• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 13 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
chap - 13


வேர்க்க விறுவிறுக்க மருத்துவமனை வாயிலை அடைந்த ஆதவன் அங்கிருந்த ரிசப்ஷன் ஏரியாவில் ஆதியின் அறை எண்ணை கேட்டு ஓடினான் அறையை நெருங்கி இருந்த நேரம் கண்ணில் பட்ட ஜெயனை பார்த்து அதிர்ந்து சிலையாய் உறைந்தான்...

ஆதவனை பார்த்த ஜெயன், "மார்னிங் சார்" அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது...

"உதய்?"

"ம்ம்ம் இங்க தான் சார் இருக்காரு"

தலையில் கை வைத்துச் சிறிது நேரம் யோசித்தவன் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்ற அசட்டுத் தைரியத்துடன் முன்னேறினான்... ஐ.சி.யூ என்றச் சிகப்பு நிற எழுத்துக்களுடன் ஒரு சிகப்பு நிற சிறிய பல்பு எரிந்துக் கொண்டிருந்த அறைக்கு சற்று தள்ளி போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் தலையைக் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தான் உதய்...

அவனிடமிருந்துப் பார்வையை விளக்கி அங்கே நின்றுக் கொண்டிருந்த தமிழ் மற்றும் கௌதமை பார்த்து முறைத்தவன் அவர்களிடம் சென்று, "ஐ.சி.யூ ல இருக்க அளவு என்னடா பிரச்னை?"

"ஒன்னுமே புரியலடா எங்களுக்கு...ஒரு சின்ன வெட்டுதாண்டா..." கெளதம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அமைதியாக அமர்ந்திருந்த உதய் கோவத்தில் அமர்ந்திருந்த நாற்காலியை வீசி எறிந்தான், அந்தத் தளமே அதிரும் வகையில்...

நேராக வந்தவன் கௌதமின் கழுத்தை பற்றி அருகில் இருந்த சுவற்றில் தள்ளினான் கண்களில் கோவத்தை மட்டுமே டன் டன்னாய் சேமித்து...

"சின்ன வெட்டா? சின்ன வெட்டுக்காடா இப்புடி ஐ.சி.யூ ல உயிருக்குப் போராடிட்டு இருக்கான்... அங்க தான இருந்திங்க ரெண்டு தடி மாடுகளும் இல்ல வேற புடுங்குற வேலைய எதுவும் பாத்துட்டு இருந்திங்களா?

அவன் மேல கை வச்ச அடுத்த செகண்ட் அவனை துண்டு துண்டா வெட்டி கடல்ல வீசிட்டு வர்றத விட்டுட்டு இங்க நின்னு ஒன்னும் புரியலன்னு கதை அளந்துட்டு இருக்க... இதுக்காக தான் அவனை உங்க கூட விட்டுட்டு போனேன்னா? அவனுக்கு மட்டும் எதாவது ஒன்னு ஆகட்டும் அடுத்த நிமிஷம் ஒடம்புல உயிர் இருக்காது உனக்கு"

"மச்சான்" கௌதமின் தழுதழுத்த குரலில் சற்று நிதானம் திரும்பியவன் அவன் கழுத்தில் இருந்த கையை சற்று விலக்கினான்...

உதய்யின் பிடி தளர்ந்தவுடன் கெளதம் சிறிதும் யோசிக்கவில்லை உதய்யை கட்டி அணைத்து தான் அடக்கிய கண்ணீரை உதய்யின் தோள்களில் இறக்கிவைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக...

நெடு நாட்கள் கழிந்து நண்பனின் நட்பில் மூழ்கிய உதய்யோ கோவத்தை கட்டுப்படுத்த இயலாமலும் நண்பனை விளக்க இயலாமலும் தூணாய் நின்றான்

கௌதமின் அழுகை மட்டுப்படுத்தும் உதய், "என்ன ஆச்சு?"

"தமிழ் காலேஜ்ல தாண்டா பிரச்னை ஆரமிச்சது அவன் ஸ்டுடென்ட் ஒரு பொண்ண ஒரு பையன் தப்பா நடந்துக்க ட்ரை பன்னிருக்கான் அத எதேச்சையா தமிழ் பாத்து அவன் மேல் கம்பிலைன் குடுத்துருக்கான் அது பெரிய பிரச்சனை ஆகி போலீஸ் கம்ப்லைன் வரைக்கும் போய்டுச்சு.

அந்த பையனோட அப்பா இவனை ஆள் வச்சு தூக்க ட்ரை பன்னிருக்காரு. அப்ப தான் இவன் ஆதிக்கு போன் பண்ணி வர சொல்லிருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் போனோம்... அங்க இருந்த எல்லாரையும் ஆதி அடிச்சிட்டாண்டா ஆனா திடீர்னு தான் ஒருத்தன் வந்து வெட்டுனான் பின்னாடியே அந்த மினிஸ்டரும் கூட ரெண்டு பேரும் இருந்தாங்க..."

மினிஸ்டர் என்ற வார்த்தையை கேட்டதும் உதய் போதுமென சைகை செய்து ஐ.சி.யூ-வின் வாயிலில் நின்றான் தீவிர சிந்தனையில்...

சரியாக உள்ளிருந்து ஒரு மருத்துவர் வர உதய்யை பார்த்து அதிர்ந்தாலும், "பேஷன்ட் உங்களுக்கு என்ன ரிலேஷன் சார்?"

"இப்ப எப்டி இருக்கான்?"

அவன் குரலில் கடுமையும் கோவமும் வழிந்தோடியது அதை உணர்த்த மருத்துவர், "ஹி ஐஸ் ஆல்ரைட் நொவ்... அறிவால் வெட்டுனால பெருசா எந்த ப்ராப்லம் இல்ல பட் அந்த அரிவாள்ல விஷம் தடவி வெட்டிருக்காங்க. அது தான் கொஞ்சம் கிரிட்டிக்கல் கண்டிஷன் பட் நொவ் ஹி ஐஸ் அவுட் ஆப் டேஞ்ஜர் நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்"

"தேங்க்ஸ்"

சிறிய தலை அசைப்புடன் அவர் சென்றதும் ஆதவனிடம், "பாத்துகோ" என்று நகரப்போனவனை நிறுத்தினான் ஆதவன், "இருந்து பாத்துட்டு போடா" சிறிது யோசித்து சரி என தலை அசைத்து ஒரு ஓரமாக சென்று நின்றுவிட்டான்...

அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆதியை ஒரு ஸ்ட்ரெச்சர்-ல் வைத்து இழுத்து வந்தனர் அவனை பார்த்ததும் ஒரு அடி நகராமல் அவனை ஆழ்ந்து கவனித்தான் உதய், நெற்றியில் சிறியக் காயம், கையில் அங்கங்குச் சிறிய ப்லாஸ்டர்ஸ், கைகளில் ட்ரிப்ஸ் ஏறும் ஊசியென படுத்து கிடந்தவனை நேராக பார்க்க மனம் ரணமாக வலித்தது...

ஒரு நிமிடம் ஒரு இடத்தில நிற்காதவன் இவ்வாறுப் படுத்துக் கிடப்பது மேலும் மேலும் உதய்க்கு வலியை கொடுக்க அவனை தாண்டி செல்ல இருந்த ஸ்ட்ரெச்சரை நிறுத்தியவன் மத்தளமாய் அடித்த இதயத்தின் ஓசையை நிராகரித்து ஆதியின் இடதுக் கையை மெலிதாகப் பற்றினான், எப்பொழுதும் போலே இன்றும் 'எல்லாம் சரி ஆகிடும்' என்று அவன் கைகளில் இருந்து வரும் அழுத்தத்திற்கு ஏங்கியபடி...

"உனக்கு ஒன்னுனா மட்டும் அல்லுவிடுதுடா, வந்துருடா என்கிட்டே வேகமா..."

ஆதியிடம் இருந்து வலுக்கட்டாயமாக கையை மீட்டெடுத்தவன் அதற்குமேல் அங்கே நில்லாது அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்...

உதய் சென்றதைப் பார்த்த ஆதவனுக்குத் தெரிந்தது அவனுடைய மன ஓட்டத்தைப் பற்றி. கோவத்தில் இருக்கும் உதய்யை சமாளிப்பது எளிது ஆனால் வருத்தத்தில் இருப்பவனைக் கணிப்பதே மிகவும் கடினம்.

அதுவும், தன்னுடைய உயிராய் நினைப்பவனை இந்த நிலையில் பார்த்தப் பின் அவனுடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றெண்ணியப் போதே அந்த மினிஸ்டர் மீது பரிதாபம் பிறந்தது ஆதவனுக்கு...

"நீ வீட்டுக்கு கெளம்பு நாங்க பாத்துக்குறோம்" எங்கோ பார்த்து தமிழ் ஆதவனிடம் கூறினான்...

"வாத்தி இங்க யாரும் உங்கள பாக்க காத்துக்கிடக்கலை... மூடிட்டு போய் ஓரமா நின்னு" சீற்றமாய் ஆதவன்

"ஏண்டா அவன்ட எப்படி பேசுற கம்முனு இரேண்டா" சலிப்பாய் கெளதம் தமிழிடம் கெஞ்சினான், "இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்ணவன்கிட்ட இப்டியா பேசுவ நீ? இன்னும் ஸ்கூல் பையன் மாதிரி சண்டை போடாதிங்கடா ஏற்கனவே இருக்க பிரச்சனைல இவனுக வேற"

"ஆமா ஸ்கூல் அப்ப கூட இவனுக்கு கொஞ்சம் அறிவு இருந்ததுடா இப்ப பாரு ஞாயிற்று கிழமை ஒரு கிறுக்கன் கூப்பிட்டு வேலை இருக்குன்னு சொன்ன ஒடனே அறிவே இல்லாம கெளம்பிருக்கான்... உனக்கு பொண்ணு குடுக்குறேன்னு சொன்ன அந்த இளிச்சவாயன நான் பாத்தே ஆகணுமே?"

"அதெல்லாம் உனக்கு காட்ட முடியாது போடா" - தமிழ்

"ஏண்டா உனக்கு கல்யாணம்னு தெரிஞ்ச எனக்கு உன் மாமனாரை தெரிஞ்சுக்க எவ்ளோ நேரம் ஆகா போகுது" - ஆதவன்

"இந்த ஆதி கிறுக்கன் சொன்னானா?" கோவமாய் ஆதவனை பார்த்து கேட்டான் தமிழ்

"அவன் எங்கடா பேசுனான்... ஆமா கெளதம் உனக்கும் கல்யாணம்னு கேள்வி பட்டேன்" - ஆதவன்

ஒரு நக்கல் அந்தக் கேள்வியில்... திரு திருவென முழித்த கெளதம் தமிழைப் பார்த்து ஒரு வெட்கத்துடன், "ஆமாடா ஆனா இன்னும் எங்கேஜ்மெண்ட் ஆகல"

"இவனை மாதிரி இல்லாம நீயாவது சொல்லுடா" - ஆதவன்

"அவன் எங்களுக்கே சொல்லல" - கெளதம்

"டேய் ஓவரா பேசுறீங்க நான் கெளம்புறேன்" என்று சென்றவனை இழுத்து புடித்த ஆதவன் அவன் கழுத்தில் கை போட்டு அணை கட்டி தன்னுடைய அலைபேசி எடுத்து ஏதோச் செய்ய அவனிமிருந்து தமிழ்த் திமிர முற்பட்ட, "ஏண்டா இப்புடி மொறபொண்ணு மாதிரி நெளியுற"

"ஏய் சீசீ கை எடு நாயே" - தமிழ்

"கம்முன்னு இருடா என் இசுக்கு... பிரியாணி ஸ்விக்கில ஆர்டர் பண்ணப் போறேன் புது மாப்பிள்ளைங்க காசு குடுத்துருங்க அட்வான்ஸ் ட்ரீட்-னு வச்சுக்கலாம்" - ஆதவன்

"இன்னும் இத நீங்க விடலையாடா... இவ்ளோ சம்பாதிக்கிறல்ல சொந்த காசு போட்டு வாங்குடா" - தமிழ்

"அவன் தருவான் நீ ஆர்டர் போடு எனக்கு அப்புடியே ஒரு மட்டன் சாப்ஸ், க்ரில்டு சிக்கன். முழு கோழி மறந்துராத" - கெளதம்

தமிழ் இருவரையும் கேவலமாக ஒரு பார்வை பார்த்து, "உள்ள ஒருத்தன் உயிருக்குப் போராடிட்டு இருக்கான் நீங்க என்னடா பிரியாணி, சுக்கான்னு சாப்புடுறீங்க"

"அவன் தான் சரி ஆகிட்டான்ல? அப்றம் என்ன வா சட்டுபுட்டுன்னு சாப்டுட்டு நர்ஸ்ஸ சைட் அடிக்கலாம்... பிரைவேட் ஹாஸ்பிடல்ல நர்ஸ் எல்லாம் டக்கரா இருக்கும்... இப்ப ஆதியை கூட்டிட்டு போன நர்ஸ் ஒன்னு செம்மையா இருந்துச்சு "

'இவன் திருந்த போறது இல்ல' என்று நினைத்த தமிழ் தனது வெக்கத்தை விட்டு, "சரி எனக்கு டிராகன் சிக்கன் சொல்லு ஒரு தடியன் அடிச்ச அடில பல்லு ஒரு பக்கம் வலிக்கிது சாப்ட்டா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்" மெல்ல மெல்ல தங்களையே மறந்து இன்பத்தில் திளைக்க ஆரமித்தனர் மூவரும்...

ஆதியின் அறையில் அமர்ந்து பிரியாணியை ஒரு புடி புடித்து கொண்டிருந்தனர் மூவரும் (ஆதவன், தமிழ், கெளதம்) அமைதியாக... சட்டென கதவுத் திறந்த சத்தம் கேட்டு திரும்ப அங்குக் கண்களில் கோவத்தை அடக்கி மூவரையும் பார்த்து நின்றான் உதய்...

இலையையும் மறைக்க இயலாது கையையும் மறைக்க இயலாது அசடு வழிந்த புன்னகையோடு உதய்யை பார்த்து சிரித்தான் ஆதவன், தமிழோ இறுதியாய் கையை சப்பி உன்ன ஆசையில் மாறி மாறி உதய்யையும் தனது விரல்களையும் பார்த்து இறுதியில் கையில் இருந்த பிரியாணியை சப்பி சாப்பிட ஆரமித்தான்...

இவை அனைத்திற்கும் ஒரு படி மேலே சென்ற கெளதம், "உனக்கு ஒரு பார்சல் சேத்து தாண்டா வாங்கி வச்சிருக்கோம் முறைக்காத"

பல்லை கடித்து தலையை ஆட்டியவன், "அஞ்சு நிமிஷம் தான் டைம் இந்த இடம் சுத்தமா இருக்கனும் இல்லனா கைய ஒடச்சு இவனுக்கு பக்கத்துல மூணு பெட் போட சொல்லிடுவேன்"

"டேய் அவன் மூக்கு பக்கத்துல போய் இந்த பிரியாணியை வை அண்டர்டேக்கர் மாதிரி எந்திரிச்சு ஒக்காந்துருவான்" என்று அவன் முன் பிரிக்காத ஒரு பொட்டணத்தை நீட்டினான் தமிழ்...

உதய் முறைத்த முறையில் அமைதியாய் இடத்தை மூவரும் சுத்தம் செய்துக் கிளம்ப ஒருப் பார்சல் மட்டும் அதே இடத்தில இருந்தது அதைப் பார்த்தவன் அடக்கப்பட்டச் சிரிப்புடன் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த ஆதியை பெரும் அமைதியோடுக் கவனித்து நின்றான்...

தமிழ் கூறியது போலப் பிரியாணியின் மனம் நாசியைத் துளைக்க எழுவானோ என்றச் சந்தேகத்தில் அந்த பார்ஸலை பிரித்து அவன் மூக்கிற்கு அருகில் வைத்துப் பொறுமையாய் காத்தான்... ஆனால் சிறு அசைவும் இன்றிப் படுத்திருந்த ஆதியை இந்த நிலையில் காண இயலாது வந்த வழியேச் சென்றான் தனது உயிரின் பாதியை அந்த அறையிலே விட்டு...

***********************

"பா என்னப்பா பண்ணி வச்சிருக்க? நான் அந்த ப்ரோப்பஸர எதுவும் பண்ணாதிங்கன்னு சொன்னேன்ல எதுக்கு தேவை இல்லாம ஆள வச்சி அடிச்சிருக்கீங்க... நானே அந்த பொண்ணுகிட்ட தப்ப நடந்துக்க முயற்சி பண்ணிட்டேன்னு டெய்லி பீல் பண்ணிட்டு இருக்கேன் நீ இதுல பிரச்சனைய பெருசாக்கிட்டு இருக்க"

"என்னடா பொட்டச்சி மேல ஆசை வந்துடுச்சோ?" அமைச்சர் மகனை கனல் பார்வை வீசினார்.

"அசிங்கமா பேசத்தப்பா நான் அந்த பொண்ணுக்கு பண்ண நெனச்ச தப்புக்கு அவ அழுதது தான் கண்ணு முன்னாடி ஒவ்வொரு தடவையும் வந்து வந்து போகுது இதுல நீ என் மனசுல பாரத்த ஏத்திட்டே போற" - அமைச்சரின் மகன் அவருக்கும் சற்றும் அசராது பதில் அளித்தான்...

"இங்க பாரு எனக்கு தேவை என் பேரு மட்டும் தான்... நீ ஒருத்திய கைய புடிச்சு இலுப்ப அத ஒருத்தன் பாத்து உன் மேல கேஸ் போட்ருக்கான்... எதிர் கட்சி காரனுக்கும் மீடியாக்கும் தெரிஞ்சது ஊதி ஊதி அடுத்த எலக்க்ஷன்-ல எனக்கு சீட் கிடைக்காம பண்ணிடுவாங்க"

"பா எப்ப பாத்தாலயும் கட்சி, காசு மட்டும் தான் உனக்கு முக்கியமா?"

"இதுல என்னடா சந்தேகம்?"

அவர் பேச்சை கேட்டு அவர் மேல் இருந்த கொஞ்ச பாசமும் காற்றில் கரைய கண்டான் அவர் புதல்வன், "அப்ப எதுக்கு நீ சம்மந்தமே இல்லாம வேற ஒருத்தன வெட்டுன?"

விஷமமாய் சிரித்தவர், "அது பிஸ்னஸ்டா இவனை கை வச்சா என்னோட பரம எதிரி உதய் மாதவன் மேல கை வச்ச மாதிரி... நீ பொறந்ததுல இருந்து உன்னால எனக்கு கிடைச்ச ஒரே நல்ல விசியம் இது தான்"

அவர்கள் உரையாடலைத் தடுத்து நிறுத்தினான் மினிஸ்டரின் பி.எ, "சார் நம்ம பேக்டரி-ல ஏதோ லேபர் பிரச்னை பன்னுரங்களாம் நாம ஒடனே போகணும்"

"சரி வண்டி எடு" என்றவர் தன் மகனிடம் திரும்பி, "அந்தப் பொட்டச்சிப் பின்னாடி நீ சுத்துனன்னுக் கேள்விப் பட்டேன் அவளோடக் குடும்பமே இருக்காது" குண்டை அவன் தலையில் அமைதியாக இறக்கிச் சென்றார்...

பேக்டரி வந்தவுடன் அந்த இடத்தைக் கண்களில் ஆராய்ந்தவர் அதன் அமைதியைப் பார்த்துக் கடுமையானக் கோபத்துடன் தன்னுடைய அலுவலக அறையை அடைய அங்கு அவருக்கு காத்து நின்றான் அந்த பேக்டரி மேனேஜர், "என்னையா இவனுங்களுக்கு பிரச்னை எப்ப பாரு இவனுங்களுக்கு சம்பளத்தை கூடிட்டே இருக்க முடியுமா"

"சார் இந்த தடவை சம்பளம் பிரச்சனை இல்ல ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கிற இடத்துல மீத்தேன், co2 லீக் ஆகுறனால..."

"யோவ் நிறுத்து பிரச்னை என்ன அத மட்டும் சொல்லு"

"மெஷின் ரிப்பேர் சார் மூணு மாசமா சொல்லிட்டே இருக்கு ஆனா இன்னும் எதுவும் பண்ணல"

"சரி அந்த மெஷின் மாத்த சொல்றேன்"

"சார், நீங்க ஒரு தடவ அத பாத்துட்டா லேபர்ஸ் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க"

சலிப்புடன், "சரி வந்து தொள"

"பர்ஸ்ட் ஃப்லோர்-ல இருக்க ரூம் தான் சார் நீங்க போங்க நான் லேபர் ஹெட்ட கூட்டிட்டு வர்றேன்"

"சீக்கிரம் வாயா எனக்கு ஆயிரம் வேலை இருக்கு" என்றவர் முதல் தளத்திற்கு சென்றார்.

வேலை நிறுத்தம் காரணமாக அங்கு ஒருவரும் இல்லாமல் அந்த தலமே வெறிச்சோடி இருந்தது... அங்கிருந்த அறையில் நுழைந்து அங்கிருந்த இயந்திரங்களை ஆராய்ந்து நின்ற பொழுது ஏதோ கைகள் அரிப்பது போன்ற எண்ணம் தோன்றவும் அவ்விடத்தை விட்டு வெளியேற நினைத்தவர் கதவினை திறக்க அதை திறக்க இயலவில்லை...

சுற்றி பார்க்க அங்கு ஒருவரும் கண்ணில் தென்படவில்லை நொடிகள் கழிய கழிய மூச்சு விட சிரமப்படுவது போல் இருந்தது...

அந்த நேரம் அவருடைய எண்ணிற்கு ஒரு அழைப்பு, உதய் மாதவன்...

அந்த பெயரை பார்த்த நொடி நடுங்கியக் கைகளுடன் அதை எடுத்தார், "ஹலோ"

"என்ன மினிஸ்டரு எ.சி காத்துல இருக்க போல குரல்ல ஒரே புத்துணர்ச்சி தெரியிது" அவ்வ்ளவு இளக்காரம் அவன் குரலில் வழிந்தோடியது

"டேய்..."

"ஷ்ஷ்ஷ்... ரொம்ப பேசுனா ரெத்தம் கக்கி செத்துடுவ மங்குனி அமைச்சரே... அதுவும் இல்லாம நீ பேச கூடாது. இப்ப நான் மட்டும் தான் பேசணும்... என்னைக்கு நீ என்ன பழி வாங்குறேன்னு என் ஆதி மேல கை வச்சியோ அப்பயே உன் சாவு என் கைல தான்னு முடிவாகிடுச்சு... அவனை அணைக்கிறதும் நானா தான் இருப்பேன் அடிக்கிறதும் நானா மட்டும் தான் இருப்பேன். நடுவுல எவன் வந்தாலும் அவனுக்கு இதே நிலைமை தான்"

அவனுக்கு பதில் கூற கூட முடியாத நிலையில் அவர் விழி பிதுங்கி நின்றார், கைகளில் இருந்த கைபேசி தரையில் விழுந்து சுக்குநூறாக சிதறியது... நிலைமையை மோசமாக்க செவிமடலில் இருந்து வழிந்தோடிய குருதி அந்த பளீர் வெள்ளை சட்டையில் ஓடியது...

**********************

'மீன்வளத்துறை அமைச்சர் திரு. குமரன் நெடுஞ்செழியன் சென்னையில் உள்ள அவரின் காட்டன் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவின் காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நேரில் சென்று அவருடைய இறுதி சடங்கில்...'

"என்னங்க இவரை நம்ம வீட்டுல கூட ஒரு தடவ சந்திச்சிருக்கேன்ல?" நளினி, ஹரியின் தாயார் தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தவர் தன் கணவனிடம் சந்தேகத்துடன் கேட்டார்...

"ஆமாமா இவரு கூட கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கு, அரசியல்வாதின்னு நல்லா காமிப்பாரு செட்டில்மென்ட் ஒழுங்கா வராது, ஆளுங்க அனுப்பி மெரட்டுவாரு அதான் உதய் ஒரு தடவத் தட்டி வச்சான் அதுல இருந்து நம்மப் பக்கமே வர்றது இல்ல" முகத்தில் புன்னகைப் பூத்தது மகனைப் பற்றிய நினைவில்...

"நீங்க போக போறிங்களா?"

"அண்ணாவும் நானும் போயிடு வர்றோம் பெரிய இடம்ல"

"சரி சாப்புட வாங்க, மாமாவையும் கூட்டிட்டு வாங்க" அந்த குரலில் சிறு ஏமாற்றம் கலந்த கோவம் இருந்தது, 'இவ கூப்புடுற தொனியே சரி இல்லையே...'

"ம்ம்ம் கூட்டிட்டு வர்றேன்மா" என்றவர் தன் சகோதரரை அழைக்கச் சென்றார்...

அதே நேரம் தன்னுடைய அறையில் இருந்து விஷ்ணுக் குறுக்கும் நெடுக்கும் ஹரியின் அறைக்கு மாறி மாறி நடந்துக்கொண்டே இருந்தான், கதவுத் திறந்திருந்தாலும் உள்ளேச் செல்லாமல் ஒவ்வொரு முறையும் ஹரி என்னச் செய்கின்றான் என்று எட்டிப் பார்ப்பானேத் தவிர உள்ளேச் செல்ல முயற்சிக்க வில்லை...

குட்டி போட்ட பூனைப் போல் தினமும் அறையின் வாசலில் வந்து நிற்பவன் மேல் சிறிதும் இரக்கம் தோன்றவில்லை மாறாக கோவம் அதிகரிக்கவேச் செய்தது, இருவரும் நேருக்கு நேர் பேசி இரண்டு வாரங்கள்க்கு மேல் ஆகியது...

தனது இருப்பைக் காட்டிக்கொள்ள காலை அழுத்தி அழுத்தி நடந்தவனை பார்த்தும் பார்க்காததுமாய் இல்லாத சட்டைச் சுருக்கத்தை அழுத்தி அழுத்தித் தேய்த்து நின்றான் ஹரி...

பொறுத்துப் பார்த்தவன் இனி முடியாதென உணர்ந்து வெக்கத்தை விட்டு ஹரியின் அறைக்கு சென்றான்... விஷ்ணுவைப் பார்த்தும் சிறிது அசையாதுத் தன
து சட்டையை டக்-இன் செய்தவன் அவனிடம் சிறிதும் கவனம் செலுத்தாதுத் தன்னுடைய வேலையிலே குறியாய் இருந்தான்...

"டேய் சாவடிக்காத ஏற்கனவே மண்டை சூடா இருக்குது இதுல நீ வேற சூடேத்தாத" - விஷ்ணு
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
"ஏண்டா நீ எப்ப பாத்தாலும் அடுப்புல ஒக்காந்த மாதிரி சூடா இருப்ப அதுக்கு நான் என்ன பண்றது?" - ஹரி

"ஆமா எனக்கு வேற வேலை இல்ல அடுப்புல போய் ஒக்காந்துக்குறதுக்கு... நீ எதுக்குடா இப்புடி திருடன் மாதிரி என்கிட்ட இருந்து பயந்து பயந்து ஓடுற" - விஷ்ணு

"ஓ உன்ன பாத்து பயப்புடுறேன்னு வேற உனக்கு எண்ணம் இருக்குதா? சாரி நான் ஒதுங்கி போறேன்... ஓடல" - ஹரி

"நீ பயப்புடாத சூர புலி தான், என்னத்துக்கு ஒதுங்கி போறன்னு சொல்லு ஒடனே மாமாவை நடுல இழுக்காத பிரச்னை உனக்கும் எனக்கும் தான்" - விஷ்ணு

"உன் மாமாவை சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் வளரலையே... நீ கருப்பு சட்டை போட்ருக்க, நான் வெள்ளை சொக்கா போட்ருக்கேன் அதான் உன்ன பாத்து ஒரு பத்து அடி தள்ளியே நிக்கிறேன் போதுமா விளக்கம் வழி விடு" என்ற ஹரியின் பாதையில் குறுக்கிட்டு நின்றான் விஷ்ணு.

"ஏதாவது சொல்லணும்னு சொல்லாத. ஒழுங்கா பதில் சொல்லு" விடாப்பிடியாக நின்றான் விஷ்ணு... எத்தனை நாட்கள் அவனது ஒதுக்கத்தை தாங்குவது? வாழ்க்கையே வெறுமை அடைந்த உணர்வு

"இது என்னடா வம்பா போச்சு நீ காரணம் கேட்டா நான் சொல்றேன்... இல்ல உண்மைய தெரிஞ்சு என்ன பண்ண போற? என் பேச்சை எல்லாம் கேக்குற அளவுக்கு நான் என்ன உனக்கு வேண்டப்பட்டவனா என்ன?"

"அன்னைக்கு பேசுனத இன்னுமா நீ நியாபகம் வச்சிருக்க அது ஏதோ கோவத்துல பேசிட்டேண்டா. இந்த உலகத்துல உன்ன விட வேற யாருக்கு என் மேல அதிக உரிமை இருக்க போகுது?"

"நான் ஒன்னும் ஏசுவோ புத்தரோ இல்ல. இது தான உனக்கு வேணும் உன் இஷ்டத்துக்கு இருக்கது? போ உன்ன கேக்க நாதி இல்ல. அம்மா என்ன சொன்னாலும் உனக்கு நான் சப்போர்ட் பண்றேன்" ஹரி வேகமாய் அந்த அவன் அறையை விட்டு கீழே இறங்கி சமயல் அறைக்கு சென்றான்...

நளினி தோசையைக் கடைமைக்காக ஊற்றி எடுக்க ஒரு தோசை பலப் பாகங்களாக வந்தது அதை எவற்றையும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அதைப் போலவே ஊற்றியவரைப் பார்த்து, "என்னமா தோசை சுட மறந்துப் போச்சா?"

"மறக்கல ஆனா இப்புடி தான் ஊத்துவேன் இஷ்டம் இருந்த சாப்பிடுங்க இல்லனா எல்லாரும் போங்க"

'நல்ல மூட்ல இருப்பாங்க போலயே' என்று அருகில் வைக்கப்பட்டிருந்தப் பாத்திரங்களை பார்க்க எதிலும் எந்த ஒரு குழம்போ, சட்னியோ இல்லை

"என்னமா சட்னி டேபிள்ல போய் வச்சாச்சா?"

"இன்னைக்கு வெறும் இட்லி பொடி தான்"

"சரி விஷ்ணுக்கு நான் சட்னி போடுறேன்"

"போட்ட கைய ஒடச்சிடுவேன்" என்றார் நளினிக் கோபத்துடன்...

"இங்க பாருங்க இந்த வீட்டுல யாருக்கு வேணும்னாலும் நீங்க எது வேணாலும் சொல்லிக்கோங்க, அவனை நான் சொல்ற வரைக்கும் ஒரு வார்த்தை சொன்னிங்க அப்றம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" இது வரை ஹரியின் முகத்தில் அவ்வளவு கோவத்தை அவர் பார்த்ததே இல்லை...

"ஹரி என்ன ஆச்சு? ஏதாச்சும் சண்டையா ரெண்டு பேரக்குள்ள இருவது நாளா சரியாய் பேசுறதே இல்ல நீங்க ரெண்டு பெரும் சரி வேலை டென்ஷன்னு நெனச்சேன் பெரிய பிரச்னையாடா உதய்க்கிட்ட எதுவும் இவன் தான் சொன்னானா? அவனை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா பிள்ளை மூஞ்சியே கொஞ்ச நாளா சரி இல்ல" கண்களில் நீர் ஓரமாய் சுரக்க ஆரமித்தது அவருக்கு...

"அதெல்லாம் சொல்ல விரும்பல மா, நான் சொல்றதச் செய்ங்க அவனை ஒரு வார்த்தைக் கூட நீங்கத் திட்டாதீங்க நான் பாத்துக்குறேன்... அவனுக்கு ரெண்டு சட்னி போடுங்க... அவனுக்கு மட்டும். தண்டனையை எங்களுக்கு குடுங்க"

சரி என்றவர் அவனுக்கும் மட்டும் வேக வேகமாக இரண்டு சட்னி போட்டு நன்றாக மூன்று தோசையை அவனுக்காக தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்தார்...

"ஆமா எதுக்கு இந்த தண்டனை?"

"அதெல்லாம் உனக்கு சொல்லணும்ன்னு அவசியம் இல்ல" முகத்தை ஒரு வெட்டு வெட்டி சென்ற தாயை ஆச்சிரியமாகப் பார்த்து நின்றான் ஹரி.

அனைவரும் உணவு மேஜையில் அமர, சுருங்கிய முகத்துடன் வந்தமர்ந்த விஷ்ணுவை பார்த்த நளினிக்கு மனம் சுணங்கியது...

முதலில் விஷ்ணுவிற்குத் தோசையும், இரண்டுச் சட்னியும் வைத்தவர் பின் மற்றவர்களுக்கு குதறி இருந்த தோசையை இறுக்கமான முகத்துடன் வைக்க அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இட்லிப் பொடியை வைத்தவர் அதில் நாலெண்ணையை ஊற்றி ஒரு இருக்கையில் அமர்ந்தார்... அவரையே மொத்த குடும்பமும் பார்த்து நிற்க...

ஜெய நந்தன் மனைவியிடம், "என்னமா சட்னி ஊத்த மறந்துட்டியா?"

"இல்லையே இன்னைக்கு வெறும் இட்லி பொடி தான்" வெறுமையாக கூறினார்...

"ஏன்மா?" ரகுவரன்

"தினம் தினம் ருசியா சாப்பிட்டு நமக்கு என்ன மாமா கிடைச்சிடுச்சு?"

'ஆஹா ஏதோ பிளானோட தான் இருக்கா' மனதில் ஜெய நந்தன்...

மறு புறம் விஷ்ணு பேய் அறைந்தது போல் அமர்ந்திருந்தான்... 'ஒரு வேலை பசில நமக்கு மட்டும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னியா தெரியுதோ'

"இவ்ளோ சம்பாதிக்கிறது இந்த மூணு வேளை சாப்பாட்டுக்காக தானேம்மா அதுல என்னமா?" - ரகுவரன்

"என்ன ருசியா சாப்பிட்டாலும் சந்தோசம் இல்லையே மாமா"

"இப்ப உனக்கு என்ன இங்க கொறச்சல்?" ஜெய நந்தன் பொறுமையை இழந்து கேட்டார் மனைவியிடம்...

"ஆமா என்ன சந்தோசம் இல்ல? அது என்ன இவனுக்கு மட்டும் ஸ்பெஷல் ரெண்டுச் சட்னி?" பல்லவி விஷ்ணுவைப் பார்த்துப் பொறாமையாய் கேட்டாள்...

"பல்லவி உனக்கு வச்சதை மட்டும் சாப்புடு மத்தவங்க தட்ட பாக்காத" ஹரி விஷ்ணுவிடம் திரும்பி, "நீ சாப்புடு டா இங்க உன்ன யாரும் எதுவும் சொல்ல நா விட மாட்டேன்" குலைய குலைய பேசினாலும் அவன் கூறியதன் பொருள் விஷ்ணுவிற்கு மட்டுமே புரிந்தது... ஆனால் 'மத்தவங்க' என்று ஹரி கூறிய வார்த்தை நெஞ்சில் முள்ளாய் குத்தியது விஷ்ணுவிற்கு...

"நீ சாப்புடுப்பா அவங்க சொல்றத எல்லாம் கேக்காத நீ என்ன பண்ணாலும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" என்ற நளினி, "எனக்கு என்ன கொறச்சல் இங்க? வீட்டுல நல்ல சாப்பாடு, கேட்டது ஒடனே ஒடனே கெடச்சிடும், புடிச்சத விட அதிகமா துணி, நகை எல்லாமே இருக்கு... அத விட எனக்குன்னு ஒன்னுனா நிமிசத்துல பத்து பேர் சுத்தி வந்து நிப்பிங்க"

"இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு?" - ஜெய நந்தன்

"எனக்கு என் புள்ள வேணும்ங்க" தட்டை மட்டுமேப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவரின் கண்களில் நீர் தாரைத் தாரையாய் ஓடியது...

"என்னடா அம்மா நமக்கு தெரியாம இன்னொரு புள்ளைய பெத்துக்குடங்களோ" திவ்யா ஹரியின் காதில் கேட்க அதே சந்தேகத்தோடு தங்கையை பார்த்து பல்லை காட்டியவன், "நானும் அத தான் நெனச்சேன்... தளபதி படம் மாதிரி வீடு முன்னாடி வந்து கத்த போறான் பாரு"

"உன் பசங்க எல்லாம் கூடயே தான மா இருக்காங்க" ரகுநந்தன் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தார்...

"ஏன் மாமா அக்கா போனதுக்கு அப்றம் நீங்க மாறிட்டீங்க, அதுக்காக உங்க பையனையுமா மறக்கணும்?"

"அதுக்கு தான் நீ இருக்கியேமா இவனை உன்ன விட வேற யாரால நல்ல பாத்துக்க முடியும்"

"உங்க பசங்கன்னு சொன்னப்ப உதய் உங்க நியாபகத்துலயே வரலையா? விஷ்ணு மட்டும் தான் வந்தானா?" நளினி கேட்ட கேள்வியில் வாயடைத்து அமர்ந்திருந்தார் ரகுநந்தன்...

"அப்ப உங்களுக்கு அவன் நியாபகம் வரல..." என்றவர் தன் கண்ணீரைத் துடைத்து,

"இருவது நாள் ஆச்சு அவன் வீட்டுக்கு வந்து ஆனா இப்ப வரைக்கும் ஒருத்தர் கூட அவனை பத்தி கேக்கல... ஆனா அவன் வீட்டுல இருக்க ஒவ்வொருத்தர பத்தியும் ஆணி வேர் வரைக்கும் தெரிஞ்சு வச்சிருப்பான், காலைல எழுந்திருக்கிறதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும்... அவன் இப்டியே போய்டுவானோனு பயமா இருக்கு மாமா... அக்கா இருந்திருந்தா அவன் இப்புடி இருந்துருப்பானா?"

நளினி தனது இருக்கையில் இருந்து விஷ்ணு அருகில் வந்து, "என்னப்பா இன்னும் சாப்புடாம இருக்குற... நான் இவங்க எல்லாரையும் தான்பா திட்டுனேன் உன்ன எதுவும் சொல்ல மாட்டேன் நீ தாராளமா நிம்மதியா சாப்புடு"

'எம்மோவ் நல்லா நடிக்கிறிங்க நான் கூட ஒளறிடுவீங்களோன்னு நெனச்சேன்' தாயை மானசீகமாக பாராட்டியவன் வேண்டா வெறுப்பாக உணவை உண்டு தாயின் வார்த்தைகளை அசைபோட்டபடியே தனது அறையை நோக்கி நடந்தான் ஹரி.

விஷ்ணுவிற்கு அவர் உதய்யை பற்றி கூறியதை விட தன்னை மற்றவர்களில் இருந்து இவர் பிரித்து பேசியது வலியை கொடுத்தது அதுவும் இன்றி ஹரி இப்பொழுதெல்லாம் பல்லவியையும் திவ்யாவையும் அவன் அருகில் விடுவதே இல்லை...

ரகுவரன் உணவை எடுக்காமல் அவர் அறைக்கு செல்ல ஜெய நந்தனும் தமையனை பின் தொடர்ந்தார் அதை பார்த்த பல்லவி, "மா என்ன இது சாப்புடுறப்பயா இப்டி எல்லாம் பேசுவீங்க? பாருங்க அப்பாவும் பெரியப்பாவும் சப்புடாமையே போய்ட்டாங்க சாப்டதுக்கு அப்றம் பொறுமையா சொல்ல வேண்டியது தான?"

"ஏன் இப்ப சொன்னா என்ன ஒரு நாள் சாப்புடாம அவங்க போனதுக்கே இந்த பேச்சு பேசுற அங்க அவன் தெனமும் காலைல சாப்பாடு எடுத்துக்குறது இல்ல ஆனா மாடா உழைக்கிறான் இந்த வீட்டுல இருக்கவங்களுக்காக அவனுக்காக ஒரு நாள் நாம சாப்புடாம இருக்கது தப்பு இல்ல"

மகளை கடிந்தவர் அவர்கள் உண்டுகொண்டிருந்த தட்டை எடுத்து சமையல் அறை நோக்கி சென்று விட்டார்... இப்பொழுதும் விஷ்ணுவை மட்டும் டீல்லில் விட்டுவிட்டு...

ஹரியின் ஒதுக்கம், அவன் சித்தியின் வேற்றுமை, சகோதரிகளின் அமைதி என விஷ்ணுவின் மனம் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது... தன்னை தனித்து ஒருநாளும் விடாத குடும்பம் இன்று தலைகீழாய் இருந்தது ஆனால் ஒரு நொடி, 'ஒரு நாள் இப்புடி விட்ட எனக்கே இவ்ளோ கஷ்டமா இருக்குதே அவனுக்கும் அப்டி தான இருக்கும்' என்று எண்ணாமல் இல்லை...

அலுவலகமும் செல்ல மனம் இல்லாமல் வீட்டிலும் இருக்கும் தனிமையை உணர புடிக்காமல் கால்கள் சென்ற திசையில் எல்லாம் நடக்க ஆரமித்தான்...

**********************

மருத்துவமனையில் கண்களை விழித்தவுடன் தன்னை சுற்றி பார்த்த ஆதி கேட்ட முதல் வார்த்தை, "உதய் வந்தானாடா?"

"அவன் எதுக்கு வர போறான், சரி இந்த பிரியாணி சாப்புடு"

"டேய் ட்ரிப்ஸ் ஏறுதுடா இந்த நேரம் இதெல்லாம் சப்புடலாமான்னு கேளு"

"அட சாப்புடுடா" தமிழ் அந்த பொட்டலத்தை எடுத்து ஆதியின் வைத்தான்...

"எதுக்கு இந்த பொழப்பு அவன் வந்துட்டு போனதை மறைக்கவா?"

"நா தான் சொன்னேன்ல அவன் கண்டுபுடிச்சிடுவான்னு" கெளதம் தமிழ் காதில் கூவ

"டேய் ஒரு சின்ன வெட்டு தானடா இதுக்கு எதுக்குடா நைட் இருக்க சொல்றிங்க வா கிளம்பலாம், நர்ஸ்ஸ கூப்புடு இந்த ட்ரிப்ஸ்ஸ எடுக்க சொல்லு"

வயிற்றை பிடித்து சிரித்த கெளதம், "மச்சி எனக்கு தெரியும் நீ அந்த நர்ஸ்ஸ பாக்க தான இப்புடி சீன் போடுற பரவாயில்லடா இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு போகலாம் எல்லாம் கலர் கலர்ரா இருக்குது டாக்டர்ல இருந்து கக்கூஸ் கழுவுற பொண்ணு வரைக்கும்"

"பொண்ணுன்னு சொல்லாதடா நீ என்ன பொன்னையா பாப்ப ஆண்ட்டி-னு சொல்லு" - தமிழ்

"முட்டா பயலுகளா உங்கள எல்லாம் வச்சு நா என்ன பண்ண போறேனோ, சரி ஆதவனுமா கூட வந்தான்?"

"உதய்யே வந்துட்டான் அவன் வராம இருப்பானா"

"சரி அவன்ட்ட எதாவது நம்ம பிளான்ன உளறி வச்சீங்களா?" புருவத்தை உயர்ச்சி முழித்து நின்ற நண்பர்களை பார்த்தான் ஆதி

"என்ன பிளான்?" கையில் ஒரு பெரிய பையுடன் வந்து நின்றான் ஆதவன் மூவரையும் கேள்வியாய் பார்த்து

"பிளான்-ஆ அப்டியா அவன் சொன்னான் இல்லையே?" - தமிழ், "ஆமா பிளான் எங்க ப்ராஜெக்ட் பத்தி" - கெளதம்

தமிழ் கெளதம் இருவரும் ஒரே நேரத்தில், "இல்ல பிளான் தான். ஆனா அந்த பிளான் இல்ல இது வேற பிளான் ரெண்டு நாள் முன்னாடி போட்ட பிளான்" - தமிழைப் பார்த்து முறைத்த ஆதி தலையில் அடித்துக்கொண்டான்.

"என்ன ரெண்டு நாள் முன்னாடி பிளான் பண்ணீங்க?" - ஆதவன்

"ப்ராஜெக்ட்ட கெடுக்க" - கெளதம்,

"கோவா டூர்" - தமிழ் கெளதம் மீண்டும் இருவரும் ஒரே நேரத்தில்...

"இல்லடா ப்ராஜெக்ட்ல இருந்து கட் அடிச்சிட்டு கோவா டூர் பிளான் போடுறோம்" கெளதம் தமிழ் இருவரையும் பார்த்து பல்லை கடித்த ஆதி, "என்னடா சொல்லுங்க ஆமா தான"

"ஆமா" இருவரும் ஒரு சேர தலையை ஆட்டினர்

எதையோ மறைக்கிறார்கள் என்றுணர்ந்த ஆதவன், "சரி டா நானும் வரேன் நாலு பேரும் போகலாம்"

"இல்ல நாங்க இப்ப போகல" - தமிழ், "டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு" - கெளதம்... கோரஸ் பாடினார் இருவரும்.

"வாத்தி கொஞ்ச நேரம் மூடிட்டு இரு" கெளதம் ஆதவனிடம் திரும்பி, "அது இல்லடா எங்க மூணு பேருக்கு மட்டும் தான் டிக்கெட் போட்ருக்கோம்"

"அந்த டிக்கெட்ட கேன்செல் பண்ணுங்க எல்லாரும் கார்ல போகலாம்"

"கார்ல போனா எனக்கு வாந்தி வரும் அப்றம் உன் மேல தான் எடுப்பேன்" தமிழ் வயிற்றை பிடித்து கூறினான் (எல்லாம் பொய் தாங்க)

"ஆமா அவனுக்கு ட்ராவல் அலர்ஜி ஷேக் ஆனா வாமிட் வந்துடும்"

"சரி அப்ப நான் ரோல்ஸ் ராய்ஸ் எடுத்துட்டு வர்றேன் ஒன்னும் ஆகாது" - ஆதவன்

"ஐயோ அமைதியா இருந்தா தலை சுத்தி மயக்கம் போட்டு விழுந்துருவான்"

கெளதம் கூற அவனை ஆச்சிரியமாக பார்த்த தமிழ் 'எனக்கா?' கெளதம் பாவமாக முகத்தை வைத்து 'ஆமா' என்று தலையசைத்தான் தமிழை பார்த்து...

"இது என்னடா கொடுமையா இருக்கு... அப்ப பாட்டு போட்டுக்கலாம்டா"

"பாட்டு கேட்டா அவன் நெஞ்சுல இருக்க ஓட்ட பெருசாகிடுமாம்" மீண்டும் கெளதம் தமிழை வாரினான்...

'பத்து பைசா கைல காசு இல்லாம கோவா டூர் வரைக்கும் சும்மாவே உருட்டுறீங்களேடா... அதை தெளிவா ஆச்சும் சொல்றானுங்களா பாரு' அமைதியாக பிரியாணியை உள்ளே தள்ளிக்கொண்டே படம் பார்த்தான் ஆதி...

"நல்லா ஒளறுறீங்கடா ஒரு பொய் சொல்லி அத சமாளிக்க கூட தெரியல" - ஆதவன்

"உன் டிடெக்ட்டிவ் வேலைய இங்கையும் ஆரமிக்காத அந்த போன்ல இருக்க வீடியோ கால்ல கட் பண்ணிட்டு, எதாவது குழம்பு இருந்தா தா பிரியாணி வர வரன்னு இருக்குது" ஆதவன் கொண்டு வந்த பையினுள் தலையை விட்டான் ஆதி

'இவன் நமக்கும் மேல இருக்கானே' என்று நினைத்த ஆதவன் உதய்க்காக போட்டிருந்த வீடியோ கால்-ஐ பார்த்து உதய்யிடம் பார்வையாலே மன்னிப்பு கேட்டான்... அவனை பார்த்து தலை அசைத்து சிரித்த உதய் 'பை' என்று கை காட்டி அணைப்பை துண்டித்தான்...

"உனக்கு எப்டி தெரியும்?"

"எப்பையும் பின் பாக்கெட்ல இருக்கத்துக்கு நெஞ்சுல என்ன வேலை அப்டி தான் கண்டு புடிச்சேன் சரி குழம்பு தரியா இல்லையா"

"இவன் ஒருத்தன் புடிடா எல்லாத்தையும் நீயே வச்சுக்கோ" ஆதவன் கையில் இருந்தப் பையை மொத்தமாக அவனிடம் திணித்தான்...

"தமிழு சஹானா எங்க இருக்கா?"

"இந்த கேள்வியை கண் முழிச்ச ஒடனே நீ கேக்கணும்... சஹானா எங்க வீட்டுல தான் இருக்கா"

"அவகிட்ட என்ன சொன்ன?"

"அஹ்ஹ் உங்க அண்ணே மாடிப் படில இருந்து குப்புற விழுந்துட்டான்னு சொல்லிருக்கேன்"

"டேய் தமிழ் சீரியஸாக் கேக்குறேண்டா மொபைல் வேற என்கிட்டே இல்ல எப்டி நாளும் அவளுக்கு தெரிஞ்சு தான் ஆகும்" - ஆதி

"எத்தனை நாள் தான் அந்த பொண்ணே உன்ன பாத்துக்குட்டு இருக்கும்? அதுக்கு கல்யாணம் ஆகிடுச்சுனா என்ன பண்ணுவ? ஏற்கனவே அம்மா சஹானாக்கு மாப்பிள்ளைப் பாத்துட்டு இருக்காங்க நீ சொன்னா எதாவது சொல்லுவன்னு தான் உண்ட சொல்லல" தமிழ் கூறியதை கேட்டு ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தவன்...

"சரி பாக்கட்டும் நானும் சஹானா படிப்பு முடியட்டும்ன்னு தான் அமைதியா இருந்தேன்"

"எப்பா டேய் இப்ப ஆச்சும் அறிவு வந்ததே உனக்கு..." கெளதம்

"சரி நான் கிளம்புறேன் காலைல இருந்து வேலை பாக்கவே இல்ல டயர்டா இருக்கு... வர்ரேண்டா மச்சான்" ஆதியிடம் கூறி வெளியேறினான்...

"என்னடா இவன் சாப்புடாமயே கெளம்பிட்டான்?" - கெளதம்

"அவனுக்கு வேலை இருக்கும்டா நம்மள மாதிரியா? ஆமா ஏண்டா நீங்க ரெண்டு பேரும் இப்புடி சொதப்புறிங்க ஒரு பொய்ய மறைக்க இத்தனை பொய் அதையும் ஒழுங்காச் சொல்றது இல்ல உங்கள வச்சு நா எதையும் பிளான் பண்ணக் கூடாதுப் போல"

"இனி சொதப்ப மாட்டோம்... இன்னோன்னு தெரியுமா உன்னக் கொல்ல ட்ரைப் பண்ண மினிஸ்டர் செத்துட்டாண்டா... கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவுன்னு சொல்லுவாங்க ஆனா என்ன இவனுக்கு லைட்டா மிஸ் ஆகி விஷத்தால
செத்துருக்கான்... ஆனா I am happy" சந்தோசமாக கெளதம் கூறி தனது உணவை ருசி பார்க்க ஆரமித்தான்...

ஆதிக்கு தான் மனம் நெருடலாகவே இருந்தது சஹானாவை நினைத்து, உதய்யை நினைத்து, தன்னது திட்டத்தையும் நினைத்து....
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
5 per nalla pandriga da ayyoo ayoo oru poi kuda solla theriyala 🤭🤭dai avanum aadhai udhai athavathu panna try panna negga tha romba kasta paduviga pathukoga🤫🤫 entha hospital la irukum pothu kuda briyani ya da ungaluku🤪 udhai words semma அவனை அணைக்கிறதும் நானா தான் இருப்பேன் அடிக்கறதும் நானா தான் இருப்பேன்🤩💝💝
அம்மா.ரொம்ப feel pandraga உதய் நீ விட்டுக் போ😐😐
விஷ்ணு கஷ்டமா இருக்கு லா இப்படி தான நீ பேசும் போது உதய் கும் இருக்கும் . கூட இருக்குற ஹரி பாத்து நீ பேசுனது சரியா feel Pannu ne realise pannatha pesuvaga ellarum 😊😊
Next entha aadhai enna panna poran nu theriyala 🤔🤔
 
Messages
37
Reaction score
4
Points
8
5 per nalla pandriga da ayyoo ayoo oru poi kuda solla theriyala 🤭🤭dai avanum aadhai udhai athavathu panna try panna negga tha romba kasta paduviga pathukoga🤫🤫 entha hospital la irukum pothu kuda briyani ya da ungaluku🤪 udhai words semma அவனை அணைக்கிறதும் நானா தான் இருப்பேன் அடிக்கறதும் நானா தான் இருப்பேன்🤩💝💝
அம்மா.ரொம்ப feel pandraga உதய் நீ விட்டுக் போ😐😐
விஷ்ணு கஷ்டமா இருக்கு லா இப்படி தான நீ பேசும் போது உதய் கும் இருக்கும் . கூட இருக்குற ஹரி பாத்து நீ பேசுனது சரியா feel Pannu ne realise pannatha pesuvaga ellarum 😊😊
Next entha aadhai enna panna poran nu theriyala 🤔🤔
thank u sis 😍 😍
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
Friends எல்லாம் சேர்ந்தா ரணகளம் குதூகலம் அத்தனையும் சேர்ந்துக்கிது 😄😄😄😄😄😄
 
Top