை போல் வந்து அதே இடத்தில நின்றான் விஷ்ணு.
பைலை தேடியவாறே, "எதுக்கு இப்ப அது?" என்று கேட்க, "இல்ல ரெபரன்ஸ்க்கு தேவ படுது" என்றான் விஷ்ணு.
'அண்ணா' என்று அவன் உதய்யை அழைத்து ஆண்டுகள் ஆகியது ஆனாலும் அதை ஓரம் கட்டி உதய் அந்த ஃபைலுடன் இரண்டு சாவிகளை வைத்தான்.
சாவியை பார்த்த விஷ்ணு கொஞ்சம் ஆடிப் போனான். அது ஹரி விஷ்ணு இருவரின் இரு சக்கர வாகன சாவிகள். விழிகள் விரிய சகோதரனை பார்க்க அவனோ கை கடிகாரத்தை கழட்டிவிட்டு டையை கழட்டி கொண்டு இருந்தான், கண் சிமிட்டி பார்த்த விஷ்ணு 'இது கனவு இல்லையே' என்று பார்க்க.
"என்ன?" என்று உதய் குரல் கேட்டு நினைவிற்கு வந்தவன், 'ஒன்னும் இல்லை' என்பது போல் தலையை ஆட்டி கதவை திறந்தான்.
"இனி யாரோட சாவியும் என்கிட்ட இருக்காது, இப்டி திருட்டு சாவி போட்டு உள்ள வர தேவ இல்லை. உங்க லைப் நல்லா இருக்கணும்னு நெனச்சு பண்ணேன். ஆனா உங்களுக்கு புடிக்கல, என்னமோ பண்ணுங்க எனக்கு வேலைல ஒழுக்கம் இருக்கனும் அவ்ளோதான். லைப்ல நீ என்னமோ ஆனா எனக்கு என்ன?" தான் வழக்கமாக கூறும் உணர்ச்சியற்ற தொனியில் கூறினான் உதய்.
சாவியை மறைத்து வைத்த பொழுது அது அக்கறையாக படாமல் கொடுமையாக பட்டது, அதுவே சாவியை கொடுத்து ஏதோ செய்துகொள் என கோவத்தோடு உதய் கொடுப்பது அதை விட கொடுமையாக பட்டது இளையவனுக்கு.
என்றும் வராத கோபம் இன்று வந்தது விஷ்ணுவிற்கு 'நீ என்னமோ ஆனா எனக்கு என்ன?' என்பதை கேட்டு 'ஒரு முறை கூட சகோதரன் என்கின்ற உரிமையில் என்னைத் தண்டிக்க மாட்டாயா? ஒரு பணியாள் போல தான் என்னை பார்ப்பாயா?' என்ற கோவம்.
"ஆமா உனக்கு என்ன வர போகுது, உனக்கு எப்பயும் காசு, உங்க பிஸ்னஸ், பதவி தான முக்கியம், இந்த வீட்டுல இருக்கவன் எப்படி போனா உனக்கு என்ன வர போகுது? மிலிட்டரி ஆஃபீசர் மாறி இருந்தா திருட்டு தனமா தான் உள்ள வர முடியும். அப்பறம் நான் ஒன்னும் ஆபீஸ்ல ஃபிராடு வேலை பாக்கல ஒழுங்கா இருன்னு சொல்றதுக்கு" விறு விறுவென வெளியே சென்றவன் கோவத்தில் உதய்யின் அறையிலே பைலை கீழே ஏறிந்துச் சென்றான்.
விஷ்ணு சென்றப் பாதையை பார்த்து கண்களை சுருகியவன் ஒரு பெருமூச்சுடன் தலையை குலுக்கி விட்டு உடை மாற்றும் அறைக்கு சென்றுவிட்டான்.
'என்ன கூறுவது அவனிடம்?' தன்மேலும் தவறு உள்ளது என்று உணர்ந்து இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை உதய். ஆனால் ஒரு பக்கம் ஒரு சிறு புன்னகை வந்தது, சகோதரன் கோவத்திற்கு ஏனும் தன்னுடன் உரிமையாய் பேசுகிறான் என்று.
மற்றொரு பக்கம் ஏனோ இந்த ஆடம்பர வாழ்க்கையே விரும்புபவன் என்று கூறும் பொழுது அனைத்து உணர்ச்சிகளையும் தூக்கி எரிந்து அவனை அணைத்து, 'உங்க பாசம் தர்ற சந்தோசத்தை எதுனாலயும் தர முடியாது. பாசத்தை தருவியாடா? உரிமையை தருவியா விஷ்ணு?' என்று கேட்க தோன்றியது.
ஆனாலும் தன்னுள் இருக்கும் அந்த தான் என்ற வார்த்தை அவனை மீண்டும் மனதிற்கு இன்னொரு வேலி போட வைத்தது,
"இனிமேல் நீயா வந்து அண்ணான்னு உரிமைல பேசுனா மட்டும் தான் இந்த உதய் மாதவன் உன் அண்ணன் ஆவான், அது வரைக்கு நான் வெறும் உதய் மாதவன் தான் " உறுதி எடுத்தான் தனக்குள்.
காலைப் பொழுது பனி மூட்டங்களின் நடுவில் மின்னும் பச்சை இளம் தளிரைப் போல் அந்த மார்கழி மாத குளிரில் ஒரு சிறு சூரிய கதிர் அந்த விடியலுக்கு அழகை சேர்த்தது. கொஞ்சி கொஞ்சி விளையாடும் அந்த குயில்களின் அழகை ரசித்தவாறு தன் வீட்டுத் தோட்டத்தில் நடையை மேற்கொண்டவன், அந்த சூரிய கதிர்கள் பட்டு உருகும் புற்களின் மேல் இருக்கும் சிறு துளி நீரையும் தன் வெறும் காலினால் ரசிக்கத் தான் செய்தான்.
"என்ன பா உதய் ஞாயிற்று கிழமைலயும் இவளோ வேகமா ஏன் எந்திரிச்ச?" கேட்டது அவன் சித்தப்பா.
ஒரு எதார்த்தப் பார்வைப் பார்த்து, "குட் மார்னிங் சித்தப்பா, பழக்கம் ஆகிடுச்சு நானே தூங்கணும்-னு நெனச்சா கூட தூங்க முடியல"
தோளில் அன்பாக தட்டியவர், "உன்ன நெனச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குப்பா, இந்த வயசுல எவ்வளோ பக்குவம், நிதானம்.."
யாருடையப் போற்றுதலையும் கேட்க பிடிக்காது உதய்க்கு, "சித்தப்பா சித்தி உங்கள கூப்புடுறாங்கனு நினைக்கிறேன் " என்று உண்மையை கூறுபவன் போல கூற அவர் நம்பி விட்டார்,
"அப்படியா அப்ப உடனே போகணும், இல்லனா இன்னைக்கு எனக்கு பூஜ நடந்துரும்" சிரித்து விட்டுச் சென்றார் மனைவியாய் எண்ணிப் பயந்து.
அவரின் சிரிப்பு தொற்றிக்கொள்ள உதயும் சிரித்தவாறே தலை அசைத்து வழி அனுப்பிவைத்தான்.
அவனை நோக்கி வந்த மற்றொரு உருவத்தைக் கண்டு , 'கருமம் புடிச்சவன் ' பொங்கி வந்தச் சிரிப்பை அடக்கியவாறேத் திரும்பினான் உதய்.
இன்னும் உலர்த்தாத தலை முடியைக் கோதியபடி நடந்து வந்த ஆதவனின் முகத்திலோ எரிச்சல் ஏக போகமாகப் படர்ந்து இருந்தது, "என்ன டா காலைல மூஞ்சிய இவ்ளோ அழகா வச்சிருக்க" கிண்டலாக கேட்டான் உதய்.
"தம்பி இது உங்களுக்கு காலைலயா? எனக்கு இது மிட்னயிட் டா. உனக்குலாம் ப்ரண்டா இருந்தா இப்படி தான் இருக்கும், எதுக்கு டா எங்க அம்மாகிட்ட போன் பண்ணி சொன்ன? அது என்னமோ நான் எக்ஸாம் எழுத போற மாதிரி டான்னு அஞ்சரைக்கு எழுப்பி விட்ருச்சு, உங்க வீட்டுக்கு ஐயர் கூட இன்னும் வரல அதுக்குள்ள என்ன எழுப்பி விட்டுட்டாங்க", தூக்க கலக்கத்தில் புலம்பியவனை சாந்தப்படுத்தி கையைப் பிடித்து வாசல் நோக்கி இழுத்துச் சென்றான்.
"சரிடா கோவப்படாத வா அப்டியே ஒரு சின்ன வாக் போலாம்"
"எது இந்த பனில?" ஆமாம் என்று தலையை ஆட்டிய உதய்யை பார்த்து முறைத்து, "போடா லூசுப் பயலே" என்று வீட்டை நோக்கி உள்ளே சென்றான் ஆதவன்.
"சித்தி.. என்ன சமையல்?" நேராக சமையல் அறைக்குள் சென்ற ஆதவன் அங்கே இருந்த ஒரு வடையை எடுத்து வாயில் வைத்தான்.
கையில் கரண்டியால் ஒரு அடி விழுந்தது, "சாமிக்கு வைக்கிறதுக்கு முன்னாடி சாப்பிடக்கூடாது" என்று அதட்டியவர் மீண்டும் தன் வேலையை தொடர ஆரம்பித்தார்.
"குழந்தையும் தெய்வமும் ஒன்னு தான, எனக்கு குடுங்க. 6 மணிக்கு வந்துருக்க பையனுக்கு ஒரு வடை கூட இல்லையா" என்று உரிமையாக கூறி எடுத்து உண்ண ஆரம்பித்தவனை அதற்கு மேல் எதுவும் கூற இயலவில்லை அவரால், "மாடு மாறி வளந்துட்டு குழந்தையாம் குழந்தை" காதை திருகிவிட்டு வேலையில் மும்முரம் காட்ட தொடங்கினார்.
"ஏன் சித்தி என்னமோ எல்லா வேலையும் நீங்களே பாக்குற மாறி சீன் போடுறீங்க வேலை ஆளுங்களும் ஹெல்ப் பண்ணாங்க தான?"
பரிசாக ஒரு கொட்டு வாங்கியவன் அதனை துடைத்து விட்டான், "ஏன் பேச மாட்ட காலைல 4 மணில இருந்து வேலை செஞ்சிட்டே இருக்கேன் தனியா, நம்ம பூஜைக்கு நாமளே பண்ணாத் தான் மனசுக்கு திருப்தியா இருக்கும்"
"நீங்க ரெண்டு பெத்து போட்டுருக்கீகங்கல்ல அதுகள எழுப்பி விட வேண்டியது தான. தனியா வேலை பாக்கணும்-னு என்ன அவசியம்?"
செல்லமாக அவன் கையில் அடித்தவர், "புள்ளைங்கள அப்படி சொல்லாத டா, பாவம் நைட் முழுக்க படிச்சிருப்பாங்க"
"எது அதுக படிச்சிருக்குகளா?" என்று புருவம் தூக்கி இழுத்தவனுக்கு, ஆமாம் என்று தலையை ஆட்டி பதில் கொடுத்தார்.
ஒரு சிறிய தட்டில் ஆவி பறக்க பொங்கலை குடுத்தார், "அந்த 2 சாத்தானும் படிக்கிதுங்கனு நீங்க மட்டும் தான் நம்பனும், ரெண்டும் சரியான ஃபிராடு சித்தி என்ன என்ன சேட்டை எல்லாம் பண்ணுதுங்கனு தெரியாது உங்களுக்கு"
ஆச்சிரியத்துடன் வேலையாய் நிறுத்தி ஆதவனின் பக்கம் திரும்பியவர், "என்னடா சொல்ற பிள்ளைகளை பத்தி, என் பிள்ளைங்க அப்படி எல்லாம் பண்ணாதுங்க" ஆணித்தரமான நம்பிக்கையோடு வாதாடினார்.
"ம்க்கும் ..உங்க பொண்ணு திவ்யா இருக்காளே, அவளுக்கு கேம் மேல ஆர்வம் அதிகம்" என்று தொடங்கியவனை "ஆனா அவ அப்பா சொன்னால இப்பலாம் அந்த பக்கமே போறது இல்ல காலேஜ் முடிஞ்ச ஒடனே வீட்டுக்கு தான் நேரா வருவா" என்றார் பெருமையுடன்.
காரணம் திவ்யாவின் தந்தை அவள் கல்லூரி சென்ற பிறகு விளையாட்டிற்கு தடை போட்டார். எத்தனை முறை வாதாடியும் பலன் இல்லை.
"கிழிச்சா, இப்பயும் விளையாட தான் செய்றா, டெய்லி புட்பால் கிரௌண்ட்க்கு போகாம வீட்டுக்கு வர மாட்டா"
"போடா பொய் சொல்ற" என்றவரை முறைத்தவன் கையை சப்பி முடித்து அவர் தலை மேல் கையை நீட்டினான், "என்னடா பண்ற" என்று முழித்தவர், "சத்தியம் பண்றேன் உங்க மேல" என்றான்.
இவனை நம்புவதா இல்லை நம்பாமல் இருப்பதா என்று தெரியவில்லை அவருக்கு.
"எப்படி சொல்ற" என்றார் சந்தேகத்துடன் .
"அவ ஸூ ல 2 நாள் முன்னாடி மழை பெஞ்ச சகதி அப்டியே ஒட்டி இருக்கு, அதுவும் இல்லாம அவளுக்கு எங்க ஆச்சு அடி பட்டு பிளாஸ்டர் போட்டிருப்பாளே" என டிடெக்ட்டிவ் போல் சுட்டிக்காட்டியவனை ஆச்சிரியதோடு வாயை பிளந்து தலையை ஆடியவர்.
'எப்படி' என்பது போல் பார்த்தார்.
"சாக்ஸ்ல ரத்தக் கறை இருந்துச்சு" காலனியை கழற்றிய அந்த 2 நொடியில் இவை அனைத்தையும் நோட்டம் விட்டுருந்தான் ஆதவன்.
"அப்புறம் உங்க சின்ன பொண்ணு பல்லவி, சரியான மக்கு மாடு எல்லா எக்ஸாம்லயும் கோட்டை விட்ருச்சு, தெரியுமா?"
'இல்லை' என்று பாவமாக தலையை ஆட்டினார் நளினி.
"அது மட்டும் இல்ல சரியான பஜாரி அவளோட ப்ரோபஸர் ஒருத்தர போன வாரம் பாத்தேன் அப்ப சொன்னாரு ஏதோ ஒரு பொண்ணுகூட சரியான சண்டையாம், நான் கூட விஷ்ணுவோட அவ காலேஜ் பக்கம் போய் பாத்தேன், ஏதாச்சும் பிரச்னையா இருந்துருக்கும்".
சிறிது இடைவெளி விட்டு மெதுவாக அவர் காதில் மட்டும் கேக்குமாறு , "பாத்து வச்சுக்கோங்க ஏதாச்சு பையன் மேட்டரா இருக்க போகுது... ரெண்டு பொண்ணுங்க சண்டை போட்டாவே அதுவா தான் இருக்கும். பையன் மோசமானவன்னு வேற கேள்வி பட்டேன்" அடுக்கு அடுக்காக அவர் தலையில் குண்டை தன்னால் முடிந்த வரை இறக்கினான் ஆதவன்.
"சரி சித்தி நான் போய் உதய் கூட இருக்கேன்" ஒன்றும் நடவாதது போல் அமைதியாக நண்பன் அறைக்கு சென்றான்.
"என்னடா வந்த வேலை எல்லாம் முடிச்சிட போல" அமைதியான குரலில் உதய் கேட்டான், "சிறப்பா முடிஞ்சது" சந்தோசமாக மெத்தையில் சாய்ந்தான் ஆதவன், சின்னஞ் சிறுசுங்களை இப்படி சிக்கலில் மாட்டி விடுவதில் இவனுக்கு அவ்வளவு ஆனந்தம்.
தலைகீழாக தெரிந்த உதய்யின் முகத்தில் இருந்த அந்த சிறு உழற்றல் ஆதவனை புருவம் உயர்த்த வைத்தது.
"எதுவும் பிரச்னையா?" என்று கேட்டவாறே அமர்ந்தான்.
'இல்லை' என்று தலையை ஆட்டி மீண்டும் அறையை சுத்தம் செய்வதிலே குறியாய் இருந்தான் உதய், "உண்மைய சொல்லுடா" சற்று உயர்ந்தது ஆதவனின் குரல்.
ஆணித்தரமாக கூறலாம் இது தொழில் சார்த்த வருத்தம் இல்லை என்று. தொழிலில் என்ன நடந்தாலும் அசராமல் நின்று விளையாடுவதில் உதய் வல்லவன் அல்லவா... ஆகையால் தொழிலை பற்றிய கவலையே அவனிடம் தென்படாது.
"விஷ்ணு நேத்து பேசுனான், என்ன என்னமோ காசு, பதவி அப்டி இப்டினு. ஒன்னு மட்டும் புரிஞ்சது என் அம்மா போனப்பயே நானும் இந்த வீட்டை விட்டு போய்ட்டேனு"
கூறி வலியை மறைத்து புன்முறுவலித்தவனை பார்த்து, "நான் வேணா அவன் கிட்டப் பேசிப் பாக்கவா?" ஆதவன் நண்பன் முகம் பார்த்தான்.
"யார்கிட்ட விஷ்ணுகிட்டயா?"
"இல்ல..." என்று இழுத்தவனை எரிக்கும் பார்வை விட்டான் உதய், "கீழ போ" என்று ஆணை இட்டு குளிக்க சென்றான் அனைத்தையும் சிந்தனையில் இருந்து தூக்கி எறிந்து.
குளித்து முடித்து கீழே வந்த பொழுது குடும்பம் அனைவரும் காத்திருக்க . ஓம குண்டத்தின் அருகில் அமர்ந்து இருந்தது அவன் சித்தப்பா சித்தி தான். சகோதரர்கள் சகோதரிகள் பக்தியுடன் வாய் திறவாமல் ஓம குண்டத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தனர்.
ஆதவனின் அருகில் சென்று நின்றவன், "எதுக்கு இது?" என்று கேட்டான் ஹரி.
"உன் தங்கச்சி பல்லவி ஓடி போக கூடாதுனு" பல்லவியின் காதில் கேட்கும்படியே கூறினான் ஆதவன்.
உதய் அவன் அருகில் இருப்பதைய் உணர்ந்தவள், "ஐயோ அண்ணா என்ன இப்படி பேசுறீங்க?" என பதற்றதுடன் வினவினாள் .
"அப்ப உண்மைய சொல்லு எதுக்கு அந்த பிள்ளை கூட சண்டை போட்ட?"
"அது வேற விஷயம். சத்தியமா நான் லவ் பண்ணல" பயந்து பயந்து பேசியவளின் கண்கள் உதய்யின் மீது பட்டுப் பட்டு மீண்டது, "லூசு மாதிரி ஏதாச்சு பேசாதீங்க அப்றம் படிக்கவே வீட்டுல விட மாட்டாங்க" என்று கெஞ்சினாள் சகோதரனுக்கு கேட்கும் படியே.
"டேய் உன் தங்கச்சி என்னமோ பிளான் பண்ணிட்டா டா பாத்து இரு" என்று எச்சரித்தான்.
ஆதவன் கூறினால் அதில் அர்த்தம் கண்டிப்பாக இருக்கும் என்று வீட்டில் உள்ள அனைவரும் நம்புவார்கள் என்று உணர்ந்தவள் நடுக்கத்துடன் உதய்யை பார்க்க அவனோ அந்த பேச்சை சலிப்புடன் உதறினான்.
"ப்ப்ப்ச்ச்ச்ச்..." என்று கூறி கண்டு கொள்ளாமல் நின்றவனை பார்க்க ஆச்சிரியமாக இருந்தது பல்லவிக்கு.
ஏனோ, அவனின் இந்த உதாசீனம் அவளை வருத்தியது. கோவமாக ஒரு பார்வை பார்த்தல் கூட ஒன்றும் தெரிந்து இருக்காது ஆனால் அவன் மௌனம் பிடிக்கவில்லை அவளுக்கு.
"அண்ணா நான் யாரையும் லவ் பண்ணல"
தன்னிடம் தான் பேசுகிறாள் என்று உறுதி படுத்தி கொண்டு, "என்கிட்ட ஏன்மா சொல்ற உன் அண்ணனுக 2 பேர் இருக்காங்கள அவங்ககிட்ட சொல்லு" என்று கூறி விட்டு வேறு இடத்திற்கு சென்று நின்று விட்டான் அவளின் பார்வை தன் மீது தொடர்ந்து வருகிறது என்பதை உணர்ந்து.
"அண்ணா ஏன் என்கிட்ட அப்டி பேசுச்சு?" என்று சிணுங்கி கொண்டே கேட்டவளிடம், "நீ பண்ண வேளைக்கு அப்படி தான் பண்ணனும், நானா இருந்தேன் பொடனிலயே நாலு போடு போட்ருப்பேன்" என்று பின் தலையில் ஒரு அடி போட்ட ஆதவனிடம், " வலிக்கிது" என்றவளுக்கு மேலும் ஒரு அடி பரிசாக கிடைத்தது.
"எதுக்கு அவளை அடிக்கிறீங்க?" எகிறிக்கொண்டு வந்தான் விஷ்ணு, பின்னாலே ஹரி.
"இதுக்கு மட்டும் கூட்டமா வாங்கடா"
"அப்றம் வராம, அம்மாகிட்ட என்ன சொன்னீங்க பல்லவியை பத்தி?" ஹரி கேட்டான்.
"உண்மையச் சொன்னேன்"
"ப்ச்.." மூவரும் ஆதவனை காண்டுடன் பார்க்க.
"ஓகே .. மங்கமாவா மாறிட்டு இருக்குற இவளை இன்ஜினியரிங் படிக்க வச்சத்துக்கு பஞ்சாயத்துப்
பண்ண அனுப்பியிருக்கலாம் னு சொன்னேன், ஏன் எதுவும் பிரச்னையா?" ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான்.
(தொடர்ந்து கீழே படிக்க)