• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 9

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 09

Writer : Hafa



காலமும் நேரமும், எப்பொழுதும் யாருக்கவும் காத்துக் கொண்டிருப்பதில்லை. காலம் அதன் போக்கில் தன் நிகழ்த்த வேண்டிய கடமைகளை செவ்வனே செய்து கொண்டேயிருக்கும்.

மதி வேலையில் இணைந்து இன்றுடன் பத்து நாட்கள் முடிய, அவளது திறமையை பார்த்து வேலையையும் பர்மனன்ட் ஆகியது. மதியின் நேர்த்தியான வேலையாலும் குறும்புத் தனமான பேச்சாலும் ஆபீஸில் அனைவரையும் கவர்ந்தாள். என்ன தான் இருந்தாலும் மற்றவர்கள் அனைவரும் புகழும் அந்த எம்டியை பார்க்க முடியவில்லை என ஒரு சிறு குறை மதியிடத்தில் இருந்து கொண்டேயிருந்தது.

அங்கு செழியன், அவனது கேபினில்,

"அங்கிள், நீங்க ரீசன்ட்டா சப்மிட் பண்ணின டிசைன் எல்லாமே அருமையா இருக்கு. இந்த டிசைன்ஸ்ல நாம ப்ரோடக்ட் ரெடி பண்ணினோம்னா கஸ்டமர்ஸ் கிட்ட நல்ல ரீச் கிடைக்கும்." என்று புது ஆர்டர் கிடைத்த மகிழ்ச்சியை சந்திரனிடம் பகிர்ந்து கொண்டான் செழியன்.

"தம்பி, இந்த டிசைன்ஸ் எல்லாமே நம்ம ஆபீஸ்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்குற மதின்ற பொண்ணு ரெடி பண்ணினது தான். சும்மா சொல்லக் கூடாது தம்பி ஒர்க் எல்லாம் பேர்பெக்ட்டா பண்ணுது அந்த பொண்ணு."

"நீங்க பார்த்து அப்பாய்ன்ட் பண்ணினவங்களாச்சே அங்கிள், உங்க தெரிவு எப்பயுமே தப்பா இருக்காதுங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு அங்கிள்."

"ரொம்ப நன்றி தம்பி, இந்த வயசுலயும் எனக்குன்னு ஒரு பொறுப்பு தந்து கூடவே வச்சி இருக்கீங்களே, ரொம்ப சந்தோஷம் தம்பி."

"ஐயோ என்ன அங்கிள் நன்றி அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க, அதெல்லாம் வேணாம் விடுங்க. ஆமா அந்த பொண்ணு பேரு ஏதோ சொன்னிங்க, அவங்கள நான் மீட் பண்ணனும் அங்கிள். அவங்களோட திறமையை பாராட்டியே ஆகணும்."

"சரி தம்பி நான் இப்போவே போய் மதிய வர சொல்றேன் தம்பி."

"இல்ல அங்கிள், இப்போ எனக்கு அஸோஸியேஷன் மீட்டிங் இருக்கு, சிவா பாரின் க்ளைணன்ட்ட மீட் பண்ண போய் இருக்கான். ஸோ நான் மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு அவங்கள மீட் பண்ணுறேன்."

"சரிங்க தம்பி, நல்ல படியா வேலைய முடிச்சிட்டு வாங்க. நான் நீங்க ரொம்ப ஹாப்பின்னு மதி கிட்ட சொல்லிடுறேன், அவ ரொம்ப சந்தோஷ படுவாள்." என்று மதி இருக்கும் இடத்துக்கு சென்றார் சந்திரன்.

∞∞∞∞∞∞∞∞∞∞∞

தன் வேலைகளை எல்லாம் முடித்த மதி, ஆபீஸை விட்டு வெளியே வர மழை வரும் அறிகுறியாக கருமேகங்களால் சூழ்ந்து காணப்பட்டது வானம். மழைக்கு முன்னால் வீட்டுக்கு சென்று விடலாம் என ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பாதி தூரம் போக அடைமழை பிடித்துக் கொண்டது.

என்னதான் மழை வழுவாய் பிடித்துக் கொண்டாலும் மழைக்கு ஒதுங்கி நிற்க அவள் மனம் சம்மதிக்கவில்லை. "அம்மா எப்படியும் மழையில நனைய விட மாட்டாங்க மதி, ஸோ கிடைச்ச சான்ஸ மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோ. " என்று தனக்கு தானே கூறியவள் மழையில் நனைந்த படி வண்டியை மெதுவாக ஓட்டிச் சென்றாள்.

"மழை குறைந்ததும் வீட்டுக்கு வேகமாக சென்று விடலாம். "என்று மதி எண்ணி இருக்க, அவள் எண்ணத்திற்கு எதிர் மாறாய் மழை மேலும் மேலும் வழுவடைந்து அவளது வண்டியை பதம் பார்த்தது. அடை மழை காரணமாக ஸ்கூட்டியின் உள்ளே நீர் சென்று விட அது ஒரு அடி கூட நகர மாட்டேன் என்றது.

"அட என்ன மதி, உனக்கு வந்த சோதனை. எல்லாம் உன்னால தான் மழை அதுபாட்டுக்கு பெய்யட்டும்ன்னு சொல்லி நீ கொஞ்சம் ஒதுங்கி நின்னு இருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்து இருக்குமா??? கொஞ்சம் லேட் ஆனால் கூட வீட்டுல சீதா காளி அவதாரம் எடுத்துடுவாங்களே. என்ன பண்ணலாம்." என சிந்தித்தவள், "சரி வண்டியை லாக் பண்ணி இங்கயே ஓரமா பார்க் பண்ணிட்டு ஆட்டோ பிடிச்சி போய்டலாம்." என்று அவளது ஸ்கூட்டியை ஓரம் கட்டி லாக் செய்து சாவியை கையில் எடுத்தவள், தந்தைக்கு போன் செய்து, "அப்பா நான் இங்க மழையில மாட்டிகிட்டேன். அம்மா கிட்ட சொல்லுங்க டென்ஷன் ஆக வேணாம்னு, நான் சீக்கிரமா வந்துடறேன்." என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

"என்ன மதி இது, நீ வந்த நேரம் பார்த்து ஆட்டோ கூட வர மாட்டேங்குது. மழை கூட கருணை காட்ட மாட்டேங்குதே நமக்கு. இன்னைக்கி யார் முகத்துல தான் முழிச்சசேனோ?? " என்று சாலை ஓரம் நின்று புலம்பிக் கொண்டிருக்க, அவள் மனசாட்சியோ, "வேறு யாரு முகத்துல முழிச்ச எழுந்ததுமே கண்ணாடியில உன்னோட முகத்தை தானே பார்த்த." என்று காரிதுப்ப, தன்னை எண்ணி தானே அசடு வழிந்தாள்.

அந்த நேரம் பார்த்து பசி வேறு வயிற்றை கிள்ளியது. "கடவுளே, என்ன இது மதிக்கு வந்த சோதனை???" என கடவுளிடம் முறையிட்டு கொண்டிருக்க, ஒரு கார் வருவதை பார்த்தவள்,"ஆபத்துக்கு பாவம் இல்லை, பேசாம லிப்ட் கேட்டு போய்டலாம்." என்று கையை காட்டி நிறுத்த முயற்சிக்க அந்த காரோ அவளை தாண்டிச் சென்றது.

"இதுவும் போச்சா..!!" என்று தலையில் அடித்துக் கொள்ள, தன்னை தாண்டிச் சென்ற அந்த கார் பின்னால் வந்து மதியின் அருகில் நின்றது.

காரை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவரிடம் அனுமதி கேட்டு காருக்கு உள்ளே சென்று அமர்ந்தவள், தன் அருகில் இருப்பவனை பார்த்து அதிர்ந்தாள். அங்கு இருந்தவன் வேறு யாரும் இல்லை சாட்சாத் நம் செழியனே.

"அய்யய்யோ இவன் கிட்டயா வந்து மாட்டிக்கிட்டோம். சரி இறங்கி போய்டலாம்." என்று பார்க்க, மழையோ அதற்கு சிறிதும் இடமளிக்கவில்லை. "சரி ஆபத்துக்கு பாவம் இல்லை." என்று அமைதியாக இருந்தாள் மதி.

ஆனால் அவளது மனதுக்குள்ளே ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. "என்ன இவன் இவ்வளவு அமைதியா வர்றான். நம்மள பார்த்தாலே எரிமலையாய் சீறிப் பாய்வான். இப்போ என்னடான்னா ரொம்ப சைலன்ட்டா இருக்கானே." என்று மனதுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தாள்.

அந்த பக்கம் செழியனோ, "டேய் செழியா வீணா அவள் கிட்ட பேசி மாட்டிக்காத. அப்பறம் உனக்கே பிரச்சனை பண்ணி விட்டு போய்டுவாள். இந்த பொண்ணுங்க சங்காத்தமே வேணாம்." என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டு அமைதியாக இருந்தான்.

சில பல நிமிடங்கள் இருவருக்குள்ளும் அமைதியாகவே கழிய.,

மதிக்கோ மழையில் நனைந்ததனாலும் காருக்குள் போடப் பட்டிருந்த ஏசியின் தாக்கத்தினாலும் குளிர் உடம்பை வாட்ட, அவளோ நடுங்கிக் கொண்டிருந்தாள். அதை பார்த்த செழியன், அவனை அறியாமலேயே அவன் அணிந்திருந்த கோர்ட்டை கழட்டி அவளிடம் கொடுக்க, அவள் மனம் வாங்க மறுத்தாலும் குளிரின் தாக்கத்தால் கைகள் அதனை பற்றிக் கொண்டது.

அருகில் அமர்ந்திருந்த மதியை ஓரக் கண்ணால் பார்த்தான் செழியன். பௌர்ணமி நிலவாய் ஜோலித்த அவளது முகமும், மழையில் நனைந்ததால் நடுங்கிய அவளது மேனியும் பேரழகியாய் காட்டியது மதியை. ஒரு நொடி தன்னையும் மறந்து செழியனது கண்கள் மதியை ரசிக்க சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டான்.

"அழகா தான் இருக்காள், ஆனா என்ன அழகுக்கு அதிகமா திமிரு ஜாஸ்தியா இரு. டேய் செழியா, கண்ட்ரோல் யுவர் செல்ப், எந்த பொண்ணுங்களையும் நம்பிடாதடா. ஒரு வாட்டி பட்டதே போதும்." என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

செழியனின் அமைதி மதியை சங்கடப்பட வைத்தது. "இவன் எப்போ தான் சிரிப்பான், பிறந்துல இருந்து சிரிப்புன்னு ஒன்னு இருக்குறதையே மறந்திருப்பானோ!! மூஞ்சிய பாரு ஸு(z)ல இருக்குற மங்கி மாதிரி இருக்கு, சிடுமூஞ்சி.. சிடுமூஞ்சி.." என்று மனதுக்குள் பேசுவதாய் நினைத்து சத்தமாக பேசிய மதியை நெருப்பாய் முறைத்துக் கொண்டிருந்தான் செழியன்.

"ஆமா, இப்போ எதுக்கு நம்மல இப்படி முறைக்கிறான்." என யோசித்தவளுக்கு அப்போது தான் தெரிந்தது தான் மனதுக்குள் பேசுவதாய் நினைத்து சத்தமாய் பேசியது. இருந்தாலும் தன் கெத்தை விடாது அவளும் அவனுக்கு மேலாக முறைத்துப் பார்க்க.,

"இந்தாம்மா, உங்கள எங்க ட்ரோப் பண்ணனும்." என்ற டிரைவரின் குரலில் இருவரும் தங்கள் முறைப்பை கைவிட்டனர்.

மதி டிரைவரிடம் அவளது அட்ரஸை சொல்ல, செழியனும் தன்னை அறியாமல் அவளது விலாசத்தை மனதில் குறித்துக் கொண்டான். அது ஏன் என்றும் அவன் அறியவில்லை.

ஒரு சில நிமிடங்களில் மதியின் வீட்டின் முன் கார் நிற்க, வெளியில் குடையுடன் மதிக்காக காத்துக் கொண்டிருந்தார் ரவி. மதி அவரிடம் தான் லிப்ட் கேட்டு வந்ததை கூற அவர் செழியனிடம்..,

"ரொம்ப நன்றி தம்பி, வாங்களே ஒரு காபி சாப்பிட்டு போகலாம்." என்று அழைக்க.,

"இல்லை அங்கிள் பரவாயில்லை, இருக்கட்டும்."

"என்ன மதி சும்மா பார்த்துட்டு இருக்க, தம்பி எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்காரு!! உள்ளே கூப்பிடுமா." என்க.,

மதி ஏனோ தானோ என்று, "உள்ள வாங்க." என்று அழைக்க.,

"இல்ல இருக்கட்டும், எனக்கு நேரமாச்சு அங்கிள் அம்மா எனக்காக வீட்டுல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, நான் அப்பறம் ஒரு நாளைக்கு வர்றேன்." என்ற செழியன் காரை திருப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

செழியனின் கார் அவர்கள் வீட்டை தாண்டியதும், "ரொம்ப நல்ல பையன்ல மதி." என்றவர்., "அட அவரு பெயரை கூட கேட்க மறந்துட்டேனே." என்றார் கவலையாய்

"அட ஆமா, நாம கூட அத தெரிஞ்சிக்கலையே."என்று மதிக்கும் அப்போதே உரைத்தது அவன் பெயரை அறியவில்லை என்று.

"ஏய் மதி, அவன் உனக்கு பண்ணியிருக்க ஹெல்புக்கு முதல்ல ஒரு தேங்க்ஸ் சொல்லி இருந்தால் தானே பெயரை கேட்க தோணும்." என்று அவள் மனசாட்சி மணி அடித்தது.

அந்த பக்கம் காருக்குள் இருந்த செழியனும் அதே நிலையில் தான் இருந்தான். " ரெண்டு மூணு வாட்டி மீட் பண்ணி இருக்கோம், அந்த இடியட்டோட நேம் என்னனு தெரியலையே??" என்று நினைத்தான்.


இருவரின் எண்ணங்களும் ஒரே புள்ளியில் சுழல...
இருவரின் மனதும் ஒரே புள்ளியின் இணையும் அந்த தருணத்தை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தது விதி...




தொடரும்...
 
Messages
524
Reaction score
403
Points
63
பாருடா ரெண்டு பேரும் பார்க்கும் போது எல்லாம் சண்டை போடுறாங்க இதுல பெயர் தெரியலைனு பீல் பண்ணுறாங்க
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Auu ahhh paraah epathaan name kekkanum thooni iruku evaga 2 payroda thought same tha 🤩🤩🤩
 
Top