Member
- Messages
- 30
- Reaction score
- 40
- Points
- 18
Episode : 08
Writer : Hafa
"மே ஐ கம் இன் சார்.."
"வாம்மா.." என்றார் நடுத்தர வயதை எட்டிய மனிதர்.
"வணக்கம் சார்." என்ற மதி அவளது அப்பொய்ன்மெண்ட் ஆர்டரை அவரிடம் கொடுக்க, அதை வாங்கி படித்துப் பார்த்தவர்..,
"நீ தான் டிசைனிங் செக்ஷனுக்கு புதுசா ஜாயின் பண்ணி இருக்குற பொண்ணு மதியாமா??"
"ஆமா சார், ரிஷப்ஷன்ல உங்கள வந்து மீட் பண்ண சொன்னாங்க.."
"உன்னோட செர்ட்டிபிக்கேட்ஸ் அண்ட் டிசைன்ஸ் எல்லாமே பேர்பெக்ட்டா இருக்குமா?? நம்ம எம்டிக்கு கூட அது ரொம்ப புடிச்சி போயிடிச்சி." என்றவரை பார்த்து.,
"அப்போ நீங்க நீங்க எம்டி இல்லையா சார்??" எனக் கேட்டவளை பார்த்து சிரித்தார் அவர்.
"இல்லம்மா நான் இங்க ஜென்ரல் மேனஜர்.. எம்டி சார் யாரையும் அவ்வளவு சீக்கிரமா மீட் பண்ண மாட்டாரும்மா."
"அம்மாடியோவ் ரொம்ப பில்ட்அப்பா இருக்கே அந்த எம்டிக்கு. அவரு என்ன அவ்வளவு பெரிய ஆளா??" என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டிருக்க., "ஏம்மா மதி.." என்ற அவரின் குரலில் சுயத்துக்கு வந்தாள்.
"இங்க பாரும்மா, பத்து நாளைக்கு இங்க ட்ரைனிங் இருக்கும். இது சின்ன டெஸ்ட் மாதிரி தான். இதுல நீங்க வொர்க்ல எவ்வளவு சின்சியரா இருக்கீங்களோ, அதை எல்லாம் பார்த்து தான் எம்டி முடிவு பண்ணுவாரு. உங்க ஒர்க்க பெர்மனெண்ட் பண்ணுறதை பத்தி."
"ஓகே சார், ஐ வில் கிவ் மை பெஸ்ட்."
"வாழ்த்துக்கள்மா.. இங்க நீ உன்னோட திறமைய வெளிக்காட்டணும். அப்பறம் நான் உன்ன பேர் சொல்லியே கூப்பிடலாமாமா?? என்னோட பொண்ணுக்கு கூட உன்னோட வயசு தான் இருக்கும்."
"அதுக்கென்ன சார் தாராளமா கூப்பிட்டுக்கோங்க. நான் கூட உங்கள அப்பான்னு கூப்பிட்டுக்கலாமா??"
ஏனோ அவளின் இந்த வெகுளித் தனம் அவரை கவர, "சரிம்மா." என்றார் அன்புடன்.
"ஆங்.. சார்.. இல்ல இல்ல.. அப்பா, நான் மதி. உங்க பேர் என்ன??"
"சந்திரன் மா.. இது தான் என்னோட பேரு."
"அய்.. மதி, சந்திரன்.. ரெண்டுமே செம் தான்ல. சூப்பர் சூப்பர்." என்று குதித்தவளை காண, அவருக்கு அவர் மகளின் நியாபகம் மனதை அடைத்தது.
∞∞∞∞∞∞∞∞∞∞
"மச்சான்.."
"என்னடா.."
"டேய்.. மச்சான்.."
"என்னடா.. என்னனு கேட்குறேன்ல என்னனு தான் சொல்லேன்."
"நம்ம போற வழியில வர்ற **** மால்ல கொஞ்சம் வண்டிய நிறுத்துடா.."
"என்ன சிவா விளையாட்டிட்டு இருக்கியா?? சைட்ட பார்க்கணும் அவ்வளவு அவசரமா என்ன கூப்பிட்டு வந்துட்டு, நீ என்னடான்னா மால்ல வண்டிய நிறுத்த சொல்ற."
"உன் மைண்ட ரிலாக்ஸ் பண்ண தான் வெளியில கூப்பிட்டு வந்தேன்னு சொன்னால் திட்டுவான். சரி ஏதாவது சொல்லி சமாளிப்போம்." என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன், "இல்ல மச்சான் டிரஸ் கொஞ்சம் பர்ச்சஸ் பண்ணலாம்னு இருந்தேன். என்னோட செலெக்ஷன் விட உன்னோடது பெட்டெரா இருக்குமேடா, அதனால தான் உன்னையும் கூப்பிடுறேன்." என்றவனை என்ன சொல்லி திட்டுவது எனத் தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டான் செழியன்.
∞∞∞∞∞∞∞∞∞∞
மதிக்கு கிடைத்த வேலை மிகவும் பிடித்துப் போனது. முகம் அறியா அலுவலக உரிமையாளர் மேல் அவளை அறியாமலே ஒரு நன்மதிப்பு ஏற்பட்டது. ஆபீஸை கட்டுக்கோப்புடனும் நேர்த்தியாகவும் கொண்டு நடத்துவத்தை பார்த்தவள் மனதுக்குள்ளேயே அவரை மெச்சிக் கொண்டாள்.
வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் மால் ஒன்றை பார்த்த மதிக்கு இன்று வேலைக்கு சென்ற முதல் நாள் ஆகையால் பெற்றோருக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என மனதுக்குள் ஒரு மணி அடிக்க, தன் ஸ்கூட்டியை அந்த மாலின் முன் நிறுத்தினாள்.
"அம்மாவுக்கு எது நல்லா இருக்கும், ஆங்.. சாரி எடுக்கலாம். அவங்க ரொம்ப சந்தோஷபடுவாங்க." என்று திட்டமிட்டபடி தேடித் தேடி தாய்க்கு ஒரு சேலையை வாங்கினாள்.
"அப்பாவுக்கு என்ன வாங்கலாம், அவருக்கு ஷர்ட்டும் வாட்ச்சும் வாங்கலாம்."என நினைத்தவள் ஆண்கள் பகுதிக்குள் நுழைந்தாள்.
∞∞∞∞∞∞∞∞∞∞
"டேய் சிவா, எவ்வளவு நேரம் தான்டா, எடுத்துப்ப.!! எவ்வளவோ ஒர்க் இருக்குடா. சீக்கிரமா செலக்ட் பண்ணுடா."
"வெயிட் பண்ணு மச்சான் உள்ள வந்துட்டோம்ல கொஞ்சம் நல்லதா பார்த்து தானே செலக்ட் பண்ணனும்." என்று சிவா தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்தான்.
"இது சரிப்பட்டு வராது.." என்று நினைத்த செழியன், "நானே இன்னைக்கு உனக்கு செலக்ட் பண்ணி தர்றேன்." என்று ஒரு ஷர்ட்டை எடுத்து, " சிவா இது ஓகேயான்னு பாரு." என்று தந்தைக்கு ஷர்ட் எடுக்க வந்த மதியின் தோளை தொட்டு திருப்பினான்.
சிவா இருப்பான் என எதிர் பார்த்தவன் அங்கு மதியை கண்டதும் சற்று நிலை குலைந்து போனான். மதியோ அவனை தீப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன மிஸ்டர், என்ன போலோவ் பண்ணுறீங்களா?? போற எல்லா இடத்துக்கும் பின்னாலயே வர்றிங்க. இப்போ என்னடான்னா ஷோல்டர்ஸ டச் பண்ணுறீங்க.!! என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல??" என்கவும் செழியனுக்கு கோபம் வந்தாலும் தன் மீது தான் தவறு என்பதை உணர்ந்தவன்.,
"சாரிங்க, நீங்கள் நினைக்கிற மாதிரி இல்ல, என்னோட பிரண்ட்ன்னு நினைச்சி தான் உங்கள டச் பண்ணிட்டேன். வேற எந்த தப்பான இன்டென்சனும் இல்ல."
"சும்மா ரீசன் சொல்லணுமேன்னு சொல்லி சமாளிக்கதீங்க, எப்போ எந்த பொண்ணு கிடைப்பா அவளை எப்படி கவுக்கலாம்ன்னு தானே வீட்டுல இருந்து வெளியவே வர்றிங்க." என்று அவன் அன்று தனக்கு கூறியதையே திருப்பிக் கூற, செழியனுக்கோ அவமானம், கோபம் என்று எல்லாம் புரட்டி எடுத்தது. ஆனால் தவறு தன் மீது என்பதால் கோபத்தை அடக்கிக் கொண்டு மதியை முறைத்தான்.
அந்த நேரம் பார்த்து சரியாக வந்து சேர்ந்தான் சிவா.
மதியை அந்த இடத்தில் பார்த்த சிவாவுக்கோ, "ஐயோ கடவுளே மறுபடியும் இந்த பொண்ணா?? எப்போ என்ன பஞ்சாயத்துன்னு தெரியலையே." என்று நினைத்துக் கொண்டு, "டேய் செழியா என்னடா பிரச்சனை??" என்றான்.
"ஏய் எங்கடா போயிருந்த இவ்வளவு நேரம்??" என்றான் செழியன் தன் கோபத்தை அடக்கியபடி.
"அந்த பக்கம் நல்ல கலெக்ஷன் இருக்கும்னு பார்க்க போய் இருந்தேன்டா?? என்ன?? ஏதாவது பிரச்சனையா??"
"ஒன்னுமே இல்ல, ஷாப்பிங்கும் வேணாம் ஒன்னும் வேணாம். வா.." என்று மதியை முறைத்துக் கொண்டே சிவாவை இழுத்துச் செல்ல..
"பண்றதையும் பண்ணிட்டு முறைக்குறத பாரு, சிடுமூஞ்சி.. இவனுக்கு போய் பயப்படலாமா?? இதுக்கு அப்பறம் இவன் என் வழியில வரட்டும் அப்பறம் இருக்கு.!!" என்று மனதுக்குள் செழியனை வறுத்தெடுத்து விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.
அந்த பக்கம் சிவா செழியனிடம், "செழியா என்னடா நடந்தது ஒரு பைவ் மினிட்ஸ்குள்ள, ஆமா அந்த பொண்ணு எப்படி அங்க வந்தாள்??"
"இப்போ அது தான் ரொம்ப முக்கியம், வாய மூடிட்டு பக்கத்துல உட்காரு." என்றவன் தன் கோபம் முழுவதையும் யாரிடம் காட்டுவது என அறியாமல் அந்த வாயில்லா ஜீவனான காரின் மீது காட்டினான்.
"ஏய் என்னையே அசிங்க படுத்திடேல்ல, இதுக்கு உன்ன பீல் பண்ண வைக்காமல் விட மாட்டேன். இது எல்லாத்துக்கும் நீ அனுபவிப்படி." என்று தனக்கு தானே உறுதி எடுத்துக் கொண்டான் செழியன்.
மோதலில் உருவான இந்த பந்தம் காதலாக உருவெடுக்குமா????
தொடரும்...